• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 25 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
காத்திருப்பு : 25

மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள்.

அப்போது திடீரெண்டு "வதனா " எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான்.

வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது சுந்தரம்தான். ரெயின் ஒருமணிநேரம் லேட்டாகிவிட்டது. அதனால் தேவி கல்யாணத்துக்கு வர நேரமாகிவிட்டது என்று வேகமாக வந்தனர். சுந்தரமும் தங்கம்மாவும். அவர்கள் மண்டபத்தினுள் வரும்போது சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டார்.

"ஒரு கல்யாணத்துக்கு வந்து ரெண்டு கல்யாணம் பார்த்திட்டம்"

"ஆமாப்பா ஆனா என்ன பொண்ணு அவ கிராமத்துப்பொண்ணுனா எவ்வளவு அடக்கத்தோட இருப்பாங்க ஆனா இது ஒருத்தனோட இராத்திரி பூரா இருந்துட்டு மாட்டிக்கிட்டதும் பேசாமலே இருந்துச்சே சீ....."

"என்ன சொல்ற அந்தப்பொண்ண பெத்தவங்கதான் பாவம். நமக்கெதுக்குப்பா வம்பு நாம போலாம் வா "

"ஆமா ஆமா ஆனா அந்த பொண்ணு பேரு என்னவாம்?"

"வதனாவாம்னு பேசிக்கிட்டாங்க நல்ல பேருதான் ஆனா பொண்ணு...."

"சரி சரி வா போலாம்."

இவற்றை எதேர்ச்சியாகக் கேட்ட சுந்தரம் பெண்ணின் பெயரைக்கேட்டதும் வெகுண்டெழுந்தார். சுந்தரம் எவ்வளவு பாசக்காரரோ அவ்வளவிற்கு கோபக்காரர். கோபத்துடன் மண்டபத்தினுள் வந்தவர் கண்களில் பட்டது வதனா சூர்யாவின் கையை பிடித்திருக்கும் காட்சி. அதனால் மேலும் கோபம் வர வதனாவை இழுத்து அறைந்தார்.

தன்தந்தையிடம் அறைவாங்கிய வதனா கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கண்களில் இருந்து கண்ணீர்வர தந்தையை பார்த்துக்கொண்டிருந்தாள். தங்கம்மாமகளிடம் செல்லப்போக அதைத் தடுத்த சுந்தரம்

" தங்கம்மா நமக்கு இனிமேல் புள்ளையே இல்ல நம்ம பொண்ணு வதனா இன்னையோட செத்துட்டா" என்றார்.
சுந்தரத்தின் சத்தம் கேட்டு வந்த மரகதம்மா அவர் சொன்னதைக்கேட்டு

"என்ன பேசுறனு தெரிஞ்சிதான் பேசுறியா சுந்தரம்?"

"வாங்கம்மா பெரியமனுஷியே உங்கள நம்பித்தானே இவள அனுப்பிவைச்சன்"

மல்லிகா " ஓ நீங்கதான் இவள பெத்தவங்களா? ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க உங்க பொண்ண தூ...."

"வாயை மூடு மல்லிகா"

"ஏன் பாட்டி நான் பேசக்கூடாது இவங்க ஒழுங்கா வளர்த்திருந்தா இப்பிடி நடந்திருப்பாளா?"

"கேட்டியா உன்மேல பாசத்தைக்காட்டி வளர்த்ததுக்கு நல்ல பேரு வாங்கி குடுத்துட்ட இன்னும் ஏன் நிக்கிற தங்கம் வா போகலாம்"

"என்னங்க நம்ம பொண்ணு"

"உனக்கு பொண்ணு வேணும்னா நீ இரு நான் போறன்."

