- Joined
- Jul 23, 2021
- Messages
- 857
அத்தியாயம் – 09
காதலை பலி கொடுத்து
காதலனை வாழ வைத்தேன்
ஒரு குயில் வானில் பறக்க
எனது சிறகை தானம் தந்தேன்
பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
கன்னத்தில் கண்ணீரின் காயங்கள்
“அம்மாயி இன்னைக்கு ஆடு மேச்சலுக்கு நீ போக வேணாம், அந்த டவுனுக்காரத் தம்பியை கூப்பிட்டு அருவிக்கு போயிட்டு வா, காலங்காலையிலேயே தபேரா வந்து சொல்லிட்டு போனார்… அந்த தம்பிக்கு ஏதோ மூலிகைக் குளியல் போடனுமாம்… அங்க பச்சிலையை அரைக்க, எடுக்க நீ வரனும் சொன்னார். போயிட்டு வந்துடு…” என்ற தாத்தா பத்ரனைப் பார்த்து விழி விரித்தாள் அரூபி…
“என்னக் கழுதை.. ஏன் கண்ணை இப்படி முழிச்சிட்டுப் பார்க்குற, போ அந்த போசி(தூக்குப்பாத்திரம்)யில எனக்கு பழசை ஊத்தி எடுத்து வச்சிட்டு கிளம்பு, நான் பொழுது சாய வந்துடுறேன்…” என்றத் தாத்தாவிடம்,
“உனக்குத்தான் நா அங்கப் போனா பிடிக்காதே, நீ தானே சொன்ன, அந்த டவுன் சாரு போனதும் தான் தபேராக்கிட்ட கூட பேசனும்னு” என்றாள் வாளியில் பழையைக் கஞ்சியை ஊத்தியவாறு…
“சரி தான், சொன்னேன் தான், யாரு இல்லைன்னு சொன்னா, இப்பவும் எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லத்தான், ஆனா அந்த வைத்தியன் கூப்பிடும் போது முடியாது அனுப்ப மாட்டேன்னு சொல்ல முடியல இந்த ஊருல இருக்குற எந்த வயசுப் புள்ளையாச்சும் உன்னை மாதிரி இருக்காங்களா பாத்தியா, நம்ம இனத்தோடக் கட்டுப்பாடு உனக்குத் தெரியும். பார்த்து சூதானமா நடந்துக்கோ அம்மாயி… போயிட்டு வரேன்…” எனப் பெரியதாக பேசியவர், பட்டியில் இருந்த ஆடுகளை பத்திக் கொண்டு கிளம்பிவிட்டார்…
அரூபிக்கு தாத்தாவின் பயம் புரியத் தான் செய்தது… அதனால் தான் இரண்டு நாட்களாக, புகழைப் பார்க்கக் கூட போகவில்லை. ஆனால் இடையில் தென்பட்ட தபேராவிடம் அவனைப் பற்றி நலம் விசாரிக்காமல் இருந்ததில்லை… இன்றும் ஆட்டைக் கிளப்பிக் கொண்டு போகத் தான் இருந்தாள்… ஆனால் இப்போது தன் தாத்தாவே சொல்லும் போது மறுக்கத் தோன்றவில்லை. அவளுக்கும் புகழை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது…
அவளுக்குத் தெரியும் மூலிகைக் குளியல் என்றாள் கண்டிப்பாக நான்கு மணி நேரமாவது ஆகும்… அதோடு ஆகாரம் எதுவும் எடுத்திருக்கவும் கூடாது… இந்தக் குளியல் முடிந்ததும், தபேரா சிறு தானியங்கள் கலந்த மூலிகைக் கஞ்சியைக் கொடுப்பார். அதைக் குடித்து விட்டுப் படுத்தால், அடுத்த நாள் காலை தான் அவர்கள் எழுந்து கொள்வார்கள்… கிட்டத் தட்ட மயக்கநிலை போலத்தான் இதுவும்… மிகவும் சிக்கலான நோய்களுக்கு மட்டுமே, இம்முறையைக் கையில் எடுப்பார் தபேரா…
