• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 24

மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறிய பிறகு ஆரா மட்டும் அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து, தன் ஒற்றைக் கையினை நாடியில் குற்றியபடி அரை வட்டம் அடித்துக் கொண்டிருந்தான்.

அந்த மீட்டிங் ஹாலில், கூட்டம் முழுவதும் வெளியேறியதால் அறையின் வெப்பநிலை குறைந்து, ஏசியின் உதவியால் உச்சகட்ட குளிர் விரவி இருந்தது.

அந்தக் குளிர் காற்றும் ஆராவை குளிரச் செய்யவில்லை. இலக்கற்ற வெறித்த பார்வையுடன், சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தவன் முன்பு தன் கையை நீட்டி ஆட்டினாள் சங்கமித்ரா. பலனில்லாமல் போகவே திரும்பிச் செல்ல எத்தனித்தாள்.

மனதில் தோன்றிய நொடி நேர முடிவில், நீட்டிய கையை இழுத்து தன் மடியில் அமரச் செய்தான் அவளை. நாற்காலி சுழன்ற வேகத்தில் அவன் தோள் சாய்ந்தாள் பதுமை.

சுதாரித்துக் கொண்டு அவள் எழப்போகும் முன்பு அவளை தன் கரத்தினால் இறுக்க அழுத்திப் பிடித்துக் கொண்டு, " ஏன் மேடம்? ஒரு ஆபத்திற்கு உதவி என்றால் என்னுடைய உதவியை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களோ!" என்று நக்கல் கலந்த குரலில் வினவினான்.

"ஏன்?" என்றாள் தோரணையுடன்.

"அவள் முழு சேலையையும் உருவி இருந்தால் நீ என்ன செய்திருப்பாய் முட்டாள்?" என்றான் பற்களை நறநறவென கடித்துக் கொண்டே.

" உருவிய சேலையை வாங்கி மீண்டும் கட்டி இருப்பேன்" என்று பதிலளித்தவள், " அது சரி அதில் உங்களுக்கு என்ன வந்தது? " என்றாள் வார்த்தைகளில் நிதானமாக.

தன் நெஞ்சோடு சாய்ந்திருந்தவளின் தோளைப் பற்றி, முதுகை வளைத்து திருப்பி, " நீ அடிக்கடி ஓர் வார்த்தை, என்னை வெல்ல வேண்டும் என்பதற்காக சொல்வாயே!" என்று அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான்.

ஆராவின் பார்வை அவள் கண்களைத் தாண்டி உள்ளத்தை தீண்ட ஆரம்பித்தது. சலனமில்லாத குளத்தில் கல் வீசிவதால் எழும் நீரலை போல், முதல் அலை சங்கமித்ராவின் உள்ளத்தில் இருந்து எழத்துடித்தது.

"நினைவில்லை..." என்று கூறி தன்னை சமாளித்து நிமிர்ந்தாள்.

" நினைவை மீட்டெடுத்து விடலாமா?" என்றவனின் கைகள், மெல்ல தோளிலிருந்து கீழே இறங்கி அவள் இடையை மீட்ட ஆரம்பித்தது.

இதற்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தவள், அவன் மார்பின் மீது ஒரு கையை வைத்து அழுத்தி எழ முயல, அவள் கையின் மீதே தன் இடக்கையை அழுத்தி, " நான் ஆராவமுதன் என்றால் நீ? " என்றான் அவள் கைவிரல்கள் மீது தாளமிட்டபடி.

"ம்... மிஸஸ்.ஆராவமுதன்" என்று அவள் சொல்லி முடிக்கும் போது, அவளின் நுனி நாக்கு மேல் அன்னத்தில் சென்று முட்டி நிற்க, ஆராவின் தாளமிட்ட விரல்கள் அசையாமல் நின்றது.

" இதுவரை நீ கூறிய இந்த வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை, உன்னிடமும் என்னிடமும். உன்னை என்னிடம் தந்தால் அர்த்தத்தை நான் உன்னிடம் தருவேன். வசதி எப்படி? " என்றவனின் கைவிரல்கள் அவள் இடையில் தாளமிட ஆரம்பித்தது.

