• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 15

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அதிகாலை வேளை, குயில்களின் கானக் குரலோசையுடன், மங்கள வாத்திய இசையும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது நகரின் அந்த முக்கிய மண்டபத்தில். ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்க, மணமேடையில் இறுதி நேர அலங்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டு, ஓரத்தில் மலர் அலங்காரத்தில் கார்த்திக் வெட்ஸ் மிருதுளா என்ற பெயர்கள் ரோஜா இதழ்களால் எழுதப்பட்டிருந்தது. உறவினர்கள் கூட்டம் ஒருபுறம் இருக்க, நகரின் முக்கிய பலரும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

மணமகளும், மணமகனும் அவர்களுக்கு உரிய அறையில் தயாராகி கொண்டு இருக்க, இருவரின் தோழமைகளும் அவர்களை கிண்டல் செய்து கொண்டே, அலங்காரத்தை செய்து கொண்டிருந்தனர். மிருதுளா மிகையான அலங்காரம் வேண்டாம் என்று கூறியும், பிறையும், கௌசியும், சுகமதியும் விடாப்பிடியாக செய்து கொண்டிருந்தனர்.

நிச்சயத்தன்று சுகமதியை கண்டு பாரி அதிர்ச்சியாகி உள்ளே பார்க்க, மிருதுளாவோ அதைக் கண்டு கொள்ளாமல் உள்ளே அழைத்து சென்றாள். அங்கு தனது பெற்றோரைக் கண்டு மதி திகைக்க, எழிலரசியோ அவளைக் கண்டதும் கோபமாக பேச வாயெடுக்க, குலசேகரன்தான் அவரைத் தடுத்தார்.

ஆனாலும் எழிலரசி சும்மாயிராமல், தாங்கள் கிளம்புவதாக கூற, சட்டென அவரின் அருகில் சென்றவள், "அம்மா நீங்க இங்க இருப்பீங்கன்னு தெரியாது. அவர் ஃப்ரண்டு வீட்டுக்குன்னு கூட்டிட்டு வந்தாரு. நான் போயிடறேன். நீங்க இங்கையே இருங்க." என வெளியே செல்ல, மிருதுளாவோ அதிர்ச்சியானாள்.

உடனே அவள் பாரியை பார்க்க, அவன் கண்ணை மூடித் திறந்து அது உண்மைதான் என அவளுக்கு உரைக்க, நொடியில் புரிந்து போனது அவளுக்கு என்ன நடந்திருக்குமென. வேகமாக வெளியில் சென்றவள் கையோடு சுகமதியை அழைத்து வந்தாள்.

"அத்தை என்ன நடந்ததுனு எனக்கு முழுசா தெரியாது. ஆனா மன்னிக்க முடியாத தப்புனு எதுவுமே இல்ல. ஆயிரம்தான் இருந்தாலும் அவங்க உங்க பொண்ணு. இப்படி நீங்க கோபமாவே இருந்தா எப்படி அவங்க நிம்மதியா இருக்க முடியும். கொஞ்சம் யோசிங்க." எனக் கூறினாள் மிருதுளா.

அவளிடம் கோபமாக பேச முடியாமல் எழிலரசி அமைதியாக நிற்க, மிருதுளா குலசேகரனிடம், "மாமா. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க. அவங்க பாவம் இல்லையா. இந்த கல்யாணம் உங்க உறவை பிரிச்சிடுமா? தகிலன் அண்ணாவும் நல்லவங்கதானே." என பேச, அவருக்கோ என்ன சொல்வதென தெரியவில்லை.

ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது நீர்த்து போனதென்னவோ உண்மை. யோசனையுடன் நின்றிருக்க, "மிருது. நீ அமைதியா இரு. இது அவங்க குடும்ப விசயம். அவங்களுக்கு தெரியாதா என்ன பண்ணனும்னு." என மீனாட்சி அவளை அதட்ட, "அம்மா நீ சும்மா இரும்மா. இந்த பிரச்சனையாலதான் பாரி இன்னும் கல்யாணம் வேணாம்னு இருக்காரு." என்க, திகைத்தான் பாரி.

"உனக்குதான்மா தெரியல. அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லல. இவ பண்ண தப்பால அவனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்றாங்க. ஏன் என் அண்ணன் பொண்ணே கட்டிக்க மாட்டேனு சொல்லிட்டா. " என எழிலரசி கூறவும், இப்போது திகைப்பது இவள் முறையானது.

உடனே பாரி, "மிருது. இன்னைக்கு உனக்கு நிச்சயம். அதை மட்டும் யோசி. ஏன் இதெல்லாம் போட்டு குழப்பிக்கற. பின்விளைவுகளை பத்தி யோசிக்காம சுகா ஒரு தப்பு பண்ணானா, என்னைப் பத்தி யோசிச்சு இவங்களும் தப்புதான் பண்றாங்க. என்னை பத்தி மட்டுமே யோசிக்கறவளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா இருக்காது.

