• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடும் நிலவு -2

kkp44

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
8
3
3
Tamilnadu
சுடும் நிலவு -2


"பாலா ..."மதுவை, அடிப்பதற்காக துரத்திக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக, நித்யாவின் வருகையை கண்டு ஓட்டத்தை நிறுத்தினாரகள்.

நித்யாவை கண்டவுடன், "மதுவோ..." அத்தை என்று துள்ளி குதித்து மகிழ்வோடு கட்டியணைக்க,
"பாலாவும்...." வாங்க அத்தை , வாங்க மாமா , ஹாய்.... !"ஆகாஷ் "என்று அழைக்கிறான்.

அவளின் வருகையை எதிர்பார்க்காத கதிரவனும்," நித்தி"....! வாம்மா ,"முரளி " வா மச்சான் ...."ஆகாஷ் "வாப்பா ...,என்று மகிழ்ச்சியோடு அழைக்கிறார்.

ஆம்.. "நித்யா.."கதிரவனின் உடன் பிறந்த ஒரே தங்கை, "முரளி.." கல்லூரி காலத்தில் இருந்து நட்பு ."முரளி, மற்றும் கதிரவன்" இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து தான் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தனர். முரளிக்கு தனது தங்கையை திருமணம் முடித்து அனைவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்து விட்டனர்.

நித்யாவை கண்டவுடன் பிந்துவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை .ஓடி வந்து "நித்தி.." என்று அனைத்து கண்ணத்தில் முத்தம் பதித்து உள்ளே அழைக்கிறாள்.

என்ன..? நித்தி சொல்லக்கூட இல்லை திடீர்னு வந்து இருக்க ??,வாட் அ சர்ப்ரைஸ் டா? என்று பிந்து கேட்க,

நம்ப வீட்டுக்கு வருவதற்கு சொல்லிவிட்டு வரனுமா அண்ணி‌ என்று நித்தி கூறிக்கொண்டு இருக்கும் போதே," காயு" ஹாய்...! சித்தி வாங்க... வாங்க ....என்று வரவேற்று, "ஆகாஷை" பார்த்தவள், வாடா புது மாப்பிள்ளை என்று சிரித்துக் கொண்டே கூற," ஆகாஷ் "வெட்கத்தில் மெலிந்த புன்னகை செய்கிறான்.

அண்ணி..! இவரோட சித்தப்பா வந்திருந்தாங்கல இன்று தான் சிங்கப்பூர் கிளம்பினாங்க ,நாங்க அவர்களை" சென்ட் ஆப் " செய்ய வந்தோம் இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வரலைன்னா நீங்க என்ன சும்மாவா விடுவீங்க ??என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் நித்தி..!

ஆமாண்டா...! உனக்கு அந்த பயம் இருக்கணும் என்னை தாண்டி போயிடுவியா? நீ ,என்னை பார்க்காமல் என்று பிந்து கேள்வி கேட்க

அதுக்கு தான் அண்ணி.. ஓடி வந்துட்டேன். அண்ணனை கூட பார்க்காமல் போயிட்டா என்ன கண்டுக்க மாட்டாரு, ஆனால் உங்களை பார்க்காமல் போனா அவ்வளவுதான் என்று நித்தி கூறி முடிக்கும் முன்பே
அந்த பயம் இருக்கணும் நித்தி... என்று பிந்து நித்தியாவின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு கூறுகிறாள்.

சரி...! எல்லாரும், இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி? "மது... "நீ போய் எல்லாருக்கும் காபி கொண்டு வாம்மா. என்று பிந்து தன் மகளை பார்த்து கூறுகிறாள்..

ம்ம் ம்ம்...இதோ ..! உடனே எல்லாருக்கும் ஸ்ட்ராங்கா பில்டர் காபி கொண்டு வரேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகரும் முன்பே,நித்தி ..."மது நில்லு மா.."!

இப்போ .. தான் ஏர்போர்ட்ல காபி சாப்பிட்டு வந்தோம். அதனால காபி வேண்டாம் எல்லாருமே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் என்று நித்தி கூறவே

ஓகே..டா..மா.. உன் விருப்பம் என்று பிந்து கூறுகிறாள்.

அத்தை..! என்ன டிபன் செய்யலாம் என்று "காயு" கேட்க... "அண்ணி.." பாஸ்தா நான் பன்றேன் "ஆகாஷ்க்கு" அதான் பிடிக்கும் என்று "மது" கூறுகிறாள்..

