• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காத்திருப்பு : 50 - இறுதி அத்தியாயம்❤️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
303
🌹🌹காத்திருப்பு : 50🌹🌹

வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.
வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.
"என்னாச்சி மச்சான்?"
"அதிர்ச்சியில மயங்கிட்டாடா"
"வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?"
"சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும் shopping பண்ணப் போயிருக்கிறாங்க. அப்போ பசங்களும் கூடப் போனாங்க.. அப்போ…."
"அப்போ என்னடா?"
"தீர்வையும் ஆதியையும் யாரோ கடந்திட்டாங்கடா"
" என்ன சொல்ற கமலேஷ்.. ஏன் முன்னாடியே சொல்லலை? "
" இப்போதான் மச்சான் இவங்க வந்தாங்க. வதனா வீட்டுக்கு வந்ததும் அழுது மயங்கிட்டா. சதுதான் சொன்னா"
" யாருடா கடத்தியிருப்பா? "
" தெரியலையேடா"
" sir ஒருவேளை விக்கி கடத்தியிருப்பானோ? "
" சூர்யா யாருடா விக்கி? "
" வாசு நடந்தவற்றை கூறினான். "
" சக்தியை வரச்சொல்லு வாசு"
" ok sir"
அடுத்த சில நிமிடங்களில் சக்தி நின்றிருந்தான்.
"சக்தி என்னடா பண்றது?"
"அவன் உனக்கு போன் பண்ணானாடா?"
"இன்னும் பண்ணலைடா"
அப்போது கண்விழித்த வதனா சூர்யாவைப் பார்த்தும் "மாமா என்னோட பசங்க எங்க மாமா? அவங்களை காணோம் மாமா.. மாமா கூட்டிட்டு வா மாமா. ஆதி விளையாடுறானா மாமா என்கூட? நதியும் அவன்கூட சேர்ந்திட்டாளா மாமா? அவங்களை வரச் சொல்லுங்க மாமா எனக்கு பசங்களை பார்க்கணும்" என அழுதவள் தோற்றம் அனைவரையும் நெஞ்சுருக வைத்தது.
"கண்ணம்மா மாமா சீக்கிரமா கூட்டிட்டு வந்திடுவன் சரியா? அழாத கண்ணம்மா " என்றவன் கமலேஷிடம் சைகை காட்ட கமலேஷ் தூக்க மாத்திரையை சதுவிடம் கொடுத்து பாலில் கலந்து எடுத்து வரச் சொல்ல சதுவும் எடுத்து வந்தாள்.
" கண்ணம்மா பாலை குடிச்சிட்டு தூங்குடாமா நீ எழும்புறத்துக்கு முன்னாடி பசங்க வீட்ல இருப்பாங்க"
" நெஜமாவா மாமா? "
" ஆமாடா கண்ணம்மா"
பாலை குடிக்க வைத்தான். சக்தி யார் யாருக்கோ போன் பண்ணிட்டு இருந்தான். சிறிது நேரத்தில் வதனா தூங்கியதும் அவளை சோபாவில் தூங்க வைத்தான்.
" சக்தி " என அழைத்தவன் குரலில் அவ்வளவு உக்கிரம். பழைய சூர்யாவை அனைவரும் பார்த்தனர்.
"என்ன சூர்யா? "
" விக்கி இனி உயிரோட இருக்கவே கூடாது.. என்னோட பசங்க மேலேயே கையை வைச்சிட்டான். அவனை சும்மா விடமாட்டான். போலிஸ்ல சொல்ல வேண்டாம் சக்தி. நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி தேடச் சொல்லு"
"சது உன்னோட போன் எங்க?"
"போன்.. அது… ஆ…ஆதி game விளையாட கேட்டான் குடுத்தன் தேவ்"
" என்ன சது ஆதிக்கிட்ட போன் இருக்கா? "
" ஆமா அண்ணா"

