• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 16

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அதுவரையில் அமைதியாக இருந்த கதிரவன், "என்ன விளையாடறீங்களா? கல்யாணம்னா சாதாரணமா போச்சா உங்களுக்கெல்லாம். அப்படி அவ என்ன பண்ணான்னு இப்ப நீங்க சொல்லியே ஆகனும்." என குரலை உயர்த்த, "சொல்லிடறேன். ஆனா கண்டிப்பா இங்க உன் மச்சினிக்கு கல்யாணம் நடக்காது." என்றார் கங்காதரன்.

"யோவ். பெரிய மனுஷனா இருக்கியேன்னு மரியாதை குடுத்து பேசுனா ரொம்ப ஓவராதான் போற. நீ என்னயா எங்க பொண்ணை வேண்டாம்னு சொல்றது. நான் சொல்றேன். எங்களுக்கு உன் வீட்டு சம்பந்தம் வேண்டாம்." என கோபமாக கூற, "கொஞ்சம் பொறுமையா பேசுங்க மாப்பிள்ளை." என்றார் மீனாட்சி.

"இவங்ககிட்ட என்ன அத்தை பொறுமை வேண்டி கிடக்கு. இங்கன பத்து பேரை வைச்சு கல்யாணமே பண்ணி வைச்சாலும், நாளைக்கு இந்தாளு நம்ம மிருதுளாவை அங்க வாழ விட்டுடுவானா? அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா." என கதிரவன் கேட்டது அனைவருக்குமே சரியெனவே பட்டது.

"எங்களுக்கும் இவளை மாதிரி ஒருத்தியை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்னு தலையெழுத்து இல்ல. நல்லா கேட்டுக்கடா கார்த்தி. இவளால கடந்த ஒரு வருஷமா எல்லா இடத்துலயும் எனக்கு நஷ்டம்தான். நல்லா போயிட்டுக்கிட்டு இருந்த மார்க்கெட் பிஸினஸ்ல கெட்டு போன கறி விக்கறதா தகவல் குடுத்து அதை இழுத்து மூட வைச்சா.

இந்த ஏரியாவுக்கே மணல் சப்ளை பண்ணீட்டு இருந்தேன். ஆனா இவ பர்மிஷன் இல்லாம மணல் கடத்தறதா ஆதாரத்தோட போட்டு குடுத்து, மணல் குவாரியை மூட வைச்சுட்டா. இதுல நேரடியா நான் சம்பந்தப்படலன்னு சட்டத்துக்கு தான் புரிய வைக்க முடிஞ்சது.

ஆனா கட்சி மேலிடம் இந்த புகாரால, என்னோட மினிஸ்டர் புரமோஷனை கேன்சல் பண்ணீட்டாங்க. எனக்கு தெரிஞ்சு இது. இன்னும் எனக்கு தெரியாம யார் யார் வாழ்க்கையில மண் அள்ளி போட்டாளோ. இவ நம்ப குடும்பத்துக்கு வேண்டாம்." என்ற கங்காதரனை அனைவரும் கேவலமாக பார்த்தனர் கார்த்தி உட்பட.

இப்போது மிருதுளாவுக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவு புரியவர, வேகமாக அவர் அருகில் வந்தவள், "இந்த மண்ணள்ளி போடறது என்னோட குணம் இல்ல. அது உங்களுக்கு தான் கைவந்த கலை. முன்னாடியே இதுக்கு பின்னாடி நீங்கதான் இருந்தீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்.

இந்த மதுர மண்ணு வளமா இருக்க முக்கியமான காரணமே அந்த வைகையாறுதான். இந்த ஊரு ஜனங்க அந்த மீனாட்சி ஆத்தா மாதிரிதான் இந்த நதியையும் பார்க்கறாங்க. ஆனா உன்னை மாதிரி சில பேரு பணத்துக்காக அளவுக்கு மீறி மணலை அள்ளறதால இன்னைக்கு தண்ணீர் வந்தா கூட வறட்சியும் கூடவே வருது.

'ஆறோடும் மண்ணில் என்றும் ஊரோடும்னு' சொல்ற மாதிரி, மணல் நிறைஞ்சு இருக்கற நதியில தான் நீரும் ஊறும். அதே மாதிரி பசி மட்டும் இல்லனா இங்கன இத்தனை ஜனங்க, கூலி வேலைக்கு போய் கஷ்டப்பட மாட்டாங்க. 'தூங்கா நகரம்னு' நம்ப ஊருக்கு இருக்கற பேரு கூற, விடிய விடிய இருக்கற ஹோட்டலை வைச்சுதான் வெளியூர்காரங்களுக்கு தெரியும்.

