• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் என் அப்பா கூட போகாம நீ தான் வேணும்னு உறுதியா நின்னு போராடுறேன்.... நாளைக்கு நான் என் ப்ரச்சனை என்னனு சொல்லும் போது நீ இதுக்கு முன்னாடி உதாசினப்படுத்தினதைவிட அதிகமாவே என்னை அவாய்ட் பண்ணுவே... அப்பவும் உன் முன்னாடி வந்து நின்னு என் காதலை சொல்றதுக்கு தைரியம் வேணும்னு நினைக்கிறேன்..."

அவளது புலம்பல்களில் எத்தனை அவன் காதில் விழுந்ததோ தெரியாது... ஆனால் அதற்கு மேல் அவளை புலம்ப விடக் கூடாது என்று நினைத்தவன் விபரீத முடிவு ஒன்றை எடுத்திருந்தான்.

"இப்போ என்ன உனக்கு? நாளை பின்ன என்ன பிரச்சனை வந்தாலும் நான் உன்னை விட்டு விலகக் கூடாது அவ்ளோ தானே! அதுக்கு இப்போவே ஒரு முடிவு கட்டுறேன். வா போலாம்..." என்றவன் அவளை ஏற்றிக் கொண்டு வண்டியைச் செலுத்தினான்.

பின்னால் ஏறி அமர்ந்தவள் கேட்ட முதல் கேள்வி "என் அப்பா வந்தது எனக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸ் தான்... ஆனா உனக்கு எப்படி தெரிஞ்சது?" என்றதும் ஒரு நொடி புருவம் சுருக்கி யோசித்தவன் தன் திறன்பேசியை அவளிடம் நீட்டி "வாட்ஸ்அப் பாரு" என்றான்.

அதனைத் திறந்து பார்த்தவள் புலனக்குறுந்தகவல் பக்கத்தில் இறுதியாக தேவ் அனுப்பியவற்றைத் தான் படித்துக் கொண்டிருந்தாள்.

"ஆனா இன்னைக்கு தேவ் ஹாஸ்பிடல் வரலேயே! அவனுக்கும் அடி பட்டிருக்கு தானே! அதனால அவன் இன்னைக்கு லீவ் ஆச்சே!!! பின்னே எப்படி அவனுக்குத் தெரிஞ்சது!" என்று கேட்ட படியே அவளும் யோசனையில் மூழ்கினாள்.

"எனக்கும் அதே சந்தேகம் தான்... நீ எதுக்கும் தேவ், Dr.போஸ், அப்பறம் உன் டீன் Dr.சங்கர் மூனு பேர்கிட்டேயும் கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இரு..."

"ம்ம்ம்... Dr.போஸ்... பாக்க தான் சாஃப்ட்... பட் வெரி டேன்ஜரஸ் பெர்ஸன்... எப்போடா இந்த ஹாஸ்பிடல்-ல இருந்து மாறுவோம்னு இருக்கு... பாவம் தேவ் அவன் தான் இப்போ மாட்டிக்கிட்டான். இந்த ஹாஸ்பிட்ல்ல நடக்குற அநியாயம் தெரியாம இருக்குறது தான் அவனுக்கும் நல்லது..." என்று அவன் தான் தன்னை காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்பதை மறந்து அவனுக்காக பரிதாபப்பட்டாள்.

அவர்களைப் பற்றிய பேச்சு எழவும் தான் கமலுக்கு அவர்களில் ஒருவர் அனுப்பிய மிரட்டல் என்ற பெயரில் அனுப்பும் முன்னெச்சரிக்கை குறுந்தகவல்கள் நினைவில் வந்ததது. என்ன தான் அது முன்னெச்சரிக்கை செய்திகளாக இருந்த போதும் முதல்முறை படிப்போருக்கு மிரட்டல் தூதுகளாகவே தான் தெரியும் என்பதால் அது அம்முவின் கண்களில் பட்டு விடக் கூடாது என்பதற்காக அவளது கையிலிருந்த தன் திறன்பேசியை பிடுங்காத குறையாக வாங்கினான்.

"ஏய்... எரும... கேட்டா கொடுக்கப் போறேன்... எதுக்கு இப்படி அவசரமா பிடுங்குறே! என்ன டா மறைக்கிறே என்கிட்ட?"

"ஒன்னு இல்லேயே!"

"அப்போ ஏதோ இருக்கு..."

"ஆமா... ஃபோனுக்குள்ள நாலு ஃபிகரை ஒழிச்சு வெச்சிருக்கேன்... போவியா!"

