• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 23

"ஏங்க! ஏன்க இவன் இப்படி இருக்கான்.. எப்ப திருந்துவான்? நீங்களும் என்னை போக விட மாட்டுறீங்க" என்று சித்ரா கணவனிடம் கூற,

"இரு சித்து! கண்ணன் வரட்டும்.. நிலைமை தெரியாம எதுவும் பேசி வைக்க வேண்டாம்னு தான் சொல்றேன்" என்றார் தங்கராஜ்.

"அவன் எப்ப வர்றது.. நான் எப்ப கேட்குறது.. உருப்படியா ஒரு வேலையை குடுத்தா செஞ்சு முடிகிறாங்களா?" என்று புலம்ப,

"இதை ராம் இருக்கும் போதே ரெண்டுல ஒன்னு கேட்ருக்கலாம்ல? அவன் போனதும் புலம்புற! என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" என்றும் தங்கராஜ் கேட்க,

"என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? எல்லாரும் என்னை கிள்ளுகீரையா தான் ஒதுக்கி வைக்குறிங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு நல்லது பண்ணனும்னு நாள் பூரா நான் புலம்புறேன்.. அது யாருக்காச்சும் புரியுதா?" சித்ராவின் ஆதங்கம் வெளிவர,

"புரியுது சித்து.. கொஞ்ச நேரம் தானே கண்ணா வரட்டும்" என்றவர் உள்ளே சென்றுவிட, கடுப்பாய் ஹாலில் அமர்ந்து வாசலை பார்க்க ஆரம்பித்தார் சித்ரா.

ராம் கீர்த்தியிடம் பேசிவிட்டு மேலே வரவும், ஆவலாய் அவனையே எதிர்பார்த்திருந்த சித்ரா, அவன் அருகே செல்ல,

"பேசிட்டேன் மா.. கொஞ்சம் டைம் குடுங்க" என்று சொல்லியப்படியே அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

இதை தங்கராஜ் கூட பார்த்தபடி அமர்ந்திருக்க, சித்ராவிற்கு அத்தனை கோபம்.

தான் சென்றிருந்தால் இந்நேரம் திருமண தேதியே முடிவு செய்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்க, ராம் சொல்லிச் சென்றது என்னவோ அவன் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல இருந்ததால் புலம்பலை ஆரம்பித்திருந்தார்.

இப்போது கண்ணனுக்காக காத்திருக்க, காத்திருக்கும் நேரமெல்லாம் எதிர்பார்ப்பு ஒன்று மட்டும் தான்.

"இப்ப நான் அம்மாகிட்ட என்ன சொல்லட்டும்?" என்று கண்ணன் கீர்த்தியிடம் கேட்க,

"நானே சொல்லிக்கிறேன்" என்றாள் கீர்த்தியும்.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. என்ன சொல்லணும் சொல்லு.. உன்கூட பழகின பாவத்துக்கு அதையும் நானே செய்யுறன்" என்று கண்ணன் சொல்ல,

"எனக்கே தெரில.. ஆனா உன் அண்ணா கான்ஸ்டன்ட்டா இருக்கணுமே?" என்றாள் கேள்வியாய்.

"கீர்த்தி! நீ தேவையில்லாத வேலை பாக்குற.. நான் போய் அம்மாகிட்ட நீ ஓகே சொன்னதா சொல்ல போறேன்.." என்று சொல்ல,

"நான் அப்படி சொல்லவே இல்லையே" என்றாள்.

"அப்ப வேற பொண்ணு பார்க்க சொல்றேன்"

"பார்த்துக்கோ! யாரை வேணா பாருங்க" அலட்சியமாய் அவள் சொல்ல,

"ப்ச்! கீர்த்தி" என்றான் போராடி தோற்றது போல.

"கண்ணா! நீ சொன்னது சரி தான்.. எனக்கும் புடிக்கும் தான்.. ஆனா! ராம்க்கு என்னை புடிக்கணும்னு நான் நினைக்குறேன்.. அது தப்பா?"

"தப்பில்ல கீர்த்தி! ஆனா அதுக்காக நீ எடுத்திருக்க முடிவு தப்பு.. காரணம் எதுவா இருந்தாலும் ராம் உன்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கான்.. ஸோ கல்யாணம் பண்ணிட்டு கூட உன் லவ்வை அவனுக்கு புரிய வைக்கலாமே?" என்றான் கண்ணன்.

