• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 23

சங்கமித்ராவின் இயல்பை மாற்றக்கூடிய விஷயங்கள் என்ன என்பதை மனதிற்குள் பட்டியலிட ஆரம்பித்தான் ஆரா.

' அவள் விரும்பிப் படித்த படிப்பிற்கான வேலை, அவளின் லட்சியம், கூடுதலாக இயற்கை' என்பதை உணர்ந்தவனின் மனது லேசாக ஆரம்பித்தது.

தன் உள்ளங்கையை விரித்துப் பார்த்தவன், பின் மெல்ல சிரித்துக்கொண்டே ஐவிரல்களையும் இறுக்கி மூடினான். 'என் உள்ளங்கைக்குள் உன்னை விரைவில் சிறை எடுப்பேன்' என்று நினைத்தவன், அவள் தன்னுடைய இயல்பாலேயே, தன்னை ஏற்கனவே சிறை எடுக்க ஆரம்பித்து விட்டாள் என்பதை உணராது போனான்.

அலுவலகத்திற்கு தயாராகி தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் சங்கமித்ரா. எப்பொழுதும் போல சாதாரண காட்டன் சேலையில், தளர்ந்த கூந்தலுடன் தளராத மன உறுதி கொண்ட முகமுடன் வாசல் தாண்ட இருந்தவளை, நீண்ட உறுதியான கை ஒன்று தடுத்தது.

பார்க்காமலேயே அது யார் என்று உணர்த்தவள் அசையாது நின்றாள். இடது கரம் தடுத்திருக்க, வலது கரத்தில் முல்லைச்சரத்தை தாங்கி அவள் முன் நீட்டினான் ஆரா.

அவன் செய்கையில் தன் விருப்பமின்மையை கண்களில் பிரதிபலித்தபடி அவனைப் பார்த்தாள்.

" என் வீட்டில் என்றுமே என் விருப்பம் தான்" என்றான்.

மறுபேச்சின்றி அவன் கைகளில் இருந்த முல்லைச் சரத்தை எடுத்து தன் தலையில் சூடிக்கொண்டாள்.

" பரவாயில்லை மயக்கம் ஏதும் வரவில்லை" என்றான் அவளை ஓர் அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டே.

'ஏன்?' என்ற கேள்வியை விழிகளில் தேக்கி நின்றவளிடம் மந்தகாசமாய் மலர்ந்த முகத்துடன், "காலையில், கையில் ஏந்திய ஒற்றைப் பூவின் வாசத்தில் மயங்கி நின்றாயே, சரம்சரமாய் உன் கை சேர்ந்த பூச்சரத்தின் நறுமணத்தில் மயங்கி விடுவாயோ? என்று கேட்டேன்" என்றவன் நாவின் நுனியால் கன்னக் கதுப்பை நிரடி ஒற்றைக்கண் சிமிட்டி சிரித்தான்.

வெட்கத்தின் பக்கம் கூட செல்லாதவளின் காதோரம் குறுகுறுத்து, அடிவயிற்றில் ஜில்லென்று ஓர் உணர்வு தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் அவள் முகமோ தன் முகத்திரையை கழற்ற மறுத்தது. அசால்டாக அவனை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசற்படியை கடந்தாள்.

தன் வேக எட்டுக்களால் அவள் முன் வந்து நின்றான். 'மறுபடியும் என்ன?' என்பது போல் சலிப்பான ஓர் பார்வை பார்த்தாள்.

உள்ளம் கொண்ட பரபரப்புடன், தன்னுள் எழும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல், சங்கமித்ராவின் தோளைப் பற்றி அவளை சுழற்றினான். சங்கமித்ராவின் பின்புறம் நின்று , தன் கைகளால் அவளை இறுக்கி அணைத்து, அவள் சூடி இருந்த முல்லைப் பூவின் நறுமணத்தை நுகர்ந்தான். சிறுவயதில் எப்பொழுதும் தன் தாயை கட்டிக்கொண்டு, அவன் தாய் சூடி இருக்கும் முல்லை பூவின் வாசத்தை நுகரும் சிறுவனின் மனநிலையில் நின்றான் ஆரா.

