முதல் நாள் கடையில் இருக்கும்போது கமலுக்கு திறன்பேசியில் அழைப்பு விடுத்திருந்தது, இத்தனை நாள் யார் தன்னை மிரட்டுவதாக நினைத்தானோ! யார் தன் அம்முவிற்கு எதிரி என்று நினைத்தானோ அந்த நபர் தான்.
அந்த நபர் தன்னை அறிமுகபடுத்தக் கூட மறந்து, கமல் அழைப்பை ஏற்ற அடுத்த நொடியே "கமல் அமுதினிக்கு திரும்பவும் ஆபத்து.... அவளை ஒரு கூட்டம் தேடி அலையுது... நீ நாளைக்கே அமுதினியைப் போய் பார்" என்றிட,
"யார் நீ? இப்படி பயம்காட்டி என்னை ஃபாலே பண்ணி அவ எங்கே இருக்கானு கண்டுபிடிக்க பாக்குறேயா? உங்களுக்கெல்லாம் என்ன தான் டா வேணும்? நீ யாருனு எங்களுக்கு இப்போ வரைக்கும் தெரியாது. அமுலு காப்பாத்தின அந்த பொண்ணு கூட யார் என்ன? ஏது? எங்கே இருக்கா? எதுவும் எங்களுக்குத் தெரியாது! என் அமுலுனால உங்க யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை! அவளை நிம்மதியா இருக்க விடுங்கடா?" என்று தன் காதல் தோல்வியில் போராடக் கூட தெம்பில்லாதவன் போல் இறைஞ்சும் குரலுக்கு இறங்கி இருந்தான் கமல்.
"அவ காட்டிக் கொடுத்திருவானு பயந்து கொல்ல ட்ரை பண்ணினது எல்லாம் பழைய கதை கமல். இப்போ அவங்களோட ரிசர்ச்-க்கு ஒரு ஃப்ரெஷ் பீஸ் தேவை. அதுக்கு அமுதினிய யூஸ் பண்ணிக்க நினைக்கிறாங்க"
"நெனச்சேன்... அவளை இப்படி விடாம துரத்தும் போதே நெனச்சேன். உங்க எல்லாருக்கும் என்ன வேணும்? ஆர்கான்ஸ் தானே! அதை நான் அரேஞ்ச் பண்ணி கொடுத்தா அவளை விட்டுடுவிங்க தானே!"
"டேய் ஃபூல்... முட்டாள்... நான் சொல்றது புரியலேயா உனக்கு? அவங்களுக்கு அமுதினி தான் வேணும்... அவளோட ஆர்கான்ஸ் இல்லே... உனக்கு இன்னும் சீரியஸ்னஸ் புரியலே!" என்று மறுமுனை கோபமாக கத்தியப் பின் தான் கமல் காது கொடுத்து கவனிக்கத் தொடங்கினான்.
"அப்போ நீ யாரு? உனக்கும் அந்த கூட்டத்துக்கும் சம்மந்தம் இல்லேனா அவங்க ப்ளான்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீ ஏன் அமுலுக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிற?"
"நான் அமுதினியோட டீன், Dr.சங்கர். எனக்கு ஆரம்பத்திலிருந்தே அவங்களோட எந்த செயல்-லையும் உடன்பாடு இல்லை. நான் மறுப்பு சொன்ன என் ஹாஸ்பிடலுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி பண்ணிடுவாங்க. என்னை ப்ளாக்மெயில் பண்ணிட்டு இருக்கிறது வேல்ட் லெவல்ல பேமஸான ஒரு பெர்ஷன். என்னால அவங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. இப்போ அமுதினிய காப்பாத்த எனக்கு கெடச்ச ஒரே துரும்பு சீட்டு நீ தான். அம்முவுக்காக இல்லேனாலும் எனக்காக பண்ணு... நாளைக்கே போயி அவளைப் பாரு.... ப்ளீஸ்" என்றதோடு கமல் "ம்ம்ம்" என்ற வார்த்தையை கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.
ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் யோசித்துப் பார்த்தவன், தான் நினைத்தது போல் வந்த குறுந்தகவல்கள் அனைத்தும் தனக்கு உதவி செய்வதாகத் தான் இருந்தது. அப்படியென்றால் சங்கர் ஆரம்பத்திலிருந்து தனக்கும் அமுலுவுக்கும் உதவி தான் செய்திருக்கிறார். இப்போதும் அவளுக்கு ஆபத்து என்பது நிச்சயம் 100% உண்மையாகத் தான் இருக்க வேண்டும், அதனால் தான் அவரிடம் அவ்வளவு படபடப்பு... என்று தோன்றிடவே அவர் கொடுத்த ஒரு நாள் கெடுவையும் பொருட்படுத்தாது அடுத்த நிமிடமே தந்தையின் முன் நின்றான்.
