• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையை நீ என் தாரகையே! - அத்தியாயம் 8

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அதிகாலை வெய்யோன் தன் தீக்கதிர்களால் உலகினோருக்கு தனது வரவை அறிவித்து கொண்டிருக்க, சுற்றுப்புறத்தை ரசித்தபடியே தனது இருசக்கர வாகனத்தில் வந்து பாரியின் கடையருகே நிறுத்தினாள் மிருதுளா. அவள் பெரிய வண்டி ஓட்டுவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே அவளருகில் வந்தான் பாரி.

"வாங்க வாங்க." என சிரித்த முகமாக வரவேற்க, "பரவால்லயே கஸ்டமரை வாசல் வரைக்கும் வந்து வரவேற்கறீங்க." என்றாள் மிருதுளா. "இன்னைக்கு தான் முதல் நாள் வர்றீங்க. வரவேற்பு இல்லனு வேற கடைக்கு போயிடக்கூடாதுல்ல." என பாரி கூற, "அதெல்லாம் போக மாட்டோம். வாங்க." என்றவள் அவனுக்கு முன்பாக கடைக்குள் சென்றாள்.

அவள் நினைத்ததை விட கடை சற்று விசாலமாகவும், பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக அடுக்கப்பட்டு நேர்த்தியாகவும் இருந்தது. பாரி பில் போடும் இடத்தில் அமர்ந்து கொள்ள, மிருதுளா ஆர்வமாக அனைத்தையும் பார்த்தபடி கடையை ஒருமுறை சுற்றி வந்தாள்.

அவள் எதுவும் எடுக்காமல் வருவதை கண்டவன், "என்னாச்சுங்க. எதுவும் எடுக்காம வர்றீங்க? காய்கறி எல்லாம் ஃப்ரஷாதானே இருக்கு." என பதற, "அதெல்லாம் நல்லாதாங்க இருக்கு. என்னென்ன இருக்குனு பார்க்க வேண்டாமா? அதான். நான் எடுத்துட்டு வரேன். நீங்க உட்காருங்க." என மறுபடி உள்ளே சென்றாள்.

சற்று நேரத்தில் சில காய்களை எடுத்து வரவும், "என்னங்க நிறைய காய் இருக்கு. நீங்க கொஞ்சமா எடுத்துட்டு வர்றீங்க. மத்த காயெல்லாம் வேண்டாமா?" எனக் கேட்டபடியே பில் போட்டான் பாரி. "நாங்க எப்பவும் காய்கறி ஸ்டாக் வைக்கறது இல்லங்க. இன்னைக்கு என்ன சமைக்கனும்னு முதல்நாளே முடிவு பண்ணி வைச்சிடுவோம்.

காலையில வாங்கிட்டு போய்தான் சமையலே தொடங்குவோம். அதனால எல்லா காய்கறியும் தேவைப்படாது." என்றவள் பொருளுக்குரிய பணத்தை கொடுத்தாள். "நீங்க நிஜமாலும் கிரேட்தான். ஹோட்டல் சாப்பாடுன்னு சாதாரணமா சொல்வாங்க. அதுலயே அவ்வளவு கவனம் எடுத்துக்கறீங்க." என்றான் பாரி.

"ஏன்னா நாங்களும் அதுதானே சாப்பிடறோம்." என்றவள், "சரிங்க. நான் மார்க்கெட் வரை போயிட்டு வந்து போகும்போது இதை எடுத்துக்கறேன்." என்றபடியே கிளம்பினாள். அவள் திரும்பி வரும்போது பாரி கடையில் இல்லை. தகிலன்தான் இருக்க, "இந்த பையை எடுத்துக்கறேன் அண்ணா." என்க, "யாருங்க நீங்க?" என்றான் அவன்.

சற்று முன்பு, தகிலன் வந்த கொஞ்ச நேரத்திலேயே பாரியின் வீட்டில் இருந்து உடனே வருமாறு அழைப்பு வர, அவனும் தகிலனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றதில் மிருதுளாவை பற்றி மறந்தே போனான். பாரி எதுவும் கூறி செல்லாததால் தகிலன் அப்படி கேட்க, "நான் முதல்ல வரும்போது கடையில நீங்க இல்லையே. நீங்க யாரு?" என்றாள் மிருதுளா.

"நான் யாரா? நான் இந்தக் கடையோட ஓனர்." என தகிலன் கூற, "அப்ப அவரு. அதான் பாரி..." என இழுத்தாள் மிருதுளா. "அவனும் ஓனர்தான். நீங்க காலையில வந்திருந்தீங்களா? எனக்கு தெரியாது. நீங்க எடுத்துட்டு போங்க." என தகிலன் கூற, "பரவால்லண்ணா இந்தாங்க பில். செக் பண்ணீட்டே குடுங்க." என்றாள் மிருதுளா.

