தேவ்வின் எதிர்பார்ப்புகள் இவ்வளவு சீக்கிரம் நிவர்த்தியாகும் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திடவில்லை!!!
இரண்டு மூன்று முறை சிரிப்பதும் அவளை நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தவன், "கத்தி பிடிக்கிறவன்கிட்ட காதல் பத்தி கேட்டா என்ன சொல்றது!" என்று வெண்பற்கள் தெரிய சிரித்து, "ஒரு டாக்டர் பொண்ணு ஐ லவ் யூ சொல்லுவானு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..." என்றிட, அவளும் பதிலுக்கு வாய்விட்டு சிரித்தாள்.
அம்முவின் குறும்புகள் எட்டிப்பார்க்க, "டாக்டர் சார்... இதை சொல்ல தான் இவ்ளோ நேரம் யோசிச்சிங்களா? நான் என்ன ஐஏஎஸ் எக்ஸாம் பேப்பரா கொடுத்தேன், இவ்ளோ நேரம் யோசிச்சு மொக்கை பதிலை சொல்றிங்க!!!" என்று கூறி இன்னுமே சிரித்தாள்.
அம்முவின் பதிலே உரைத்தது, அவள் இன்னும் இவன் கூறியதை முழுமையாக மனதில் பதிக்கவில்லை என்பதனை... அவளைப் பொருத்தவரை அவள் இப்போது ஒரு நோயாளி மட்டுமே... தனது படிப்பு பற்றி நினைவில் இருந்த போதும் இன்னும் அவள் தன்னை ஒரு மருத்திவச்சியாக கருதிடவில்லை.
அவளது பதிலிலேயே அதனை அறிந்து கொண்டவன், ஒரு நெடிய பெருமூச்செடுத்து, பின் நிறுத்தி நிதானமாக, "லவ் வெறும் ஃபீல் மட்டும் கிடையாது ஹனி... அது ஒரு லைஃப்... அதை வார்த்தையை வடிவமைக்கிறதை விட வாழ்ந்து பாத்து தான் உணர முடியும்....
இது வரைக்கும் அதை உணரக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சது இல்லே. இப்போ கொஞ்ச நாளா தான் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்க ஆசை வந்திருக்கு... சீக்கிரமே அந்த உணர்வை அனுபவிக்கிற நாளும் வரும்னு நம்புகிறேன்" என்றான்.
தனது கையை அவனாக விடுவித்து விட்டு, தன்னிடம் விடை பெற்றுச் செல்பவனைக் கண்டு தன் கரம் கொண்டு இதழ் மூடிச் சிரித்தாள் அம்மு. மனமோ "சாருக்கு காதல் பித்து முத்திடுச்சு போல!!!" என்று கவுண்டர் கொடுக்கவும் தவறவில்லை. மீண்டும் வாய்விட்டு சத்தமாக, அவன் அடைத்துச் சென்ற கதவுகளைப் பார்த்த படி, "எல்லாத்தையும் என்கிட்ட சொல்ற நீங்க, இதையும் ஒருநாள் எப்படியும் என்கிட்ட சொல்லுவிங்க... சொல்லி தானே ஆகனும்..." என்று தனக்குத் தானே கூறினாள்.
அதன் பிறகு வந்த நாட்கள் இருவரும் பல கதைகள் பேசினர். மருத்துவம், பொருளாதாரம், அரசியல், பூலோகம், அப்துல் கலாம் முதல் ஔவை பாட்டி வரை அகர வரிசை எழுத்தாளர்கள் தொடங்கி ஆங்கிலேய எழுத்தாளர்கள் வரை அனைவரது எழுத்து நடை, கருத்து உரை, என அனைத்தும் பேசித் தீர்த்தனர்.
இடையிடையே கார சாரத்திற்கு காதலும் பேசினர். அவள் காதலை பற்றிய கருத்துகளை தன் பார்வையில் விளக்கினாள் என்றால் அவன் பதிலுக்கு பல நேரம் கற்றுக் கொள்கிறேன் டீச்சரம்மா என்றான் கேலியாக...
