அத்தியாயம் 2
கிட்டியைக் கையில் வைத்து அடிக்கக் காத்திருந்தவன் முன்னே வந்து அவன் அன்னையின் தாலி வந்து விழுகவும் பேச்சு மூச்சற்று போனான் செந்தூரன்.
தினமும் தாலியின் நுனியைப் பிடித்துக் கொண்டு தூங்கும் அவனுக்கு தெரியாதா அது அவன் அன்னையுடையது என்று. கண்களிரண்டும் நிலைக்குத்தி அதிலே நின்றது. கண்ணீரும் வரவில்லை சுற்றிலும் நடப்பது எதுவும் காதிலோ மனதிலோ ஏறவில்லை.
வீட்டிற்க்கு வேலையாகச் சென்ற தங்கவேல் அப்போது தான் வந்தவர் அதிர்ச்சியில் உறைந்தார். 'நல்ல வேளை நாம் உள்ளே இல்லை என்று சந்தோஷம் கொள்வதா இல்லை உள்ளே நம் உறவுகள், மற்றக் குடும்பங்கள் என அத்தனை பேர் மாட்டிக் கொண்டார்களே என்று வருத்தம் கொள்வாதா' என்று தெரியாமல் அதிர்ச்சியில் விழிபிதுங்கி நின்றார். அப்போது தான் சுப்பு பாட்டி புள்ளைத்தொட்டியில் இருந்த பிள்ளைகளை வெளியே இழுத்து வந்து கொண்டிருந்ததை கண்டவர், செந்தூரன் மட்டும் அங்கேயே வெறித்து நிற்பதைக் கண்டவர், "செந்தூராஆஆஆஆ" என்று ஓடிச் சென்று வெளியே தூக்கி வந்து விட்டார்.
முதல் அறை வெடித்துச் சிதறும் போதே வேலையாட்கள் பதறி வெளியே ஓட ஆரம்பித்து விட்டனர். இது என்ன நெருப்பா ஒன்று எரிந்து முடிந்து அதிலிருந்து மற்றொன்று பிடித்து எரிவதற்கு?. பட்டாசு.. ஆலையில் எல்லா இடங்களிலும் வெடிமருந்தும் வெடிக் கழிவுகளும் அங்கங்கே சிதறிக் கிடக்கும். வெடிகள் கண்டமேனிக்கு வெடித்துச் சிதறியது. அதுச் சிதறி ஒரு அறையிலிருந்து விழுந்து அடுத்த அறை, அடுத்த அறை என்று வரிசையாக வெடித்துக் கொண்டே இருந்தது. மக்களின் அலறல் சத்தங்கள் வெடிச் சத்தத்தை மீறிக் கேட்டது. வெடிச் சத்தம் காதை அடைக்க அதன் புகைகள் கண்ணை மறைத்து விட்டது. நுழைவாயிலின் அருகில் இருந்த அறையில் இருந்தவர்கள் ஒரு அறை வெடிக்கவுமே வெளியில் ஓடி விட்டதால் சிலர் தப்பி விட்டனர். உள்ளே இருந்த முக்கால்வாசி ஆட்கள் வெளியே தப்பித்து வர முடியாமல் கண்ணை புகை சூழ புகைத் தொண்டைக்குள் இறங்கி கருகி மடிந்து விட்டனர்.
