• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 45 ❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
காத்திருப்பு : 45

சூர்யா பாலைக் குடித்துவிட்டு அருகிலிருந்த மேசையில் கிளாஸை வைத்தான். வதனா எதுவும் பேசாது அறைக்குள் செல்லப்போனவளை சூர்யாவின்
"கண்ணம்மா" என்ற அழைப்பு நிறுத்தியது.

கண்களில் கண்ணீருடன் திரும்பி சூர்யாவைப் பார்த்தாள். தன் இரு கைகளையும் விரித்து கண்ணால் அவளை அழைக்க ஓடிவந்து தன்னவன் மார்பில் தஞ்சமடைந்தாள். தன்னவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் சூர்யா.

"மாமா" என்றவள் மேலும் அவனுள் புதைந்து அழுதவள் சில நிமிடங்களில் அவனது முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்.அவனும் பதில் வழங்கத் தவறவில்லை. சில நிமிடங்களில் அவனை பிரிந்தாள்.

"மாமா ஏன் இந்த நாலு நாளா பேசல? கோவமா மாமா?"

"கோபந்தான் கண்ணம்மா. ஆனா நான் ஏன் பேசாம இருந்தன்னா நான் கண்ணம்மானு கூப்டா நீ இப்பிடி கட்டிப்பிடிச்சி அழுவனு எனக்குத் தெரியும்டாமா அதுதான் பேசாம இருந்தன்."

"ஏன் மாமா"

சிரித்தபடி அவளை தனது கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் " எனக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ இப்பிடி பண்ணா நான் எப்பிடிமா சமாதானப்படுத்துற அதனாலதான் கண்ணம்மா"

"மாமா" என்றவள் அவன் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"கண்ணம்மா"

"மாமா"

"நான் ஒண்ணு கேக்கட்டுமா கண்ணம்மா?"

"கேளு மாமா"

"ஏன்டாமா மாமாவ விட்டுப் போன?"

"மன்னி......" அவளது வாயில் விரல் வைத்தவன்.

"மன்னிப்பெல்லாம் வேணாம்டா கண்ணம்மா. காரணத்தை சொல்லு. அதுகூட உங்கிட்ட கேட்டிருக்கமாட்டன் ஆனா ஏன் கேக்கிறன் தெரியுமா. நீ இன்னொரு தடவை என்னை விட்டு போயிடக்கூடாதுனுதான் கேக்கிறன் கண்ணம்மா. உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா சொல்லாத ஆனா நீ திரும்ப என்ன விட்டு போனா நான் உயிரோடவே இருக்க மாட்டன் கண்ணம்மா"

"ஐயோ மாமா அப்பிடியெல்லாம் பேசாத மாமா நான் சொல்லிடுறன்."

"அழாத கண்ணம்மா சொல்லுடா"

"மாமா அன்னைக்கு நான் hospital போயிருந்தன் babyyaனு confirm பண்ண. அது babythanனு confirm பண்ணாங்க. அந்த சந்தோசத்தோட வீட்டுக்கு வந்தன் மாமா. அப்போ கீர்த்தி நம்ம அறைக்கு வந்து நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்ல. நான் உங்களவிட்டு போயிட்டா நீங்க என்ன மறந்திருவீங்க. என்னால உங்க மானம் போச்சினு சொன்னா.

நான் நம்பல மாமா அவ என்ன கஸ்ரப்படுத்திட்டே இருந்தா அப்போ நான் நான் போனா கண்டிப்பா மாமா என்ன தேடி வருவாருனு சொன்னன். அவ கேவலமா சிரிச்சிட்டே போயிட்டா மாமா.

அப்புறம் நான் உங்களுக்கு போன் பண்ணன் நீங்க கட் பண்ணிட்டீங்க. நான் திரும்ப எடுக்க திரும்ப கட் பண்ணிட்டே இருந்தீங்க. கடைசியில போன answer பண்ணி "உன்னால எனக்கு அவமானம் தான் பேசாம போனை வைனு" சொல்லீட்டீங்க மாமா அத என்னால தாங்க முடியல. என்னால நீங்க அவமானப்படக்கூடாதுனு நினைச்சன் மாமா அதுதான் போயிட்டன் மாமா. "

"கண்ணம்மா கீர்த்தி இப்பிடி பண்ணுவானு நான் நெனைச்சே பார்க்கலடா. அன்னைக்கு முக்கியமான மீட்டிங்ல இருந்தன் கண்ணம்மா. அதுதான் போனை கட் பண்ணன். நீ திரும்ப திரும்ப எடுக்க கோபத்தில ஏதோ பேசிட்டன்டா. ஆனா நான் என்ன பேசினன்னே எனக்கு தெரியல.

