• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குலத்தொழில் 4

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
குலத்தொழில் 4

தறி (loom) என்பது பருத்தி, பட்டு போன்ற நூல் இழைகளைக் கொண்டு துணி நெசவு செய்யப் பயன்படும் இயக்கியைக் குறிக்கும். மனித வலு மற்றும் மின்விசையால் இயங்கும் தறிகளை முறையே கைத்தறி என்றும் விசைத்தறி என்றும் அழைப்பர். தறிகளில் மேசைத்தறி, தரைகீழ் தறி, துளையிடப்பட்ட வடிவமைப்பு அட்டைகள் மூலம் இயங்கும் தறி உட்பட பலவகைகள் உண்டு.


காஞ்சிபுரம் :


"20 வருடம் என்னுடன் இருக்கும் பெயர்.. ஆனால் இன்று ஒரே ஒரு முறை அழைத்து என்னை ராணியாக உணர செய்த அவனின் மேல் புதிதாக ஒரு உணர்வு…"எண்ணக் குவியலாக முத்துவின் ராணி…

"அக்கா அக்கா சீக்கிரம் வாங்க… "
அலருடன் அம்முவின் தோழி…

"என்ன டா இந்த நேரத்துல வீட்டுக்கு வந்து இருக்க அம்முக்கு ஒன்னும் இல்லியே??" பதட்டத்துடன் டில்லி

"அக்கா அவ பெஞ்ச்ல இடிச்சிகிட்டு மயங்கிட்டா டீச்சர் உங்க கிட்ட சொல்லி கூட்டிட்டு வர சொன்னாங்க.. " அம்முவின் தோழி மூச்சு வாங்கிக்கொண்டே

"ஐயோ வீட்ல வேற யாரும் இல்லியே இரு பூட்டிட்டு வர்றேன்… " அவசரமாய் டில்லி

ஓட்டமும் நடையுமாக பள்ளியை 5 நிமிஷத்தில் அடைய.. பள்ளி வீட்டின் பின் புறம் சிறிது நடையில் எட்டும் தூரம் என்பதால் சாத்தியம் ஆனது டில்லிக்கு

மயக்கம் தெளிந்த நிலையில் அம்முக்குட்டி சோடா குடிச்சிட்டு இருக்கும் போது தான் டில்லி உள் நுழைந்தது…

"குட்டி என்னடா ஆச்சு எங்க அடி பட்டுச்சு? " சிறுமியின் உடலை கண்கள் வருடிய படி டில்லி

"கை முட்டில கா " அக்கா வை பார்த்ததும் வலி இல்லைனாலும் அழுகை குரலில்

"எங்க காட்டு " ஆராயும் டில்லி

கையில் எந்த ஒரு காயமும் ஏற்பட்ட அடையாளம் கூட இல்லை

"எங்க டா பட்டுச்சு சரியா சொல்லுடா குட்டி " இடித்த இடம் தெரியாமல் உளறுகிறாளோ எனும் எண்ணம் டில்லியிடம்

"அங்க தான் கா இடிச்சிக்கிட்டதும் ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல கா.. " உண்மை குரலில் அம்மு

"சரிடா ஒன்னும் இல்ல… வீட்டுக்கு போலாமா? " ரெஸ்ட் குடுத்தா நல்லது எனும் மனநிலையில் டில்லி

"இல்ல கா இப்போ நல்லா இருக்கேன்… சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் வர்றேன் கா.. " வீட்டுக்கு போனா அம்மா திட்டுவாங்கனு பயம் அம்முக்குட்டிக்கு

"சரி இந்த சாக்லேட் பிடிக்கும்ல சாப்பிடு கொஞ்சம் தெம்பா இருக்கும்… "ஆசை சாக்லேட் ரெண்டு கொடுத்து தங்கையின் முகம் வருடும் டில்லியின் கண்கள்

