• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 34

'எப்படி சொல்றது?... கண்ணாவாச்சும் ராம்கிட்ட சொல்லி இருக்கலாம்.... அடலீஸ்ட் அத்தை மாமாவாச்சும் சொல்லியிருக்கலாம்.... நான் சொன்னா ராம் நம்பணுமே!' இப்படி பல கேள்விகளை மனதில் வைத்து தான் இன்று வரை தன் காதலைப் பற்றி ராமிடம் மறைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

அதே போல தான் இருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடக் கூடாது என மற்றவர்களும் ராமிடம் எதையும் கூறி இருக்கவில்லை. ஜெகனிடம் சொல்லிவிடும் படி கண்ணனையே கீர்த்தி அனுப்பி இருக்க, ஜெகனுக்கு அதில் மகிழ்ச்சி தான்.

தானே விரும்பிய இடத்திற்கு தான் மகள் வாழப் போகிறாள் என்பதில். அத்தோடு யாரையும் ஏமாற்றும் எண்ணமும் அவளிடம் இல்லையே!

இப்படி தினம்தினம் அவனிடம் தன் காதலைக் கூற முடியாமல் அவன் அருகாமையில் தான் மயங்கி ரசித்து நிற்பதை கூற முடியாமல் என கீர்த்தி தவித்து நிற்க, அவன் கேட்ட ஒற்றைக் கேள்வியில் மனம் முழுதும் நிறைந்துவிட அது முகத்தினிலும் பிரதிபலிக்க ராம் முன் நின்றாள் கீர்த்தி.

"நீ என்னை விரும்புற ரைட்?" என்ற கேள்வியில்,

"ராம்?" கண்களை விரித்து என்ன பேசுவது என்றே தெரியாமல் அவள் நிற்க,

"எனக்கு மாதிரியே உனக்கும் என்னை புடிக்கும் தானே? என்னால பீல் பண்ண முடியுது கீர்த்தி. எப்பவும் என்னை நேர் பார்வை தான் பார்க்குற.. அந்த பார்வைல ஒரு ரசனையை நான் பாக்குறேன்.. இப்பனு இல்ல முன்னாடியுமே நீ என்னை நேரா தான் பார்த்து நிற்ப, அப்ப நமக்குள்ள ஆகாது இல்ல? நீ முறைச்சு பார்த்துட்டே இருக்குறது தான் இப்ப நியாபகம் வருது.. ஆனா இப்ப அப்படி இல்ல.. எப்ப என்னை பார்த்தாலும் உன் முகத்துல வர்ற அந்த.. அந்த ஒரு... எப்படி சொல்றது? ஐ பீல் இட்.. அண்ட் ஐ என்ஜோய்ட் இட்.. அந்த பார்வைக்கான அர்த்தமே இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது கீர்த்தி"

அவன் தன் உணர்வுகளையும் அவளைக் கண்டு கொண்டதையும் கூற, புஸ்ஸென்று ஆனது கீர்த்திக்கு.

ராம் கூறிய அனைத்தும் உண்மை தான் சந்தோசம் தான் என்றாலும் அவள் அதை விட பெரிய மகிழ்ச்சியை எதிர்பார்திருக்க, இது குறைவாய் தெரிந்தது அவளுக்கு.

"என்னாச்சு? முகம் அதுக்குள்ள டல்லடிக்குது?" ராம் கேட்க, உடனே தன்னை சரி செய்து கொண்டவள், அவன் தன்னை முழுதாய் கவனிப்பதையும் புரிந்து கொண்டாள்.

"எனக்கு உங்களைப் பிடிக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே!" அவள் புன்னகையாய் கூற,

"ஹ்ம்ம் யாஹ்! பட் புடிக்கும்னும் நீ சொல்லவே இல்லையே!" என்று கூற, கீர்த்தி முறைக்கவும்,

"எனக்கெல்லாம் எதுவும் இல்ல பா நேராவே சொல்லுவேன்.. எனக்கு கீர்த்தின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆனா காதல்னு இல்ல.. இப்பவும் எனக்கு காதலுக்கான மீனிங் தெரியுமானு கேட்டா டவுட் தான்.. ஸோ எனக்கு கீர்த்தியை கீர்த்தியா புடிக்கும்.. அவளை விரும்புறேன்.. மனைவியா கடைசி வரை சந்தோசமா பார்த்துப்பேன்.." என்று அவள் கைகளைப் பிடித்திருந்தவன் கைகள் அவள் முகத்தினை தாங்கி இருக்க, வார்த்தைகளில் கூறிவிட முடியாதபடிக்கு உணர்ச்சிகளின் பிடியில் நின்றாள் கீர்த்தி.

