• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குலத்தொழில் 2

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
குலத்தொழில் 2

காஞ்சிபுரம்: கோயில் நகரம்.. ஆம் எங்கு திரும்பினாலும் கோபுரம் தெரியும் ஊர்… இன்று பாக்க போகும் கோயில் ஏகாம்பரநாதர் கோயில்… மிகப்பெரிய கோயில் வளாகம், தெப்பக்குளம், இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம்...

இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றி சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று….

(ஒவ்வொரு முறையும் இந்த கதை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகும்… )

தொழில் : பட்டு புடவை விற்கும் விற்பனையகம்… கடைகளை விட பல வீடுகளில் விற்பனை அமோகமா இருக்கும்..
காரணம் நெய்யும் இடத்தில் சென்று கலர் டிசைன் சொன்னால் அதற்கு தக்க நெய்து தருவர்.. தரமும் சிறப்பாக இருக்கும்… சாயம் போகாது, இழை அனைத்தும் தங்க கம்பி போல் மினுமினுக்கும்…


" ரைட்டா…." அம்மு
" ரைட்டு…."(கோரஸ் )

"ரைட்டா….."அம்மு
"ரைட்டு….".(கோரஸ் ) w

"ரைட்டா…."அம்மு
"கொயட்டு…"..(கோரஸ் )

"ஏய் இல்ல இல்ல இல்ல நான் ஒன்னும் அவுட்டு கிடையாது" கூவிகிட்டே துள்ளி துள்ளி குதித்தாள் அம்மு…

"ஏய் நீயே பாரு டி கோடு மேல காலை வச்சு இருக்க" கூட்டத்தில் ஒருத்தி

"அதெல்லாம் ஒத்துக்க முடியாது நீங்க கத்திக்கிட்டே இருந்தீங்க அதனால நான் தப்பா வச்சுட்டேன்" அம்மு தான் வேற யாரு

"அடியே ஒரு எட்டு பெட்டி விளையாட்டுல கூட இவ்வளவு பொய் சொல்வியா? " எப்பவும் அம்முவிடம் தோற்க்கும் ஒருத்தி

" நீங்கதான் பொய் சொல்றீங்க இனிமே உங்க கூட விளையாட மாட்டேன் எல்லார் பேச்சும் கா கா கா… "விடுவாளா நம்ம அம்மு

"நாம சொல்லவேண்டியது இவ சொல்ரா பாருங்க இனிமே இவள எதலையும் சேத்துக்க கூடாது டி… " கூட்டத்தில் ஒருத்தி நாட்டாமை செய்தாள் …

"சரியா சொன்ன டி… போலாம் வாங்க"… என ஒருத்தியும் "ஹுக்கும்…. பசிக்குது போல அதான் சண்டை வந்ததும் ஓடுது" என அம்மு வாயை கோணி சொல்ல…

" ஏ அம்மு குட்டி உள்ள வா விளையாட்டு போதும்…" டில்லி அவளோட அருமை அம்முவை அழைத்தாள்..

" இதோ வந்துட்டேன் கா" என்ன ஒரு தன்னடக்கம் அம்முக்கு

" அங்க என்ன சத்தம் சண்டை போட்டியா எல்லார்கிட்டயும்" டில்லி ஆசையா கண்டிக்கறாளாம்..

"நான் இல்ல அக்கா அவங்க தான்" அம்மு கூற..

" உன்ன பத்தியும் தெரியும் அவங்கள பத்தியும் தெரியும் போ போ அம்மா தோசை செய்யறாங்க சாப்பிடு.." டில்லி தான் எதை சொன்னா வீட்குள்ள ஓடுவாளோ அதை கூறினாள்

"மத்தியான சாம்பாரா கா " (ஈவினிங்ல மத்தியான சாம்பார் கு சூடான தோசை ஹ்ம்ம் அப்டி இருக்கும் ) வாய் பெருசு நம்ம சிருசுக்கு

" ஆமா டி போ... கை கால் கழுவிட்டு சாப்பிடு" இதெல்லாமா முக்கியம் டில்லி

"டில்லி இங்க கொஞ்சம் வா " லட்சுமி அம்மா பாசமா கூப்பிட்றாங்க

"என்னம்மா?" டில்லி இப்போ என்ன வேலையோ மனதில் நினைத்து கொண்டே சென்றாள்

"உனக்கு மாப்ள பாக்கணும் ஒரு போட்டோ வேணும் நீயும் உங்க அப்பாவும் போய் எடுத்துட்டு வந்துடுங்க…. ஏதாவது நல்ல பொடவை கட்டிக்கோ… " லட்சுமி அம்மா அப்பவே கனவு கான ஆரம்பிச்சிட்டாங்க

