• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 32 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
காத்திருப்பு : 32

வதனாவை நோக்கி வந்தவர் வேறுயாருமில்லை வதனாவின்தந்தையே. வதனாவின் திருமணத்தினால் மனம் வருந்தியவர்கள் யாத்திரை சென்றுவரலாம் என நினைத்தனர். அதனால் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்றுவந்துகொண்டிருந்தனர். இப்போது வதனாவும் கோயிலுக்கு வர அதுவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த சுந்தரத்திற்கு கோவம் வந்தது.

தான் ஊராரின் கேலிகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்க இவள் கணவனுடன் மகிழ்ச்சியாக இருப்பதா என்ற எண்ணம் வரவே அவளருகில் வந்தவர்.

"சீ.. நாயே.... உனக்கு வெக்கமா இல்ல? பணக்கார ஒருத்தன வளச்சி புடிச்சிட்டு இப்பிடி கோயிலுக்கு வர்ற.... அவனுக்கும் உனக்கும் பொருத்தம் இருக்கா? அவன் பெரிய இடத்தில இருக்கிறவன் நீ அடிமட்டத்தில இருக்கிறா.... அவனுக்கு நீ சலிச்சிட்டா உன்ன விட்டுட்டு போயிடுவான்... காசிக்கு போனாலும் கர்மம் துலையாது என்று சொல்லுவாங்க வா தங்கம் போகலாம் " என்றவர் மனைவியை இழுத்துக்கொண்டு சென்றார்.

அவர் பேசும் போது இடையில் பேச முயன்ற சூர்யாவின் கைகளை பிடித்திருந்த வதனா அவர் சென்றதும் அவனது கைகளை விட்டவள். அனைவரையும் பார்தது "ஏன் இப்பிடி இருக்கிறீங்க வாங்க சாமி கும்டு போலாம்"

"உனக்கு வருத்தமா இல்லையா கண்ணம்மா?"

"இல்லங்க வாங்க போலாம்" என்றவள் அனைவருடனும் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.

"வதனா...."

"அண்ணா அப்பாவ பத்தி எதுவும் பேசாதீங்க பிளீஸ்"

"சரிமா அடுத்து எங்க சூர்யா போலாம்?"

"கமலேஷ் எனக்கு முக்கியமான project செய்யணும் நீங்க ரெண்டுபேரும் போய் சுத்திபார்த்திட்டு வாங்க. வது நீ இவங்களோட போறியா?"

"இல்லங்க நான் உங்ககூடவே வர்றன்"

"என்னண்ணா இது?"

"அதுதானே மச்சான் நீங்க வர்லனா நாங்க போகலடா"

"டேய் எனக்கு வேலை முடிஞ்சதும் வதுவ நானே கூட்டிட்டு போறன்டா நீங்க பார்த்திட்டு வாங்க நாங்க காட்டேஜூக்கு போறம் சரியா?"

"ம்... சரிடா "

கமலேஷை தனியே அழைத்தவன் " மச்சான் வது நம்ம கவலப்படக்கூடாதுனு அவ மனசுக்குள்ளேயே கஸ்ரப்படுறாடா அதுதான் நான் அவள கூட்டிட்டு போறன் சரியா? நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கணும் சரியா? சீக்கிரமா எனக்கு மருமகள ரெடி பண்ணிடுடா" என்றான் சூர்யா.

"சரிடா மச்சான் வதனாவ பார்த்துக்கோ"

என்றதும் தேவியும் கமலேஷூம் பூங்காக்கு செல்ல சூர்யாவும் வதனாவும் காட்டேஜூக்கு வந்தனர். தங்களது அறைக்கு வந்ததும். வதனாவை இறுக்கி அணைத்த சூர்யா

"மனசு விட்டு அழுதிடு கண்ணம்மா " என்றதும் அதற்காகவே காத்திருந்ததைப்போல அவனது மார்பில் சாய்ந்து

"மாமா என்னால முடியல மாமா செத்திடலாம் போல இருக்கு மாமா" என்று அழுதவளின் இதழ்களை சிறைபிடித்தான்.

"கண்ணம்மா நீ மனசுக்க போட்டு எதையும் குழப்பிக்காதடா அப்பா ஒருநாள் உன்ன ஏத்துப்பாரு சரியாடா?"

"இல்ல மாமா எனக்கு அவரு இனிமேல் வேணாம் மாமா நீங்க....நீங்க மட்டும் போதும் மாமா... என்ன விட்டு போயிடமாட்டிங்கதானே மாமா?"