அவன் தீண்டல்கள் ஏற்படுத்தாத சலனத்தை, காதோரத்தில் அவன் சுவாசித்த நாசிக்காற்று, அவள் செவிப்பறையில் நுழைந்து, ரத்த நாளங்களை சூடேற்றி, காது மடல்களை சிவக்கச் செய்தது.

மழலைப் பருவத்தில் கரைந்து நின்றவனோ, அவள் உள்ளங்கைகளை சற்று மேலே தூக்கி தன் கன்னங்களில் இறுக்க பதிய வைத்துக் கொண்டான். கைகளை இழுத்த வேகத்தில் சங்கமித்ராவின் பின்னந்தலை சரிந்து, ஆராவின் நெஞ்சோடு மோதி நின்றது.

ஆராவின் கை விரல்கள் சங்கமித்ராவின் கை வளையல்களை ஒன்றன்பின் ஒன்றாய் வருட ஆரம்பித்தது. தன் தாய் அணிந்திருந்த வைர வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்படுத்தும் நங்... நங்... என்ற சத்தத்திற்காக அவன் காத்திருக்க, சங்கமித்ராவின் கண்ணாடி வளையல்களோ கலீர்... கலீர்... என்ற ஒலியை ஏற்படுத்தியது.

தன்மோன நிலை சட்டென்று கலைய, வெடுக்கென்று அவள் கைகளை தட்டி விட்டு, பின் அவள் கைகளை தரதரவென இழுத்துக் கொண்டு, தன் காரில் அவளை ஏற்றி, காரை அதிவேகத்தில் ஓட்டினான்.

அங்கு எடுத்த அவன் காரின் ஓட்டம், எங்கும் குறையாமல், மும்பையின் பிரபல நகைக்கடையின் முன் வந்து நின்றது.

நகைக்கடை உரிமையாளன் போல் காரை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல், கார் சாவியோடு அப்படியே விட்டுவிட்டு, தன் பின்னே பணிவோடு ஓடி வந்த நகைக்கடை சிப்பந்திகளையும் கண்டுகொள்ளாமல், வைர வளையல்கள் விற்கும் தளத்தில் வந்து நின்றான்.

வைரங்களுக்கு ஈடாக போட்டி போட்ட ஆராவின் விழிகள், தன் தாயின் வளையல்களைப் போன்ற வளையல்களைத் தேடியது.

கண்டுகொண்ட திருப்தியில், சங்கமித்ராவின் கண்ணாடி வளையல்களை கழட்டி விட்டு, வைர வளையல்களை அப்படியே எடுத்து அவளின் கைகளுக்குள் நுழைத்தான்.

"சார் பில் போட வேண்டும்" என்று பணிந்து கேட்ட விற்பனை பெண்ணிற்கு, வைரவளையல்களில் தொங்கிக் கொண்டிருந்த எடை அட்டையை கிழித்து, வீசி எறிந்தான்.

வளையல்களையே நோக்கி இருந்த ஆரா, அப்பொழுதுதான் சுயம் வந்தவன் போல் தன் முகத்தை மெல்ல நிமிர்த்தி சங்கமித்ராவின் முகத்தை பார்த்தான்.

ஆரா எதிர் பார்த்த, குழப்பமோ, கேள்வியோ இல்லாமல், 'உன் விருப்பம்...' என்பது போல் பார்த்தாள்.

சுற்றி இருந்த நகைக்கடையே அவர்களை வித்தியாசமாக பார்க்க, சங்கமித்ராவோ எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிமிர்ந்து நின்று, மன்னவன் தந்த பரிசை, எதிர் நாட்டு அரசன் தான் போரிட்டுத் தோற்ற மகாராணிக்கு காணிக்கை வழங்குவது போல் கம்பீரமாய் ஏற்று நின்றாள்.