ஆனால் அவன் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று தேவின் வருகை. தேவ் அம்முவை அழைத்துச் சென்றிருக்கிறான் என்றால் தேவ்-விற்கும் அந்த கூட்டத்தோடு தொடர்பு இருக்கிறதா? அதனை ஏன் சங்கர் தன்னிடம் கூறவில்லை! என்ற எண்ணம் தோன்றிட, அப்படி என்றால் அவருக்கும் அந்த ரகசியம் தெரிந்திருக்காது என்றும் புரிந்து கொண்டான்.
ஆக அகிலன் சொல்வதைப் போல் தேவ் பற்றி அறிந்த அந்த நபர் யாராக இருக்கும் என்று யோசித்த போது அவனது நினைவில் முதலில் வந்தது, Dr.போஸ் தான்.
★★★★★★★★★★
வைகறைப் பொழுதில் அந்தப் பெரிய இல்லத்தின் மேலைநாட்டு பாணியில் அமைந்திருந்த சோமபான விருந்து அறையில், இடை உயர சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி, அளவு கடந்த போதையில் இருந்த போதும், ஏற்றியது பற்றாது என்பது போல் இன்னமும் மது கோப்பையை கையில் ஏந்தி எதிரில் இருந்தவருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் Dr.போஸ்.
"நினைச்சதை சாதிக்கப் போறிங்க... அப்பறம் JD? இனி என்ன ப்ளான்? தேவ் நாம நெனச்சா மாதிரி அந்த பொண்ணை கூட்டிட்டு வந்துட்டு இருக்கான். இனி என்ன பண்றதா இருக்கிங்க? எங்கே பண்றதா இருக்கிங்க?"
"ம்ம்... இங்கே எங்கேயும் வெச்சு பண்ண முடியாது... சோ இங்கே எங்கேயும் இல்லே...!"
அந்த போதையிலும் போஸ்-க்கு இந்த செய்தி திக்கென்று ஆகியது. முகத்தில் அதனைக் காட்டாமல், "பின்னே? நமக்கு இங்கே தானே ஸேஃப்... காக்கி சட்டையில இருந்து கதர் சட்டை வரை இங்கே தான் நமக்கு ஆள் இருக்கு... பிரச்சனை வந்தா கூட நமக்காக அவங்களே சமாளிச்சுப்பாங்களே! வேற எங்கேயும் கூட்டிட்டுப் போயி அங்கே மாட்டிக்கிட்டா என்ன பன்றது!" என்றார் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற படபடப்போடு.
"இங்கேனா அந்த கமல் தொல்லை அதிகமாக இருக்கும்... அமுதினிய நாம கூட்டிட்டு போகப் போறது நம்ம ப்ரைவேட் ப்ளேஸ்... எந்த தொல்லையும் இருக்காது... சுத்தி கடல் நமக்குத் தெரியாம யாரும் உள்ளே வர முடியாது... அந்த கமல் அப்படியே அவளைத் தேடி வந்தாலும் அவன் ரெண்டாவது டெஸ்ட் ரேட்" என்று ஆவணமாக பதிலளித்தார் அந்த JD.
"அப்படி என்ன ப்ளேஸ்? எனக்கு தெரியாம!" என்று தன்மேல் எந்த சந்தேகமும் வராதபடி கையிலிருந்த கோப்பையை ஒரு மிடறு மிடறிவிட்டு போஸ்ஸின் கேள்விக்கணை தொடர்ந்தது.
"சேர வள நாடு....." என்று கூறி வெற்றிச் சிரிப்பு சிரித்தார் அந்த JD. போஸ்-க்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி....
"பார்டர் க்ராசிங் ப்ரப்ளம் வராதா?"
"ம்ஹூம்.... என் பையனுக்கு அங்கே சொந்தமா! தனியா! குட்டியா! ஒரு ஐலாண்ட்டே இருக்கு... சோ எப்போனாலும் போகலாம்.... எப்போனாலும் வரலாம்... இப்போ நம்மலோட இந்த கடைசி கட்ட ரிசர்ச் அங்கே தான் நடக்கப் போகுது... ஒருத்தனும் நமக்குத் தெரியாம உள்ளே வர முடியாது... ஏன் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது... பக்கா சேஃப் அன்ட் செக்கியூரைஸ்ட் ப்ளேஸ்" என்றார் ஆனந்த களிப்போடு.