‘அப்படியானால் டவுனு சாருக்கு பெரிய பிரச்சனையா என்ன…? நேத்து பேசும் போது கூட, தபேரா எதுவும் தன்னிடம் சொல்லவில்லையே’ எனப் பலவாறக யோசித்தபடியேத் தானும் கிளம்பி அந்த அருவிக்கரைக்குச் சென்றாள் அரூபி…
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள்… மருந்துக்கும் கூட மனித சஞ்சாரம் இல்லை. சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது காட்டாறு… சூரியனின் ஒளி பட்டுத் தெறித்தக் கண்ணாடித் தண்ணீர்… அவள் பாதம் தொட்ட போது ஐஸ் கட்டியாய் சில்லிட்டது…
அவர்கள் வரும் அரவம் இல்லை. வருவதற்குள் குளித்து விட்டு சூரியனை வழிபட்டு, மூலிகைகளைப் பறிக்க ஆரம்பிக்கலாம் என மார்பு வரை ஆடையைக் இறுக்கிக் கட்டிக் கொண்டு நீரினுள் மூழ்கினாள் பெண்… அவசரக் குளியல் என்றாலும் ஆனந்தக் குளியல் தான் மலைப் பெண்ணிற்கு…
நீரை விட்டு மேலே வந்தவள் உடையை மாற்றி, கிழக்கே நோக்கி ஆதவனுக்கு ஒரு வணக்கம் வைத்தாள்… பின் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடியே மூலிகைகளைப் பறிக்க ஆரம்பித்தாள்…
சற்று நேரத்தில் தூளிக் கட்டிப் புகழைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள் சிலர்… பின்னோடு அந்த தபேராவும், அருவிக்கு அருகில் அவனை இறக்கி விட்டு, ஒரு மர இருக்கையில் அமர வைத்து விட்டு ஒதுங்கினர்… வைத்தியர் வந்து அவன் குளியல்களுக்கான ஆயுத்தங்களை ஆரம்பித்தார்… இவர்கள் வந்ததை அந்த மலைப் பெண் கவனிக்கவில்லை… கவனம் மொத்தமும் மூலிகைப் பறிப்பிலே இருந்தது…
ஆனால் வந்திறங்கிய புகழின் கவனம் முழுவதும் அவனின் காட்டு ராணியின் மேல் தான்… அவளைப் பார்த்து இரண்டு நாட்கள், நாற்பெத்தெட்டு மணி நேரங்களாகி விட்டது… இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு உணர்வு அவனுக்கு வந்ததில்லை… வெறுமையை மொத்தமும் குத்தகைக்கு எடுத்தது போல் எதிலும் நாட்டமில்லாமல் போனது அவனுக்கு…
கடந்த இரண்டு நாட்களும் இந்த மலைக் கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களை தபேரா மூலம் கேட்டு அறிந்திருந்தான். அப்படியே அரூபியைப் பற்றியும், இங்கிருக்கும் பெண்களில் அவள் மட்டும் தனித்து தெரிவதுப் புரிந்தது… அதுவே தான் அவளின் தாத்தாவிற்கும் பிரச்சனை என்றும் புரிந்தது…
இப்படி ஒரு கட்டுப்பாடான சூழலில் உள்ளவளை இவற்றையெல்லாம் தகர்த்தெரிந்து வா என்று எப்படிச் சொல்வது என யோசித்தான்… வர மாட்டாள் என்று நிச்சயமாகத் தெரியவும் செய்தது… அதற்காக அவளை விடப் போவதுமில்லை… ‘அவளாக வந்தால் கூட்டிட்டுப் போவேன்… வர மாட்டேன்னு முரண்டுப் பிடிச்சாத் தூக்கிட்டுப் போவேன்…’ என மனதுகுள் முடிவு செய்த பிறகு தான் கொஞ்சமாவது அவன் மூளை அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது…
