அடுத்து வந்த நாட்களில் நிமிட நேரம் கூட நிற்க நேரமில்லாமல், இருக்கும் அனைவரோடும் சேர்த்து வீட்டையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் விமலா. எப்போதடா என்று எதிர்பார்த்திருந்த கமலின் திருமணம்! அதுவும் அவன் தாலி கட்டி மனைவியாக அவ்வில்லம் அழைத்து வந்த அமுதினியோடு! பற்றாகுறைக்கு தன் தமையன் மகளே தன் மருமகள்! அதுமட்டுமல்லாமல் தன் தமையன் மகன் அகிலன் திருமணம் கூட தன் இல்லத்தில் தான் நடந்தேறப் போகிறது! என வரிசையாக அடுக்கி நின்றன அவரது சந்தோஷத்திற்கான காரணங்கள்.
திருமணத்திற்கு வந்திருந்த ராம்கிரண் அவர்களது குடும்பம், அம்முவின் குடும்பம், மற்றும் ஆரவ்கிரணின் மாமனார் குடும்பம் என வீடு நிறைய ஆட்கள் கூடியிருக்க, கல்யாணக் கலை கட்டியிருந்தது கமலின் இல்லம்.
வழக்கம் போல் விமலாவின் விருப்பம் அறிந்திருந்த நேத்ராவும், மிதுன்யாவும் சமையல் வேலையில் உதவிக்கு ஆட்கள் இருக்க, விருந்தினரை கவனிக்கும் பொறுப்பை தாங்களே எடுத்துக் கொண்டனர்.
காலை உணவிற்கு மொத்த குடும்பமும் ஒரே நேரம் உணவு மேசையில் அமர முடியாததால் தரையில் விரிப்பு விரித்து பந்தி பரிமாறுவது போல் பரிமாறினர். தரையில் அமர முடியாத பெரியவர்கள் மட்டும் உணவு மேசையில் அமர்ந்து கொள்ள, நேத்ரா தான் பெரியவர்களுக்கு பரிமாறினாள். அதில் அம்முவின் தாத்தாவும் அடக்கம்.
அவர் நிச்சயம் தான் பரிமாறுவதை விரும்பமாட்டார் என்று தோன்றினாலும், விருந்தினர் என்று கருதியேனும் தன் கடமையைச் செய்வோம் என்று நினைத்து அவருக்கும் பரிமாறினாள். அது அவளது முகத்தில் பிரதிபலித்ததோ என்னவோ! அவரும் உணவில் கை வைக்காமல் அமர்ந்திருந்தார்.
அது அவள் மனதை உறுத்த, அவரின் அருகே சட்னி பரிமாறுவது போல் வந்தவள், அவரது இருக்கையின் அருகே மண்டியிட்டு அமர்ந்து, "நீங்க அல்ரெடி ஸுகர் டேப்லெட் போட்டுட்டிங்க... இன்னும் 15 மினிட்ஸ்ல ப்ரேக்பாஸ்ட் கண்டிப்பா சாப்பிடனும்.... சோ நான் பரிமாறினதைத் தான் சாப்பிடனும்னு கட்டாயம் இல்லை. நீங்க ரூமுக்கு போங்க... மிதுன் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவா" என்று கூறி அவரது தட்டில் கை வைக்க, பட்டென அவள் கையில் அடி வைத்தார்.
"யார் நீ!!! ம்ம்ம்?... யார் நீ? நான் இந்த நேரத்துக்கு தான் சாப்பிடனும்... இந்த நேரத்துக்கு தான் தூங்கனும்னு எனக்கே ஆர்டர் போடுறே!!!"
அவரது பேச்சு அங்கே அனைவருக்குமே கோபமூட்டியது. முக்கியமாக ராமின் குடும்பத்தாருக்கு... தங்கள் வீட்டு குலவிளக்கை, இன்னொருவர் அவமதிப்பதா! என்ற கோபம். ராம் மட்டும் நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்திட, அவனது கிழத்தி தாத்தாவுடன் ஊடலில் இறங்கியிருந்தாள்.
