• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கங்காதரன் அனைத்தையும் கூறி முடிக்க, கமலுக்கு ஆறு வயதில் நடந்த நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கலாக நிழலாடியது என்றால், அனைவருக்கும் முன்பாகவே வந்து நின்று கமல் அம்முவின் சண்டையைத் காண நேர்ந்த பவனுக்கு அனைத்தும் இம்மி பிசங்காமல் முழு காட்சியாகவே நினைவில் வந்து சென்றது.

கமல் இப்போது என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அம்முவைப் பார்க்க, அவளது கண்களோ 'நான் அப்படியல்ல, என்னை நம்பு' என்ற கெஞ்சலைத் தாங்கி நின்றது.

"அம்மு" என்ற தியாகுவின் அழைப்பில் தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தவள் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டு அவர் நெஞ்சில் சாய்ந்த படி, அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் "நான் அப்படி இல்லேனு கண்ணாகிட்ட சொல்லுங்கப்பா" என்றால் விசும்பலோடு...

தியாகுவிற்கும் புரிந்துவிட்டது, இங்கே என்ன நடந்திருக்கும்... கங்காதரன் என்ன கூறியிருப்பார் என்று.... அவரது கண்கள் அனைவரையும் ஒருமுறை வட்டமடித்துவிட்டு இறுதியில் விமலாவின் மேல் படித்தது. விமலாவோ எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் தலை கவிழ்ந்து நின்றிருந்தார். தன் தமையனின் பார்வை தன் மேல் நிலைத்திருப்பதை உணர்ந்த போதும், கண்கள் கலங்கிய நிலையிலும் நிமிர்ந்தும் பார்க்காமல் தலை குனிந்தே நின்றிருந்தார்.

"மாப்ள... நாங்க செய்த தப்புக்கு என் பொண்ணை கஷ்டபடுத்தாதிங்க மாப்ளே" என்று கங்காதரனிடம் கூறினார் தியாகு.

"மாப்பிள்ளை மண்ணாங்கட்டி எல்லாம் எப்பவோ முடிஞ்சு போன உறவு... திரும்ப அதை புதுப்பிக்க என் குடும்பத்துல யாரும் தயார் இல்லே... அம்மு உங்க வீட்டு வாரிசுனு தெரிஞ்சிருந்தா என் வீட்டு பக்கமே கூட்டிட்டு போயிருக்க மாட்டேன்... இத்தனை நாள் என் வீட்ல தங்கியிருந்தாலும் உங்க பொண்ணு இன்னமும் உங்க பொண்ணா தான் இருக்கா... உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டு போகலாம்..." என்றார் எதிரே இருந்த தூணைப் பார்த்து...

"நம்ம குடும்பம் இந்த கல்யாணம் மூலமா திரும்ப ஒன்னு சேரட்டுமே! நீங்க நினைக்கிற மாதிரி இனி ஒருத்தரும் நம்ம சிவாவை தப்பா பேசமாட்டாங்க... அவங்களும் முன்னே மாதிரி இல்லை... நான் அவங்களை கண்டிச்சி வைக்கிறேன்..."

"உங்க ரத்தத்துல ஊறிப் போன விஷயத்தை எத்தனை தலைமுறை தாண்டினாலும் மாத்த முடியாது... அந்த ரத்தம் என் வீட்டிலேயும் பிறந்து ஒவ்வொரு முறையும் என் பொண்ணை அசிங்கப்படுறதை என்னால ஏத்துக்க முடியாது..."

கங்காதரன் தன் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தத்திலேயே 'எந்த ஒரு கேடுகெட்டவனின் பேச்சும் என் குணத்தை எப்போதும் மாற்றி விடாது' என்று கூறும் விதமாக இருந்தது.

இவர்களின் வாக்கு வாதங்களுக்கு நடுவே அம்மு கமலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். கமலின் குழப்பமுற்ற முகம் அவளுக்குள் சூறாவளியை ஏற்படுத்தியது. அவன் ஒருமுறை தன் வதனம் கண்டால் நிச்சயம் அவனைத் தெளிய வைக்க தன் காதலால் முடியும் என்ற நம்பிக்கை தோன்றினாலும், தன் முகம் காண அவன் சிரம் தூக்க வேண்டுமே! அவள் அஞ்சியதும் இதற்கு தானே! தன் முகம் காணக் கூட விரும்பாத அளவிற்கு வெறுத்து விடுவானோ! என்று தானே அஞ்சினாள்.