"ரொம்ப தேங்க்ஸ் டீச்சர் " நன்றியுடன் டில்லி

"இவளுக்கு என்னண்னு பாக்கலாம்ல டில்லி " ஆதங்கமாய் டீச்சர்

"அம்முக்குட்டி நீ கிளாஸ் போ நா டீச்சர் கிட்ட பேசிட்டு கிளம்பறேன்" டில்லி

"சரிக்கா.. தேங்க்ஸ் டீச்சர்" விட்டால் போதும் என அம்மு

" அவளுக்கு என்ன ப்ரோப்லேம்னு எந்த டாக்டர்ம் சொல்ல மாற்றங்க டீச்சர் …

எங்கயாச்சும் இடிச்சிகிட்டாலோ இல்ல விழுந்துட்டாலோ மயக்கம் ஆகிடறா…

எல்லாருக்கும் பிறந்த இரண்டு வருஷத்துக்கு குள்ள மண்ட ஓடு முத்திடும் உச்சி மூடிடும் ஆனா இவளுக்கு இன்னும் சரியா உச்சி மூடலனு சொல்றாங்க… வயசு ஏற ஏற சரியாகிடும்னு சொல்றாங்க… நம்பிக்கையா இருக்கோம் டீச்சர்…

அம்மாவும் திருத்தணி முருகனுக்கு வேண்டிக்கிட்டு அடிக்கடி மொட்டை போட்டு விட்டுடறாங்க அவளுக்கு… இன்னும் சரியாகல..

இதுல மொட்டை மொட்டைனு பிரிஎண்ட்ஸ் கிண்டல் பன்றாங்கனு வேற இவளுக்கு கஷ்டம்.. " பெரிய விளக்கத்துடன் டில்லி

"சரிம்மா பாத்துக்கோங்க.. " கிளாஸ் போகும் அவசரமாய் டீச்சர்

"சரிங்க டீச்சர் வர்றேன்.. " விடை பெரும் டில்லி

வீட்டின் வெளியே லட்சுமி அம்மா முறைத்து கொண்டு உட்கார்ந்து மகள் வரும் வழி பார்த்து இருந்தார்

"எங்கடி போன கொஞ்ச நேரம் வீட்ல காலு தங்காதே மாமியார் வீட்ல என்ன செய்ய போறியா எனக்கு தலையே சுத்துது… " வெயில் நேரத்து அலைச்சல் லட்சுமிக்கு

"உனக்குமா தல சுத்துது… அம்முக்குட்டி மயக்கம் போட்டுட்டானு ஸ்கூல்ல இருந்து வந்து சொன்னதும் பூட்டிட்டு ஓடினேன் மா.. " கிண்டலுடன் நிலவரம் விளக்கும் டில்லி

"அச்சோ இப்போ எப்டி இருக்கா ஏன் விட்டுட்டு வந்த " பதறும் தாய்

"அம்மா அவ இப்போ நல்லா இருக்கா " டில்லி

"என்ன ஆச்சு.." லட்சுமி

"வழக்கம் போல இடிச்சிகிட்டு மயங்கிட்டா… போனா கலர் சோடா குடிச்சிட்டு உட்காந்து இருக்கா.. வரியானு கேட்டேன் வரலனு சொல்லிட்டா…எல்லாம் நீ எங்க திட்டுவியோன்னு பயந்துட்டு தான்.. " தாயை ஆசுவாசப்படுத்தும் டில்லி

"அப்டியே எனக்கு பயந்திட்டாலும்.. எப்போ சரியாகுமோ இவளுக்கு..
நா வரும் போது அப்பா போன் அடிச்சிட்டு இருந்துச்சு யாருனு பாரு.. " பயம் தணிந்த குரலில் லட்சுமி

"போன் எடுத்து பார்த்துவிட்டு முத்துவின் நம்பர் என தெரிந்ததும் ஐயோ இவரா !!! எடுக்கலனு கோபிப்பாரோ எனும் மனக்கலக்கம் டில்லிக்கு "

"அம்மா உங்க மாப்ள தான் போன் போட்டு இருக்கார்.. " சாதாரண குரலில் டில்லி தாயிடம்

"என்னனு தெரியலியே… ஓ ஒருவேளை உன்கிட்ட பேசவா இருக்கும்… போன் போட்டு பேசு ஆனா ரொம்ப நேரம் பேசாத…
நேர்ல பேசினாலே ஆயிரம் பிரச்னை வருது… ஜாக்கிரதை டா டில்லி.. " மகளின் மனம் படித்த தாய்