"இந்த சிடு மூஞ்சிய நான் ஒருத்தி சுத்தி வர்றதே அதிகம் தான்... இதுல நாலு இருக்காம்.... ரொம்பத் தான் ஆசை..."

அவள் கூறிய விதம் கேலியாக இருந்தாலும், 'என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நீ நிமிர்ந்தும் பாராதவன் என்பதை நான் அறிவேன்' என்பதை இப்படியும் சொல்லலாம் என்று காட்டியிருந்தாள் அவனது அமுலு... கமலும் மற்றவர்களிடம் வம்பு பேசினாலும் பெண்கள் விஷயத்திலும், காதல் விஷயத்திலும் அவள் சொல்வது போல் சிடுமூஞ்சி தான்.

"சரியான இம்சை டி நீ... என்னை சீண்டி சீண்டியே எனக்குள்ள புகுந்துட்ட..." என்று காதலாய் மொழிந்துவிட்டு "இப்பவும் உனக்கும் உன் அப்பா வந்த விஷயத்தை யார் சொன்னானு தெரிஞ்சுக்கனும்னு தானே என் கூட வந்தே! இல்லேனா என்னை கோபப் படுத்துறதுக்காகவே பஸ்ல ஏறி போற ஆளாச்சே நீ!" என்று வினவினான்.

"கண்டிப்பா......." என்று அவன் கூற்றை ஒப்புக் கொண்டு அவனது முன்னைய பேச்சுக்கு வந்தாள், "நீயெல்லாம் கோபத்துல தான் அழகா இருக்க... இப்படி உருகி உருகி பேசினா கேவலமா இருக்க... உன் மூஞ்சிக்கு இது சுத்தமா செட்டாகலே..." என்று எப்போதும் போல் அவனை டேமேஜ் செய்து சீண்டி விட்டாள்.

அது புரிந்திருந்த போதும் வண்டியை முறுக்கி உறுமவிட்டு சீறிப்பாயச் செய்தான். திடீரென வாகனம் வேகமாக செல்ல சின்னக் குளுக்கலோடு அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டாள். அவன் கோபம் புரிந்த நொடி அவனது இம்சைக்கு கூட சிரிப்பு எழுந்தது. மென்னைமாக அவனை கட்டிக் கொண்டு மீதி பயணத்தைத் தொடர்ந்தாள்.

பேச்சினூடே வண்டி செல்லும் பாதையை கவனிக்கத் தவறினால் பெண்ணவள்.

"ஏய் இம்ச... இறங்கு டி"

'அதுக்குள்ளேயுமா வீடு வந்துடுச்சு!!!' என்று தனக்குள்ளாகவே அதிசயத்தபடி நிமிர்ந்து பார்த்தாள்.

தமிழ் கடவுள் பழனியாண்டவனின் அறுபடை வீட்டில் முதலாம் இல்லமான திருப்பரங்குன்றம் மலையின் முன்னால் வண்டி நின்றிருந்தது.

"இங்கே எதுக்கு கண்ணா கூட்டிட்டு வந்தே? வீட்டுக்கு போகலாம் வா"

"இன்னைக்கு லீவ் தானே போட்டிருக்க! பின்னே என்னவாம்! கலெக்டர் உத்தியோகம் கையெழுத்து போட காத்துட்டு இருக்குற மாதிரி சீன் போடுறே! கோவிலுக்கு எதுக்கு வருவாங்க... சாமி கும்பிடத்தான்... இரு பைக் நிறுத்திட்டு வரேன்..."

கமல் வாகனம் நிறுத்தச் சென்ற இடைவேளையில் அம்மு தன் தந்தைக்கு, கமலுடன் இல்லம் திரும்பிக் கொண்டிருப்பதாக தட்டச்சு செய்து அனுப்பி வைத்தாள்.

அவர் அதனை பார்த்தாரா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குள் அவள் அருகே வந்திருந்த கமல் அவளது திறன்பேசியையும் பறித்தான்.

"கோவில்ல எதுக்கு ஃபோன் யூஸ் பண்றேன்! வா போலாம்... சீக்கிரம்..."

"எதுக்கு டா இப்படி அவசர படுத்துறே! கொஞ்சம் நிதானமா தான் நடந்தா என்ன?

"சாமி கும்பிட்டுட்டு கடைக்கு போகனும்... உனக்கு தான் லீவ். எனக்கில்லே"

"இதுக்கு நீ கூட்டிட்டு வராமலே இருந்திருக்கலாம்..." என்று சலித்துக் கொண்டு அவன் பின்னாலேயே படி ஏறினாள்.