"என்னம்மா வார்த்தைக்கு வார்த்தை அண்ணான்னு சொல்ற. நம்பிக்கை இல்லாம போகுமா. நீ எடுத்துட்டு போ." என அவளை அனுப்பிவைக்க, அப்போதுதான் மிருதுளாவின் நினைவு வந்து பாரியும் அழைப்பு விடுத்தான். அவனிடம் விவரம் கூறய தகிலன், "திடீர்னு வர சொன்னாங்க. ஏதாவது பிரச்சனையா மச்சி." எனக் கேட்டான்.

"அதையேன்டா கேட்கற. ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் வந்து சொல்றேன்." என அழைப்பை துண்டித்தவன் சற்று முன்பு நடந்ததை நினைத்தான். "என்னாச்சும்மா? எதுக்கு அவசரமா வர சொன்ன?" எனக் கேட்டபடியே பாரி வீட்டுக்குள் வர, "நீ என்னடா இன்னைக்கும் வேலைன்னு போயிட்ட. போய் வெரசா கிளம்பு போலாம்." என்றார் எழிலரசி.

"கிளம்பு கிளம்புன்னா எங்கன்னு சொல்லுங்க?" என பாரி அதிலேயே நிற்க, "உனக்கு பொண்ணு பார்க்க போறோம்டா. நேத்தே உங்கப்பா சொல்றேனு சொன்னாரே?" என்ற எழிலரசி, அங்கு வந்த குலசேகரனிடம், "என்னங்க. இவன்கிட்ட நீங்க சொல்லலயா?" எனக் கேட்டார்.

"இல்ல அரசி. வேலையில மறந்துட்டேன். ரொம்ப தொலைவா போறோம்? இப்ப சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதானே?" என்ற குலசேகரன் அவனிடம் விவரம் சொன்னார். உடனே எழிலரசி, "இப்ப தெரிஞ்சிடுச்சு இல்ல. போய் கிளம்பு." என்றபடி உள்ளே செல்ல, "ஏன்ப்பா இது சரியா வருமா?" எனக் கேட்டான் பாரி.

"எனக்கும் எதுவும் தெரியலப்பா. உங்க அம்மா முடிவு இது. ஒருமுறை கேட்டுதான் பார்ப்போமே." என அவர் கூறிவிட்டு உள்ளே செல்ல, அப்போதுதான் தகிலன் அழைப்பு விடுத்தான். பிறகு பாரியும் சென்றுதான் பார்ப்போமே. ஒத்துவந்தால் பார்க்கலாம். இல்லையென்றால் விட்டுவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தான்.

ஆனால் அங்கோ அவர்கள் நினைத்திடாத பலவும்தான் அன்று நடந்தது. மூவராக செல்லக்கூடாது என அவனது பாட்டியையும், பக்கத்து வீட்டு பெண் ஒருவரையும் கூட்டிக் கொண்டு ஐவராக எழிலரசியின் அண்ணன் அழகரின் வீட்டுக்கு சென்ற வரை தான் எல்லாம் சரியாக நடந்தது.

உள்ளே சென்றதும், இவர்களை வாவென கடமைக்கு அழைத்தவர்களின் முகம் சற்று இறுகியே இருந்தது பாரியின் கண்ணிலும் பட்டது. பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின்னர், "சொல்லுங்க மச்சான். இம்புட்டு தூரம் வந்துருக்கீங்க. உங்க தோட்ட வேலையா எதுவும் வந்தீங்களா?" என அழகர் நேரடியாக கேட்க, குலசேகரனுக்கு சுருக்கென்றது.

எழிலரசிக்கு அப்படி எதுவும் இல்லை போல. "என்ன அண்ணே. தோட்ட வேலைக்கு எதுக்கு குடும்பத்தோட வரப் போறோம். வேற ஒரு நல்ல விசயம் பேசலாம்னு வந்தோம்." என அவர் கூற, "ஓ என்ன விசயம்? சொல்லும்மா." என்றார் அழகர்.

"வேற என்னண்ணே எல்லாம் உன் மருமகன் கல்யாண விசயம்தான்." என எழிலரசி கூற, "ஓ பாரிக்கு கல்யாணமா? நல்ல விசயம் மதனி. பொண்ணு எந்த ஊரு?" என அழகரின் மனைவி கேட்டார். அப்போதே பாரிக்கு புரிந்துவிட்டது அவர்களிடம் இருந்து என்ன பதில் வரும் என.

