• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கிருஷ்ண ஜெயந்தி

Krithika ravi

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
88
வணக்கம் மக்களே,

கிருஷ்ண ஜெயந்தி 2021 எப்போது, பூஜைக்கான நேரம், செய்ய வேண்டியவை என்ன?​

கிருஷ்ணா, கண்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். கிருஷ்ணரின் லீலைகள் மக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் படி இருந்தது. அதே சமயம் மக்களுக்கே தெரியாமல், அவரின் லீலைகள் மூலம் அரக்கர்களை அழித்தல், சமுதாயத்தைக் காத்தல் என பல விஷயங்களை செய்து மக்களை காத்தருளினார்.மகாபாரத போரின் போது, அர்ஜுனனிடம் தர்மங்களை உணர்த்திய தருணத்தை, நாம் இன்றும் இந்து சமயத்தின் புனித நூலாக பகவத்கீதை என்ற பெயரில் படித்து வருகிறோம். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.

  • மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர்கள், மனிதர்கள், உயிரினங்கள், தன் பக்தர்கள், இந்த உலகம் என எல்லாவற்றையும் காக்கும் பொருட்டு பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
  • அவற்றில் இதிகாசமாக ஸ்ரீ ராமரின் அவதாரத்தை ராமாயணமாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தையும், தர்மத்தை நிலைநாட்டக்கூடிய மகாபாரதம் என கொண்டாடப்படுகிறது.
  • மகாபாரத போரின் போது, அர்ஜுனனிடம் தர்மங்களை உணர்த்திய தருணத்தை, நாம் இன்றும் இந்து சமயத்தின் புனித நூலாக பகவத்கீதை என்ற பெயரில் படித்து வருகிறோம்.
கிருஷ்ண அவதாரத்தின் போது அவரின் லீலைகள் மக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் படி இருந்தது. அதே சமயம் மக்களுக்கே தெரியாமல், அவரின் லீலைகள் மூலம் அரக்கர்களை அழித்தல், சமுதாயத்தைக் காத்தல் என பல விஷயங்களை செய்து மக்களை காத்தருளினார்.

கிருஷ்ணா, கண்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நந்நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2021ம் ஆண்டு ஆவணி 14, ஆகஸ்ட் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும். அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அஷ்டமி திதி ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 11.57 மணிக்கு தொடங்குங்கி, ஆகஸ்ட் 30 நள்ளிரவு 1.57 மணி வரை இருப்பதால் 30ம் தேதி எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து, எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமே.


குறிப்பாக அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நல்ல நேரம்


நல்ல நேரம் - காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை

இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது.
 
Top