• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 10

தாராவியில் இருந்த அவன் அலுவலக முகவரியைக் கண்டதும், செல்லும் பாதைகள் அவள் நினைவில் வளைந்து, நெளிந்து ஓடியது.

அவன் ஆணையிட்டாலும், அவள் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை. அவன் கட்டளைகளைக் கேட்பதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. அவையெல்லாம் அவள் வகுத்த எல்லைக்குள்ளே இருந்தது.

தன் அறைக்குள் சென்று, அங்கிருந்த கண்ணாடியில் தன்னை உற்று நோக்கினாள். கண்ணாடியில் தெரிந்த புற அழகைத் தாண்டி, தன் அகத்தை தேடினாள்.

'என்னடி இப்படி பார்க்கிறாய்?' என்றவள் மனம் கேள்வி கேட்டது.

' எனக்கான பாதை, எனக்கான பயணம். என்னோடு...' என்றவள் நினைக்க, 'உன்னோடு நீ தான்!' என்றவள் மனம் அவளை உற்சாகப்படுத்த முயன்றது.

'அவன் தான் விட்டுவிட்டு சென்று விட்டானே, நீ எப்படி செல்ல போகிறாய்?' மூளையும் சேர்ந்து அவளைக் கேள்வி கேட்டது.

கண்களில் அலட்சியம் தோன்ற, நல்லானை அழைத்து ஒரு டாக்ஸி பிடித்து வரச் சொன்னாள். அவளின் முக்கியத்துவத்தை அறியாமல் அறிந்து வைத்திருந்த நல்லான், வெளியே சென்று ஒரு டாக்ஸி பிடித்து வந்தான்.

டாக்ஸி டிரைவர் , 'போகலாமா?' என்பது போல் அவளைப் பார்க்க, 'போகலாம்' என்பதைப் போல் கண்ணசைத்தாள். பின் சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு வானுயர்ந்த கட்டிடங்கள், பளபளப்பும், ஆடம்பரமும் மிக்க கடைவீதிகளைக் கடக்கும்போது, இத்தகைய இடத்திற்கு உள்ளே தான் அந்த இடமும் மறைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை எப்பொழுதும் போல் அவளை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்த கணமே இதயத்தை அடைக்கவும் செய்தது.

தாராவியில் அவனது அலுவலக கட்டடத்திற்கு வந்தவுடன், டாக்ஸி டிரைவர் பணத்திற்காக கையை நீட்டவும், டிரைவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கைகடிகாரத்தை திருப்பி பார்த்தாள். கண்களை மூடித் திறந்து, ஐவிரல்களை குறுக்கி நிமிர்த்தி ஒரு நிமிடம் யோசித்தவள், டாக்ஸி கதவைத் திறந்து இறங்கி வந்து, டிரைவர் இருக்கைக்கு அருகில் வந்து டாக்ஸி சாவியை கையில் எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் விறுவிறுவென நுழைந்தாள்.

"அரே பாகல் ஹோனா பந்த் கரோ... ( ஏய் பைத்தியம் நில்லு)" என்று கத்தினான் டாக்ஸி டிரைவர்.

ஒரு நிமிடம் நின்று அவனை ஆளுமையான பார்வை பார்த்தவள், அடுத்த நிமிடம் கண்களை சுழற்சியபடி, தள அறிவிப்பு பலகையை பார்த்துவிட்டு லிப்டுக்குள் நுழைந்து, செல்லும் தளத்திற்கான பட்டனை அழுத்தி விட்டு, லிப்டின் கதவு மூடப் போகும் நேரம் டிரைவரை பார்த்து தன்னை பின் தொடரும்படி சைகை செய்தாள்.

முகத்தில் கோபத்துடன், லிப்ட் சென்றடையும் தளத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் டாக்ஸி டிரைவர். அவள் சென்றடைந்த தளம் மின்னி ஒளிர்ந்ததும் , மறுபுறம் இருந்த லிப்டுக்குள் ஏறி அவள் சென்ற அதே தளத்தின் விசையை இயக்கி இருந்தான்.

கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தளத்தைக் கண்டதும் மெச்சுதலான பார்வை ஒன்று அவள் விழிகளில் மின்னல் போல் தெறித்தது. ஆராவமுதன் என்ற பெயர் தாங்கிய அறை கதவை லேசாக தட்டினாள். "எஸ்..." என்று உள்ளே வரும்படி அழைப்பு வந்ததும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

சங்கமித்ராவை கண்டதும் ஆராவின் விழிகள் யோசனையை தத்தெடுத்தபடி தன் கைக்கடிகாரத்தை பார்த்தது. ' இவ்வளவு சீக்கிரம் வர வாய்ப்பில்லையே! தெரியாத இந்த மும்பையில் அலைந்து திரிந்து, நடந்து வியர்வை வடிய வர வேண்டுமே! புத்துணர்ச்சியாக பொலிவுடன் வந்து நிற்கிறாளே!"' என்று எண்ணியவனின் புருவங்கள் மேலெழுந்து நின்றது.

அவன் வாய் திறந்து மறு வார்த்தை பேசும் முன், அவன் மேஜை மீது டாக்ஸியின் சாவியை வைத்தாள். 'அது என்ன?' என்று ஆராய்ச்சியாய் நோக்கும் முன், வியர்வை வழியும் தேகத்துடன், பதட்டம் மேலோங்க டாக்ஸி டிரைவர் அனுமதி இல்லாமலேயே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

தன் டாக்ஸியில் வந்துவிட்டு பணமும் கொடுக்காமல் சாவியை எடுத்துக்கொண்டு இந்தப் பெண் இங்கே வந்து விட்டதாக ஹிந்தியில் புகார் அளித்தான் .

டாக்ஸி டிரைவர் ஹிந்தியில் சங்கமித்ராவை தாறுமாறாக பேச ஆரம்பிக்க, தாடை இறுக,பல்லைக் கடித்தவன், அழைப்பு மணியை இடைவிடாது அழுத்தினான்ஆரா. அவனது உதவியாளன் என்ன? ஏது? என்று பதறிக் கொண்டு உள்ளே வர, "என் அனுமதி இல்லாமல் எனது அறைக்குள் எப்படி இவர்களை வர விட்டாய்? " என்று உறுமினான்.
" சார்! அந்த மேடம் நம்ம விசிட்டிங் கார்டை காட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். இந்த டாக்ஸி டிரைவர் அந்த மேடத்தை எங்கே? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார். சாரி சார்" என்று வார்த்தைகளை மென்று முழுங்கியபடி நின்றான் ஆராவின் உதவியாளன்.

" உனக்கு ஒரு நிமிடம் தான் அவகாசம். ரைட் " வார்த்தைகளை கடித்து துப்பினான் ஆரா.

டாக்ஸி டிரைவர் எதையும் பார்க்காமல், சங்கமித்ராவை நோக்கி கை நீட்டி கொண்டே, "கொலாபாவிலிருந்து இங்கு வந்ததற்கு பணமும் கொடுக்கவில்லை. என் டாக்ஸியின் சாவியையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்" என்று ஹிந்தியில் வசைப்பாடிக்கொண்டே இருந்தான்.

கொதித்துக் கொண்டிருந்தவன் சற்று திரும்பி சங்கமித்ராவை பார்த்தான். அவளோ தன் கைகளை முன்னும் பின்னும் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள் மிக நிதானமாக.

அவளை தாக்கத் தான் எடுக்கும் ஆயுதம், எல்லாம் தன்னையே திருப்பித் தாக்குவதை கண்டு உள்ளம் கொதித்தான் ஆரா.

அவர்களின் செல்வ நிலையோ அதிகாரமோ தெரியாத அந்த டாக்ஸி டிரைவர் மிகவும் துள்ளிக் கொண்டிருந்தான். யாரும் எந்த எதிர்வினையும் காட்டாமல், தனக்கு பணமும் கிடைக்காத ஆத்திரத்தில் மிகவும் கீழ்த்தரமாக தராதரம் குறைந்த, அவள் பிறப்பையே தப்பாக பேசும் ஒரு வார்த்தையை சங்கமித்ராவை நோக்கி வீசினான்.

