• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 26

"என்ன மாமா நீங்க? அப்பாகிட்ட சொன்னா கார் எடுத்துட்டு கூட்டிட்டு போயிருக்க போறாங்க.. இப்படி பார்த்துட்டு இருப்பிங்களா?" என்று கீர்த்தியின் நெற்றியை தொட்டுப் பார்க்க, நன்றாய் சூடு தெரிந்தது.

"இல்ல கண்ணா! சித்ராகிட்டன்னா இவளும் சரினுவா.. அதான்" என்று சொன்னவரின் அர்த்தம் கண்ணனுக்கும் புரிய, மெதுவாய் எழுப்பினான் கீர்த்தியை.

"எழுந்துக்கோ கீர்த்தி! ஹாஸ்பிடல் போலாம்" என்று தலையினை பிடிக்க,

"ம்ம்ம்" என்று முனகி எழுந்துகொள்ள பார்த்தவள் உடல் ஒத்துழைக்க மறுக்க, கைகளைப் பிடித்து அழைத்து வந்தான் கண்ணன்.

"ஒரு நிமிஷம் டா" என்றவன் அவளை வாசல் அருகே விட்டு பைக்கினை எடுக்க போக, ராமும் உள்ளே நுழைந்தான்.

"என்னாச்சு கண்ணா?" கீர்த்தியை பார்த்துவிட்டு பைக்கை கிளப்பிக் கொண்டிருந்த கண்ணனை ராம் கேட்க,

"ஃபிவர் ணா! ஹாஸ்பிடல் போறதுக்கு தான்" என்றான் கண்ணனும்.

"டேய்! அவளுக்கு நிக்கவே முடில.. அங்கே பாரு" என்று கீர்த்தியை காட்டியவன்,

"வெயிட் பண்ணு கார் கீ எடுத்துட்டு வர்றேன்" என்று படியேற, கீர்த்தியும் சுத்தமாய் முடியாமல் தான் நின்றிருந்தாள். அதே நேரம் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தார்.

"ஐயோ கீர்த்தி மா! என்ன டா ஆச்சு?" கலைந்த மூடி, நலிந்த தோற்றம் என இருந்தவளைப் பார்த்து பதறி அவள் அருகே சித்ரா வர, ஜெகன் கூறினார்.

"என்ன டா பார்த்துட்டு நிக்குற?" என்று கண்ணனை சித்ரா கோபமாய் கேட்ட நேரம், கீயுடன் வந்துவிட்டான் ராம்.

"இந்தா கண்ணா" என்று கண்ணன் முன் ராம் கீயை நீட்ட,

"நீ அழைச்சுட்டு போறியா?" என்றான் கண்ணன்.

"ஹ்ம்ம்!" என்று உடனே தோள்களை குலுக்கியவன் உடனே காரினை எடுக்க, பின்னோடு கீர்த்தியுடன் ஏறிக் கொண்டார் சித்ரா.

"நான் பாத்துக்குறேன் அண்ணே!" என ஜெகனிடம் கூறிய சித்ரா,

"டேய்! அப்பாகிட்ட சொல்லிடு" என்று கண்ணனிடமும் கூற, சரி என்று தலையசைத்துவிட்டு கார் கண்ணை விட்டு மறைந்ததும் ஜெகனிடம் சொல்லிக் கொண்டு படியேறினான் கண்ணன்.

ஹாஸ்பிடலில் கீர்த்திக்கு வைரல் ஃபீவர் என்று கூறி செலனை ஏற்றிக் கொண்டிருக்க, ராம் மருந்திணை வாங்க மெடிக்கல் சென்ற நேரம் சித்ரா கீர்த்தி அருகே அமர்ந்திருந்தார்.

"ம்மா! ப்ரோப்லேம் ஒன்னும் இல்லையாம்.. இது முடிஞ்சதும் கிளம்ப சொல்லிட்டாங்க.. இந்த டப்ளேட்ஸ் கரெக்ட்டா எடுத்துக்கணுமாம்..டாக்டரை பார்த்துட்டு தான் வர்றேன்" ராம் கூற கேட்டுக் கொண்டவர் அமைதியாய் கீர்த்தியை பார்த்தபடி இருந்தார்.

ஒரே நாளில் ஓய்ந்து போனதை போல இருந்தாள் கீர்த்தி. முகமெல்லாம் வாடி இருக்க, கண்களில் சோர்வு அப்பட்டமாய் தெரிய, இவர்கள் பேசுவதை கேட்டபடி தான் இருந்தாள்.

