• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 36 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
காத்திருப்பு : 36

தீராவை அழைத்துக்கொண்டு சூர்யா வரும்போது ஆதியுடன் அவனது ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தாள் சந்திரா. தீராவுடன் உள்ளே வந்த சூர்யாவுக்கு போன் பண்ணினான் வாசு.

போன் வந்ததால் சூர்யா தீராவை அனுப்பிவிட்டு காரின் அருகில் சென்று போன் பேச சந்திரா அவன் பார்க்காத பக்கத்தினால் ஆட்டோவில் ஏறிச் சென்றாள். இருவரும் அருகருகே நின்றும் பார்க்க முடியவில்லை. இதுவும் விதியின் விளையாட்டே.


"good morning sir"

"good morning vasu. சொல்லுங்க?"

"sir நேற்று cancel பண்ண meetingsஅ இன்னைக்கு arrange பண்ணவா sir?"

"ok vasu meetingsa arrange பண்ணுங்க 10 minutesla அங்க இருப்பன் என்றவன். காரை எடுத்துக்கொண்டு சென்றான்.


ஆதியை ஸ்கூலில் விட்டுவிட்டு வேலைக்கு வந்த சந்திராவுக்கு அதிக வேலைகள் தரப்பட்டன். காரணம் நேற்று விக்கியை முறைத்துவிட்டுச் சென்றதால். தன் தலைவிதியை நொந்தபடி செய்தாள்.

தேவி இல்லம்...........

"தேவிமா"

"சொல்லுங்க அத்தான்"

"எனக்கு hospitalla இன்னைக்கு மூணு கேஸ்ஸ இருக்குடா வர லேட்டாகும் பத்திரமா இரு நேரத்துக்கு சாப்பிடு சரியா?"

"அம்மா இருக்காங்க நான் பத்திரமா இருந்துப்பன் சரியா?"

"சரிடாமா போயிட்டு வர்றன்"

"சரி அத்தான்"

"மாமா நான் போயிட்டு வர்றன்"

"சரிப்பா தீராவ ஸ்கூல்ல இருந்து நான் கூட்டிட்டு வர்றன்"

"நீங்க எதுக்கு மாமா வீண்சிரமம்"

"பரவால்ல கமலேஷ்"

"சரி மாமா"

"தேவி "

"சொல்லுங்க அப்பா"

"நம்ம தீராகூட படிக்கிற ஆதி இருக்கான்ல ?"

"ஆமாப்பா என்ன அத்தைமானு கூப்டுவன்."

"அப்பிடியாமா? எனக்கு அவனப் பார்க்கும்போதெல்லாம் தீராமேல இருக்கிற பாசம் அவன் மேலயும் வருதுமா. நமக்கு நெருக்கமா தோணுது"

"எனக்கும் அப்டித்தான்பா தெரியுது. நம்ம சூர்யா அண்ணாக்கு பையன் இருந்திருந்தா இப்பிடித்தானே இருப்பான்னு தோணுது"

"ஆமா மா ரொம்ப நல்ல பையன். அவங்க அம்மா நல்லா வளர்த்திருக்கா"

"ம்... நம்ம வதனா எங்க இருக்கானே தெரியலயேபா"

"காலந்தான் எல்லாத்துக்குமை பதில் சொல்லணும்மா"

"பார்க்கலாம்பா நான் போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கிறன்பா"

"சரிமா "

S.V கம்பனி...........

தனது வழமையான கம்பீரநடையுடன் அலுவலகத்தினுள் நுழைந்தான் சூர்யா. வாசுவை அழைத்தான்.

"வா வாசு"

"sir"

"வாசு இன்னைக்கு எந்த கம்பனியோட meeting first?"

"sir V.K கம்பனி sir"

"M.D யாரு?"

"விக்னேஷ்வரன்"

"நம்ம பிரான்ஸ் கம்பனில நம்ம புரோஜெக்ட திருட்டுத்தனம் பண்ணி எடுத்தானே அவனா?"

"ஆமா சேர் அவருதான்"

"அவன்கூட எதுக்கு meeting okபண்ணீங்க?"

"sir அவருதான் உங்ககிட்ட பேசியே ஆகணும்னு கேட்டாரு சேர்."

"சரி பத்துமணிக்கு வரச் சொல்லுங்க"

"ok sir" என்றவன் வெளியே வந்தான். வெளியே வந்தவன் கண்களில் பட்டது சந்தனாவின் வாடிய முகமே. அதைப் பார்த்தவன் அவளருகில் சென்றான்.

