• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 32

"என்ன மாமா இப்படி சொல்றிங்க? நீங்க குடுத்தா கீர்த்தி வாங்கிப்பா தானே?" என்று ராம் கேட்க, விரக்தியாய் புன்னகைத்த ஜெகன்,

"என் கையால வாங்கிக்க மாட்டா பா.. நானும் அதை விரும்பல.. நீயே கீர்த்திகிட்ட ஒப்படைச்சுடு" என்று கூற, தயங்கியே நின்றான் ராம். கண்ணனும் பார்த்தவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

"அண்ணே! என்ன நீங்க? பார்த்து பார்த்து ஆசையா நீங்க அவளுக்காக வாங்கின நகையை உங்ககிட்ட வாங்கிக்க மாட்டாளா? அவ வரட்டும் நானே கேட்குறேன்" என்றார் சித்ராவும்.

அந்த காலைவேளையில் பரபரப்பாய் அனைவரும் அன்றாட வேளைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தங்கராஜ் ஆஃபிஸ் சென்றிருக்க, லதா அபர்ணாவும் கல்லூரி சென்றிருந்த நேரம் அது.

"இல்ல சித்ரா! அவ என்ன பண்ணுவா? இதை நான் குடுத்தேன்னு சொல்லி நீங்க குடுத்தாலும் வாங்கிக்குவா.. எனக்கு அது போதும்.. இந்தளவுக்கு கீர்த்தி என்னை மன்னிச்சா போதும்" என்று கூற,

"மாமா! என்ன மன்னிப்பு அது இதுன்னு.. நாங்க சொல்றோம் அவகிட்ட.. அவளுக்கு நீங்க செய்யுறதை நீங்களே தானே அவ கையில குடுக்கணும்?" கண்ணன் கேட்க,

"இனி ராம் வேற கீர்த்தி வேற இல்லையே கண்ணா? நான் மாப்பிள்ளை கையில கொடுக்குறேன்.. அவ்வளவு தானே?" என்ற போது அவரிடம் என்ன சொல்வதென தெரியவில்லை.

"ஏன் ண்ணே! நானும் கேட்க கூடாது கேட்க கூடாதுன்னு தான் நினச்சேன்.. ஆனா இப்ப கேட்கணும் தோணுது.. அப்படி என்ன தான் கோபம் கீர்த்திக்கு உங்க மேல?" என்று கேட்க,

"ம்மா!" என்று அதட்டினான் ராம்.

"ஏன் டா.. சின்ன வயசுல நீ பென்சில் வாங்கி தரலனு கோச்சிட்ட மாதிரி அவளும் ஏதோ ஒண்ணுக்காக கோச்சிட்டு இருக்க போறா.. அதுக்காக இன்னும் அப்படியே இருக்குறதா? நாளைக்கே உங்களுக்கு குழந்தை பிறக்கும்.. அப்பவும் இப்படியே இருக்க முடியுமா? நாம தான் கீர்த்திக்கு எடுத்து சொல்லணும் ராம்.. என்ன ண்ணே! நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?" என்று சித்ரா கேட்க,

"பரவாயில்ல ராம்.. சித்ரா சரியா தான் கேட்குறா?" என்றவர் அமைதியாய் நிற்க, தான் அங்கே அதிகப்படியோ என்று தோன்றியது கண்ணனிற்கு.

"ப்பா! முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் கிளம்புறேன்.. வர்றேன் மாமா" என்று கண்ணன் கிளம்பிவிட்டான்.

சில நொடிகள் மௌனமே அந்த இடத்தினில் சூழ்ந்தந்திருக்க ஜெகன் பேச ஆரம்பிக்கும் வரை பெரிதாய் எதையும் நினைத்திருக்கவில்லை மற்றவர்கள். மெல்ல சிரித்த ஜெகன்,

"கண்ணா எப்பவுமே நியாயமானவன் தான்.. அதான் நீங்க எல்லாம் கீர்த்தியை சமாதானம் பண்ண சொன்னதும் ரெண்டு பக்க நியாயத்தை கேட்கலைன்னு கிளம்பிட்டான்" என்று கூற,

"அவன் போறான் விடுங்க ண்ணே!" என்றார் சித்ரா.