அவளது முகத்தை தனது இருகைகளினாலும் பற்றியவன் அவளது கண்களைப் பார்த்து
"கண்ணம்மா நான் உன்னவிட்டுட்டு எங்கேயும் போக மாட்டன். நீயே என்ன விட்டு போனாலும் நிச்சயமா நான் உன்ன தேடி வருவன் சரியா?"

"சரி...மாமா"

"சரிடா கண்ணம்மா நீ அழுதது போதும் இனிமேல் அழவேகூடாது சரியா?"

"சரி மாமா நீங்க போய் உங்க வேலைய பாருங்க " என்றவள் அவனது அணைப்பிலிருந்து விலக அதைத் தடுத்தவன்.

"என்ன வேலை கண்ணம்மா?"

"நீங்கதானே ஏதோ வேலை இருக்கிறதா சொன்னீங்க மாமா"

"அந்த வேலைய நான் முடிச்சிட்டன் கண்ணம்மா"

"எப்போ மாமா?"

"உன்ன சமாதானப்படுத்துறதுதான் என்னோட வேலை பொண்டாட்டி " என்றவனை காதலுடன் பார்த்தவள்

"எனக்காகவா மாமா?"

"ஆமாடா கண்ணம்மா "

"நன்றி மாமா"

"நமக்குள்ள எதுக்குடி நன்றிலாம் அதெல்லாம் வேணாம் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு வந்து help பண்றியா ?"

"என்ன வேலை மாமா "

"இந்த வேலைதான்" என்றவன் அவளை அணைத்தவன். அவளுடன் இரண்டறக்கலந்தான். தன்னவனுக்கு தன்னை விருந்தாக்கினாள் வதனா.

வாங்க நாம கமலேஷ் ஜோடிய பார்க்கலாம்..🏃🏃🏃

இருவரும் பூங்காவில் நன்றாகச் சுற்றித் திரிந்தனர். விதவிதமான போட்டோக்களையும் எடுத்துக்கொண்டு தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர்.

"ரதிம்மா இன்னைக்கு நம்ம நம்மளோட வாழ்க்கைய ஆரம்பிக்கலாமாடா?"

தனது சம்மதத்திற்காய் காத்திருக்கும் தன்னவன் அன்பில் கரைந்தவள் கண்களால் தனது சம்மதத்தினை தெரிவிக்க அழகானதொரு கூடல் அங்கு அரங்கேறியது...

சரி நம்மளோட கீர்த்தி கீர்த்தினு ஒரு கேரக்டர் இருந்திச்சே அதப் பார்க்லாம் வாங்க🏃🏃🏃

"என்னடி கீர்த்தி வந்ததில இருந்து ஏதோ யோசிச்சிட்டே இருக்க?"

"இல்ல ரூபா( கீர்த்தி பிரண்டு) சூர்யாவ எப்பிடியாவது வதனாகூட சேரவிடக்கூடாதுடி அதுக்காக கம்பனில சில பிரச்சனையை செய்தன். ( அடப்பாவி இதெல்லாம் உன்னோட வேலை தானா😡😡) இப்போ இங்க வந்திருக்காங்கடி அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கன்"

"நீ இப்போதைக்கு அமைதியா இருடி உனக்கு நேரம் வரும்போது பார்த்துக்க சரியா?"

"ஆமாடி சூர்யாய வதனாகூட இருந்தா பிரிக்கிறது கஸ்ரம். சூர்யாவை கொஞ்சநாள் எங்கேயாச்சும் அனுப்பிவைச்சா அவள ஈசியா சூர்யாகிட்ட இருந்து பிரிச்சிடுவன்டி "

"சரிடி வா இப்போ சாப்பிடலாம்"

இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.

குளிருடன்கூடிய காலைப்பொழுதில் மலைகளிலிருந்து சூரியன் எழுந்துவந்தான். எனினும் அவனைக் காண முடியாதபடி பனிமகளை அவனை மறைத்திருந்தாள்.

சூர்யாவின் அறையில் அவனது அணைப்பில் தூங்கிய வதனாவுக்கு அதிகாலைக் குளிர் அவளுக்கு அதிகமாக சூர்யாவுடன் மேலும் ஒன்றினாள்.

சூர்யாவும் குளிருக்கு இதமாக தன்னவளை அணைத்துக்கொண்டான். "கண்ணம்மா எழும்பலையாடா?"

