• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 13 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
காத்திருப்பு : 13

சூர்யா கமலேஷ்க்கு போன் பண்ணினான்.

"சூர்யா என்னடா இந்த நேரத்தில போன் பண்ணிருக்கா?"

"மச்சான் வேலையா இருக்கியா? இல்ல வீட்லயாடா?"

"இப்பதான் மச்சான் வீட்டுக்கு வந்தன்டா சொல்லுடா"

"மச்சான்..... நான்.... ஒண்ணு.....சொல்லுவன்.... நீ.... என்ன.... தப்பா....... நினைக்கக்கூடாது"

எப்பவும் குரலில் கம்பீரமாக பேசும் தன் நண்பன் இன்று தடுமாற்றத்துடன் பேசுவதை உணர்ந்தவன்" மச்சான் உன்னப் போய் நான் ஏண்டா தப்பா நினைக்கப்போறன்? நான்ன இப்பிடி நல்லா வாழ்றத்துக்கு நீதானேடா காரணம். என்னாச்சிடா உனக்கு இன்னைக்கி?"

"அ.....து......டா..."

"மச்சான் இப்ப சொல்லப்போறியா இல்லயாடா?"

"அம்மா போன் பண்ணினாங்கடா என்றவன் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். "

"மௌனம்"

"மச்சான் ஏதாச்சும் பேசுடா?"

"மௌனம்"

"உனக்கு பிடிக்கலனா சொல்லுடா நாங்க ஏதும் நினைச்சுக்க மாட்டம்டா மச்சான் பேசுடா என்னடா பண்ற?"

"யோசிச்சிட்டு இருக்கன்டா?'

"என்னடா யோசனை?"

"இல்ல கல்யாணத்த எப்ப வச்சுக்கலாம்னு?"

"என்னடா சொல்ற?"

"ஆமாடா நான் தேவிய கல்யாணம் பண்ணிக்கிறன்டா?"

"உண்மையாத்தான்டா நீயும் உன்னோட குடும்பமும் இல்லன்னா நான் இல்லடா. இப்ப உங்களுக்கு ஒரு பிரச்சனடா அத என்னால சரி பண்ண முடியும்னா எனக்கு சந்தோஷம்டா"

"டேய் நீ எங்களுக்காக சொல்லாதடா உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லுடா?"

"அப்பிடி எதுவும் இல்லடா "

"சரிடா ரொம்ப சந்தோஷம்டா"

"மச்சான் நான் நீ வந்தா மட்டும் தான் கல்யாணம் நடக்கும் சரியா?"

"கண்டிப்பா வர்ரன்டா"

"மச்சான்ன தேவிக்கிட்ட கேட்டீங்களாடா?"

"இல்ல மச்சான்"

"டேய் ஏண்டா அவள்கிட்ட கேக்கல? அவளுக்கு யாரையும் லவ் பண்ணிருந்தா?"

"இல்லடா அவள் யாரையும் லவ் பண்ணலடா"

" சரிடா அப்போ தேவிட்ட பேசிட்டு சொல்லுடா"

"மச்சான் பாட்டி உங்கூட பேசணும்னு சொன்னாங்கடா"

"சரிடா நான் காலைல பேசுறன்"

"சரி மச்சான் நீ தூங்கு நான் நாளைக்கு பேசுறன்"

"சரிடா குட்நைட்"

" thanksda "

"போடா லூசு நான் உன்னோட நண்பன்டா உனக்காக எதுவும் செய்வேன்டா "

" தெரியும்டா குட் நைட்டா"

கதிரவன் தன் கரங்களால் அனைவரையும் அணைத்துக் கொள்ள விடியலும் வந்தது.

"மதி மதி "

"ஏங்க பேர ஏலம் போடுறீங்க?"

"தேவிமா கூட பேசினியாமா?"

"இல்லங்க சூர்யா கமலேஷ்கிட்ட பேசிட்டு சொல்றன்னு சொன்னான் அதுக்கப்புறம்தான் தேவிக்கிட்ட பேசணும்க"

"சரிமா அப்போ சூர்யாகிட்ட கேளும்மா"

"இருங்க போன் பண்றன்"

"குட் மோனிங்மா"

"குட்மோனிங் சூர்யா கமலேஷ்கூட பேசிட்டியா என்ன சொன்னான்?"

