• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 17

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த கோவில் மணக்கோலம் பூண்டது. மிருதுளாவின் அதிர்ச்சியை பற்றி யாரும் கவலைப்படவில்லை. பாரி மட்டும் அவளுடன் தனியே பேச வேண்டும் என்றவன், "என்னை மன்னிச்சிடு மிருது. உன்னை மாதிரியே நானும் இதே எதிர்பார்க்கல.

வீட்ல இருக்கறவங்களுக்காக இதை நாம பண்ணிக்கதான் வேணும். மத்தபடி வேற எதுவும் உன் விருப்பம் இல்லாம நடக்காது. என்னை நம்பினா, இந்த கல்யாணத்துக்கு சம்மதி." எனக் கூறவும், அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவளை தலையாட்ட வைத்தது.

அதன்பிறகு சடங்குகள் மளமளவென நடக்க, கிடைத்த நேரத்திற்குள்ளாகவே ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் தகிலனும், கதிரவனும். தகிலனுக்கும், சுகமதிக்கும் தங்களால் பாரியின் வாழ்வு கெட்டுவிட்டதோ என்ற குற்றவுணர்ச்சியை போக்கிக் கொள்ளும் வாய்ப்பாக இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக ஏற்பாடுகளை செய்தனர்.

கதிரவனுக்கு நல்லவேளையாக மிருதுளாவின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டதை எண்ணியும், தன் நண்பன் பாரியே தனக்கு சகலையாக வருவதை எண்ணியும் ஆனந்தமாக இருந்தான். அதற்குள் முக்கிய உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் செய்தி சென்று சேர்ந்திருந்தது.

அருகில் இருந்தவர்கள் பெரும்பாலும் வந்துவிட, பூவழகியும் அவள் குடும்பத்தினரும் கூட வந்துவிட்டனர். அப்போதுதான் பாரியின் எண்ணுக்கு சுந்தரி அழைத்து மண்டப விவரம் கேட்க, அவனோ இந்த கோவிலுக்கு வருமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விசயம் கேள்விப்பட்டு வந்த குணசீலன் மகிழ்வுடன் நண்பனை அணைத்துக் கொண்டான். இருந்தும் அவன் முகம் குழப்பத்தில் இருப்பதை அறிந்தவன், "என்னாச்சுடா?" என அக்கறையாக விசாரிக்க, பாரி, "இல்லடா. இது சரியா தப்பானு தெரியல. ஒரு பொண்ணை நிர்பந்திக்க வைச்சு கல்யாணம் பண்ற மாதிரி இருக்கு." என்றான் ஆதங்கமாக.

"நீ ஏன்டா அப்படி நினைக்கற? உனக்கு மிருதுளாவையும், அவங்களுக்கு உன்னையும் நல்லா தெரியும். இவ்ளோ நாள் ஃப்ரண்ட்ஸா இருந்தீங்க. இப்ப அடுத்த கட்டத்துக்கு போறதா நினைச்சுக்கோ. அந்த கல்யாணம் நடந்து இருந்தாலும் மிருதுளாவுக்கு இதே நிலைமைதானே. எல்லாம் சரியாகிடும்." என்றான் குணசீலன்.

மேலும் சில விசயங்களை பேசி புரியவைக்க, சற்றே குழப்பம் தீர்ந்தது பாரிக்கு. அதன்பிறகு முழுமனதோடு சென்று மணவறையில் அமர, சற்று நேரத்தில் மிருதுளாவும் அழைத்து வரப்பட்டாள். இருவரும் சடங்குகளை செய்யும்போதுதான் சுந்தரி வந்து சேர்ந்தாள்.

நடப்பது புரியாமல் அவள் திகைத்து நிற்க, அவள் கணவன் செல்வனுக்கும் அதே நிலைதான். இருந்தும் தான் நினைத்தது போல பாரிக்கும், மிருதுளாவும் வாழ்வில் இணையும் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிய, மற்ற கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு சந்தோஷமாக திருமண நிகழ்வுகளை கவனித்தாள்.

பஞ்சபூதங்களை சாட்சியாக வைத்து, ஐயர் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, கட்டும் முன்பும் கூட, கண்ணசைவால் மிருதுளாவின் சம்மதத்தை கேட்டவன், அவள் தலை அசைந்ததும் தாலியைக் கட்டினான். ஏனோ மிருதுளாவுக்கும் கூட அந்த நொடியில் மற்ற குழப்பங்கள் அகன்று ஒருவித மோன நிலையில் தான் மனது இருந்தது.