உடனே தனது அன்னையிடம் சைகையில் மேற்கொண்டு பேச வேண்டாம் எனக் கூற, அவரோ, "என்ன மதனி பேசறீங்க? நம்ப பூவழகி இருக்கும்போது நாங்க ஏன் வெளில பார்க்கப் போறோம்? பாரிக்கு பூவை கேட்டுதான் நாங்க இங்க வந்தோமே." என்றவர், "என்னங்க சொல்லுங்க." என கணவரையும் துணைக்கு அழைத்தார்.

அவர்கள் யாரும் பேசும் முன்பே அங்கு பூவழகியின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. "அடேங்கப்பா. என் மேல அத்தைக்கு எம்புட்டு பாசம். விட்டா இப்பவே மருமகளாக்கி வீட்டுக்கு கூட்டிட்டே போயிடுவாங்க போல." என நக்கலாக அவள் கேட்க, "இல்லையா பின்ன? நீ சரின்னு சொன்னா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வைச்சிடலாம்." என்றார் எழிலரசி.

"ஆனா நான்தான் சரின்னு சொல்லப் போறது இல்லையே. அதனால வந்த வழியை பார்த்து கிளம்புங்க." என பூவழகி கூற, "பொறுமையா பேசுமா." என்றார் குலசேகரன். "என்ன மாமா? எனக்கு எதுவுமே தெரியாதுனு நினைச்சுட்டீங்களா? உங்க பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுல யாரும் பொண்ணு குடுக்கல.

சரி வசதி இல்லாதவங்கதானே. நாம கேட்டு இல்லனா சொல்லப் போறாங்கன்னு இங்க கிளம்பி வந்தீங்களோ?" என அவரிடம் பூவழகி எகிற, "பூவு எதுக்கு நீ இப்படி எடுத்தெறிஞ்சு பேசற?" எனக் கேட்டான் பாரி.

"ஓ மாமாவும் இங்கனத்தான் இருக்கீங்களா? நான் கவனிக்கல. உங்க தங்கச்சியை நீங்க சுதந்திரம் கொடுத்து வளர்த்த மாதிரி எங்கப்பா என்னைய வளர்க்கல. அவ ஓடிப்போன அன்னைக்கே அவளை தேடிக் கண்டுபிடிச்சு வெட்டிப் போடலாம்னு எங்கப்பா சொன்னாரு.

அன்னைக்கு அவர் சொன்னதை நீங்க கேட்டு இருந்தா இன்னைக்கு நானும் நீங்க சொன்னதை கேட்டு இருப்பேன்." என அவள் கூறவும், "ஏய். யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? என் தங்கச்சி மேல கைவைக்க உங்கப்பா இல்ல என்னை பெத்த அப்பாவுக்கே உரிமை இல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என் தங்கச்சியை வெட்டறதை பத்தி என்கிட்டயே பேசுவ." என விரலை நீட்டி எச்சரித்தான் பாரி.

"ஆமா அப்படித்தான் பேசுவேன். பெத்தவங்க, வளர்த்தவங்க, மானம், மரியாதை பத்தியெல்லாம் நினைச்சுக் கூட பார்க்காம அவ ஓடிப்போவா. நீங்களும் அவளுக்கு சப்போர்ட் வேற பண்ணுவீங்க. யாருக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நாள்ல வீட்டுக்கே கூட கூட்டிட்டு வருவீங்க. அது உங்க இஷ்டம்.

ஆனா இந்த மாதிரி மானங்கெட்ட குடும்பத்துல வந்து நான் வாக்கப்படனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. நீங்க அவளை வளர்த்த மாதிரி எங்க வீட்ல என்னை வளர்க்கல. காசு பணத்துல உங்களை விட நாங்க குறைச்சலா இருக்கலாம். ஆனா மானம் மருவாதைல நாங்க உசத்திதான். நீங்க கிளம்பலாம்." என கோபமாகக் கூறினாள் பூவழகி.

அதைவிட கோபமாக பாரி அவளைப் பார்க்க, அதற்குள் நண்பன் வந்திருப்பதை அறிந்து பக்கத்து வீட்டில் இருந்த குணசீலனும் உள்ளே வந்திருந்தான். "என்ன பூவு இது வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படியா பேசறது. உன் சத்தம் தெரு வரைக்கும் கேட்குது." என கடிந்து கொண்டான் அவன்.

"கேட்கட்டும் நல்லா. அப்பவாது இவங்களுக்கு ரோஷம் வருதான்னு பார்க்கலாம்." என பூவழகி கத்த, பாரியோ, "ஏய் வாயை மூடு. என்ன பெரிய மானம் மரியாதை. முதல்ல மனுஷங்களுக்கு மரியாதை குடுக்க பழகு. அதுல உன்னை விட என் தங்கச்சி ஆயிரம் மடங்கு மேல. இதுக்கு மேல பேசின அவ்ளோதான்." என எகிறினான் பாரி.