குறுகிய காலத்திலேயே தேவ்விற்கு அம்மு மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகியிருந்தது. காரணம், கமல் அவள் வாழ்வில் இல்லை என்ற நிலையில், தற்காலிக நாட்களில் அவளது பேச்சுகள் அனைத்தும் அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்றே அவனுக்கு உணர்த்தியது. கடந்த சில நாட்களாக பேச்சு எங்கே தொடங்கினாலும் இறுதியில் முடிவது காதலிடமே தான். அது தான் அவனது நம்பிக்கைக்கு முழு முக்கிய காரணமாக அமைந்தது.
அது மட்டும் அல்லாமல், தேவ்வைக் காணும் போது அவள் முகத்தில் தோன்றும் பிரகாசம், அவனுக்காக பல நேரங்களில் உறக்கத்தை விடுத்து காத்திருப்பதும், அவளை காக்க வைப்பதற்காகவே அவன் தாமதமாக வருவதும், அவனது தாமதம் இன்னும் தாமதமாகும் போது கூட அவள் காட்டும் செல்லக் கோபமும், சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் வெளிவரும் அவனது பிதற்றல் பேச்சுகளும், அவற்றுக்கும் கூட அவள் செவி மடுப்பதும், சிரிப்பதும், மகிழ்வதும் என்று அனைத்தும் அவனுக்கு இது காதலே தான்! என்று தான் உரைத்தது.
இங்கே அறைச் சிறையில் அடைபட்டவர்களுக்கு முதல்நாள் பரிசோதனை மட்டுமே திரையில் காட்டினான். அதன் பின் அவர்கள் விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறு எந்த வெளிச்சத்தையும் கண்ணாரக் கூட காணவில்லை. அகிலன் மற்றும் கமலுக்குமே அதே நிலை தான்.
வழக்கத்திற்கு மாறாக பரிசோதனை நேரத்திற்கு முன்னதாகவே வந்த தேவ் அவள் கையில் ஒரு காகிதப் பையைக் கொடுத்து, இன்று இதை அணிந்து கொள் என்றான். அவளும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அவன் கூறியதைச் செய்தாள். மேலாடைக்கு மேல் துப்பட்டாவை வெறுமனே ஒற்றைப் பக்கமாக அணிந்து வந்தவளின் மேனியிலிருத்து சட்டென அதனை உருவினான்.
ஒரு நொடி திடுக்கிட்டவள், அவனை ஏறிட, அவனோ கள்ளமாகச் சிரித்து, துப்பட்டாவை அவள் தலைக்கு முக்காடு இட்ட படி அழகாக அவளுக்கு சுற்றிவிட்டான். ஆனாலும் அவளது கோபம் குறையவில்லை. அதனை உணர்ந்து பேச்சை மாற்றும் விதமாக "உன் மண்டை வீங்கியிருக்கிறதைப் பார்த்து யாராச்சும் இவ்ளோ அறிவானு கண்ணு வெச்சிடப் போறாங்க... கூட பழகுற எனக்கு தானே தெரியும் அங்கே ஹெல்த்தி சாய்ல் மட்டும் தான் இருக்குனு..." என்றிட,
ஒரு கோபம் மறைந்து மற்றொரு கோபம் முளைத்து அதற்கும் சேர்த்து முறைத்தாள். ஆனால் அவளது முறைப்பில் இதழ் மடக்கி சிரிப்பை அடக்குகிறேன் என்று அவன் செய்த வானர முக பாவனையில் பெண்ணவள் சிரித்து விட்டாள்.
சற்று நேரத்தில் வழக்கமான அன்றாட பரிசோதனைக்காக ஜெயதர்மன் மற்றும் போஸ் ஆகிய இருவரும் உள்ளே நுழைந்தனர். பீபி, ஆக்ஸிஜன் அளவு, பல்ஸ் என அனைத்தும் சரிதான என்று பார்த்துவிட்டு, இன்றிலிருந்து கூடுதல் பரிசோதனை என்று Dr.போஸ் கூறிட அம்மு சட்டென தேவ்வை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது கண்களோ "நான் இருக்கிறேன், ட்ரஸ்ட் மீ" என்று நம்பிக்கை கொடுப்பதற்கு பதிலாக, "சக்ஸஸ் ஆகனும்னு எனக்காக நீயும் வேண்டிக்கோ" என்று அவளுக்கு கட்டளை பிறப்பித்தது. அதில் மேலும் கொஞ்சம் கலவரமடைந்தவளை போஸ் தான் சமாதானம் செய்தார்.