மெல்லிய புன்னகையுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு துள்ளலுடன் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கினான் சிறு குழந்தையின் உற்சாகத்துடன்.

குரோதத்துடன் ஒரு ஜோடிக் கண்கள் இந்த காட்சியைக் கண்டு கொதித்து தான் எடுத்த முடிவை இன்றே செயலாற்றத் துடித்தது.

நட்புடன் ஒரு ஜோடிக் கண்கள் இதை பார்த்து மகிழ்ந்து, தகவலை உரியவரிடம் சேர்க்கும் இடத்தில் சேர்த்தது.

காரில் வந்து அமர்ந்தவுடன், தன் வளைக்கரங்களை அவன் முன் நீட்டினாள். வளையல்களை வருடத் துடித்த தன் விரல்களை ஸ்டேரிங் வீலில் தாளமிட்டு சமாளித்தான் ஆரா.

"இதற்கு என்ன அர்த்தம்?" என்று அவன் கண்களை நேராகப் பார்த்து வினவினாள் சங்கமித்ரா.

"அம்..." என்று ஆரம்பித்தவன் பின் தன்னை சமாளித்துக் கொண்டு, "சும்மா... என் அலுவலகத்தில் என் வேலைகளை பாதியாக குறைத்ததற்கான பரிசு என்று வைத்துக் கொள்ளேன் " என்று சமாளித்தான்.

சரியாக அதே நேரம், தேனம்மா வீடியோ காலில், ஆராவிற்கு அழைப்பு விட, உற்சாக மனநிலையில் இருந்தவன் அதை ஆனந்தமாகவே ஏற்றான்.

திரையில் ஒளிந்த இருவரின் முகமும், ஆராவின் புறம் நீட்டிய அவள் கைகள், அவன் தோளை உரிமையுடன் அணைத்தது போல் இருக்க, பளீரிட்ட வைரத்தின் ஒளி இருவரின் முகத்திலும் பட்டு ஜொலிக்க, ஆனந்த அதிர்ச்சியில் பேச்சற்று அப்படியே நின்றார் தேனம்மா.

கூர்ந்து நோக்கியவரின் கண்களுக்கு, அது தன் மருமகளின் கை வளையல்கள் போல் இருக்க, தான் எடுத்த முடிவு சரியான பாதையில் போவதை எண்ணி மகிழ்ந்தார்.

"ஹனி... என்ன விஷயம் அழைப்பு எடுத்துவிட்டு பேசாமலேயே இருக்கிறீர்களே?" என்றான்.

" ஏன்டா? இந்த கிழவிக்கு என்றாவது ஒரு நாள் இப்படி கை நிறைய வளையல்களை அடுக்கி இருப்பாயா? உன் பொண்டாட்டிக்கு மட்டும் இத்தனை வளையல்களா? இதில் எனக்கு உன்னுடைய, 'ஹனி' என்ற அழைப்பு ஒன்றுதான் குறைச்சல். உன்னிடம் பேச மாட்டேன் போ" என்று செல்ல சண்டையிடத் துவங்கினார்.

தான் செய்த செயலின் வீரியம் நச்சென்று உச்சந்தலையில் ஓங்கிக் கொட்ட, " ஓ... அதுவா? அன்று ஒரு நாள் அவளது கண்ணாடி வளையல்களை உடைத்து விட்டேன். ஆராவின் தகுதிக்கு மீண்டும் கண்ணாடி வளையல்களை வாங்கித் தருவதா என்று தான் இந்த வைர வளையல்களை வாங்கிக் கொடுத்தேன். வீண் கற்பனை வேண்டாம் தேனம்மா.

நீங்கள் உம் என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்கள். உங்களை வைரத்தாலேயே இழைத்து விடுகிறேன் " என்று பாட்டியையும் சமாளித்து தன் செய்கைகளுக்கும் பொருத்தமான விளக்கத்தை கொடுத்தான் பொதுவாக.