"இல்ல சித்ரா! அது தான் சரினு நானும் சொல்றேன்" என்று ஜெகன் கூற, புரியாமல் விழித்தனர்.

"கீர்த்திக்கு தப்பு பண்ணினா பிடிக்காது.. நான்.. நான் தப்பு பண்ணிருக்கேன்... தப்பு இல்ல துரோகம்.... என் கவுசல்யாக்கு.... என் குடும்பத்துக்கு நான் துரோகம் பண்ணிருக்கேன்.. குழந்தையா இருக்கும் போதே அதை எனக்கு புரிய வச்சவ கீர்த்தி.. நான் திருந்திட்டேன் தான்.. அதுக்காக நான் செஞ்சது இல்லைனு ஆகிடாதே! இவ்வளவு கீர்த்தி என் மேல பாசமா இருக்குறதே எனக்கு போதும்.." என்ற ஜெகன் அவர் வாங்கி வந்த நகையை ராமின் கைகளில் ஒப்படைத்துவிட்டே சென்றார்.

சித்ரா, தங்கராஜ், ராம் மூவருக்கும் இதற்கு உடனே பதில் சொல்லிடவோ ஆறுதல் சொல்லிடவோ முடியவில்லை.

கண்ணன் நம்பினான் கீர்த்தி செய்வதில் ஏதோ நியாயம் இருக்குமென.. அதை தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை.

இப்போது ஜெகன் பேச்சை கேட்ட பின் அதுவே மற்றவர்களுக்கு சரி என்று பட, யாராலும் வாய் திறக்க முடியவில்லை.

நகையை சித்ரா கைகளில் கொடுத்த ராம், "நீங்களே மாமா கொடுத்ததா கீர்த்திக்கு கொடுங்க மா" என்றும் சொல்லிவிட, அவரும் வாங்கிக் கொண்டார்.

"என்னங்க! இப்பலாம் தனியா போறது இல்லை போல?" பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நிஷா, ராஜேஷிடம் கேட்டான் கண்ணன்.

"இவங்கள அந்த அண்ணாமலை வீட்ல பார்த்தோம்ல?" ராஜேஷ் நிஷாவிடம் கேட்க,

"ம்ம்! ராம் பிரதர்" என்றாள் நிஷா.

"ஓஹ்! ஹெலோ சார்" என்று ராஜேஷ் புன்னகைக்க, கைகட்டி பார்த்து நின்றான் கண்ணன்.

"சாரி சார்! நீங்க கொஞ்சம் எங்களை புரிஞ்சுக்கலாமே!" ராஜேஷ் தயங்கியே கேட்க,

"உங்க ப்ரோப்லேம் பெரியது தான்.. நான் இல்லைனு சொல்லல.. அதுக்காக உங்க வைஃப் செஞ்சது நியாயமா? நீங்க எப்படி அதுக்கு அல்லோ பண்ணீங்கனு எனக்கு புரியவே இல்லை.. இதுல மறுபடி வேற அண்ணாவை பார்க்க ஆஃபிஸ் போயிருக்கிங்க.. நல்லவேளை அவன் முன்ன மாதிரி இல்ல.. ஏதோ பேசிட்டு போயிருக்கான்" என்றவன் வைஃப் என்பதில் அழுத்தம் கொடுத்து கூற, நிமிர்ந்தாள் இல்லை நிஷா.

"நிஜமா தப்பு தான் சார்.. அதுக்கு நானும் ஒரு காரணம் தான்.. இல்லைனு சொல்ல மாட்டேன்.. பட் ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் அஸ்" ராஜேஷ் கூற, ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவன்,

"ஓகே லீவ் இட்.. இதுல ஒரு லெவல்க்கு மேல நான் கேள்வி கேட்க முடியாது.." என்றவன் பைக்கினை உதைக்க,

"சார் ஒரு நிமிஷம்" என நிறுத்தினான் ராஜேஷ். என்ன என்பதை போல கண்ணன் பார்க்க,

"அது... நீங்களாச்சும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே.. நாங்க ஹெல்ப்லெஸ்ஸா இருக்கோம் சார்" ராஜேஷ் குரலில் அவ்வளவு வருத்தம்.