உடனே , நித்தி..! உன் ஆகாஷ்க்கு பிடிச்ச டிஷ் மட்டும் செய்ற ?அப்போ நாங்களெல்லாம் சாப்பிட வேண்டாமா?? என்று மதுவை பார்த்து விளையாட்டாக சலித்து கொண்டே கேட்டவள், பிந்துவின் அருகில் சென்று இன்னிக்கு என் அண்ணி கையால இடியாப்பம் தேங்காய் பால் சாப்பிட போறேன் யாருக்கெல்லாம் வேண்டும் என்று கேட்கிறாள்??

ஆகாஷ்...! ஏன் அம்மா அந்த டிஷ் சூஸ் பண்ணிங்க??

இடியாப்பத்துக்கு பின்னாடி பெரிய கதையே இருக்குடா என்று நித்தி கூறவே,

அப்படியா..! எங்க ?சொல்லுங்க... சொல்லுங்க. .என்று ஆர்வத்தோடு "ஆகாஷ் "கேட்க, அருகில் வந்து ஆவலோடு "மதுவும் ,பாலாவும்" சொல்லுங்க..... சொல்லுங்க..... என்று கேட்டிடவே,

நித்தி...."பிந்துவை" பார்த்து சிரித்துக் கொண்டே அண்ணி..... பசங்க ஆர்வமா கேட்கிறாங்க இடியாப்பக் கதைய சொல்லிடவா??? என்றிகிறாள்

ஏய்....! சும்மா இரு நித்தி... பசங்க விளையாட்டா கேட்கிறாங்க, என்று நாணம் கொண்டவளை விடவில்லை யாரும் அங்கு,

நீங்க சொல்லுங்க சித்தி.. அத்தை வெட்கத்தோடு சிரிப்பதை பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று காயும் ஆராய்ந்து கேட்க,

நித்தியும் சரி சொல்றேன் கேளுங்க .சில வருடங்களுக்கு முன்பு அதாவது என்னுடைய" அண்ணனும், பிந்து அண்ணியும் "எலியும் ,பூனையும், போல் எந்த நேரமும் போட்டி போட்டு சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.என் அண்ணா முதல் முறையாக அமெரிக்கா சென்று வீடு திரும்பிய நாள் அன்று காலை வழக்கத்திற்கு மாறாக "பிந்து அண்ணி " காலையிலேயே வீட்டிற்கு பெரிய அடுக்கு கேரியர் எடுத்துக்கொண்டு திருட்டுப் பூனை போல் மாடி படிகட்டுக்களில் ஏறிக்கொண்டிருந்தாங்க .அண்ணியை பார்த்த நான் ஒன்றும் புரியாமல் பிந்து.. பிந்து... நில்லு ...! நான் இங்கே இருக்கிறேன் என்று சொன்னேன்.. என்னைக் கண்டதும் போலீசிடம் அகப்பட்ட திருடன் போல் திரு....திரு....வென்றுவிழித்த என் அண்ணியோட முகத்தைப் பார்க்கனுமே என்று இழுக்க,

உடனே ஆகாஷ் ஓகே அம்மா நீங்க அத்தைய நேம் சொல்லியா கூப்பிடுவீங்க?? என்று சந்தேகமாய் கேட்க

ஆமாம் டா ..! நானும் உங்க அத்தையும் சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் வளர்ந்தோம். ரொம்ப நெருக்கமா பழகுவோம்." அண்ணாக்கும், அண்ணிக்கும் "திருமணமான பிறகு என்னோட அம்மா அதாவது உன்னோட சீதாப்பாட்டி இருக்காங்கள அவங்க என்னிடம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டாங்க அண்ணாக்கு கல்யாணம் ஆகியாச்சு இனிமே அவ உனக்கு அண்ணி ஆகியாச்சு, பேர் சொல்லி கூப்பிடக்கூடாது மரியாதையா அண்ணி வாங்க போங்கன்னு கூப்பிடனும் என்று சொல்லிட்டாங்க .என்னால அதை மீற முடியவில்லை அதுல இருந்து அண்ணி என்று தான் கூப்பிடுகிறேன் என்று விளக்கம் தருகிறாள்.