கண்டிப்பா அப்படி என் வாழ்க்கையில ஒருத்தி வருவா. அதுவரை இவங்க மனசை மாத்த முடியாது. சுகாவை வருத்தப்படுத்திட்டேதான் இருப்பாங்க." என்றவன், "அதே மாதிரி சுகா. நீயும் இதெல்லாம் யோசிக்காம உன் வாழ்க்கையை பாரு. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்." என்றவன் பெற்றோரைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஆனால் அந்த நொடியே மிருதுளா சுகமதியின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள். தன்னை ஒருமுறை கூட பார்த்திராதவள் தனக்காக பரிந்து பேசியதில், முழுமனதோடு தன் தோழியாக ஏற்றுக்கொண்டு அவளை கட்டிப்பிடித்து கண்ணீர் உகுத்தாள். மிருதுளா அவள் பெற்றோரை நினைத்து அழுவதாக எண்ணி ஆறுதல் கூறினாள்.

அவளோ, "இல்ல மிருதுளா. இது ஆனந்த கண்ணீர்." என்றவள் அதன்பிறகு அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். இருவருமாக சேர்ந்துதான் கல்யாண வேலைகளை முடித்தனர். இந்த இடைவெளியில் பாரியை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் நன்றாகவே அறிந்து கொண்டாள் மிருதுளா.

நடந்ததை அசை போட்டுக் கொண்டே மிருதுளாவின் நல்ல மனதிற்கு அவளுக்கு நல்ல வாழ்க்கை என்ற வேண்டுதலோடு திருஷ்டி பொட்டை வைத்து அலங்காரத்தை முடித்தாள் சுகமதி. இன்னும் சற்று நேரத்தில் அவளது வாழ்வே கேள்விக்குறியாக ஆகப்போவது தெரியாமல்.

அப்போது உள்ளே வந்த மீனாட்சி, "தயாராகிட்டியா மிருது." என்றபடியே தட்டில் போட்டு வந்த இட்லியை அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். அன்னையின் பாசத்தில் அவளுக்கு கண்களில் நீர் சுரக்க, "இங்கன இருந்த மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது சரியா.

என்னதான் அவங்க எல்லாரும் நல்லவிதமா இருந்தாலும் ஒரு சொல் சொல்ற மாதிரி நீ நடந்துக்கக் கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிச்சுதான் வார்த்தையை விடனும். புரியுதா." என்ற அறிவுரையோடு இட்லியை ஊட்டி முடித்தார்.

"கண்டிப்பா. உனக்கு எந்த கெட்டப்பேரும் வாங்கித்தர மாட்டேன்ம்மா. ஆனா அடிக்கடி வந்து பார்க்கனும்." என இவளும் கட்டளையிட்டு அவரைக் கட்டிக் கொள்ள, மீனாட்சிக்கும் கண்ணீர் வந்தது. பிறகு உடனே தன்னை மீட்டுக் கொண்டவர், "சரி சரி கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க. நான் அங்க இருக்கேன்." என மீனாட்சி வெளியே வந்தார்.

அப்போது சுந்தரமும் அங்கு வர, இன்னொரு புறம் இருந்து கங்காதரனும் வந்தார். அவரைக் கண்டதும், "சொல்லுங்க அண்ணா." என மீனாட்சி கேட்க, "உள்ள போய் பேசலாமா?" என்றவர் அவர் அனுமதிக்கு காத்திராமல் மணமகள் அறைக்குள் நுழைந்தார்.

அவரை அங்கு எதிர்பாராததால் பதட்டத்தில் மிருதுளா எழுந்து நிற்க, "நீ போய் இவங்க அக்காவையும், மாமாவையும் கூட்டிட்டு வாம்மா." என பிறையிடம் கூற, அவளும் மெல்லிய தலையசைப்போடு வெளியேற, கௌசிக்கு ஏதோ சரியில்லை என தோன்ற அவளும் வெளியேறி சென்று பிரபாவிடம் விசயத்தை கூறிவிட்டாள்.

"என்ன விசயம் சம்பந்தி? முகூர்த்த நேரத்துல தனியா என்ன பேசனும்?" என சுந்தரம் கேட்க, "இரு சுந்தரம். தனித்தனியா சொல்ல முடியாதுல்ல. அவங்களும் வந்திடட்டும்." என்றவர் அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டார்.

