- Joined
- Jul 23, 2021
- Messages
- 857
அத்தியாயம் – 11
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற
பாலன் தன் குடும்பத்தினரோடு கோவை சென்று இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் எல்லோரும் வீட்டில் இருக்க மணிமொழி வெற்றிக்கு வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருந்தாள்.
பாலன் டிவியில் ஆழ்ந்திருக்க, ராமசாமியும் வனிதாவும் பேசிக் கொண்டிருக்க, மணியோ அண்ணனையும் வீடியோக் காலில் அண்ணியையும் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணி என்னாச்சு உங்க ஃபேஸ் டல்லடிக்குது, உங்க புருஷ் மாமா, உங்களைக் கொடுமை பன்றாரா..?” என்றதும்,
“சும்மா இருடி. அவளே இப்போதான் கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்கா, நீ மறுபடியும் ஸ்டார்ட் செஞ்சு விடாதே” என வெற்றி தன் தங்கையின் வாயை அடைக்க,
“நீயே கேளு மொழிமா, எனக்குப் பிடிக்கவே இல்ல. மாமா நான் சொன்னா கேட்கவே மாட்றாங்க. பெரிய மாமாவும், தாத்தாவும் இவர் சொல்றதையே தான் கேட்கிறாங்க, நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க.” எனக் குற்றப் பத்திரிக்கை வாசிக்க
“இவ ஒருத்தி புலம்ப ஒரு ஆள் கிடைச்சா போதும். உடனே ஆரம்பிச்சுருவா பழைய பல்லவியை. படிக்கிறதுக்கு என்ன கஷ்டம் உனக்கு? எத்தனை பேர் படிக்க முடியாம, படிக்க வைக்க ஆள் இல்லாம, கஷ்டப்படுறாங்க தெரியுமா? உனக்கு எல்லாம் ஈசியா கிடைக்கவும், அதோட அருமை தெரியல. நீ என்ன தான் அழுது புரண்டாலும், காலேஜ் போறது போறது தான்.” எனக் கடுமையாக சொல்ல,
மங்கையின் முகம் வாடிப் போனது. இந்தப் பக்கம் பார்த்திருந்த மொழிக்குமே, அண்ணனின் கடுமை பயத்தைத் தான் கொடுத்தது. அதுவரை இவர்களது பேச்சைக் கண்டும் காணாமலும் கேட்டு கொண்டிருந்த, வனிதா மங்கையின் முக வாட்டதில் மகளின் அருகே வந்தார்.
“மங்கை ஆச்சிக் கிட்ட போனை கொடு பேசணும்” என்றதும்,
கணவனிடம் இருந்த போனை வாங்கி கொண்டு நாச்சியாரிடம் சென்றாள். மனைவியை பின்பற்றி வெற்றியும்.
வனிதா ஒருவேளை மங்கையைத் திட்டி விடுவாரோ என்ற பயதில் பின்னாடியே வந்தவன், அவர்கள் பேச்சுக் கேட்கும் தூரத்தில் உட்கார்ந்து கொண்டான்.
“ஆச்சிம்மா அத்தை பேசணும் சொன்னாங்க” என்றபடியே வீடியோவை அவரிடம் காட்ட,
“என்னங்கத்தை எப்படி இருக்கீங்க.? ஏன் முகம் சோர்ந்து போயிருக்கு.? சாப்பிட்டீங்களா அத்தை. மாத்திரை போட்டீங்க தானே..” என அக்கறையாக கேட்க
“ஒன்னும் இல்லம்மா, நல்லாதான் இருக்கேன். எல்லாரும் கூட்டமா இருந்துட்டு, இப்போ யாருமில்லாம, ரொம்ப வருத்தமா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல, உன் மருமகளும் படிக்க போயிடுவா அப்பறம் என்ன? வழக்கம் போல நானும் என் பேரனும் மாத்தி மாத்தி மூஞ்சியைப் பார்த்திட்டு உட்கார வேண்டியது.” தான் என்றார் சலிப்பாக.
