சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...
சிறை - 21
சந்தனம் தேய்ந்தாலும், மறைந்தாலும் அதன் நறுமணம் காற்றில் கலந்து நாசியை நிறைப்பது போல், தன் தாய் மறைந்தாலும் தன் தாயின் நேசமும், பாசமும் தன்னை விட்டு அகலாது தன்னோடு உறைந்து இருப்பதை உணர்வால் உணர்ந்தாள் சங்கமித்ரா.
உண்டது, உடுத்தியது எதையும் உணராமல் தன் கூட்டுக்குள் ஒடுங்கி இருந்தாள். அவள் கண்கள் தாண்டி கண்ணீர் வழியவே இல்லை. தாய் இருந்தபோது பழகிய இருட்டு, தாய் இல்லாத போது அவளை மிரட்டியது.
அவள் லட்சியம் எல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்து போனது. உடல் எங்கும் உணர்வுகள் மரத்துப்போகும் ஊசியை போட்டது போல் உயிர்ப்பின்றி தொய்வாக இருந்தாள்.
கண்மூடி அமர்ந்திருந்தவளின் தோளை ஒரு கரம் தொட்டு உலுக்கியது. அப்பொழுதும் இமை திறக்காமல் அமைதியாய் இருந்தாள்.
" மித்து அக்கா, ஏன் எங்களுக்கு இப்பொழுதெல்லாம் டான்ஸ் கற்றுக் கொடுப்பதில்லை? " என்று காதில் விழுந்த பிஞ்சுக் குரலில், மெல்ல விழி மலர்த்தினாள்.
அவளைச் சுற்றி அமர்ந்திருந்த மழலைப் பட்டாளங்களை, உணர்வற்றுப் பார்த்தாள்.
"மித்து, எல்லோரும் சொல்றாங்க! எங்க அம்மா மாதிரி உங்க அம்மாவும் சாமிகிட்ட போயிட்டாங்களாம். அப்படியா மித்து?" என்றாள் ஸ்வீட்டி.
வான் நோக்கிப் பார்த்த சங்கமித்ரா, வலி நிறைந்த கண்களுடன், "ஆம்" என்பது போல் தலை அசைத்தாள்.
"அப்போ நாம எல்லாருமே சாமிகிட்ட போயிடுவோமா? " கண்களை அகல விரித்துக் கேட்டாள் ஸ்வீட்டி.
வரவழைத்த சிறு புன்னகையுடன், "ஆம்" என்றாள் சங்கமித்ரா.
"எல்லாரையும் சாமி திருப்பி கூப்பிட்டுக் கொள்வார் என்றால், நம்மை ஏன் அவர் இங்கே அனுப்பி வைத்தார்? " என்ற மழலையின் கேள்வியில் ஸ்தம்பித்து நின்றாள் சங்கமித்ரா.
'நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்பின் நோக்கம் என்ன? என் வாழ்வின் அடுத்த நகர்வு என்ன?' அவள் உள்ளம் இயங்க ஆரம்பித்தது.
அப்பொழுது அங்கே வந்த சோனா அந்த குழந்தைகளைப் பார்த்து, "ஏய் எல்லோரும் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். இனிமேல் மித்து உங்களுக்கு நடனம் கற்றுத் தர மாட்டாள். அவளது நடனம் இனி பகலில் எல்லாம் அரங்கேறி விடாது. இரவில் மட்டுமே. அதுவும் வெகு சிலருக்கு மட்டுமே. கிளம்புங்கள்! கிளம்புங்கள்!" என்று குழந்தைகளை விரட்டினாள்.
தன்னை விழி அசையாது வெறித்துப் பார்க்கும் சங்கமித்ராவின் காலடியில் ஓர் விசிட்டிங் கார்டை தூக்கி எறிந்தாள் சோனா.