அவர்கள் உள்ளே வந்து நிற்க, பிரபா சென்று விசயத்தை கூறவும் கார்த்தியும் பதட்டமாகி மணமகள் அறை பக்கம் வந்தான். அதைக் கண்ட பாரியும், தகிலனை அழைத்துக் கொண்டு, அவர்கள் பின்னால் வர, இவர்கள் உள்ளே நுழையும்போது, "இந்த கல்யாணம் நடக்காது. நீங்க எல்லாரும் கிளம்பலாம்." என்ற கங்காதரனின் வார்த்தைகள்தான் காதில் விழுந்தது.

அவரைத் தவிர சுற்றி இருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய, திகைத்தாலும் கார்த்திக் அவர் முன்பு வந்து, "அப்பா என்ன விளையாடறீங்களா?" எனக் கேட்டான். "இவ்ளோ நாள் விளையாடிட்டுதான் இருந்தேன். ஆனா இப்ப நான் ரொம்ப சீரியஸாதான் சொல்றேன்." என்றார் அவர்.

"என்னம்மா மிருதுளா. நான் சொன்ன விசயம் காதுல விழலயா? உன் கல்யாணத்தன்னைக்கு நீ அவமானப்படனும்னு தான் இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு நாடகத்தை நடத்தினேன். இப்ப நாடகம் முடிஞ்சது நீ கிளம்பலாம்." என கங்காதரன் கூற, "அப்பா அவமானம் அவளுக்கு மட்டும் இல்ல. எனக்கும் ஏன் நம்ப குடும்பத்துக்கும்தான்." என்றான் கார்த்திக்.

"இதுல நாம அவமானப்பட எதுவுமே இல்லடா. இதோ இவளும், இவங்க குடும்பமும்தான்." என அவர் திமிராக கூற, "கீழ இருக்கறதுல முக்கால்வாசி பேர் நம்ப சொந்தமும், உங்க செல்வாக்கான நண்பர்களும்தான். கல்யாணம் நின்னு போனா அவமானம் இல்லையா." என்றான் கார்த்திக் தெளிவாக.

கங்காதரன், "இல்லையே. ஏன்னா இங்க உன்னோட கல்யாணம் நடக்கத்தான் போகுது. பொண்ணுதான் இவ இல்ல. நீ போய் மணமேடையில உட்காரு." என்றதும் அதிர்ந்து போய் கார்த்திக் பார்க்க, அவனுக்கும் இந்த நாடகத்தில் பங்கு இருக்குமோ என்ற எண்ணத்தில் மற்றவர்கள் அவனைப் பார்த்தனர்.

ஆனால், "நீ இவ மேல ஆசைப்பட்ட இல்லையா. அதான் இதே பேருல ஒரு பொண்ணை உனக்கு பார்த்திருக்கேன்." என்ற கங்காதரனின் கூற்றில் இது முழுக்க முழுக்க அவரின் கைங்கர்யம் மட்டுமே என புரிந்து கொண்டனர் அனைவரும். உடனே பாரி வேகமாக முன்னால் வந்தான்.

"என்னங்க. நிச்சயம் பண்ணி, பத்திரிக்கை அடிச்சு ஊரெல்லாம் குடுத்து, திடீர்னு கல்யாணம் நடக்காதுனு சொன்னா நாங்க சும்மா விட்டுடுவோம்னு நினைச்சீங்களா?" என சத்தம் போட, "நீ சொன்னதெல்லாம் நடந்துச்சு. எங்க தெரியுமா? உங்க சொந்தக்காரங்க முன்னாடி மட்டும். என்னோட சர்க்கிளுக்கு நான் குடுத்த பத்திரிக்கையே வேற." என ஒரு பத்திரிக்கை எடுத்து நீட்டினார்.

நல்ல ஆடம்பரமாக அடிக்கப்பட்டு இருந்த அந்த பத்திரிக்கையில் கார்த்திக்கும், அவர் கூறிய மிருதுளா என்ற பெண்ணும் சிரித்தபடி காட்சியளிக்க, மற்ற திருமண விவரங்கள் அவர்கள் இரு குடும்பத்தை பற்றி இருந்தது. "இப்ப நீ போய் கேட்டாலும் பெரிய வீட்டு கல்யாணத்துல பிரச்சனை பண்றீங்கன்னு தான் நினைப்பாங்க." என்றார் அவர் மிதப்பாக.

"ஆனா ஏன் சார் இப்படி பண்ணீங்க. இதனால கார்த்தி மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு யோசிக்க மாட்டீங்களா?" என ஒருவித ஆற்றாமையுடன் பிரபா கேட்டுவிட, "என்கிட்ட கேள்வி கேட்கற தகுதி உனக்கு இல்ல. இதுதான் கடைசியா இருக்கனும். இருந்தும் சொல்றேன் கேட்டுக்கோ.