அது Dr.போஸ்-க்கும் தொற்றிக் கொள்ள பலத்த சிரிப்புடன் ச்சியர்ஸ் என்று மீண்டும் ஒருமுறை கையிலிருந்த கோப்பையை தூக்கிக் காண்பித்து உற்சாக பானத்தை உற்சாகமாக அருந்தினார்.
★★★★★★★★★★
அதே விடிகாலைப் பொழுதில் பழனிவேலின் இல்லம் நுழைந்தனர் கங்காதரன் மற்றும் ராம் தம்பதியினர்.
கமலுக்கு கிடைக்காத வரவேற்பு சிறிதேனும் கிடைத்தது விமலாவிற்கு. பெண்கள் மூவரும் விமலாவைச் சூழ்ந்து பிரிவின் துயர் தீர்த்ததோடு, தங்கள் வீட்டுப் பெண்பிள்ளையின் நிலை நினைத்துக் கலங்கினர். விமலாவும் அவர்களது பாசத்தில் உருகிடவில்லை என்றாலும் அம்முவின் நிலை குறித்து கலங்கி தான் நின்றார்.
நேத்ராவோ கமலைக் காணும் ஆர்வத்தில் எவரையும் கண்டு கொள்ளாமல் வாசலில் கால் வைத்தவள், ஏதோ ஒரு உணர்வு தோன்றிட நிமிர்ந்து பழனியைப் பார்த்தாள்.
அவர் சிறு முறைப்போடு மறுபுறம் திரும்பிக் கொள்ள, அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னேறினாள். திடீரென ஒரு கை தன் கையைப் பிடித்து நிறுத்த, திரும்பிப் பார்த்தாள். தன்னை நகர விடாமல் பிடித்திருந்த தன் கணவனிடம் விழிகளால் கெஞ்சினாள்.
"மதியாதார் தலைவாசல் மிதியாதே! உன் பொண்ணுக்கு நீ சொல்லிக் கொடுத்த பாடம்... உனக்கே மறந்திடுச்சா!"
என்ன தான் வீராப்பாய் அவளது பிரச்சனை அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற போதும், தன் மனைவியைக் கண்டு பழனிவேல் முகம் திருப்பியதைக் கண்டதும் தன்னவளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்க விரும்பாத மனம் அவளைத் தடுத்த நிறுத்தத் தூண்டியது.
"அதையெல்லாம் காலம் கடந்து யோசிக்கிறதுல பயன் இல்லே. ஒதுங்கி நிக்கிறதுக்கு நாம இவ்ளோ தூரம் வந்திருக்கவும் தேவையில்லேயே! நான் போகனும்" என்றாள் அவளவன் விரும்பும் 'தரு'வாக....
எப்போதும் ரசிக்கும் அவளது திமிர் இன்று ஏனோ அவனுக்கு சுவாரசியமாக இல்லை. மாறாக அவளை முறைத்தான். இருந்தும் அவளது பிடிவாதம் உணர்ந்து மனமே இல்லாமல் கையை விடுவித்தான்.
கூடத்திற்கும் அடுமனைக்கும் இடையே இருந்த அந்த பெரிய ஆர்ச்சின் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்த கமல் நேத்ராவைக் கண்டவுடன் அவளை அணைத்து அவளது மடியில் தலை வைத்து, சத்தம் இன்றி கத்தல் இன்றி கண்ணீர் மட்டும் வடிந்த படி படுத்துக் கொண்டான்.
நேரங்கள் கடந்ததே ஒழிய கமல் நகர்ந்த பாடில்லை. "கமல் போதும் உன் அழுகை... நீ இங்கே உக்காந்து அழுதுட்டு இருந்தா அம்முவை கண்டுபிடிக்க முடியாது. உனக்கு தான் அம்மு & தேவ் சரௌன்டிங் பத்தி தெரியும்... அவள் யார் யார் கிட்ட பழகினா? ஹாஸ்பிடல்-ல அவளோட க்ளோஸ் சர்க்கில் யாரு? முக்கியமா அந்த தேவ் டூ வீக்ஸ் அங்கே என்ன செய்தான். அவன் மேல சந்தேகம் வரும்படியா அங்கே என்னலாம் நடந்தது? இதெல்லாம் நீ அங்கே போனாத் தான் விசாரிக்க முடியும்.... கிளம்பு..... பவனால தனியா எவ்ளோ தான் பாக்க முடியும்!!!"
"ம்ம்... போலாம்... அதுக்கு முன்னாடி போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க சொல்லு சிவா?"