உடனே குலசேகரன் அவனை பற்றியபடி,
"பிரச்சனை வேண்டாம்ப்பா. நாம போயிடலாம்." என சமாதானம் செய்து வெளியில் அழைத்து வந்துவிட்டார். உள்ளே எழிலரசி, "அண்ணன்னு நம்பி வீட்டுக்கு வந்ததுக்கு நல்ல மரியாதை குடுத்துட்டண்ணே. அப்பவே என் வீட்டுக்காரர் சொன்னாரு. முதல்ல கேளு அப்பறம் போலாம்னு.

நான் ஒரு மடச்சி. எங்க அண்ணன்கிட்டதானே கேட்க போறேனு நினைச்சேன். உனக்கு குடுக்க இஷ்டம் இல்லனா நேரடியாவே சொல்லியிருக்கலாம். அதை விட்டுட்டு இப்படி உன் மகளை பேசவிட்டு என் குடும்பத்தையே அவமானப்படுத்திட்டீயே. இனிமே உன் வாசல்படி மிதிக்க விடாம பண்ணீட்டியே.

என் பொண்ணு தப்பே பண்ணியிருக்கலாம். தாய்மாமனா அதை கண்டிக்க உனக்கு உரிமை இருக்கு. அவளை திட்டியிருக்கேன். அடிச்சிருக்கேன். ஏன் வீட்டுப்பக்கமே வராதன்னு கூட சொல்லியிருக்கேன். ஆனா என்ன பண்ணியிருந்தாலும் அவ என் ரத்தம். எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு தான் நான் நினைப்பேன்.

அதை விட்டுட்டு அவ வாழக்கூடாதுனு நினைக்க நம்ப யாருக்கும் உரிமை இல்லண்ணே. நீங்க உங்க கௌரவத்தை வைச்சுக்கிட்டு நல்லா இருங்க." என்றார்.
பாரியோ, "விடுங்கப்பா சின்ன பொண்ணுனு நினைச்சா அவ மனசுல எவ்வளவு விஷம் இருக்கு பாருங்க.

கொலை பண்றதை ஏதோ சர்வ சாதாரணமா சொல்றா. இவளை எல்லாம் சும்மா விடக்கூடாது." என்றான் பாரி. "டேய் விட்றா. அவதான் புரியாம பேசறான்னா நீயும் ஏன்டா. விட்டுத்தள்ளு." என குணசீலனும் சமாதானம் செய்ய, அவனது வண்டி சாவியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கோபமாக கிளம்பியே விட்டான் பாரி.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 27

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_8

ஓஹோ முத தடவை வர்ற கஸ்டமர்ஸை எல்லாம் வாசல் வரை வந்து வரவேற்பீங்களா பாரி சார்🤭🤪🤪🤪😜🥱

எல்லா ஹோடாடல்காரங்களும் இப்புடி கவனம் எடுத்தா நல்லாதான் இருக்கும்🤧🤧😤

ஏன்மா மிருதுளா உனக்கு தகிலன் மட்டும் அண்ணனா🤧🤧😤🤫🤫

அடடா நம்ம குணசீலன் சிஸ்டர் தான் இந்த பூவா.பேருக்கும் உனக்கும் நல்ல்ல்லாலா பொருந்துது போ🙄🤭🤭ரொம்ப பேசாதம்மா பூவு.உனக்கு எப்படி லைப் அமையுது நாங்களும் பார்க்கறோம்😏😏😏😏
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_8

ஓஹோ முத தடவை வர்ற கஸ்டமர்ஸை எல்லாம் வாசல் வரை வந்து வரவேற்பீங்களா பாரி சார்🤭🤪🤪🤪😜🥱

எல்லா ஹோடாடல்காரங்களும் இப்புடி கவனம் எடுத்தா நல்லாதான் இருக்கும்🤧🤧😤

ஏன்மா மிருதுளா உனக்கு தகிலன் மட்டும் அண்ணனா🤧🤧😤🤫🤫

அடடா நம்ம குணசீலன் சிஸ்டர் தான் இந்த பூவா.பேருக்கும் உனக்கும் நல்ல்ல்லாலா பொருந்துது போ🙄🤭🤭ரொம்ப பேசாதம்மா பூவு.உனக்கு எப்படி லைப் அமையுது நாங்களும் பார்க்கறோம்😏😏😏😏
Thanks sister..
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
261
பூவழகின்னு அழகான பேரு வச்சிக்கிட்டு என்ன ஒரு வில்லித்தனமா பேசுது
 
Top