இதோ அவன் நேசத்தின் அளவினை கூறி தன் நேசத்தையும் கூட கண் பார்வை வைத்தே கண்டும் கொண்டான்..

கண்படும் தூரத்தில் நின்று வருத்திக் கொண்டிருந்தவன் இன்று கை தொடும் தூரத்தில் குளிர் நிலவாய் இவளை குளிர்வித்துக் கொண்டிருக்கிறான்.

"நீ பாக்குற அந்த பார்வைக்கு அர்த்தம் புரியாத போது என்ன அதுனு தான் தேடினேன்.. இப்ப தெரிஞ்சதும் ப்ச்.. ஐ காண்ட்" என்றவன் பேசுவதை கவனிக்கும் முன்னே அவன் தொடுகையும் குரலுமாய் அவனை அவளுக்கு உணர்த்தியது.

உணர்ந்து செயல்பட மூளையும் கொஞ்சம் வேலை செயல்பட வேண்டுமே! நொடிகள் கரையும் முன்பே உடனே தெளிந்தவன் என்னவோ ராம் தான்.

"நீ கிளம்பு கீர்த்தி!" ராம் கூறவும் கீர்த்தி புரியாமல் விழிக்க, அதைப் பார்த்தவன்

"ம்ம்ஹ்ம்ம்! நான் என் கண்ட்ரோல்ல இல்ல.. ஓடிடுன்னு சொன்னேன்..." என்றவன் முகமும் அதற்கு கதை சொல்ல, முகம் முழுதும் செவ்வான வண்ணம் பூசிக் கொண்டு திரும்பியும் பாராமல் ஓடினாள்.

வந்தவள் தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்துவிட,

"அக்கா! சாப்பிடலையா?" என வந்தாள் அபர்ணா.

"அப்புறமா சாப்ட்டுக்குறேன் அப்பு.. நீ சாப்பிட்டியா?" என்று கீர்த்தி கேட்கல,

"ஆச்சு க்கா.. நீ மட்டும் தான் சாப்பிடலை" என்ற பதிலில் தந்தையும் சாப்பிட்டுவிட்டார் என்பதை அறிந்து கொண்டவள்,

"சரி நீ வச்சுடு நான் வந்து சாப்பிடுக்குறேன்" என்றுவிட, ஜெகனுமே கீர்த்திக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு தூங்கும்படி கூறிவிட்டார்.

திகட்ட திகட்ட ராமுடன் கழித்த நிமிடங்களை நினைத்து நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

வாழ்வில் எதிர்பார்த்தது என்ன? நடப்பது என்ன? தானே எதிர்பாராதது என்றாலும் அத்தனை இனிப்பாய் மாறி இருந்தது. மாற்றி இருந்தது இந்த வாழ்க்கை.

தன் காதலை கூறி இருந்தால் கூட ராமிடம் இந்த அளவுக்கு காதல் கிடைத்திருக்குமா என்பதில் சந்தேகம் தான் கீர்த்திக்கு. அதிலேயே தான் தேங்கி நின்றிருந்தது மனது.

எதையெல்லாம் சாத்தியமே இல்லை என நினைத்து மருகி இருந்தாலோ அதற்கும் மேலாக அவன் அவனை நிரூபித்துக் கொண்டிருக்க, அந்த நொடிகளில் கரைந்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

திருமணத்திற்கு முன் அவனிடம் தன்னைக் கூறிவிட வேண்டும். அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் என நினைத்திருந்தவளுக்கு அது தேவையே இல்லை என்பதை போல ராம் தன்னையே காட்டிக் கொண்டு, அவளையும் கண்டிருக்க, இப்பொழுது கீர்த்தியுமே தன் காதலை அவனிடம் சொல்வதாய் இல்லை என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

கீர்த்தி சென்ற பின்பும் நிமிடங்கள் கரைய அங்கேயே நின்றிருந்தான் ராம். அவள் விரும்பும் புன்னகை மட்டும் பஞ்சம் இல்லாமல் ராம் முகத்தினில் தேங்கி இருக்க, கீர்த்தியின் சிந்தனையிலேயே நின்றான் அவன்.

