சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 23
" இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது பாஸ். அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலால் இத்தனை பேரின் உழைப்பும் பாழாகி நிற்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ, இதற்கு எல்லாம் அவள் ஒருத்தி தான் காரணம் எனும் போது, இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இதை எதையும் தெரிந்து கொள்ளாமல், யாரிடமும் சொல்லாமல், அவள் எங்கோ ஒரு வாரம் தனியாக ஊர் சுற்றக் கிளம்பி விட்டாள். இது எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம் தான் பாஸ் " என்றான் மது.
தனது தோழியாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அனைவரின் வாழ்வும் கேள்விக்குறியாகும் போது , நியாயத்தின் பக்கம் நின்று மது பேசினான்.
அவன் சொன்ன அனைத்து செய்திகளையும் புறம் தள்ளிவிட்டு, ஜேபி ஊரில் இல்லை என்ற அறிவிப்பில் வசீகரனின் சிந்தை தள்ளாடியது.
' மது! ஜேபி இப்பொழுது எங்கே? ஜேபியின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டாயா? நீங்கள் யாராவது உடன் சென்றிருக்க வேண்டாமா? என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. தனியாக அனுப்பி இருக்க மாட்டேனே!" என்று ஆதங்கப்பட்டான் வசீகரன்.
'பாஸ்! ஸ்டாப்... ஸ்டாப்..." என்று உள்ளே ஓடி வந்தான் கிருஷ்.
" இப்போதான் விஷயத்தைக் கேள்விப்பட்டேன். ஜேபியால் தான் இவ்வளவு பிரச்சினையுமா?" என்றான் மூச்சிரைக்க கிருஷ். அவன் பின்னே யாதவும் வந்து சேர்ந்தான்.
மது மெதுவாக கிருஷ்ணாவின் கேள்விக்குத் தலையசைத்தான்.
'ஓ... காட்... பப்ஸை தின்னவன் வாயை துடைத்துத் தானே ஆக வேண்டும். நாம் வைக்கும் பாசம், நம்மை வச்சு செய்யும். ஓகே. ஜேபிக்கு நீங்கள் கொடுக்கப் போகும் தண்டனையை எங்கள் மூவருக்கும் தாருங்கள்" என்றான் கிருஷ்.
" உங்களுக்கு எதற்கு தண்டனை?" என்றான் வசீகரன்.
" ஆண்ட்ராய்டு போனுக்கு வாக்கப்பட்டா ஆப் ஏத்தி தானே ஆகணும். ஜேபிக்கு ஒன்று என்றால் அது எங்களுக்கும்தான். ஜேபியின் சுக, துக்கங்களில் எங்களுக்கும் பங்கு உண்டு" என்றான் கிருஷ்.
"சரி! பங்கிட்டுக் கொள்வதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஜேபி எங்கே?" என்றான் வசீகரன்.
"அது... அது..." என்று வார்த்தைகள் தடுமாறி நெளிந்தான் கிருஷ்ணா.
" ஜேபி ஏதாவது ஒரு தடையத்தைக் கண்டிப்பாக விட்டு விட்டு சென்றிருப்பாள். புதையல் வேட்டையில் தேடுவதைப் போல் அவள் தரும் குறிப்புகளைக் கண்டுபிடிப்பதும் கொஞ்சம் சிரமம் தான்.
ஒருமுறை கல்லூரிச் சுற்றுலாவில் எங்கள் அனைவருக்கும் ஒரு கடிதத்தை தந்துவிட்டு தனியே ஊர் சுற்று கிளம்பி விட்டாள்.
ஆனால் கடிதத்தில் ஒரு எழுத்து கூட இல்லை. கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்த எங்களுக்கு, அவள் திரும்பி வந்து அந்த ரகசியச் செய்தியை கண்ணுக்கு புலப்படுத்தினாள்.
காகிதத்தில் எலுமிச்சைச் சாறின் உதவியால் எழுதினால், எழுத்துக்கள் கண்ணுக்கு புலப்படாது. அந்தக் காகிதத்தை சூடாக்கும் போது எழுத்துக்கள் பழுப்பு நிறமாகி கண்ணுக்குப் புலப்படும்.