சில நொடி சிந்தித்தவள், "எனக்கு குழப்பமா இருக்கு கண்ணா! நான் என்ன தான் பண்றது?" என்று கேட்க,

"எதுவும் பண்ண வேண்டாம்.. நீ சம்மதம் சொல்லு போதும்.. நான் வேணா ஒரு ஃபேவர் உனக்காக பண்றேன்.. அம்மாகிட்ட சம்மதம் சொல்லி மேரேஜ் ஒர்க் பார்க்கலாம்.. அண்ணாக்கு கொஞ்சம் லேட்டா சொல்லலாம்..எப்படி?" கண்ணன் கேட்க,

"அதெல்லாம் வேணாம்" என்றாள் உடனே..

"அடியேய்! என்ன நினைச்சுட்டு இருக்க நீ? அவனுக்காக மூக்கால அழுததெல்லாம் மறந்து போச்சா? வேணா கீர்த்தி.."

"கொஞ்சம் டைம் குடு கண்ணா.. நான் என்னை நானே ரியலைஸ் பண்ணனும்" கீர்த்தியும் யோசித்து கூறியவள்,

"ஆனா.. ஏன் கண்ணா, முன்னாடி நீ தான் ராம் வேணாம்னு சொன்ன.. இப்ப ராமையே கல்யாணம் பண்ணிக்கோனு
சொல்ற..?" என்றும் கேட்க,

"நீ சைல்டிஷா பேசுற கீர்த்தி.. அப்ப அவனோட விருப்பம் வேற.. இப்ப அது இல்லனு ஆகும் போது உன்னோட விருப்பம் ஏன் சரியாக கூடாது? மோர்ஓவர் எனக்கும் உன்னை அண்ணினு கூப்பிட எப்பவுமே ஆசை தான்.. அது நடக்க சான்ஸ் இருக்குன்னா அதை ஏன் நான் யூஸ் பண்ண கூடாது! சொல்லு?" என்று கேட்க, ஒரு நண்பனாய் கண்ணனை நினைத்து பெருமை கொண்டது கீர்த்தியின் உள்ளம்.

"ஆனாலும் உன் அலம்பல் தான் தாங்க முடியல.. அப்படினா இப்படின்ற.. இப்படினா அப்படின்ற.. என்னவோ போ.. அப்ப சொன்னது தான் இந்த காதல் பொல்லாததுன்னு புரியுது.. சரி சீக்கிரம் முடிவு பண்ணு.. நான் அம்மாவை சமளிக்குறேன்.." என்று வெளியே செல்ல,

"அப்புவை வர சொல்லு கண்ணா" என்று சொல்லவும் சரி என்று சொல்லி சென்றான்.

வாசலில் நுழையும் போதே வேக எட்டுக்களுடன் அவனிடம் வந்தார் சித்ரா.

பின்னந்தலையை கைகளால் கோதியபடி வந்தவன் அவர் இவன்முன் வந்து நிற்கவும் என்ன என்று புருவத்தை உயர்த்த,

"உங்க ரெண்டு பேரை பெத்ததுக்கு ஒத்த பொம்பள புள்ளைய பெத்துருக்கணும்.. ஆணவம் ஆணவம்.. ஆணவம் புடிச்சி அலையுதீங்க எல்லாம்..நான் எதுக்கு இங்கே நிக்குறேன்.. உன்னை எதுக்கு பாக்குறேன்னு உனக்கு தெரியாது? நான் என் வாயால சொல்லணும் அப்படி தானே?" என்று சித்ரா மொத்த கோபத்தையும் காட்டிட,

"ம்மா! ஏன் இவ்வளவு டென்ஷன்? எல்லா பக்கமும் ரிட்டர்ன் ஆகி என்கிட்ட வருது போல? உங்களுக்கு எல்லாம் நான் தக்காளி தொக்கா போய்ட்டேனா?"

கண்ணனும் கீர்த்தியின் பேச்சில் கடுப்பாகி இருந்தவன் அன்னையும் பேசவும் திருப்பி பேசிவிட, மொத்த சத்தத்தில் அனைவருமே வெளியே வந்தனர்.

"என்ன கண்ணா? என்ன சத்தம்?" தங்கராஜ் கேட்க,

"பாருங்க ப்பா.. ஏதோ ஹெல்ப் பண்ணலாமேன்னு போனா எல்லா பக்கமும் சுழட்டி அடிக்குறாங்க" என்றவன் கோபமாய் முகத்தை வைத்து சோஃபாவில் விழ,

"அத்தான்! அக்கா என்ன சொன்னாங்க?" என்றாள் அபர்ணா ஆர்வமாய். லதா தான் அனைத்தையும் அவளுக்கு சொல்லி இருந்தாள்.