"பரவாயில்லை... பரவாயில்லை... கொடுத்து வைத்த மகராசி தான்" என்று மேலும் சில நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு அலைபேசியின் தொடர்பை துண்டித்தார்.

தேனம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இடைவிடாது குறுக்கீடு செய்த அந்த அழைப்பை அழைத்தது யார்? என்று பார்க்க அது அவனது நண்பன் சிவா என்று காட்டியது.

காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே சிவாவிற்கு அழைப்பு எடுக்க நினைக்கும் முன் சிவாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

" அப்புறம் மச்சி சூப்பர். சம்சார கடலில் குதித்து, கலந்து விட்டாயிற்று போலவே! பொண்டாட்டிக்கு வைர வளையல்கள் வாங்கி அடுக்குற. ஒரே காதல் பரிசு தானா?. என்ஜாய் மச்சி. பாட்டி உனக்கு போன் செய்தார்களா? நகைக்கடையில் உன்னை பார்த்ததும், நான் தான்டா பாட்டி கிட்ட சொன்னேன்" என்றான் சிவா குதூகலக் குரலில்.

"இப்பொழுது நான் அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன் சிவா கொஞ்சம் அலுவலகத்திற்கு வர முடியுமா?" என்றான் மெதுவாக.

அவன் குரல் காட்டிய பேதமையை உணராமல், "இதோ உடனே வருகிறேன் மச்சி" என்று பதில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் சிவா.

அலுவலகத்திற்குள் நுழையும் போது சங்கமித்ராவின் சேலை நுனி இரும்பு கேட்டின் இடைவெளியில் சிக்கி உள்ளே போக விடாமல் தடுத்தது.

லாவகமாக புடவையின் சிக்கலை விடுவித்து விட்டு, தன் வாழ்க்கையின் சிக்கலை எதிர் நோக்க அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அன்று அவர்கள் அலுவலகத்தில் ஒரு முக்கியமான கட்டிட வேலைக்கான ஆலோசனைக் கூட்டம் இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அலுவலகத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சாராவால் விலைக்கு வாங்கப்பட்ட மினி சங்கமித்ராவின் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தாள். சங்கமித்ராவின் சேலை நுனியை கையில் பிடித்து, "இந்த காட்டன் சேலைக்கு இந்த பார்டர் மிகவும் அழகாக இருக்கிறது மித்து" என்று பாராட்டினாள் என்றும் இல்லாத திருநாளாக

கூட்டத்திற்கான அறிக்கையை தயார் செய்வதில் மும்மரமாக இருந்த சங்கமித்ரா, செயற்கை சிரிப்புடன் மீண்டும் கணிப்பொறியில் தன் வேலையை தொடங்க ஆரம்பித்தாள்.

மினி தன் கையில் இருந்த சேஃப்டி பின்னை லாவகமாக சங்கமித்ராவின் சேலை நுனியில் மாட்டி விட்டு இயல்பு போல் எழுந்து சென்றாள்.

கூட்டம் நடைபெறும் அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள் அனைவரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர். சங்கமித்ரா தன் கையில் இருந்த கோப்புகளை ஒரு முறை சரி பார்த்து விட்டு, லேப்டாப்பில் தகவல்களை பதிவிறக்கம் செய்துவிட்டு, ப்ரொஜெக்டர் இணைப்புகளை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.

தன் இருக்கையில் அமர்ந்திருந்த மினியோ தன் விரலில் மாட்டி இருந்த காந்த மோதிரத்தை சுழற்றிக் கொண்டே இருந்தாள் சற்று பதட்டமாக.

ஆராவின் வரவிற்காக அனைவரும் காத்திருக்க கதவைத் திறந்து ஆரா உள்ளே நுழைந்த நேரம், மினி தன் பேனாவை சங்கமித்ரா இருந்த திசை நோக்கி தூக்கி வீசினாள். தவறவிட்ட தன் பேனாவை எடுப்பது போல் சங்கமித்ராவின் அருகில் சென்று குனியும்போது தன் காந்த மோதிரத்தை சங்கமித்ராவின் புடவை நுனி அருகே கொண்டு செல்ல, சேஃப்டி பின் காந்த மோதிரத்தோடு ஒட்டிக்கொண்டது.