முதல் அறை வெடிக்கும் போதே அந்த சத்தத்தை வைத்தே ஏதோ பட்டாசு ஆலை வெடித்து விட்டது என்று கணித்த அக்கம் பக்கத்து ஊர் மக்கள் மற்றும் மற்ற ஆலை ஆட்கள் எல்லாம் சுதாரித்து எந்த ஆலை என்று அங்கும் இங்கும் தேடி அந்த ஆலைக்கு வந்து விட்டனர். முதல் அறை வெடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகியும் வெடிச்சத்தம் நிற்கவில்லை. வெடித்துக் கொண்டே இருந்தது. செய்து வைத்திருந்த வெடிகள், செய்து கொண்டிருந்த வெடிகள், திரி, வெடிமருந்து என ஒவ்வொன்றாக வெடித்து, ஒவ்வொரு இடமும் தரை மட்டமாகியது. தீயணைப்பு வண்டிக்கு தகவல் சொல்லி விட்டது. அவர்களும் வந்து ஆட்களை மீட்கப் போராடினர். ஆனால் நெருப்பு என்றால் பரவாயில்லை வெடி என்பதால் எங்கிருந்து வெடித்துச் சிதறும் என்று கணிக்க முடியாமல் நிறைய பேரைக் கண்ணில் பட்டும் காப்பாற்ற முடியவில்லை. ஆங்காங்கே தலைகளும், கை கால்களும் என்று சிலரது உடலில் தனித்தனியாக பாகங்கள் கலன்று கிடந்தது. சிலர் புகையைக் குடித்து கருகி கிடந்தனர். அந்த இடமே புகை மண்டலமாக அகோரமாக காட்சியளித்தது.
போலீஸ் அதிகாரிகள் வந்து அந்த ஆலையின் முதலாளியிடம் விசாரணை நடத்த ஆரம்பித்து விட்டனர். எதிர்பாராத விபத்து என்றால் காரணம் கேட்கலாம் இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிந்தது தான். அதனால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கினர் அரசு அதிகாரிகள்.
செந்தூரனின் குடும்பம் மொத்தமும் கதறினர். அவன் அம்மாவின் உடல் சிதறி விட்டது. உடல்கள் கருகி கிடந்ததால் உடலின் பாகங்களை கண்டுபிடிக்க முடிவில்லை. அந்த தாலி மட்டும் தான் கையில் கிடைத்தது. அவன் அப்பாவின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின் தரை மட்டமாகிய கட்டிடத்தின் அடியில் இருந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் கண்முன்னே இழந்த அதிர்ச்சியில் செந்தூரனுக்கு பேச்சே வரவில்லை. அவன் மாமா தான், "அழுதுறுயா ராசா.. பேசுயா.. பேசுடா செந்தூரா..அப்பா எப்படி கெடக்காரு பாரு செந்தூரா.." என்று அழுது கொண்டிருந்தார். அவரே முன்நின்று அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தார். அவனை வளர்க்கும் பொறுப்பும் அவர் தலையில் விழுந்தது.
தான் செய்வது தவறு என்று கூட உணராமல் கதிரேசன் செய்த பிழையால் அவர் மட்டுமல்லாமல் அவரோடு சேர்ந்து நூற்றுக் கணக்கான உயிர்களும் பிரிந்து விட்டது. மூன்று பெண் பிள்ளைகளும் மனைவியும் கதறினர். குடிகாரன் என்றாலும் பாதி சம்பளத்திலாவது குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஒரேயடியாக சென்று விட்டான். அதுவும் ஊறார் தூற்றும்படி ஒரு காரியத்தையல்லவா செய்து விட்டுச் சென்று விட்டார். இவர் தான் எப்போதும் யார் சொன்னாலும் கேட்காமல் தெனாவெட்டாக புகை பிடிப்பது வேலையாட்கள் அனைவருக்கும் தெரியும். இவர் புகைத்து விட்டு வந்ததை பார்த்த சிலர் சொல்லி விட்டதால், அவன் குடும்பத்தையும் செத்தபின்னும் கதிரேசனையும் தூற்றினர்.