"இப்படி முகத்தை விரப்பா வெச்சிட்டு கேட்டா... நாங்க பயந்திடுவோமா! காது நல்லா கேட்கும் தானே! நானும் உங்க பேத்தி தான். தாத்தா... தாத்தானு அழைச்சி என் உரிமைய எனக்கும் காட்ட தெரியும்... ஏதோ வயசானவர் ஜெயிச்சா ஜெயிச்சுட்டு போறாரேனு பரிதாபப்பட்டு தான் இத்தனை நாள் சும்மாவிட்டேன்." என்று இதழ்கடை சிரிப்போடு கூறினாள்.
பழனிவேல் அவளை ஊடுறுவும் பார்வை பார்க்க, அவரது முறுக்கு மீசையை இரண்டு கைகளாலும் திருகிவிட்டபடி, "இந்த மீசை தான் வானத்தை பார்த்து கம்பீரமா நிக்குது. ஆனா கண்ணு தப்புக்கு மன்னிப்பு கேட்க முடியாம தலைகுனிஞ்சு நிக்குது... அது தேவையில்லை தாத்தா... நீங்க எப்பவும் எங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தலை தூக்கி நில்லுங்க..." என்று அவரை சரியாக ஊகித்துக் கூறியதோடு, தாடையைப் பிடித்து அவரது தலையை நிமிர்த்திவிட்டாள்.
தன்னை சரியாக கண்டு கொண்டுவிட்டாள் என்ற பூரிப்பிலும், அதே நேரம் அவள் கூறியது போல் குற்ற உணர்விலும், தலை குனிந்து சிரித்தபடி, உள்ளங்கையை பிசைந்து கொண்டு, "சரி தான்... வயோதிகம் என்னை இறங்கிப் போக விடலே... மன்னிப்பு கேட்க வெட்டி வீராப்பும் அனுமதிக்கலே... ஏதோ ஒரு விதத்துல உனக்காக இந்த குடும்பம் என்னை சபிச்சாவாச்சும் பண்ணின பாவம் தீருமானு பாக்குறேன்." என்று தான் அப்படி பேசியதன் காரணத்தைக் கூறினார்.
"அதுக்கு அவசியமே இல்லே தாத்தா... நீங்க தருவை உங்க பேத்தியா ஏத்துக்கிட்டாலே போதும்" என்று அவரது சங்கடத்தைத் தீர்க்க மனைவிக்குத் துணையாக வந்து நின்றான் ராம்.
பழனியும் மலர்ந்த முகமாக கண்களில் கண்ணீர் கோர்த்திட, "அவளும் என் பேத்தி தான்... என் மூத்த பேத்தி" என்றார்.
அடுத்த நிமிடமே அங்கிருந்த இளவட்டங்கள் அனைத்தையும் பழனிவேலைச் சூழ்ந்து கொண்டனர். ஈறாறு உருவங்கள் இணைந்து சிங்கத்தின் பிடரி போல் பழனியின் முகத்தோடு தங்கள் மலர்ந்த முகத்தை வைத்து சுயமிகள் எடுத்துக் கொண்டனர். நடுநாயகமாக அமர்ந்திருந்த பழனியின் முகத்தில் அந்த கம்பீரம் சற்றும் குறையாமல் மிளிர்ந்தது.
ஒரு மங்கள நன்னாளில் சுற்றம் சூழ அமுதினி எனும் நல்லாளின் திருமண வைபவம் கமலக்கண்ணன் எனும் அவள் மனம் கவர் காளையவனுடன் இனிதே நடந்தது. அடுத்த முகூர்த்தத்திலேயே அகிலன் மற்றும் ரூபினியின் திருமணமும் அதே நாளில் சிறப்பாகவே நடந்தேறியது.