"ண்ணா!" என்ற அழைப்பில் ராம் திரும்பிப் பார்க்க, கண்ணன் நின்றிருந்தான்.

"சொல்லு டா" - ராம்.

"சும்மா தான் ண்ணா.. கீர்த்தி போனதை பார்த்தேன்.. அதான் மேல வந்தேன்"

"ஹ்ம்ம்!"

"என்ன சொல்றாங்க மேடம்?" கண்ணன் கேட்க, அவனைப் பார்த்து சிரித்தான் ராம்.

"பேசறாங்களே! இப்ப தான் மேடம் ஓ..ரளவு பேசறாங்க" என்று கூறி சிரிக்க, கண்ணனும் சிரித்துக் கொண்டான்.

"இன்னும் கீர்த்தி எதுவும் சொல்லல இல்ல?" கண்ணனும் சிறு புன்னகையுடன் கூற,

"எதை டா?" என்றான் அவனை கேள்வியாய் பார்த்து.

"எதையுமே!"

"புரியல கண்ணா!"

"ஹ்ம்ம்..." என்று யோசித்த கண்ணன் ஒரு நிமிடம் யோசித்து நின்றவன் பின் சொல்லிவிடுவதே நல்லது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

"ண்ணா! கீர்த்தியை சின்ன வயசுலயே நமக்கு தெரியும்.. இது தான் வேணும்னு அவ அடம் பண்ண மாட்டா.. ஆனா அதை தவிர வேற சாய்ஸ் எடுத்துக்கவும் மாட்டா" கண்ணன் கூற,

"ஹ்ம்ம் ஓகே!" என்று இழுத்து, அடுத்து என்பதாய் நிறுத்தினான் ராம்.

"ஸோ! நான் என்ன சொல்ல வர்றேன்னா கீர்த்திக்கு நீ சாய்ஸ் இல்ல.. அவளோட சூஸ்" என்று கூற, புரியாமல் விழித்தவன்,

"என்னடா சொல்ற? ஒன்னும் புரியல" என்றான்.

"நீ அம்மா சொன்னதும், அந்த இடத்துல கீர்த்தினு இல்லாமல் யாரா இருந்தாலும் சம்மதம் சொல்லி இருப்பேன்னு சொன்ன.. பட் கீர்த்தி! அந்த இடத்துல நீ இல்லாமல் வேற யாரா இருந்தாலும் சம்மதம் சொல்லி இருக்க மாட்டா" என்று கூற, அதை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது ராமிற்கு.

"என்ன டா சொல்ல வர்ற?" புரிந்தது தான் கண்ணன் பேசியது..ஆனால் அர்த்தம்? அந்த வார்த்தைகள் கூறுவது என்ன? அது எப்படி என புரியாமல் கேட்டான்.

"இன்னுமா புரியல? கீர்த்தி உன்னை ஒவ்வொரு முறை முறைச்சு பாக்குறதுக்கு, உன் கூட கார்ல வர மாட்டேன்னு அன்னைக்கு அடம் பண்ணினது இப்படி ஒவ்வொரு முறையும் கொஞ்சம் ரீவைன் பண்ணி பாரு ண்ணா.. உனக்கு புரியும்.. புரியலைனா டிஸ்கஸ் வித் ஹெர்.. நான் ஏன் சொல்றேன் தெரியுமா? உன் மேரேஜ்க்கு முன்னாடி உன் பியான்சிய முழுசா புரிஞ்சுட்டு லைஃப்பை லீட் பண்ணனும்னு தான்.. அதுவும் இவ்வளவு நாள்ல நீ கீர்த்தியை புரிஞ்சு அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டனு தெரிஞ்சதால தான் சொல்றேன்.. ஆஸ்க் கீர்த்தி அபௌட் திஸ்..என்ஜோய் யுவர் மொமெண்ட்ஸ்" என்று கண்ணன் தன் அண்ணனைக் கட்டிக் கொள்ள, புரியாத உணர்வு ஆயினும் அது சுகமாய் தாக்கியிருந்தது ராமினை.