பரமேஸ்வரனுக்கு கோவம் வந்து, "இப்போது எதுக்கு ஒப்பாரி வைக்கிறேங்க. அப்படியே குடும்பம் புள்ள குட்டினு பாசமா ஒழுக்கமா இருந்தாராக்கும்?. செத்தும் கெடுத்தாங்குற மாதிரி இவரால எத்தனை குடும்பம் நாசமா போச்சு இன்னைக்கு. இவரால சாகுற வரைக்கும் அந்தப்பலி நம்ம குடும்பத்தை விட்டு போகுமா?. இவரளாம் அப்படியே சுடுகாட்டுல தூக்கி பொசுக்கிட்டு ஒரு காரியமும் பண்ணிருக்க கூடாது. சரி பெத்த பாவத்துக்கு எல்லா காரியத்தையும் பண்ணி முடிச்சுட்டோம். இனிமே அந்த ஆளைப் பத்தின பேச்சே இந்த வீட்ல இருக்க கூடாது. உங்க மூனு பேத்தையும் நான் கரைசேர்க்க மாட்டேன்?' என்று இளங்காளையவன் கோவத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டு தன் அன்னையையும், அக்கா தங்கையையும் அழுக விடாமல் அடக்கி வைத்தான்.
அதிர்விலிருந்து மீளாமல் மூலையில் முடங்கிக் கிடந்தான் செந்தூரன். விழித்தாலும் தூங்கினாலும் கண் முன்னே அவன் அன்னையின் தாலி வந்து விழுந்தது தான் காட்சியாகியது. 'கழுத்தில் இருந்து தாலி தூக்கி எரிந்து அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து விழுந்தது என்றால் அன்னையின் கழுத்தில் எவ்வளவு பாரம் வந்து விழுந்திருக்கும். எப்படி வெடித்துச் சிதறியிருக்கும். எப்படியெல்லாம் துடித்து இறந்திருப்பார். கை கால்களெல்லாம் பிச்சுருந்தா எப்படி வலிச்சுருக்கும் ' என்று தன் மனக்கண்ணில் கற்பனைப் படுத்தி பார்த்தவன், துள்ளி எழுந்து "அம்மாஆஆஆ" என்று ஓவென கதறி அழுதான்.
அவன் சத்தத்தை கேட்டு வெளியிலிருந்து ஓடி வந்த தங்கவேல், "என்னாச்சு செந்தூரா.. செந்தூரா.. ஏன்டா அழுவுற.. எய்யா என்னாச்சு" என்று பதறிப் போனார்.
"மாமா.. ம்மா.. அம்மா.. அம்மா வேனும் மாமா.. அம்மாட்ட போனும் மாமா. அப்பாட்ட கொண்டுபோய் விடுங்க" என்று பெருங்குரலெடுத்து அழுதான். சின்னஞ்சிறு பிள்ளையை தேற்றும் வழி தெரியாமல் விழி கலங்கி நின்றனர் தங்கவேலும் கலைவாணியும்.
அன்னம் தண்ணி உண்காமல் கையில் அவன் அன்னையின் தாலியை இறுகப் பற்றிக் கொண்டு மூலையில் ஒடுங்கித் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.
வெளியே, "ஏன் கல.. இந்த செந்துரன் பையன் பேசுனானா இல்லையா?. ஆளு வெளியவே காணோம். தாயும் தகப்பனையும் பறிகொடுத்ததும் இல்லாம பேச்சும் இல்லை போச்சு.." என்று ஊர்க்காரப் பெண்மணி ஒருவர் செந்தூரனின் அத்தை கலைவாணியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
"அத ஏன் சின்னம்மா கேக்க.. ரெண்டு நாளா அவங்கம்மா தாலியைவே வச்சு அழுவக்கூட இல்லாம வெறிக்க வெறிக்கப் பாத்துட்டுக் கெடந்தான். நாங்கூட அதிர்ச்சில பேச்சு வராமப் போச்சோனு விசாரப்பட்டுட்டு கெடந்தோம். இன்னைக்கு காலேல என்னடானா ஓனு ஒரே கத்தா கத்தி அழுக ஆரம்பிச்சுட்டான். நாங்க என்னனு ஆறுதல் சொல்லுறது" என்று அவரிடம் துக்கத்தை இறக்கி வைத்தார்.
