அம்மு தன்னிடம் கூட அவள் குடும்பம் பற்றி ஏன் கூறத் தயங்குகிறாள்! என்ற யோசனையையும் தாண்டி தன்னை இன்னமும் அவள் நம்பவில்லேயே! என்ற கோபத்தில் இருந்தான் கமல். இந்நேரத்திற்கு அவன் கோபத்தில் முருகனை எல்லாம் மிஞ்சி எவரஸ்ட் சிகரத்திற்கே ஏறியிருப்பான் என்று அறிந்தும் சமாதானம் செய்யும் விதமாக ஒரு குறுந்தகவல் கூட தன்னவள் அனுப்பவில்லையே என்பதில் திறன்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது வந்த குறுந்தகவலையும், அதனை அனுப்பியவரையும் நம்ப முடியாதவனாய் தொடுதிரையையே பார்த்திருந்தவன், கஸ்டமரின் அழைப்பில் சுயம் பெற்று கணினி பில் பதிவிட அதில் கூட முழுகவனம் செலுத்த முடியாமல் தவறிழைத்து அதனை மீண்டும் தானே சரி செய்து என்று ஒரு நிலையற்றுக் கிடந்தான்.
'என்ன ஆனாலும் சரி இன்றே இதனைப் பற்றி அமுலுவிடம் கேட்டுவிட வேண்டியது தான்' என்று முடிவெடுத்துக் கொண்டவன், மீண்டும் ஆழ்சிந்தனைக்குச் சென்றான்.
'கேட்பது என்று முடிவாகிவிட்டது! அதனை இப்போதே கேட்டுவிட்டால் என்ன!' என்ற எண்ணம் தோன்றியதும், உடனே தன் இருசக்கர புரவியில் காற்றைக் கிழித்துக் கொண்டு காந்தையவளைத் தேடி புறப்பட்டான்.
மருத்துவமனை சென்று அமுதினி நியூ ட்ரைனி என்று விசாரிக்க, அவள் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.
எங்கு சென்றிருப்பாள் என்று அறிந்திருந்தவன் தன் இயந்திரப் புரவியை கன்னியாகுமரி சாலை நோக்கிச் செலுத்தினான்.
அவன் நினைத்தது போலவே அம்மு தன் தந்தையுடன் தான் பயணித்துக் கொண்டிருந்தாள். கமலுக்கு வந்திருந்த தகவலும் அதுவே! 'அம்மு தன் தந்தையோடு செல்கிறாள்' என்ற குறுந்தகவலைக் கண்டு தான் அவளைத் தேடி வந்தான் கமல்.
வந்திருந்த தகவலை நம்பினானோ இல்லேயோ! ஆனால் அவள் தந்தை வந்திருப்பது உண்மையா என்று தெரிந்து கொள்ளத்தான் அவளைத் தேடி வந்தான். அவள் விடுமுறை எடுத்திருக்கிறாள் என்றவுடன் தான் ஒருவேளை அந்த தகவல் உண்மையோ என்ற ஐயம் தோன்றியது அவனுக்குள்.
அப்போதும் கூட 'தானாக துரத்தி துரத்தி வந்து காதலித்தவள் அப்படியே அப்போவென்று விட்டுவிட்டு சென்றுவிடுவாளா என்ன!!!' என்ற கோபம் தோன்றிடவேத் தான் அவளது ஊரை நோக்கிப் பயணித்தான். கமல் என்ன நினைப்பில் அவ்வளவு தூரம் அவளைத் தேடிச் செல்ல நினைத்தானோ! தனக்குத் தானே அந்தக் கேள்வியையும் கேட்டுக்கொண்டான்.
'என்ன செய்கிறேன் நான்! எந்த நம்பிக்கையில் அவளைத் தேடிச் செல்கிறேன்! இன்னும் எவ்வளவு தூரம் அவளை நினைத்து பயணிக்க முடியும்! அவளது இல்லம் வரையுமா! அது சாத்தியமா! முதலில் எதைத் தேடிச் செல்கிறேன்! எதனைத் தொலைத்தேன்!நான் தொலைத்தது அவளையா! அவளிடம் என் மனதையா! இல்லை என் காதலையா!' என்று அடுக்கடுக்காய் விடை அறியா கேள்விகள் தோன்றிய போதும் 'அவள் இல்லாமல் இல்லம் செல்லக் கூடாது' என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.