அதன் பிறகான யோசனையில் தான் இப்படிப் படுத்து கிடந்தால் எதுவும் சரியாகப் போவதில்லை… முதலில் எழுந்து நடக்கனும், கொஞ்சமேனும் சரியானா தான் அவளே வரவில்லை என்றாலும், நானாக அவளைத் தேடிப் போக முடியும்… பிறகு அவளது தாத்தாவிடம் பேசி நல்ல பெயர் வாங்க வேண்டும்… அவர் மனதில் நல்ல விதமாக அவன் பதிந்து விட்டால், அவனின் காட்டு ராணியை சுலபமாக கவிழ்த்து விடலாம் எனப் பலத் திட்டங்கள் உருவாகத் தொடங்கியது புகழின் மனதில்…
அதற்கு செயல்வடிவம் கொடுப்பது போல், அன்று காலைத் தபேராவும் தன் வீட்டை அங்குள்ளப் பிரச்சனைகள், தாயின் பாசம் என்று எல்லாவற்றையும் கூறி, மாற்று மருத்துவம் இருக்குமா எனக் கேட்டான்… மூலிகை மருத்துவத்தைப் பொருத்தவரை எந்த நோயும் உடனே சரியாகாது… 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் எடுத்துக் கொள்ளும். அப்படியிருக்க புகழின் கேள்வி அவரை யோசிக்க வைத்தது…
“தம்புடு நீங்க சொல்றது, எனக்குப் புரியுது… ஆனால் இது விஷப்பரிட்சை போலத் தான்… விபரீதம் ஆகவும் வாய்ப்பு இருக்கு… சிவனோட வைத்தியம், எங்கேயும் சோட போகாது… ஆனாலும் நாள் விட்டு செஞ்சா தப்பு இல்லன்னு தோனுது…” என்றார் நிதானமாக…
“அய்யா நீங்க சொல்றதை என்னால புரிஞ்சிக்க முடியுது… எனக்கு இங்க இருந்து போற அளவுக்காவது சரி பண்ணிக் கொடுத்தா போதும்… ஊருக்குப் போனதும் ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்துக்குறேன்… அம்மா ரொம்பவே வேதனைப்படுவாங்க… என்னை விட்டு இருந்ததும் இல்ல… ஒரு வாரத்துல நான் கிளம்புற மாதிரி எனக்கு வைத்தியம் பாருங்க அய்யா, என்னோட சூழலைப் புரிஞ்சுக்குவீங்க நீங்க” என்றான் பதவிசாய்…
“தம்புடு.. நீங்க இவ்வளவு கேக்குறதுனால நானும் உங்களுக்கு உதவுறேன்… மூலிகை குளியல்னு ஒரு வைத்தியம் இருக்கு… அது கொஞ்சம் கஷ்டம். எண்ணெய் போட்டு உங்களை மசாஜ் செய்து குளிக்க வச்சு, மூலிகையை உடல் முழுக்க தடவி, சூரியனோட கதிர் விழுற மாதிரி பாறை மேல படுக்க வைப்போம்.”
“அந்த மூலிகைகள் காஞ்சி, தானா விழுந்த பிறகு மறுபடியும் அருவித் தண்ணீர்ல, குளிக்க வைப்போம்… அருவியில் இருந்து விழுற தண்ணீர் உங்க உச்சியில விழனும். அதுக்குப் பிறகு மூலிகைப் புகையை மூட்டி ஒரு கூடாரத்துல அரை மணி நேரம் உங்களை உட்கார வைப்போம். இதெல்லாம் முடிஞ்சு ஒரு கஞ்சிக் குடிச்சதும், நீங்க தூங்கலாம்.”