திருமணத்திற்கு பிறகான சடங்குகள் நடக்க, திடீரென ஏற்பாடு செய்ததால் வந்தவர்களுக்கு அருகில் இருந்த உணவகத்தில் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மணமக்களும் கூட அங்கேயே உணவு உண்டபின்பே வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மருமகளாக பாரியின் வீட்டில் விளக்கேற்றி தனது கடமையை நிறைவேற்றியவள், பால் பழம் உண்ட பின்பு தாய் வீட்டுக்கு சென்றாள். அது வரையிலும் ஒரு வார்த்தை கூட மிருதுளா வாய்திறந்து பேசவில்லை. அது புரிந்தும் யாரும் அவளிடம் பேச முற்படவும் இல்லை.

அங்கும் சம்பிரதாயங்கள் முடிந்து கிளம்பும்போது, மீனாட்சிக்கு அழுகை வர, மிருதுளாவோ, "அதான் நீ நினைச்ச மாதிரி எல்லாம் நடந்திடுச்சு இல்லம்மா. அப்பறம் ஏன் அழற. நீ கவலைப்படற அளவு நான் என் வாழ்க்கையை சிக்கலாக்கிக்க மாட்டேன்." என மொழிந்தவள் இறுக்கத்துடனே வெளியே வந்தாள்.

வெளியில் சுந்தரமோ பாரியிடம், "கொஞ்சம் துடுக்குத்தனமா இருப்பாளே தவிர தொந்தரவா இருக்க மாட்டா மாப்பிள்ளை. நடந்த பிரச்சனையில ஏதாவது வார்த்தை விட்டுட்டா பெரிசா எடுத்துக்காதீங்க." எனக் கூறிக் கொண்டிருக்க, அவர் அருகில் வந்தவளால் தாயிடம் பேசியது போல ஏனோ தந்தையிடம் வேகமாக பேச முடியவில்லை

அதனால் சின்னதாக ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்ப, துணைக்கு பவித்ராவும் உடன் வருவதாக கிளம்பினாள். அவளிடம், "தேவை இல்லக்கா. நான் பார்த்துக்கறேன். நாளைக்கு விருந்துக்கு அழைக்க நீயும் அத்தானும் வாங்க போதும்." என்றவள், பாரியிடம், "போகலாம்ங்க." என்றபடியே கிளம்பி விட்டாள்.

அங்கு இவர்கள் சென்றதும், சற்று நேரம் ஓய்வெடுக்குமாறு அறைக்கு மிருதுளாவை அனுப்பி வைக்க, அதற்குள் நடந்த அனைத்தையும் கேட்டு அறிந்திருந்த சுந்தரியும் அவள் அறைக்கு வந்தாள். "மிருது. தூங்க போறீயா?" என அவள் கேட்க, "இல்லக்கா. வாங்க." என அழைத்தாள் மிருதுளா.

"இப்ப நான் எது சொன்னாலும் உனக்கு அட்வைஸ் பண்ற மாதிரிதான் தெரியும். ஆனாலும் சிலதை நான் சொல்லிதான் ஆகனும். நடந்தது எல்லாமே ஒருவகையில நல்லதுனு நினைச்சுக்கோ. பாரியை பத்தி உனக்கு நல்லா தெரியும். நடந்ததை ஏத்துக்க உனக்கு கொஞ்ச நாள் வேணும்தான்.

ஆனா அதற்கு நடுவுல பாரியை மட்டும் கஷ்டப்படுத்திடாத. ஏன்னா கோபத்துல பேசற வார்த்தைகள் நமக்குதான் நியாபகம் இருக்காதே தவிர, கேட்கறவங்களுக்கு நல்லாவே நியாபகம் இருக்கும். அதோட பாரிக்கும் இது எதிர்பாராத ஒன்னுதான். என்ன முடிவு பண்ணாலும் நீங்க ரெண்டு பேர் சேர்ந்து எடுங்க.

உங்க வாழ்க்கை இன்னோருத்தர் வாய்க்கு அவலா போய்டக் கூடாது. இதை மட்டும் நியாபகம் வைச்சுக்கோ. மத்தபடி பாரியும், நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அதுக்காக நான் காத்திட்டு இருப்பேன். சரி நான் வரேன்." என கிளம்பிவிட, மிருதுளாவோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அதேபோல பாரியிடமும் அதையே கூறிய சுந்தரி, கூடிய விரைவில் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறும் கூறிச் சென்றாள். அவனோ, "முதல்ல சாதாரணமா பேசட்டும். அப்பறமா விருந்து பத்தி யோசிக்கலாம்." என கிண்டலாக கூறினாலும், மனம் இனி வரப்போகும் வாழ்க்கையை பற்றி யோசித்தது.