தந்தையாகப்பட்டவர் யாரை தன் இல்லம் நுழைய விடக் கூடாது என்று சூளுரைத்தாரோ அவள் இல்லாமல் இல்லம் செல்லப் போவதில்லை என்ற சபதத்தோடு சாலையில் சுற்றித் திரிகிறான் மகனாகப்பட்டவன்... அதுவும் தந்தையின் சூளுரை தெரியாமலேயே! இனி தந்தையானவர் என் செய்வார்? தன் மகனையும் சேர்த்து ஒதுக்கி வைப்பாரோ!
இவர்களின் எண்ணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அம்முவின் எண்ணம்... அவளுக்கு அப்போதைய நொடிகளை தந்தையுடன் செலவிட்டால் போதும்... அதனையே தன் தந்தையிடமும் வாயவிட்டுக் கேட்டாள். "நானும் உங்க கூட கொஞ்ச தூரம் கார்ல வர்றேன் ப்பா" என்று கூறி அனுமதி கேட்பது போல் அன்புக் கட்டளை விதித்து நின்றாள்.
இல்லை என்று சொல்ல மனம் வராத தியாகுவோ "எப்படி திரும்பிப் போவே?" என்று தன் மகளுடன் சற்று அதிக நேரம் செலவிடப்போகும் ஆசை இருந்தாலும் அவளது பாதுகாப்பை நினைத்து வினவினார்.
திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பஸ்ஸில் சென்றுவிடுவதாகக் கூறி ஏறிக்கொண்டாள்.
கமல் திருமங்கலத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அம்முவும் தன் தந்தைக்கு கையசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நகர்ந்தாள். வாயிலில் புறப்படத் தயாராக இருந்த பேருந்து ஒன்றில் ஏறச்செல்லும் போது சாலையின் மறுபுறத்திலிருந்து வந்த பலத்த ஹார்ன் ஓசையில் திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்றிருந்த கமலைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள்.
ஆக்ஸிலேட்டரை முறுக்கி தனக்கு பதிலாக தன் வாகனத்தை உறுமச் செய்தான் அவன். அதில் அவள் உடல் சற்றே நடுக்கம் கொள்ளத்தான் செய்தது.
மற்றொரு நாளாக இருந்திருந்தால் அவனது முறுக்கலுக்கெல்லாம் சேர்த்து வைத்து கோபமூட்டி சீண்டி விளையாடும் விதமாக நிச்சயம் பேருந்தில் ஏறிச் சென்றிருப்பாள்.
ஆனால் இன்றோ அவன் எப்படி இங்கே வந்தான்! தன்னைத் தேடி தான் வந்தானென்றால் தன் தந்தையைப் பார்த்தானா! தன் தந்தையை இவனுக்கு முன்னமே தெரியுமா! அது தான் அவனது கோபத்திற்கு காரணமா! என பல கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
கமலும் யூ-ட்ரன் எடுத்து வண்டியைத் திருப்பி பேருந்திற்கு முன்னால் சற்று தள்ளி நிறுத்தினான்.
"ஏறு மா... ஏறு மா" என்ற கண்டெக்டரின் குரலுக்கு சற்றே அசைந்து கொடுத்தவள் 'இல்லை' என்பது போல் தலையசைத்துவிட்டு கமலின் அருகே சென்று அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அம்மு ஏறி அமர்ந்ததும் சீற்றம் கொண்டு சீறிப்பாய்ந்தது அவனது இயந்திரப் புரவி. காலையில் உண்ணாத களைப்பு, மருந்து உட்கொள்ளாமல் விட்டதன் தாக்கம், இப்போது ஒரு மணி நேரப் பயணம் எல்லாம் சேர்ந்து கொள்ள தனது அடிபட்ட கையில் வலியை உணர்ந்தவன் ஒற்றைக் கையில் ஓட்டிச் செல்வதும், அவ்வபோது கையை உதறிக்கொண்டே வாகனத்தைச் செலுத்துவதுமாக இருந்தான்.
பின்னால் அமர்ந்திருந்த பெண்ணவள் அதனை உணர்ந்து தோள்பட்டையை பிடித்து விடுவது போல் மெதுவாக அமுக்கி விட அதில் கடுப்படைந்து உச்சு கொட்டலுடன் தோளை உதறிவிட்டான் கமல்.