அவள் படித்த பயாலஜி, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாவற்றையும் பயன்படுத்தி, எங்களை சோதனை எலியாக்கி விடுவாள்.
ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்று விட்டு பல்பு வாங்குவதே எங்களுக்கு வழக்கமாயிற்று.
கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது தடயம் கொடுத்திருப்பாள். வழக்கம்போல் நீங்களும் எங்களுடன் சேர்ந்து பல்பு வாங்கப் போகிறீர்கள் பாஸ் " என்றான் கிருஷ்.
" ச்சீ... ச்சீ... நம்ம பாஸ் ஜேபி கிட்ட பல்பு எல்லாம் வாங்க மாட்டார். அவர் அவளுடைய ஆ... ஆ... சைக் கணவர்.... ர்... ர் அல்லவா? பெருசா டியூப்லைட் தான் வாங்குவார் " என்றான் யாதவ்.
" விளையாட்டை நிறுத்துகிறீர்களா? பாஸ் நிஜமாவே ஜேபி ஏதாவது ஃக்ளூ கொடுத்திருக்கலாம். ப்ளீஸ் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன் " என்றான் மது.
"நிச்சயம் இல்லை மது. எனக்கு எந்தக் குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. நமது அலுவலகத்திலும் எந்த குறிப்பும் இருப்பது போல் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது ஃக்ளூ கிடைத்தால் என்னிடம் கண்டிப்பாகப் பகிர வேண்டும்" என்றான்.
" அலுவலகத்தில் இல்லை என்றால் என்ன பாஸ்? வாங்க நாம் வீட்டிற்குச் சென்று தேடலாம்" என்றான் கிருஷ்.
" பாஸ் அப்போ இந்தப் பிரச்சனை..." என்று தயக்கத்துடன் இழுத்தான் மது.
" மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதற்கு அவர்கள் மீண்டும் வரவேண்டும். இதனைச் சரி செய்ய நாட்களும் எடுக்கலாம். மாதங்களும் எடுக்கலாம். ஏன் வருடங்கள் கூட எடுக்கலாம்... கண்டிப்பாகச் சரி செய்ய வேண்டும். சரி செய்வேன்" என்று முயன்று புன்னகைத்தான் வசீகரன்.
"அது சரி ஜேபி உங்களுக்கு ஏதாவது தகவல் அனுப்பினாளா?" என்றான் ஆர்வத்துடன் வசீகரன்.
"என்னை யாரும் தேட வேண்டாம்... என்று ஒரு குறுஞ்செய்தி அவ்வளவுதான் பாஸ்"
" நான் பார்க்கலாமா கிருஷ்?" என்றான்.
"ஓ... தாராளமாக..." என்ற கிருஷ் ஜேபி தனக்கு அனுப்பிய செய்தியைக் காண்பித்தான்.
மணல் கடிகாரத்தில் மணல் மேலிருந்து கீழாகச் சிந்துவதைப் போல் ஒரு புகைப்படத்தில், நான் ஓடிப் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்ற செய்தியைப் பதிவிட்டு இருந்தாள்.
"இந்தச் செய்தியை எனக்கு அனுப்ப முடியுமா?" என்றான் வசீகரன்.
" உங்களுக்கு இல்லாததா பாஸ்? இதோ அனுப்பி விடுகிறேன்" என்று செய்தியை வசீகரனுக்கு அனுப்பினான் கிருஷ்.
ஜேபியின் வீட்டிற்கு வந்து, வசீகரன், பெருமாளிடம் ஜேபியைப் பற்றி விசாரிக்க, "உங்கள் இருவருக்குமான ரகசியத்தை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இது என் மகள் உங்களுக்கு வைத்திருக்கும் சவால் மாப்பிள்ளை. அதில் நீங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று நான் மனதார இறைவனை வணங்கிக் கொள்கிறேன்" என்று சிறு வெட்கத்துடன் கூறினார்.
