• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல்..!

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
உன்னை எப்பொழுதும் நேசிக்கிறேன்....
காரணங்கள் பெரிதாய் ஏதுவுமில்லை.....
காதல் என்ன காரணங்களைச்
சேர்த்துக்கொண்டா வரும்...
அப்படியானால் முதலில்
புறக்கணிக்கப்பட வேண்டியது....
மார்க்ஸைத் தன் உயிரினும்
மேலாய் காதலித்த ஜெனியின்
காதலைத் தான்...!!
உண்மையில் ஜெனியைப்
போல் என்னாலும்...
உன்னை காதலிக்க முடியாது...
இருந்தாலும்..
என் பாணியில் என்னால்
உன்னைக் காதலிக்க முடியும்...!!

வருடங்களைக் கடந்து
புதையுண்டு காத்திருந்து....
புரட்சி செய்த ...
ரூசோவின் எழுத்துக்களைப் போல
உன் காதலில் காத்திருப்பு
எனக்கில்லைவேயில்லை தான் ....
என் காதலை உன்னிடத்தில்
சேர்ப்பதில்...!!
எதிர்ப்பார்ப்புமில்லை....
உன் நேரத்தைத் தவிர....!

எந்த உறவில் உன்னை அடக்கிக்
கொள்ளலாம் எனவும்
தெரியவில்லை....
ஆனாலும் எல்லா
இடத்திலும் உன்னை நேசித்துப்
பார்க்கிறேன்...!!
உண்மையிலே.
என் வாழ்வில் உன் பிரவேசம்
எதற்கானதெனத் தெரியாது....!
இருந்தாலும் அது
எப்பொழுதும் இருக்க
வேண்டுமெனனான் விரும்புகிறேன்..!!

உன்னை நேசித்துக்
கொள்ளுமளவிற்கு....
யாரையாவது
நேசித்திருக்கிறேனா?
இல்லை நேசிப்பேனா?
எனத் தெரியாது..!
ஒரே ஒரு நேசிப்பு என்பது
எப்பொழுதும் சாத்தியமில்லையே
தானே....
இருந்தாலும் இந்த நொடி உன்னைத்
தானே அதிகம் நேசிக்கிறேன்...
அதுபோதுமெனக்கு?

உனக்கு தெரியுமா?
நீ அன்பானவள்...
எனக்கு அழகானவள்...
உன்னிடம் பழகியவர்கள் உன்னை
நேசிக்கிறார்கள்....
இல்லை உன் மனதை
புரிந்துகொண்டவர்கள் உன்னை
நேசிக்காமல்...
கடக்க முடியாத அழகிய
இறக்கையில்லா தேவதை
நீ என்பது எனக்கு தெரியும்...!

இப்பொழுதும் கூட
இந்தக் கடிதத்தைப் பார்க்கும்போது
உனக்கு என்மீது....
பொய்க்கோபமோ,
வருத்தமோ கூடவோ,
வரலாம்..!
நீயே சொல்..
வேறெப்படி என் காதலை
உன்னிடம் நான் சேர்ப்பது...!!
பிறிதொரு நாளில்....
உனக்கு என்னைப் பற்றிய
நினைவுகள் ஆக்கிரமித்தால்,
என்னை நினைத்து வருத்தமோ
கோபமோ வேண்டாம்.,!!

என் நீண்ட இரவின் தீராத
பக்கங்களில் எல்லாம்....
உன் நினைவுகளும்,
உன் பேச்சுக்களும்,
அதில் எனக்கான உன் காதலும்
தான் நிறைந்து கிடந்தது...
என்பது உனக்கே
தெரியுமல்லவா?
பிறகேன் நீ வருத்தம்
கொள்வானேன்....!!
இப்பொழுதும் சொல்கிறேன்...
உனக்காக நானிருக்கிறேன்...!
உனக்கெனவும் நானிருக்கிறேன்...!!

இறுதியில்....
இதையெல்லாம் படித்து
முடிக்கும்போது....
உன் இதழ்விரிந்து,
உனக்குள் ஒரு புன்னகையுடன்
குதூகலம் பிறந்தால்..
என் காதல் வென்றதாய்
நினைத்துக்கொள்வேன்....!!

(பிகு -- காதலில் பெரிதாய் நம்பிக்கையோ,
ஆர்வமோ இருந்ததில்லை....
அவளை பார்க்கும் வரை,அவள் நிழலில் வாழும்வரை)
-©Saranya writes