• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அம்முவின் தந்தையைக் கண்ட கங்காதரனின் மனமோ எதிர்காலத்தை படமிட்டு காட்டுவது போல் மாயத்திரையை உண்டாக்கியது. அந்த எதிர்காலத் திரையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் நிச்சயம் இருக்கப்போவதில்லை என்று தோன்றிட மேலும் மேலும் அயர்ந்து கலைத்து உடல் வியர்க்க, ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனை வாசலிலேயே மயக்கமடைந்தார்.

மருத்துவமனை என்பதனால் சட்டென அங்கே இருந்தவரிகள் மயக்கமடைந்த கங்காதரனை கவனித்து முதலுதவி செய்து படுக்க வைத்தனர். சற்று நேரத்தில் ரத்த அழுத்தம் சீராகி விட, அம்மு மற்றும் அவர் தந்தை தியாகராஜன் வருவதற்குள் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் அதன்படி அங்கிருந்து கிளம்பியும் சென்றுவிட்டார்.

இல்லம் வந்தவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை... ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு. இத்தனை நாள் அம்மு இந்த வீட்டோடு ஒருத்தியாக பொருந்திப் போனது அனைத்தும் மறைந்து குடும்பத்தை பிரிக்க வந்த சரியாகத் தெரிந்தாள். ஓய்வெடுக்கவென்று அறைக்குள் தஞ்சம் அடைந்தவர் தன் ஆருயிர் மனைவியிடம் கூட உண்மையைக் கூற தயங்கினார்.

தன் பால்ய சிநேகிதர்கள் மூலம் தியாகராஜன் குடும்பம் பற்றி அறிந்து கொண்டால் தேவையில்லை என்னு தோன்றிட திறன்பேசியை உயிர்பித்தார். அப்போது தான் தன் அலைபேசியில் நேத்ராவின் அழைப்புக்கள் தவறிய அழைப்புகள் பட்டியலில் இருப்பதைக் கண்டு முதலில் அவளுக்கு பேசிட முடிவு செய்தார்.

அங்கே வாரணாசியில் மீனாட்சியும், கொடியும் தங்கள் ராஜ்ஜிய அறையில் 'வீட்டில் மூனு மருமக்கமார்கள் இருக்காளுங்கன்னு தான் பேரு... இன்னமும் வீட்டுவேலை எல்லாம் நாம தான் பாக்க வேண்டியிருக்கு...' என்று சலித்துக் கொண்டபடியே வேலையை கவனித்தனர்.

வழக்கம் போல் நேத்ராவை சமையல் வேலைகளை செய்யவிடாமல் தடுத்து தன்னோடு இருத்தி வைத்திருந்த மதி மற்றும் வேந்தனுடன் ராமும் இணைந்து கொண்டான். இல்லை இல்லை அப்பாவைப் போலவே பிள்ளைகளும் அன்னையை படுத்தி எடுத்தனர்.

குழந்தைகளுக்கு பாலூட்டி உறங்க வைத்துவிட்டு நேத்ரா எழுந்து செல்ல நினைத்த வேளையில், வெண்பா அசந்து உறங்கிக் கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட ராம், தன் மனவாட்டியை இடையோடு சேர்த்து அணைத்து தன் கைகளில் அள்ளிக் கொண்டு ஒற்றைப் படுக்கை வசதி கொண்ட குட்டி அறைக்குச் தூக்கிச் சென்றான்.

"ராம் என்ன இது? நான் சமையல் வேலைய பாக்க போகனும்!!!"

கதவை தாழிட்டு அதில் அவளை சார்த்தி வைத்து கழுத்து வளைவில் இதழ் பதித்தபடி "ம்ம்ம்... போலாம் போலாம்... உன் புருஷனுக்கு ஏதோ எமர்ஜன்சியாம்... என்னனு கவனிச்சுட்டு போ"

"தினமும் காலைல உங்களோட இதே வம்பா போச்சு? விடுங்க என்னை...." என்று பொய் கோபத்தோடு அவனை நகர்த்த முயற்சித்தாள்.

விடுவானா அந்த விடாகண்டன்... இருவருக்குமான நெருக்கத்தைக் குறைத்து இடையோடு சேர்த்தணைத்து

"இப்படி சிக்குனு சின்ன இடுப்பா இருந்தா இப்படித் தான் தூக்கிட்டு வரத் தோணும்... கொஞ்சமாச்சும் வெய்ட் போடு... அப்பவாச்சும் உன் மீதான காதல் தீருதானு பாக்கலாம்" என்று வாய் அவளது கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாலும், கைகள் அவளது உடையையும் தாண்டி வெற்றிடையை வறுடிக் கொண்டிருந்தது.