'நிச்சயம் நான் கண்டுபிடித்து விடுவேன் என்று தான் அம்மணி இந்த சவாலை எனக்கு வைத்திருக்க வேண்டும். நீங்கள் சென்ற இடத்தைக் கண்டுபிடித்து, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நம் காதலையும் கண்டுபிடித்து விடுவேன் அம்மணி' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் வசீகரன்.
அனைவரும் ஒவ்வொரு இடத்திலும் அவளின் குறிப்புகளைத் தேட, ஒருவருக்கு கூட வித்தியாசமான துருப்பு எதுவும் கிடைக்கவில்லை.
நால்வரும் சோர்வடைந்து வரவேற்பரையில் இருக்கும் சோபாவில் தலை சாய்த்து அமர்ந்தனர். அவர்கள் முன் வந்த அன்னம்மாள், "மாப்சன், ரொம்ப களைப்பா இருப்பது போல் தெரிகிறது ஏதாவது ஜூஸ் கொண்டு வரவா?" என்றார்.
" ஏன்டா! ரைஸா செல்லோ! எங்க கிட்ட எல்லாம் கேட்க மாட்டீங்களா?" என்றான் கிருஷ்.
" பியூட்டி என்று அழைத்த நீங்கள் எல்லாம் இப்பொழுது என்னுடைய அலங்காரத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்ற கோபம் தான் கிருசு.... " என்றார்.
" அவ்வளவு தானே புகழ்ந்துட்டா போச்சு! இந்த சாரி சூப்பர்!"
"தேங்க்ஸ்... மீசோ ஆப்பில் போன வாரம் வாங்கியது"
"ஹேர் கலரிங் சூப்பர்!"
"தேங்க்ஸ்... யூடூப்பில் பார்த்து செய்தது"
" மூஞ்சி கூட லைட்டா பளபளன்னு இருக்கு "
" தேங்க்ஸ்...டா... அம்பி... அது முல்தானி மட்டிடா"
" ஹி... ஹி... இவ்வளவு செஞ்சும் நீங்க ஏன் பேபி இவ்வளவு அசிங்கமா இருக்கீங்க? " என்றான் கிருஷ்.
"கிர்.... கிர்.... உனக்கு ஜூஸ் தானே வேணும் கிருசு. அரளிப் பழத்துல ஜூஸ் போட்டுக் கொண்டு வரேன்" என்றார் அன்னம்மாள்.
"ஹி... ஹி... வீட்ல வேலை செஞ்சு ஒரே களைப்பா இருப்பீங்க செல்லோ... அதனால முழுசையும் நீங்களே குடிச்சுக்கோங்க செல்லோ" என்ற கிருஷ், ' அம்மாடி மாட்டி இருந்தா உசுரே இல்ல போயிருக்கும். உசுரு முக்கியம் பிகிலு' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அவர்களின் கேலி கிண்டலுக்குள் நுழைய முடியாமல், " பேபி உங்களுக்கு ஜேபி சென்ற இடம் பற்றி ஏதாவது தெரியுமா?" என்றான் கண்களில் காதல் வலியுடன் வசீகரன்.
" மாரியம்மா மக பேரு மேரியம்மா என்ற கதையாக, என் குணத்தில் பாதி கூட என் பேத்தி கிடையாது மாப்சன். உங்களையெல்லாம் இப்படி படுத்தி வைக்கிறாளே! அந்தப் புண்ணியவதி வெளியே போகும்போது நீங்கள் தேடி வந்து அவளைக் கேட்டால் மட்டும் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஜேபி கொடுத்த அந்த சிறிய பரிசுப் பெட்டியினை வசீகரனின் கையில் ஒப்படைத்தார்.
கண்களில் ஒளியுடன், தீவிர ஆர்வத்துடன் சரசரவென வேகமாக அந்த பரிசு பெட்டியினைப் பிரித்தான் வசீகரன்.