"இதோ இந்த விலாசத்திற்கு நாளை இரவே நீ செல்ல வேண்டும். இது ஆதி பாயின் கட்டளை. மீற நினைத்தால் மறக்க முடியாத பல இரவுகளை நீ சந்திப்பாய். ஒத்துக்கொண்டால் கஷ்டத்தோடு இஷ்டமாய் அனுபவிப்பாய். இந்த இரண்டு வார காலம் உனக்காக மிகவும் பாவம் பார்த்து விட்டு விட்டார் ஆதி பாய்.
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ஆதி பாயின் இந்த இரக்கம். யாருக்கும் சிறிதளவு கூட கருணை காட்டாதவர் உனக்கு இவ்வளவு பெரிய சலுகை தந்தது வியப்புதான்.
என்ன இருந்தாலும் அவர் உன் அப்பாதானே.
நிச்சயம் அந்த பாசமாகத்தான் இருக்கும். என்ன உன் கண்ணை உள்ளங்கை அளவு விரித்துப் பார்க்கிறாய்? உன் அம்மா உனக்குச் சொல்லவில்லையா? கட்டிய கணவனே கட்டிலுக்கு விற்றதை உன்னிடம் சொல்ல வெட்கப்பட்டு இருப்பாள்" என்று நக்கலாக கூறிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றாள் சோனா.
தன் தாயின் இறப்பில் மனமெங்கும் எரிந்து, சாம்பல் போர்த்த உடல் போல் அமர்ந்திருந்தவளிடம், "அந்தக் கயவன்தான், உன் தந்தை" என்று அடையாளம் இட்டுக் கூறியவளின் வார்த்தையில், போர்த்திய சாம்பல் உதிர்ந்து, கனலை அவள் தேகம் மீண்டும் பூசிக் கொண்டது.
தன் தாய்க்கு இழைக்கப்பட்ட கொடூர அநீதியைக் கேட்டு துடித்தாள். 'இந்த நரகத்திலிருந்து செல்ல வேண்டும். அடுத்து எங்கே செல்வது?' என்றவள் மனம் அவளை உலுக்க, "கன்னிராஜபுரம்" என்று அவள் அன்னையின் வார்த்தைகள் காதில் காற்றோடு வந்து விழுந்தது.
அவள் உடல் நிமிர்ந்தது. திசை தெரியாத காற்றாற்றோடு பயணிக்க அவள் முடிவு செய்தாள். நிமிர்ந்து எழுந்தவள், தன் அறைக்குள் சென்று, தன் தாயின் நினைவுகளை தன்னோடு பகிர்ந்து கொள்ளும், தன் சலங்கையை மட்டும் பத்திரப்படுத்தி, தன் தாய் எப்பொழுதும் வைத்திருக்கும் கைப்பையில் எடுத்துக் கொண்டாள். அந்த சாயம் போன பழைய மஞ்சள் பையில், கன்னிராஜபுரம் என்று எழுதி இருக்க ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சங்கமித்ரா.
ஆதிஷை கொல்லவோ, வெல்லவோ தன் மனபலம் மட்டும் போதாது என்று அறிந்தவள், அதற்காக தன் சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல் செல்ல அவள் விரும்பவில்லை.
அவர்கள் வீட்டின் பின் புழக்கத்தில், கழிவு நீர் தொட்டியின் மூடி சிதிலமடைந்து நடக்கும் போது அதில் உள்ளே விழ வாய்ப்பு இருந்ததால், சுமித்திரையும் சங்கமித்ராவும் தற்காலிகமாக, கனத்த தகடு உறை கொண்டு மூடி இருந்தனர்.
இரவில் சென்று அந்தத் தகரத்தை அப்புறப்படுத்தினாள் சங்கமித்ரா. நடு இரவில் வானில் எங்கேனும் தூரத்து வெளிச்சமாய் தன் தாய் தெரிகிறாரா? என்று வானையே ஏக்கம்மாய் பார்த்து, பின் வாசற்படியிலேயே அமர்ந்து விட்டாள்.