“இதெல்லாம் முடிய ஒரு நாளே ஆகலாம் நீங்க டவுனுல இருந்து வந்துருக்கீங்க… படத்துல கூட, இந்த முறைகள் காட்டியிருக்க மாட்டாங்க… உங்களுக்குப் பிரச்சனை இல்லன்னா அதை ஆரம்பிக்கலாம்…” என்றத் தபேராவிடம்,
“செய்துக்கலாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க அதுக்கான ஏற்பாட்டைக் கவனிங்க…” என்று விட்டான்…
அந்த வைத்தியர் கூறியதைக் கேட்டு சற்றுக் கிலி பரவத்தான் செய்தது. ஆனாலும் அரூபியைப் பார்க்க வேண்டிய ஆசையில், அது சிரமமே என்றாலும் ஒத்துக் கொண்டான்…
புகழின் சம்மதத்திற்குப் பிறகு, தபேரா அடுத்துக் கட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்… ஆனால் அவன் எதிர்பாராதது அரூபியின் வருகை, அவள் வருவாள் என்று தெரியாது, வைத்தியரும் சொல்லவில்லை…
“தம்புடு… ஆரம்பிக்கலாமா…?” என்ற வைத்தியரின் பேச்சில் திரும்பியவன் கண்ணில் கையில் எண்ணெயுடன் நின்ற அரூபி பட்டாள்… மனம் துள்ளிற்று… ‘அட நம்ம காட்டு ராணி. இவ தான் எண்ணெய் தேய்க்கப் போறாளா.? இப்படி ஒரு அதிர்ஷடம் கிடைக்கும்னு நான் எதிர்பார்கவே இல்லையே… புகழு உனக்கு எங்கையோ மச்சம் இருக்குடா…’ என மனதுகுள் ஆனந்தப் பட்டுக் கொண்டவன்,
“ஒரேத் தம்புடு இக்கட ரா, ஒச்சு அம்மாயி பெட்டின்ட நூனைத்த தீசிகோ…”(“டேய் தம்பி, இங்க வா வந்து அம்மாயி வச்சுருக்குற எண்ணெயை வாங்கிக்கோ…”) என்ற வைத்தியரின் பேச்சில் பொம்மையை பிடுங்கியக் குழந்தையாக மாறிப் போனான்…
தன் அருகே நின்றிருந்தவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன். அவளுமே பேச முயற்சிக்கவில்லை. உதடுகள் மட்டும் விடாமல் முணுமுணுத்தபடியே இருந்தது.
அதன் பிறகு நடந்த அனைத்திலும் புகழ் மிகவும் சிரமப்பட்டுப் போனான்… ஏசி அறையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஆலங்குடி வரும் போதெல்லாம் தோட்டதில் இறங்கி வேலை செய்வதும், கிணற்றடியில் இறங்குவதும் சாதரணமாக செய்பவன் தான்… அதனால் இந்த வைத்திய முறையை எளிதாக கையாள முடியும் என்று நினைத்து ஏற்றுக் கொண்டான்…
ஆனால் எண்ணெய் தேய்த்து உருவும் போது, அவன் போட்ட அலறலில் அந்தக் காடே கிடுகிடுத்தது. இரண்டு புறமும் இருவர் பிடித்திருக்க, வைத்தியர் உருவ அரூபி தான் எண்ணெய் விட்டுக் கொண்டிருந்தாள்…
அவள் பார்த்தவரையில் இந்த அலறல் எல்லாம் சாதரணம் தான். ஆனால் புகழின் ஒவ்வொரு அலறிலிலும் அவள் கையிலிருந்த எண்ணெய் சட்டியும் ஒவ்வொரு முறையும் ஆடி ஆடி நின்றது. இப்போது அவளின் கண்களில் கலக்கம். உதடுகள் இன்னும் வேகமாக அந்த மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தது… புகழின் அலறல் முடிந்து அவன் திரும்பிப் பார்க்கும் போது, விழிநீர் வழிய, அவனையேப் பார்த்திருந்தாள் அரூபி…
அவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றவன், மீண்டும் வலியில் கண்களை மூடிக் கொண்டான்… பெண் மனதுக்குள் பாரமேறியது.