கண்ணனும் சென்றுவிட, சில நிமிடங்கள் நின்றிருந்த ராமிற்கு கண்ணனின் வார்த்தைகள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

புரிந்ததை மனம் ஏற்று கொள்ள தயாராய் இல்லை. அது சாத்தியமே இல்லையடா மடையா என அவன் மனமே கூறியது போல தோன்ற, புரியாததை எவ்வளவு யோசித்தும் பதில் இல்லை.

இப்பொழுதே கீர்த்தியை அழைத்து கேட்டு விடுவோமா எனும் வேகமும் இருக்க, இவ்வளவு நேரம் இருந்துவிட்டு சென்றவளை மறுபடி என்னவென்று அழைப்பது? இதற்காக நாளை வரை காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் பாடாய் படுத்த, கீழிருந்து சித்ராவின் குரல்,

"ராம்! சாப்பிட வா டா" என கேட்க, குழம்பிய மனதுடன் தான் சென்றான்.

அடுத்த வேலை நாள் அனைவரையும் இழுத்து மக் கொள்ள, காலை வேலையின் பரபரப்பு அனைவர் வீட்டினிலும் இருக்க, கீர்த்தி எழுந்ததே ராமின் செய்தி வந்ததற்கான தொலைபேசி ஒலியில் தான்.

"குட் மார்னிங் கீர்த்ஸ்" என்ற செய்திக்கு புன்னகைத்துக் கொண்டவள், பதில் அனுப்பும் முன் இன்னொரு செய்தி ஒன்றிணை அது காட்ட, என்னவென்று பார்த்தாள்.

மாலை நேரம் வெளியே சந்திக்க முடியுமா என அவன் கேட்டிருக்க, சில நொடிகள் சிந்தனையின் சாயலில் இருந்தவளுக்கு, உடனே அழைத்துவிட்டான் ராம்.

அனுப்பியதை அவள் பார்த்துவிட்டதற்கான குறியீடு வந்தும் அவள் பதில் கூறாமல் இருக்கவே உடனே அழைத்துவிட்டான்.

"ராம்..."

"ஹ்ம்ம் ராம் தான்.. அவ்வளவு பயமா என்கூட வெளில வர்றதுக்கு?" சாதரணமாய் ராம் கேட்க,

"இல்ல! இல்ல! இன்னைக்கு சாட்டர்டே இல்ல.. பேங்க் அஃப்டெர்நுன் வரை தான் அதான் யோசிச்சுட்டு இருந்தேன்" என்றாள் கீர்த்தி.

மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மாலை கிளம்பினால் அனைவரிடமும் சொல்லிவிட்டு தானே செல்ல முடியும்! புரிந்து கொள்வார்களா என்பதை விட ஒரே வீட்டில் இருந்து கொண்டு வெளியே சந்திப்பதை என்னவென்று எடுத்துக் கொள்வார்கள் என அவள் நினைத்துக் கொண்டிருக்க, எளிதாய் ஒரு வழியை கண்டிருந்தான் ராம்.

"ஓஹ்! தேங்க் காட்! எனக்குமே இன்னைக்கு நைட் ஷிப்ட் தான்.. ஸோ அஃப்டெர்நுன் மீட் பண்ணலாம்.. ஓகே?" என்று கேட்க,

"ம்ம் ஓகே.. ஆனா ஏன் வெளில?" என்று கீர்த்தி கேட்க,

"கொஞ்சம் பேசணும் கீர்த்தி.. மாடில பேசலாம் தான்.. ஆனா ஷிப்ட் மாத்திட்டாங்க.. எனக்கு உன்கிட்ட உடனே பேசணும் அதான்" என்று கூறவும் சரி என்றவளுக்கு உடனே என்றால் என்னவாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே தான் நின்றது அன்றைய நாள்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
கீர்த்தியின் காதலை
கண்களில் கண்டும்
கண்ணன் கூறியதில்
கொஞ்சம் மனது
காதலாய் தவிக்க
கீர்த்தியை சந்திக்க அழைப்பு விடுக்க
கீர்த்தியை எப்பவும் பதட்டத்திலேயே
வெச்சுருப்பீயா ராம்
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
கீர்த்தியின் காதலை
கண்களில் கண்டும்
கண்ணன் கூறியதில்
கொஞ்சம் மனது
காதலாய் தவிக்க
கீர்த்தியை சந்திக்க அழைப்பு விடுக்க
கீர்த்தியை எப்பவும் பதட்டத்திலேயே
வெச்சுருப்பீயா ராம்
Hahaha
 
Top