"நில்லு சுந்தரம் நான் சொல்ல வர்றத கொஞ்சம் கேளு"

"யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். வெளில எல்லாரும் பேசிட்டு இருந்தத கேட்டுத்துதான் வந்தன். " என்றவர் வதனாவைப்பார்த்து எங்க முகத்திலே முழிச்சிராத. நாங்க செத்தாலும் நீ வரக்கூடாது " என்றவர் வெளியே செல்ல தங்கம்மாவும் மகளைப் பார்த்தவாறு கணவனைப் பின்தொடர்ந்தார்.

காலையிலிருந்து நடந்ததை தனக்குள்ளே நினைத்து நினைத்து வருந்திய வதனா தந்தை இறுதியாக பேசியதைக் கேட்டவள் அழுத்தம் தாளாமல் மயங்கி விழப்போனாள். அவளை சட்டென்று தாங்கிப்பிடித்தான் சூர்யா.

" சூர்யா றூமுக்கு தூக்ககிட்டுபோப்பா"

"சரிப்பாட்டி"

"மதி குமார் நீங்க தேவி கமலேஷ்கூட இருங்க நான் அவங்கள பார்த்துக்கிறன்"

"சரிமா"
தனதறைக்கு தேவியை தூக்கிவந்த சூர்யா கட்டிலில் படுக்கவைத்துவிட்டு டாக்டருக்கு போன் பண்ணினான். மரகதம்மா வதனா அருகில் இருந்தபடி முனிவர் சொன்னதை சூர்யாவிடம் சொன்னவர். கமலேஷ் சொன்னதையும் சொல்லி வதனா ரொம்ப பாவம் சூர்யா ஊர்ல.... என ஏதோ சொல்ல வந்தவர் டாக்டர் வர மௌனமானார்.

டாக்டர் பரிசோதித்துவிட்டு " பயப்பட ஒண்ணுமில்லை சூர்யா பயம் மனஅழுத்தம் இதனாலதான் மயங்கிட்டாங்க. அன்பா பேசுங்க அவங்க எதையோ யோசிச்சிட்டு இருக்காங்க அதைக் கேட்டு புரியவைங்க. நான் ஊசி போட்டிருக்கன் தூங்கி எழுந்ததும் சரியாயிடுவாங்க ok"

"Thanks a lot doctor "

"ok சூர்யா நான் வர்றன்"

"ok doctor " என்றவன் அவரை வழியனுப்பிவிட்டு வதனாவின் ஒருபுறம் அமர்ந்தான். மரகதம்மா பேச தொடங்கினார்.

"சூர்யா ஊர்ல வதனா ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருப்பா. ஆனா ஏதும் பிரச்சனைனா நல்ல முடிவு எடுப்பா. பெரிய சத்தத்துக்கே பயப்படுவா அவ மேல கோவப்பட்டு சத்தம் போட்டுடாதப்பா. உனக்கு அவள புடிக்காட்டி சொல்லு எங்கூடவே கூட்டிட்டுப்போறன்"

"பாட்டி அவ என்னோட பொண்டாட்டி அவள எங்கையும் அனுப்பமாட்டன். உங்களுக்கு தெரியுமா பாட்டி வதனாவ நான் லவ் பண்றன் பாட்டி. அவளுக்கு என்னோட அன்பை புரியவைப்பன். வதனாவ நான் சந்தோசமா பாத்துக்குவன் போதுமா?"

"ரொம்ப சந்தோசம் சூர்யா. சரி நான் போய் குமார்கிட்ட வீட்டுக்கு போறதப்பத்தி பேசிட்டு வர்றன்"

"சரி பாட்டி "

மரகதம்மா சென்றதும் வதனாவின் நெற்றியிலிருந்த முடியை காதோரம் ஒதுக்கியவன். "வதும்மா நான் உன்ன நல்லா பாத்துப்பன்டா. என்ன விட்டு போயிடாதடா பிளீஸ். " என்றவன் அவளது நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.

கீழே வந்த மரகதம்மா "வீட்டுக்கு போலாமா குமார் "

"சரிமா போலாம் எல்லாரும் போயிட்டாங்க நாம போலாம்மா"

"வதனாக்கு எப்பிடி இருக்கு பாட்டி?"