“அத்தை அதுக்கு தான் பேசணும் சொன்னேன், மங்கையை இப்போ அனுப்ப வேண்டாம். ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். அப்புறம் அனுப்பலாம்” எனவும்
“என்ன சொல்ற வனிதா..? அவன் கேட்க மாட்டான். காலேஜ்ல எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க போல, இப்போ என்ன செய்ய முடியும்.?” என்றவரிடம்
“அதெல்லாம் பார்த்துக்கலாம் அத்தை. உங்க பையனுக்கு தெரிஞ்சவர் தான் அவர். பேசிக்கலாம் விடுங்க, மங்கை இன்னும் அங்க பழகல. முதல்ல நம்ம வீட்டுக்குப் பழகட்டும். அப்புறம் ஒரு குழந்தையைப் பெத்து கொடுத்துட்டு போகட்டும். அவ வேலை செய்து சம்பாதிச்சு தான் நம்ம குடும்பம் ஓடனும்னு இருக்கா என்ன.? டாக்டர் தானே மெதுவா படிக்கட்டும்.” என்ற மருமகளின் பேச்சில் பெரியவரின் முகம் பூவாய் மலர்ந்தது.
அவரும் அதை தானே எதிர்பார்த்தார். வெற்றி குடும்பம் குழந்தை என வாழ்வதை கண் நிறைவோடு, அவர் இருக்கு போதேப் பார்த்து விடவேண்டும் என்று தானே, அந்த பெரியவரின் பேராசையும்.
நாச்சியார் ஆர்வமாக பேரனின் முகத்தை பார்க்க, “ஆச்சிம்மா அவளுக்கு வயசு இருபத்தி ஒன்னு தான் ஆகுது. குழந்தை பெத்துக்க இன்னும் நாள் இருக்கு, இப்போவே என்ன அவ படிக்கட்டும்” என வெற்றி பட்டும் படாமலும் பேச
“அவளுக்கு இருபத்தி ஒண்ணுதான். ஆனா உனக்கு..? உனக்கு என்ன வயசு..? இருபத்தி எட்டு முடியப் போகுது. இன்னும் எவ்வளவு நாள் தள்ளிப் போடுறது. அதது அந்த அந்த நேரத்தில் நடக்கணும். குழந்தை பிறந்ததும் படிக்கட்டும். குழந்தையை நாம பார்த்துக்கலாம்.”
“ரெண்டு வருஷம் தானே, அதுக்குள்ள குழந்தையும் பெரியவன் ஆகிடுவான். மங்கைக்கும் பிரச்சனை இல்ல, அவ சமாளிச்சுடுவா. இனி இதைப் பற்றி பேச வேண்டாம்..” எனக் கறாராக முடித்தவரை, அனைவரும் ‘ஆ’ வெனப் பார்த்தனர்.
ஏனென்றால் வனிதா பேசியது வெற்றியிடம், இதுவரை அவர் அவனிடம் தேவைக்காகக் கூட பேசியதில்லை. அப்படியிருக்க இன்று மகனிடம் பேசியது, அனைவருக்கும் ஆச்சரியமே. இனி எல்லாம் சரியாகுமோ என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டானது என்னவோ உண்மை.
வெற்றிக்கும் வனிதா முதன் முதலாக அவனிடம் தாயாகப் பேசியது மனநிறைவைக் கொடுத்தது. அதனால் அதற்குப் பிறகு மங்கையின் படிப்பு விசயத்தைப் பற்றி யாரும் பேசவில்லை அந்த வீட்டில்.
நாச்சியாரும் “நீ சொல்றது சரிதான் வனிதா. கொள்ளுப் பேரன் பேத்தியைப் பார்த்த பிறகு தான், என் ஆயுசு முடியும். அவனை என் மடியில போட்டு கொஞ்சினாதான் என் மனசு சந்தோஷப் படும்.. விடு, இனி யாரும் இதை பத்தி பேசாம நான் பார்த்துக்கிறேன்.” என்றவர், வேறு பேச ஆரம்பித்து விட்டார்.
அன்றிரவு அறைக்கு வந்த வனிதா கணவரிடம் பாலைக் கொடுத்து விட்டு, வெளியே போக போக, அவரது கைப்பற்றி நிறுத்தினார் பாலன்.