இரவு சடங்குகள் அனைத்தும் கமலின் இல்லத்தில் நடத்த முடிவேடுத்திருந்தனர் பெரியோர்கள். அகிலன் மற்றும் ரூபினியின் சடங்குகளும் கூட,...
இடையே Dr.போஸ்,அம்முவின் உடல் நிலைக்கு இந்த வைபவம் மட்டும் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வைத்துக் கொள்ளலாமே என்று கூறி கமல் அம்முவின் சடங்கை மட்டும் நிறுத்தி வைத்தார்.
கமலோ ரூபினி அலங்கரிக்கப்படுவதைக் கண்டும், அகிலனின் அறையில் செய்யப்படும் ஏற்பாடுகளைக் கண்டும் ஏக்கப்பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அதுவும் அம்முவின் பார்வைக்கு நேரே நின்று அவள் காதில் விழும்படியாகவே தான் புலம்பினான்.
அபியும் அவ்வபோது கமலை கடுப்பேற்ற வேண்டி, படுக்கை அலங்காரங்களில் கூடுதல் கவனம் எடுத்து அழகு படுத்தினான். கமல் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் அவனை மொட்டை மாடிக்கு விரட்டிவிட்டனர்.
இரவில் நிலவைப் பார்த்து "நீயும் ஒன்டிகட்ட, நானும் ஒன்டிகட்ட.... உனக்கும் உன் காதலன் உன் கூட இல்லே, எனக்கும் என் காதலி என்கூட இல்லே... பேசாம நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஹனிமூன் போவோமா?" என்று புலம்பியவனைப் பார்த்து அந்த நிலவே பரிகாசம் செய்வது போல் தோன்றியது அவனுக்கு.
"சிரிக்கிறேயா நீ!!! இரு இரு என் பொண்டாட்டி கூட ஹனிமூன்னுக்கு அந்த மூனுக்கே வர்ரேன்..." என்று நிலவைப் பார்த்தை வக்கனை செய்தான்.
தன் பின்னாலிருந்து செருமல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தவன் கண்கள் தன்னால் மிளிர்ந்தது. புதுமணப் பொலிவுடன், பிறைநுதலில் செஞ்சாந்துடன், தளதளக்கும் மெல்லிய பட்டு சேலையில், மணமணக்கும் மஞ்சள் கயிறு கழுத்தில் பளபளக்க, அழகோவியமாய் வந்து நின்றிருந்தாள் அவனது சரிபாதி.
"ஹேய் பொண்டாட்டி!!!! புருஷனை விட்டுட்டு தனியா தூங்க முடியலேயா?" என்றான் அவளை சீண்டும் விதமாக...
"அதெல்லாம் ஒன்னு இல்லே... உங்களுக்கு அவ்ளோ சீன்லாம் இல்லே"
"பார்றா... தாலி கட்டவும் மரியாதைலாம் வேற லெவல்ல இருக்கு..."
தான் மரியாதை கொடுத்துப் பேசியதை அவன் சுட்டிக்காட்டிட, வெட்கத்தில் அவளது முகம் சிவந்தது.
"ஹேய்..... உனக்கு வெட்கப்படவுலாம் தெரியுமா?"
விட்டால் மேலும் மேலும் தன்னை சீண்டிக் கொண்டே தான் இருப்பான் என்று உணர்ந்து, "ஏன் நான் வெட்கப்பட்டு நீங்க பார்த்தது இல்லேயா!!!" என்றால் பழைய அம்முவாக மாறி.
"பாத்திருக்கேன் தான்... ஆனா இன்னைக்கு இந்த வெட்கம் ரெம்ப புதுசா இருக்கு... அப்படியே அள்ளி அணைச்சுக்கனுப் போல..."
"நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலேயே!" என்று செந்தாமரையாய் மலர்ந்த முகத்தை அவனிடமிருந்து மறைக்க சிரமப்பட்டு சிரம் தாழ்த்தி உள்ளே சென்ற குரலில் உரைத்தாள்.