"நல்லா இருக்காமா மனஅழுத்தத்தில மயங்கிட்டா தூங்கி எழுந்தா சரியாயிடுவா தேவிமா " எனும் போதே அங்கு வந்த சூர்யா
"கமலேஷ் அவளுக்கெதிரா நடந்த சதி உனக்கு முன்னாடியே தெரியும்னு எப்பவும் சொல்லிடாத சரியா?"

"சரிடா மச்சான்"

"சூர்யா வதனாவ கூட்டிட்டு வா வீட்டுக்குப் போலாம்"

"சரிப்பா என்ற சூர்யா றூமுக்குப்போனான். அங்கே அவனது மனையாள் துயில் இருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாத சூர்யா தூக்கிக்கொண்டு வந்தான்.

"என்ன சூர்யா இது?"

"அம்மா அவ தூக்கத்தில இருக்காமா எழுப்ப மனசு வரல அதனால தூக்கிட்டு வந்திட்டன் வாங்க போலாம் என்றவனை பார்த்து சிரித்தபடி அவனைத் தொடர்ந்தனர் அனைவரும்.

வீட்டிற்கு வந்ததும் தேவி கமலேஷை ஆர்த்தி எடுத்து உள்ளே அனுப்பிவைத்தார். பின் வதனாவை கையில் ஏந்தியபடி நின்ற சூர்யாவுக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அனுப்பினார்.

"பாட்டி வதனாவ றூம்ல விட்டுட்டு வர்றன். நம்ம வீட்ல இருக்கிற அத்தனை பேரும் இங்க இருக்கணும்னு மனைவி எழுந்துக்க கூடாதென்று மெதுவாக அதே நேரம் அழுத்தமாக சொன்னான் சூர்யா.

சூர்யா வதனாவை தன் அறையில் விட்டு வரவும் அனைவரும் hallல் இருந்தனர். சூர்யா வந்து தனி சோபாவில் அமர்ந்தான்.

"நீலூ நேற்று நீதானே எனக்கு பால்ல குடிக்க கொண்டு வந்த?"

"ஆ...ஆமா... சூர்யா"

"அதில என்ன கலந்திருந்தா?"

"என்ன சூர்யா இது நீலூக்கிட்ட இப்பிடி கேக்கிற என் பொண்ணு நீ அவள கல்யாணம் பண்ணிக்காம அந்த பட்டிக்காட்ட கல்யாணம் பண்ணிட்டனு கவலப்படுறா நீ இப்ப ஏதோ சொல்ற?"

"நான் நீலூக்கிட்டதான் கேட்டன் நீங்க வாய மூடிட்டு இருங்க. இன்னொருதடவ அவள பட்டிக்காடுன்னு சொன்னீங்க நடக்கிறதே வேற. அவ என்னோட பொண்டாட்டி. சந்திரவதனா சூர்யகுமார். எனக்குரிய மரியாதைய அவளுக்கும் குடுக்கணும். ஞாபகம் இருக்கட்டும்"

"சொல்லு நீலூ "

"மௌனம்"

"பளார்" வேற யாரு நம்ம சூர்யாதான் நீலூவை அடித்திருந்தான் .

"என்ன அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நாடகமாடுறீங்களா? தொலைச்சிடுவன் நீங்க செஞ்ச கெட்டதிலயும் ஒரு நல்லது எனக்கு வதனா பொண்டாட்டியா இருக்கா அதனால உங்கள மன்னிச்சிவிடுறன். நாளைக்கு காலைல நான் கீழ வரும்போது இந்த வீட்லயே நீங்க இருக்ககூடா சரியா "

"ச....ரி...."

"போங்க உங்களோட றூமுக்கு என்னோட கண்ணுக்கு முன்னாடி நிக்காதீங்க" என சொல்ல இருவரும் தங்களது அறைக்குச் சென்றனர்.