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவள், தயக்கம் இன்றி தன் கைகளை அவன் கழுத்தில் கோர்த்துக்கொண்டாள். இமை மூடா அவளின் வெறித்த பார்வையில், "ம் ஹூம்... உயிர்பில்லா இந்த அணைப்பு யாருக்கு வேண்டும்? என் மீது, உந்தன் உன்மத்தமான உயிர் அணைப்பு வேண்டும்" என்றான் அவளின் உணர்வுகளை அவதானித்தபடி.

" எந்த கடையில் கிடைக்கும் என்று கூறினால் வாங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்" என்றாள் ஏளனமாக.

அவள் உணர்வுகளை தட்டி எழுப்பும் தாரக மந்திரமாம் அவள் தாயினை வைத்து மீண்டும் ஓர் உணர்வு போராட்டத்திற்கு அவளை தயாராக்க முயன்றான்.

" அடடா சங்கமித்ராவை அவள் அம்மாவின் ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தேனே! இப்படி இடக்குமடக்காக பேசுபவளை எப்படி அழைத்துச் செல்வது? " என்றான் சிறு சிரிப்புடன்.

அவன் தோள்களைப் பற்றி இருந்த அவள் கைகள் சிறு நடுக்கத்துடன் அவன் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. "உண்மையாகவா?" குரல் மட்டும் கம்பீரமாய் வந்தது.

"நிச்சயமாக..." என்றான்.

அடுத்த நொடி, குழந்தை ஆதரவாய் தன் கரடி பொம்மையை கட்டி அணைப்பது போல் ஆராவை கட்டியணைத்தாள் சங்கமித்ரா. காமம் கலக்காத, காதல் இல்லாத, வேஷமோ, நேசமோ இல்லாமல் நன்றியை மட்டும் தேக்கி இருந்தது அவள் அணைப்பு.

சங்கமித்ராவை, தன்னை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வைத்த மகிழ்ச்சியில், கர்வத்துடன் அவளின் அணைப்பை ஏற்றுக் கொண்டான் ஆரா.

" அய்யய்யோ நான் எதையும் பார்க்கவில்லை... " என்று தன் கைகளால் கண்களை மூடியபடி கத்தினான் சிவா.

சிவாவின் சத்தத்தில் கலைந்த இருவரும் அலட்டிக் கொள்ளாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தனர். ஆராவும் தன் மடியில் இருந்து அவளை எழச்செய்யவில்லை. சங்கமித்ராவும் எழ முயற்சிக்கவில்லை.

" ஜாடிக்கேத்த மூடி தான்... " என்று முணுமுணுத்த சிவாவோ, அவர்களின் நெருக்கத்தைக் கண்டு கூசி சுவற்றைப் பார்த்து திரும்பினான்.

சிவாவின் எண்ண அலைகளை உணர்ந்து கொண்ட சங்கமித்ரா மெல்ல ஆராவிடமிருந்து எழுந்து நின்றாள்.

"சாரி. கரடி போல நுழைந்து விட்டேன். உடனே வரவேண்டும் என்று ஆரா கூறியதால் ஏதோ அவசரம் என்று நினைத்து அனுமதியில்லாமல் வந்து விட்டேன்" என்று பொதுவாக தன்னிலை விளக்கம் கொடுத்தான் சிவா.

"டேய் வாடா. நீ எத்தனை நேரம் நின்றாலும் இதற்கு மேல் ஒரு அடி கூட நகராது. ஏனென்றால் என் நேரம் அப்படி " என்று சங்கமித்ராவை ஓர் அர்த்தப் பார்வை பார்த்தான் ஆரா.

"ஆஹா. இருநூற்று ஐம்பது பேர் உட்காரக்கூடிய மீட்டிங் காலில், நடுநாயகமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மடியில் பொண்டாட்டியையும் வைத்துக்கொண்டு, இருவரும் கட்டியணைத்துக் கொண்டு, குளிரும் ஏ சி அறையில் எனக்கு வியர்த்து வழியச் செய்துவிட்டு, உனக்கு நேரம் சரியில்லை என்கிறாய். உண்மையாகவே எனக்கு தானடா நேரம் சரியில்லை.

டேய் ஆரா! இதை உன் டைரியில் குறித்து வைத்துக்கொள். நானும் உடனே ஒரு பெண்ணை தூக்குறேன். கல்யாணம் கட்றேன்"' என்று தன் தொடையில் அடித்து சபதம் செய்தான் சிவா.