மற்ற இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு, அம்முவின் சிற்றப்பன் மற்றும் சிற்றன்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டதற்கே அம்மு வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான். அவர்களை ஆரத்தழுவி பிரிவின் துயர் தீர்த்தாள்.
மீண்டும் ஒரு பரிசோதனைக்குப் பின் தாத்தா மற்றும் ஆச்சி அழைத்துச் செல்லப்பட, அவளது மகிழ்ச்சி அனைத்தும் அழுகையாக மாறியது. அவள் அழுவதைக் கண்டு கோமதி தன் புலம்பலைத் தொடங்கிட அடுத்த நொடியே அவர்களை வெளியே அனுப்பி வைத்தார் போஸ்.
அவர்களது வார்த்தைகள் அம்முவின் மூளையை பாதிக்க அதிக பாதிப்புகள் உள்ளது என்பதால், அதனை தடுக்கவே முற்பட்டார். அடுத்த ஒருமணி நேர பரிசோதனைக்குப் பின் அவளது அன்னை தந்தையை அழைத்தார் போஸ். அவர்களைக் கண்டதும் தாவிச் சென்று அனைத்துக் கொண்டவள், கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. அவர்கள் அங்கே இருக்கும் போதே அகிலனும் அம்முவிடம் அழைத்துவரப்பட்டான்.
மீண்டும் அவளது பல்ஸ், ஆக்ஸிஜன் லெவல் மற்றும் மூளையின் ரத்த ஓட்டம் என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது, போஸ்ஸின் உதவியோடு... வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் பனித்திருந்த அவள் கண்கள் அடங்கிவிட, அவளது நிலை குறித்து கவலையுற்ற பெற்றவர்களின் மனம் தான் அடங்கவில்லை.
இருவரின் அழுகையையும் கண்டு அம்மு அவர்களை சமாதானம் செய்தாள். "ம்மா... அதான் நான் நல்லா தானே இருக்கேன்... இன்னமும் ஏன் அழுகுறிங்க... எனக்கு எதுவும் ஆகாது ம்மா... அதான் தேவ் சார் எல்லாம் பாத்துக்கிறாரே!"
"எல்லாம் அவனால தான்" என்ற முனுமுனுத்த அன்னையை அகிலன் அடக்கினான். மகனின் மேலும் கோபத்தில் இருந்த உமா அவனை முறைத்திட, மகளின் முன் அன்னையும் மகனும் முட்டிக் கொண்டு நிற்பதை விரும்பாத தியாகுவே அவர்களை வெளியே அழைத்துச் சென்றுவிட்டார்.
இவை அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது கமலின் அறையில். திரையில் தெரிந்த அம்முவை விரல் கொண்டு வருடி தன் பிரிவை தீர்க்க முற்பட்டான் அவன். தேவ் அம்முவின் அறைக்குள் நுழைய திரை அணைந்தது.
தன் குடும்பத்தாரை கண்ட சந்தோஷத்தில் தேவ் உள்ளே நுழைந்ததும், கைகளை உயர்த்தி அரவணைப்பு தேடும் குழந்தையாய் அவனை நோக்கி நகர்ந்தாள். தேவ்வும் அவளது மாற்றங்களை தினமும் ஒன்றாக அனுபவித்தவன் இன்று அவளது ஸ்பரிசத்தை அனுபவிக்கும் பொருட்டு தன் கைகளை விரித்து அவளை நோக்கி நடந்தான்.
திடீரென உணர்வு பெற்ற அம்மு அவன் அருகே வந்து தன் கைகளை குறுக்கிக் கொள்ள அதை கவனியாத தேவ் அவளை அணைத்திருந்தான். சட்டென அவனை நகர்த்தி மறுபுறம் திரும்பிக் கொண்டாள் அம்மு. முன்னேப்பின்னே பெண்களின் வெட்கத்தைக் கண்டிறாத தேவ் அவளது முக மாற்றத்திற்கு வெட்கம் என பெயர் வைத்து தனக்குள் சிரித்து, பெயருக்காக வெறுமனே மன்னிப்பு வேண்டினான்.