"மதி நடக்க வேண்டிய சடங்குகளை செய்மா"

"சரி அத்தை"

"அம்மா தேவி கமலேஷ்க்கு மட்டும் சடங்க கவனிங்க எங்களுக்கு வேண்டாம்"

"என்ன சூர்யா இப்பிடி சொல்ற?"

"அவ ரொம்ப பாவம்மா எந்தப்பொண்ணுக்கும் இப்பிடி ஒரு நிலைமை வரக்கூடா அவ கொஞ்சம் நார்மலா வரட்டும்மா அப்புறம் பார்த்துக்கலாம்"

"இல்ல சூர்யா....."

"மதி சூர்யா சொல்றது சரிதான் நீ போய் ஆகவேண்டியத பாரு நைட்டுக்கு ஹொட்டல்ல இருந்து சாப்பாடு ஓடர் பண்ணுவம் "

"சரி அத்தை என்றவர் தேவியை அழைத்துக்கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் சாப்பாடு வர அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பிட்டு முடிந்ததும் மதி வதனாவுக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல முயன்றார்.

"அம்மா சாப்பாட குடுங்க வதனாக்கு நான் குடுக்கிறன்"

"இல்ல சூர்யாய நானே....."

"குடுங்கம்மா நீங்க தேவிய பாருங்க "
மதி தேவியை அலங்கரிக்க அழைத்துச் செல்ல கமலேஷை குமார் அழைத்துச் சென்றார்.

"சூர்யா வதனா என்னோட அறையில இருக்கட்டுமா?"

"எதுக்குப் பாட்டி"

"இல்லப்பா உங்களுக்கு சடங்குக்கு ஏற்பாடு பண்ண வேண்டாம்னு சொல்லிட்ட பிறகு எப்பிடி அவ உன்னோட றூம்ல...."

"ஏன் பாட்டி சடங்கு நடந்தால்தானா வதனா என்னோட பொண்டாட்டி? நான் அவ கழுத்தில தாலி கட்டினதில இருந்து அவ எனக்கு பொண்டாட்டிதான். நான் அவள பாத்துக்குவன் பாட்டி நீங்க கவலப்படாதீங்க அவள எந்த விதத்திலையும் நான் கஸ்ரப்படுத்த மாட்டன்"

"சரி சூர்யாய உன்னோட இஸ்ரம் பாத்துக்கோ வதனாவ" என்றவர் தேவியைப் பார்க்க வந்தார். பின் தேவியை அலங்கரித்து முடிந்ததும் தேவிக்கு சகோதர முறையிலான திருமணமான பெண்கள் அவளை கமலேஷின் அறைக்குள் விட்டு விட்டு வந்தனர். வதனாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்த சூர்யா அறைக்கதவைத் திறந்து அவளது அருகில் வந்தவன் திகைத்து நின்றான்..


காத்திருப்புத் தொடரும்....................


சூர்யா திகைத்து நிற்க காரணம் என்ன???

உங்களோட கருத்துக்கள்தான் சகோக்களே என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தும்😀😀. இது நான் எழுதுற முதல் கதை சகோஸ். நீங்க இதில உள்ள நிறைகள் குறைகளைச் சொன்னால்தான் என்னால் திருத்திக்கொள்ள முடியும்😁😁😁. So உங்களோட கருத்த என்னோட பகிர்ந்து கொள்ளுங்க சகோஸ்.🙏🙏🙏🙏
உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒திவ்யதுர்ஷி ✒✒
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️அட கடவுளே சூர்யா திகைச்சு நிக்கிற அளவுக்கு என்ன தான் ஆச்சு வந்தனாவுக்கு 😲😲😲😲😲😲😲
 

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️அட கடவுளே சூர்யா திகைச்சு நிக்கிற அளவுக்கு என்ன தான் ஆச்சு வந்தனாவுக்கு 😲😲😲😲😲😲😲
நன்றி சகி 😍😍
 
Top