அவளோ அந்த வார்த்தையில் காயப்படாமல், தலையைக் கூட திருப்பாமல் கண் பார்வையை மட்டும் அவன் புறம் வீசி, "பச்..." என்ற ஒலியுடன் மீண்டும் தன் கைகளை ஆராய ஆரம்பித்தாள்.

" ஷட் அப்...என்று கத்தியவன் , சுட்டு விரலை தன் உதவியாளன் புறம் நீட்டி, பின் கோபம் நிறைந்த விழிகளால் டாக்ஸி டிரைவரை பார்த்து கை நீட்டினான்.

அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட உதவியாளன் டாக்ஸி டிரைவரை உடனே அந்த அறையை விட்டு அப்புறப்படுத்த முயன்றான். " என் பணம்... என் டாக்ஸி சாவி... " என்று கத்திய டாக்ஸி டிரைவரை வெளியே தள்ளிக் கொண்டு வந்து, சாவி மற்றும் பணத்தை கொடுத்து சரி செய்தான்.

'நான் எதிர்பார்த்த சூழல் என்ன? இங்கு நடந்த சூறாவளி என்ன?' என்று குழம்பி நின்றான் ஆரா. கேள்வியாய் அவன் சங்கமித்ராவை பார்க்க, அவளோ, ' அடுத்து' என்பது போல் அவனைப் பார்த்தாள்.

'ஓ... மேடம் நடந்து வர மாட்டீர்களோ? டாக்ஸியில் தான் பயணம் செய்வீர்களோ? அதுவும் என் செலவில்" என்றான் ஏளனமாக.

" சங்கமித்ரா நடந்து வரலாம். ஆனால் மிஸஸ் ஆராவமுதன் நடந்து வர முடியாதே " என்றாள் சற்றும் அவனுக்கு குறையாத ஏளனக் குரலில்.

" உன் கல்வித் தகுதி என்ன? " என்றான் அவளை மட்டப்படுத்தும் நோக்கில்.

" நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவு படித்திருக்கிறேன் " என்றாள் உறுதியான குரலில்.

"ஓ... உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது. எத்தனை தூரம் உன்னை நீ உயர்த்திக் காட்டினாலும், உண்மையில் நீ என் அருகில் கூட வரத் தகுதி இல்லாதவள்" என்றான் சர்வ நிச்சயமாக.

" உங்களால் முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள். பணம் என்ற ஒரே ஒரு அளவுகோலைத் தவிர" என்றாள் திடமாக.

"அதை என்னால் நிச்சயம் சுலபமாக நிரூபிக்க முடியும்" என்றான் ஆணவமாக.

" முயற்சி உங்களுடையது. முடிவு என்றும் என்னுடையது"

"இதோ இது, இன்று மதியம் நடைபெற இருக்கும் மீட்டிங்கிற்கான கட்டிட மாதிரி வரைபடம். இதைப் பற்றிய தெளிவான விளக்கத்துடன் உன் தொகுப்புரையை வழங்கு. சரியாக மதியம் 2 மணிக்கு" என்றான்.

" எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வேண்டும் " என்றாள் அமைதியாக.

" வேலை நேரத்தில் கம்ப்யூட்டரில் விளையாடப் போகிறாயா? " என்றான் கிண்டலாக.

பேச்சற்ற மௌனமே அவள் பதிலாக இருந்தது.

தனது அலுவலகத்தில் இருக்கும் வெவ்வேறு ப்ராஜெக்ட் டீம் லீடர்களையும், அவர்களின் உதவியாளர் குழுவையும் மதியம் நடைபெற இருக்கும் மீட்டிங்க்கு வரும்படி உத்தரவு பிறப்பித்தான். சிறந்த கேள்வி கேட்பவர்களுக்கு இந்த வருட 'திறமையாளர் விருது' வழங்கப்படும் என்று அறிவித்தான்.


' கட்டிடம் கட்டப் போகும் இடம் பற்றி எந்த குறிப்பும் இல்லாமல், கூடுதல் தகவல் எதுவும் இன்றி பிளான் பேப்பரையும் சில போட்டோக்களையும் வைத்து, கட்டிடக்கலை பற்றி அடிப்படை அறிவு இல்லாதவள் என்ன செய்ய முடியும்?' என்று மிதப்பாக இருந்தான்.
அனைவரும் முன்பும் அவள் பேசத் தயங்கி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் கூனிக்குறுகி நிற்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவலாக இருந்தான்.