"சரிம்மா… சமையல் முடிச்சிட்டேன்.. நீ போட்டு சாப்பிடு.. அப்பா ஏன் இன்னும் வரல… " டில்லி

"அவர் சொசைட்டிக்கு போய் இருக்காரு… வந்துடுவார்.. நீ போய் பேசு.. " முத்துவின் மாமியார் மாப்ள வெயிட் பண்ணுவார் என..

"ஹெல்லோ" டில்லி

"ஏன் இவ்ளோ நேரம் போன் எடுக்கல" முத்து

"அது வென ஆரம்பித்து தங்கை பிரச்னை எல்லாம் சொல்லி முடித்தாள் " எடுத்ததும் ஹலோ கூட சொல்லாம கேள்வியை பாரு.. இந்தா உனக்கு வேண்டிய பதில் எனும் மனோபாவம் டில்லிக்கு

"சரியாகிடும்னா ஓகே தான்…சாப்டியா " அவளின் குரல் பேதம் புரிந்து முத்துவின் அனுசரணை கேள்வி

"இன்னும் இல்ல… இனிமேல் தான்.. நீங்க " பரவாயில்ல பல்ப் எரியுது போல என எண்ணி புன்னகையுடன் டில்லி

"நா தூங்கிட்டு இருந்தேன்.. சாப்பிட்டு இனியும் தூங்கணும் அப்போதான் நைட் ஷிப்ட் போக முடியும்…" அவனின் வழக்கத்தை அவளுக்கு பழக்கும் முத்து

"ஓ அப்போ தூங்குங்க நா அப்புறம் பேசுறேன் " தொந்தரவு செய்கிறோமோ எனும் எண்ணம் டில்லிக்கு

"ஏன் உனக்கு இப்போ வேலை இருக்கா? " ஏமாற்றத்துடன் முத்து

"இல்ல நீங்க தூங்கணும்ல " அக்கறையுடன் டில்லி

"அதெல்லாம் நா பாத்துப்பேன் நீ பேசு " அவளுடன் அளவளாவும் ஆசை முத்துக்கு

"……..என்ன பேச " டில்லி மைண்ட்

"என்ன ரொம்ப யோசிக்கற போல ராணி " ஆசை அழைப்புடன் முத்து

"இப்டி கூப்பிடறது எனக்கு பிடிச்சி இருக்கு " மனம் திறக்கும் டில்லி

"அது மட்டும் தானா? " வேற எதுவோ எதிர் பார்க்கும் முத்து

"அது நீங்க கூப்பிட்றதுனால தான் பிடிச்சி இருக்கு" சமத்து டில்லி

"ஹாஹாஹா தேங்க்ஸ் " இத விட வேற என்ன வேணும் எனும் பூரிப்பு முத்துவிற்கு

"எதுக்கு? " புரியாத பாவனை டில்லிக்கு

"என்னை பிடிச்சி இருக்கு சொன்னதுக்கு " சந்தோஷம் பொங்கும் முத்து

"நா எப்போ அப்டி சொன்னேன் " மக்கு டில்லி

"நீ சொன்னதுக்கு அதான் அர்த்தம்" விளையாட்டு முத்து

"ஹ்ம்ம் அப்டியா சொன்னேன்.. ஆமா மாதிரி தான் இருக்கு.. " அதி தீவிர ஆராய்ச்சிக்கு பின் டில்லி

"ஆமாவே தான் ஹாஹாஹா " குஷி மூட் முத்து

"ப்ளீஸ் சிரிக்காதிங்க " கெஞ்சலா கொஞ்சலா என பிரிக்க முடியாத குரலில் டில்லி

"ஏன் " இதுக்கும் ஏதோ சூப்பர் ஹா சொல்ல போறா எனும் குதூகலம் முத்துக்கு

"அது.. ஒன்னும் இல்ல… " ஐயையோ எனும் குரலில் டில்லி

"சொல்லலனா உன்ன விட மாட்டேன்னு தெரியும் தான" பதில் வேணும் எனும் அடம் முத்துவிடம்

"அது நீங்க சிரிக்கிற சத்தம் சிரிச்சி முடிச்ச பிறகும் காதுல கேட்கற மாதிரி இருக்கு… " ஒரு வழியாய் சொல்லிவிட்டாள் டில்லி