தனக்கிருந்த மகிழ்ச்சியில் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவன் புறம் திரும்பி "அடுத்து யார் வரப்போறாங்க டாக்டர் சார்?" என்றாள்.
"அடுத்து யாரை பாக்கனும்னு சொல்லு? அவர்களையே வர சொல்லிடலாம்...." சிறிய இடைவெளி விட்டு "நாளைக்கே" என்றான்.
பெண்ணவள் இன்றே அனைவரையும் காண விரும்புகிறாள், அனைத்தையும் அறிந்து கொள்ளத் துடிக்கிறாள் என்று அறிந்து அவளை அலைக்கழிக்கும் நோக்கில்.
"இன்னைக்கு இல்லேயா?" என்றால் ஏமாற்றமாக,
"ம்ஹூம்"
"ஏன்?"
"ஒரே நாள்ல ஓவர் லோட் ஏத்திக்காதே... அப்பறம் இல்லாத மூளை கூட சிதறிடும்" என்று விளையாட்டைப் போல் கூறினான்.
சற்றே முகம் வாடி, மீண்டும் ஒளி பெற்று "அப்போ நான் கொஞ்ச நேரம் அம்மா அப்பா கூட இருக்கட்டுமா?"
"ஹனி.... நீயும் ஒரு டாக்டர்... இதை நான் அடிக்கடி நியாபகப் படுத்த வேண்டி இருக்கு.... உன் ஹெல்த் கண்டிஷன் இப்போ ஓரளவுக்கு உனக்கு தெரியும்... இருந்தும் உன்னைப் பார்த்ததும் அழுகுற உன் அம்மாவை பக்கத்துல வெச்சிக்கனும்னு நினைக்கிறே! இது சரியானு நீயே யோசி!"
அவனைப் பார்த்து அழகாய் இதழ் சுழித்தாள். அந்த இதழ் சுழிப்பில் மயங்கி கிரங்கி தொலைந்து போகத்தான் அவனுக்கும் ஆசை. ஆனால் என்ன செய்வது அவளை தன் வெற்றி என்று மட்டுமே தானே அவனால் பார்க்க முடிகிறது. காதலாய் பார்க்க முடியவில்லையே! அப்படியே காதலை வரவழைக்கும் நோக்கோடு நோக்கினால் கூட பெண்ணவளின் செழுமையும், வனப்பும் தானே கண்களுக்குத் தெரிகிறது!!!
மறுநாள் தேவ்வின் வருகைக்கு முன்னரே தயாராக இருந்தாள் அணங்கவள். அவளின் ஆர்வத்தைக் கண்டு வியந்த போதும், அவளிடமே காரணம் வினவினான். அப்போதும் அவளது பதில் மழுப்பலாகத் தான் இருந்தது. முதல் நாளைப் போலவே போஸ் வந்து அவளை பரிசோதித்திட, இன்று தேவ் அனைவரையும் வெளியே காத்திருக்கலாம் என்றுவிட்டான்.
அம்முவின் அறையிலிருந்து வெளியேறியவுடன், "தேவ்.... இன்னைக்கு அவ மீட் பண்ண போறது கமல் ஃபேமிலிய.... சோ நான் பக்கத்துல இருந்தாகனும்" என்றார் போஸ்.
"ப்ளான்ல ஒரு சின்ன ச்சேஞ்ச் டாக்டர்... அவ இப்போ மீட் பண்ண போறது கமல் ஃபேமிலிய இல்லே.... கமலை" என்று கூறி இகழ்ச்சியாகச் சிரித்தான்.
"இது..... இது அவளுக்கு..... அம்முவோட ஹெல்த்-க்கு....." என்று எப்படிக் கூறுவது என்று தெரியாமல் வார்த்தைகளைத் தேடினார்.