அனைத்து ஜோடிக் கண்களும் மிக ஆர்வமாக அந்த சிறிய பரிசு பெட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க அதனுள் இருந்து யானை உருவம் பொறித்த ஒரு கீ செயினை வெளியில் எடுத்தான் வசீகரன்.
அவன் கையிலிருந்த கீ செயினில் இருந்த யானை உருவம் இடவலமாக அசைந்து ஆடியது வசீகரனின் கை அசைவிற்கு ஏற்ப.
'இதன் மூலம் ஜேபி தனக்கு சொல்வது என்ன'?' என்று அவனது மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது.
பதிலை கண்டுபிடிக்க முடியாமல் நெற்றியினைச் சுருக்கிக் கண்களை மூடி அவன் யோசித்துக் கொண்டிருக்க, " நான் கண்டுபிடித்து விட்டேன்... " என்று கூச்சலிட்டான் கிருஷ்.
எல்லோரும் அவனை ஆர்வத்துடன் பார்க்க அவனோ வசீகரனைப் பார்த்து, " நான் சொல்லி விடுவேன் பாஸ். ஆனால் நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது" என்றான் முன்னெச்சரிக்கையுடன் இரண்டடி அவனை விட்டு தள்ளி அமர்ந்து.
பசித்தவனுக்கு பழைய சோறும் அமிர்தம் என்பதைப் போல் அவனின் வார்த்தைக்காக மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தான் வசீகரன்.
"இதிலிருந்து நம் ஜேபி மேடம் சொல்வது என்னவென்றால், யானை எப்படி தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொள்ளுமோ, அதைப்போல தன்னை திருமணம் செய்து கொண்டு வசீகரன் தனக்குத்தானே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாகக் கூறுகிறார் டும் டும் டும் டும்... " என்றவனின் முதுகில் மதுவும், யாதவும் டொம்... டொம் என மத்தளம் வாசித்தனர் சத்தமாக.
மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு, ஓர் வேகப் பெருமூச்சுடன் வசீகரன் விறுவிறுவென மாடி ஏறிச் சென்றான்.
சோர்வாக கட்டிலில் அமர்ந்து ஜேபியின் தலையணையைப் பார்த்து, " நான் கண்டுபிடிக்க மாட்டேன் என்று நினைத்து விட்டீர்களா அம்மணி? கண்டிப்பாக நீங்கள் சென்ற இடத்தின் குறியீடாகத்தான் இருக்கும். எதற்காக சென்றீர்கள் என்று கண்டுபிடித்தால்... எங்கே சென்றீர்கள் என்று எளிதாக கண்டுபிடித்து விடுவேன்" என்றவன் தனது லேப்டாப்பை திறந்து, ஜேபியின் குறிப்புகள் அடங்கிய அலுவலகக் கோப்பை திறந்தான்.
வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவனின், கண்கள் அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள் என்ற இடத்தில் சிற்பக்கலை என்று இருந்ததை அவன் மனது கோடிட்டுக் கொண்டது.
ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும், ஜேபியைக் கண்டுபிடிக்க முடியாத தனது இயலாமையில் வசீகரன் சரி வர உண்ணாமல், உறங்காமல் தன்னை வருத்திக் கொள்ள ஆரம்பித்தான்.
தனது மாப்பிள்ளை படும் துன்பத்தைப் பார்த்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் பெருமாள், தெய்வமான, தன் மனைவியிடம் தன் மகளின் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுமாறு வேண்டிக் கொண்டார்.
அன்று இரவு வசீகரன் உணவு உண்ணாமல், அறைக்குச் சென்று விட அன்னம்மாள் பாட்டி, பால் குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு, வசீகரனின் அறைக்குச் சென்றார்.
"ஐயா... ராசா... இந்த ராங்கிக்காரி வருகிற வரைக்கும் இப்படி நீ பட்டினி கிடந்தால், உன் உடம்பு என்னத்துக்கு ஆகும். இந்தப் பாட்டி சொல்றத கேளு தம்பி. இந்த ஒரு டம்ளர் பாலை மட்டும் குடித்துவிட்டு உறங்கு ராசா.