"வாட் யூ மீன்?" என்றான் புரியாமல் கண்ணன்.

"அதான் சார்! அந்த அண்ணாமலை விஷயத்துல.. வீ நீட் அ ஹெல்ப் சார்" என்றான்.

"அப்ப அன்னைக்கு உங்களை அந்த அண்ணாமலை வீட்ல பார்த்தேனே?" கண்ணன் கேட்க,

"ஆமா! அன்னைக்கு நாங்களும் மன்னிப்பு கேட்க தான் வந்தோம்.. உங்களை அன்னைக்கு பார்த்த அப்புறம் உங்க பேமிலி மேல தனி ரெஸ்பெக்ட் வந்தது சார்.." ராஜேஷ் கூற,

"ஏன் அதுக்கு முன்னாடி இளிச்சவாய் குடும்பம்னு நினைச்சீங்களா?" என்றான் கோபமாகவே.

"அய்யோ சார்! நான் அப்படி மீன் பண்ணல.."

"நீங்க என்ன சொல்லணுமோ அதை சொன்னா நான் கிளம்புவேன்"

"ஓகே சாரி!" என்றவன் தன் பக்கம் முழுதாய் விளக்கினான்.

"இப்ப என் மேலன்றதை விட நிஷா மேல தான் ரொம்ப கோபமா இருக்குறான்.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு சார்.. நிம்மதியாவே இருக்க முடியல" என்று ராஜேஷ் கூற,

"என்னால முடியுமானு தெரியல.. பட் ஐ வில் ட்ரை.. ஆனா முழுசா நம்பவும் வேண்டாம்.." என்று மட்டும் சொல்லிக் கொண்டு சென்றான்.

நிஷா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. பேசவும் முடியவில்லை அவளால். அது கண்ணனிற்கு தேவையும் இல்லை தான்.

அன்று அண்ணாமலை முன் தலைகுனிந்து ராஜேஷ் நின்றதை கண்ணன் நேரில் கண்டிருந்தான்.

தன்னைப் போலவே மன்னித்தோ பிழைத்து போ என்றோ விட்டிருப்பான் என நினைத்திருக்க, இப்போது அப்படி இல்லை என்றதும் கொஞ்சம் இறங்கி வந்தான்.

காரணம் பெரிதாய் எதுவும் இல்லை என்றாலும் காதலித்து வீட்டை எதிர்த்து தனியே வாழ்ந்து வரும் இருவர்.. தங்களுக்கு என்று யாரும் இல்லாமல் தானே இப்படி விரட்டி அடித்தாலும் காலை சுற்றி வருகிறார்கள் என்ற எண்ணம் தான் தோன்றியது முதலில்.

சரி என்றாலும் கோபத்தை தள்ளி வைத்து பார்த்தால் தவறு தன் அண்ணன் மீதும் இருப்பதை மறுக்கவில்லை கண்ணன்.

தன்னால் முடிந்தது, தன் குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அவ்வளவு செய்தாகியிற்று.. இனி இதில் தான் தலையிட்டால் நிச்சயம் ஆபத்து தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான் என்று உணர்ந்தே இருந்தான்.

அதனாலேயே ராமிடம் பேசும் போதும் இதில் நேரிடையாக தலையிட வேண்டாம் என்றும், முடிந்தால் மட்டும் எதாவது செய் என்றும் கண்ணன் கூறியிருந்தான்.

மற்றபடி இதை ராம் செய்வானா என யோசிக்கவில்லை. செய்தாலும் செய்யா விட்டாலும் நிஷா என்ற ஒரு பெண்ணின் பேச்சு இனி தன் வீட்டில் இருக்க வேண்டாம் என்பதே கண்ணனின் விருப்பம்.