" சரிமா பக்கத்து தெரு வரைக்கும் போய் வரேன்" ரெடி ஆகிட்டு வீட்டு வாசல்ல நின்னுட்டு சொல்வது முத்துவின் டில்லி

"எங்க வசு வீட்டுக்கு தானே அவ நம்ம வீட்டுக்கு வரல நீ மட்டும் எதுக்கு அங்க போயிட்டு இருக்குற" போகாதனு சொல்ல முடியாம திணறும் லட்சுமி அம்மா

"நீ நல்ல அம்மா.. அவளுக்கு அப்படி இல்லையே" எப்டி ஐஸ் வைக்கணும்னு டில்லிக்கு தெரியும்

"சரி சரி சீக்கிரம் வந்துடு… " பொய்த்தோலை எனும் லட்சுமி அம்மா

……

"டேய் என்னை எதுக்குடா இங்க இழுத்துட்டு வர்ற… " முத்து கூட்டத்தை பார்த்துக்கொண்டே கூற…

"அண்ணே சந்தைல உள்ள கூட்டத்தை பாக்குறது எவ்ளோ சுகமா இருக்கு… " ஹீஹீஹீ சைட் அடிக்கிறான் டோய் இந்த பாஸு

"பாஸு நீ சரி இல்ல… நா போறேன் எங்க அம்மா என்னை நிக்க வச்சி கேள்வி கேக்கும் டா " நல்ல புள்ள முத்து

"என்ன அண்ணே இப்டி பயப்படற… வயசு பையனா இரு எப்பப்பாரு அந்த கோயில் செவத்துல 4 பசங்களோட உட்கார்ந்து கதை பேசிகிட்டு…. " தனியா மாட்டுனா அடிவிழும் அபாயம் பாஸ் கண்களில்

"இங்க பாருண்ணே எவ்ளோ வித விதமான மக்கள்…. எல்லாத்தையும் பாரு நிறைய கத்துக்கோண்ணே…" கூட்டத்தை பாத்து பாஸு

"இதெல்லாம் எனக்கு ஒத்து வராது அம்மா கரும்பு சொன்னாங்க அத வாங்கிட்டு கிளம்பறேன்… " நல்லவன் டா முத்து

(இவனோட இனி சேரவே கூடாது ரெண்டு பேரோட மைண்ட் வாய்ஸ்)

"அம்மா கரும்பு வாங்கி வந்துட்டேன்… துண்டு போட்டு வைக்குறேன் எல்லாரும் சாப்பிடுங்க… " என கூறி பின்

"ஆமா சுருதி எங்க அண்ணி? " பாசமான சிறிய தகப்பன் முத்து

"அவ எங்க நம்ம வீட்ல இருக்குறா? எந்த நேரமும் எதிர் வீட்ல தான் இருக்குறா… இன்னிக்கு சண்டே வேற எல்லாம் இவள கொஞ்சிட்டு இருப்பாங்க…" பிள்ளை தொந்தரவு செய்யாத சந்தோசத்தில் பெரிய அண்ணி சுகன்யா

"சரி வந்தா அவளுக்கு ஒரு துண்டு குடுங்க அண்ணி… " சுருதியின் குட்டியப்பா

"நா கோயில் வரைக்கும் போய்ட்டு வர்றேன் மா… "கோயில் மதிலில் காத்துகிடக்கும் காளைகளுடன் காளையாக முத்து

"ஒருநாள் லீவு விட்டா கூட வீட்ல தங்குறது இல்ல… " பையனை கண்டிக்கும் சாதாரண அம்மா விசாலம்

"கோதை இங்க வா " சின்ன மருமகளின் மாமி

"என்ன மாமி" கோதை மாமியின் செல்லம்

"உங்க எதிர் வீட்ல ஒரு பொண்ணு இருக்கு சொன்னியே குடும்பம் தொழில் பொண்ணு எல்லாம் எப்டி? நமக்கு ஒத்து வருமா? " பெண் தேடும் மாமியார் விசாலம்

"நமக்கு ஏத்த குடும்பம் அப்புறம் அவங்க பட்டு தறி தான் அதுவும் சொந்தமா நெய்யறாங்க… 3 பொண்ணுங்க.. மொத பொண்ண தான் நம்ம தம்பிக்கு பாக்குறோம்… பொண்ணு நல்ல பொண்ணு வீட்ல இருந்து மேல படிக்குறா… " தனக்கு ஒரு தங்கை வரப்போகும் குஷி கோதையிடம்