“அம்மாயி… அந்தக் கூடாரத்துல சாம்பிராணி புகையைக் கூட்டி விடு, இப்போ மேலுக்கு ஊத்தி கூப்பிட்டு வருவாங்க…” எனவும்,
“தபேரா… வெரசா முடிங்களேன் சாரு் வலி தாங்க முடியாம எவ்ளோக் கஷ்டப் படுறாங்க, நீங்க ஏன் இதுக்குச் சரின்னு சொன்னீங்க, எடுத்துச் சொல்லி வேண்டாம்னு மறுக்க வச்சுருக்கலாமே…” என அழு குரலில் பேசியவளை வித்தியாசமாகப் பார்த்தார் தபேரா.
அந்தப் பார்வை அவளைக் குற்றம் சாட்டியது. ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ’ என்பதாய் அதில் தலையைக் குனிந்தவள், அவர் சொன்ன வேலையைக் கவனிக்கச் சென்று விட்டாள்…
புகழ் இதெல்லாம் கவனித்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை… ‘முதலில் தன் உடல் சரியாக வேண்டும்… அதன் பிறகு தான் மற்றதைக் கவனிக்க வேண்டும்…’ என முடிவெடுத்து விட்டான்…
அதன் பிறகு அவனை நீரில் நிற்க வைத்து, மூலிகைப் புகை மூட்டதில் படுக்க வைத்து, கஞ்சியைக் குடிக்க வைத்து, குடிலுக்கு அழைத்து வந்து அவனை உறங்க வைக்கும் வரையிலுமே அரூபி கூடவேத் தான் இருந்தாள்…
எப்போது குளியல் முடிந்ததுமே அரூபி கிளம்பி விடுவாள். இன்றைக்கு என்னமோ அவளும் கிளம்பவில்லை, அந்த வைத்தியரும் அனுப்பவில்லை… அனைத்தும் முடிந்து புகழ் உறக்கத்திற்குச் செல்ல, அரூபியும் கிளம்ப ஆயுத்தமானாள்…
“அம்மாயி”… என்ற வைத்தியரின் குரல் அவளைத் தடுத்து நிறுத்த, கேள்வியாய் திரும்பியவளிடம், “உனக்கு அப்பா இல்லைன்னு கவலைப் பட்டுருக்கியா…?” என்றார் அமைதியாக.
ஏன், எதற்கென்று யோசித்தாலும், “ம்ம்… ஆமாம். எனும் விதமாய் தலை மேலும் கீழுமாய் ஆடியது.
“ஆனால் நான் ஒரு நாளும் எனக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு நினைச்சு வருத்தப்பட்டது இல்ல… நான் பிரம்மசாரியா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு அப்பனா வாழ்ந்துட்டு இருக்கேன், உனக்கு அப்பனா… நான் பெறாத என் பொண்ணு நீ…” என்றவரை விழியெடுக்காமல் பார்த்தாள்…
“உன்னை முதன் முதலா பார்க்கும் போது எனக்கு கடவுள் கொடுத்த வரமாதான் தெரிஞ்ச. இங்கே எல்லாரும் என்னை அந்நியமா பார்க்கும்போது, நீ தான் என் கிட்ட வந்து பேசின. நீ தான் எனக்கு குடிக்க கஞ்சி கொடுத்த, நான் பேச வந்ததைக் காது கொடுத்துக் கேட்ட, அப்போ இருந்து உன் மேல எனக்குத் தனிபட்ட பிரியம் உண்டாகிடுச்சு. எந்தச் சிக்கல்லயும் உன்னை விட்டுடக் கூடாது எனக்கு அப்புறம் இந்த வைத்தியத்தை உங்க மக்களுக்காக நீ பார்த்துக்குவன்னு நினைச்சேன். அதனால தான் உனக்கு மூலிகை வைத்தியத்தைப் பத்தி எல்லாமே சொல்லியும் கொடுத்தேன்… ஆனா இப்போ அது ஆகாதுன்னு தோனுது…” என்றார் ஒரு பெரு மூச்சோடு…