அதுக்கப்புறம் உனக்கெடுத்தன் உன்னோட போன் switch offனு வந்துதுடா அ்புறம் அம்மாகிட்ட கேட்க அம்மா ஏதோ சமாளிச்சாங்க. எனக்கு ஏதோ தப்பாபட்டது. அன்னைக்கு நைட்டே டிக்கட் புக் பண்ணி காலைல வந்திட்டன் கண்ணம்மா"

"ஏன் மாமா என்ன தேடி வரல?"

"நீ தானே விட்டுப் போன நீயே வருவானு இருந்தன்டி ஆனா நீ வரவேயில்லை. எனக்கு சாமிமலை வந்தப்போ நீ என் பக்கத்திலே இருக்கிற மாதிரி தோணுச்சி. அதுதான் சக்திகிட்ட சொன்னன். அவன் கண்டுபிடிச்சி சொன்னான். உன்ன பார்க்க வரும்போதுதான் accident நடந்திச்சிடா"

அவனது கன்னங்களை தன் கைகளில் பிடித்தவள் "மாமா நீ என்னை தேடி வந்தியா மாமா"

"ஆமாடா கண்ணம்மா"

"நான் கீர்த்திக்கிட்ட சொன்ன மாதிரியே நீ என்ன தேடி வந்திட்ட மாமா"

"ஆமாடா கண்ணம்மா. நீ சொன்ன மாதிரியே உன்னோட மாமா உன்ன தேடி வந்திட்டன்."

"இதுபோதும் மாமா எனக்கு. நீ என்ன தேடி வந்ததே போதும்"

"கண்ணம்மா நீ எப்பவும் என்ன விட்டு போகக் கூடாதுடி"

"மாட்டன் மாமா உன்ன விட்டு எப்பவும் போக மாட்டன்"

"அந்த கீர்த்திக்கு இருக்கு கண்ணம்மா"

"மாமா நீ கீர்த்திய எதுவும் பண்ணக்கூடாது"

"ஏன் கண்ணம்மா அவளாலதானே நம்ம பிரிஞ்சம்"

"பரவால்ல மாமா நீ அவள எதுவும் பண்ணக் கூடாது. உனக்கு அவளப்பத்தின விசயம் தெரியும்னு காட்டிக்கவே கூடாது. இது உன்னோட கண்ணம்மா மேல சத்தியம்"

"என்ன கண்ணம்மா நீ"

"நடந்த எல்லாத்தையும் மறந்திரலாம் மாமா"

"சரிடி உனக்காக உனக்காக மட்டும்தான் நான் அவள சும்மா விட்றன்"

"மாமா" என்றவளை அணைத்தபடி தூக்கினான்.

"என்ன மாமா?"

"சத்தம் போடாதடி" என்றவன் அவளை தூக்கி வந்து கட்டிலில் விட்டவன் அவளருகில் வந்தான்.

"மா...மா...."

"என்ன கண்ணம்மா" என்றான் குறுஞ்சிரிப்புடன்.

"மா..." அதுக்கு மேல் அவளை பேசவிடாது தனது கண்ணம்மாவுடன் இரண்டறக் கலந்தான். அவளும் தனது மாமாவை அணைத்துக்கொண்டாள்.......

கூடலின் பின் தன்னவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகிய சூர்யாவின் மார்பில் தஞ்சம் கொண்டாள் கண்ணம்மா.

"மாமா"

"சொல்லுடாமா"

"நீ என்ன பார்க்க வராம இருந்திருந்தா accident நடந்திருக்காது என மாமா"

"ஏன் கண்ணம்மா இப்பிடி சொல்ற? அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணம்மா"

"மாமா உனக்கொன்னு தெரியுமா. என்றவள் ஆதி தன்னிடம் சொன்னவற்றை சொன்னாள்"

"ஆதி எவ்வளவு புத்திசாலியா இருக்கான் கண்ணம்மா"

"மாமா அவன் அப்டியே உங்கள மாதிரி"

"ஹா......ஹா.....ஹா தெரியும்டா ஏன்னா வளர்த்து நீயாச்சே. கண்ணம்மா நான் மயங்கி இருந்த போது ஆதி அப்பானு கூப்டது கேட்டிச்சிடி. அதுக்கு அப்புறம்தான் முழுசா மயங்கிட்டன். அது மட்டுமில்ல hospitalல ஆதி பேசினதை என்னால உணர முடிஞ்சிதுடி"

"ஆமா மா அவ ரொம்ப நேரமா பேசினான் உங்ககூட"

"ஆமாடா கொஞ்சம் இரு "என்றவன் ஒருவருக்கு போன் பண்ணி சில வேலைகளை சொன்னான்.

"மாமா தூங்கம் வருது"

"தூங்கலாம் கண்ணம்மா " என்றவன் மனைவியை தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டு உறங்கினான்.