" பேசிட்டன்மா சரிணு சொல்லிட்டான்"

"சந்தோஷம்டா நீ அவன கட்டாயப்படுத்தலயேடா"

"இல்லம்மா நான் நிலமைய சொன்னன் அவன் சரிணு சொல்லிட்டான்மா தேவிக்கிட்ட கல்யாணத்துல சம்மதமானு கேக்கட்டுமாம் அம்மா"

"சரிப்பா நான் தேவிக்கிட்ட பேசிட்டு சொல்றன்"

"சரிமா"

"பாட்டி கமலேஷ் கூட பேசணும் என்னு சொன்னாங்கடா"

"பேசட்டும்மா சரிமா எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறன்"

"சரி சூர்யா"

"ஏங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்க"

"எனக்கும்தான் மதிம்மா சரி தேவியோட பேசுவம்மா"

(ஐயோ ஐயோ காலைல இருந்து போன் பண்ணிட்டே இருப்பீங்களா? முடியலப்பா😒)

"தேவிமா"

"தேவி தூங்குறா டிஸ்ரப் பண்ண வேணாம்"

"அடியேய் இங்கதான் எட்டுமணி வரைக்கும் தூங்குறணு பார்த்தா அங்கயும் இப்பிடித்தான் இருக்கியா"

"என்ன மதி voic கேக்குது"

"முதல்ல யாரு பேசுறானு பாருடி"

"அ..ம்...மா நீங்களா?"

"அம்மாவேதான்டி "

"என்னம்மா இந்த நேரத்தில போன் பண்ணிருக்க?"

"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் தேவிமா"

"சொல்லுமா "

"தேவிமா என்றவர் மாப்பிள்ளை யாரென்பதைத் தவிர அனைத்தையும் சொல்லி முடித்தார்.

தூக்கம் முற்றாக விலக எழுந்தமர்ந்து "என்னம்மா சொல்ற திடீர்னு எப்பிடிமா ஸ்டடீஸ் இன்னும் முடியலயேமா?"

"இல்லடா எனக்கு உன்னோட உயிரு முக்கியம்டா தேவிமா"

"சரிமா "

"யாரு மாப்பிள்ளைணு கேக்கமாட்டியா இல்ல நீ வேற யாரையாவது லவ் பண்றீயா?"

"அம்மா எனக்கு எது நல்லது கெட்டதுனு உங்களுக்குத் தெரியும்மா நீங்க யார கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் எனக்கு okமா"

"என்னோட வயித்தில பால வாத்தடாமா மாப்பிள்ளை நம்ம சூர்யா பிரண்டு கமலேஷ்மா டாக்டரா இருக்காரு."

"சரிமா நான் அவர்கூட கொஞ்சம் பேசணும்மா"

"சரிமா நீ இன்னைக்கே லீவு போட்டுட்டு வாமா முதல்ல"

"சரிமா நான் வர்றன்"

"அம்மா அண்ணாக்குத் தெரியுமா?"

"சூர்யாதாண்டா கமலேஷ்கூட பேசினான்"

"சரிமா அப்பாவ evng busstop வரச்சொல்லுங்க"

"பத்திரமா வாடாமா"

"சரிமா bye"

"byeda"

"ஏங்க தேவியும் சரினு சொல்லிட்டா இன்னைக்கே வரச் சொல்லிட்டன். தேவி மாப்பிள்ளை கூட பேசணுமாம்"

"சரி மதி தேவி வந்தப்புறம் பேசச் சொல்லுவம்"

"சரிங்க நான்ன போய் சமைக்கிறன்"

"சரிமா"

சோலையூர்........🏃🏃🏃🏃

"பாட்டி பாட்டி "

"வாடாம்மா வதனா"

"என்ன பாட்டி காலைலயே யோசனை?"

"அதுவாமா தேவிக்கு என்றவர் அனைத்தையும் சொன்னார்.

"அப்டியா பாட்டி தேவி நல்லா இருக்கணும் பாட்டி நான் தேவி நல்லா இருக்கணும்னு நானும் வேண்டிக்கிறன் பாட்டி"

"ரொம்ப நல்ல மனசுடாமா"

"ஆமாம் பாட்டி கமலேஷ் அண்ணா என்ன சொன்னாங்க அவங்களுக்கு சரியாமா?"

"தெரியலமா மதிக்கிட்டதான் கேக்கணும்"

"அப்போ இப்பவே கேளுங்க பாட்டி"

"சரிடா இரு கேப்பம்" என்றவர் மதிக்கு போன் பண்ணினார்.

" அம்மா சொல்லுங்கம்மா"

"குமாரு மதி எங்கப்பா?"

"சமைக்கிறா மா "

"சரிப்பா சூர்யாகிட்ட பேசினதாப்பா? என்ன சொன்னான்?"

"அம்மா கமலேஷ் சரிணு சொல்லிட்டான்மா"

"அப்பிடியாப்பா தேவி மா என்ன சொன்னா?"

"அவளுக்கும் சரிதான்மா மாப்பிள்ளை கூட பேசணும்னு சொன்னா"

"ரொம்ப சந்தோஷம்டா தேவி எப்ப வர்றா?"