சங்கமித்ராவோ சிறு துளி நிமிடத்தையும் வீணாக்காமல், கம்ப்யூட்டரை தீவிரமாக பார்த்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தாள். அவள் கை விரல்களும், கருவிழிகளும் நர்த்தனம் ஆடியபடி இருந்தது கம்ப்யூட்டர் ஒளியின் முன்பு.

பெரிய பெரிய திறமையாளர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயம், அவளுக்கு நிச்சயம் சாத்தியப்படாது என்பதை உணர்ந்தே அவளை அவமானப்படுத்தும் வெறியுடன் காத்திருந்தான்.

தன் தாகம் தீர்க்க தண்ணீர் கூட அருந்தவில்லை சங்கமித்ரா. ஏதோ தீரா தாகத்துடன் கம்ப்யூட்டருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

" உன் நேரம் முடிந்தது" என்றான் அவள் அருகில் வந்து.

தான் திரட்டிய தகவல்களை டிரைவில் ஏற்றினாள். அவனுடன் செல்வதற்கு எழுந்து நின்றாள்.

" ஆனாலும் மிஸஸ் ஆராவமுதன் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான் " என்றான் நக்கல் அடித்தபடி

அவன் முன்னே செல்ல, அவள் பின்னே செல்ல, மனம் தந்த கரை புரண்ட உத்வேகத்தில் ஒரு கட்டத்தில் அவனை மீறி முன்னேறி நடந்தாள் சங்கமித்ரா. ராஜாளியின் சிறகின் மீது ஏறி உட்கார்ந்து பறக்கும் அந்த சிட்டுக்குருவியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஆராவமுதனுக்கு.

மீட்டிங் காலில், மும்பையின் நவ நாகரீக உடையலங்காரத்தில் பெண்களும், ஆண்களும் அமர்ந்திருக்க சாதாரண காட்டன் புடவையில், ஒரு கையில் கட்டுடன் மீட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தாள்.

அசையும் நாற்காலியில் வந்து அமர்ந்த ஆரா, இடவலமாக தன் உடலை அசைத்து நாற்காலியை அரை வட்டமாக சுழற்றி, வலது கையை நாடியில் குற்றிக்கொண்டு, இடது கையினால் ஆரம்பிக்கலாம் என்று சங்கமித்ராவிற்கு சைகை தந்தான்.

தன் முன்னே வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொண்டாள். அனைவருக்கும் மதிய வணக்கத்தை தெளிவான ஆங்கிலத்தில் கூறிவிட்டு தன் உரையை தொடங்கினாள்.

அவளது பேச்சை நிறுத்தி, ஹிந்தியில் பேசும் படி சிலர் கோரிக்கை வைத்தனர். ஆராவுக்கு வந்த பரபரப்பில் தன் நாடி தேய்த்த கைகளில் இருந்து தீப்பொறி வரும் அளவிற்கு இருந்தது.

'பட்டிக்காட்டில் வாழ்ந்தவள் தன் ஓட்டை ஆங்கிலத்தில் ஏதாவது ஓட்டலாம் என்று நினைத்து இருப்பாள். ஹிந்தி எல்லாம் அவள் நினைத்து பார்த்திருக்கவே மாட்டாள். இதை வைத்து அவளை ஓட ஓட விரட்டலாம். எனக்கு நீ தகுதி இல்லை என்று எளிதாக நிரூபிக்கலாம்' என்று அவனது மனம் சிரித்தது.

ஆனால் சங்கமித்ராவின் முகம் முன்பு இருந்ததை விட மிகவும் பிரகாசமாக மாறி, அனைவருக்கும் தன் வணக்கத்தை ஹிந்தியில் உரைத்தாள். அவளுடைய தடையில்லாத பேச்சு , அவளுடைய முன்னுரை, கட்டடங்களைப் பற்றிய அவளது தெளிவான அறிவை எடுத்துரைத்தது.