கமலோ கடகடவென இரண்டிரண்டு படிகளாக ஏறி விட, பெண்ணவளோ பாதி படி ஏறும்போதே 'இப்படி விட்டுட்டு போறதுக்கு தான் கூட்டிட்டு வந்தானா! அவசியம் மீதி படி ஏறி தான் ஆகனுமா! அதானே விட்டுட்டு போனதுக்கு பனிஷ்மெண்டா அவனே வந்து கூட்டிட்டு போகட்டும் என்று நினைத்தபடி பக்கவாட்டு திட்டில் அமர்ந்து கொண்டாள்.

முன்னால் சென்று கொண்டிருந்த கமல் தனது திறன்பேசியிலும், அவளது திறன்பேசியிலும் சில குறுந்தகவல்களை தட்டிவிட்டபடி திரும்பிப் பார்க்க அம்மு பாதியிலேயே நின்றுவிட்டது தெரிந்தது. குறுநகையுடன், 'இதை தான் டி எதிர்பார்த்தேன்... என் அழகு இம்ச...' என்று கள்ளத்தனமாக நினைத்தபடி மேலே சென்று சில வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் அவளிடம் வந்தான்.

தன்னை முறைத்துக் பார்த்தவளைக் கண்டு கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டே "ஏய்... இம்ச படி ஏறக் கூட தெரியாதா உனக்கு! பாதிலேயே உக்காந்துட்டே! சரி வா போலாம்? டைம் ஆகுது" என்றான்.

தன் கோபத்தைக் கண்டுகொள்ளாமல் அவன் போக்கில் பேசிக் கொண்டிருப்பவனின் முதுகில் நாலு அடி போட்டால் என்ன! என்பது போல் பார்த்தாள் அம்மு.

"அட லூசே! இப்படியே என் மூஞ்சியை பார்த்துட்டு இருந்தா எப்படி? நானா உன்னை தூக்கிட்டு போக முடியும்!" என்றான் இவ்வளவு நேரம் அவளுக்கு அந்த எண்ணம் இல்லை என்றாலும் இப்போது தோற்றுவிக்கும் நோக்கத்தோடு...

அவனுக்கு பதில் கூறாமல் விரைந்து வந்து அவன் முதுகில் தாவிக் கொண்டு அவன் எதிர்பார்த்தது போலவே "தூக்கிட்டு போ" என்றாள்.

"எல்லாரும் பாக்குறாங்க டி... இறங்கு டி" என்றான், எவரும் இல்லாத படிகட்டுகளைக் காண்பித்து...

"ஆமா... ஆமா... மொட்ட வெயில்ல நம்மல போல லூசுங்க வரிசை கட்டி நிக்குது பார்... எந்த காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது கண்ணா! என்னை விட்டுட்டு போனதுக்கு என் பாரத்தை சுமந்து தான் ஆகனும்..." என்று கட்டளையாகக் கூறினாள் அவனது இம்சை...

கமலும் அதனையே தன் மனதிற்குள்ளும் நினைத்துக் கொண்டு தன் இனிய இம்சையை இனிமையாக சுமந்தபடி முருகன் சன்னதியைச் சென்றடைந்தான்.

முருகனை மனமுருக வழிபட்டு சன்னதியைச் சுற்றி வந்தனர். கமலின் பார்வை வழக்கத்தைவிட அதிகமாகவே அம்முவைத் தழுவிச் சென்றது. அதனை உணர்ந்தவளும் இன்னொன்றையும் சேர்த்தே உணர்ந்தாள்... 'அதிகமாக பேசிக் கொண்டதும் இன்று தான். அதிகமாக ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டதும் இன்று தான். அதிகமாக ஒருவரை ஒருவர் தீண்டிக் கொண்டதும் இன்று தான். ஒருவரோடு ஒருவர் அதிக நேரம் தனிமையில் செலவிடுவதும் இன்று தான். சண்டைகள் கூட காதலாய் கசிந்துருகிய பொழுதுகளும் இன்று தான்.' என்று தோன்றிய நிமிடம் அவசரமாக ஒரு வேண்டுதலைக் கூட முன் வைத்தாள், 'இருவருக்குமான இந்த நெருக்கம் மரணம் வரை இப்படியேத் தொடர வேண்டும்' என்று...