"கண்ணா... நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு... ப்ளீஸ்"
"எதுக்கு இறங்கினே! அப்படியே உங்க அப்பெங்கூட போயிருக்க வேண்டி தானே! வந்துட்டா சமாதானம் செய்ய..." என்று கோபத்தில் பொறிந்து தள்ளினான்.
அவனின் கோபம் கொண்டே அவளும் அறிந்து கொண்டாள் பாதி தெரிந்தும் பாதி தெரியாமலும் தான் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்று... அதில் அவளது தந்தையை மரியாதை இல்லாமல் பேசியதைக் கூட கவனியாமல் பதில் கூறினாள்.
"போறதுக்காகவா உன்னைத் தேடி வந்தேன்" என்று கூறியபடி பின்னாலிருந்து அவனை அணைத்தாள்.
மீண்டும் அவள் கையை தட்டிவிட்டபடி, "உன்னை யாரு டி தேடி வர சொன்னா! அப்படியே வந்த நிமிஷத்துல இருந்து என்னை நம்பி உண்மை பேசுறே பாரு... வந்த நாள்ல இருந்து நேத்து நைட் வரைக்கும் பொய்... இதுக்கு எதுக்கு டி என்னைத் தேடி வந்தே!" என்று அவளிடம் கத்தி விட்டு தனக்குத் தானே புலம்பத் தொடங்கினான்.
'இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் இல்லாம நிம்மதியா இருந்தேன்... இவளைப் பாத்த நாள்ல இருந்து ஆரம்பிச்சது தொல்லை...'
"என்னை தொல்லைனு சொல்றேயா டா?" என்று கோபம் போல் கொஞ்சும் மொழி பேசி வினவினாள்.
"பின்னே உங்க ஆயா-வயா சொல்றேன்... உன்னைத் தான் டி இம்ச"
"அப்போ அதோட சேத்து இந்த தொல்லையும் அனுபவி" என்று இறுக்கமாக அவன் முதுகை கட்டிக் கொண்டாள்.
"விடு டி என்னை..." என்று மீண்டும் அவள் கைகளை அகற்ற முற்பட்டான்.
"மாட்டேன்"
"இப்போ நீ கைய எடுக்கலேனு வை உன்னை மட்டும் அப்படியே முள்ளுச் செடிக்குள்ள தள்ளி விட்டுட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ..." என்றான் மிரட்டும் விதமாக...
இவ்வளவு நேரம் வாலுத்தனம் இல்லாமல் அம்மு அமர்ந்திருக்கிறாள் என்றால் அது உலக மகா அதிசயமாயிற்றே! பின்னே கின்னஸ் ரெக்கார்டில் பதிவு செய்ய வேண்டியதாகிவிடுமே! அதற்குத் தான் அவளும் விட்டுவிடுவாளா என்ன! கமலை இம்சிக்கப் பிறந்த இம்சை!
அவன் காதருகே சென்று "என் உடம்புல கண் மறைவான இடத்திலேலாம் முள்ளு குத்தி அதை நீ எடுத்து விடுற சாக்குல என்னை தாக்கலாம்னு தானே ப்ளான் பன்றே!" என்று குறும்புகள் மின்ன வெட்கம் போல் வினவினாள்.
அவளது வார்த்தைகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்ட கற்பனை காட்சிகளாய் அவனது மூளையில் பதிவாகிட தானாக கைகள் கூட சற்றே ஆட்டம் கொண்டது அவனுக்கு.
"ஏய்!!! பாதகி.... நீ இந்த வாயடிப்பேனு உன் அப்பனுக்கு தெரியுமா டி?" என்று பல்லை கடித்துக் கொண்டு பொய் கோபமாய் வினவினான்.
"இது வரைக்கும் தெரியாது... இனிமே தெரிஞ்சாலும் உன் மாப்ளேகிட்டே தானே விளையாட முடியும்னு சொல்லி அவர் வாயடைச்சிடுவேன்..." என்று சர்வ சாதாரணமாகக் கூறினாள்.
அவளின் கூற்றை கவனித்த போதும் அவள் மேல் இருந்த கடுப்பில், " அந்தாளுக்கு எங்கே தெரியப் போகுது... அந்தாளு முன்னாடி நல்லவளாட்டம் நடிச்சிருப்ப!"