அந்த போட்டோவில் இருக்கிறாளே அவள் அம்மா ஆண்டாள், அவள் அத்தனை அமைதி. பரமசாது. இவள் தான் இப்படி இருக்கிறாள். ம்... எல்லாம் இந்த பெருமாள் கொடுக்கும் செல்லம் தான் " என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.
அவர் சென்றதும் எதிரே இருந்த தனது மாமியாரின் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள், கீழே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜேபியின் புத்தக அலமாரிக்குச் சென்றது.
சிற்பக் கலைகளைப் பற்றிய பல்வேறு புத்தகங்களைக் கண்டதும் அவன் மனதிற்குள் ஏதோ பரவசம் தோன்றியது. விதவிதமான சிற்பங்களைப் பற்றியும் அதனைச் செய்யும் நுணுக்கத்தையும் எடுத்துரைத்தன அந்தப் புத்தகங்கள்.
தன்னிடம் இருந்த இரண்டு துருப்புக்களையும் ஒன்று சேர்த்து அதனுடன் இணைத்து விடை காண முயற்சித்தான் வசீகரன்.
சிற்பம் செய்வதில் ஜேபியின் நுணுக்கங்களை வசீகரன் நன்கு அறிவான். எந்தச் சிற்பத்தைத் தேடி அவளின் பயணம் என்று சரியான பாதையில் யோசிக்க ஆரம்பித்தான். பாதை புரிந்தாலும் வெளிச்சம் புலப்படவில்லை அவனுக்கு.
மங்கி பிரதர்ஸ் மூவரையும் கான்பிரன்ஸ் காலில் அழைத்தான். தூக்கம் வழிந்த குரலில், "எஸ் பாஸ்" என்றனர் அனைவரும்.
" கைஸ்... உங்களுக்குத் தெரிந்த வரை ஜேபி எந்த வகையான சிற்பத்தின் மீது அதிக ஆர்வம் செலுத்துவாள்? " என்றான் அவசர அவசரமாக.
" அவளுக்கு சோப்பில் செய்யும் உருவங்கள் கைவந்த கலை பாஸ் " என்றான் யாதவ்.
" கையில் கிடைத்த சாக்பீஸ், மரத்தில் கூட சிற்பங்களைச் செத்துக்குவாள்" என்றான் கிருஷ்.
" ப்ளீஸ் ப்ளீஸ் இதைத் தாண்டி வேறு ஏதாவது பெருசா யோசிங்க " என்று பாவமாகக் கெஞ்சினான் வசீகரன்.
" பெருசா... பெருசா... எஸ் பாஸ்... ஜேபிக்கு மணற் சிற்பங்கள் செய்வதில் மிகவும் ஆர்வம் உண்டு. நிறைய பயிற்சி வகுப்புகள், செமினார்கள் என்று சென்றிருக்கிறாள்" என்றான் மது.
"வாவ்.... எக்ஸாக்ட்லி... உங்களுக்கு அனுப்பிய மணல் கடிகாரம் போன்ற புகைப்படம் அதைத்தான் கூறுகிறது. அப்படி என்றால் அந்த யானை...." என்றவன் அலைபேசியை சட்டென்று துண்டித்து விட்டு, கூகிள் ஆண்டவரிடம் சரணடைந்தான்.
" ஜேபி கூறிவிட்டுச் சென்ற ஒரு வாரத்திற்கு இன்னும் ஒரு நாள்தான் பாக்கி இருக்கிறது. இவர் சும்மா விட்டுவிட்டால் அவளே வந்துவிடுவாள், பாஸ் ஓவர் பில்டப் பண்றாருடா. நடுராத்திரியில போன் பண்ணிக்கிட்டு. இவர் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்காரு? இவரு பாஸா? லூசா? போன வைங்கடா எல்லா அயோக்கிய ராஸ்கல்களும்" என்று அலைபேசியைத் துண்டித்தான் கிருஷ்.
சிறகுகள் நீளும்...