வாங்க ஆதியையும் நதியையும் பார்க்கலாம்…………..
ஆதியையும் நதியையும் மயக்க மருந்திடாமல் கடத்தினர். சிறுவர்கள்தானே என்ற அலட்சியத்தன்மை.
இருவரையும் ஒரு அறையினுள் பூட்டி வைத்தனர். கை கால்களை கட்டவில்லை.
" அத்தான் பயமா இருக்கு "
" பயப்படாத நதிமா நம்ம அப்பா வந்திடுவாங்க. சரியா?"
"ம்.. நம்ம இங்க இருக்கிறது மாமாக்கு எப்பிடி தெரியும் அத்தான்?"
"ம்… ஆ… சது அத்தையோட போன் என்கிட்டதான் இருக்கு நதிமா. நான் மறந்தே போயிட்டன். இரு அப்பாக்கு போன் பண்ணலாம்."
"சூப்பர் அத்தான். நதி நம்மகிட்ட போன் இருக்கிறது இவங்களுக்கு தெரியாது. நம்மளும் அப்பிடித்தான் இருக்கணும் சரியா? "
" சரி அத்தான்"
ஆதி சூர்யாவுக்கு போன் செய்தான். அதேவேளை விக்கி அவர்களது அறையைத் திறந்து உள்ளே வர ஆதி போனை பாக்கெட்டில் போட்டான்.