"அப்படியே தீர்ந்துட்டாலும்!!!" என்று வெட்கம் கலந்து நக்கலாக முணுமுணுத்துவிட்டு 'என் மீதான உன் காதல் இது போன்ற காரணங்களுக்கெல்லாம் குறைந்திடுமா என்ன!!' என்ற கேள்வியை கண்களில் தாங்கியபடி, அவனது காதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதில் கர்வம் கொண்டு திமிர் பார்வை பார்த்தவளை உண்மையாகவே எப்படி விட்டு விலகுவது என்று தெரியாமல் தவித்தான் அவளது கண்ணாளன்.

அந்த திமிரில் மேலும் மேலும் மூழ்கி, அவள் இதழ்களில் தானும் தொலைந்து, தன் இதழ்களையும் தொலைத்து..... கரைந்து..... கரை தேட அவள் உதவி நாடி அதிலும் தோற்று தன்னவளை வெற்றி காணச் செய்து கர்வமாக தலை தூக்கிப் பார்த்தான் அவள் அன்பன்.

அவனாக விலகும் வரை தானும் விலகக் கூடாது என்ற முடிவோடு அவனது இதழ்களுக்கு இதம் சேர்த்துக் கொண்டிருந்தவள், அந்த முத்தத்தின் முடிவில் வந்த அவன் பார்வையின் தாக்கத்தை எதிர்க் கொள்ள முடியாமல் போக தன் வஸ்திரம் கொண்டு அவன் நேத்திரம் மறைத்தாள்.

"தரு.... "

"ம்ம்ம்... "

"One-day match வெச்சுக்கலாமா?" என்றிட பட்டென்று அவன் கண் கட்டை விலக்கி அவன் வாயில் அடித்து, "மூனு பிள்ளைகளுக்கு அப்பா மாதிரி பேசுங்க ராம் ப்பா... இப்போ தான் இளமை திரும்புது நெனப்பு..." என்று கூறி அரணென தடுத்திருந்த அவன் கைகளை தட்டிவிட்டு நகர முற்பட்டாள்.

இப்போதெல்லாம் நேத்ரா ராமிற்கு வயதாகிவிட்டது என்று காட்டுவதற்கேனும் அவ்வபோது 'ராம் ப்பா' என்று அழைப்பதுண்டு...

"என்ன நீ? சும்மா சும்மா ராம் ப்பானு கூப்பிட்டு கடுப்பேத்துறேயா?" என்று விரல்களை சொடுக்கியபடி, குரலிற்கேற்ப தலையை அசைத்து "எனக்கு வயசாகிடுச்சா?" என்று ஏதோ கோபத்தில் சவால் விடுவது போல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தான் ராம்.

அதனைக் கேட்டவள் தான் அரண்டு தெறித்து ஓட, மீண்டும் அவளை சிறைப்பிடித்து மஞ்சத்தில் சரித்தான் அவன்.

தோற்றவர் வென்றதாகவும், வென்றவர் தோற்றதாகவும் கருதப்பட, இருவருக்கும் வெற்றி இருவருக்கும் தோல்வி என்ற நிலையில் மேச் ட்ரா-யில் சிறப்பாக முடிந்தது... அதன்பின் குளியலை முடித்து அப்போது தான் அடுக்களை நுழைந்தாள். அதற்குள் மீனா,

"உன்னை எத்தனை தடவ சொல்லிருக்கேன்... ராம் ஆபிஸ் போனதுக்கப்பறம் இங்கே வா... இப்போ இடத்தை காலி பண்ணு..." என்று விரட்டிவிட, கொடி அதனை ஆமோதிப்பது போல் அமைதியாக தன் பணியை செய்து கொண்டிருந்தார்.

"யூ டு மம்மி" என்று சோக கீதம் வாசித்து கூட பார்த்து விட்டாள்... இருவரும் கண்டு கொள்வதாக இல்லை. இருவரையும் கண்டு கொள்ளாது நேத்ரா வும் முந்தானையை வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே நுழைந்து பாத்திரத்தில் கை வைக்க, சரியாக இன்டர்காம் ஒலித்தது.

அழைப்பை ஏற்கச் சென்ற கொடியை தடுத்து நிறுத்தி, "அதை எதுக்கு எடுத்து பதில் சொல்றிங்க!!!... நானே போறேன்..." என்று முகத்தை உம்மென வைத்துக்கொண்டு கூறிவிட்டு வெளியேறினாள் ராமின் சீமாட்டி.