"அப்படினா இப்போ கிட்ட வந்து கிஸ் பண்ணினா மயக்கம் போடமாட்டே தானே!" என்றான் அதே குரலில் அவளை கேலி செய்வது போல்.
தலை குனிந்த படி இடவலமாக தலையசைத்தவளின் அருகே சென்று நின்றான். அவனது அணைப்பே எதிர்பார்த்து தன் கால்களுக்கு வலுசேர்த்து மனதையும் உடலையும் திடம் ஏற்றி, கண்களை மூடி 'கடவுளே மயக்கம் வந்திடக் கூடாது' என்று மனதிற்குள் பிரார்த்தித்து நின்றிருந்தவளின் உச்சி வகிட்டில் முத்தமிட்டு, அவளது கன்னத்தை தான் கைகளில் தாங்கி தன்னைக் காணச் செய்து,
"நான் சொல்லி தான் டாக்டர் இன்னைக்கு நைட் ரிட்சுவல்ஸை வேண்டாம் சொன்னாரு..." என்றான் அவளது கண்களை நேராகப் பார்த்தபடி...
உண்மை உணர்ந்து சற்றே அதிர்ந்து "ஏன் கண்ணா? நான் அன்ஃபிட்-னு என்னை அவாய்ட் பண்றிங்களா?" என்றாள் வலி நிறைந்த குரலில்.
அதற்கும் சிரித்தபடி இடவலமாக தலையசைத்து, "எனக்கு என் பொண்டாட்டிய பக்கத்துலேயே வெச்சுகிட்டு இன்னும் நிறைய லவ் பண்ணனும்... அவ லவ்வை ஃபுல்லா அனுபவிச்சிட்டு அப்பறம் அவளை........." என்று சொல்லாமல் நிறுத்த, தொலைந்திருந்த அவளது நாணம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
நாணத்தில் தலைகுனிந்தவளை, அவனும் சிரம் குனிந்து ரசித்திட தன் வெட்கத்தை மறைக்க அவனது திண்ணிய மார்பையே மறைவிடமாகவும், அவனது ஆடையை கவசமாகவும் பயன்படுத்தி தன்னை புதைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் இருவரும் அந்த மோனநிலையின் இனிமையை சுகித்திட, பின் அவளே அவனை விட்டு விலகி நின்றாள். அதனையும் தடுக்காமல் கைகளை மட்டும் கோர்த்துக் கொண்ட படி தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டான் அவன்.
"நான் உண்மைய தெரிஞ்சுக்கிற அளவுக்கு ஃபிட் ஆகிடேனா கண்ணா?"
அவளது இந்த திடீர் கேள்வி ஒரு நொடி அவனை உரையச் செய்தது. அமைதியாக நிற்பவனின் வதனம் தொட்டு திருப்பி,
"தப்பு செய்யிறவங்க கடவுள் பார்வையில இருந்து தப்ப முடியாது எவ்வளவு உண்மையோ அதே போல இந்த டுவென்டி ஃபஸ்ட் சென்ட்சுவரில மீடியாகிட்ட இருந்தும் தப்ப முடியாதுல..." என்றதோடு வலையொளியில் தான் பார்த்த காணொளியை அவனிடம் காண்பித்தாள்.
அதில் 'கேரளத்தில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக தன் தந்தையை வைத்து மூளை அறுவை சிகிச்சை ஆராய்ச்சி நடத்திய மருத்துவர், தந்தையின் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனநிலை பாதிப்பிற்கு ஆளாகினார்'. என்ற செய்தி ஒளிபரப்பாக கமலின் முகம் மேலும் கலவரம் அடைந்தது. இருந்தும் அதனை வெளிப்படுத்தாமல்,
"ஏய் லூசு... வ்யூஸ்-காக பல சேனல்ஸ் ஏதாவது ஒரு நியூஸ் போடத் தான் செய்வாங்க.... ஏதோ நேர்ல பார்த்த மாதிரியே பேசுவாங்க... அதை போய் உண்மைனு நம்பிகிட்டு..." என்றான் எதுவுமே நடவாதது போல்.