"எப்படி இருக்கு கீர்த்தி?" ராம் கேட்க, தலையை மட்டுமே அசைத்தாள்.

"ஏன் கீர்த்திமா திடிர்னு காய்ச்சல்?" கீர்த்தியின் தலையை வருடியபடி சித்ரா கேட்க,

"ம்மா! காய்ச்சல் சொல்லிட்டா வரும்?" என்று சிரித்தவன் ராம் தான்.. அதை பார்த்தபடி கீர்த்தி இருக்க, வாசலில் நிழலாடவும் திரும்பிப் பார்த்தனர்.

"இந்த ஜெகா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.. வீட்ல சும்மா தானே இருக்கேன்? என்ன நினைச்சுட்டு இருக்கான்? உடம்பு சரி இல்லாத புள்ளைய வச்சுட்டு வேடிக்கை பாத்துருக்கானா?" தங்கராஜ் வீட்டிற்கு வந்த கண்ணனிடம் கோபப்பட,

"அட விடுங்க ப்பா! அந்த கீர்த்தி லூசு தான் மாமாகிட்ட பேசாதே! அதான் அவளுக்காக யோசிச்சு அம்மா வரட்டும்னு வெயிட் பண்ணிருப்பாங்க" என்றான் கண்ணனும்.

"இந்த பொண்ணை என்னனு சொல்றது.. ஜெகாவும் பாவம் தான்" தங்கராஜ் கூற,

"கீர்த்தியும் காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாளே பா" என்றான் கண்ணன்.

"உன் பிரண்ட்டை விட்டு கொடுக்க மாட்ட"

"அப்படி இல்ல பா.. ரெண்டு பேர் பக்கமும் ரீசன் இருக்கலாம்.. கீர்த்தி சொல்லலைனாலும் ஜெகன் மாமாவும் பேச ட்ரை பண்ணலயே?" என்றான் சரியாய்.

"உனக்கு எப்படி டா தெரியும்? அவன் பேச ட்ரை பண்ணலனு?"

"அப்ப பண்ணாங்களா?" கேள்வியாய் கண்ணன்.

"இருக்கலாம்! நமக்கு தெரியாமல் கூட இருக்கலாம்ல?" தங்கராஜும் விடாமல் கேட்க,

"அப்படி வெளில சொல்ல முடியலைனா யார் மேல ப்பா தப்பிருக்கு? அண்ட் உங்களுக்கு கீர்த்தி மேல தான் தப்புன்னு தோணுதா?" என்றான் தந்தைக்கு மகனாய்.

"உன்கிட்ட வாதாட முடியுமா? இப்ப கீர்த்திக்கு எப்படி இருக்குன்னு போன் பண்ணி கேளு.. போ டா" என்றார் அதற்கு மேல் முடியாமல்.

வீடு வந்து சேரும் போது இரவாகி இருந்தது. அபர்ணா, லதா, ஜெகன் மூவரும் வாசலில் தான் அமர்ந்திருந்தனர்.

"நீ உள்ள போ டா.. நான் உனக்கு கஞ்சி செஞ்சு எடுத்துட்டு வர்றேன்.. அப்பு, அண்ணே உங்களுக்கும் டிபன் எடுத்துட்டு வர்றேன்" என்று சித்ரா மேலே செல்ல, யாரும் மறுக்கவில்லை.

"என்ன சொன்னாங்க அக்கா?" அபர்ணா கேட்க,

"நார்மல் ஃபீவர் தான் அப்பு.. இப்ப ஓகே" என்றாள் கீர்த்தி. காய்ச்சலின் முகவாட்டம் நன்றாய் தெரிந்தது.

"ரெஸ்ட் எடுக்கட்டும் மாமா.. ரெண்டு நாள் கண்டிப்பா ரெஸ்ட் வேணும்.. டேப்லெட் எல்லாம் அம்மாகிட்ட இருக்கு.. சரியா எடுத்துக்கோ கீர்த்தி" என்று சொல்லிவிட்டு ஜெகனிடம் பேசிவிட்டுட்டு ராம் மேலே செல்ல,

"அன்னைக்கு ரோட்ல அண்ணியை விட்டுட்டு வந்த ராம் அண்ணா தானா இது?" என்று சத்தமாகவே கேட்டாள் லதா.

அதில் கீர்த்தியும் மெலிதாய் சிரிக்க, அனைவருமாய் உள்ளே சென்றனர்.

சித்ராவிடம் ஹாஸ்பிடலில் நடந்ததை கேட்டபடி சமையலறையில் நின்றிருந்தான் கண்ணன்.