" சந்தனா"

"sir"

"சந்தனா கொஞ்சம் canteenla போய் வெயிட் பண்ணுங்க two minutesla வந்திர்றன்"

"எதுக்கு sir?"

"சொல்றன் நீங்க முதல்ல போங்க "

"சரி "

வாசு V.K கம்பனி விக்கியின் P.A ராஜாக்கு போன் பண்ணி சூர்யா சொன்னதை சொல்லிவிட்டு சந்தனாவுடன் பேசச் சென்றான்.

V.K கம்பனி..........

"sir"

"yes, raja"

"sir சூர்யா siroda பத்துமணிக்கு meeting இருக்கு"

"good அவனுக்கு இன்னைக்கு இருக்கு" என்றான் கண்ணில் விஷமத்துடன்.

ஸ்கூல்............

"students உங்க எல்லோரையும் trip கூட்டிட்டு போக நெனைக்கிறம். அப்பிடி tripkku வரணும்னு ஆசப்படுறவங்க உங்க நேம மிஸ்கிட்ட கொடுங்க சரியா?"

"சரி மிஸ்"

"ஆதி நான் போதன் நீ வர்றியா ?"

"அம்மாகித்த கேத்து சொல்லுதன் நதி"

"நீயும் வா ஆதி ஜோலியா இதிக்கும்"

"அம்மா சதினு சொன்னா வதன் நதி"

S.V கம்பனி...............

canteen....
சந்தனாவும் வாசுவும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.
"சந்தனா are you ok?"

"ம்....ok sir"

"அப்போ ஏன் முகம் அழுதமாதிரி இருக்கு?"

"அப்பிடியில்ல சேர்"

"எதுவா இருந்தாலும் சொல்லு சந்தனா . நீ இப்பிடி இருக்கிறது நல்லா இல்லமா" என்றவன் குரலில் இருந்த மென்மையில் அவள் உருகிவிட்டாள். அவளது பிரச்சனையை சொல்ல ஆரம்பிக்கும் போது வாசுவை அழைத்தான் சூர்யா.

"சந்தனா நீ ஆபிஸ் முடிய நான் பேசுறன். இப்ப எம்டி வரச்சொன்னாரு நான் வர்றன். but திரும்ப அழாத பிளீஸ்" என்றவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனான்.

"வாசு விக்கி வந்திட்டானா?" எனக் கேக்கும் போதே கதவைத் தட்டியபடி உள்ளே வந்தான் விக்கி.

"என்ன சூர்யா finala என்னோட ஊருக்கே வந்து எனக்கு எதிரான கம்பனிய வாங்கிட்ட போல"

"உனக்கு எதிரான கம்பனினு தெரிஞ்சதாலதான் நான் வாங்கினன் விக்கி."

"எப்டியோ திரும்ப நமக்குள்ள மோதல் ஆரம்பமாகப்போகுது"

"எப்பவும் போல ஜெயிக்கிறது நான்தான்"

"அதையும் பார்க்கலாம். இது என்னோட ஊரு உன்னால என்ன பண்ணமுடியும்?"

"என்னால எதுவும் பண்ண முடியும். அது உனக்குத் தெரியும் "

"ஹா.....ஹா.... அது அப்போ இப்போ உன்னால முடியாது. சரி ரெண்டுநாள்ல யாருக்கு project கிடைக்கும்னு பார்ப்பமா சூர்யா?"

"பார்க்கலாம் விக்கி "

"project meetingla பார்க்கலாம் சூர்யா"
என்றவன் வெளியேறிச் சென்றான். சூர்யா வாசுவை அனுப்பிவிட்டு தனியே இருந்தான்.
"வது இன்னைக்கி எனக்கு உன்னோட நெனப்பு அதிகமா இருக்குடி. மாமாகிட்ட வந்திடு கண்ணம்மா" என அவளது போட்டோவைப் பார்த்தபடி இருந்தான்.

V.K கம்பனி........

கம்பனிக்கு வந்த விக்கி சந்திராவை அழைத்து அவன் கொடுத்த வேலை பற்றிக் கேட்க.அவள் செய்ததைக் கொடுத்ததும் அதை வாயால் சொல்லச் சொன்னான்.

பல்லைக்கடித்தபடி சந்திரா சொல்ல அவனோ எதையும் கேட்காது அவளை பார்க்க ஆரம்பித்தான். சந்திராவிற்கோ உடல் கூசியது. விரைவாக பேசிமுடித்தவள் திரும்பியும் பாராது தனதிடத்திற்கு வந்து சேர்ந்தவள். சோர்ந்து போனாள். தனது விதியை நினைத்து அழுதாள்.