அவளின் நிலை கண்டு மீனுவும், கொடியும் ஒருவரை ஒருவர் பார்த்து இதழ் மூடி சிரித்துக் கொண்டனர். அதிலும் மீனா ஒருபடி மேலே சென்று "சொன்னா கேட்டா தானே!!" என்று நக்கலடிக்கவும் மறக்கவில்லை.

அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் கோபத்தோடு ராமை வலைவீசிட, அவனோ மதியை தூக்கி வைத்தபடி பாதி குளியலுடன் வெளியே வந்திருந்தன் அடையாளமாய் இடையில் துண்டுடன் நின்றிருந்தான். வேக எட்டுகள் வைத்து இருவரையும் நெருங்கிட, மதி தன் தந்தையின் கையில் சமத்தாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அதனைக் கண்ட நேத்ரா ராமை மேலும் கொஞ்சம் முறைத்திட, "என்ன லுக்கு? நான் குளிச்சிட்டு வர்ற வரைக்கும் இங்கேயே இருனு தானே சொன்னேன்... இப்போ பார் உன்னால நான் தான் பாதி சோப்போட உடம்பு காஞ்சு நிக்கிறேன்..." என்று அவளுக்கு முன்னதாகவே தன் குரலை உயர்த்தி முந்திக் கொண்டான்.

"சரி... சரி... அதான் மதி தூங்கிட்டால்ல... நீங்க போயி குளிங்க... நான் இனி பாத்துக்கிறேன்." என்றவளிடம் நல்ல பிள்ளையாட்டம் குழந்தையை கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றான்...

குழந்தையின் தொட்டிலில் படுக்க வைத்த நேத்ராவிற்கு 'ஏதோ சரியில்லேயே! இவர் முழியும் சரியில்லே! என்னவா இருக்கும்! எப்பவும் வேந்தன் தான் யாரும் பக்கத்துல இல்லைனா முழிப்பான்... இன்னைக்கு மதி எப்படி முழிச்சா?' என்று சந்தேகம் எழுந்திட, அதனை ராமிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்து குளியலறை வாசலில் நின்று, கதவை மெல்லமாகத் தட்டி "ராம்" என்றது தான் தாமதம், அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளை சட்டென உள்ளே இழுத்து தூவாலை குழாயின் கீழ் நிறுத்தியிருந்தான்.

அவள் சந்தேகித்ததும் உண்மை தான். நேத்ராவை அறைக்கு வரவழைக்க அவன் யோசித்து வைத்திருந்த ஏமாற்று வேலை தான் அது. தன்னவள் வரும் அரவம் கேட்டு தூங்கும் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தான். பதற்றத்தில் குழந்தை மாறிப்போனதை அவனே கவனிக்கவில்லை. நேத்ரா மதியின் பெயரை உச்சரித்தப்பின் தான் அவனே கவனித்தான்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஈரத்தில் நனைந்த கடுப்பில் "ராம்..... ஏன் இப்படி பண்ணிங்க?" என்று உச்சகட்ட சுருதியில் கத்தினாள்.

அவள் கைகள் இரண்டையும் பிடித்து ஒரு முழு சுழற்று சுழற்றி அவளது முதுகை தன் மேனியில் கிடத்தி பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன்,

"அடுத்த முறை உன் மாமாவே நேர்ல பாக்கும்போது சண்டை போடுறேனா இல்லையா பாரு..." என்று சிரியாமல் கூறினான்.

"எதுக்கு?" அவள் மீண்டும் சுருதியை உயர்த்த

"பின்னே இந்த கருவாச்சிய என் கண்ணுல காமிச்சு இப்படி தினம் தினம் என்னை சாவடிக்கிறாரே!!" பின்னால் திரும்பி முறைத்தவளைக் கண்டு மேலும் அவனே தொடர்ந்தான்.

"இந்த முட்டகண்ணை வெச்சுக்கிட்டு உருட்டி உருட்டி பாத்து நீ கோபத்தில் முறைக்கிறது கூட காதலா மாறி உசுருக்குள்ள புகுந்து என்ன கொல்லுது டி கருவாச்சி..."

"திரும்ப திரும்ப கருவாச்சி சொல்றே நீ!!! ஆயிரம் பேர் என்ன!!! லட்சம் பேர் கூட சொல்லட்டும்... ஆனா நீ என்ன கருவாச்சி சொன்னே கடிச்சு வெச்சிடுவேன் பாத்துக்கோ..." என்று மிரட்டினாள்.