வீட்டில்………………………….
சூர்யாவுக்கு போன் வந்தது.
" சக்தி சந்தனா நம்பர்ல இருந்து போன் வருதுடா"
" answer பண்ணு பட் பேசாத speakerல போடு. சிலவேளை ஆதி போன் பண்ணலாம். நம்ம பேசினா அவன் மாட்டிடுவான்.
" சரிடா"என்ற சூர்யா போனை answer பண்ணி speakerல் போட்டான். அதே வேளை விக்கியும் பேச ஆரம்பித்தான்.
" என்ன பசங்களா எப்பிடி இருக்கிறீங்க?"
"நல்லா இருக்கிறம் uncle"
"உங்க பேரென்ன?"
"நான் ஆதவகுமார் son of சூர்யகுமார். இவ நட்சத்திரா daughter of கமலேஷ்வரன்."
"என்ன பார்த்து பயமா இல்லையா?"
"இல்லை"
"ஏன்?"
"நான் சூர்யகுமார் பையன் எதுக்கும் எப்பவும் பயப்படக் கூடாதுனு அம்மா சொக்லுவாங்க"
ஆதியின் பேச்சைக் கேட்ட வீட்டினர் மெய் சிலிர்த்தனர். சக்தி போன் கால்லை ரேஸ் பண்ணச் சொன்னான்.
" உங்களை இப்ப கொலை பண்ணப் போறன்."
" ஏன்? "
" உங்க அப்பாவை பழி வாங்கணும்.. உங்களை கொலை பண்ணா அவன் என்கிட்ட தோத்துப் போயிடுவான்….. ஹா… ஹா… ஹா…"
" ஹா….. ஹா… ஹா.. "
"ஏன் அத்தான் சிரிக்கிற?"
"நதிமா இவரு நம்மளை கொலை பண்ணிடுவாராம். பார்த்தியா ஜோக்க?"
சூர்யா தான் கேட்டுக் கொண்டிருப்பதை ஆதிக்கு உணர்த்துவதற்காக லேசாக இருமினான். ஆதிக்கு புரிந்து விட்டது. அவனும் லேசாக இருமினான். சூர்யாவும் தன் மகன் தன்னை கண்டு கொண்டதை அறிந்தான்.
" நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க அங்கிள் . நீங்க இங்க இருந்து புறப்படுறதுதான் நல்லது." என விக்கியிடம் பேசுவதன் மூலம் சூர்யாவை புறப்படச் சொன்னான்.
சூர்யாவும் மகனின் புத்திசாலித்தனத்தை மெச்சியவாறு வாசு, சக்தியை அழைத்துக் கொண்டு கமலேஷை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டான். சதுவிடம் அவர்கள் shopping சென்ற இடத்தையும் கேட்டவன் அங்கே விரைந்து சென்றான்.
"நான் ஏன்டா போகணும்?"
"எங்கப்பா வந்தாருனா உங்களை உயிரோட விடவே மாட்டாரு அங்கிள்"
"யாருக்குமே இந்த இடம் தெரியாதுடா. சின்னப் பையன் நீ என்ன பயந்தோடச் சொல்ற?"
சூர்யா shopping mall வந்தடைந்திருந்தனர்.
"என்ன அங்கிள் மால்ல இருந்து ஒன்அவர்ல இங்க வந்திட்டம். ஏன் அங்கிள் கடத்திக் கொண்டு போய் பாழடைந்த இடத்தில வைப்பாங்க சினிமால பார்த்திருக்கேன். இது புது வீடு மாதிரி இருக்கு"
" நீ சொல்றது சரிதான்டா பையா இந்த வீடு புதுசுதான். சுத்திப் பார்த்தல காடு நீங்க தப்பிச்சு போகவும் முடியாதுடா. அதனால உங்களுக்கு காவலும் நான் பெருசா போடலை"
இவர்கள் பேசுவதைக் கேட்ட வாசு googleல் தேடிப் பார்க்க ஒரு காட்டின் நடுவில் வீடு இருப்பது தெரிந்தது.. உடனே அந்த இடத்து location ஐ வைத்துக் கொண்டு மிக வேகமாக சென்றனர்…
" அங்கிள் எங்கப்பா ஒரு வேளை வந்திட்டாருனா? "
" உன்னை விட்டுட்டு அவனை கொன்னுடுவன். "
" அப்போ என்னை கொன்னுடுங்க.. அப்பாவை விட்டுடுங்க அங்கிள்."
ஆதியின் பேச்சைக் கேட்ட சூர்யாவுக்கு கண்ணீர் வந்தது. வாசு சமாதானப் படுத்த சக்தியின் ஆட்கள் விக்கியின் இடத்தை சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வந்தது. சூர்யா வேகமாக வண்டியை ஓட்டினான்.
" அப்பா மேல அவ்வளவு பாசமா டா? "
" ஆமா அங்கிள் எங்க அப்பா யார்க்கிட்டையும் தோத்துப் போகக் கூடாது. அதுக்கு நான் விடவும் மாட்டன்"
"பார்டா உன்னை நைட்டுக்கு வச்சிக்கிறன்"
சூர்யா விக்கியின் இடத்திற்கு வந்ததை ஆதிக்கு உணர்த்துவதற்காக இருமினான். ஆதியும் புரிந்து கொண்டான்.
" அங்கிள் ஒரு நிமிசம் இங்க இருந்து நீங்க போனா நாங்க தப்பிச்சிட்டா? "
" இப்பதானேடா சொன்னன் சுத்தி காடு இருக்குணு.. நானும் என்னோட மூணு ஆட்களும் இப்போ இருக்கிறம் முடிஞ்சா தப்பிச்சிக்கோடா"
சூர்யாக்கு உள்ளே அதிக ஆட்கள் இல்லை என்றதும் வீட்டினுள் செல்ல அனைவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர்.