மெல்ல நிமிர்ந்த மினி தன் விரைவான நடையுடன் விறு விறுவென முன்னோக்கி, சங்கமித்ராவின் புடவை நுனியோடு செல்ல, நின்ற இடத்தில் நிலைக்குலைந்த சங்கமித்ரா மினியின் செயலால் சுழற்றப்பட, அவளது சேலையோ இழுத்த வேகத்தில் தோளிலிருந்து சரசரவென கிழிந்து மினியின் கையோடு செல்லத்துடித்தது.

அனைவர் முன்பும் அரைகுறை ஆடையில் நிற்க, நல்லவர்கள் தலைகுனிய, பொல்லாதவர்கள் தீங்கு பார்வை பார்க்க, சங்கமித்ராவோ தன் தலையை தாழ்த்தவும் இல்லை. உடலை குறுக்கவும் இல்லை.

வானைப்பிளந்து இடியாய் இழி செயல் தன் தலையில் விழுந்த போதும், தரையோடு வீழ்ந்து போகாமல், நழுவிய புடவையை பிடித்து, அவள் இழுத்த வேகத்தில் மினி தரையோடு விழுந்தாள் .
விரைந்து வந்த ஆரா, தன் ஓவர் கோட்டை கழட்டி அவளுக்கு கொடுக்க, தன் வலது கை நீட்டி தடுத்தவள் நிதானமாக தன் புடவையை தன் உடம்பில் சுற்றிக் கொண்டாள்.

சாராவின் மற்றொரு கைக்கூலி நடக்கும் நிகழ்ச்சிகளை, அலைபேசி வழியாக காட்சிப்பதிவாய் அனுப்பிக் கொண்டிருக்க, சங்கமித்ராவை அனைவர் முன்பும் அரை நிர்வாணமாக்க நினைத்தவளின் முகம் கருத்தது சங்கமித்ராவின் நிமிர்வைக் கண்டு.

அனைவரும் கேலி பேசுவார்கள் என்று நினைக்க, அவளின் நெஞ்சுரத்தை அனைவரும் வார்த்தையால் இல்லாமல், மனதாரப் பாராட்டினர்.

கீழே விழுந்து கிடந்த மினி தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து விட்டு, "சாரி..." என்று மழுப்பலாக கூறிவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல முயன்றாள்.

தன் புடவை நுனியை கையில் பிடித்தபடி, மினியை நெருங்கிய சங்கமித்ரா அவளின் கைகளைப் பிடித்து, "உங்களது சாரி எனக்குத் தேவைப்படாது " என்று கைகளை அவள் விலக்கியபோது மினியின் கைகளுக்குள் மினி குத்திய சேஃப்டி பின் குடி புகுந்தது.

தன் குட்டு வெளிப்பட்டதை யாரேனும் கவனித்தார்களா? என்று கீழ்க் கண்கொண்டு பார்த்தாள் மினி. ஆசுவாசமாய் திரும்புவதற்குள், ஆரா கோபத்துடன் அவளை அறைவதற்கு தன் கைகளை உயர்த்தினான். உயர்த்திய கைகளை உறுதியாய் தடுத்துப் பிடித்தாள் சங்கமித்ரா.

" தொலைந்துவிட்ட சாவிக்கு தண்டனை தராமல் பூட்டிற்கு தண்டனை தரப் போகிறீர்களா?. இனி பழி சுமத்தியோ, தண்டனை கொடுத்தோ, எந்த பிரயோஜனமும் இல்லை" என்றாள்.

"ஆனால்..." என்று நிறுத்தியவள் நிதானமாக நடந்து வந்து, அந்த மற்றொரு கருப்பாட்டின் முன் வந்து நின்றாள்.