அப்படிப்பட்ட சோத்துல விஷம் வைக்கற வேலையை செஞ்சுட்டு நான் கேள்வி கேட்டதை வேற தப்புனு சொல்ற. நீ செஞ்சதெல்லாம் கேவலமான வேலை. அதையும் நான்தான் செஞ்சேனு ஒத்துக்காம வேற ஒருத்தன் பின்னாடி நின்னு செய்யற. அதை காட்டிக் குடுத்ததுக்கு என்னை பழிவாங்க இதை பிளான் பண்ணியா?

கொஞ்சமாவது அறிவும், பிள்ளைப்பாசமும் இருந்திருந்தா இப்படி ஒரு விசயத்தை பண்ணியிருப்பியா? உன் பையன் என் மேல ஆசைப்பட்டது கூட எனக்கு தெரியாது. இப்ப வரைக்கும் உன் பையனை பத்தின எந்த நினைப்பும் என் மனசுல கிடையாது. அதனால இந்த கல்யாணம் நிக்கறது என்னை பாதிக்காது.

நீ என்னை பழிவாங்கறதா நினைச்சு உன் பையனையும், நீ சொல்றீயே ஒரு பொண்ணு அவளையும் படுகுழியில தள்ளி இருக்க. அது போக போக உனக்கே புரியும். நீ எவ்ளோ சொத்தும், அதிகாரமும் வைச்சு இருந்தாலும் அதனால உன் குடும்பத்தை சந்தோஷமா வைச்சிருக்க முடியாது.

இப்பவே நாங்க கிளம்பிடறோம். நீ போய் சந்தோஷமா கல்யாணத்தை நடத்து." என்றவள், கார்த்திக்கிடம் வந்தாள். "உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்தது எனக்கு தெரியாது. இனிமேலும் அதை வைச்சிருக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல. இந்த கல்யாணத்தை பண்ணீக்கறதும், நிறுத்தறதும் உங்க விருப்பம்.

ஆனா எது நடந்தாலும், இனிமேலும் உங்கப்பாவை நம்பாதீங்க. அப்பறம் நடந்ததை மனசுல வைச்சுக்கிட்டு புதுசா உங்க வாழ்க்கையில வர்றவளை காயப்படுத்திடாதீங்க. அவளுக்கும் இது எதுவும் தெரியாமக் கூட நடந்திருக்கலாம்." என்றவள் "போகலாம்ப்பா." என்றபடியே வெளியே நடந்தாள்.

அதற்குள்ளாக முக்கிய உறவுகளுக்கு விசயம் மெல்ல பரவி, அவர்களும் மண்டபத்தை விட்டு கிளம்பி இருந்தனர். கார்த்திக்கோ முகம் இறுகிப் போய் நின்றான். ஆனால் கங்காதரனோ எதுவுமே நடவாதது போல, "அதான் அந்த கூட்டம் கிளம்பிடுச்சு இல்ல. போய் மணவறையில உட்காரு. நான் உங்க அம்மாவை அழைச்சிட்டு வரேன்." என்றார்.

"நில்லுங்கப்பா. இந்த கல்யாணம் நடக்காது." என கார்த்திக் கூற, "உங்க அம்மா மேல உனக்கு அவ்வளவு தான் பாசமா?" என்றார் கங்காதரன். "இல்லப்பா எங்க அம்மாவுக்கு என் மேல பாசம் அதிகம். ஏன்னா எனக்கு பிடிக்காம நடக்கற ஒன்னை தடுக்கறதுக்காக என் அம்மா உயிரை கூட குடுப்பாங்க.

இப்ப எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுனா நானே உங்க மேல கம்ப்ளைண்ட் குடுப்பேன். அப்பறம் இந்த எம்.எல்.ஏ பதவி கூட உங்களுக்கு நிலைக்காம போயிடும். நீங்க நினைச்சதுல ஒரு விஷயம் நடந்திருச்சு. இனி எந்த காலத்துலயும் மிருதுளா என்னை கல்யாணம் பண்ணீக்க சம்மதிக்க மாட்டா.

ஆனா இன்னொரு விசயம் கண்டிப்பா நடக்காது. மிருதுளா சொன்னமாதிரி இது எல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியாம கூட பண்ணியிருப்பீங்க. அதுக்காக நானே அந்த பொண்ணுக்கிட்ட மன்னிப்பே கேட்பேன். இல்ல தெரிஞ்சுதான் நடக்குதுனா அது உங்க எல்லாருக்குமான தண்டனை.