"நீங்க ஏன் மா டல்லா இருக்கீங்க? அதான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்க இல்ல?" கண்ணன் சித்ராவிடம் கேட்க,

"சரி தான் டா.. ஆனா மனசுக்கு என்னவோன்னு இருக்கு.. நான் நாளைக்கே போய் கீர்த்தி, ராம் ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்க்க போறேன்" என்றார் கவலையாய்.

"ம்மா! ஃபீவர்கெல்லாம் ஜாதகம் ஜோசியம்னுட்டு.. ஜாதகப் பொருத்தம் பார்க்க இப்படி ஒரு பிட்டா? தாராளமா போய் பாருங்க.. அப்படியே எனக்கும் பாருங்க.." என்றான் கண்ணன்.

"உனக்கு என்ன பார்க்கணும்? எப்ப தெளிவா பேசுவன்னா?" சித்ரா கோபமாய் சொல்ல,

"அதெல்லாம் நடக்க வாய்ப்பில்ல.. அவனோட தம்பி தானே நான்? எனக்கும் தான் வயசாச்சே! அதான் நல்லபுள்ளையா வீட்ல சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேனா இல்ல இழுத்துட்டு ஓடுவேனானு கொஞ்சம் கேட்டுட்டு வர்றது!"

"அதை எதுக்கு நான் கேட்கணும்.. நீ அப்படி நினச்சு பார்த்தா கூட போதும்.. விஷத்தை வச்சு உன் அம்மா உன்னை கொன்னுடுவாங்கன்னு கட்டம் சொல்லுது" என்றார் மகனுக்கு கொஞ்சமும் சளைக்காமல்..

"நடக்க வாய்ப்பிருக்குன்றதால இத்தோட அந்த எண்ணத்தை குழி தோண்டி புதச்சுக்குறேன்" என்றவன்,

"ஹ்ம்ம்! ராம் கொஞ்சம் சாப்ட்டா பேசினதும் என்னை இப்படி பேசுறீங்க இல்ல! கல்யாண வேலை எப்படியும் நான் தான் பார்க்கணும்.. மைண்ட் இட்" என்றபடி கீர்த்தியை பார்க்க செல்ல போக,

"இந்த ஹாட் பாக்ஸ்ஸை கொண்டு போ டா" என அவனிடமே இரவு உணவையும் கொடுத்துவிட்டார் சித்ரா.

'இதுக்குன்னே எல்லாரும் கடைக்குட்டி சிங்கத்தை வளர்த்து வச்சிருப்பாங்க போல' என முணுமுணுத்து கீர்த்தி வீட்டிற்கு கொண்டு வந்தான் கண்ணண்.

"அப்பு! இதுல டின்னர் இருக்கு.. மாமாக்கு எடுத்து கொடுத்துட்டு நீயும் சாப்பிடு.." என்று கூற,

"அக்காக்கு?" என்றாள் அபர்ணா.

"கீர்த்திக்கு அம்மா கஞ்சி கொண்டு வருவாங்க அப்பு" என்றவன்,

"கீர்த்தி எங்கே மாமா?" என்றான் அவள் அறையில் அவள் இல்லாததைப் பார்த்து.

"வெளில தான் கண்ணா நின்னுட்டு இருந்தா" ஜெகன் சொல்ல,

"நான் வரும் போது இல்லையே?" என நினைவுக்கு கொண்டு வந்து கூறியவன்,

"சரி நான் பாக்குறேன்.. நீங்க சாப்பிடுங்க" என்றபடி வெளியே வந்தான்.

'எங்க போச்சு ஃபீவரோட?' தனக்குள் சொல்லியபடி வெளியே அங்கும் இங்குமாய் பார்க்க, கேட் அருகே துப்பட்டாவை மேலே சுற்றிக் கொண்டு நின்றாள் கீர்த்தி.

"இங்கே என்ன பண்ற?" என்று முறைத்தபடி அவளருகே வந்திருந்தான் கண்ணன்.

"வேர்க்குது கண்ணா! அதான் வெளில வந்தேன்.." என்றாள்.

"ட்ரிப்ஸ் இன்ஜெக்ட் பண்ணிருக்குல்ல அதான் வேர்க்கும்.. ஆனாலும் ரொம்ப நேரம் காத்துல நிற்க வேண்டாம் கீர்த்தி" என்றான் அக்கறையாய்.

"ம்ம்ம்ம்.."

"அம்மா கஞ்சி செஞ்சுட்டு இருக்காங்க.. மாமாக்கும் அப்புக்கும் டிபன் கொடுத்துட்டேன்.. நீ சாப்பிட்டு டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு ஓகே" என்று கண்ணன் சொல்ல,

"ம்ம்ம்ம்" என்றாள்.