"டேய்! என்ன வரவர என் அப்பாவே ரொம்ப டேமேஜ் பண்ணுறே! இனி ஒருமுறை அந்தாளு இந்தாளுனு சொன்னே அவ்ளோ தான் சொல்லிட்டேன்... அவரு என் அப்பா... எந்த அப்பா டா பொண்ணோட லவ் க்கு எந்த கேள்வியும் கேட்காம ஃபுல் சப்போர்ட் பண்ணுவாரு!!!... என் அப்பா பண்ணுவார் டா... சொல்ல போனா நீயெல்லாம் அவரை தெய்வமா கும்பிடனும்..."
"உன் அப்பன் ஃபோட்டோ இருந்தா கொடு... மாலை போட்டு மரியாதை பண்ணிடலாம்..." என்றவனை பின்னந்தலையில் அடித்தாள்.
"ஏய் இம்ச... கைய வெச்சிட்டு ஒழுங்கா இரு... இன்னைக்கு மட்டும் அந்த மனுஷனை நேர்ல பாத்திருந்தேன்னு வையேன், நல்லா நறுக்குனு நாலு கேள்வி கேட்டிருப்பேன்... பொண்ணை பெத்துப் போடச் சொன்னா புலுகுனி மூட்டைய பெத்து போட்டு வெச்சிருக்கான்..." என்று அவள் மேல் உள்ள கோபத்திற்கெல்லாம் Mr.தியாகு-வை மானக்கேடாக திட்டிக் கொண்டிருந்தான் கமல்.
பின்னால் அமர்ந்திருந்தவள் அமைதியாகி விட, தந்தையைத் திட்டியதில் கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து, "உங்கப்பனை சொல்லவும் அமைதியாகிட்டே! கோபம் இருக்கேயா என்ன? என்னை கொல்லலாம் போல இருக்கா?" என்றான்.
"கமல்... நான் தப்பு செய்தேன் தான்... அதுக்கு என்னை திட்டு... என் அப்பாவை எதுவும் சொல்லாதே... உனக்கு என்ன உண்மை தெரியனும்... கேளு நான் சொல்றேன்..." என்று கண்களைத் துடைத்துக் கொண்டு கூறினாள்.
அப்போது தான் அவள் அழுகிறாள் என்று உணர்ந்தவன், ஒரு நொடி தன்னவளை நோகடித்துவிட்டோமே என்று வருந்தினாலும், 'இன்று இவளிடம் வேண்டியவற்றை கேட்டு அறிந்து கொண்டால் மட்டுமே தான் உண்மை வெளிவரும்... இல்லை என்றால் பயந்து பயந்தே நாளுக்கொரு பொய்யுரைப்பாள்' என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினான்.
"நீ ஃப்ஸ்ட் டைம் சொன்ன பொய்க்கு வருவோம்! உன் அப்பன்.... சாரி உன் அப்பா உனக்கு சப்போர்ட் தானே செய்யிரார்... பின்னே ஏன் அவர் உன்னை வீட்டைவிட்டு விரட்டினதா சொன்னே!"
"என் அப்பா சொல்லி தான் வீட்டைவிட்டு வந்தேன்... அவர் என்னை வீட்டைவிட்டு துரத்தின அன்னைக்கு சொன்ன வார்த்தைகளும் உண்மை தான்... அதைத் தான் அன்னைக்கு உன் கிட்ட சொன்னேன்... ஆனா என் லவ் க்கு என் அப்பா சென் பர்சண்ட் சப்போர்ட் பண்ணுறதும் உண்மை..."
"சத்தியமா புரியலே! சரி அதை விடு... இப்போ உங்க அப்பா உன்கிட்ட நல்லா தான் பேசுறார்... சோ அது பிரச்சனை இல்லை... உன் அண்ணன் விஷயமும் பொய்யா?"
"அண்ணன் விஷயம் உண்மை... அண்ணனுக்கு நான் உன்னை லவ் பண்றது பிடிக்கலே! அதான் அப்பா அவன் முன்னாடி என்னை திட்டுறமாதிரி திட்டு அனுப்பி வெச்சாரு..."
"ஏன் உன் அண்ணனுக்கு என் மேல என்ன காண்டு... என்னை முன்னே பின்னே பாத்தது கூட இல்லே... அதுவும் உன் வீட்ல பிரச்சனை வந்தப்போ நான் உன்னை லவ் பண்ணக் கூட இல்லே... பின்னே என்னவாம் உன் நொண்ணனுக்கு..."
