• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீதாயணம் - ஓர் தந்தையின் பார்வையில் -4

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520
4.ரகு குல வீரன்.

விஸ்வமிதிர மாமுனிவர்
தன் இரு சீடர்களுடன்
தன் ராஜ்ஜிய எல்லையில்
வந்தது அறிந்து பணிவுடன்
மன்னவன் விரைந்தனன்
அவர் இருப்பிடம் நோக்கி.
முனிவர் கங்கை கரையோரம் வீற்றிருக்க
அவர் தன் இரு சீடர்களும்
பணிவாய் பணிவிடை
செய்திருந்தனர்.

முனிவரை வணங்கி நின்ற
மன்னவன் விழிகள்
சீடர்களை கண்டபின்
விட்டு அகல மறுத்தது.
முனிவருக்கு தரவேண்டிய
மரியாதை கருதி ,
அடுத்துவரும் சுயம்வர வைபவத்தில்
கலந்து சிறப்பிக்க அழைப்பு
விடுத்தனன் மன்னவன்
முன்னாள் ராஜரிஷி
இந்நாள் ராஜரிஷிக்கு ,
தம் சீடர்களாம்
தயரதர் புத்திரர்களை
தக்க உரையுடன்
அறிமுகம் செய்வித்தார்.

ராஜரிஷி ஜனகனே !
இவ்விருவரும் எம் சீடர்கள்
ரகு வம்சத்தின் வாரிசுகள்!
இக்ஷவாகு வம்சத்து இளவரசர்கள்!
அரிச்சந்திரன் அரியணைக்கு உற்றவர்கள்!
பகீரதன்வழி வந்தவர்கள்
தாடகையை வதம் செய்து
தரணி நலம் காத்த வில்லாளன்
அகலிகை சாபம் நீக்கி
மோட்சம் தந்த தயாளன்
தசரதரின் மூத்த மைந்தன்
கோசலைப் பெற்ற கோமகன்
ரகு குலம் சிறக்க வந்த ராமன்!

அடுத்து இருப்பவன் இளையவன்
சுமித்திரை மணிவயிறு வாய்த்தவன்
ராமனின் இளவல் இலக்குவன் !

சகல அம்சங்களும் கொண்ட
ஆகிருதியான தோற்றம்
ஒளிபொருந்திய கண்கள்
மென்னகை தவழும் முகம்
கனிந்து,பணிந்த பாங்கு
கம்பீரமான அழகு
நேர்கொண்ட பார்வை
காந்தமென கவர்ந்த தேஜஸ்
தெய்வீக சன்னதியில்
நின்ற நிலையில் தனை மறந்தவர்
ராமபிரான் தோற்றத்தை
தன் நயனகளில் நிறைத்திருந்தார் .

பின்னர் கன்னிபெண்ணின்
தகப்பனார் ஆனார் ஜனகர்.
வாலிப பருவ நற்குல இளவரசர்களை
கண்டவுடன் தன் மகள்
ஜானகிக்கு ஏற்ற நாயகன் இவனோ
என கவனமாய் ஆராய்ந்தார்.
மரியாதை முகமன் கூறி சுயம்வரம்
வந்தடைய வேண்டினார்!


தசரதர் புத்திரர்களை பேட்டி கண்டு
அரண்மனை திரும்பினார் ஜனகர்,
சுயம்வர ஏற்பாடுகளை
திருப்தியுடன் நோக்கி விட்டு,
தன் மகள்களுடன் உரையாட

அந்தப் புறம் அடைந்தார்.
 
Top