நான் யாரு தெரியுமா? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இந்நேரம் மினிஸ்டர் ஆகி இருக்க வேண்டியவன். ஆனா ஆகாம போக ஒரே காரணம் இவ. இவ மட்டும்தான். அதான் இவளை பழிவாங்க இதெல்லாம் பண்ணேன்." என ஆவேசமாக கூற, அதிர்ச்சி இன்னும் அதிகமானது அனைவருக்கும்.

"அப்படி என்ன பண்ணா என் பொண்ணு? அப்படியே அவளை பழிவாங்கனும்னா கூட வேற வழியே கிடைக்கலயா உனக்கு?" என சுந்தரம் சத்தமாகவே கேட்க, "அவ உனக்கு தெரியாம நிறைய பண்றா. அதை தெரிஞ்சுக்காதது உன் தப்பு. ஆனா நான் அப்படி இல்ல. என் பையனுக்கு உன் பொண்ணு மேல ஒரு கண்ணு வைக்கும்போதே கவனிச்சு என் வேலைக்கு பயன்படுத்திக்கிட்டேன்." என்றார் கங்காதரன் கர்வமாக.

"அவ என்ன வேணும்னா பண்ணி இருக்கட்டும். ஆனா இப்ப என் கல்யாணம் அவளோடதான் நடக்கும்ப்பா. இதை உங்களால தடுக்க முடியாது." என கார்த்திக் சத்தம் போட, "நான் உனக்கு அப்பனு அப்பப்ப மறந்து போயிடறடா மகனே. இங்க இவ்ளோ களேபரம் நடக்குது. ஆனா உங்கம்மா எங்க காணோம்னு நீ யோசிக்கவே இல்லையா?" என்றார் நக்கலாக.

கார்த்திக் அதிர்ந்து பார்க்க, "நான் முதல்ல ஒரு அரசியல்வாதி, அதுக்கு அப்பறம் குடும்பம், சென்டிமென்ட் எல்லாம். இப்ப நீ போய் கல்யாணம் பண்ணீக்கலன்னா, உங்கம்மாவை நீ பார்த்த கடைசி நாள் இன்னைக்காதான் இருக்கும். அடம்பிடிக்கமா போய் உட்காரு." என்றவரை என்ன செய்வதென புரியாமல் பார்த்தான் கார்த்திக்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 28

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
ஆத்தி திடீர்னு பெரிய ட்விஸ்ட் வச்சுடீங்க writer, நான் நினைச்சது கார்த்திக், மிருது கல்யாணம் நடக்காது வேற ஏதாவது பிரச்சனால பாரி, மிருதுளாவுக்கு நடக்கும்னு நினைச்சேன், கடைசியில இதுல கங்காதரன் விளையாடிட்டாரு 😲😲😲😲😲😲😲😲
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
Thanks sister...
ஆத்தி திடீர்னு பெரிய ட்விஸ்ட் வச்சுடீங்க writer, நான் நினைச்சது கார்த்திக், மிருது கல்யாணம் நடக்காது வேற ஏதாவது பிரச்சனால பாரி, மிருதுளாவுக்கு நடக்கும்னு நினைச்சேன், கடைசியில இதுல கங்காதரன் விளையாடிட்டாரு 😲😲😲😲😲😲😲
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
261
ஓ..பழி வாங்க கல்யாணம் போல ஒரு நாடகமா?பயங்கிர வில்லனா இருக்காரே கார்த்திக் அப்பா🙄🙄 கதையின் ஆரம்பத்த்தில் நடந்த நிகழ்வுகள் தான் இந்த கங்காதரனின் பழிவாங்கும் நடவடிக்கையா?
கார்த்திக்கும் பாவம் தான்.அப்பாவே அவன் வாழ்க்கையில் இப்படி விளையாடி விட்டாரே என்பதே அவனுக்கு ஷாக் தான்.
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
ஓ..பழி வாங்க கல்யாணம் போல ஒரு நாடகமா?பயங்கிர வில்லனா இருக்காரே கார்த்திக் அப்பா🙄🙄 கதையின் ஆரம்பத்த்தில் நடந்த நிகழ்வுகள் தான் இந்த கங்காதரனின் பழிவாங்கும் நடவடிக்கையா?
கார்த்திக்கும் பாவம் தான்.அப்பாவே அவன் வாழ்க்கையில் இப்படி விளையாடி விட்டாரே என்பதே அவனுக்கு ஷாக் தான்.
Thanks sister..
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
அட இந்த கங்காதரன் அவன் வேலையை காட்டிட்டான்.மனைவியை வைச்சு மகனை பிளாக்மெயில் பண்றான்🙂🙂🤨
 
Top