"மதி இன்னைக்கே வரச்சொல்லிட்டாமா evng வந்திருவா"

"சரிப்பா சூர்யா வர்றான்தானே"

"கல்யாணத்துக்கு வந்திர்றன்னு சொன்னான்மா"

"சரிப்பா தேவி கமலேஷ்கூட பேசட்டும்பா கல்யாண வேலைய சீக்கிரம் ஆரம்பிச்சிடு"

"சரிமா நீங்க எப்ப வர்றீங்க வதனாவையும் உங்க கூடவே கூட்டிட்டு வாங்கம்மா தேவிக்கு வதனா வந்தா உதவியா இருக்கும்"

"நான் ரெண்டு நாளைக்கப்புறம் வர்றன்பா. சுந்தரத்திட்ட கேட்டுத்து வதனாவ கூட்டிட்டு வர்றன்."

"சரிமா நான் ஆபிஸ்க்கு போணும் அப்புறம் பேசுறன்"

"சரிப்பா நானும் மதிக்கிட்ட பிறகு பேசுறன் வைக்கிறன்"

"சரிமா"

"பாட்டி என்ன சொன்னாங்க?"

"ரெண்டு பேருக்கும் சம்மதமாம். தேவிதான் மாப்பிள்ளையோ பேசணுமாம். இன்னைக்கு அங்க வர்றாளாம்மா"

"ஐ... ஜோலி பாட்டி தேவியோட நல்ல மனசுக்கு அவளுக்கு எதுவும் வராது."

"ஆமாடா உனக்கும் நல்ல மனசுதான்டா தங்கம். உன்னோட அப்பா இப்ப வீட்ல இருப்பாரா?"

"இருப்பாங்க பாட்டி இன்னைக்கு வயலுக்கு போகல"

"சரிடா அப்போ வா உன் வீட்ட போலாம்"

"எதுக்குப் பாட்டி"

"வாாடா சொல்றன்"

"சரிப் பாட்டி "

இருவரும் வதனா வீட்டிற்குச் செல்கின்றனர்.

"அம்மா.....அம்மா...... உள்ள வாங்க பாட்டி"

"என்னமா" என்றபடி சமையல்கட்டில் இருந்து வந்தார் தங்கம்மா.

" அம்மா பாட்டி வந்திருக்காங்க அப்பா எங்க?"

"வாங்க அம்மா வதனா அப்பா பின்னாடி இருக்காரு கூட்டிட்டு வாடாமா"

"சரிமா"

"என்னம்மா எங்கள தேடி வந்திருக்கீங்க? ஏதும் பிரச்சனையாமா?"

"எல்லாம் நல்ல விஷயம் தான் தங்கம். "

"வாங்கம்மா தங்கம் டீ எடுத்து வா அம்மாக்கு"

"இல்ல சுந்தரம் டீ வேண்டாம்."

"என்னம்மா வீடுவரைக்கும் வந்திட்டு ஒண்ணும் சாப்பிடாம போனா நல்லா இருக்குமாமா?"

"சரி நான் ஏன் வந்தன் என்னு சொன்ன பிறகு டீ குடிக்கிறன்"

"சரி சொல்லுங்கம்மா"

"நம்ம தேவிக்கு கல்யாணம் கூடி வந்திருக்குப்பா"

"நல்ல விஷயம்தான்மா ரொம்ப சந்தோஷம் ஆனா ஏன் திடீர்னு?"

"அது ஜாதகம் பாத்தாப்ப ரெண்டு வாரத்தில கல்யாணம் செய்ணும் இல்லாட்டி தேவிட உயிருக்கே ஆபத்துனு ஜோசியர் சொல்லிருக்காரு அதுதான்"

"தேவி தங்கமான புள்ளமா எனக்கு வதனா மாதிரித்தான் தேவியும். சரு மாப்பிள்ளை யாருமா? என்ன பண்றாரு?"

"மாப்பிள்ளை சூர்யாவோட பிரண்ட் கமலேஷ்வரன். டாக்டரா இருக்கான். ரொம்ப நல்ல பையன்"

"சரிமா தேவி நல்லா இருந்தா சரிதான். நீங்க எப்போ போறீங்கம்மா?"

"நீங்களும் கண்டிப்பா தேவி கல்யாணத்துக்கு வரணும் சுந்தரம்"

"கண்டிப்பா மொத நாளே வந்திர்றம்மா"

"நான் ரெண்டு நாளைக்குப் பிறகு போறன். வதனாவையும் கூட்டிட்டு போகட்டுமா? அவள் வந்தா தேவிக்கும் உதவியாய் இருக்கும்"


காத்திருப்புத் தொடரும்............

சுந்தரம் வதனா செல்ல சம்மதம் சொல்வாரா?
தேவி ஏன் கமலேஷூடன் பேச வேண்டும் என்றாள்?


உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒திவ்யதுர்ஷி ✒✒
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
கட்டிக்க போறவன் கிட்ட பேச காரணமும் வேண்டுமோ 🤩🤩
 
Top