"அப்போ உண்மை என்னனு நீ சொல்லு கண்ணா... நான் அவங்களை நம்பல... உன்னை நம்புறேன்" என்று அவன் நேத்திரம் கண்டு உரைத்தவளிடம் அவனால் எதையும் மறைக்க முடியாமல் போனது.
ஆனாலும் "அது நமக்கு தேவையில்லாதது டா கண்ணம்மா" என்றான் வாஞ்சையாக...
" நான் இந்த வீடியோவை நாம கேரளால இருந்து வந்த ரெண்டு நாளிலேயே பார்த்துட்டேன். ஆனா நீ மட்டும் தான் என்கிட்ட உண்மைய சொல்லுவேனு தான் இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் ஒரு வார்த்தை கூட கேட்கலே... ஆனா நீயும் சொல்லமாட்டேல..."
அம்முவின் பொழிவிழந்த முகம், இத்தனை நாள் இந்த செய்தியைப் பற்றி சிந்தித்து அவள் எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பாள் என்று அவனுக்கு உரைத்திட, தேவ் பற்றிய அனைத்தையும் கூறினான்.
கடைசியாக இவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன் போஸ்-ஸின் உதவியோடு அடியாட்களை அனுப்பி வைத்ததும் போலீஸ் விசாரணை என்று வந்தால் அவர்களும் தங்கள் திட்டப்படியே கூற வேண்டும் என்பதற்காக போஸ் அவர்களிடம் "இதுவும் தோல்வி தான். நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க... இதுக்கு மேலே இங்கே இருந்தா போலீஸ் கேஸ் ஆகிவிடும். எதுக்கும் வெளியே மூச்சுவிடாதிங்க" என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார்.
"உன்னை வெச்சு எக்ஸ்பெரிமன்ட் பண்ண நெனச்சவனுக்கு அந்த வலியை காட்டனும் நெனச்சேன். அவங்க அப்பாவுக்கு பண்ணனும்னு சொன்னதும் துடிச்சான்... கதறினான்..."
"இதுல உன் காதலை நான் உணர்வேன்னு நெனைக்கிறேயா கமல்.... நானும் ஒரு டாக்டர் தான்.... எனக்காக ஒரு உயிர் போனதை என்னால எப்படி ஏத்துக்க முடியும் சொல்லு"
அவளது அழைப்பு கமல் என்று மாறியதாலேயே அவன் மனம் நொருங்கிப்போனது.
"இந்த பாவத்தை எங்கே போய் கழுவுறது கமல்? ஏதோ சிலருக்கு தான் உயிரோட மதிப்பு தெரியாம ரேட் ஃபிக்ஸ் பண்ணி மருத்துவத்தை வியாபாரம் ஆக்குறாங்க.... இப்போ நீங்க பண்ணிருக்கிறது அதைவிட பெரிய பாவம்..."
"நாங்க வரலாமா?" என்று இருவருக்கும் பின்னால் குரல் கேட்க இருவரும் ஒன்றாக திரும்பிப் பார்த்தனர். அங்கே நின்றிருந்த இருவரையும் கண்டு அம்மு விழி விரித்து பேயறைந்தார் போல் முழித்துக் கொண்டிருந்தாள்.
"சாரி கமல் ரிஷப்ஷன், மேரேஜ் ரெண்டுக்கும் சரியான நேரத்துக்கு வர முடியலே! நான் இல்லாம அப்பாவும் தனியா போகலேனு சொல்லிட்டார்... கங்கிராட்ஸ்... ஹேய் அம்மு ஏன் இப்படி பாக்குறே!"
தானாகவே அவளது இதழ்கள் "நத்திங் டாக்டர் சார்" என்றது, சட்டென அவளை அணைத்துத் கொண்டான் தேவ்.