அம்முவிற்கோ மீண்டும் பொய்யுரைக்கப் போகிறோம் என்ற தயக்கம்... தலை குனிந்த படி "அதை அவன் கிட்ட தான் கேக்கனும்..." என்றாள்.
"அப்படியே கேட்டுட்டாலும்.... அவன் ஒரு அரை மெண்டல் அவன் தங்கச்சி நீ ஒரு முழு மெண்டல்..." என்று கடுப்படைந்திட,
"அப்போ எங்க குடும்பத்துல வாக்கப்பட போற நீ யாரு கண்ணா!??" என்று அப்பாவியாய் வினவினாள்.
"உன்னை..." என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளை அடிக்க விரட்டிட, அவளும் பைக்-ஐ சுற்றி வந்து அவனுக்கு ஆட்டம் காட்டினாள். ஆனால் சற்று நேரத்திலேயே அவனிடம் மாட்டிக் கொள்ள, அவளது இரண்டு கை மணிக்கட்டையும் க்ராஸ் செய்து பிடித்துக் கொண்டபடி,
"என் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடி... அப்பறம் காட்றேன் நான் யாருன்னு" என்று கூறி அப்படியே இழுத்து அருகில் நிற்க வைத்துக் கொண்டான்.
"கதையில ஒரு வில்லி இருக்கிறதா சொன்னியே! அந்த வில்லி யாரு? உன் அப்பா இங்கே உன்னை பாக்க வந்தது அந்த வில்லிக்குத் தெரியாதா?" என்று தன் கடைசி கேள்வியை கேட்டான்.
அவனது இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த போதும், கேட்டுவிட்டானே இனி பதில் சொல்ல வேண்டுமே என்று நினைத்து நொடி யோசித்து வைத்திருந்த பொய்கள் கூட மறந்து போக திருதிருவென முழித்தாள்.
இவ்வளவு நேரம் கோபமாகவும், காதலாகவும் தனது உணர்வுகளை மாற்றி மாற்றி காண்பித்துக் கொண்டிருந்த கமலும் கூட அவளது முக பாவனையில் வேதனையுற்றான்.
"அமுலு என் மேல நம்பிக்கை இல்லாம போனதுக்கு என்ன காரணம் சொல்றேயா ப்ளீஸ்? எனக்கு தெரியலே டி? எப்படி அந்த நம்பிக்கைய உனக்கு தர்றதுனு எனக்கு சத்தியமா தெரியலே?" என்று வருந்தும் குரலில் கூறிட,
அவனது பேச்சில், தனக்காக யோசிக்கும் அவனது காதலில் கண்களில் நீர் கோர்த்து நின்றிருந்தவள், அவனது கையை விளக்கி விட்டு ஒற்றை கையால் அவனது கன்னம் பற்றி,
"எனக்கு அந்த நம்பிக்கை வேணாம் கண்ணா... சொல்லப்போனா தான் பயப்படுற மாதிரி என் ப்ரச்சனைய சொல்லும் போது நீ கோபப்படனும்... அது தான் எனக்கும் வேணும்... ஆனா அந்த கோபத்தை தாங்குற அளவுக்கு எனக்கு வலிமை வேணும் கண்ணா... அது இல்லாம தான் நான் இன்னும் சொல்லாம இருக்கேன்... இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் என் அப்பா கூட போகாம நீ தான் வேணும்னு உறுதியா நின்னு போராடுறேன்.... நாளைக்கு நான் என் ப்ரச்சனை என்னனு சொல்லும் போது நீ இதுக்கு முன்னாடி உதாசினப்படுத்தினதைவிட அதிகமாவே என்னை அவாய்ட் பண்ணுவே... அப்பவும் உன் முன்னாடி வந்து நின்னு என் காதலை சொல்றதுக்கு தைரியம் வேணும்னு நினைக்கிறேன்..."
அவளது புலம்பல்களில் எத்தனை அவன் காதில் விழுந்ததோ தெரியாது... ஆனால் அதற்கு மேல் அவளை புலம்ப விடக் கூடாது என்று நினைத்தவன் விபரீத முடிவு ஒன்றை எடுத்திருந்தான்.

சீண்டல் தொடரும்.