"ஹாஹாஹா சூப்பர்ல " அடங்காதவன் முத்து

"நீங்க வேணும்னே சிரிக்கறீங்க.. " சிணுங்கலுடன் டில்லி

"ஹாஹாஹா ஆமா " சேட்டை முத்து

"போங்க நா கோவமா போறேன்.. " ஊடல் எட்டி பார்க்கும் பாவனை டில்லியிடம்

"ஹ்ஹ்ஹா போ அதுக்கு முன்னாடி ஒரு கவிதை சொல்லு… உன் பெரிய தங்கச்சி தான் சொன்னா நீ நல்லா கவிதை சொல்லுவேன்னு… " ஏதோ முடிவோட இருக்கான் போல முத்து

கவிதையா அடக்கடவுளே நம்ம சொல்றதுலாம் கவிதைனு நம்ம வீட்லயே ஒத்துக்க மாட்டாங்க.. இவர எப்டி சமாளிக்கிறது… அப்புறம் நம்ம கவிதை கேட்டுட்டு கல்யாணம் வேணா சொல்லிட்டா என்ன பண்றது?? பலத்த யோசனை அவளிடத்தில்

"என்ன கவிதை யோசிக்கிறியா சூப்பர் சொன்னதும் செய்யறியே" விடாக்கண்டன் முத்து

"ஐயோ அப்டிலாம் இல்ல.. எனக்கு கவிதைலாம் வராது அவ எதோ போட்டு விட்டு இருக்கா" தங்கையை மனதில் மண்டகப்படி கொண்டாடி அவனை மறுக்கும் குரலில் டில்லி

"அதெல்லாம் நம்ப முடியாது நாளைக்கு கால் பண்ணுவேன் அப்போ கண்டிப்பா கவிதை சொல்லணும்.. இப்போ வைக்கிறேன் பை ராணி… " அவளை பேச விடாமல் வைத்து விட்டு வாய் விட்டு சிரிக்கும் முத்து

"ஹெல்லோ ஹெல்லோ " யாராவது இருக்கீங்களா எனும் பாவமான குரலில் டில்லி

"டொய் டொய் டொய் " போன் கூட பேசுது டொய்

"கடவுளே அவர காப்பாத்து அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கவிதை பார்சல் பண்ணு இந்த வாரம் ஒரு விளக்கு எக்ஸ்ட்ரா போடறேன்…" டில்லி மைண்ட்

இந்த யோசனையுடன் அப்பா வரும் வரை தறி திண்ணையில் உட்காந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள்…

உடனடியாக ஒரு கவிதைக்கான வித்து விழுந்து அடுத்த அரை மணியில் வித்து மரம் ஆனது அதாங்க கவிதை ரெடி ஆகிடிச்சி..

நாளைக்கு வரைக்கும் இத வச்சிட்டு என்ன செய்ய போறோம் எனும் எண்ணம் வர மெசேஜ் அனுப்பி வைத்து விட்டாள்…

பனப்பாக்கம்

"முத்து முத்து எந்திரிடா " வாசு

"என்ன வாசு" முத்து

"மளிகைக்கு போகணும்டா கூட வா" வாசு

"எதுக்கு எப்பவும் நீ மட்டும் தான போவ " புரியாத முகத்துடன் முத்து

"உன் கல்யாணத்துக்கு காசு கேட்கணும்டா கூட வா அப்டியே அட்வான்ஸ் காசு ஏதாவது கேட்கலாம் அப்போதான் கல்யாண வேலை ஆரம்பிக்க முடியும் " விளக்கும் வாசு

