• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 35 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
காத்திருப்பு : 35

கமலேஷூடன் பேசிக்கொண்டு திரும்பிய தேவி அதிர்ச்சியானாள். வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்தபடி நின்றது நம் சூர்யாவேதான். மெதுவாக அவர்களருகில் வந்தவன்

"வதனா எங்க?" எனக் கேட்டான்.

"சூர்யா அதுவந்து.. நீ என்னப்பா திடீர்னு வந்திருக்க?"

"வதனா எங்க?"

"இங்கதான்பா பக்கத்தில போயிருக்கா"

"கேட்டதுக்கு பதில் வதனா எங்க?" என சத்தமிட்டான் சூர்யா.

"வதனாவைக் காணோம் சூர்யா"

"எப்போ இருந்து? "

"நே...நேற்றிருந்து"

"ஏன் எங்கிட்ட சொல்லல?"

"கண்டுபிடிச்சிடலாம்னுதான்........"

"கண்டுபிடிச்சிட்டியா?"

"இ...ல்...ல...டா"

"உங்கள நம்பித்தானே விட்டுட்டு போனன் என்ன ஏமாத்திட்டீங்க. யாரும் அவள தேட வேண்டாம். போன அவளே என்னத் தேடி வருவா. அப்பிடி அவள எனக்கு தெரியாம தேடனும்னு முயற்சி பண்ணீங்க நான் வரவே முடியாத இடத்துக்கு போயிடுவன்.

உங்கள நம்பினதுக்கு நல்லா செஞ்சிட்டீங்க. யாரும் இனி எங்கூட பேசக்கூடாது." என்றவன் அவர்கள் கூப்பிடக் கூப்பிட தங்களது அறைக்குச் சென்றுவிட்டான்.


வதனாவைப் பார்க்கலாம் பிரண்ட்ஸ்........

ஸ்ரேஷனில் வந்திறங்கிய வதனா வெளியே வந்தாள். சாப்பிடாமல் இருந்தது. தந்தையின் பேச்சால் ஏற்பட்ட மனவருத்தம் எல்லாம் அவளைத் தாங்க அங்கேயே மயங்கிவிழுந்தாள்.

அங்கிருந்த ஒரு பெண்மணி அவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். சாப்பிடாமல் இருந்ததினால் வந்த மயக்கம் வேறொன்றுமில்லை என வைத்தியர் சொன்னார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வதனாவுக்கு உண்ண உணவு கொடுத்தார். வதனா மறுப்பேதும் சொல்லாமல் உண்டாள். பின் அப் பெண்மணி "நீ யாருமா?" எனக் கேட்டார்.

"என்னோட பேரு சந்திரவதனா மா"

"உனக்கு யாரும் இல்லையாமா?"

"இப்போதைக்கு என்னோட வயித்தில இருக்கிற உயிருதான் எனக்கு எல்லாமே மா"

"சரிமா நீ என்கூட வர்றியாமா?"

"எங்கம்மா?"

"என்னோட வீட்டுக்குத்தான்"

"எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுக்க முடியுமா மா"

"சரி வாம்மா எங்க கம்பனியிலேயே வாங்கித் தர்றன் "என்றார் திருமதி கஸ்தூரி வெற்றிவேல்.

பின் அவளை அழைத்துச் சென்று வேலையும் வாங்கிக்கொடுத்தார். வதனா வேலை செய்தது அவர்களது கம்பனியிலே...

நாட்கள் எந்தவிதமான மாற்றமும் இன்றிச் சென்றது. வெளியில் இரும்பாய் இருக்கும் சூர்யா. தனக்குள்ளே உருகினான்.அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதத்தையே தினமும் நூறுமுறை படிப்பான்.

ஒருநாள் சமையல் செய்துகொண்டிருந்த தேவி மயங்கி விழுந்தாள். அவளைப் பரிசோதித்த கமலேஷ் கண்ணீருடன் கட்டிக்கொண்டான்.

"என்ன அத்தான்?"

"நம்ம அப்பாம்மா ஆகப்போறம்டா " என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். அச் சந்தோசத்தை மதியிடமும் குமாரிடமும் தெரிவித்தனர். சூர்யா பேசாமல் இருப்பதால் குறுஞ்செய்தி அனுப்பினான் கமலேஷ். அதைப் பார்த்த சூர்யாக்கு மனம் நிறைந்தது. அதே நேரம் தனக்கும் ஒரு குழந்தை இருந்தால் எப்பிடி இருக்கும் என்ற எண்ணம் வந்தது.

flashback over😀😀😀😀😀............