காலை விடிந்ததும், கொட்டாவி விட்டபடியே உடலை முறித்துக் கொண்டு வெளியே வந்த சோனா, பின்வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த சங்கமித்ராவை நக்கலாக பார்த்து சிரித்தாள். பதிலுக்கு மலர்ந்த புன்னகையுடன் சிரித்தாள் சங்கமித்ரா.
" என்ன புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல் உனக்கு இந்த பின் வாசல் படிக்கட்டில் ஞானம் கிடைத்து விட்டதா?. எப்படியோ புத்தியோடு பிழைக்கப்பார்" என்று புது அடிமை ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அறிவுரைகளை இலவசமாக அள்ளி வழங்கினாள். புன்னகையில் பேரழகியாய் தெரிந்த சங்கமித்ராவை வைத்து பல கணக்குகள் மனதிற்குள் போட ஆரம்பித்தாள் சோனா.
மனக்கணக்குகள் தந்த விடையில் சந்தோஷமாக, வீட்டின் பின் புழக்கத்தில், பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக கையில் வாளியை எடுத்துக்கொண்டு பூந்தொட்டிகளை நெருங்கினாள் சோனா.
எப்பொழுதும் நடக்கும் பாதை தானே என்று அசால்டாக கடந்து செல்கையில், கழிவு நீர் தொட்டியின் மீது காலை வைத்ததும் அது உடைந்து, அவளை கழிவுநீர்த் தொட்டி உள்வாங்கிக் கொண்டது.
அழுத்தமாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நடந்து வந்த சங்கமித்ரா, தொட்டியின் விளிம்பை தன்னிரு கைகளிலும் பிடித்து தொங்கிய சோனாவைப் பார்த்து, "அடுத்தவர்களை அசிங்கமான வாழ்க்கைக்குள் தள்ளிவிடத் தெரிந்த உனக்கு, அசிங்கத்திற்குள் விழுவது ஒன்றும் அவமானம் இல்லையே! கங்கை நதியோடு சேர்வதற்கு உன் உடல் ஒன்றும் புண்ணியம் பண்ணி விடவில்லை.
உன்னை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தால் அடுத்த நிமிடம் வெளியே வந்து பல்லைக்கட்டி இளிப்பாய். நீ வருந்தித்திருந்த வாய்ப்பு கொடுத்தாலும் அது பயனற்றது.
இதிலிருந்து நீ மீண்டாலும், இல்லை மாண்டாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் உன் கடைசி நேரங்களில் என் தாய்க்கு இழைத்த அநீதியை எண்ணிப்பார்" என்றவள் அவளை திரும்பியும் பாராது வீட்டிற்குள் நுழைந்தாள்.
உயிர் பயத்தில் சோனா கத்திக் கதற ஆரம்பித்தாள். வினாடியையும் வீணாக்காது மும்பையில் இருந்து தன் தாயின் ஊர் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தாள் சங்கமித்ரா.
ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்ததும், தூரத்தில் தெரிந்த தென்னை மரங்கள் கடல் காற்றில் கையசைத்து அவள் பயணத்திற்கு அழகாய் கையசைத்து வழி அனுப்பி வைத்தது.
மதுரையில் வந்து இறங்கி அங்கிருந்து கன்னிராஜபுரத்திற்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் சங்கமித்ரா. அங்கு எதிர்நோக்க இருக்கும் சவால்கள் தெரிந்தும், தெரியாமலும் ஆரம்பித்தது அவள் பயணம்.
அவள் இருக்கைக்கு அருகில் அமர்ந்த ஒரு மூதாட்டி, "கொஞ்சம் தள்ளி உட்காரம்மா" என்றார்.
சிந்தனையின் பிடியில் இருந்தவள் அவர் வார்த்தைகளை கவனிக்கவில்லை. அவளின் தோளைத் தொட்டு உலுக்கி, "கொஞ்சம் நகர்ந்து உட்காரம்மா" என்றார் அந்த மூதாட்டி மீண்டும்.