" நான் ஏன் அங்கிள் தப்பிக்கணும்? எங்க அப்பாவே வந்து கூட்டிட்டு போயிடுவாரு. நீங்க ரொம்ப பாவம் அங்கிள். உங்களை அப்பா சும்மா விடமாட்டாரு"
" சரியா சொன்ன ஆதி" என்றவாறு உள்ளே புயல் போல வந்தான் சூர்யா. அவனைப் பார்த்தும் தீரா மாமானு கட்டிக் கொண்டாள். விக்கி அதிர்ச்சியில் நின்றவன் சட்டென்று ஆதியைப் பிடித்து துப்பாக்கியை அவன் தலையில் வைத்தான்.
எதிர்பாராது நடந்ததில் சூர்யா அதிர்ச்சியடைந்தான். பின் தனது துப்பாக்கியை விக்கி நோக்கி குறிவைத்தான்.
"என்ன சூர்யா உன் பையன் தலைல நான் துப்பாக்கி வைச்சிருக்கிறன். நீ என்மேல வைச்சிருக்க.? என்ன சுடப் போறியா? சுடு.. நான் உன் பையனை சுட்டுடுவேன். நான் செத்தாலும் பரவாயில்லை. நீ சந்தோசமா இருக்க கூடாது. சூர்யா"
ஆதியின் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தான் சூர்யா. ஆதியும் தந்தையின் கண்களைப் பார்த்தான்.
" ஆதியை விட்டுடு விக்கி. ஆதி உன்னோட அப்பா தலைகுனிந்து… எனஎன சொல்லி சூர்யா கண்ணசைக்க ஆதி தனது தலையைக் குனிந்தார். அந்த நிமிடத்தை பயன்படுத்தி விக்கியை சுட்டான் சூர்யா…
ஆதி பாய்ந்து வந்து சூர்யாவைக் கட்டிக் கொண்டான். சூர்யாவும் மகனை அணைத்து முத்த மழை பொழிந்தான். பின் இருவரையும் அணைத்தவாறு சக்தியிடம் விக்கியின் கேஸை பார்க்குமாறு கூறிவிட்டு வாசுவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
"அம்மா" என்றவாறு இரு குழந்தைகளும் ஓடிச் சென்றனர். தேவி தீராவையும் ஆதியையும் அணைத்து முத்தமிட்டாள். அனைவரும் பிள்ளைகள் நலமுடன் வந்ததை நினைத்து மகிழ்ந்தனர். வதனா தூக்கத்தில் இருந்தாள்.
"அப்பா அம்மாக்கு என்னாச்சி?"
"அம்மா தூங்குறாங்கடா. நீங்க ரெண்டு பேரும் போய் பிரஸ்ஸாகிட்டு வாங்க… சது கூட்டிட்டு போ"
" வாங்கடாமா"
"சூர்யா எப்பிடி கண்டுபிடிச்ச?"
"பாட்டி" என்றவன் நடந்தவற்றைக் கூற அனைவரும் மெய்சிலிர்த்தனர்.
"ஆதி உன்னைப் போலவே இருக்கிறான் சூர்யா."
" ஆமா பாட்டி "
" சரி எல்லோரும் சாப்பிட வாங்க. கமலேஷ் வதனா எப்போ எந்திரிப்பா?"
" இப்போ எந்திரிச்சிடுவானு" சொல்லும் போதே வதனா எழுந்தாள்.
" மாமா பசங்க எங்க? " என கேட்டவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
"அழக் கூடாது கண்ணம்மா " என்றவன் சந்தனாவை அழைத்தான். அவள் ஆதியையும் தீராவையும் அழைத்து வந்தாள்.
" அம்மா"
" அத்தைம்மா" என்றவாறு வந்த இருவரையும் இறுக்கி அணைத்து முத்தமழை பொழிந்தாள்.
"வதனா சாப்பிடலாம்மா பசங்களுக்கு பசிக்கும்"
அனைவரும் சாப்பிட்ட பின்னர் சூர்யா வாசுவை அழைத்து" நாளைக்கு நீயும் சந்தனாவும் பிரான்ஸ் கிளம்புங்க ஓகே"
"ஓகே sir"
அனைவரும் தங்களது அறைக்குச் சென்றதும் சூர்யா தங்களது அறைக்குச் சென்றான். வதனா கட்டிலில் தலைகுனிந்தபடி இருந்தாள். சூர்யா வந்து வதனா அருகில் அமர்ந்தான். அதற்காகவே காத்திருந்ததைப் போல அவனது மார்பில் சரணடைந்தாள் வதனா.
"கண்ணம்மா அழுது முடிச்சிடுடா"
"மாமா" என்றவள் வெடித்து அழுதாள். அவளால் ஆதி இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் அழவிட்டவன் அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தினான்.
"போதும் கண்ணம்மா நீ அழுதது. இனிமேல் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக் கூடாது. " என்றவன் நடந்தவற்றை கூறினான்.
"நம்ம ஆதி ரொம்ப புத்திசாலிங்க."
"ஆமாடா கண்ணம்மா. ஆதி என்னை மாதிரியே இருக்கிறான்"
"உங்களோட பையன் உங்களை மாதிரித்தானேங்க இருப்பான்."
அவள் சகஜமாகிவிட்டாள் என்பதை உணர்ந்தவன்," கண்ணம்மா ஆதி என்னைப் போலவே இருக்கிறான். எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு பெத்துக்கொடுடா"
" சரிங்க" என்றாள். சூர்யா சிரிக்கவும் அதன்பின்பே அவன் கேட்டது புரியவும் வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை அணைத்து தனது தேடலை ஆரம்பித்தான்.