“அந்தப் பையனோட பார்வையில் இருக்குற வித்தியாசத்தை என்னால உணர முடியுது. அவன் உன்னை விரும்புகிறானா தெரியாது. ஆனால் அவன் பார்வையில் அளவு கடந்த ஆர்வம் இருக்குறதை நான் பார்க்குறேன். பழகின வரை தப்பா தெரியல. ஆனா, எதையும் சட்டுன்னு முடிவுப் பண்ண முடியாதே, எனக்கு இந்தக் கட்டுப்பாடுகள் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை… நான் அப்படி வளரவும் இல்ல…”
“பிடிச்சிருந்தா கல்யாணம் செய்துக்கலாம், தப்பிலை. ஆனா அவன் நல்லவனா, கடைசி வரைக்கும் நம்மக் கூட வர்ரவனா இருக்கனும் அது தான் முக்கியம். அவன் உன்னை இஷ்டப்பட்டா நாம் ஒன்னும் பண்ண முடியாது. உனக்கு இஷ்டம் இல்லாத வரை அவனால் என்ன பண்ண முடியும்…”
“ஆனா இப்போ உன் கண்ணுலயும் விருப்பம் இருக்குற மாதிரித் தெரியுது. அதுக்கு இன்னைக்கு நீ அழுததே சாட்சி. இனியும் நீ இல்லைன்னு சாதிக்க மாட்டேன்னு நம்புறேன். என்ன பண்ணலாம் சொல்லு…” என்றார் தபேரா யோசனையோடு…
அந்த வைத்தியன் சொன்ன எல்லாவற்றையும் கிரகிக்கவே சில நேரம் தேவைப்பட்டது மலைப் பெண்ணிற்கு. அவனுக்கு தன்மேல் விருப்பமா…? அதை நினைக்கும் போதே ஏதோ கொலைக் குற்றம் செய்தது போல் உடலும் மனமும் நடுங்கியது. அவர்கள் இனத்தில் இப்படியெல்லாம் சாத்தியமே இல்லை…
பெண்ணை ஊருக்கு முன்னே உயிரோடு கொளுத்தி விடுவார்கள். சம்பந்தப்பட்டவனை வேட்டை நாய்களுக்கு இரையாக்கி விடுவார்கள். இங்குள்ளவர்களைப் பற்றி தன் மக்களைப் பற்றி கட்டுப்பாடுகளைப் பற்றி எல்லாம் தெரிந்தும் எப்படி அவள் மனது அலை பாய்ந்தது… அவள் மனதில் அவனுக்கென்று ஓர் இடம் எப்போது உண்டானது. அவனைப் பார்க்காமல் இருந்த இந்த இரண்டு நாட்களிலா, இல்லைத் தன் பெயரை அவன் செல்லமாக அழைத்த போதா, தெரியவில்லை. பெண்ணுக்கு. ஆனால் இதெல்லாம் தனக்குச் சுத்தமாக ஒத்தே வராது என்று மட்டும் புரிந்தது.
இதெல்லாம் தன் தாத்தாவிற்குத் தெரிய வந்தால், அவர் எப்படித் துடித்துப் போவார். தபேராவிற்கும் இது இக்கட்டான சூழலை உண்டாக்கும். அதனால் இதை வேரிலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும். என் விருப்பம் என்பது என் வரையில்தானே. இன்னும் அவனுக்குத் தெரியாவில்லை தானே. தபேரவிடம் சொன்னால் புரிந்து கொள்வார். இனி அவன் போகும் வரை இங்கு வரவே கூடாது. என்று முடிவெடுத்தவள், தான் யோசித்ததையும், நிதர்சனைத்தையும் அவரிடம் கூறிவிட்டு முடிந்தவரை அவனை விரைவிலேயே அனுப்பி விடும்படிக் கேட்டுக் கொண்டு, திரும்பியும் பாராமல் கிளம்பி விட்டாள்…
மனம் முழுக்க பாரத்தையே சுமந்து கொண்டு கலங்கிய முகத்தோடு போனவளையே தடுக்க முடியாமல் பெரும் பாரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வைத்தியர்… அவருக்குப் பின்னே அரை மயக்கத்தில் இருந்த புகழும்.