• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கோவிட் - காந்தி முருகன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கோவிட்

நேரம் இரவு மணி எட்டு ஆனதும் நெஞ்சமெல்லாம் படபடத்துப் போனது.அவ்வப்போது நெற்றிவகிட்டில் வியர்த்தது.அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.அவரது முகம் புன்முறுவலோடு மலர்ந்து செய்திக்காகக் காத்திருந்தார்.அம்மா வழக்கம்போல பித்தளைப் பாத்திரங்களோடு கரைந்து விட்டார்.கண்ணுக்கு எட்டியவரை,தாத்தாவின் மூச்சுக் காற்றைக் கூட என்னால் உணர முடியவில்லை.திண்ணை வசம் அவரது கைத்தாங்கல் கம்பு படுத்தவாறு இருந்ததில் மனத்தின் ஆழத்தின் வலி கணமாகிப் போனது.வீட்டின் வலப்புறமாக காலடி எடுத்து வைத்து நகர்ந்தபோது காதில் வந்து விழுந்த இருமலின் ஓசை அடுத்த அடிக்கு முட்டுக்கட்டையாகிப் போனது.

“பாவணா,இவ என் கொள்ளுப் பாட்டி.யென் உசுரு போனாலும் இவ உன்ன விட மாட்டா….நல்லா பாத்துக்கோ….

”விடிந்தால் கொள்ளுப்பாட்டி கொல்லப்பட்டு விடுவாள்.அப்பாவின் அம்மாவின் ஆதிக்கம் வெற்றிடமாகப் பறைச்சாற்றப்படும்.எட்டிப் பார்த்தேன்.தாத்தா பாட்டியைத் தடவிக் கொண்டு முத்தத்தைப் பறிமாறிக் கொண்டிருந்தார்.அவரது கண்களில் நிறைந்து வழிந்த நீர் கதர் சட்டையை ஈரமாக்கி விட்டிருந்தது.பாட்டியும் தன் பங்கிற்கு தன் அழுகையினைத் தூறலாய்த் தநதிருந்தாள்.அத்தூறலில் நானும் நனைந்து கொண்டும் திரும்புகையில்

“அப்பாடா,நாளேளிருந்து எனக்கு வேல மிச்சம்.இடுப்பு வலிக்கு இனி அவசியமில்ல…”பாட்டியை ‘அழிப்பதிலே’ அம்மா குறியாயிருந்தார்.பாட்டியுடன் அதிக நாள்கள் வாழ்ந்திருந்தாலும் அம்மாவின் மனத்தில் எப்போது வன்மமும் தீவிரவாதமும்தான் தலைக்கேறியிருந்தது.பாட்டியால் ஏற்பட்ட இழப்புகளை மட்டுமே பார்க்கிறாள்.தரையில் ஏற்பட்ட வெடிப்புகள் மட்டும்தான் அசம்பாவிதங்களாகத் தோன்றுகிறது.பாட்டியால் வீடு எப்போதும் வீடு குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.அம்மா தரையில் உட்கார,படுத்துறங்க அதிகம் விரும்புவாள்.மின்சார கட்டணத்தைப் பாதியாக குறைத்திருந்தாள் பாட்டி.

“புனிதா….புனிதா…நாளைக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையாம்டி…போச்சி போச்சி….”அப்பாவின் கதறல் தாத்தாவை எழுந்து உட்காரச் செய்தது.தூங்கமூஞ்சிப் பாட்டியைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
 
Top