ஆரா அவள் பேச்சு தந்த அதிர்ச்சியில் கைகளை அமர்ந்திருந்த நாற்காலியின் இருபுறமும் ஊன்றி, நாற்காலியின் சுழற்சியை நிறுத்தி, அசைவில்லாமல் அமர்ந்திருந்தான்.
அவன் தந்த சில புகைப்படத்தின் சுற்றுப்புறத்தை வைத்து அது என்ன இடம் என்று கணித்து, அதன் மதிப்பீட்டை அழகாக எடுத்துரைத்தாள். சாதகங்களை மட்டும் பட்டியல் இடாமல் அதன் பாதகங்களையும் பட்டியலிட்டு அசத்தினாள்.

எதிர் கேள்வி கேட்ட அனைவரின் கேள்விகளுக்கும் அலட்டல் இல்லாமல் பதில் தந்தாள். அவள் பேசி முடித்ததும் அரங்கம் நிறைந்த கைத்தட்டு ஒலித்தது . இறுதியாக வாய்ப்பு கொடுத்த ஆராவிற்கு நன்றி உரைத்தாள்.

அவளின் உடை பார்த்து முகம் சுளித்த நபர்களும், மீட்டிங் முடிந்த பிறகு அவளிடம் வந்து தங்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

ஆராவின் மூளையோ மிக வேகமாக வேலை செய்தது. 'ஹிந்தி பேசுகிறாள். மும்பையை பற்றி அறிந்திருக்கிறாள். அப்பொழுது அந்தப் பட்டிக்காட்டில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?' ஆராய்ச்சியின் முடிவாய் அவனுக்குத் தலை வலித்தது தான் மிச்சமாய் போனது.

அனைவரும் கலைந்து செல்லும் வரை காத்திருந்தவன், அனைவரும் சென்ற பிறகு, சங்கமித்ராவை நோக்கி, "நீ யார்?" என்றான்.

" நேற்று மிஸ் சங்கமித்ரா. இன்று மிஸஸ் ஆராவதமுதன்"

"மிஸஸ் ஆராவதமுதன். இந்த ஒரு சொல்லை வைத்தே என்னை வீழ்த்தப் பார்க்கிறாயா?"

" இல்லை இல்லை. நான் வீழாமல் பார்த்துக் கொள்கிறேன் "

" நீ சொல்லாவிட்டால் என்ன?, உன் ரகசியம் என்ன பிரம்ம ரகசியமா? "

" ரகசியமா? நிச்சயம் இல்லை. நீங்கள் என்னை பற்றி என் வாயாலேயே சொல்ல வையுங்கள். பார்ப்போம் உங்கள் திறமையை. தேனு பாட்டியிடமும் கேட்கக் கூடாது. சவாலை சந்திக்க தயாராக மிஸ்டர் ஆராவமுதன்? " என்றாள் பளபளக்கும் விழிகளுடன்.

" என்னுடைய ஒரு அடிக்கு தாங்க மாட்டாய். என்னிடமே சவால் விடுகிறாயா? " என்று கோபத்தில் அவள் அருகே வந்து, அவள் கையைப் பிடித்து இழுத்து, அவள் முதுகை தன் மார்போடு ஒன்ற வைத்தான். அவளது இடதுகை கட்டிட்டு இருக்க, வலது கையோ அவன் கைப்பிடியில்.
ஆரா தன் வலக்கையை, அவள் கழுத்தின் அடியில் வைத்து இறுக்கினான்.

அந்தக் குவளை மலர் நிறத்தழகியின் மென்மை தந்த வெம்மையில், தன் இறுக்கத்தை தளர்த்தி, "என்னிடம் சவால் விட்டால் எனக்குப் பிடிக்காது " என்றான் அழுத்தமான குரலில்.

" காலம் காலமாக உடல் பலத்தை காட்டி பெண்களை ஜெயிப்பது தானே ஆண் வர்க்கம்" என்றாள் ஆளுமையான குரலில்.

" ஏன் என் நெருக்கம் உனக்கு வேறு எந்த உணர்வையும் தூண்டவில்லையா? " என்றான் அவள் காது மடல் அருகில்.

