• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிங்கிள் பேரன்ட் - செ. மதுரம் ராஜ்குமார்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கமலியின் தந்தை


அன்றைக்கு கமலி எப்போதும் இல்லாததை விட மிகவும் குஷியாக இருந்தாள். ஏனென்றால் அன்று வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் அப்பா ஃப்ளைட் ஏறி வரப்போகிறார்.

ஆம், சொல்ல மறந்துவிட்டேன் கமலியின் அப்பா ஒரு பிஸினஸ்மேன் நான்கு வருஷத்துக்கு ஒருமுறை மட்டும் தான் வீட்டுக்கு வருவார். வந்துட்டாருனா அவரும் கமலி கூடவே இருந்திடுவாரு. எவ்வளவு பெரிய வேலை என்றாலும் கமலிய விட்டு பிரியவே மாட்டாரு. கமலி ஆறாவது படிக்கும் பொண்ணு அப்பா வந்துட்டாருன்னா வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி எழுவாள் மீண்டும் கமலியின் அப்பா கிளம்புறேன்னு சொல்லரப்ப அழு அழு அழுன்னு அழுதிடுவாங்க அந்த கமலி.

நான்கு வருடங்களும் நான்கு யுகமாய் சென்ற பின்னும் கூட அந்த நாளை என்பது நாற்பது யுகமாய் இருந்தது கமலிக்கும் அவள் அம்மாவிற்கும்.

அடுத்த நாள் அவர் வீட்டு வாசலில் வந்து சானிடைசர் போட்டு காலிங் பெல்லை அடித்தார். துள்ளி ஓடி வந்து கதவைத் திறந்த கமலி அப்பாவை ஆரத்தழுவ சென்றபோது அவர் ஒதுங்கி நின்றார். மாஸ்க்கும் க்ளௌசும் ரெயின் கோட் போல் இருந்த ஒரு உடையும் அணிந்திருந்தார் வினோதமாக கமலியின் அப்பா. கமலிக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் தன் அப்பா அடுத்து இந்த செய்தியைத் தான் சொல்வார் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் இத்தனை சந்தோஷம் கமலியின் முகத்தில் தெரிந்திருக்காது.

கமலிக்கும் அவள் அம்மாவிற்கும் அப்பா செந்தில்குமார் சொன்ன செய்தி தூக்கி வாரி போட்டது. அது என்ன செய்தி என்றால்"எனக்கு கொரோனா"நான் ஹாஸ்பிடல் வந்து நான்கு நாள் ஆச்சு நாளைக்கு மறுபடியும் அமெரிக்கா போகணும் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் செந்தில்குமார்.

கமலிக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த தெரியவில்லை, ஓவென்று அழுதாள். நான்கு வருடங்களுக்குப் பின் தன் தந்தையை பார்க்கும்போது இப்படிப் பேச முடியாமல் போய்விட்டதே என ஆத்திரப்பட்டாள்,அழுதாள் பயனில்லை போக மனமில்லாமல் போகும் செந்தில்குமார் கூட,தெரியாமல் பாசத்தில் பேசி குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று வருத்தப்பட்டு கண்ணீருக்கு அணை கட்டினார். மீண்டும் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றார். மீண்டும் கமலி வாசலைப் பார்த்து அமர்ந்தாள் பாசத்தைப் பிரித்த கொரோனாவை வேரறுக்க வேண்டும் மாஸ்க்கும் சானிடைசரும் அதன் கேடயங்கள் மீண்டும் இந்த தந்தை மகள் இணைய வேண்டுவோம்..!

உலகம் அனைத்தும் கட்டுண்டு கிடக்க. நடக்கத் துணிவோம் கொரோனா இல்லாத உலகத்தில். பாசங்கள் பிரித்தது பந்தங்கள் பிரித்தது இன்னொரு உயிர் இழக்க வேண்டாமே..! ஒத்துழையுங்கள் நண்பர்களே..! ஆரோக்கியமான உலகத்தை வருங்காலத்திற்கு பரிசளிப்போம்..!
 
Top