நடந்ததையெல்லாம் சக்தியிடம் சொல்லிமுடித்தான் சூர்யா.
"இவ்வளவு நடந்திருக்கு ஏன் மச்சான் எங்கிட்ட சொல்லல?"

"சொல்லி கஸ்ரப்படுத்த வேணாம்னு நெனச்சன்டா. வதுவே எங்கிட்ட வந்திடுவானு நெனச்சன் but இதுவரைக்கும் வரலடா அவ. எனக்கு என்னோட வது வேணும்டா"

"கண்டிப்பா sistera கண்டுபிடிச்சி உங்கிட்ட ஒப்படைக்கிறன் மச்சான்."

"thanks டா"

"போடா டேய் நீ முதல்ல வீட்ல இருக்கவங்க கூட பேசுடா"

"சரிடா"

"சரி சூர்யா நான் அப்புறமா போன் பண்றன். நான் வர்றன்டா bye"

"சரிடா bye" இருவரும் சென்றனர்.

மாலையானதும் கம்பனியிலிருந்து ஆதியின் பள்ளிக்குச் சென்று அவனைக் கூட்டிக்கொண்டு நதியிடமும் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்த வதனா சோர்ந்து போனாள்.

"அம்மா என்னம்மா?"

"ஒண்ணுமில்லடா தங்கம். " என்றவள் மகனை குளிப்பாட்டிவிட்டு சாப்பாடு கொடுத்தாள்."

"அம்மா வாசு மாமா வீத்த போகத்துமா?"

"மாமாவ தொல்லை பண்ணக்கூடாது சரியாடா?"

"சதிமா"

"மாமா"

"வாடா என் சிங்கக்குட்டி"

"மாமா வெளையாதலாமா?"

"மாமா கடைக்கு போகணும்டா வர்றியா நீயும்?"

"சதி மாமா"

"வா அம்மாகிட்ட சொல்லிட்டு போலாம்" என்றவன் சந்திராவிடம் (வதனா) சொல்லிவிட்டு சென்றான்.

தேவி வீடு................

"தேவிமா வீட்ல இருக்க ஒரு மாதிரி இருக்குடா"

"தீராவ கூட்டிட்டு பார்க் போயிட்டு வாங்கப்பா"

"அதுவும் சரிடாமா " என்றவர் தீராவை அழைத்துக்கொண்டு சென்றார்.

பார்க்🏃🏃🏃

கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிய பின் ஆதியை அழைத்துக்கொண்டு பார்க்குக்கு வந்தான் வாசு. அங்கே இருந்த குமாரைக்க கண்டவன் அவருடன் பேசச்சென்றான். தீராவைக் கண்ட ஆதி அவளுடன் விளையாட வாசுவிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

"நதி"

"ஆதி"

"நம்ம வெளாடுவமா நதி"

"சதி ஆதி " என்றதும் இருவரும் அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாட ஆரம்பித்தனர்.

"ஹலோ சேர் எப்பிடி இருக்கீங்க?"

"வா வாசு நல்லா இருக்கன்பா"

"நான் வீட்டுக்கு வந்து பார்க்கணும்னு நெனச்சன் பட் நேரம் கிடைக்கல சேர்"

"பரவால்லப்பா அது யாரு பையன்?"

"தங்கச்சி பையன் சேர்"

"பேரு என்னப்பா?"

"ஆதி சேர்"

"ம் வீட்டுக்கு ஒருநாள் கண்டிப்பா வாப்பா"

"சரி சேர். நான் கிளம்புறன் சேர். நேரமாச்சினா ஆதியைத் தேடுவா"

"சரிப்பா போயிட்டு வா நானும் போகணும்"

"ஆதி" என அழைக்க அருகில் நதியுடன் வந்தான்.

"தாத்தா நான் சொன்னல்ல ஆதி. இவன்தான்"

"ஆதி இது என்னோத தாத்தா"

"வணக்கம் தாத்தா"

"ஹா......ஹா..... பெரிய மனுஷன் மாதிரி பேசுறான்பா வணக்கம் ஆதி"

"எப்பிதி இதுக்கீங்க தாத்தா?"

"நல்லா இருக்கன்டா தங்கம். இப்பிடி பேச யாரு சொல்லிக்கொடுத்தாங்க?"