‘என்ன’ என்பது போல பார்த்த மனைவியிடம், “நீ பேசினது உண்மையா.? புகழ் இல்லைன்னு நீ வெற்றிக்கிட்ட பேசுனியா..? இல்ல, மங்கை வருத்தப்படக் கூடாதுன்னு வெற்றிக்கிட்ட பேசுனியா.?” என்றார் கொஞ்சம் சலிப்போடு.
அவருக்கு உண்மையான பாசத்தினால் வனிதா பேசியது போல தெரியவில்லை. அதனால் தான் அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காகத்தான் கேட்டார். கையைப் பிடித்திருந்த கணவரிடமிருந்து, தன் கையை உருவியவர், அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி இருந்தார் வனிதா.
என்னதான் காரணம் சொன்னாலும், அதை ஏற்று கொள்ளும் நிலையில், இங்கு யாரும் இல்லை. அப்படியிருக்க ‘நான் திருந்தி விட்டேன், எனக்கு என் மூத்த மகனுடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது’ என்று எல்லாம் சொன்னால், யார் நம்புவார்கள். சில நாட்களின் வழக்கம் போல, அன்றும் மகளின் அறைக்கு சென்று படுத்து விட்டார்.
இரவில் மகளோடு இருந்த இந்த சில நாட்கள் தான், அவருக்கு பெரிய மகனைப் பற்றி முழுமையாக தெரிந்தது. மணிக்கு எந்நேரமும் அண்ணன் புராணம் தான். அவளுக்கு அவனைப்பற்றி பேசவில்லை என்றால் தூக்கமே வராது. விழித்ததும் அவனிடம் குட் மார்னிங் சொல்வதில் இருந்து, இரவு குட் நைட் சொல்வது வரை அன்றைய நாளை ஆரம்பிக்கவும், முடிக்கவும் அவன் மட்டுமே வேண்டும்.
எப்படி இவளுக்கு அவன்பால் அத்தனை அன்பு வந்தது என்று வனிதாவால் வியக்க மட்டுமே முடிந்தது. இத்தனைக்கும் இருவரும் ஒன்றாக இருக்கும் காலங்கள் மிகவும் குறைவு. புகழ் தான் தங்கையோடு அதிக நாள் இருந்து இருக்கிறான். அவனை பற்றி அதிகமாக மகள் பேசியதில்லை. ஆனால் வீட்டில் எந்த நேரமும் இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்..
இப்படி யோசிக்கும் போது தான் அவருக்கு ஒரு விஷயம் தெளிவானது. மணியும் வெற்றியும் எப்படி பாசமாக இருக்கிறார்களோ, அப்படித்தான் புகழும் மங்கையும் இருந்தார்கள் என்று.
தன் மகளென்றிருந்தால் அப்படி யோசித்திருக்க மாட்டாரோ.? மருமகள் என்ற எண்ணம் தான் அவரை புகழுக்கு மணக்க யோசிக்க வைத்தது. அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இருவரும் அவர்களது வாயைத் திறந்து, இந்த திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லவே இல்லையே! இருவரும் அவர்களுக்குள்ளாகவே ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.
அப்போது வேறாகத் தெரிந்தது, இப்போ வேரொன்றாகத் தோன்றியது. அப்படியென்றால் மங்கைக்குத் தெரிந்து தான் புகழ் வெளியேறி இருக்க வேண்டும். அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. மறுத்தால் நான் ஏதேனும் சொல்வேன், அல்லது செய்வேன் என்று நினைத்து தான், அவர்களாகவே ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.
இதில் முக்கியமான விசயம் ‘ஒன்று வெற்றி மங்கையை விரும்பி இருக்க வேண்டும், அல்லது மங்கை வெற்றியை விரும்பி இருக்க வேண்டும்’ இதில் ஏதோ ஒன்று புகழுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் புகழ் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என அனைத்து காரணங்களையும் சரியாக யூகித்தார் வனிதா.