சிவாவை ஏளனமாகப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தான் ஆரா.

"ஏம்மா மித்ரா என்னை உன் அண்ணனாக தத்தெடுத்து எனக்கு ஒரு பெண் பார்த்து தருவாயா?" என்று சிவா புதிய உறவொன்றைத் தேடினான்.

'அண்ணனா?' மனதோடு எழும்பிய அவளின் குரலில், நீரற்று காய்ந்த வேரில் அன்புச்சாரல் விழ ஆரம்பித்தது.

சங்கமித்ரா பதில் ஏதும் உரைக்காமல், ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் நின்றதும், அவள் அருகில் வந்த சிவா, "என்னம்மா! இந்த அண்ணனுக்காக இதைக் கூட செய்யக் கூடாதா? ஓ... என்னை நீ அண்ணனாக ஏற்றுக் கொள்ளவே இல்லையா? உறவுகளை இழந்த எனக்கு, உறவுகளே கிடைக்கக் கூடாது என்று அந்த ஆண்டவன் என் தலையில் எழுதி விட்டான் போலும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று குரலில் சோகம் மீறிட நகர்ந்து செல்ல முயன்றவனை, "அ... அண்ணா!" என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அதுவரை அங்கு நடந்ததை ஏனோ தானோ என்று பார்த்துக் கொண்டிருந்த ஆராவின் விழிகள், சங்கமித்ரா உதிர்த்த வார்த்தையில் அதிர்ந்து பார்த்தது.

'சங்கமித்ராவின் குணத்தை பொறுத்தவரை அவளால் யாரோடும் இயல்பாக ஒன்ற முடியாது. எப்படி ஒரே வார்த்தையில் சிவாவை உறவாக ஏற்றுக் கொண்டாள்' என்று யோசித்தான்.

சங்கமித்ராவோ சிவாவின் அருகில் வந்து, " உங்கள் வருத்தத்தை போக்கவே அண்ணா என்று அழைத்தேன். உண்மையான பாசத்தோடு அழைக்கும் போது, என் வார்த்தையில் அதை உணர்வீர்கள். சாரி என்னால் யாரிடமும் பொய்யாக நடிக்க முடியாது" என்று சிவாவிடம் உரைத்தாள்.

' பரவாயில்லை ஆரா. சங்கமித்ராவின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரியாக கணிக்கத் தொடங்கி விட்டாய்! சபாஷ் டா!' அவளின் பதிலில் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான் ஆரா.

" பொய்யாய் பழகும் மனிதர்கள் உலவும் இந்த உலகில் உண்மையைக் கூறும் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீ என்னை சகோதரனாக ஏற்றுக் கொள்ள காலம் எடுத்துக் கொண்டாலும், நான் இந்த கணம் முதல் உன்னை என் சகோதரியாக ஏற்றுக்கொள்கிறேன்.

இந்தப் பயல் உனக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லம்மா. உன்னை இவனிடமிருந்து பாதுகாப்பாய் மீட்டெடுத்து நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் " என்றான் உள்ளத்தில் ஊறிய உண்மையான பாசத்துடன்.

" போதும்டா சிவா. உன் பாசம் பார்டரை தாண்டுகிறது. காலையில் ஹனிக்கு போனில் பேசி போட்டுக் கொடுத்தாயா? " என்றான் இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவென தேய்த்தபடி.

" அது... அது... நீ நகை கடையில்... கிப்ட்... பக்கத்தில் தங்கச்சி... திடீரென்று ஏற்பட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன் ஆரா. உன் மனமாற்றத்தை உரைத்தேன். தவறா? " என்றான் உள்ளூரத் தோன்றிய சிறு பயத்தை மறைத்துக் கொண்டு.

" அப்போ இதுவரை சாரா விஷயமும் இப்படித்தான் பாட்டிக்கு சென்று கொண்டிருக்கிறதா? " என்றவனின் பதில் கேள்வியில் தன் குட்டு வெளிப்பட்டதில் தலையை குனிந்து கொண்டு நின்றான் சிவா.

" நீ எந்த விஷயத்தையும் மறைத்து செய்யவில்லையே ஆரா" என்றான் சிவா பதில் கண்டுபிடித்த நிம்மதியில்.