அது முருகன் காதில் விழுந்ததோ! அல்லது கண்ணை உருத்தியதோ! அவரது லீலை வேறு ஒரு கணக்கை எழுதி வைத்து அவர்கள் வாழ்வில் விளையாடக் காத்திருந்தது.

கமல் தன்னவளின் கைபிடித்து அழைத்துச் சென்று நிறுத்திய இடம் வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகன் சன்னதியில் தான். ஐயர் ஒரு தட்டில் பூமாலை எடுத்து வந்து இருவரையும் மாற்றிக்கொள்ள கூறிட, அம்முவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அதனை குறுநகையுடன் ரசித்த படி மாலையை கையில் ஏந்தி அவளைப் பார்த்து திரும்பி நின்றான் கமல். மகிழ்ச்சியாக ஏற்க வேண்டிய அம்முவோ அவனை கோபமாக வெறித்தாள்.

"மாலைய எடுத்துக்கோ மா" என்று ஐயர் குரல் கொடுக்க, "ஒரு நிமிஷம் சாமி இதோ வர்றோம்..." என்று கூறி அவன் கையில் இருந்த மாலையையும் பிடுங்கி தாம்பூலத்தில் வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றாள்.

"கண்ணா என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க நீ?"

காதலாய் அவளைப் பார்த்து அருகில் இருந்த தூணில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு நிதானமாக ஆரம்பித்தான்... "நீ தானே கேட்ட! நான் எப்பவும் உன்னை விட்டு விலகி போகக் கூடாதுனு..."

"பைத்தியமா நீ? அதுக்கு கல்யாணம் ஒன்னு தான் முடிவுன்னு யார் சொன்னா? இல்லே நான் அதை மட்டும் தான் எதிர்பார்க்குறதா இருந்த நீ ஃபஸ்ட் டைம் கட்டின தாலிய ஏன் கழட்டி கொடுத்துட்டு போனேன்!!!" என்று அவனை யோசிக்கத் தூண்டினாள்.

ஆனால் கமலோ கழற்றி வைத்ததை மீண்டும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன், "நீ வேணுனா மார்டன் கேர்ள்லா இருக்கலாம்... தாலி உனக்கு ஜஸ்ட் அ ரோப்-ஆ தெரியலாம்... என்னால அப்படி எடுத்துக்க முடியாது... அதான்....... இந்த..... முடிவு.... சாமி சன்னதில வெச்சு சட்ட பூர்வமா கல்யாணம் செய்துக்கலாம்."

"அப்போ உன்னோட காதல் எல்லாம் அந்த ஒரு கயிறுனால வந்தது தானே!" என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தான் அவளது கண்ணன்.

அவன் நினைத்து கூறியது என்னவோ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமண பந்தத்தை அவர்கள் இருவர் நினைத்தால் மட்டுமே பிரிக்க முடியும், அதுவும் கூட உடனடியாக நடந்து விடாது, அதற்கு சட்டம் இடமளிக்காது என்பதால் மட்டுமே இந்த முடிவை எடுத்திருந்தான். ஆனால் அவளோ அவனது கூற்றை கடந்த காலத்தோடு முடிச்சிட இப்போது என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான்.

"தாலி கட்டின காரணத்துக்காக மட்டும் தான் என் மேல காதல் வந்ததா இருந்தா உன்னை பத்தி நானும் என்னை பத்தி நீயும் இன்னும் நிறையா தெரிஞ்சுக்க வேண்டி இருக்குனு அர்த்தம் கமல்...

நீ என்னை விட்டு விலகி போகக் கூடாதுனு சொன்னதுக்கு அர்த்தம் ஜஸ்ட் ஒரே ரூம்ல இருக்குறது இல்லே... ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சுத்தியிருக்குற எத்தனை பேர் பழி சொன்னாலும் நம்பிக்கை குறையாம இருக்குறது, உன் அம்மா அப்பா மாதிரி.

என் பிரச்சனை என்னனே தெரியாத நிலையிலேயும் என் கூட கை கோர்த்து நிக்கனும்னு நினைக்கிற உன் காதல், என் பிரச்சனையை சொன்ன பிறகும் இருக்கனும்... அது தான் நான் உன் கிட்ட எதிர்பாக்குறேன் கண்ணா..." என்று தன் மனதை இப்போதேனும் புரிந்து கொள்வானா என்ற எதிர்பார்ப்போடு உரைத்தாள்.

அனைத்தும் புரிந்த போதும் பிரச்சனை என்னவென்று தெரிந்தால் தானே அதற்கு தீர்வு காண முடியும்! என்ற எண்ணத்தோடு கமல் அமைதியாக நின்றிருந்தான்.