"தேங்க்ஸ் அம்மு... உன்கூட பழகின இந்த டாக்டர்-ஆ மட்டும் தான் இப்போ இருக்க விரும்புறேன். முன்னே இருந்த தேவ்-ஆ இல்லை..." என்று அவளை விட்டுப் பிரிந்து நின்று "ஒரு டாக்டர் எப்படி இருக்கணும்னு போஸ் சாரை பார்த்தும் சங்கர் சாரை பார்த்தும் இப்போ உன்னை பார்த்தும் கத்துக்கிட்டேன்..." என்றான்.
மேலும் சற்று நேரம் இருவரும் பேசிவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்ல அம்மு கமலை குழப்பமாகப் பார்த்தாள்.
"என்ன தான் டா நடந்துச்சு.... அந்த நியூஸ் தான் என்ன?"
"நீ கடைசி வரை வீடியோ பார்த்திருந்தா தெரிஞ்சு இருக்கும்... அரையும் குறையுமா பார்த்துட்டு என் மேல பாஞ்சா நான் என்ன பண்றது"
"இப்போவாச்சும் முழுசா சொல்லித் தொலை எருமை!!!"
"அவங்க அப்பாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆப்ரேஷன் பண்ணிற மாதிரியும் அவர் இறந்து போற மாதிரியும் அதை அவன் கண்ணாடி க்ளாஸ்க்கு அந்த பக்கம் நின்னு பாக்குற மாதிரியும் தான் செட் பண்ணினோம்... தேவ் பயங்கரமா புலம்ப ஆரம்பிச்சுட்டான். நான் செய்து தப்பு, என் அப்பா சாவுக்கு நானே காரணமாகிட்டேன்னு.... அப்பறம் அவன் கிட்ட உண்மைய சொல்லி அவங்க அப்பா உயிரோட தான் இருக்காருனு சொல்லவும் அவன் டோட்டலா அமைதியாகிட்டான். அவங்க அப்பாவைப் பார்த்து கூட பேச நினைக்கலே... என்னு கேட்டதுக்கு அவனாவே கவுன்சிலிங் போறேன்னு சொன்னான். அதைத் தான் இந்த மீடியா தலைப்பு பக்கத்துல மனநிலை பாதிப்புனு மென்சன் பண்ணிருக்கு" என்று மொத்தமாக கூறி முடித்தான்.
"சாரி கண்ணா" என்று குலைந்தபடி அவனது சட்டை பட்டனைத் திருகினாள்.
அவள் கையை தட்டிவிட்டு "ஒன்னும் வேணாம் போடி..." என்று விரட்டினான்.
இப்போது தன் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் விரல்களை மட்டும் கோர்த்து கட்டிக்கொண்டு வினவினாள்.
"வேணாம் இதுக்கு மேல டேஞ்சர் ஆகிடும்.... நீ.... நீ மொதோ கீழ போ"
இப்போது தங்கள் இருவருக்குமான இடைவெளியை குறைத்து அவனை நெருங்கி நின்று அவன் கழுத்தில் கை வைத்தபடியே அவளது புஜங்களோடு சேர்த்து இருக்கி நின்றாள். "டேஞ்சரா என்ன ஆகும் கண்ணா?"
"ஏய் இம்சை.... நல்லா கும்முனு இருந்துகிட்டு இவ்ளோ கிட்டக்கநின்னு என்னை சோதிக்காதே டி... போடி அங்கிட்டு" என்று கிரக்கமாகக் கூறி விலக்க முயன்றான்.
இப்போது தன் கால் கட்டை விரலால் அவனது பாதங்களை வறுடிக் கொடுத்து, அவனது கால்களின் மேல் ஏறி நின்று தன் நெருக்கத்தை இன்னும் கொஞ்சம் கூட்டினாள். இதழ்கள் இரண்டும் உரசிக்கொள்ளும் நெருக்கத்தில் இருக்க, கமலின் கைகள் தானாக அம்முவின் இடையை வளைத்துப் பிடித்திருந்தது.