சிவாவின் தோளை அணைத்துக்கொண்டு, "சரி பரவாயில்லை விடு. நீ எனக்கு இன்னொரு உதவி செய்ய வேண்டும். சாரா பற்றிய முழு தகவல்களையும் சேகரித்து என்னிடம் தர வேண்டும் " என்றான் கோபத்தை உள்ளடக்கிய குரலில்.

" முடிந்து போன ஒரு விஷயத்தை, ஏன் மீண்டும் தொடர வேண்டும் ஆரா?" என்றான் குழப்பமாக.

" உரிமை பட்டவன், அவன் பொருளை அவன் தானே பாதுகாக்க வேண்டும் " என்றான் ஆரா சங்கமித்ராவை பார்த்துக் கொண்டு.

"என்றைக்குத்தான் நீ கூறியது எனக்குப் புரியப் போகிறதோ? அந்த ஆண்டவனுக்கு தான் அது வெளிச்சம்" என்று புலம்பினான் சிவா.

" சரி கிளம்பலாம்" என்ற ஆராவுடன் மூவரும் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்தனர்.

அலுவலகத்தில் சில கண்கள் சங்கமித்ராவை சல்லடையாய் துளைக்க, நிமிர்ந்த நன்னடையுடன் துச்சம் என அப்பார்வைகளை விலக்கி விட்டு அச்சம் இல்லாது முன்னே நடந்தாள்.

அப்பார்வைகளின் பின் பதிந்திருந்த வக்கிரத்தை புரிந்து கொண்ட ஆரா, தன் இடது கையை, இடது தோளை மீறித் தூக்கி, வலது கை சேர்த்து சத்தம் எழுப்பினான்.

அவனின் கையொலியில் அனைவரும் எழுந்து நின்றனர். சங்கமித்ராவை தன் தோளோடு சேர்த்து, "மிஸஸ்.ஆராவமுதன்" என்றவனின் அழுத்தமான வார்த்தையில் அலுவலகமே அதிர்ந்து நின்றது.

அவனின் கை வளைவில் நின்று கொண்டே அவன் முகத்தை பார்த்த சங்கமித்ராவின் முகத்தில் 'ஏன்?' என்ற கேள்வி தொக்கி நின்றது. ஆராவின் முகத்திலோ "நான்" என்ற ஆணவமே குடியிருந்தது.

கள்ளம் படிந்த பார்வைகளில் எல்லாம் புது மரியாதை அவசரமாக தோன்றியது. அதை கவனித்தவனின் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.

இருவரின் பார்வை பரிமாற்றங்களைக் கண்ட சிவா, மனதில் பூத்த மகிழ்ச்சியுடன் இருவரையும் தன் இல்லத்திற்கு அழைத்தான் ஆசையாக.

இதுவரை அழைத்திடாத நண்பனின் அழைப்பை மறுக்க முடியாத ஆராவும், அவனின் இல்லத்திற்குச் செல்ல இசைவு தெரிவித்தான்.

சிவா தன் வீட்டின் கதவை திறந்ததுவிட்டு, 'ஒரு நிமிடம் இருவரும் இங்கேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்த உடன், சலங்கைச் சத்தத்துடன் தாள ஓசைகளும் ஜதி சேர்த்து, வீடு எங்கும் இன்னிசை ஒலிக்க ஆரம்பித்தது.

வீட்டின் உள்ளே நுழைய தூக்கிய சங்கமித்ராவின் கால்கள் அதிர்வுடன் பூமியில் பதிந்தது. உள்ளங்கைகளில் வியர்வை பூக்கள் பூக்க, உள்ளங்கைகளை ஆடையோடு இறுக்கி மூடிக்கொண்டவள், தன் இறுக்கத்தை இறக்கி வைக்க சுவற்றை நோக்கி தன் கையை கொண்டு செல்லும் வேளையில், அவளின் தளிர்க்கரத்தை தன் முரட்டுக் கரத்தோடு இறுக்கிக் கொண்டான் ஆரா.

" இரும்பு மாதிரி நான் நிற்கும் போது, கல்லையும் மண்ணையும் துணை தேடலாமா துணைவியே? நீ தடுமாறும்போது தாங்கிக் கொள்ள தயாராக இருப்பேன் " என்றவள் காதில் கிசுகிசுப்பாக கூறியவன் கண்ணடித்துச் சிரித்தான்.