ராம் மாலை வீட்டிற்கு வரும் நேரம் வீட்டு வாசலிலேயே அனைவரின் குரலும் கேட்கும்படி களேபரமாய் இருந்தது. அபர்ணா ஜெகன், கீர்த்தி, லதா, தங்கராஜ், கண்ணன், சித்ரா என மொத்த குரலும் கீர்த்தி வீட்டிலிருந்து வர, நேராய் அங்கு சென்றான் ராம்.

"ம்மா! சந்தை கடை தோத்து போய்டும்.. தெருவே நம்ம வீட்டை தான் வேடிக்கை பார்க்குது.. ஏன் மா இவ்வளவு சத்தம்?" ராம் கேட்டபடி தோளின் குறுக்காய் மாட்டியிருந்த பேகினை கழட்ட,

"ண்ணா! ஒரு ஃபன்க்சன்னா இப்படி தான் வீடு கலகலனு இருக்கனும்.. எல்லாம் உன் என்கேஜ்மென்ட் பத்தி தான்" என்று கண்ணன் கூற, கீர்த்தியை ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பினான் ராம்.

"எங்கேஜ்மென்ட்க்கு என்ன? அதான் எல்லாம் டிசைட் பண்ணியாச்சுல்ல?" என்று ராம் கேட்க,

"இங்க பாரு ராம்.. நம்ம திருநெல்வேலி அத்தையை கல்யாணத்துக்கு கூப்பிட வேணாம்னு அப்பா சொல்றாங்க" என்றார் சித்ரா.

"ஏன் பா? கூப்பிடலாம்ல? இப்ப இல்லைனா எப்ப பாக்குறதாம் எல்லாத்தையும்?" ராம் கேட்க,

"அதை தான் டா நானும் சொல்றேன்" என்றார் சித்ராவும்.

"ராம்! அது வேற டா.. வந்தா உன் அத்தை சும்மா போக மாட்டா.. எனக்கும் சீர் செய்யுங்கனு சொல்லுவா" தங்கராஜ் கூற,

"செய்ங்க.. உங்க தங்கச்சி தானே!" - கண்ணன்.

"ப்ச்! உறவுக்காக பாசத்துக்காக கேட்குறது வேற.. கொடுக்குறது வேற கண்ணா! அவங்களுக்கு எவ்வளவு வேணா செய்யலாம்.. உரிமைக்காக கேட்குறவங்களுக்கு கூட கொடுக்கலாம்.. ஆனா பொறாமைன்ற குணம் இருக்கே அது சம்மந்தபட்டவங்களை மட்டும் இல்லாமல் கூட இருக்குறவங்களையும் பாதிக்கும்.. அவங்களை தள்ளி வைக்குறது தான் நமக்கு நல்லது.. ஒரு வார்த்தை ஊசி ஏத்துற மாதிரி சொல்லிட்டா கூட காலம் முழுக்க மறக்க முடியாது" தங்கராஜ் கூற,

"அதுக்காக அப்படியே விட்டுட்டா எல்லாரும் தப்பா பேசுவாங்களே பா" ராம் கேட்க, அதானே என நின்றிருந்தார் சித்ரா.

கீர்த்தி, ஜெகன் இவர்களுக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

"தப்பா பேசுறவங்களும் இவங்களை மாதிரி உள்ளவங்களா தான் இருப்பாங்க.. அதையும் மீறி பேசுறவங்களுக்காக நல்ல நாளில நம்மோட சந்தோசத்தை தொலைச்சிட்டு நிற்க முடியாது டா.. என்னோட முடிவு இது தான்" என்று கூறிவிட, அதற்க்குமேல் எதுவும் சொல்லிவிட முடியவில்லை மற்றவர்களுக்கு.

"சரி ஓகே! அவ்வளவு தானே! அடுத்த நேம் சொல்லுங்க மா" கண்ணன் கூற, சித்ரா, ஜெகன், தங்கராஜ் மூவரும் பெயர்களை நியாபகப்படுத்த, பத்திரிக்கை கொடுப்பதற்கான பெயர் பட்டியல் தயாராகிக் கொண்டிருந்தது நிச்சய வேலையுடன்.

தொடரும்..
 
Top