"சரி இரு குளிச்சிட்டு வர்றேன் போலாம்…" முத்து

அங்கே காத்து இருக்கும் பிரச்னை தெரியாமல் இருவரும் கிளம்பினர்...l

மளிகைனா மளிகை சாமான் வாங்கும் அங்காடி அல்ல.. ஊரில் ஒரு சில குடும்பங்கள் மிகப்பெரிய தனவந்தர்கள் மொத்தமாக நூல் வாங்கி கலர் மற்றும் பசை போட்டு முத்து குடும்பம் மாதிரியானவர்களுக்கு காசையும் ( கூலி ) கொடுத்து தொழில் செய்வோர்… ஒவ்வொரு வாரமும் சண்டே இவர்கள் நெய்த லுங்கியை கொடுத்து விட்டு கூலி வாங்கி வருவார்கள்… இதை இவர்கள் மளிகைனு தான் சொல்லுவாங்க..

சகோதரர்கள் இருவரும் மளிகைக்கு கிளம்பி வந்த நேரம் அங்கே லுங்கியின் விலையை ஏற்ற கூறி பிரச்சனை நடந்து கொண்டு இருந்தது…

சத்தம் வராமல் திரும்பி வந்து விட்டனர்… இந்த நேரத்தில் நியாயமாக எது கேட்டாலும் கிடைக்க வாய்ப்பில்லை…

என்ன செய்வது எப்படி பணம் புரட்டுவது என யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்..

"என்னடா சொன்னாங்க என வாசுவை கேட்டவர்" முத்துவின் முகத்தை ஆராய்ந்தார் விசாலம்

நிலைமை ஒன்னும் சரி இல்லை என யூகித்தவர்…" சரி போய் சாப்பிடுங்க ரெண்டு பேரும் அப்புறம் பேசலாம் "என வாசுவை பேச விடவில்லை மகனின் முகம் அகம் படித்த தாய்

உடனடியாக தன் சகோதரனுக்கு போன் செய்து பயிர் விளையும் நிலம் ஒன்றை அடமானம் வைக்க வழி வகை செய்யுமாறு கேட்டு கொண்டார்

"வேறு ஒருவருக்கு கொடுத்தால் பின்னாடி மீட்பதில் பிரச்னை வரலாம்ம்மா விசாலம் " கண்ணன்

"என்ன செய்யலாம் அண்ணா" அடுத்து என்ன என்பது போல் விசாலம்

"நானே காசு கொடுக்கறேன் விசாலம் உனக்கு எப்போ வேணுமோ அப்போ சொல்லு ஏற்பாடு பண்றேன்… கவல படாமல் கல்யாண வேலைய பாரு மா.. "தங்கை பாசம் கண்ணனிடம்

"சரிண்ணா… பிள்ளைங்க கிட்ட அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்… வச்சிடட்டுமா? " நிம்மதியாய் விசாலம்

"சரிம்மா பாத்துக்கோ.. " விடைபெறும் கண்ணன்

பண பிரச்னை ஓய்ந்தது எனும் ஆசுவாசம் விசாலமிடத்தில்

சாப்பிட்டு வந்த மகன்கள் இடத்தில் விஷயத்தை விளக்க…

வாசுவின் முகம் போன போக்கு ஒன்னும் சரியாக படவில்லை விசாலத்திற்கு

"என்ன வாசு என்ன யோசிக்கற? " முன்னெச்சரிக்கை விசாலம்

"ஒன்னும் இல்ல மா… வரும் காசு மொத்தமும் கல்யாணத்துக்கு செலவு செய்ய போறோமா? " முன்கணக்கு வாசு

"இல்ல வாசு நாம கல்யாணத்துக்கு எவ்ளோ செலவு ஆகுமோ அந்த காச மட்டும் தான் வாங்க போறோம் " விசாலம்

"ஏன் அந்த நிலத்துக்கு வெளிய இத விட அதிக காசு குடுப்பாங்க மா " வாசு

"என்ன பேசுற வாசு நாம ஒன்னும் விக்கல அடமானம் தான் வைக்க போறோம்… எவ்ளோ காசு கம்மியா வாங்குறோமோ அது நமக்கு தான் நல்லது திருப்பி குடுக்கும் போது…