இவர்கள் இப்படி இருக்க, அங்கு கார்த்திக்கோ அங்கு அவளை எதிர்பாராமல் திகைத்து போய் நின்றிருந்தான். அவள் வேறு யாருமில்லை. அவனது கல்லூரித்தோழி. கல்லூரியில் அவள் பெயர் தேவி என்றே பிரபலம். அந்த நாட்களில் நல்லதொரு தோழமை அவர்களுக்கிடையே இருந்தது.

ஆனால் கல்லூரி நிறைவு நாளில் தேவி வந்து கார்த்திக்கை காதலிப்பதாக கூறவே, அன்றோடு அந்த நட்பு முறிந்து போனது. அதுதான் அவளை அவன் கடைசியாக பார்த்தது. இப்போதும் நினைவு அந்த நாளில்தான் போய் நின்றது அவனுக்கு.

நான்கு வருடம் படித்து முடித்து பிரிவு உபசார விழாவில் மனம் சற்றே நெகிழ்ந்து இருந்தனர் அனைவரும். அப்போது தேவி வந்து, "கார்த்திக் ஒரு முக்கியமான விசயம் பேசனும் வா." என அவனை தனது காருக்கு அழைத்து சென்றாள்.

"இப்ப எங்க போறோம் தேவி. இன்னும் நிறைய பேரை பார்க்கனும். ஸ்லாம் புக் வாங்கனும்." என கார்த்திக் கூற, "ஒரு ஹாப் அன் ஹவர்ல வந்திடலாம். எனக்காக ப்ளீஸ்" என முகத்தை சுருக்கி கூறவும், இவனும் சரியென்று அவளுடன் சென்றான்.

அவள் கூட்டிச் சென்றதோ அவர்களின் கெஸ்ட் அவுஸ்க்கு. இவன் கதவை திறந்ததும் வரவேற்பறை முழுக்க பலவித வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, நடுநாயகமாக அவளது கையாலேயே வரையப்பட்ட அவனது ஓவியமும் இருந்தது.

அதற்கு கீழே 'ஐ லவ் யூ கார்த்திக்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்க, அதைக் கண்டு திகைத்து நின்றான். அவன் முன்னே சென்றவள், "எப்படி என்னோட சர்ப்ரைஸ்." எனக் கேட்டபடியே அவனது கைகளை பற்றிக் கொண்டு ஆவலாக கேட்க, கார்த்திக்கிற்கு என்ன செய்வதென தெரியவில்லை.

மெதுவாக அவளது கைகளை எடுத்துவிட்டவன், "நான் வெளில இருக்கேன். வா." என்று மட்டும் கூறிவிட்டு தோட்டத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துவிட்டான். தேவிக்கு அதுவே ஏதோ போல இருக்க, குழப்பத்துடன் அவன் எதிரில் நின்றவள், "என்னாச்சு கார்த்திக்?" எனக் கேட்டாள்.

"உட்காரு தேவி." என்றவன், "முதல்ல என்னை மன்னிச்சிடு. ஏன்னா நான் உன்கிட்ட ஒரு நல்ல ஃப்ரண்டாதான் பழகிட்டு இருக்கேன். எந்த தருணத்துல உன் மனசை கலைக்கற மாதிரி நான் பிகேவ் பண்ணேனு எனக்கு தெரியல." எனும்போதே, "உன்னோட அந்த கேரக்டர் தான்டா உன்கிட்ட எனக்கு பிடிச்சதே." என்றாள் தேவி.

"இல்ல நான் சொல்லி முடிச்சிடறேன். எனக்கு உன்மேல காதல் இல்ல. இதுவரைக்கும் அதுமாதிரி உன்னை நினைச்சு கூட பார்த்ததும் இல்ல. ஏன் உனக்கு வந்திருக்கறதே ஒரு ஈர்ப்புதான். எனக்கு அடுத்தடுத்து நிறைய கமிட்மெண்ட் இருக்கு. இப்ப இதைப்பத்தி எல்லாம் என்னால யோசிக்கவே முடியாது.

சோ நீயும் இதை இன்னையோட மறந்துட்டு போய் உன் கேரியர்ல கவனம் செலுத்து. அப்பறம் இனிமே நாம மீட் பண்ணிக்கவோ பேசவோ வேண்டாம்." என தெளிவாக கார்த்திக் உரைக்க, "இல்ல கார்த்திக். முடியாது. நீ பொய் சொல்ற. உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நீ மறைக்காத." என்றாள் அவள்.