"அப்டினா ஜாதகம் போட்டோ ரெண்டையும் அடுத்த முறை அம்மா வீட்டுக்கு போகும் போது வாங்கிட்டு, முத்துவோடத குடுத்துட்டு வா… அவங்களும் பாக்கட்டும்…" வேலை சீக்கிரம் நடக்கணும் முருகா எனும் விசாலம்

"சரி மாமி அப்புறம் மாமி ராகவ்க்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… " இதையும் போட்டு வைப்போம் கோதை மைண்ட்

"இப்பவே வாங்கிக்கோ அப்புறம் வேற ஏதாவது செலவு வந்துட போகுது " அடுத்த செலவுக்கு என்ன செய்லாம் பட்ஜெட் விசாலம்

"அடியே விசாலம் இங்க வா… " மாமியின் மாமியார்

"இதோ வர்றேன் அத்தை… " என்ன ஒரு மரியாதை விசாலம்

"என்னடி எனக்கு காபி தண்ணி குடுக்க கூட நேரம் இல்லாம என்ன செயிரிங்க இத்தனை மருமக… அதுலயும் நீ உன்னோட மருமகங்க வந்த பிறகு ரொம்ப தான் ஆடுறாப்ல… " அடக்குமுறை மாமியார்

"இந்தாங்க அத்தை தண்ணி.. காபிக்கு இன்னும் பால் கறக்கல.. பால்காரன் இன்னும் வரல… கன்னுகுட்டியும் கத்திட்டு இருக்கு… " அடங்கும் விசாலம்

"எவ்ளோ வாய் பேசுற இப்போல்லாம்… கல்யாணம் ஆன புதுசுல எப்டி இருந்த (அடிமை மாதிரி ) இப்போ அவுத்து விட்ட கன்னுகுட்டி தான் போ….

என் வயசுக்கு நா எவ்ளோ வேலை செஞ்சி இருக்கேன் இப்போ இத்தனை பொம்பளைங்க இருக்க வீடாவா இருக்கு?? எல்லாம் உன்ன கட்டுன நேரம்… "புலம்பல் மாமியார்

"ஹே ஹே எங்க டி இந்த பக்கம் ஓடிவர்றவ?" எதிர் வீட்டு வாண்டை மிரட்டும் பாட்டி

"பக்கத்து வீட்டுக்கு போறேன் பாட்டி " சொல்லிக்கொண்டே ஓடும் அருந்தவால்

"உனக்கு இந்த வீடுதான் பொது வழியா?? " போன பிறகும் கத்தும் பாட்டி

"போட்டும் அத்தை விடுங்க அவள… அப்புறம் அழுவா… " அழுதா ரெண்டு தெரு கேட்குமே.. கள்ளத்தனம் விசாலம்

"இன்னொரு முறை இந்த பக்கம் வரட்டும் பாத்துக்கறேன்"… விடாது பாட்டி..

போட்டோ எடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவர்களிடம்…"என்னங்க போட்டோ குடுக்கலியா அந்த வாசன்?? "அடுத்த வாரமே கல்யாணம் பண்ணும் அவசர லட்சுமி

"இல்ல லட்சுமி ரெண்டு நாள் ஆகுமாம்…" என்னதான் நடக்கும் நடக்கட்டுமே கைலாசம்

"ஹே பவுடர் நிறைய போட்டியா? " பியூட்டிசியன் லட்சுமி

"ஹ்ம்ம் இதுக்கு மேல போட்டா… என் போட்டாவா இருக்காது.. பேய் போட்டோவா இருக்கும் ஹுக்கும்… நொடிந்து கொள்ளும் கல்யாண பெ(ய்)ண் டில்லி

"பாத்துடி சுளுக்கிக்க போகுது…" நமக்கே டப் கொடுப்பா போலியே லட்சுமி மைண்ட்

"ஹ்ம்ம் இவ்ளோ பேசுற உன் வாயே சுளுக்கிக்க மாட்டேங்குது…
எனக்குலாம் ஒன்னும் ஆகாது… " சரியா சொன்ன டில்லி