மாலையானதும் முதலாளாக கம்பனிவிட்டு வெளியேறினாள். ஆதியை அழைக்க ஸ்கூலுக்குச் சென்றாள்.

S.V கம்பனி........

எல்லோரும் போனதும் சந்தனா மட்டும் நுழைவாயிலின் அருகில் நின்றாள். அவளது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
" சந்தனா பக்கத்தில இருக்கிற பார்க் வா.I'm vasu" என்று இருந்தது.

அதைப் பார்த்த சந்தனாவும் பார்க்செல்ல அங்கிருந்த வாசு கை அசைத்து சந்தனாவை அழைத்தான். அவள் வந்ததும் பெஞ்சில் இருப்பதற்காக சற்று நகர்ந்து அமர அவள் அமர்ந்தாள்.

"சொல்லு சந்தனா உனக்கு என்ன பிரச்சனை?"

"வீட்ல ஒரு பிரச்சனை சேர்."

"இது ஆபிஸ் இல்ல so நீ வாசுனே கூப்பிடு இல்லனா வாசுதேவன் என்று கூப்டு"

"நான் தேவ்னே கூப்பிடடுமா?"

"நல்லது யாரும் இதுவரைக்கும் இப்பிடி கூப்டதே இல்லை தனா "

"என்னையும் தனானு யாரும் கூப்டது இல்லை. அம்மா இருந்தவரைக்கும் தனானு தான் கூப்டுவாங்க" என்றவளது விழிகளில் நீரோட்டமே.

"தனா அழாத நீ உன்னோட பிரச்சனைய சொல்லுடாமா"

"வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி சித்தி சொல்றாங்க"

"ஓ...... உனக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா?"

"என்னவிட இருபது வயசு பெரியவருக்கு ரெண்டாந்தாரமா கட்டிவைக்கப் பார்கிறாங்க"

"கடவுளே..... ஏன் தனாஇப்பிடி"

"பணம்"

"உங்கப்பா எதுவும் சொல்லலையாமா?"

"இல்லை " என தலையசைத்தாள்.

"policela compliant பண்ணவா?"

"வேணாம் தேவ் அதுவே பெரிய பிரச்சனையாயிடும்"

"தெரியல"

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"ம்...."

"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீங்க அனுதாபப்பட்டு வாழ்க்கை தர வேண்டாம் தேவ்"

"நான் அனுதாபத்தில சொல்லல தனா. எனக்கு உன்ன பிடிக்கும் அதுதான் கேட்டன். எனக்கு யோசிக்க டைம் வேணும் தேவ்"

"சரி நல்லா யோசி யோசிச்சிட்டு நாளைக்கு சொல்லு சரியா ?"

"ம்.... சரி"

"சரி பத்திரமா போ ஏதும் பிரச்சனைனா எனக்கு போன் பண்ணு "

"சரி தேவ் நான் வர்றன்"

"சரி" என்றவன்றவன போகும் அவளையே பார்த்திருந்தவன். பின் வீட்டை நோக்கிச் சென்றான்.

ஸ்கூல்............

சந்திராவைக் கண்டதும் முதலில் ஓடிவந்தது தீராதான்.

"அத்தைமா"

"என்ன தீரா குட்டி எங்க ஆதி?"

"ஆதி வதான்.நான் உங்ககித்த ஒண்ணு கேக்கணும்"

"என்னடாம்மா? வா ஆதி"

"நதி நீ சும்மா இது நான் வீத்தபோய் அம்மாத்த சொல்லுவன்"

"இல்ல நான் சொல்லுவன்"

"ஆதி என்னப்பா? நதி சொல்லட்டும் விடுப்பா"

"சதி மா"

"அத்தைமா எங்க ஸ்கூல்ல திப் (trip) கூத்தி போதாங்க நானும் போப்பதன்.ஆதிய வதச்சொல்லுங்க அத்தைமா"

"ஆதி நீ போகணும்னு ஆசைப்படுறியாப்பா?"

"நீங்க சொன்னா சதி மா" என்றான்.


காத்திருப்புத் தொடரும்............


வதனா என்ன சொல்வாள்?????
சந்தனா வாசுவுக்கு சம்மதம் சொல்வாளா??


உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒திவ்யதுர்ஷி . ✒✒
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
சதி தான் சொல்லும் அம்மா 🤩🤩🤩🤩
 
Top