அனைவரின் கேள்வியும் அது தானே? மற்றவர்கள் அதை எப்படி கேட்பது என இருக்க, வெகுளியாய் கேட்டுவிட்டாள் கீர்த்தியின் தங்கை.

"உன் அக்கா தானே? நல்லா சொன்னா.. டைம் குடு யோசிச்சு சொல்றேன்னு" என்று கண்ணன் சொல்ல,

ராம் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை. ஏனோ எதிர்பார்த்த பதில் போலவே தோன்றியது அவனுக்கு.

இன்னொரு பெண்ணை பார்த்து நம்பி இருவருக்குமான வாழ்க்கையை புரிந்து வாழ எவ்வளவு காலம் ஆகுமோ! அதே இடத்தில் கீர்த்தி என்றால்? தங்கள் இருவருக்கும் மட்டுமே தான் புரிந்து கொள்ள நேரம் தேவை. மற்ற அனைவருக்கும் அவள் அறிந்தவள்.. அம்மாவிற்கு பிடித்தவள்..

இப்படி பல எண்ணங்களுக்கு பிறகு தான் கீர்த்தியை சந்திக்க சென்றதே! அவள் உடனே சம்மதிப்பாள் என்று எதிர்பார்க்காவிட்டாலும் இவனிடம் உடனே மறுப்பாள் என்றும் இவன் எதிர்பார்க்கவில்லை.

அதனாலேயே தன் முடிவை கொஞ்சமாய் மாற்றி தானே காத்திருப்பதாய் சொல்லியும் வந்தான்.

இப்போது அவளவுமே நேரம் கேட்டிருக்க தன் குடும்பத்திற்கு பிடித்து, தான் எடுத்த இந்த முடிவு சரி தான் என்று சிறு சந்தோஷம் உள்ளுக்குள் ராமிற்கு.

"ம்மா! அண்ணா என்ன சொன்னாங்க தெரியுமா கீர்த்திகிட்ட?" சித்ரா பாவமாய் நின்றதும் கண்ணன் சமாதானம் பேசும் விதமாய் கேட்க,

"அதான் சொன்னானே!" என்று ராமை முறைத்தவர்,

"நீ பேசி பார்த்தியா கீர்த்திகிட்ட?" என்று மீண்டும் கண்ணனிடம் கேட்க,

"எல்லாம் பேசிட்டேன் மா.. அண்ணா தெளிவாவே பேசிட்டாங்க.. கீர்த்தி கொஞ்சம் குழம்பிட்டா.. லாஸ்ட்ல நான் வெயிட் பண்றேன்னு அண்ணா சொல்லிட்டு வந்துட்டாங்க.. அதுல யோசிச்ச கீர்த்தியும் கொஞ்சம் டைம் குடு யோசிக்கணும்னு சொன்னா.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம் மா" என்று தன்மையாய் சொல்ல,

"வெயிட் பண்ணனுமா? அதுக்கு என்ன அர்த்தம் டா? எதுக்கு வெயிட் பண்ணனும்? பேசி ஒரு முடிவுக்கு தானே வர சொன்னோம்?" என சித்ராவும் கேட்க,

"அண்ணா டிசைட் பண்ணிட்டாங்க மா.. கீர்த்திக்காக நான் வெயிட் பண்றேனு சொல்லிட்டாங்க.. ஆனா கீர்த்தி..." என்று சொல்ல வர,

"எதே? ராம் வெயிட் பன்றானா? எதுக்கு? எதுக்கு?" வேகமாய் சித்ரா கேட்க,

"ண்ணா! நீங்க சொல்லல?" என்று ராமிடம் கண்ணன் கேட்க, இன்னும் புன்னகை அதிகமாகியது ராமிற்கு.