அப்படியே இப்ப வேற ஏதாவது சொல்லி என்னை மணமேடை வரை கூட்டிட்டு போனாலும் தாலி கட்டும்போது நான் உயிரோட இருக்க மாட்டேன். எப்படி கல்யாணம் நின்னா மிருதுளா குடும்பம் அவமானப்படும்னு நீங்க நினைச்சீங்களோ, அந்த அவமானம் இப்ப நம்ம குடும்பத்துக்கு நடக்கும்.

இதைவிட ஒரு முக்கியமான விசயம் சொல்லவா. ஏற்கனவே அவங்க அக்கா விசயத்துலயே அவங்க இதுமாதிரி ஒரு சூழலை சந்திச்சிருக்காங்க. ஆனா அன்னைக்கே கல்யாணம் நின்னதை பத்தி கவலைப்படாம மகளோட சந்தோஷம்தான் முக்கியம்னு நினைச்சவரு அந்த மனுஷன்.

அதனால நீங்க பண்ண தப்புக்கு நீங்கதான் தண்டனை அனுபவிக்கனும். சாயங்காலத்துக்குள்ள எங்கம்மா வீட்ல இருக்கனும். இல்லனா இன்னைக்கு நைட்டே நீங்க ஜெயில்ல இருக்கற மாதிரி பண்ணீடுவேன். நான் ஒன்னும் நீங்க நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல.

இரண்டு கார்ப்பரேட் ஆபிஸை வைச்சு நடத்தறவன். உங்களை விட அதிகமாவே எனக்கு சட்டமும் தெரியும், சட்டப்படி உங்களை டீல் பண்றதும் தெரியும். அதனால உங்க டிராமாவை முடிச்சுக்கலாம்னு போய் அவர்க்கிட்டயும் சொல்லிட்டு மண்டபத்தை காலி பண்ற வழியை பாருங்க." என்றவன் பிரபாவுடன் வெளியே சென்றான்.

அங்கிருந்து கீழே இருந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு மிருதுளாவை தேடிச் செல்ல, இவன் உள்ளே செல்லும் முன்பே அங்கு பேசுவது தெளிவாக கேட்டது. "என்னடி இன்னும் மணமேடையில மாப்பிள்ளையே வந்து உட்காரல. நேரம் இருக்கா என்ன?" என அவளின் தோழி கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சிடும்டி. அதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலை இருக்கு. இன்னைக்கு மட்டும் நான் நினைச்சதெல்லாம் நடந்தா கார்த்திக்கையும், இந்த மிருதுளா தேவியையும் யாராலயும் பிரிக்க முடியாது." என்ற மிருதுளா தேவியின் குரல் ஒலிக்க, பட்டென உள்ளே நுழைந்தான் கார்த்திக்.

"ஆனா உண்மை என்னனா இன்னைக்கு உங்க திட்டம் எதுவுமே நடக்கப்போறது இல்ல மிஸ். மிருதுளா தேவி." என்ற கார்த்திக்கின் குரலில் அவள் அதிர்ந்து திரும்ப, அவளது முகத்தைக் கண்டதும், அதைவிட அதிகமாக அதிர்ந்து நின்றான் கார்த்திக்.

மண்டபத்தில் இருந்த வெளியேறிய மிருதுளா கால் போன போக்கில் நடக்க, அவளை அழைத்துக் கொண்டே பின்னால் வந்தனர் மற்றவர்கள். அப்போது அருகில் ஒரு கோவில் இருக்க, ஏதோ எண்ணத்தில் உழன்றவளாக, உள்ளே சென்றவள் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

எதற்கும் கலங்காத தன் மகள் இப்படி இடிந்து போய் அமர்ந்திருப்பதை கண்ட மீனாட்சியின் மனம் பதைபதைத்தது. மிருதுளாவிற்கோ, தன் குடும்பத்தினரை நினைத்துதான் கவலையாக இருந்தது. என்னதான் பவித்ரா திருமணத்தில் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் மனம் உடைந்து போயிருந்தனர்.

இப்போது அதே விசயம் தனது திருமணத்திலும் நடந்ததைக் கண்டு அவர்கள் துடித்து போவார்களே, எப்படி சமாதானம் செய்யலாம் என்ற யோசனையிலே இருந்தாள். மீனாட்சியும் கோவிலின் ஒரு பகுதியில் அமர்ந்துவிட, அங்கு வந்த குலசேகரன், "சுந்தரம் எனக்கு ஒரு யோசனை தோணுது." என்றார்.