அவருக்கு இப்போது புகழை பற்றிய கவலையில்லை அவனாகத்தானேப் போனான். நிச்சயம் அவனாகவே வந்து விடுவான், என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வெற்றி.! அவனிடம் எப்படி பேசி தன்னை எப்படி நியாயப் படுத்துவது.? அவனுக்காக அவர் சிறுதுளி அளவிலும் கூட நியாயம் செய்யவில்லையே. இந்த இருபத்தியெட்டு ஆண்டுகள் அவனையத் தனியாக விட்டு, தாயின் பாசத்தை துளியும் ருசிக்க விடாமல் செய்துவிட்டு, இப்போது எப்படி அவன் முகத்தில் விழிப்பது என்ற கவலையும் பயமும் அவரை தூங்க விடாமல் செய்தது.
இங்கு கணவனின் அணைப்பில் இருந்த மங்கைக்கு அளவில்லாத சந்தோசம். அவனது கன்னத்தில், நெற்றியில், நுனி மூக்கில் என சிறு சிறு முத்தம் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள்.
“வனி ரொம்ப பண்ணாதடி.. உங்க மாமியார் சொன்னது வேலிட் பாய்ண்ட். அதனால தான் நான் ஒத்துக்கிட்டேன். உடனே நீ இவ்வளோ எக்ஸ்பிரஸ் காட்டாத. நானே உன் புகழ் மாமா வந்து என்ன சொல்லுவானோன்னு பயத்தில இருக்கேன்.” என்று தன் அணைப்பை இறுக்க,
“அதென்ன உன்னோட மாமியார்.. என் அம்மான்னு சொன்னா முத்துக் கொட்டிடுமா..? எப்ப பாரு அவங்களை கஷ்டப் படுத்துறது..” என அவனின் நாடியைப் பிடித்துக் கிள்ளியவளின் கையை தட்டி விட்டவன்.
“எனக்குத் தெரியும். நீ இதைப் பத்தி பேசாத, அவங்க என் அம்மா என்று எனக்கு தெரியாதா.? அவங்க இல்லாம தான் நான் இந்த உலகத்து வந்தேனா.? எதுவும் தெரியாம சும்மா எல்லாத்தையும் பேசக்கூடாது..” எனக் கறாராக பேச,
“தோடா இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பெரிய நியாயவாதி தான், நான் ஒத்துக்குறேன், இனி எப்பவாச்சும் உங்கம்மா பத்தி என்கிட்ட பேசுங்க, அப்போ இருக்கு உங்களுக்கு கச்சேரி..” என இவள் கடுப்பாகி விட
நுனி மூக்கு சிவந்து புசுபுசுவென மூச்சு விட்டபடியே, பேசிய மனைவியைப் பார்த்து, சிரிப்பு வந்துவிட்டது வெற்றிக்கு. “கோபம் எல்லாம் வருதுடா என் பொண்டாட்டிக்கு, இந்த கோபம் போக என்ன செய்யலாம்.? மேடம் வேற டாக்டர்.. அவங்களுக்கு தியரி கிளாஸ் தான் தெரியும், பிராக்டிகல் கிளாஸ் நான் தான் சொல்லிக் கொடுக்கணும். ஸ்டார்ட் பண்ணுவோமா..” என்றபடியே இடையில் இருந்த கைகள் எல்லை மீற,
“ம்ம்ம்.. வேண்டாம்.. நீங்க தொடாதீங்க, போங்க, விடுங்க.” என வாய் சொன்னாலும்
மங்கையின் பூவுடல் அவனது செயலுக்கு இணங்கி, ஒரு கை அவனது தலைகோதியும், மறு கை அவனது முதுகில் படர்ந்தும் அவனுக்குப் அழைப்பையேக் கொடுத்தது.
அவனிள் மயங்கி, கிறங்கி, அவனுக்குள் ஒடுங்கி என அன்றைய இரவு மற்றைய இரவைபோல இல்லாமல் ஏகாந்தமாக கழிந்தது இருவருக்கும். கூடலின் முடிவில் கிடைக்கும் அவனின் ‘தாங்க்ஸ் வனி என்ற சொல்லோடு கூடிய, முன்னேற்றி முத்தம்’ சுகமாய் வாங்கிக் கொண்டு, அவனோடு ஒட்டியபடியே உறங்கிப் போனாள் வெற்றியின் வனமங்கை.