அவனது அமைதியை குலைக்கும் விதமாக அம்முவே மேலும் தொடர்ந்தாள். "அதுவும் இல்லாம நம்ம கல்யாணம் ரெண்டு குடும்பமும் ஒன்னா நின்னு நடத்தி வைக்கனும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன் தானே! இப்படி யாருமே இல்லாம பண்ணிக்கிறதுக்கு நாம என்ன யாரும் இல்லாதவர்களாக?" என்று குற்றம் சாட்டும் பார்வையில் வினவினாள்.

அதில் ரோஷமாக தலை உயர்த்தியவன், "அதெல்லாம் ரெண்டு குடும்பத்துக்கும் சொல்லியாச்சு... ஆன் தி வே... மை அங்கிள் ஆல்சோ" என்று பதறாமல் சிதறாமல் அவள் தலையில் இடியை இறக்கினான்.

அவன் இறக்கி வைத்த இடியில் கமல் ரசிக்கும் அம்மு வெளிப்பட்டாள். அவனது தலையைப் பிடித்து உலுக்குவது போல் கைகளைத் தூக்கிய படி, "என்ன டா செஞ்சு தொலச்சிருக்க! மாங்கா மாங்கா... மொத்தமா என் சோலிய முடிச்சுட்டேயே டா தகர டப்பா தலையா!" என்று உக்கிரம் கொண்டு கத்தியவளின் கைகளை கமல் தன் கையில் பிடித்துக் கொண்டான். இல்லையென்றால் நிச்சயம் அவனது தலை ஆட்டுக்கல்லாகத் தான் சுற்றிக் கொண்டிருந்திருக்கும்...

"அமுலு... நமக்காகத் தான் செஞ்சேன்... உன் அப்பாவுக்கு மட்டும் தான் சொன்னேன்... உன் அண்ணனுக்கு சொல்லலே டி"

"ஓ அவனுக்கும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிற ஐடியா வேற இருந்திருக்கா! மகனே இன்னைக்கு சங்கு உனக்கும் சேத்து தான் டா" என்று கூறிக் கொண்டே சில பல அடிகளைக் கொடுத்த போதும் தன் தந்தையும், மாமனும் சிறிது நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து சற்று பயம் கொள்ளவே செய்தாள்.

கமலை அடிப்பதை நிறுத்திவிட்டு தலையில் கைவைத்து ஓரமாக சென்று அமர்ந்தவளைக் கண்டு கமல் கோபம் தான் கொண்டான்...

இருந்தும் பயத்துடன் இருப்பவளிடம் தானும் முகம் தூக்கிக் கொள்ள விரும்பாமல், "அமுலு.. இப்படி ஒன்னுமே சொல்லாம எல்லாத்தையும் உனக்குள்ளேயே வெச்சுக்கிட்டா நான் என்ன தான் பண்ணட்டும்!"

"நீ ஒன்னும் பண்ண வேண்டாம்... பண்ணின வரைக்கும் போதும்... போ" என்றாள் கண்ணீரோடு.

கமலோ செய்வதறியாது அவள் அருகே சென்று நிற்க, அவன் மேல் சாய்ந்து கொண்டு, "கண்ணா என்னை கல்யாணம் செய்துகிறேயா? செத்தாலும் உன் வொய்ஃப்-ஆ செத்திடுறேன்...?" என்று விரக்தியாக வினவினாள்.

"அடிச்சு வாய ஒடச்சிருவேன்... பாத்துக்கோ... இப்போ தான் Mr.முருகன் கிட்ட 100 இயர்ஸ் இவளோட சந்தோஷமா இருக்கனும்னு கேட்டிருக்கேன்... அவர் அதை கண்சிடர் பண்றதுக்கு கூட டைம் கொடுக்காம இப்படி உளறாதே!" என்று விளையாட்டாய் உரைத்தாலும் முகம் சற்று தீவிரமாகத் தான் இருந்தது.

அம்முவிற்கு தங்கள் வேண்டுதலில் உள்ள ஒற்றுமை நினைவில் வர, அதற்காக இப்போது சந்தோஷம் கொள்ளும் மனநிலையில் இல்லை... "கண்ணா..... நீ கட்டின தாலிய ஏன் கழட்டினோம்னு இப்போ தான் ஏக்கமா இருக்கு டா! ப்ளீஸ் டா கல்யாணம் பண்ணிக்கலாம்... அவங்கெல்லாம் வர்றதுக்குள்ள...இப்போவே... ப்ளீஸ் கண்ணா" என்று இவ்வளவு நேரம் எது கூடாது என்று மறுத்தாளோ அது இப்போதே வேண்டும் என்று அடம்பிடித்தாள்.