பதில் ஏதும் உரைக்காமல், சற்று தள்ளி அமர்ந்தாள். அவளின் முகத்தை கூர்ந்து நோக்கிய அந்த மூதாட்டி, "நீ சுமித்திரையின் மகளா?" என்றார் ஆச்சரியமாக.
தன் தாய் பெயரைக் கேட்டதும் உருகிய சங்கமித்ரா, அந்த மூதாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா?" என்றாள்.
" என்னடி அம்மா இப்படி சொல்லிப்புட்ட. ஊருக்கு மத்தியில் இருக்கும் அந்த ஒத்த பெரிய வீடு, இன்னும் உன் அம்மாவிற்காக காத்துக் கொண்டு இருக்கு தனியா.
உன் அம்மா முறித்துக் கொண்டு சென்ற உறவுகள் திசைக்கு ஒன்றாக சிதறி, ஏனோ தானோன்னு இருக்கு. அந்த மகராசி போகும்போது சொத்தை மட்டுமா எடுத்துக்கிட்டு போனா. எல்லாருடைய சந்தோசத்தையும் இல்ல எடுத்துக்கிட்டு போயிட்டா.
ரெண்டு தலைமுறை சேர்ந்து கையெழுத்து போட்டாதான் அந்த வீட்டை விக்க முடியுமாம். வீட்டை விற்பதற்காகத் தான் நீயும் உன் அம்மாவும் வந்திருக்கீங்களா? எங்கம்மா சுமித்திரை? " என்றார் சுமித்திரையை தேடிக் கொண்டு.
தாய் சொல்லி தான் கேட்காத கதையை, ஊர் சொல்லி கேட்கும் போது உள்ளம் வெதும்பியது சங்கமித்ராவுக்கு.
"அம்மா வரவில்லை. வரமாட்டார்கள்" என்றவள் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
அசதியில் தூங்கிவிட்டாள் என்று நினைத்த பாட்டியும் அதன் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை.
கன்னிராஜபுரம் வந்ததும் தன் தாய் மண்ணில் காலடி எடுத்து வைத்தாள் சங்கமித்ரா. சுற்றி இருந்த வீடுகளின் முற்றத்தில் காய வைக்கப்பட்ட கருவாடுகளும், பின்னிக் கொண்டிருந்த வலைகளும் அவர்களின் அடையாளமாய் அறியப்பட்டது.
அடுத்த அடி எங்கே வைப்பது என்று தெரியாமல் தயங்கிய சங்கமித்ராவின் கால்கள் நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றது.
அவள் அருகில் வந்த அந்த மூதாட்டி, "என்னம்மா, இப்படி நேரா போய் வலது கை பக்கம் திரும்பி, நேரா போனால் உங்கள் வீடு வந்துவிடும். அருகில் இருக்கும் வீட்டில் தான் உங்கள் வீட்டின் சாவி இருக்கிறது. லட்சுமி வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இருக்காது என்று உங்கள் வீட்டு கிணற்றில் புழங்குவதற்காக சாவியை தன் வசம் வைத்திருக்கிறாள் அவள். சுமித்திரையின் ஜாடையில் இருக்கும் உன்னிடம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்? உன் உரிமை. நீயே கேட்டு வாங்கி பெற்றுக் கொள்" என்று ஊர் வம்பில் நாட்டமுள்ள அந்த மூதாட்டியும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்து விட்டு கிளம்பினார்.
அவர் சொன்ன தன் தாய் வாழ்ந்த அந்த வீட்டின் முன் வந்து நின்றாள் சங்கமித்ரா. தன் மனதில் தோன்றிய தயக்கத்தை அழித்துவிட்டு, அருகில் இருக்கும் வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டின் சாவியைக் கேட்டாள்.