"தாய் தகப்பன இழந்து நிக்குற விவரம் இல்லாத சின்னப் புள்ளைக்கு எத்தனை ஆறுதல் சொன்னாலும் மனசாறுமா?. என்னமோ அது வாங்கி வந்த வரம் அவ்வளவு தான். எல்லாம் உன் தலைல வந்து விடியனும்னு விதி இருந்துருக்கு போல. எல்லாம் உன் நேரம் போ" என்று வருத்தப்படுவது போல் சலித்துக் கொண்டே அப்பெண்மணி சொல்லவும், "என்ன பண்றது சின்னம்மா?. நம்ம பாடே திண்டாட்டடமா தான் இருக்கு. வேற யாருகிட்ட தள்ள முடியும்?. புண்ணியத்துக்கு ஆம்பளப் புள்ளையா போயிட்டான். வளத்து விட்டதோட விட்டுறலாம். அது வரைக்கும் நல்லதாப் போச்சு. பொட்டப்புள்ளனா வம்மை வளமை பார்த்து எம்புட்டு வெஷயம் இருக்கு" என்று பெருமூச்சு விட்டு தன் ஆதங்கத்தைக் குறைத்துக் கொண்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் பாடே பாதிநாள் கரிமருந்திலும் பாதிநாள் வானம் பார்த்த கரிசக்காட்டையும் நம்பி இரு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்றிருக்கும் போது மூன்றாவதாய் ஒருத்தனுக்கு சாப்பாடு போடுவதோடு நின்றால் பரவாயில்லை. அவன் தேவைகள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் கஷ்டம் தானே.
இது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டே தேம்பிக் கொண்டிருந்தவனை, "செந்தூ மாமா.. செந்தூரு மாமா.." என்று காலைச் சுரண்டினாள் குட்டிப் பெண் அன்புச்செல்வி.
அவள் சுரண்டியது ஏதோ பூச்சி ஊறுவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தவன், அவளைக் கண்டதும் எழுந்து அமர்ந்தான். கையில் சாப்பாட்டுத் தட்டுடன் நின்றிருந்தாள். தட்டில் சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளை எண்ணி விடலாம் போல. அப்படி சிதறி கையில் பாதியும் தரையில் பாதியும் சிதறி வைத்திருந்தாள்.
"செந்தூ மாமா.. ந்தா.. சாப்டு" என்றாள் மழலை மொழியில். கையில் மொத்தமாய் நான்கு பருக்கை தான் இருந்தது.
அவள் முகத்தில் என்ன கண்டானோ, வாயைத் திறந்து அவள் ஊட்டியதை வாங்கிக் கொண்டான். பிறகு தட்டை வாங்கி அதில் இருந்த நான்கு வாய் சோற்றை ஆளுக்குப் பாதிபாதியாக உண்டு முடித்தனர். செந்தூரனை செந்தூர் மாமா என்று தான் அழைப்பாள்.
"மாமா. மாமா.." என்று மழலை மொழியில் அவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அப்பேச்சில் சிறிது இயல்பாகி அவளுடன் விளையாட ஆரம்பித்தான். அதுவே தங்கவேலுக்கு நிம்மதியாக இருந்தது. 'கொஞ்சம் கொஞ்சமாக தேறிடுவான். ஆம்புளப்புள்ள தான.. ஆத்தா செவ்வந்தி.. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தே இந்தப்பயல ஒத்தைல விட்டுட்டு போயிட்டேங்க. நீங்க ரெண்டு பேரும் தான் தெய்வமா இருந்து அவனுக்கு தைரியத்தைக் குடுக்கனும்' என்று மனதார வேண்டிக் கொண்டு, ஒருபக்கம் தன் மகன் காளிராஜூம், மறுபக்கம் தங்கையின் மகன் செந்தூரனையும் போட்டுக் கொண்டு துயில் கொண்டார். அன்புச் செல்வி கலைவாணியுடன் தூங்கினாள்.
தொடரும்..