" எஸ் கியூஸ் மீ. உங்களது போனை தர முடியுமா? " என்று அழுத்தமாக ஆனால் நீ தந்தே ஆக வேண்டும் என்ற குரலில் கேட்டாள்.

முழி பிதுங்கி எழுந்து நின்றவன், "ஏன்?" என்று எச்சிலை விழுங்கிக் கொண்டே கேட்டான்.

"அனைவர் கண்களும் அதிர்ந்து பாவத்தோடு பார்க்க, உங்கள் கண்கள் மட்டும் பயத்தோடு பார்த்தது. கைகளோ முதுகுக்கு பின்னால் மறைந்து சென்றது. எடுக்கும்போது தெளிவாக எடுக்க வேண்டும் என்று முன் வரிசையில் அமர்ந்து விட்டீர்களே அது தான் நீங்கள் செய்த பெரிய தவறு" என்றாள் அவனை குற்றம் சாட்டி.

அவன் கைகளில் இருந்த அலைபேசி ஆராவால் பறிக்கப்பட்டு, அதன் கடைசி அழைப்பு சாரா மேடம் என்ற பெயர் கொண்ட எண்ணுக்கு சென்றதைக் காட்ட, கொதித்த கோபத்தை உள்ளங்கையில் சேர்த்து அவன் முகத்தில் குத்தினான்.

மினியை நோக்கி தன் கைகளை நீட்டி, "சீ" என்று ஒற்றை வார்த்தையால் தன் ஒட்டுமொத்த வெறுப்பையும் உணர்த்தினான் .

இருவருக்குமான வேலை நீக்க உத்தரவை உடனே பிறப்பித்தான். தலை கவிழ்ந்தபடி இருவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

இந்தப் பிரச்சினைக்கு எல்லாம் காரணம் சாரா என்று அறிந்ததும், மனம் கொண்ட கோபத்தில்,
" மீட்டிங் கேன்சல் " என்று ஆரா கர்ஜித்தான்.

" ஏன்? எதற்கு? மீட்டிங்கை கேன்சல் செய்வதற்கான எந்த ஒரு முக்கியமான விஷயமும் இப்பொழுது நடைபெறவில்லை. ஆகையால் மீட்டிங்கை தொடரலாம்" என்றவள் ஆராவிற்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் புறம் தன் வளைக்கரங்களை நீட்டி , "உட்காருங்கள் அமுதா!" என்றாள் அவனை அடக்கும் குரலில்.

அந்தக் குரலிற்காகவோ, இல்லை அந்த வார்த்தைக்காகவோ தன் உள்ளக் கொதிப்பை ஒதுக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தான். அந்த நாளில் தொடங்கிய இதம் எல்லாம் மறைந்தே போனது.

தன்னுடைய பங்களிப்பு இல்லாமலேயே, அவள் அவளுடைய பிரச்சனையை தீர்த்துக் கொண்டதை அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு ஓர் தேவை என்றால் தன்னிடம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனுக்குள் எழுந்தது. அது உரிமையின் முதல் படி. அதில் தான் ஏறி நின்று கொண்டு, சங்கமித்ராவின் வருகைக்காக காத்திருந்தான் ஆரா.

சிறை எடுப்பாள்...
 
Tamil elakkiyam

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 1, 2022
Messages
9

Next episode pls mam
 
Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
628
சங்கமித்ராவின் இந்த துணிவு சூப்பர்.
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
மித்ராவிற்கு காதல் செடி முளை விடுகிறதோ இல்லையோ, ஆராவிற்கு அது முளைத்து மரமாகி காய் கனியாகும் காலமே வந்துவிடும் போலவே 🤣🤣🤣🤣

வைர வளையல்கள் கொண்டு அவளை ரசிக்கிறான், ஆனாலும் அகம்பாவியும் அவனை விடுவதாக தெரியவில்லையே 😩😩😩😩

சங்கமித்ரா 😎😎😎 அவளை சாய்க்க நினத்தவர்களௌக்கு பெரிய சாட்டையடிதான் 😏😏😏
 
kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Sema mass mithra
 
Top