"லுக் தேவி. பிடிக்கற எல்லாரையும் காதலிக்க முடியாது. உனக்கும் என்னை பிடிச்சிருக்கு அவ்ளோதான். ஆனா அது காதல் இல்ல." என கார்த்திக் கூற, தேவி உடனே, "நான் என்ன பண்ணா இது காதல்னு நம்புவ சொல்லு." எனும்போதே கண்களில் நீர் கட்டிவிட்டது அவளுக்கு.

அவன் பதில் கூறாமல் நிற்க, தேவியோ, "ஒருவேளை இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு இதே காதல் இருந்தா ஒத்துப்பியா?" எனக் கேட்டு வைக்க, "அஞ்சு வருஷமா, என்னை பார்க்காம பேசாம இருந்தா அஞ்சு மாசம் கூட நான் உன் நியாபகத்துல இருக்க மாட்டேன்." என்றான் கார்த்திக்.

"ஒருவேளை அப்படி இருந்துட்டா, அப்ப என்னை கல்யாணம் பண்ணீப்பியா கார்த்தி." என தேவி கேட்க, "அதை அப்போ பார்க்கலாம்." என்றான் இவன். "இல்ல எனக்கு ஒரு பதில் வேணும். நீ சொல்றமாதிரி இது அஃபெக்ஷன்னா இந்த எண்ணம் மாறிடும். அப்படி மாறலனா நீ என்னை கல்யாணம் பண்ணுக்கனும்." என்றாள் தெளிவாக.

"சரி ஓகே. அப்படி நீ வந்தா நான் கண்டிப்பா உன் காதலை பத்தி யோசிக்கறேன்." என்றுமட்டும் உரைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவன்தான் அதன்பிறகு அவளை மறந்தே போனான். ஆனால் அவளோ இன்று அவன் கண்முன்னே நிற்கிறாள் அதே தேவியாக.

அவன் முன்னே வந்து நின்றவள், "என்ன கார்த்தி. அப்படி பார்க்கற. நீ காலேஜ்ல பார்த்த அதே தேவிதான். நீ சொன்ன மாதிரியே என் காதலை மறக்காம இத்தனை வருஷம் கழிச்சு உன் முன்னாடி வந்துட்டேன் பார்த்தியா!" என தலைசாய்த்து கேட்க, கார்த்திக்கோ தலை சுற்றிபோய் நின்று கொண்டிருந்தான்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 30

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
சூப்பர் சூப்பர் டபுள் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️எப்படியோ பாரி ♥️மிருதுளா கல்யாணத்தை ரெம்ப சிம்பிளா முடுச்சுடீங்க அப்படியே ரெண்டுபேரும் மனசும் சேர்ந்தா இன்னும் இன்னும் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍

அப்போ grand marriage of KARTHICK ♥️MIRUTHULA DEVI அடுத்து நடக்குமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
263
அஞ்சு வருஷம் கழிச்சும் அதே காதலலோட வந்தது எல்லாம் சரி தான்.ஆனா கார்த்திக் அப்பா செய்த கேவலமான செயலுக்கு இந்த தேவியும் உடந்தை என்றால் அது தப்பாச்சே.ஒரு பெண்ணை மணவரை கொண்டு வந்து அவமான படுத்தி அனுப்பியதுக்கு துணையா?? அப்ப கார்த்திக் இப்போ மட்டும் எப்படி ஏத்துப்பான்??
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
சூப்பர் சூப்பர் டபுள் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️எப்படியோ பாரி ♥️மிருதுளா கல்யாணத்தை ரெம்ப சிம்பிளா முடுச்சுடீங்க அப்படியே ரெண்டுபேரும் மனசும் சேர்ந்தா இன்னும் இன்னும் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍

அப்போ grand marriage of KARTHICK ♥️MIRUTHULA DEVI அடுத்து நடக்குமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Nadathidam sis, thanks sister
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அஞ்சு வருஷம் கழிச்சும் அதே காதலலோட வந்தது எல்லாம் சரி தான்.ஆனா கார்த்திக் அப்பா செய்த கேவலமான செயலுக்கு இந்த தேவியும் உடந்தை என்றால் அது தப்பாச்சே.ஒரு பெண்ணை மணவரை கொண்டு வந்து அவமான படுத்தி அனுப்பியதுக்கு துணையா?? அப்ப கார்த்திக் இப்போ மட்டும் எப்படி ஏத்துப்பான்??
Next epi la terium sis. thank you sister
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
காத்திருந்த தேவி காதல் ஓகேதான்.ஆனா கஙாகாதரனுக்கு சப்போர்ட் செய்திருந்தா கார்த்திக் ஏத்துக்க மாட்டான்.சுந்தரி சூப்பர்.மிருது பரிதி வாழ்க்கை நல்லபடியா அமையும்
 
Top