"மாமா குளிருது மாமா"

"நேரமாச்சுடா இங்க இப்பிடித்தான் இருக்கும் நீ நேரத்தைப்பாரு எட்டுமணியாச்சுமா"

"எட்டு மணியா" என்று பதறி எழுந்தாள்.

"கண்ணம்மா பாத்துடா "

"சரிமாமா நான் குளிச்சிட்டு வர்றன்.

வதனா குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன்நின்று தலைசீவிக்கொண்டிருந்தாள். கட்டிலில் இருந்தபடி மனைவியை இரசித்துக்கொண்டிருந்தான் சூர்யா.

அதனைப்பார்த்த வதனாவின் முகம் வெட்கத்தினால் சிவந்தது. "என்ன மாமா?"

"என்ன கண்ணம்மா"

"போங்க மாமா போய் குளிச்சிட்டு வாங்க"

"சரிடா" என்றவன் குளிக்கச் சென்றான்.

"ரதிமா எழும்புடா நேரமாச்சு"

"போங்கத்தான் நீங்க நைட் தூங்கவேவிடவில்லை. இப்போவாவது தூங்கவிடுங்க "

"ஐயோ குட்டிமா சூர்யா நமக்காக காத்திட்டு இருப்பான்டா தீக்கிரம் எழும்பி ரெடியாகுடா"

"சரி அத்தான்" என்றவள் குளித்து ரெடியாகி வர சூர்யாவின் அறைக்குள் வந்தனர்.

"வா மச்சான் "

"சூர்யா இன்னைக்கு எங்க போறம்?"

"சாமிமலை போலாம்டா அங்க மூணுநாள் தங்கிட்டு வீட்டுக்கு போலாம்."

"ஏன் வீட்டுக்கு திடீர்னு ?"

"இல்ல மச்சான் வேலை இருக்கிடா வேணும்னா நீயும் தேவிமாவும் இருந்திட்டு வாங்க"

"இல்லடா சேர்ந்தே போலாம்டா"

"அப்போ சரி போய் பெட்டியெடுத்துட்டு வாங்க"

"சரிடா"

எல்லோரும் காட்டேஜை விட்டு வந்து காரில் ஏறும் போது சூர்யாக்கு போன் வந்தது.
"சொல்லு கீர்த்தி"

"சூர்யா எப்போப ஊருக்கு போறீங்க?"

"மூணுநாள்ல கீர்த்தி "

"இப்போ எங்க?"

"சாமிமலை போறம்"

"சூர்யாய அப்போ நானும் வரவா பிளீஸ் அப்புறம் ஊருக்கு தனிய வரணுமே"

"சரி கீர்த்தி ரெடியாகு பத்து நிமிசத்துல வந்திடுவம்"

"சரி சூர்யா"

"இப்ப எதுக்கு சூர்யா கீர்த்திய வரச்சொன்ன?"

"பாவம்டா அவ தனிய வரணுமே அதுதான்"

"என்னவாவது செய்"

கீர்த்தியையும் அழைத்துக்கொண்டு சாமிமலை சென்றனர். அங்கேயும் நல்லபடியாக எதுவித பிரச்சனையும் இன்றி நாட்கள் கழிந்தன. கீர்த்தியும் இவர்களை எவ்வாறு பிரிக்கலாம் என்று யோசனை செய்தபடியே இருந்தாள்.

மூன்றுநாட்கள் சென்றதும் தங்களது இருப்பிடம் திரும்பியவர்களை மகிழ்வுடன் வரவேற்றார் மதி. இவ்வாறு எதுவித பிரச்சனையுமின்றி நாட்கள் சென்றன. வதனாவும் சூர்யாவும் ஆனந்தத்துடனே இருந்து வந்தனர்.

ஒருநாள் சூர்யாவின் அறையில்....

சூர்யாவின் மடியில் படுத்தபடி வதனா இருக்க சூர்யாய லப்டொப்பில் வேலை செய்துகொண்டிருந்தான்.

"மாமா"

"சொல்லுடா"

"மாமா"

"சொல்லுடா கண்ணம்மா"

"மாமா நீங்க வேலையில தோல்வியடைஞ்சிருக்கீங்களா மாமா?"

"ஏன்டா அப்பிடி கேக்கிற?"

"சொல்லுங்க மாமா"

"இருடா " என்றவன் லப்டொப்பை மூடிவைத்துவிட்டு வதனாவை அள்ளிக்கொண்டவன்.