“திரு இன்னைக்கு அன்னூர் மண்டிக்கு போயிட்டு வந்துடு, நான் கால் பண்ணி சொல்லிடுறேன், அக்கவுண்ட் செக் செய்துட்டு நம்ப ஆபீஸ்க்கு வா. நீயே போயிடுவியா, இல்ல டிரைவர் வேணுமா? வழியெல்லாம் தெரியும் தான.? என மருமகனைக் கேட்டுகொண்டே சாப்பிட அமர்ந்தார் பாலன்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா, நான் மேனேஜ் பண்ணிக்குவேன். கார் வேண்டாம், பைக் போதும். அதுதான் இந்த டிராஃபிக்கில் போறதுக்கு பெஸ்ட். நான் முடிச்சுட்டு வந்துடுறேன், நீங்க கிளம்புங்க.” என்றவன்,
வனிதாவிடம் திரும்பி “அத்தை லஞ்ச் கொடுத்து விட வேண்டாம், நான் வந்துடுறேன். மாமாவும் வீட்டுக்கு வந்துடுவார். அப்புறம் புகழ் மாம் பைக் கீ வேணும், வண்டி எப்படி இருக்குன்னு பார்க்கனும், கொடுங்க..” எனவும்,
“சரி.. நீ பார்த்து கவனமா வண்டி ஓட்டனும், இன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் சீக்கிரம் வந்துடுங்க. கோவிலுக்கு போகனும், குல தெய்வக் கோவில்ல, பூஜைக்கு சொல்லியிருக்கேன்” என்றவர், மகளைத் தேட அவளோ, அப்போது தான் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டு.
“பொம்பளை புள்ளையா நீ, மணி எத்தனை பார்த்தியா. ஒன்பது மணி வரை என்னத் தூக்கம். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. முதல்ல குளிச்சுட்டு வந்து சாமி கும்பிடு. எழுந்தவுடன் அப்படியே வர்றது என்ன பழக்கம்.?” எனக் கத்த,
“அம்மா ஜஸ்ட் ஒன் செகன்ட் பொறு, நான் எதுக்கு வந்தேன்னு சொல்லிட்டு போயிடுறேன்..” என்றவள், வனிதாவின் அருகில் வந்து அவரை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து, “Happy mothers day mummy” என்றதும், “ச்சீய் விடு பல்லு விளக்காம, என்ன பழக்கம் இது..?” என திமிறியவர் அவள் கடைசியாக சொன்னதும் அப்படியே நின்று விட்டார்.
தன் அம்மா ஷாக்காகி விட்டதை உணர்ந்தவள், தந்தையின் அருகில் சென்று, அவர் தட்டில் இருந்த கேசரியை எடுத்து, தாயின் வாயில் வைத்து “So sweet mummy, such a beautiful and selfless mother you are..” என்றபடியே மேலேத் தன்னரைக்கு ஓடி விட்டாள்.
உணவு மேஜையில் இருந்த ஆண்கள் இருவரும் அவளின் செயலில் சிரித்து விட்டனர். பாலனுக்கு தன் அன்னையின் நினைவு வர, போனை எடுத்து நாச்சியாரை அழைத்துப் பேச,
திருவின் முகத்தில் ரகசியமான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. வெற்றி எதற்கு தன்னை இங்கு அனுப்பி இருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது. புரிந்த விசயம் மனதுக்குள் மழைசாரலாய் தீண்டியது.
நாச்சியாரிடம் பேசியவர், அதிர்வில் நின்றிருந்த மனைவியிடம் போனை கொடுக்க, அதை வாங்கியவர் “அத்தை” என்றபடியே பேச ஆரம்பித்து விட்டார்.
அப்போது அங்கே வந்த ராமசாமியிடம் “மாமா நான் கிளம்புறேன், நீங்க கோவிலுக்கு பில்டிங் கட்ட சொல்லி இருந்தீங்க இல்ல, அதுக்கு ஏ கே பில்டர்ஸ்ல இருந்து இன்னைக்கு வர்றாங்க. நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன். அப்புறம் தர்மகர்த்தாக்கிட்ட பேசலாம். திரு இனி மேக்ஸிமம் ஆபீஸ் ஒர்க் பார்த்துப்பான், புகழ் வர்றவரை எந்தக் கவலையும் வேண்டாம். திருவும் கொஞ்ச நாள்ல ஜெர்மனி போயிடுவான், விசாவுக்காக வெயிட் பன்றான். அதுவரை நம்ம கூடத்தான் இருப்பான்.” என்றதும்,
“செய்ங்க மாப்பிள்ளை.. நீங்க என்ன செய்தாலும் சரிதான்.. அதோட திரு ஏன் ஜெர்மனி போகனும், இங்கேயே இருக்கலாம் இல்ல, படிச்சு எல்லாரும் வெளினாட்டுக்குப் போயிட்டா, இங்க யாரு வேலை செய்வா..? ஏன் திரு உனக்கு வெளிநாட்டுக்குப் போக அவ்வளவு ஆசையா..” என்றார் அந்த பெரியவர்.