கேட்பாரற்றுக் கிடந்த வீட்டிற்கு, உரிமையாய் ஆள் வந்ததும், எரிச்சல் அடைந்த லட்சுமி, முணங்கிக் கொண்டே, "நீங்க யாரு எவருன்னு தெரியாம சாவியை கொடுக்க முடியாது. இந்த வீட்டுக்கு உரிமைப் பட்டவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு திசையா போயிட்டாங்க. நாலாவது தெருவில் இருக்கும் தனலட்சுமி அம்மா என் பொறுப்பில் சாவியை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னால் வீட்டுச் சாவியை தருகிறேன். வேறு யார் வந்து சாட்சி சொன்னாலும் உனக்கு இந்த சாவியை நான் தரமாட்டேன். எத்தனை பேர் இது மாதிரி கிளம்பி வந்து இருப்பார்கள். என்னிடம் உங்களது தந்திரம் பலிக்காது. ஏற்கனவே பஞ்சாயத்தில் முடிவு பண்ணினது தான். தனலட்சுமி அக்கா சொன்னால் மட்டும்தான் தருவேன். ஏனென்றால் இப்போதைக்கு உரிமை பட்டவர்கள் அவர்கள்தான்" என்றாள் எரிச்சலாக.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, புதையும் கடற்கரை மண்ணில், தன் தாய் வாழ்ந்த வீட்டை பார்க்கும் ஆசையுடன் வேக எட்டுக்கள் வைத்தாள் சங்கமித்ரா.
தனலட்சுமி வீட்டின் வாசலில் வந்து நின்று, எப்படி அழைப்பது என்று தயங்கிக் கொண்டு, "வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?" என்றாள் சங்கமித்ரா.
"யாரது?" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்த தனலட்சுமி, தன் அக்கா சுமித்திரையின் மறு பிம்பமாயிருக்கும் சங்கமித்ராவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, பின் எரிச்சல் அடைந்தாள்.
" அம்மா வீட்டின் சாவியை, நீங்கள் வந்து சொன்னால்தான் தருவேன் என்கிறார்கள். நீங்கள் வந்து கொஞ்சம் சொல்ல முடியுமா? " என்றாள் தன்மையாக.
" உன்னை அடையாளப்படுத்தி காட்டினால் எங்களுக்கு என்ன லாபம்? எல்லா சொத்தையும், எங்கள் உழைப்பையும் எடுத்து சுருட்டிக் கொண்டு சென்ற உன் அம்மா போல், இந்த வீட்டையும் நீ சுருட்டிக் கொண்டு செல்லப் போகிறாய். அந்த வீட்டை பெறுவது உன் பாடு. என் அக்கா, அதுதான் அந்த சுமித்திரையின் விஷயத்தில் தலையிட்டு மூக்கு உடை வாங்கியது போல், உன் விஷயத்தில் தலையிட்டு அசிங்கப்பட நான் விரும்பவில்லை. நீ யாரு? உங்க அம்மா யாருன்னு அடையாளப்படுத்தி காட்டி, நீயே வாங்கிக்கோ " என்றாள் தெனாவெட்டாக.
தன் தாயின் வாழ்க்கையை அடையாளப்படுத்திக் காட்ட விரும்பாத சங்கமித்ரா, "நான் என் அம்மா வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும். அம்மா இல்லாத இந்த உலகத்தில், சில காலம் அவர்கள் வாழ்ந்த வீட்டில் நான் வாழ வேண்டும். எனக்கு நீங்கள் இதற்கு உதவி புரிந்தால் அந்த வீட்டை உங்களுக்கே எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்" அவளின் குரலும், உடலும் காட்டிய உறுதியில், பேராசை சிரிப்புடன், கண்கள் பளபளக்க அவளை நம்பியும் நம்பாமலும் பார்த்தாள் தனலட்சுமி.
" என்ன சுமித்திரை உன்னை விட்டு போய்விட்டாளா? பரவாயில்லை நான் உன் சித்தி முறை தான். என் அக்கா இப்படி செய்து விட்டு போனதில் எனக்கு வருத்தம் இருக்காதா? முன்ன பின்ன வரும் வார்த்தையில் எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாதே. உன் சித்தப்பா இறந்த பிறகு நானும் உன் தங்கச்சி ஸ்வப்னாவும் இந்த வாடகை வீட்டில் தனியாகத்தான் இருக்கிறோம். நம் சொந்தங்கள் தங்கள் தொழிலை பார்த்துக் கொள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள். இந்த ஊரில் உன் சொந்தம் என்று இருக்கும் ஒரே ஒரு ஆள் நான்தான்.