"என்ன சொல்லு சேகரா." என சுந்தரம் கேட்க, குலசேகரன், "என் பையனுக்கு உன் பொண்ணை குடுப்பியா?" என்றதும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தார் சுந்தரம். அவரது பார்வையைக் கண்டதும், இவரே தொடர்ந்து, "இப்படி ஒரு இக்கட்டான நேரத்தை பயன்படுத்தி என் பையனுக்கு கல்யாணம் பண்ண நினைக்கறேனு யோசிக்காத. முன்னாடியே கேட்டு இருப்பேன்.

நடுவுல என் பொண்ணு விசயத்துல நடந்த தப்பால ஏற்கனவே ஒரு நண்பனை இழந்துட்டேன். மறுபடி உன்கிட்ட என் பையனை பத்தி பேசி நீயும் பேசாம போயிடுவியோன்னு ஒரு தயக்கம். இப்ப மிருதுளா இருக்கற நிலைமைக்கு வேற பக்கம் கல்யாணம் நடந்தாலும் என்னைக்காது சொல்லி காமிச்சுட்டா. அதான் நீ தப்பா நினைச்சாலும் பரவால்லன்னு உன்கிட்ட கேட்கறேன்." என்றார்.

சுந்தரம் பதில் பேசாமல் அமைதியாக நிற்க, அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த பாரி, "அப்பா இப்ப போய் ஏன் இதைப் பத்தி பேசறீங்க? ஏற்கனவே மிருதுளா நொந்து போய் இருப்பா. இந்த நேரத்துல இன்னொரு அதிர்ச்சியை கண்டிப்பா அவ தாங்க முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பேசலாம்." என்றான்.

ஆனால் அவன் கூறியதை கேட்ட மீனாட்சியோ, "இல்ல தம்பி. கண்டிப்பா இன்னொரு முறை கல்யாண ஏற்பாடு பண்ண அவ சம்மதிக்கவே மாட்டா. அவங்க அக்கா கல்யாணத்துலயே அவளுக்கு கல்யாணம் மேல இருந்த மதிப்பு போயிடுச்சு. திரும்ப மாப்பிள்ளை நல்லவரா இருந்ததால மனசு மாறினா.

அதனால உங்களுக்கு சம்மதம்னா இன்னைக்கே கல்யாணத்தை முடிச்சிடலாம்." என உறுதியாக கூற, "மீனா நீ சும்மா இரு. இதுக்கு முதல்ல அரசி தங்கச்சி சம்மதிக்கனும். அதைவிட முக்கியம் என் பொண்ணோட சம்மதம்." என சுந்தரம் உறுதியாக கூறினார்.

"இல்லங்க. பவி மாதிரி இவ இல்ல. பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவா. மருந்து கசக்குதுனு குடுக்காம இருக்க முடியாது. அந்த கார்த்தி மேலயும், இவளுக்கு பெரிசா ஒட்டுதல் இல்ல. அவனை விட அதிகமாவே பாரி தம்பிக்கிட்ட பழகியிருக்கா. அதனால கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்." என்றார் விடாப்பிடியாக.

இதற்குள் விசயம் அரசி காதுக்கும் செல்லவும், அவரும் சம்மதம் கூறிவிட, பாரி வேண்டாமென மறுத்தும் கூட, அனைவருமாக சேர்ந்து மிருதுளாவின் முன் போய் நின்றனர். அவள் நிமிர்ந்து பார்க்க, "மிருதுளா முகத்தை கழுவிட்டு தயாராகி வா. இதே கோவில்ல உனக்கும், பாரிக்கும் இப்ப கல்யாணம்." என மீனாட்சி கூற, அவளோ அதிர்ச்சியாகி அனைவரையும் பார்த்தாள்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 30

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️எப்படியாவது மிருதுளாவை சம்மதிக்க வச்சு பாரிய கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க writer, முக்கியமா நாங்க கல்யாணத்தை பார்க்க waiting 😀😀😀😀😀😀😀😀
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
261
கார்திக்கின் முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்னு.குட் கார்த்திக்.
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️எப்படியாவது மிருதுளாவை சம்மதிக்க வச்சு பாரிய கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க writer, முக்கியமா நாங்க கல்யாணத்தை பார்க்க waiting 😀😀😀😀😀😀😀😀
Thanks sister..
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
அட லூசு கங்காதரா மணலை கடத்திட்டு யாரு வாய்ல மண்ணை போட்ருப்பாளோனு மிருதுவை சொல்றீயா நீ🤭🤭 கார்த்திக் பேசுனது சூப்பர்.ஆனா அவன் ஏன் மிருதுளாதேவியை பார்த்து ஷாக் ஆனான்.மிருதுக்கும் பாரிக்கும் டும்டும்🥰🥰
 
Top