வாங்க நாம் தேவி வீட்டுக்கு போலாம்🏃🏃🏃

அனைவரும் தூங்கிய பின் கீர்த்தி மட்டும் மாடியில் நின்றிருந்தாள். அவள் சக்திக்கு என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது போன் ஒலித்தது. பார்த்தவளுக்கு புன்னகை வந்தது. ஆம் சக்திதான் அவளை அழைத்தான்.

"ஹலோ"

"ஹலோ கீர்த்து"

"ம்.. சொல்லுங்க"

"சாப்டியாடா?"

"ம்...நீங்க?"

"சாப்டன்டா. என்ன மரியாதை எல்லாம் வருது?"

"என்ன சொல்றீங்க?"

"இதுவரைக்கும் சக்தினுதான் சொல்லுவ. இன்னைக்கு மரியாதையா நீங்கனு சொல்ற?"

"அ..து... தெரியலங்க"

"கீர்த்து என்னை நீ சக்தினே கூப்டலாம் "

"பரவாலங்க. நான் ஒண்ணு கேக்கட்டுமா?"

"கேளுடாமா"

"நான் உங்களுக்கு பொருத்தமானவளா? நான் பண்ண தப்பை....."

"கீர்த்துமா நீ எனக்கு பொருத்தமானவடா. நீ பண்ண தப்பை நான் மன்னிச்சிட்டன். சரியா.அத கெட்ட கனவா நினைச்சி மறந்திருடாமா"

"எப்பிடிங்க நீங்க நாளைக்கே என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் செத்திடுவன்க" என்று அவள் சொல்லும் போதே போனை கட் பண்ணினான் சக்தி.

(எதுக்கு கட் பண்ணிட்டாரு. அவரு என்னோட பேசமாட்டாரா?

அவரு எதுக்கு பேசணும்?

என்ன லவ் பண்றாரே

ஆனா நீ லவ் பண்ணலயே

இல்ல நானும் அவர லவ்....

சொல்லு

இல்ல அவருக்கு நான் பொருத்தமில்லை) கீர்த்தியின் மனதுக்கும் மூளைக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் களைப்படைந்த கீர்த்தி அழ ஆரம்பித்தாள்.

அழுதபடி நின்றவளை தொட்டது ஒரு கரம். திரும்பிய கீர்த்தியை பளாரென அறைந்த சக்தி அதே வேகத்தில் அணைத்தான்.அவளும் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

"கீர்த்துமா ஏன்டா செத்திருவன்னு சொன்ன? நான் அப்பிடிப்பட்டவனாடி?"

"இ...ல்...ல"

"அப்புறம் ஏன்டி அப்பிடி சொன்ன?"

"மன்னிச்சிடுங்க"

"என்ன லவ் பண்றியாடாமா?"

அவனை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி "ஆமா லவ் பண்றன்" என்றாள் கண்னீருடன்.

"லவ் யூ டி"

"லவ் யூங்க"

"கீர்த்தி நடந்து முடிஞ்சதப்பத்தி இனிமேல் எப்பவும் பேசக்கூடாது சரியா?"

"சரிங்க. நீங்க ஏன் போனை கட் பண்ணீங்க? எதுக்கு வந்ததும் அறைஞ்சீங்க? "

"நீ செத்திடுவன்னு சொன்ன அதுதான் உன்ன பார்க்க வர்றதுக்காக கட் பண்ணன். அறைஞ்சது இன்னொரு தடவை செத்திடுவன்ற வார்த்தை உன்னோட வாயில வரக்கூடாதுனு. வலிக்குதாடாமா?"

"ஆமாங்க ரொம்ப வலிக்குது"

தான் அறைந்த கன்னத்தில் முத்தமிட்டான். அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
"கீர்த்துமா டைம்மாச்சி நான் காலைல வர்றன் சரியா"

"சரிங்க"

"எதைப் பத்தியும் யோசிக்காம போய் தூங்குடா " என்றவன் நெற்றியில் முத்தமிட்டான்.

"பார்த்து போங்க குட் நைட்"

"குட் நைட்டாமா" என்றவன் தனது வீட்டிற்குச் சென்றான்.

விக்கி வீட்டில்......🏃🏃🏃🏃🏃

"ஐயா....." என்றபடி ஓடி வந்தான் காளி

"என்ன காளி"

காளி சொன்ன விசயத்தைக் கேட்ட விக்கி கோபத்தில் கண்ணாடியை போட்டுடைத்தான்.

காத்திருப்புத் தொடரும்..................

சூர்யா யாருக்கு போன் பண்ணினான்????
காளி விக்கியிடம் என்ன சொன்னான்????

உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒✒ தசீயகுமார் டனேஸ்ரி. ✒✒
 
Top