"டேய்..." என்று நேத்ரா சலிப்பாக ஆரம்பித்து, "என்ன உரிமைல நாம" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே இருவரின் அருகிலும் கைகட்டி நின்றிருந்த அகிலன், "சித்தப்பா ஸ்டேஷன் போயிருக்காங்க..." என்றான் எங்கோ பார்த்தபடி.
நேத்ராவிடம் இருந்து பிரிந்து அடுமனை வழியே பின்பக்கம் வந்த கமல் திறன்பேசியில் மூழ்கிப் போனான். அவனது செயல்களை நோட்டமிட்ட நேத்ரா இவன் இப்போதைக்கு மதுரை செல்லத் தாயர் இல்லை என்று உணர்ந்து, மீண்டும் வீட்டினுள் நுழைந்தாள்.
தன் திறன்பேசியை எடுத்து பவனுக்கு அழைத்து Dr.சங்கர் மற்றும் மருத்துவமனையின் எண்களைப் பெற்றாள். பவனிடமும் தேவ்-விற்கு விபத்து நேர்ந்த போது சிகிச்சை அளித்த மருத்துவமனை சென்று தேவ்வின் முகவரி வாங்கச் செய்தாள். சங்கரிடம் பேசி தர்மா மருத்துவமனை எண்ணையும் பெற்றாள்.
சுற்றிமுற்றி விசாரிக்க தர்மா மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயதர்மன் தான் அம்முவை இத்தனை நாள் வலைவீசித் தேடியது என்றும், அவரிடம் தான் தேவ் தற்போது அம்முவை அழைத்துச் சென்றிருக்கிறான் என்றும் அறிந்து கொண்டாள். தேவ்-வின் முகவரிக்குச் சென்று விசாரிக்க அங்கே அவன் ஒரு சிறந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் சொந்த மருத்துவமனை ஒன்று உள்ளது என்றும் தெரியவந்தது.
அதில் மேலும் குழப்பமுற்றாள் நேத்ரா. தலை சிறந்த நிபுணர் எதற்கு மற்றொரு மருத்துவமனையில் ட்ரைனராக சேர வேண்டும்!!! அம்முவிற்காகத் தான் என்றால் சொந்தமாக மருத்துவமனை வைத்திருப்பவன் எதற்கு Dr.தர்மாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும்!!!
ஆக தேவ்-ஐப் பற்றி நன்கு அறிந்தவர் Dr.ஜெயதர்மா தான். இனி அவரைப் பற்றி தான் அறிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள், பவனை இதில் நேரடியாக இருக்காமல் காவல் துறையின் மறைமுக உதவியை நாடினாள்.
தான் சொல்வதை அப்படியே ஏற்று ஏன் எதற்கு என்று துருவாத காவல் அதிகாரியை வலைவீசிட அதில் சிக்கியவர் கமல் அம்முவிற்கு மணமுடித்து வைத்த எஸ்.ஐ தான்.
இதற்கிடையே கமலையும் தேற்றியபடி, தன் ஒவ்வொரு தேடலின் முடிவையும் வீட்டாரிடமும் தெரியப்படுத்தானாள். அத்தோடு உணவு உறக்கம் இன்றி தவித்த பெண்கள் நால்வரையும் நேத்ரா பொறுப்பெடுத்து கவனித்துக் கொண்டாள் என்றால் அவ்வில்லத்து ஆண்கள் மூவரையும் அகிலனின் கண்டிப்பு வார்த்தைகள் தான் உண்ண வைத்தது.
காவல் நிலையம் சென்று வந்த கனகவேலும் தன்னை தற்போது வரை துச்சமாக கருதும் தங்கை விமலாவிடம் தானாக சென்று வழியப் பேசினார். கங்காதரனிடம் தலை குனிந்த படி சில வார்த்தைகள் உரைத்தார். ஆனால் ராம் நேத்ராவிடம் பார்வை கூட செலுத்திடவில்லை அவர். சிவநேத்ராவை பார்க்கக் கூட விரும்பாமல் ஒதுக்கி வைப்பது போல் தங்கள் அறைக்குள் முடங்கிக் கிடந்தனர் பழனியும், கனகும்.
உண்மையில் இங்கே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவர்கள் தான். இத்தனை நாள் தான் ராஜ்ஜியம் செய்த இல்லத்தில் இன்று தனி அறையில் அடைந்து கிடக்கிறோம் என்று கூட உணராத மூடர்கள். எவளொருத்தியால் தன் இனத்தின் முன் தங்கள் குடும்பத்திற்கே இழிவு என்று நினைத்தார்களோ அவள் ஒருத்தி தான் இன்று தங்கள் உறவுகளுக்கு பக்கபலமாய் இருக்கிறாள் என்பதை அறிந்திடாத அறிவிலிகள்.