"நான் தோல்விய ஒருத்தன்கிட்டதான் சந்திச்சிருக்கன்டா கண்ணம்மா அவனும் நேர்மையான வழில என்ன தோக்கடிக்கலடா குறுக்குபுத்தியிலதான் வெற்றியடைஞ்சான். ஆனா அத நான் தோல்வியா ஏத்துக்கலடா. என்ன நேர்மையான முறையில தோக்கடிக்க முடியாதுடா"

"நான் உங்கள தோக்கடிக்கவா மாமா?"

"உங்கிட்ட தோத்துப்போறது எனக்கு சந்தோசம்டி ஏன் செல்லம். ஆனா நீ என்ன தோத்துப்போக விடமாட்டாடி "

"உண்மைதான் மாமா என்னால உங்கள தோக்கடிக்க முடியாதுதான் மாமா. ஒருவேளை நம்ம பையன் உங்கள தோக்கடிச்சிட்டா?"

"ஹா....ஹா..... நம்ம பையனா?..ஹா....ஹா...."

"ஏன் மாமா சிரிக்கிறீங்க?"

"கண்ணம்மா நம்ம பையன நீதானே வளர்க்க போற நீ கண்டிப்பா நம்ம பையனகூட என்ன தோக்கடிக்க விடமாட்ட. எங்கிட்ட தோத்துப்போயிடணும்னு சொல்லித்தான் நீ வளர்ப்ப அவன"

"எப்பிடி மாமா சொல்றீங்க?"

"உன்ன பத்தி எனக்குத் தெரியாதாடா கண்ணம்மா?"

"உண்மைதான் மாமா நீங்க யார்கிட்டையும் எப்பவும் தோத்துப்போகக் கூடாது மாமா. என்னோட மாமா எப்பவும் ஜெயிக்கிறவராத்தான் இருக்கணும் சரியா?"

"சரிடா கண்ணம்மா " என நெற்றியில்ல முத்தமிட்டவனை அணைத்துக்கொண்டாள் வதனா.

காலையில்ல போன் சத்தத்தில் எழுந்த சூர்யா "ஹலோ"

"ஹலோ sir நான் வெங்கட் பேசுறன்"
(வெங்கட் சூர்யாவின் பிரான்ஸில் இருக்கும் கம்பனியின் manager)

"சொல்லுங்க வெங்கட்"

"sir திடீர்னு நம்ம கம்பனியோட போட்டிருந்த டீலிங்ஸ ஐந்து கம்பனிக்காராக்கள் கேன்சல் பண்ணப்போறதா சொல்றாங்க"

"what?....what happened there venkat?"

"I don't know sir. feeling not good sir. I think you must come here sir"

"ohhh god ok venket. I'll come today night venkat"

"ok sir we will meet at night sir"

"ok venkat bye"

"bye sir"

போனை வைத்துவிட்டு திரும்பிய சூர்யாவுக்கு தன்னையே இமையசைக்காது பார்த்துக்கொண்டிருந்த வதனாவைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

"என்னடி மாமாவ இப்பிடி பார்க்கிற?"

"என்னோட மாமா எவ்வளவு அழகா english பேசுறாருனு பார்த்திட்டு இருந்தன்"

"ஓ... வது கொஞ்சம் சீக்கிரம் ரெடியாயிட்டு கீழ வர்றியாய முக்கியமான விசயம் பேசணும்"

"சரி மாமா"

சூர்யா கமலேஷ்க்கு போன் பண்ணி சீக்கிரமாக வரச்சொன்னான். வதனா வரவும் அவளையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தான். எல்லோரும் hallல் இருந்தனர்.

"என்ன சூர்யா ஏதும் பிரச்சனையா?"

"ஆமாப்பா பிரான்ஸ்ல இருக்கிற கம்பனில ஒரு பிரச்சனை அதுக்கு நான்ன அங்க கட்டாயம் போகணும் "

"சரிடா அப்போ போயிட்டு வா வதனாவையும் கூட்டிட்டுப்போடா " என்றார் குமார்.


காத்திருப்புத் தொடரும்............


சூர்யா வதனாவை அழைத்துச் செல்வானா??


உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒திவ்யதுர்ஷி .✒✒
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
விட்டுட்டு தான் போவான் அப்பத்தான கீர்த்தி வந்து அவன் கண்ணம்மா மனசை கலைக்க கரெக்டா இருக்கும்....😡😡🤬🤬😂😂😂😂😂
 
Top