…..இரண்டு வருடங்களின் பின்…..
மதுரா இல்லம் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய பிஸ்னஸ்மேன்கள் தங்களது குடும்பத்தினர் சகிதம் வந்திருந்தனர்.

சூர்யா அறையில்……………
மஞ்சள் நிற புடவையில் மனமெங்கும் மகிழ்ச்சியுடன் தன்னை அலங்கரித்தபடி நின்ற வதனாவை பின்னிருந்து அணைத்தான் சூர்யா.
"ஐயோ விடுங்க மாமா"
"கண்ணம்மா ரொம்ப அழகா இருக்கடி செல்லம்" என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான். கன்னம் சிவந்து நின்றாள் வதனா.
"மாமா என்ன இது விடுங்க டைமாச்சி எல்லோரும் வந்திருப்பாங்க"
"வரட்டும்"
"மாமா பிளீஸ் மாமா சீக்கிரம் ரெடியாயிட்டு வாங்க"
"அப்பிடினா மாமாக்கு முத்தம் கொடு போறன்" என்றவன் அவளது இதழை நோக்கி குனியும் போது கதவை திறந்து கொண்டு வந்தனர் அஷ்வத், அஷ்வின் எனும் இரட்டையர்கள். அவர்களைப் பார்த்தும் விலகிய சூர்யா குளிக்க சென்றான்.
தேவி கமலேஷின் இரட்டையர்களே அஷ்வத், அஷ்வின். இரண்டு வயதாகின்றது. அவர்கள் பின்னே நதியின் கையினை பிடித்தபடி வந்தான் ஆதி. பிள்ளைகள் நால்வரையும் அணைத்து,
"தேவிமா எங்கடா?"
"அம்மா அத்தைம்மா ஆதிராவை கீழே வச்சிட்டு இருக்கிறாங்க.. உங்களை சீக்கிரமா வரட்டுமாம்"
"ஆமா அத்தை மா"
(ஆதிரா சூர்யா வதனாவின் இரண்டாவது மழலை. சூர்யாவின் ஆசைக்காக பெற்றெடுத்தாள் ஆதிராவை. இன்று ஆந்திராவுக்கு முதலாவது பிறந்தநாள். அதற்காகவே பார்ட்டி நடக்கிறது மதுரா இல்லத்தில்…)
" சரிடா தங்கங்களா.. நீங்க போங்க நான் இப்போ வந்திடுறன்"

பிள்ளைகள் கீழே சென்றனர். சூர்யா ரெடியானதும் இருவருமாக கீழே சென்றனர். கீழே வாசு சந்தனா தங்கள் மகன் ரித்தேஷூடனும் சக்தி கீர்த்தி தங்களது மகள் காருண்யாவுடனும் வந்திருந்தனர். அனைவரது பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆதி அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
ஆதிராவை வாங்கிய சூர்யா பிள்ளைகளை அழைக்க அனைவரும் ஓடிவந்து அருகில் நின்றனர். பின் பிறந்தநாள் கேக் வெட்டி முடிந்ததும் பார்ட்டி நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி விடை பெற்றனர்.
அப்போது மரகதம்மாள் எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம்பா என்றார்.
"சரி பாட்டி" என்ற கமலேஷ் கேமராமேனை வரச் சொன்னான். பெரிய சோபாவில் பாட்டி அமர அவரது ஒரு பக்கம் குமார் மதி தம்பதியினரும் மறுபக்கம் சுந்தரம் தங்கம்மா தம்பதியினரும் இருந்தனர். அவர்கள் பின்னால் சூர்யா வதனா, கமலேஷ் தேவி, வாசு சந்தனா, சக்தி கீர்த்தி என அனைவரும் நிற்க பிள்ளைகள் அனைவரும் முன்னால் கீழே இருந்தனர்.. ஆதிரா ஆதியின் கையில் இருந்தாள். அனைவரும் புன்னகைக்க அதை உள்வாங்கிக் கொண்டது புகைப்படக்கருவி..
இவர்கள் வாழ்வில் ஆனந்தம் மட்டும் நிலைக்க இறைவனை வேண்டி நாமும் விடைபெறுவோம்…..

🌹🌹காத்திருப்பு நிறைவுற்றது. 🌹🌹
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
305
சூப்பர் சூப்பர்.... ஆதவ் குமார்
ஆதிரா 🤩💐💐....
இரட்டையர்கள் நட்சத்திரா
அஸ்வத் அஷ்வின் ..... எல்லோரும் குடும்பம் குழந்தைகளுடன் சந்தோசமா இருக்கட்டும் நாமும் வாழ்த்துவோம்.....
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
305
வருவாயா என்னவனே
ஆசிரியர்: திவ்ய துர்ஷி

சூர்யகுமார்💕 சந்திர வதனா.....
அனலும் பனியும் சேர்ந்து
ஆனந்தமான குளிர்
காற்று போல...ஒரு
காதல் கதை.....