வீட்டுக்கு பெரியவன் நீ அத மனசுல வச்சிக்கோ " கட் அண்ட் ரைட் விசாலம்

சடார் என எழுந்து சென்று விட்டான்

"ஏன்மா இவ்ளோ கடுமையா அவன் கிட்ட பேசணுமா? " முத்து

"இல்லடா முத்து கடன் வாங்கும் போது திருப்பி தர்ற எண்ணத்தோட வாங்குற எவனும் அவனோட சக்திக்கு ஏற்ப தான் வாங்கணும்…

விடு சரியாகிடுவான்.. எதையும் யோசிக்காம போய் தூங்கு… அந்த பொண்ணு கிட்ட பேசுனியா டா… " மகனின் மனம் மாற்ற முனையும் தாய்

"ஆமாம்மா பேசினேன்…
நா கொஞ்சம் குரல் மாத்தி பேசினா கூட கோவமோன்னு பயப்படுறா மா… " புன்னகையுடன் முத்து

"ஹாஹாஹா அதெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான்… அப்புறம் எல்லாம் தலை கீழ் ஆகிடும்… " அனுபவம் பேசும் விசாலம்

சிரிச்சிட்டு ராணியுடன் தன் எதிர்காலம் எப்படி இருக்கும்..? கவிதை சொல்வாளாம் எப்படி? எதை? பற்றி என கற்பனை செய்ய தனிமை வேண்டி தனது அறைக்கு சென்று விட்டான்…

தனது ரிலையன்ஸ் போன் மெசேஜ் வந்ததிற்கான இசை எழுப்ப…

நமக்கு யாருடா மெசேஜ் அனுப்பியது என பார்த்தவன் கண்கள் வந்த மெசேஜ் இல் நிலை குத்தி நின்றது ஆமாம் அசையாமல் நின்றது… அடுத்த 5 நிமிஷம் ஹாஹாஹா வென சிரித்து நின்ற கண்களில் இருந்து கண்ணீர் (ஆனந்த கண்ணீர் தான் பா ) வழிந்தது…


பின் குறிப்பு :

அப்டி என்ன கவிதைனு அடுத்த எபில சொல்றேன் ஹாஹாஹா..

பனப்பாக்கம் மயூரநாதர் ஆலயம்!

தல வரலாறு : சிவன் தியானத்தில் இருந்த நேரத்தில் உமையும் ,நந்தி தேவரும் வனத்தில் சுற்றி திரிந்த புலியையும் மயிலையும் ரசித்து சிவனை மறந்ததால் , கோபத்தில் சிவன் உமையை மயிலாகவும் ,நந்தியை புலியாகவும் மாற்றினார்.

இவர்கள் பனைசையம்பதி வந்து சிவனை பூஜித்து தன் நிலை அடைந்தனர். மயில் பூஜித்த ஸ்தலம் ஆதலால் மயூரநாதர் என வழங்கப்படுகிறது. மயில் உருவத்தில் இருந்து நீங்க பெற்ற போது அதில் இருந்து 5 மரங்கள் தோன்றினவாம். அவை பாக்கு ,பனை,தெங்கு,தாளிபனை மற்றும் ஈஞ்சை ஆகும். இதில் தற்போது பாக்கு மரம் மட்டும் இல்லை. தலவிருட்சம் பனை ஆதலால் பனைசையம்பதி எனவும். பஞ்சதால மரங்கள் தோன்றியதால் தாலமாநகர் எனவும் இக்கோவிலின் தலபுராணமான பனைசை புராணத்தில்
குறிப்பிடப்படுகிறது.

காஞ்சிக்கு வாயு திக்கில் இருப்பதாலும், உமையின் சாபத்தை போக்கியதாலும் 'விலாச காஞ்சி' எனவும் பெயருண்டு.

(ஆமாங்க இதான் பனப்பாக்கம் பையனுக்கும் காஞ்சிபுரம் பொண்ணுக்கும் முடிச்சி போட்டதுக்கு காரணம் )

தொழில் தொடரும்…









 
Top