"இப்ப ஓகே தானே?" என்று கேட்க,

"இப்ப பெட்டர் கண்ணா.." என்றவள்,

"கண்ணா! ஹாஸ்பிடல்ல நாங்க நிஷாவை பார்த்தோம்" என்றாள்.

"யாரைப் பார்த்தா என்ன? வேண்டாதவங்களை பற்றி என்ன பேச்சு? ஏதாச்சும் பேசினியா? அம்மா ஏதும் பேசலையே?" கண்ணன் கேட்க,

"நிஷாவே தான் எனக்கு ட்ரிப்ஸ் ஏறும் போது ரூம்க்கு வந்தாங்க கண்ணா" என்றாள்.

"இன்னும் அண்ணாவை தான் ஃபால்லோ பன்றாளா என்ன?"

"ஆமா இவங்க அண்ணன் பெரிய இவரு" முகம் வாடி இருந்தாலும் வார்த்தைகள் குறையவில்லை கீர்த்திக்கு.

"ஃபீவர்னு கூட பார்க்க மாட்டேன்.. அடி வெளுத்துடுவேன்.. என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. அம்மா எதுவும் சொல்லல?" என்றான் கண்ணன்.

"எங்க பேசுறது? அத்தைகிட்ட சாரி கேட்டுட்டு ராம் மன்னிப்பு கிடைச்சா சந்தோஷம்னு சொல்லிட்டு அதுவா போய்டுச்சு.. உன் அண்ணா முகத்தை பார்க்கணுமே... பழைய காதலியை பார்க்கும் போது எவ்வளவு கெத்தா நிற்கணும்? என்னவோ கல்லை முழுங்கின மாதிரி உர்ருனு முறைச்சுட்டு நிக்குறாங்க..என்ன வளர்த்து வச்சுருக்க நீ?"

கீர்த்தியின் பேச்சில் கண்ணன் அடிப்பாவி என்பதை போல தான் நின்றான்.

"உனக்கு போய் பாவப்பட்டு அழைச்சுட்டு போனான் பார்த்தியா! அவனுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்" கண்ணன் சொல்ல,

"ஹெல்லோ அவங்க ஒன்னும் அழைச்சிட்டு போகல.. நீயா தானே என்னை அவங்ககிட்ட தள்ளி விட்ட!" கீர்த்தி

"உன் வாய் நீளும் போதே தெரியுது நீ எவ்வளவு ஹெல்த்தியா இருக்குறனு.. உனக்கு கஞ்சி வேற! போய் மூச்சுமுட்ட சாப்பிட்டு தூங்கு.. ஓடிரு" என்று சொல்ல,

"ஒரு நிமிஷம்! ஆமா அன்னைக்கு நீயும் ராமும் அந்த ஆள்.... அதான் அந்த எம்பியோ எம்எல்ஏவோனு பார்க்க போனீங்களே? என்னஆச்சு? எதுவுமே சொல்லல நீ?" கீர்த்தி கேட்க,

"இப்ப தான் கேட்க தோணுச்சா உனக்கு? அதெல்லாம் சால்வ் ஆகி நாலு மாசம் ஆச்சு.. நீ முதல்ல உள்ளே போ" என்று கண்ணன் விரட்ட,

"அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லேன்" என்று அவன் தள்ளியதையும் பொருட்படுத்தாமல் நின்றாள்.

"நான் வேணா சொல்லவா?" என்ற குரலில் திரும்பி பார்க்க, அங்கே ராம்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
அன்று தனியே விட்டுச் சென்றவன்
இன்று அழைத்து செல்ல
அவனுக்குள் ஒரு மாற்றமோ.....
கண்ணன் கிடைக்குற கேப்புல
கடா வெட்றான்....
கண்ணனுக்கு அம்மான்னா சும்மா வா......
போட்டிக்கு போட்டிக்கு வாய் சண்டை அருமை.....
ராம் கலக்குற..... 🤩🤩🤩🤩
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அன்று தனியே விட்டுச் சென்றவன்
இன்று அழைத்து செல்ல
அவனுக்குள் ஒரு மாற்றமோ.....
கண்ணன் கிடைக்குற கேப்புல
கடா வெட்றான்....
கண்ணனுக்கு அம்மான்னா சும்மா வா......
போட்டிக்கு போட்டிக்கு வாய் சண்டை அருமை.....
ராம் கலக்குற..... 🤩🤩🤩🤩
Thank u
 
Top