"ஏன் தூண்டாமல்.... நன்றாகவே தூண்டுகிறதே "

"என்ன?" என்றான் ஆச்சரியமான குரலில்.

" உங்கள் செயல், தி கிரேட் பிஸ்னஸ்மேன் மிஸ்டர் ஆராவமுதனுக்கும் வேறு வழி தெரியவில்லையே என்ற பரிதாப உணர்வை தூண்டுகிறது" என்றாள் தலை நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தபடி.

' பெண் என்பவள் ஆணுக்கு அடிபணிந்து நிற்பவள். அவன் சொற்களைக் கேட்டு நடப்பவள். ஆணை விட ஆளுமை குறைந்தவள்' என்ற அவன் கணிப்புகள் எல்லாம் தூள் தூளாய் உடைந்து போக, உடைக்கப்படாத அந்த ரகசிய பெட்டகத்தைஅவனே அறியாமல் ஆர்வமாய் பார்த்தான்.

தன் கைப்பிடியில் இருந்த அவள் கையை நீட்டி, "நிறம் கூட ஒத்து வரவில்லை. நீ எனக்கு ஒத்து வருவாயா?" என்றான் அவள் கைகளை வருடி கொண்டே.

அவனின் முரண்பாடு உணர்ந்தவளோ, "கருப்பு, வெள்ளை நிறம் சேர்வதை உலகம் பார்க்காது என்றால், கருப்பு வெள்ளை நிறம் சேர்ந்த விழிகள் தானே இந்த உலகத்தையே பார்க்கிறது" என்றாள் அலட்டல் இல்லாமல்.

கழுத்தில் இருந்த தன் கையை எடுத்து அவள் இதழை வருடினான். "அழகாக பேசுகிறது. ஆனால் மிகவும் தப்புத்தப்பாக பேசுகிறது" என்றவன் தன் மீது சாய்ந்தவளை வெறுப்புடன் தன் எதிரே நிறுத்தினான்.

அவன் பார்வையை அசராமல் எதிர்கொண்டாள், நித்தம் நித்தம் அவனை அசர வைப்பவள்.

சிறை எடுப்பாள்...

 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
என்ன நடக்கின்றது இங்கே :oops::oops::oops:

ஹிந்தி பேசுகிறாள், கட்டிட கலையில் கலக்குகின்றாள் 😃😃😃 புரியாத புதிர் நீயடி மித்திரா 🧐🧐🧐

ஆரா நீ இன்னுமா அவளை வெல்ல நினைக்கின்றாய் 🤣🤣🤣
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சங்கமித்ராவின் முற்பகுதி ரெம்ப சுவாரஸ்யமா இருக்குமோ 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
நிச்சயம் ஆழ்ந்து யோசித்து, ரசித்து தருவேன் உங்கள் சுவாரசியம் குறையாமல். சுவாரசியம் கசாயமானால் கட்டையை தூக்கிக் கொண்டு வரக்கூடாது நட்பே 🤣🤣🤣🤣🤣
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
என்ன நடக்கின்றது இங்கே :oops::oops::oops:

ஹிந்தி பேசுகிறாள், கட்டிட கலையில் கலக்குகின்றாள் 😃😃😃 புரியாத புதிர் நீயடி மித்திரா 🧐🧐🧐

ஆரா நீ இன்னுமா அவளை வெல்ல நினைக்கின்றாய் 🤣🤣🤣
முயலும் ஆமையும் கதை போல் அவளை ஆமை என அவன் நினைத்தான் அவள் ஆளுமை தெரியாமல்.

வைரமாவதற்கு முன், அழுத்தமும் கரித்துண்டுமாய் களைத்து போனவள் அவள்.

மழை தந்த வானவில் போல், வண்ணமயமான கருத்திற்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
சங்கமித்ரா இன்னும் இன்னும் ஆச்சரியம் கொடுத்து கொண்டே இருக்கிறாள்.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சங்கமித்ரா இன்னும் இன்னும் ஆச்சரியம் கொடுத்து கொண்டே இருக்கிறாள்.
வைகையில் வந்த உங்கள் அன்பு வெள்ளம் போல் 😍
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Interesting person
 
Top