ராமோ சிரித்துக் கொண்டே மீண்டும் கருவாச்சி என்றிட அதில் கடுப்பேறி அவனை தள்ளிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்று வேறு உடை அணிந்து கொண்டு ஈரத்தலைக்கு துண்டு வைத்து கொண்டையிட்டுக் கட்டி கொண்டு வெண்பாவை எழுப்பிவிட்டாள்.

வெண்பா எழுந்து கொள்ளவும் ராமின் அட்டூலியங்கள் குறைந்திருந்தது. ஆனாலும் தன்னவளின் கோபத்தை ரசித்தபடி அவ்வபோது அவளுக்கு மட்டும் புரியும் விதமாக இதழசைவில் 'கருவாச்சி' என மொழிந்து அவளை கடுப்பேற்றினான்.

அதற்கும் சேர்த்து வைத்து ராம் அலுவலகம் கிளம்பும் வரை அவன் கண்ணில் படாமல் அவனை தவிக்கவிட்டாள் நேத்ரா. அனைவரும் அலுவலகம் சென்றபின் வெண்பாவை கணினி அறையில் ஆன்லைன் வகுப்பில் அமர்த்திவிட்டு கங்காதரனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள்.

அழைப்புகள் அனைத்தும் ஏற்கப்படாமல் போக ஏனோ அவளது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. உடனடியாக விமலாவிற்கு அழைத்துப் பேச 'வெளியே சிறிய வேலை இருப்பதாகக் கூறிச் சென்றதாக உரைத்தார் அவர். சற்று நேரம் பேசிவிட்டு கங்காதரன் வந்தவுடன் தனக்கு அழைக்கும்படி கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

வெண்பாவும் பெயருக்கென்று ஒருமணி நேரம் வகுப்பை கவனித்துவிட்டு தம்பி தங்கையுடன் விளையாட மலையரசியின் அறைக்கு பறந்தோடிச் சென்றுவிட்டாள்.

கடந்த ஒன்றரை மணி நேரமாக கங்காதரனின் நினைவில் இருந்தவளுக்கு தன்னவன் அறைக்குள் பூனை நடையிட்டு உள்ளே நுழைவது கவனத்தில் பதியாமல் போனது.

ராமிற்கு நேத்ராவின் முகம் காணாமல் அலுவலகம் சென்றது ஏதோ குறையுடன் வலம் வருவது போல் தோன்றிட மீண்டும் அவளைக் காண இல்லம் வந்திருந்தான்.

தங்களது அறையில் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த தன் நெஞ்சத்தரசியை பயமுறுத்தும் ஆசையில் பதுங்கி பதுங்கி அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் ராமை எதிர்பார்த்திடாத நேத்ராவும் தனக்குப் பின்னாலிருந்து தன் காதுகளுக்கு மிக நெருக்கத்தில் 'ப்பூம்' என்ற மீசைமுடி உரசலோடு வந்த சத்தத்தில் திடுக்கிட்டு துள்ளி எழுந்து நகர்ந்து அமர்ந்திருந்தாள்.

அவளது இதயமே வெளியே வந்து துடிப்பது போல் மேனியெங்கும் நடுங்கிட, இதழ் கடித்து நடுக்கதத்தைக் கட்டுப்படுத்த நினைத்தவளின் கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது. ஏற்கனவே கங்காதரனுக்கு என்னவோ ஏதோ என்று மனம் அடித்துக் கொள்ள, அது பத்தாதென்று ராம் வேறு ஏதோ வெடி வெடிப்பது போல் சத்தம் கொடுத்திட இரண்டும் சேர்த்து அவளை பேச்சிழக்கச் செய்திருந்தது.

"ஹேய் தரு... என்னடா? சும்மா விளையாட்டுக்கு தான் செஞ்சேன்... இதுக்கு போயி அழுவுறே!!" என்று அவனும் பதறிட,

"எதுடா விளையாட்டு? நான் என்ன மைண்ட்ல இருக்கேன்னு தெரியாம எப்போ பாத்தாலும் வம்பு பண்றது தான் உன் விளையாட்டா?" என்று வேதனையாக வந்தது அவளது குரல்.

அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டு "தரு சாரி டி" என்று சமாதானம் செய்தான் ராம்.