"என்னங்க தறில பாவு முடிய போகுது பாவு புனைய ஆள் வர சொல்லவா??" பொறுப்பு லட்சுமி

"சரிம்மா நாளைக்கு காலைல வர சொல்லு...இன்னிக்கு முடிச்சிடுவேன்…" கடமை கைலாசம்

"வேணாம்பா இதுக்கு மேல தறி புக வேணாம்… நாளைக்கு பாத்துக்கோ… " பாசமான பெரிய பொண்ணு

"அப்பா எனக்கு நோட்டு வாங்க காசு வேணும் பா " இரண்டாம் மகள் இந்திரா

"அப்பா அப்ப்பா எனக்கும் காசு வேணும்பா " கடைக்குட்டி அம்மு

"உனக்கு எதுக்கு டா அம்மு " ஆசை அப்பா

"நானும் நோட்டு வாங்க போறேன்… " படிப்பாளி அம்மு

"வாங்கி எழுதி பாஸ் ஆகிட்டு தான் மறுவேலை பாப்பா பா… இந்த தடவ ரேங்க் கார்டு காட்டவே இல்ல பா இன்னும் " போட்டு குடுக்கும் பெருசு

(எரும அக்கா எப்டி மாட்டி விடுது இதுக்கு உன்ன என்ன செய்றேன் பாரு )அம்மு மைண்ட் வாய்ஸ்

"அம்முஉஉஉ போய் எடுத்துட்டு வா… "அழுத்தி அழைக்கும் அப்பா

" அப்ப்ப்பா அது ஸ்கூல்ல ரெகார்ட் நோட்ல வச்சிட்டேன் பா… வீட்ல இல்ல…" நொண்டி சாக்கு சொல்லும் அம்மு

"அம்முக்குட்டி இதுவா பாரு அந்த ரெகார்ட் நோட்டு… " எந்திரன் இந்திரா

("அடிப்பாவி அக்கா ரவுண்டு கட்றாங்களே இன்னிக்கு… ") கதறும் அம்மு மைண்ட்

"என்ன இது தமிழ்ல பெயில் ஆகி இருக்க வழக்கமா கணக்கு இங்கிலிஷ் தான பெயில் ஆவ.. அதுலலாம் கூட பாஸ் மார்க் வாங்கி இருக்க… பரவாயில்ல அடுத்த முறை இதுலயும் பாஸ் ஆகிடு அம்மு மா…. " மத்ததில் பாஸ் செய்த மகிழ்ச்சியுடன் அப்பா

"சரிப்பா... அந்த தமிழ் வாத்தியார்கு என்னை புடிக்கவே இல்ல பா…" இடத்த குடுத்தா மதத்தை பிடிக்கும் அம்மு

"நீ என்ன செஞ்ச டா " என்டேர்டைன்மெண்ட்கு தயார் ஆகும் அப்பா

"அவர் பாடம் நடத்தும் போது கொஞ்சமா கண்ண மூடிட்டேன் பா அதுக்கு ரொம்ப திட்டி செய்யுள் பகுதி ஒப்பிக்க சொல்றாரு பா.. " எவ்ளோ பெரிய தண்டனை அம்மு மைண்ட்

"ஹாஹாஹா சரியான வாலு… சரிம்மா போய் தூங்குங்க" விட்டா போதும்னு அப்பா

( என்ன புஸ்ஸுன்னு போய்டிச்சி முதல் இருவரின் குமுறல் )

"இதான் நீங்க புள்ளைய கண்டிக்கற லட்சணமா? " விடாமல் லட்சுமி

"என்னமா பண்றது அடிச்சா அழுவா அப்புறம் மூச்சு விட கஷ்ட படுவா கொஞ்சம் நோஞ்சான் ஒடம்பு குழந்தைக்கு அதெல்லாம் வளரும் போது பொறுப்பும் தானா வரும்… " வளரனும் வேண்டுதலுடன் கைலாசம்

"அப்பா நாளைக்கு ஏகாம்பர நாதர் கோயில்ல காலை அபிஷேகம் பாக்க போகணும் போகவா?? " பெர்மிஸ்ஸின் ஹா இன்போர்மஷன் ஹா ஏதோ ஒன்னு டில்லி மைண்ட்

"போய்ட்டு வாம்மா கூடவே மாமரத்துக்கு ஒரு விளக்கு போட்டுட்டு வா " எப்படியாவது சீக்கிரம் நல்லபடியா கல்யாணம் ஆகணும் அதுக்கு நீதாம்பா ஆசி வழங்கணும் வேண்டுதலுடன் கைலாசம்

( அங்கு உள்ள மாமரத்து கிட்ட வேண்டிகிட்டா கல்யாணம் நடக்கும் நிறைய கல்யாணம் நடந்த மண்டபம் அங்க இருக்கு.. )

"சரிப்பா... அம்மா நா போய் படுக்கறேன்… அப்பாவிடம் சம்மதம் சொல்லி அம்மாவிடம் சங்கதி சொல்லும் டில்லி

