- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
மகளிர் தின சிறப்பு ரெசிபி உடலை குளிர்வாக வைக்கும் கூந்தல் தைலம் செய்யத் தேவையான பொருட்கள் செம்பருத்தி இலை ஒரு கப் செம்பருத்தி காய்ந்த பூ ஒரு கப் அவுரி இலை ஒரு கப் கருவேப்பிலை ஒரு கப் நன்கு அலசி எடுக்கப்பட்ட கத்தாழை சோறு சிறிதளவு கரிசலாங்கண்ணி வெள்ளை ஒரு கப் மருதாணி ஒரு கப் வறுத்து பொடி செய்யப்பட்ட வெந்தயம் ஒரு கப் வேப்பெண்ணெய் 100 மில்லி விளக்கெண்ணெய் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் இடித்த பெரிய நெல்லிக்காய் ஒரு கப் தேங்காய் பால் கெட்டியானது ஒரு கப் கசகசா ஒரு ஸ்பூன் செய்முறை அனைத்து பொருட்களையும் எண்ணெயோடு நன்கு கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்து நன்றாக மூடி விடவும் நன்கு ஓசை அடங்கி அனைத்தும் வெந்த பின்னர் எண்ணெயை மட்டும் தனியாக வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் தினமும் இரவில் மயிர்கால்களில் படுமாறு இந்த எண்ணெயை தடவி வந்தால் கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதோடு உடம்பும் சூடேறாமல் இருக்கும் அதுமட்டுமின்றி முடி நரைப்பது தள்ளிப் போகும்