இதனைத் தானே அவனும் எதிர்பார்த்து திருமணத்திற்கு அவசரப்படுத்தினான். அவள் தன்னை அளவாக கொடுக்க முன் வந்தால் அவளது மூளைக்கு எந்த பாதிப்பும் நிகழாது என்ற எண்ணத்தில் தானே அவளை மனைவியாக்கி தன் இல்லம் அழைத்து வர துடித்தான்.
"டேய்......." என்ற அலரலை அடுத்து "என்னடா நடக்குது இங்கே!" என்ற வயிற்றெரிச்சல் குரலில் இருவரும் தனித்தனியாக பிரிந்து நின்றனர்.
"நீ ஏதோ தனியா படுத்திருப்பேனு என் பொண்டாட்டி... அதான் உன் ஃப்ரெண்ட் என்னை பிராண்டி ஒரு நிமிஷம் கூட பெட்ல படுக்கவிடாம தலையணை போர்வையோட விரட்டிவிட்டாளேனு கடுப்புல இங்கே வந்து.... நீங்க மொட்டமாடில.... வெட்டவெளில என்னடா பண்ணிட்டு இருக்கிங்க!!" என்ற அபியின் கேள்வியில் அம்மு அங்கே நிற்க முடியாமல் ஓடிச் சென்றாள்.
கமலோ அதே கடுப்பில் "அதான் பார்த்தேல... சைலண்ட்டா அந்த குட்டிச்சாத்தான்கிட்ட போய் எனக்கு துணைக்கு ஆள் இருக்குனு சொல்லிட்டு உன் ரூம்லயே படுத்திருக்க வேண்டி தானே! வந்துட்டான் தலையணைய தூக்கிட்டு" என்று சிடுசிடுத்தான்
"அட ஆமால... சரிடா பங்காளி நீ கன்டினியூ பண்ணு நான் போறேன்"
அபியின் கையைப் பிடித்து "எங்கே போற.... அவளை விரட்டி விட்டுட்டு நீ எங்கே எஸ் ஆகுறே.... மூடிட்டு வந்து படு" என்று தடுத்திட, ஆளுக்கு ஒரு தலையணையுடன் படுத்தனர்.
பாதி படிகள் வரை இறங்கிக் கொண்டிருந்த அம்மு எதிரில் வருபவர்தளைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். அதில் முதலில் வரிசை கட்டி நின்றிருந்தது பவன் தான். "உனக்கென்ன குபீர்னு அப்படி ஒரு சிரிப்பு!!!"
"அது இல்லே பவன் அத்தான். அல்ரெடி ஒரு பலியாடு மாடிக்கு வந்தாச்சு.... அதான்"
தலையைத் தொங்கப்போட்டுச் சென்ற பவனைத் தொடர்ந்து, ராம் மற்றும் ஆரவ் மொட்டை மாடி நோக்கிச் சென்றனர்.
கீழே கூடத்தில் பெண்கள் கூட்டம் குழுமி இருக்க, அம்மு அவர்களுடன் இணைந்து கொண்டாள். அகிலன் ரூபினி தம்பதியினரை நல்ல நேரம் பார்த்து அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு பெண்களும் மொட்டைமாடி சென்றுவிட அதன் பிறகு அங்கு பாட்டும் கூச்சலுமாகத் தான் இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் முதலிரவு அறையைத் துறந்து ரூபினியும், அகிலனும் அந்த கூட்டத்தோடு ஐக்கியம் ஆகிட அவர்களது சத்தம் அறையில் முடங்கிக் கிடந்த பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரி இறைத்தது.
என்றென்றும் அன்பு நிறைந்த குடும்பமாய் அவர்களது வாழ்வு இதே போல் இனிதே பயணிக்கட்டும் என்ற ஆசியுடன் நாமும் விடை பெறுவோம்....
வழக்கம் போல் என் பிற கதைகளுக்கு ஆதரவு அளித்தது போல் இந்த கதைக்கும் வாசகர்கள் நீங்க தந்த ஆதரவிற்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்!!!

சுபம்.