"ஹேய்! யார்ரா இது? புதுசா இருக்கு?" கண்ணனிடம் வந்து லதா கேட்க,

"நம்ம கூட பொறந்தவனே தான்.. இது பரவால்ல குண்டு.. கீழ என்னை பார்த்து கண்ணெல்லாம் அடிச்சாரு பாரு" என்று கண்ணனும் பேசிக் கொண்டு இருக்க,

"என்ன டா சிரிக்குற? முழுசா தான் சொல்லுங்களேன்.. இல்ல நான் இப்பவே கீர்த்திகிட்ட போய் கேட்டுக்குறேன்" என்று சித்ரா நகர போக,

"ம்மா! கீர்த்தி தான் பொண்ணு.. கீர்த்திக்கு கொஞ்சம் டைம் வேணுமாம்.. அதான் நான் வெயிட் பண்றேன்னு சொன்னேன்.. போதுமா! கீர்த்தி சரின்னு சொன்னதும் கல்யாண வேலையை பாருங்க.. போதுமா?" என்றவன் அங்கே நின்றவர்கள் பார்வையில் முகம் மாற, உள்ளே சென்றுவிட்டான்.

"கண்ணா! ராம் சரினு சொல்லிட்டானா? கீர்த்தி ஏன் வேண்டாம்னு சொல்றா? உன்கிட்ட எதுவும் சொன்னாளா?" பரபரப்பாய் முகமெல்லாம் பல்லாய் சித்ரா கேட்க,

"அக்கா ஏன் டைம் கேட்டாங்க அத்தான்?" என்று அபர்ணா கேட்க,

"ராம் வம்பு பண்ணுவான்னு நினச்சேன்.. அதுவும் கீர்த்தி டைம் கேட்டும் ராம் சரினு சொல்றானே! அதிசயம் தான் டா" என்றார் தங்கராஜும்.

"போதும்! போதும்! கீர்த்திக்கும் ஓகே தான்.. ஆனா குழப்பத்துல இருக்கா.. அவளே யோசிச்சு சொல்லட்டும்.. ராம் அண்ணா கூட ரொம்பவே மாறிட்டாங்க மா.. சுவீட்டா தான் பேசினாங்க.. பட் என்னை வச்சுட்டு பேசியிருக்க வேண்டாம்.." என்று கண்ணன் சொல்ல,

"கண்ணு போடாத டா.. அவன் இப்படியே இருக்கட்டும்.. இப்ப தான் நான் நினச்சா மாதிரி இருக்கான்.. இனி அவனுக்கு நல்லது தான் நடக்கும்.." சித்ரா சொல்ல,

"ஆமா மா.. நீங்க பழனிக்கு மொட்டை போடுறதா வேண்டி இருக்கீங்க" என்று நியாபகப்படுத்த,

"ராம் கீர்த்தி கல்யாணம் மட்டும் நடக்கட்டும்.. கண்டிப்பா நான் போடுறேன்" என்றார் சித்ராவும். இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அபர்ணா கீழே சென்றிருந்தாள்.

இப்போதே கண்முன் பல கனவுகள் சித்ராவிற்கு.. ராம் கீர்த்தி மாலையுடன் நிற்பதை போல..

"நல்லது டா.. ஆனா நிஜமாவே ராம் தான் பேசினானா கீர்த்திகிட்ட? இல்ல ராம்க்கு பதில் நீ பேசினியா? ராம் தான் பேசினான்றதை நம்ப முடியலை.." தங்கராஜ் சொல்ல,

"ப்பா! நான்லாம் பேசல.. அண்ணா முடிவு பண்ணிட்டு தான் என்னை கூப்பிட்டதே! அவங்களே கீர்த்தி குழப்பம் புரிஞ்சி டைம் கொடுத்து வெயிட் பண்றேன்னும் சொல்லிருக்காங்க.. நான் கீர்த்திகிட்ட பேசினதெல்லாம் நோ யூஸ் தான்" என்றும் சொல்ல,

அங்கே தங்கராஜிடம் அபர்ணா விஷயத்தைக் கூறிக் கொண்டிருந்தாள்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
காதலாக அவளா சுற்ற
அவன் கண்டுக்க வில்லை....
அவன் கல்யாணத்திற்கு ஒகே சொல்ல
அவளுக்கு தடுமாற்றம்
அவனிடம் கால அவகாசம் வேண்ட...
கல்யாணம் முடியறதுக்குள்
கண்ணன் சித்ரா கதி .......அதோகதி..
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
காதலாக அவளா சுற்ற
அவன் கண்டுக்க வில்லை....
அவன் கல்யாணத்திற்கு ஒகே சொல்ல
அவளுக்கு தடுமாற்றம்
அவனிடம் கால அவகாசம் வேண்ட...
கல்யாணம் முடியறதுக்குள்
கண்ணன் சித்ரா கதி .......அதோகதி..
சூப்பர் சூப்பர் sis
 
Top