அந்த வீட்டை எங்களுக்கு நீ எழுதி வைப்பதாக இருந்தால், நீ விரும்பும் வரை எங்களோடு அந்த வீட்டில் நீ இருக்கலாம். உன் அம்மாவைப் போல் எங்களை நீ ஏமாற்றி விட்டு செல்லலாம் என்று மட்டும் நினைக்காதே. இந்த வீட்டை நாங்கள் அனுபவிக்க நீ எழுதித் தர வேண்டும்.
இந்த வீட்டை விற்பதற்கு, நீயும் உனக்கு பிறக்கும் குழந்தையும், என்று இரண்டு தலைமுறையாகச் சேர்ந்து கையெழுத்து போட வேண்டும். அதனால் நீயாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது. நாங்கள் காட்டும் நபரை நீ திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றால், உன் விருப்பத்தை உன்னுடன் இருந்து நான் நிறைவேற்றி வைக்கிறேன். இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டால், இங்கே நில். இல்லை என்றால் வாசல் பார்த்து செல்" என்றாள் தனலட்சுமி கராரான குரலில்.
'திருமணமா? ' என்று நெஞ்சை அழுத்திய குரலுக்கு, 'என் அம்மாவிற்கு முன் எதுவும் பெரிதில்லை. எனக்காக தன் வாழ்க்கையே இழந்த என் தாய்க்காக, அவரின் சொந்தம் தந்த இதத்திற்காக, ஒரு பந்தத்தை ஏற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை' என்று சமாதானப்படுத்தினாள்.
"எனக்கு முழு சம்மதம். இப்பொழுதே செல்லலாமா?" என்று சுருக்கமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
தன் தாயின் வீட்டிற்குள் நுழையும் போது, அவரது கருவறைக்குள் மீண்டும் பிரவேசித்ததைப் போல் பரவசமடைந்தாள் சங்கமித்ரா. தன் தாய் மகிழ்ச்சியுடன் நடமாடிய வீடு என்பதில் மிகவும் மகிழ்ந்தாள். வீட்டை தூய்மைப்படுத்தி, பராமரித்து அழகாக்கினாள். தன் தாயின் சேமிப்பில், சுதந்திரமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்.
தன் சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு தனலட்சுமி தன் மகள் ஸ்வப்னா உடன் குடியேறினார். தேவையான பத்திரங்களில் சங்கமித்ராவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஏதுவான ஓர் வரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் தனலட்சுமி ஒரேடியாக சங்கமித்ராவை தலைமுழுக.
தேனம்மாவின் உறவினர் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததும், தனலட்சுமியின் மனம் கோணாமல், சிறிதும் செலவு இல்லாமல், சங்கமித்ராவின் திருமணத்தை தன் பேரனோடு முடித்துவிட்டு, தக்க நேரத்தில் அவர்கள் கூறும் இடத்தில் மீண்டும் கையெழுத்து போட அவள் சந்ததியோடு அழைத்து வருவதாக வாக்கு கொடுத்து, தாங்கள் வசதியாக இருப்பதால் இந்த வீடு அவளுக்கு தேவைப்படாது என்று கூறி சங்கமித்ராவை மீட்டு வந்திருந்தார் தேனம்மா.
கதை முடிந்தும், அசையாமல் அமர்ந்திருந்த ஆராவமுதனைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடி, அவன் முன் சொடுக்கிட்டாள் சங்கமித்ரா.
அடுத்த நொடி அவளைத் தாவி அணைத்திருந்தான் அவளின் அமுதன்.
சிறை எடுப்பாள்...