“அப்படியெல்லாம் இல்ல தாத்த, ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் போயிட்டாங்க, எனக்கும் ஆசைதான். ஆனா அம்மாவுக்கு விருப்பம் இல்ல. வெற்றி மாமாவும் வேண்டாம்னு தான் சொல்றாங்க, ஆனா புகழ் மாமா போய் ஒரு மூனு வருஷமாச்சும் இருந்துட்டு வர சொல்றார். எனக்கும் அதுதான் சரின்னு படுது, த்ரீ யேர்ஸ் அப்புறம் இங்க தான்…” என்றான் திருவும் பதிலுக்கு.
“வெற்றி சொல்றதும் சரிதான், புகழ் சொல்றதும் சரிதான். ஆனா உனக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் செய். உன்னோட முடிவுகளை நீ மட்டும் தான் எடுக்கனும். அதுக்கு உனக்கு மட்டுமே உரிமை இருக்கு. யாரோ சொல்றாங்கன்னு கேட்டு பின்னாடி வருத்தப்படக் கூடாது..” என்ற பெரியவரின் பேச்சில், “சரி தாத்தா..” என்ற வார்த்தைகளைத் திருவின் வாய் தானாக உதிர்த்தது.
“அப்பா உங்களுக்கு என்ன வைக்கட்டு, இடியாப்பம், தோசை, அடை இருக்கு..” என்ற மகளிடம்,
“மணி எங்கடா, நானும் அவளும் வெளியே போகலாம்னு ப்ளான் செய்துருக்கோம், அவ வரட்டும் . சேர்ந்து சாப்பிட்டுக்குறோம்..” எனவும்,
“அப்பா… அவளுக்குப் படிக்க னெறைய இருக்கு, அவளை எங்கேயும் கூப்பிடாதீங்க, ஊர் சுத்தன்னா முதல் ஆளா கிளம்புவா.., புகழ் இருந்த வரைக்கும் இவ படிப்பைப் பத்திக் கவலையே இல்ல. ஆனா இப்போ எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போல, அப்படி படுத்தி எடுக்குறா.. வெற்றிக்கிட்ட கேட்டுப் படிக்கிறேன்னு வீடியோ கால் போட்டு, படிக்கிறத தவிர, மத்ததெல்லாம் பேசுறா.. இவளை என்ன செய்ய..” என அன்னையாக புலம்ப,
“வனிதா இதுக்கெல்லாம் டென்சன் ஆகி, உடம்பைக் கெடுத்துக்காத, அவ ஒன்னும் சின்ன பிள்ள இல்லை. திரு இருக்கான்ல, ஈவ்னிங்க் அவனைக் கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லி, சொல்லிக் கொடுக்க சொல்லு, இல்லை மார்னிங் நேரமா எழுப்பி படிக்கச் சொல்லு, திரு அதெல்லாம் செய்வான்.. நீ கவலைப்படாத, இன்னைக்கு மணி மாமா கூட போயிட்டு வரட்டும்.. வெற்றி தான் போகச் சொல்லிருக்கான்..” என பாலன் சொன்னதும், அப்படியே அமைதியாகி விட்டார் வனிதா.
இவர்கள் பேசியதெல்லாம் அந்த வீட்டு இளவரசிக்குத் தெரிய வரும்போது அவள் என்ன முடிவு செய்வாள், தனக்கு பாடம் எடுக்க வரும் திருவை தலையால் தண்ணீர் குடிக்க வைக்கப் போகிறாள் என்று அப்போது யாருக்கும் தெரியாது.