அவள் போராடுவது தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கைக்காகத் தான், தங்கள் வீட்டு பெண் வாரிசின் உயிருக்காகத் தான் என்பதைக் கூட பகுத்தறிய முடியாத ஐந்தறிவினும் கீழ்மையான ஜீவன்கள். அன்று கங்காதரனிடம் நேத்ராவின் தந்தை உதவியால் ஏற்றம் கண்டதே இழிவு என்றவர்கள் தான் இன்று அவரது மகளின் மூலமாவது தன் வம்சாவழி கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கும் முதுகெலும்பற்ற புழுக்கள் ஆகினர்....
என்ன தான் இது தேவ்வின் ஏமாற்று வேலையாக இருந்தாலும் இவர்களாகவே தான் தேவ்வுடன் அனுப்பி வைத்ததால் ஊரார் எப்படியும் அம்முவைப் பற்றி தான் தரக்குறைவாகப் பேசுவார்கள் என்று நினைத்து எவருக்கும் தெரியக் கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார் பழனிவேல்.
பினியின் அன்னை தந்தைக்குக் கூட விடயம் தெரியாமல் ரகசியம் காத்தார் அவர். இதனால் அகிலன் தான் தனக்கென்று தன்னுள்ளம் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாதது போல் பல நேரம் உணர்ந்தான்.
மேலும் தன் தங்கையை கண்டறியும் மார்க்கம் யோசிக்காமல் தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்கும் கமலைக் காண, ஒரு புறம் கோபம் கூட எழுந்தது அவனுக்கு. அதிலும் நேத்ரா அவனை மடியில் ஏந்தாத குறையாக கவனிக்கும் போதெல்லாம் மூக்கு விடைக்கு முறைத்துக் கொண்டு தான் நின்றான்.
அம்முவை தேவ் கடத்திச் சென்றுவிட்டான் என்ற செய்தி தெரிந்ததில் இருந்தே தன் திறன்பேசியோடேயே வலம் வந்து கொண்டிருந்த கமல், மதியத்திற்கு மேல் ஒரு நிலையில்லாமல் தன் மூன்றாம் கையுடன் (smart phone) மள்ளுக்கட்டத் தொடங்கியிருந்தான்.
என்னவென்று கேட்டாலும் யாருக்கும் சரியான பதில் சொல்லாமல் அங்கே இருக்கவும் முடியாமல், எங்கே செல்வது என்றும் தெரியாமல் அல்லோல்பட்டுக் கொண்டிருந்தான். அதற்குள் நேத்ராவிற்கும் எஸ்.ஐ-யிடம் இருந்து தகவல்கள் வந்துவிட கமலுக்கும் மேற்கொண்டு பீதியடைந்தாள் அவள்.
அம்முவின் அறையில் அவளது வாசனையை நுகர்ந்தபடி மெத்தையில் தன் திறன்பேசியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தவனின் அருகே வந்த நேத்ரா அவனது தலை கோதிட, அவளை ஏறிட்டான்.
நேத்ராவின் விழிகளில் கோர்த்திருந்த கண்ணீர் அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதை உணர்த்தியது அவனுக்கு.
"எல்லாம் தெரிஞ்சும் எப்படி டா தாங்கி கிட்டே? "
"இப்போ என்னாச்சு? ஒன்னும் ஆகலே... என் அமுலு பத்திரமா தான் இருப்பா... " என்று அவன் கூறும் போதே மீண்டும் கண்ணீர் அவனது கண்களில்.
தைரியம் சொன்னவனே மீண்டும் உடைந்து குழந்தை போல் "அவ... அவளுக்கு... ஒன்னும் ஆகாதுல சிவா!" என்றான்.
நேத்ராவிற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. உண்மை தெரிவதற்கு முன்பு வரை தைரியம் கூறியவள், அம்முவை அழைத்துச் சென்றவன் அவளது தலையைத் தான் கூறு போடப் போகிறான் என்று அறிந்தபின் எப்படி உரைப்பாள் அம்முவிற்கு ஏதும் இல்லை என்றும், அவளுக்கு எதுவும் நேராது என்றும். சத்தமாகக் கூட அழுதிட முடியாமல் இதழ் விரித்து விசும்பியவனை அணைத்துக் கொண்டு அவளும் விசும்பினாள்.

சீண்டல் தொடரும்.