"ரிலாக்ஸ் டாக்டர்.... அவ தான் இப்போ கமலை மறந்துட்டால்ல.... சோ அவளுக்கு ஒன்னும் ஆகாது.... ஆனா அந்த கமலுக்கு ஏதாவது ஆகனும்..... ஹனி அவனை மறந்துட்டனதுமே அவனோட ஆட்டம்லா அடங்கிடுச்சு.... இப்போ அதை நேர்ல பாத்து அவன் சாகனும்... அணு அணுவா துடிச்சு துடிச்சு சாகனும்..." என்று பற்களைக் கடித்து வன்மமாக உரைத்தான்.
அதற்கு மேல் போஸ் ஒன்றும் கூறாமல் அவனுடன் கமலின் அறைக்குச் சென்றார். தேவ்வின் திட்டப்படி கமல் அம்முவின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட, அகிலனுடன், தேவ், ஜெயதர்மன், போஸ் மூவரும் இருந்து கொண்டனர். இரண்டு அறையிலும் திரை ஒளிர்ந்தது. அம்மு கமலை மறந்து அவனை துடிக்கவிடும் காட்சியை அவன் குடும்பமும் கண்டு வருந்தட்டும் என்றே நினைத்தான் தேவ்.
இங்கே அம்முவின் அறை வாசலில் நின்றிருந்த கமல் கதவைத் திறக்கவே கடும் போராட்டத்திற்கு ஆயத்தமானான்.
உள்ளே நுழையும் போதே தன்னவளை எதிர்க் கொள்ளும் சக்தியின்றி தலை குனிந்தே தான் அவள் முன்னால் சென்று நின்றான். அம்முவிடமும் நிசப்தம், எந்த வித அசைவும் இன்றி அவனைப் பார்த்தாள்.
அவளது எழில் முகத்தை தன் இதயத்தில் இருத்திக் கொள்ளும் நோக்கில் அவளை ஏறிட்டான். அதற்குள் அவனது கண்ணீர் தன் இருப்பைக் காண்பித்து அவன் கண்களுக்கும் முந்திக்கொண்டு அவளைக் கண்டிருந்தது.
முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பி கையை உயர்த்தி கைசட்டையில் கண்களை துடைத்துவிட்டு மீண்டும் அவளை ஏறிட்டான். அவளது வலது கண்ணும் கண்ணீர் சொறிக்க, தானாக அவனது கண்கள் மீண்டும் கலங்கி நின்றன.
அம்மு எனும் சிலை உயிர் பெற்றது போல் சுற்றம் உணர்ந்து நடப்புக்கு வந்தவள், கண்ணீரை சுண்டி விட்டு, மானசீகமாக தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டு, "யார் நீங்க?" என்றாள்.
அந்த ஒற்றைக் கேள்வியில் மொத்தமாய் உடைந்து போனான் வாரணம் ஆயிரம் பலம் படைத்தான்.
யாரோ போல் தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாமல் மறுபுறம் திரும்பி நின்றான். "உங்கள தான் கேக்குறேன்! யார் நீங்க? இங்கே எதுக்கு வந்திங்க?"
சட்டென இரண்டு எட்டு எடுத்து வைத்தவனை மீண்டும் நிறுத்தியது அவளது குரல். "டேய் தடியா..... மலமாடு.... பதில் சொல்லிட்டுப் போடா"
அதற்கு மேல் தாங்காதவனாய், நொடியில் அவளை நெருங்கி, "முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோ டி" என்றுரைத்து வன்மையாக அவளது இதழ்களை முற்றுகையிட்டிருந்தான். அவனது இதழ்கள் பொருந்தும் நொடியில் அவனது செயலை ஊகித்தவளின் இதழ்களும் "கண்ணா" என்றுரைத்திருந்தது.
அதுவும் அவனது காதில் விழவே இதழ் தீண்டல் மேலும் மேலும் வலுப்பெற்றது, அவனது பிரிவின் துயரில்.... அவனது முத்தம் மூளை வரை சென்று அவளைத் தீண்ட, நொடியில் ரத்த ஓட்டம் நின்றது அவளுக்கு... இதழ் தீண்டல் தீரும் முன்பே மயக்கம் அடைந்திருந்தாள் கண்ணனின் கோதையவள்.

சீண்டல் தொடரும்.