"விடுங்க என் கைய..." என்ற நொடி அவனும் அவளை விடுவித்திருந்தான். அதீத மரியாதையும், அதீத மரியாதையின்மையும் ஒரே நேரத்தில் அவளிடமிருந்து வெளிப்படுகிறது என்றாலே ஏதோ மூட் அப்ஸெட்டில் இருக்கிறாள் என்று நன்கு அறிந்து வைத்திருந்தான் ராம்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நெற்றியை சொரிந்தபடி மெத்தையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன், வாடிய முகத்துடன் நேத்ராவை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவனது அமைதி கண்டு தன்னை சமாதானம் செய்ய வந்தவனை இப்படி திட்டிவிட்டோமே என்று மனம் கேளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் கண்களால் மன்னிப்பு யாசித்தவனுக்கு அதனை உடனே கொடுத்திட மனமில்லாதவளாய், இதழ் சுழித்து பலிப்பு காட்டி நின்றிருந்தாள். அதில் அவள் கொஞ்சம் மனமிறங்கி வருகிறாள் என்று புரிந்திட,

"தரு.... சாரி டா.... எல்லாத்துக்கும் .... என்னை பாத்தா பாவம் இல்லையா? ஆபிஸ்ல அத்தனை வேலையையும் விட்டுட்டு உன் சிரிச்சு முகத்தை பாக்குறதுக்காக வந்த என்னை ஏமாத்திராத டி!" என்று மேலும் கொஞ்சம் பேசி அவளைக் கரைத்திட அவனுக்காக மட்டுமே சிரித்தாள் அவள்...

சமாதானம் ஆன தன் மனைவியை நெருங்கி அவளது கவலை என்னவென்று கேட்டறிந்து அதனையும் போக்கிட நினைத்து அவளை நெருங்கிய நேரம் சரியாக அவன் அருகில் இருந்த நேத்ராவின் கைபேசி இசைக்கத் தொடங்கியது. அதனை எடுத்துப் பார்த்தவன் கங்காதரன் தான் அழைப்பது என்றவுடன் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரிய அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"சொல்லுங்க அங்கிள்! எப்படி இருக்கிங்க? ஆன்ட்டி, பவன், கமல், அம்மு எல்லாரும் எப்படி இருக்காங்க? "

"எல்லாரும் நல்லா இருக்காங்க மாப்ளே... அதென்ன எல்லாரையும் கேட்டிங்க! என் மூத்த மருமகளை மட்டும் கேட்கலே!"

"அதை எதுக்கு அங்கிள் உங்ககிட்டேயோ அவகிட்டேயோ கேட்டுகிட்டு... அவ வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் பாத்தா தெரிஞ்சுட்டு போகுது... ஒரு குண்டூசி குத்தினா கூட குடங்குடமா ரத்தம் கொட்டினா மாதிரி ஸ்டேடஸ் வெச்சிடுவாளே! இன்னைக்கு எதுவும் ஸ்டேடஸ் போடலே, சோ அவ சேஃப் அன்ட் ஹெல்த்தி ஆல்சோ"

என்று பேசிக்கொண்டே ஒலிபெருக்கியை உயிர்பித்து தன்னவளின் பின்னால் சென்று நின்று அவள் தோள்பட்டையில் தன் தாடையை பதித்து திறன்பேசியை அவளும் பேசுவதற்கு வசதியாக வைத்தான்.

மறுபுறம் கங்காதரன் சிரித்த போதும் அதில் முழு உயிர்ப்பு இருப்பது போல் தெரியவில்லை நேத்ராவிற்கு. அது தன் பிரம்மையாகக் கூட இருக்கலாம் என்று நினைத்து பேச்சு கொடுத்தாள்.

"எப்படி மாமா இருக்கிங்க?" என்றாள்

அதனை வெறும் நலவிசாரிப்பாக எடுத்துக் கொள்ள முடியாமல், ஒருநொடி சிலிர்த்தவர் தன்னை சமாளித்து "நல்லா இருக்கேன் டா" என்றார்.

அவரது குரலில் இருந்த மாற்றம் ராமிற்கு கூட புரிந்தது. தன்னவளை திரும்பிப் பார்த்தான். அவளது முகமும் ஒரு மாதிரியாக இருக்க இருவரும் தனிமையில் பேசிக் கொள்ளட்டும் என்று நினைத்து விலகப் போனவனின் கைகளை அழுத்தி அதே நிலையில் அப்படியே நிற்க வைத்தாள் அவன் அன்பி...

"அப்பறம் மாமா? வெளியே போயிட்டு வந்ததா அத்தே சொன்னாங்க... போன காரியம் எதுவும் சரிவரலேயா மாமா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை மா... மாத்தி மாத்தி யாருக்காவது ஏதாவது நடந்துட்டே இருக்கு... அதான் மனசு கொஞ்சம் சரியில்லே..."

அவரது பதிலுக்கு ராமிடமிருந்து வந்த கேள்விகளில் கங்காதரன் பதில் கூற முடியாமல் தடுமாறித்தான் போனார்.

சீண்டல் தொடரும்.​
 
Top