தன் கையினை ஆராவிடமிருந்து விலக்கிக் கொள்ள முயன்ற சங்கமித்ராவிற்கு தோல்வியே கிட்டியது.

இரண்டே நிமிடத்தில் வீட்டிற்குள் இருந்து வெளிவந்த சிவாவின் கையில் ஆரத்தி தட்டு இருந்தது. சிகப்பு ஆலத்தில், வெண்மைக் கற்பூரம் ஜோதியாய் ஜொலிக்க இருவருக்கும் ஆலம் சுற்றினான்.

தன் நண்பனுக்கு மன மகிழ்ச்சியுடன் நெற்றியில் திலகமிட்டான். சங்கமித்ராவிற்கு எப்படி வைப்பது என்றவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, உரிமையாய் செந்தூர ஆலத்தை சங்கமித்ராவின் நெற்றியில் வைத்தான் ஆரா.

மென்மையாய் ஒலித்த இன்னிசை சங்கமித்ராவின் மனதில் மட்டும், கொட்டும் மழையில் வெட்டும் பேரிகை போல் நெஞ்சைப் பிளந்தது.

வரவேற்பறையில் தன்னருகே சங்கமித்ராவை அமர்த்திக் கொண்டான் ஆரா.

" என் தங்கை நன்றாக பரதம் ஆடுவாள். என் அம்மா நன்றாக இசைக் கச்சேரி செய்வார்கள். இவர்கள் இருவரையும் கச்சேரி மற்றும் பரத நிகழ்ச்சிக்கு ஒரு சேர அழைத்துச் செல்வது என் தந்தையின் பொறுப்பு.

அப்படி ஒரு நாள் அவர்களுடன் நானும் செல்லும்போது தான் அந்தக் கோர விபத்து ஏற்பட்டு, அவர்களை இழந்த எனக்கு ஆரா கிடைத்தான். அந்த நடுநிசி வேளையிலும் என்னோடு இருந்து என் உயிரை மீட்டுக் கொடுத்தான்.

உயிர்ப்பற்ற இந்த வீட்டை உயிர் கொள்ளச் செய்வது, அவர்கள் இருவரின் இசை மட்டுமே. அவர்களின் இசை இல்லை என்றால் என்னால் இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. இந்த வீட்டில் நான் உறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன" என்றவனின் வலிகள் சுமந்த விழிகள் வரவேற்பறையில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தன் குடும்பத்தினர் புகைப்படத்தை பார்த்தது.

உறக்கம் இல்லா தவிப்புடன் கூடிய அந்த விழிகள் தன் தாயை நினைவு படுத்தவே, தோன்றிய உத்வேகத்துடன் ஆராவின் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டாள்.

மட மடவென அந்த புகைப்படத்தை நோக்கி நடந்தாள். புகைப்படத்தின் முன் மலர்களிடையே வீற்றிருந்த சலங்கையை, கைகள் நடுங்க தன் காலில் மாட்டிக் கொண்டாள்.

இடது பாதம் தூக்கி, கைகள் அபிநயம் பிடிக்க அவள் நின்ற கோலத்தைக் கண்ட சிவா எழுந்து நின்றான். நடக்கப் போவதை அறிந்த ஆரா நன்றாக வசதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஒலித்தப்பாட்டிற்கு சலங்கையில் பதில் கூறியவளின் நடன வேகத்தில், அர்ப்பணிப்பு நாட்டியத்தில், கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்த சிவா தன்னை அறியாமல் அமர்ந்தான். சிரித்தான். ரசித்தான். கையெடுத்து வணங்கினான் மறுபிறவியாய் அவதரித்த தன் புதிய தங்கையைக் கண்டு. அவன் நெஞ்சை அழுத்திய பாரங்கள் எல்லாம் இசையோடு கரைய, கண்ணீர் வடிய கண்கள் மூடியவன், இதமாய் கண்ணயர்ந்தான்.

சிவா உறங்கியதை அறிந்த ஆரா மெல்ல எழுந்தான். இடுப்பில் சொருகிய புடவையுடன், நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளுடன், நடனத்தோடு ஐக்கியமானவளின் ஆட்டத்தை தன் அணைப்பின் மூலம் நிறுத்தினான்.