"இவளுக்கு ஒரு நல்லது பண்ணணும்ங்க " புலம்பல் அதிகம் ஆகும் அபாய லட்சுமி

"எல்லாம் நேரம் வந்தா யார் தடுத்தும் நிக்காது லட்சுமி.. " புலம்பலை நிறுத்தும் கைலாசம்

"அது சரி " ஒப்புக்கு ஒப்புக்கொள்ளும் லட்சுமி

ஒரு வாரம் கழித்து

"என்னங்க நானும் எத்தனை முறை சொல்றது போய் போட்டோ வாங்கிட்டு வாங்கனு… " ஒரு வாரம் அமைதியின் பிரதிபலிப்பு லட்சுமி

"இன்னிக்கு போறேன் மா… " இன்றே செய்து முடிக்கும் தீவிர கைலாசம்

"இன்னிக்கு போய் தான் ஆகணும் கோதை மாமியார் வீட்டுக்கு போறா போட்டோ குடுத்து அனுப்பனும்… ஜாதகம் குடுத்து இருக்கா… நம்ம குடும்ப ஜோசியர் கிட்ட காட்டிட்டு வரணும் நிறைய வேலை இருக்குங்க நீங்க பாட்டுக்கு போய் தறில உட்காந்து கால் ஆட்டிட்டு இருந்தா வேலை நடக்குமா? " ஆர்ப்பரிக்கும் மனதுடன் லட்சுமி

"நா என்ன சும்மாவா கால் ஆட்டுறேன்.. நீ சொல்றது "காஞ்சிபுரம் போனா காலாட்டிக்கிட்டே சோறு திங்கலாம் "னு சொல்வாங்களே அது மாதிரி இருக்கு… " என்னை போய் என குமுறும் மனதுடன் கைலாசம்

"ஆமா பழமொழிக்கு என்ன சொல்லிட்டு போய்ட்டாங்க… உண்மை அர்த்தம் தெரியாம ஒருத்தன் திண்ணைல உட்கார்ந்து கால் ஆட்டிட்டே இருந்தானாம் கால் வீங்கி வீனா போனானாம்…" வெட்டி பேச்சு லட்சுமி

"காஞ்சிபுரம்ல தறிக்கு பஞ்சம் இல்ல அங்க தறி குழில உட்காந்து கால் ஆட்டினா சோறு திங்கலாம்னு சொன்னது…" விளக்கத்துடன் லட்சுமி

"ஏன்மா எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டு போய் விட்டு இருக்க பேச்ச… " திசை மாற்றும் கைலாசம்

"சரி வா போய் போட்டோ வாங்கிட்டு அப்டியே ஜோசியர் கிட்ட காட்டிட்டு வரலாம்… " விடாமல் பேசி செய்து முடித்த கைலாசம்

"கோதை இங்க வா.. " அன்பான அழைப்பு லட்சுமி

"என்ன டில்லிம்மா?? " டில்லியின் வருங்கால ஓரகத்தி

"ஜாதகம் பாத்தோம் நல்லா 10 பொருத்தமும் பொருந்தி இருக்கு நம்ம பொண்ணுக்கு இத விட நல்ல இடம் அமையாதுனு ஜோசியர் சொல்லிட்டாரு.. இந்தா டில்லி போட்டோ ஜாதகம் இருக்கு கொண்டு போய் குடு…

அப்புறம் பாத்துட்டு போன் பண்ண சொல்லு… "சீக்கிரம் சம்பந்தி ஆகும் லட்சுமி

"கண்டிப்பா டில்லி எங்க வீட்டுக்கு வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்… எங்க தம்பியும் ரொம்ப நல்ல மாதிரி…" நல்ல மருமகள் கோதை

"இத நீ சொல்லனுமா.. இத்தனை வருஷத்துல பிரச்னைனு ஒருநாளும் வந்தது இல்லியே… அது போதாதா??. " ஆமோதிக்கும் லட்சுமி

"சரியா சொன்னிங்க டில்லிம்மா.. எங்க மாமியார் ஒருத்தர் இல்லனா குடும்பம் அவ்ளோதான்.. அவங்க தான் குடும்பத்தோட அடித்தளம்… அதனால எல்லாமே சரியா நடக்குது பிரச்னைனு கண்ண கசக்கிறது இல்ல… " மாமியாரை பாராட்டும் மருமகள் கோதை

"சீக்கிரம் நல்ல சேதி சொல்லு கோதை… "பேச்சை முடிக்கும் லட்சுமி

"கண்டிப்பா மா போய்ட்டு வர்றேன்… " இடத்தை காலி செய்யும் கோதை…

தொடரும் தொழில்….









 
Top