என் காதலுக்காக நான் பேசி தான் அக வேண்டும்... என் கண்ணா என்னை எவ்வளவு வெறுத்தாலும் மீண்டும் மீண்டும் அவன் முன்னால் சென்று நின்று தான் ஆக வேண்டும்... என்று தனக்குத் தானே மனதிற்குள் தைரியம் கூறிக் கொண்டு அவனை நோக்கி தன் கால்களைத் செலுத்தினாள்.

இங்கே தியாகு கங்காதரனை நெருங்கி "அப்படி ஒரு அவமானம் இனி ஒருமுறை நம்ம சிவாக்கு நிச்சயமா நடக்காது கங்காதரன்... அப்படி நடக்க என் பொண்ணும் விடமாட்டா... என் தங்கையப் போலத் தான் என் பொண்ணும்..." என்று விமலாவை முன் உதாரணமாக வைத்துக் கூறினார்.

"இனி நடக்க என்ன இருக்கு.... பத்து வயதுப் பிள்ளைய என்னவெல்லாம் செஞ்சி நோகடிக்க முடியுமோ அத்தனையும் செஞ்சு காட்டிட்டிங்கலே"

"அது பெரிய தப்பு தான்... ஆனா அதுக்காக நான் சிவாகிட்ட மன்னிப்பு கேக்குறேனே!"

"மன்னிப்பு கேக்குறேன்ற பேர்ல யாரும் என் பொண்ணை திரும்ப திரும்ப நோகடிக்காதிங்க... இது ஒத்து வராது... நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டுப் போயிடுங்க..."

கமலை நெருங்கியிருந்த அம்மு "க்க... க்க... கண்... கண்ணா" என்று திக்கி... முக்கி... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திணறித் திணறி அழைத்தாள்.

"போ...."

"கண்ணா..."

"உன் அப்பா கூட போ..."

என்ன தான் இதனை எதிர்பார்த்திருந்தாலும் அவனது வாய்மொழியாக கேட்டபோது அம்முவிற்கு சகலமும் அடங்கி ஒடுங்கியது போல் ஓர் உணர்வு... மீண்டும் ஒருமுறை "ப்ளீஸ் கமல்" என்றது தான் தாமதம், அவளை நிமிர்ந்து தீப் பார்வை பார்த்து

"இப்போவே ... இந்த நிமிஷமே என் கண்ணுல இருந்து மறைஞ்சு போ..." என்று அவள் அழுகையையும் பொருட்படுத்தாமல் கத்தினான்.

அம்முவின் கண்கள் மடைதிறக்க, பீறிக் கொண்டு எழுந்த கேவலை இதழ் மடித்து அடக்கி தன் கரம் கொண்டு சத்தம் எழாமல் வாய் மூடி நின்றாள்.

அம்முவின் கண்களோ 'கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்ன கடைசி நொடி வரை எவ்ளோ பிரச்சனை வந்தாலும் உன்னை விட்டு விலகமாட்டேன்னு சொன்னேயே!' என்று கேள்வியோடு அவனை நோக்கியது.

அவளது கண்களை எகத்தாளமாகப் பார்த்து "என் மேல அவ்ளோ காதல்ல உனக்கு.... அந்த காதல் கிடைக்கனும்னா இப்போ உன் அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உன் தாத்தாவையும், உன் சித்தப்பாவையும் சொல்ல சொல்லு..."

மீண்டும் அவனது கண்களில் ஒரு ஏளனம் "நீ உங்க வீட்டு செல்லப்புள்ள இல்லே! உனக்காக இதக் கூடயா செய்யமாட்டாங்க... சிவாகிட்ட மன்னிப்பெல்லாம் கேக்க வேண்டாம்... செஞ்சது தப்பு... அது திரும்ப நடக்காதுனு மட்டும் சொல்ல சொல்லு பார்க்கலாம்..." ஏளனமாகப் பார்த்த கண்கள் இப்போது கோபமாக அவளை நோக்கி,

"நாக்குல நரம்பில்லாம என் அப்பாவை கொச்சையா பேசினதுக்கு என் அப்பாகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு... இல்லே செத்து போயி சிவா அம்மாகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு..." என்று இரண்டாம் வாக்கியத்தை சற்றே அழுத்தமாகக் கூறினான்.

சீண்டல் தொடரும்.
 
Top