"அமுலு... உன் முடிவுல நீ மொதோ உறுதியா இரு... டைம் எடுத்துத்துக்கோ... நல்லா யோசி.... இப்போ உனக்கு இந்த கல்யாணம் வேணுமா? வேண்டாமா?"

அம்மு தெளிவாகக் குழம்பினாள். என்றோ ஒரு நாள் உண்மை தெரியும் போது தெரிந்து கொள்ளட்டும்... அன்று அவனே தன்னை அவன் கையால் கொன்றால் கூட பரவாயில்லை என்று நினைத்திருந்தவள், அது இன்றே நடக்கவிருக்கிறது என்றதும் தான் அவளால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கண்களை துடைத்துக் கொண்டு "என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.

"அதுக்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்..." என்று அம்முவின் பின்னாலிருந்து குரல் எழ, இருவரும் ஒருசேர திரும்பிப் பார்த்தனர்.

கங்காதரன் தான் அங்கே நின்றிருந்தார். அருகில் நின்றிருந்த விமலாவின் முகத்தில் ஈ ஆடவில்லை... ஆனால் மிதுன்யா, கமல், அம்மு மூவருக்கும் பேரதிர்ச்சியே! கங்காதரன் வார்த்தைகளா இதுவென்று...

"மாமா..." என்று மிதுன் வாய் திறந்து அழைத்தாள் என்றால் அம்முவின் இதழ்களும் சத்தமின்றி அதையே தான் உரைத்தது.

கமல் இன்னமும் நம்பவில்லை... "என்னப்பா... நான் கல்யாணம் செய்துக்க போரேன் வாங்கனு ஷாக் கொடுத்ததுனால நீங்களும் ஷாக்கிங் சர்ப்ரைஸ்-ஆ?" என்றான் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு...

"ஐ ஆம் சீரியஸ் கமல்... இவ வந்த நோக்கம் தெரிஞ்சா நீயும் இதே முடிவு தான் எடுப்ப" என்றார்.

அம்மு, கமல் இருவருக்கும் புரிந்துவிட்டது கங்காதரன் ஏதோ தெரிந்து கொண்டு தான் பேசுகிறார் என்று...

கமல் அம்முவின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிடக் கூடாது என்பதற்காக, "அவ வந்தது எந்த நோக்கம் இருந்தாலும், அவ தான் என் மனைவி... எங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..."

கங்காதரனும் கமலிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி அவனது பேச்சில் அதிர்ந்து மகனுக்கு அம்மு யார் என்று உணர்த்தி விடும் நோக்கில், "அது செல்லா கல்யாணம்... அதை வெச்சு உன்னை யாராலும் ப்ளாக் மெயில் பண்ண முடியாது கமல்..."

"என்னை ப்ளாக் மெயில் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ப்பா... மனசை ஒருத்திகிட்டேயும், பெட்டை இன்னொருத்தி கிட்டேயும் ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு மோசமானவனா நீங்க என்னை வளர்க்கலேனு நினைக்கிறேன்... "

"ஓஓஓ... அப்போ அவங்க குடும்ப விருப்பப்படி சிவாவை ஒதுக்கி வைக்க தயாராகிட்டேனு சொல்லு" என்று கோபமும், வெறியும், வருத்தமுமாக வந்தது அவரது வார்த்தைகள்.

கங்காதரன் என்ன பேசுகிறார் என்று விமலா உட்பட எவருக்குமே புரிந்திடவில்லை. கமல் அவர் என்ன கூற வருகிறார் என்று கேட்கும் விதமாக அம்முவை பார்க்க, அவளோ அழுதாலே ஒழிய என்னவென்று கூற முன் வரவில்லை.

"இதுக்கும் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்?"

கங்காதரன் அம்முவைப் பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு "அதெல்லாம் சொல்லாம தான் கல்யாணம் செய்துக்க சொல்லி உன்னை ஏமாத்திட்டு இருக்காளா?" என்றார்.

"அப்பா... உங்களுக்கு தான் எல்லாம் தெரிஞ்சுரிக்கு தானே! அவளை திட்டுறதை நிறுத்திட்டு, சொல்ல வேண்டியதை சொல்லுங்க..."

சீண்டல் தொடரும்.
 
Top