கிராமத்தில் வசிக்கும் வதனா
கிராமத்தை வெறுக்கும் சூர்யா
காதல் கொள்ளாமல் கல்யாணமா??? கல்யாணத்திற்கு பிறகு காதல் வருமா????
கட்டாயத்தின் பெயரில் கல்யாணமா
கல்யாணம் பந்தத்தில் இருந்து
கணவன் மனைவி
பிரிந்தது ஏனோ பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பதில் தொடங்குகிறது கதை....

பிரிவில் ஆரம்பித்து
பிரிவுக்கான காரணத்தை சொல்லி
பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பதை விறுவிறுப்பாகவும்
வினா கேட்டு கேட்டு
முடிச்சுகளை ஒவ்வொன்றாக
விடுவித்து
விடைகளை கொடுத்து முடித்திருக்கிறார் ஆசிரியர்.....

முதல் கதை ......
முயற்சிக்கு வெற்றிகள் சகி....
இயல்பாய் இதமாய்
மனதை வருடி செல்லும் காதல் கதை ஆனால் பல
திருப்பங்களுடன்....
🤩🤩🤩🤩💐

காரணமே இல்லாமல்
கோபம் கொள்ளும் சூர்யா காதலில் விழுந்த பிறகு கணவனாய் மாறிய பிறகும்
கோபமும் காதலும் மாறி மாறி
காட்டி நம்மை திணற வைக்கிறார்🤪🤪🤪🤪🤪

திட்டம் போட்டு
தீட்டிய சதியில் தெரியாமல் மாட்டிக் கொண்டு
தாய் தந்தை கூட
தன்னை நம்பாமல்
தள்ளி வைக்க....
துடிக்கும் வதனா
துன்பத்தில் அழ
தாங்கிக் கொள்ளும் சூர்யா.....

கண்ணம்மா என்ற ஒற்றை வார்த்தையில்
காதலை அள்ளிக் கொடுக்கும் சூர்யா
கலங்கி மயங்கி வருந்தி
தாழ்வு மனப்பான்மையில் தவறாக முடிவு எடுத்து தனியாக சூர்யாவை விட்டுச் செல்ல.....
பிரிந்தது உறவு.....

நீயாகச் சென்றாய்
நீயாக வா என்று அவனும் நான் உன்னை விட்டு சென்றாலும்
நீ என்னை தேடி வருவாய் என்ற
நம்பிக்கையில் அவள்

யார் யாரை தேடி செல்கிறார்கள்
யாருடைய நம்பிக்கை ஜெயித்தது.....
சதி பிரித்த காதலை
விதி சேர்த்து வைத்தது....
😎😎😎😎😎😎😎
சிறு வயது தோழி
சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷமாய் துணையாய் நிற்க சங்கடமான நேரத்தில்
நட்பை மறந்தது ஏனோ தேவி வதனா நட்பு அழகு....
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அண்ணன்கள் தங்கையின் மேல் பாசத்தை அள்ளி தெளிக்கிறார்கள் ....

சூர்யா ரதிதேவி மேல்
கமலேஷ் வதனா மேல்
வாசு சந்திரா மேல்
என்று
தங்கைகளை தாங்கும் அண்ணன்கள் அருமை.....
👏👏👏👏👏💐💐💐

காதலில் என்னடாம்மா என்றும்
சிணுங்கள்களில் என்னடி
யில்
கணவன்களின் பாசமான காதலான அழைப்புகள் அற்புதம்😘😘😘🤩🤩❤️❤️

சமயோகிதமாக
சிந்தித்தும்
புத்தி கூர்மையும்
குழந்தைகளின் மழலை பேச்சு
பெரியவர்களைப் போல நிதானமாய் சிந்திக்கும் அன்னையின் வளர்ப்புகளும்
அற்புதம் .....
நதி ஆதி சுட்டி குழந்தைகள் சூப்பர்...
சந்திராவின் துணைக்கு ஆதி
சூர்யாவின் ஆசைக்கு
ஆதிரா.... .👏👏👏👏
ரதி கமலேஷ் தம்பதிக்கு இரட்டையர்கள் பலே பலே
நட்சத்திரா வின் தம்பிகள்
அஸ்வத் அஷ்வின் 💕💕
குடும்பம் குழந்தைகளுடன் சந்தோசமா இருக்கட்டும் நாமும் வாழ்த்துவோம் 💕💕🎈🎈🎈🎈🎆🎆🎉......
 
Top