"அம்மாதான் தாத்தா"

"ரொம்ப நல்லா வளர்த்திருக்காடா உன்னோட அம்மா"

"போலாமா ஆதி"

"போலாம் மாமா"

"தாத்தா நான் போயித்து வாதன். நதிமா bye. அத்தைமாவ கேத்ததா சொல்லு"

"சதி ஆதி"

"யாரு தீராமா அத்தைம்மா?"

"நான் ஆதி அம்மாவ அத்தைம்மா என்னு கூப்பிதுவன். ஆதி என்னோத அம்மாவ அப்பிதி கூப்பிதுவான்"

(சூர்யாக்கும் ஒரு பையன் இருந்திருந்தா இப்பிடித்தானே இருந்திருக்கும்) என நினைத்தவர் தீராவைக் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

சூர்யா வந்ததும் சூர்யாவிடம் ஆதி பற்றி பேசி அவனை ஒருவழியாக்கிவிட்டாள் தீரா.
"மாமா நீ ஆதிய பார்க்க எப்ப வதுவ?"

"மாமாக்கு வேலைடா தங்கம் அப்புறம் வர்றன் சரியா?"

"சதி மாமா " என்றவள் சூர்யாவுடனே தூங்கிவிட்டாள். அவள் தூங்கியதும் கட்டிலில் படுக்க வைத்தவன் எழுந்து பால்கனிக்குச் சென்றான்.

"வது எங்கடா இருக்க? மாமா உனக்கு வேணாமாடா கண்ணம்மா? எங்கிட்ட சீக்கிரமா வந்திடு கண்ணம்மா. நீ என்னோட பக்கத்திலையே இருக்கிற மாதிரிர தோணுதுடாமா" என நிலவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சந்திராவும் நிலாவைப் பார்த்து
"மாமா என்ன தேடி வரமாட்டீங்களா மாமா? நான் உங்களுக்கு வேணாமா மாமா? கண்ணம்மானு நீங்க எப்ப மாமா கூப்பிடுவீங்க? என்னால முடியல மாமா. இப்பெல்லாம் மனசு உங்கள ரொம்பத் தேடுது மாமா." என்று நிலவிடம் பேசினாள்.

இருவரும் பேசுவதைக்கேட்ட நிலவு மேகத்தினுள் மறைந்தது. நீண்ட நேரம் பால்கனியில் நின்றவர்கள். பதினொருமணியளவிலே தூங்கச் சென்றனர்.

காலையில்..........

நேரம் சென்று தூங்கியமையால் வதனா எழ தாமதமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக வேலையைச் செய்துமுடித்தாள். பின் ஆதியை அழைத்துக்கொண்டு ஆதியின் பள்ளிக்கு விரைந்தாள்.

தேவி வீடு.......

"முதியாது.....முதியாது ........முதியாது"

"சொன்னாக் கேளுடா குட்டிமா மாமா நாளைக்கு ஸ்கூல் கூட்டிட்டு போறன்டா"

(ஆம் தீரா சூர்யாவே அவளை ஸ்கூலில் விட வேண்டும் என அடம்பிடித்தாள்)

"தீரா சொன்னாக் கேளுடா அப்பா கூட்டிட்டு போறன்டா"

"முதியாது மாமா கூததான் போவன்"

"சரி வாடா குட்டிமா போலாம்" என்றான் சூர்யா.

"உனக்கு முக்கியமான வேலை இருக்குணு சொன்னியே சூர்யா?"

"ஆமாப்பா பரவால்ல நான் குட்டிமாவ விட்டுட்டு போறன்"

"சரிப்பா"

"தீராமா ஆதிய தாத்தா கேட்டதா சொல்லுடா"

"சதி தாத்தா"

நட்சத்திராவை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வந்தான் சூர்யா. அதே நேரம் ஆதியுடன் ஸ்கூலில் இருந்தாள் சந்திரா......

காத்திருப்புத் தொடரும்........................

இருவரும் சந்திப்பார்களா?????


hi friends. ஒருவழியா flashback முடிச்சிட்டன். கதை எப்பிடி போகுதுனு சொல்லுங்க பிரண்ட்ஸ். போரடிக்குதா? நல்லா போகுதா? என்று நீங்க சொன்னாத்தான் friends என்னால கதைய மூவ் பண்ண முடியும். பிளீஸ் friends . உங்க support எனக்கு தந்துகிட்டே இருங்க friends😀😀.

உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒திவ்யதுர்ஷி ✒✒
 
Last edited:
Top