அவளின் வேக மூச்சுக்கள் ஆக்ரோஷமாய் அவன் நெஞ்சில் மோத, அதிரும் பறை போல் அவள் இதயத்துடிப்பு, அவன் நெஞ்சில் மோத, அவன் இறுகிய அணைப்பில் அவள் இதழ்கள் அவன் சட்டை பட்டனோடு ரகசியப் பேச்சுவார்த்தை பேச, சத்தமிட்ட சலங்கை மௌனமாக நின்றவளின் நாடியைப் பற்றி தன் முகத்தை பார்க்கச் செய்தான் ஆரா.

திடீரென்று தடுத்து நிறுத்தப்பட்ட வேகத்தை சமன் செய்ய அவளின் இமைக் கதவுகள் மூடி மூடித் திறக்க, " இந்த அணைப்பை என் உயிர் உள்ளளவும் மறக்க முடியாது. இதற்கு பரிசாய் உனக்கு மறக்க முடியாத அணைப்பை பரிசளிக்கிறேன் ஏற்றுக்கொள் மித்ரா" என்றவன் தன் இதழால் அவள் இதழை அணைத்தான்.

சிறை எடுப்பாள்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,938
சூப்பர் சூப்பர் சகி 😍😍😍😍😍ஆடியா காலும் பாடிய வாயும் சும்மா இராதுனு சொல்லுறது சங்கமித்ராவுக்கு பொருந்தும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Tamil elakkiyam

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 1, 2022
Messages
9

சிவா உறங்கியதை அறிந்த ஆரா மெல்ல எழுந்தான். இடுப்பில் சொருகிய புடவையுடன், நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளுடன், நடனத்தோடு ஐக்கியமானவனின் ஆட்டத்தை தன் அணைப்பின் மூலம் நிறுத்தினான்.

அவளின் வேக மூச்சுக்கள் ஆக்ரோஷமாய் அவன் நெஞ்சில் மோத, அதிரும் பறை போல் அவள் இதயத்துடிப்பு, அவன் நெஞ்சில் மோத, அவன் இறுகிய அணைப்பில் அவள் இதழ்கள் அவன் சட்டை பட்டனோடு ரகசியப் பேச்சுவார்த்தை பேச, சத்தமிட்ட சலங்கை மௌனமாக நின்றவளின் நாடியைப் பற்றி தன் முகத்தை பார்க்கச் செய்தான் ஆரா.

திடீரென்று தடுத்து நிறுத்தப்பட்ட வேகத்தை சமன் செய்ய அவளின் இமைக் கதவுகள் மூடி மூடித் திறக்க, " இந்த அணைப்பை என் உயிர் உள்ளளவும் மறக்க முடியாது. இதற்கு பரிசாய் உனக்கு மறக்க முடியாத அணைப்பை பரிசளிக்கிறேன் ஏற்றுக்கொள் மித்ரா" என்றவன் தன் இதழால் அவள் இதழை அணைத்தான்.

சிறை எடுப்பாள்...
அருமை சகோ அடுத்த அத்தியாயம் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஆரா உனக்குள் இத்தனை பெரிய மன்மதனா😃😃😃 ஆனால் இதனை எல்லாம் உணர்வுப்பூர்வமாய் உன் முன்னாள் காதலியான சாராவிடம் காட்டியதில்லையே, ஏன் 🤔🤔🤔

எப்போது மனம் நிறைந்து சிவாவை "அண்ணா" என்றழைப்பாய் மித்ரா 🧐🧐🧐 ஆனாலும் வார்த்தையால் சொல்லாமல் உன் நடனத்தினால் உன் அன்பை வெளிப்படுத்தி விட்டாயே 👏👏👏

ஆராவமுதன் 💕💕 மிஸஸ் ஆராவமுதன்

அடுத்து என்னவோ 🧐🧐🧐 மித்ரா சலனப்பட்டு நிற்பாளா அல்லது ஓங்கி ஒரு அறை விடுவாளா 😜😜😜😜

முக்கியமான கட்டத்தில தொடரும் போட்டு விட்டீர்களே ஆத்தரே😔😔😔. இது நியாயமா 😭😭😭😭😭
 
kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Sema interesting
 
Top