சரி.... சித்தி அது போகட்டும் படிக்கட்டில் நின்று கொண்டு திரு..திரு என்று விழித்த என் "அத்தை "பிறகு என்ன செஞ்சாங்க அதையும் முழுசா சொல்லுங்க.என்கிறாள் " காயு"

அய்யோ..!அவளே பேச்ச மாத்தி மறந்தாலும் ,நீங்க எல்லாம் விட மாட்டீங்க போல என்று புன்னகையோடு பிந்து முனுமுனுக்க, பிறகு
என்ன ஆச்சு? நான் இங்கே இருக்கேன் என்று அழைத்ததும்," அண்ணி .."ஒன்னும் புரியாதது போல் வேறு வழி இன்றி என்னை நோக்கி வந்து, நீ இங்கே இருக்கியா ??உன்னை தேடித்தான் மாடிக்கு போனேன். என்று சமாளித்துக் கொண்டே ,தனது இரு கைகளையும் பின் புறம் கொண்டுச் செல்ல அதை கவனித்த நான் என்ன பிந்து கையில மறைச்சு வச்சிருக்கிறாப்ல தெரியுது என்று கேட்டுட்டேன்.

அது ஒன்னும் இல்லை உனக்காக தான் எடுத்துட்டு வந்தேன் என்று திக்கித் திணறி ஒரு வழியா கையில் இருந்த கேரியரை என்னிடம் கொடுத்தாங்க. நானும் ,சரி... எனக்கு தான் நம்பி இந்த டப்பாவை திறந்தா இடியாப்பம் ஐந்து வகை உள்ளே இருந்துச்சு .ஐ..... இடியாப்பம் எனக்கா...? என்று கேட்டேன் பாதி பதில் வெளியே வந்தும் வராமலும் வார்த்தைகளை விழுங்கி கொண்டே, ஆமாம் ....!என்று சொல்லும்போது மாடியில் இருந்து என் அண்ணன் இறங்கி வருவதை பார்த்தவுடன் வாயில் வந்த வார்த்தை அடங்கி விட்டது.

அண்ணி ,அண்ணனை பார்க்க அண்ணன் அண்ணியை பார்க்க இருவரின் பார்வையிலும் ஏதோ வித்தியாசம் அன்று உணர்ந்தேன்.
ஆனால், ஒன்றும் புரியவில்லை சற்று நேரம் போக போக இருவரின் போக்கையும் கவனித்தேன் நொடிக்கு ஒரு தரம் சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும் அன்று ஏனோ அமைதியாக இருந்தனர் .ஆனால் இருவரும் வாய்விட்டு பேசிக்கொள்ளவில்லை இருவரின் கண்கள் மட்டும் பேசிக் கொண்டது. அவர்கள் கண்கள் பேசிக் கொண்டிருக்கையிலே,

நமக்கு சோறு தான் முக்கியம் என்று நான் வந்து இடியாப்பத்தை சாப்பிடும் வேகத்தை பார்த்த அண்ணியோ கொஞ்சம் மிச்சம் வைடா என்று மெல்லிய குரலில் கூற

யாருக்கு ..?என்று கேட்டேன். அது வந்து.... அது வந்து...
. என்று இழுக்க அதற்குள் என் அண்ணன், என்னது இடியாப்பமா?? என்று எடுத்து சாப்பிட்டு ,

ம்ம்ம்..... அம்மா டேஸ்ட் வித்தியாசமா நல்லா இருக்கே என்று கேட்டு முடிக்கும் முன்பே இல்லை இது நான் பன்னது என்று வெட்கத்தோடு பிந்து கூற ,

பிந்து தான் செய்தது தனக்காக தான் செய்தது என்று தெரிந்திருந்தும் தெரியாதது போல் எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்து ஒரு ஏப்பத்தை விட்டு ,பிந்து நீ பார்த்து பார்த்து செஞ்சு எடுத்துட்டு வந்த இடியாப்பம் சூப்பர் என்று கூறவும்
இதுவரை இப்படி பேசதவன் என்னடா இப்படி பேசுறானே என்று எனக்கு ஒரு சந்தேகம் . பிறகு இவர்களை ஆராய்ந்து பார்ததில் தான் தெரிந்தது இவர்களுக்குள் இருந்த காதல்.
ஆனால் ,என்னால் சற்றும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .

எலியும் ,பூனையுமாக இருந்தவர்கள் எப்படி காதல் செய்தார்கள் என்று??அதிலிருந்து இடியாப்பம் என்றால் அண்ணியை கேலி கிண்டல் செய்வது என் வழக்கம். ஆனாலும் மிகவும் சுவையாகவும் நிறைய வகையும் செய்வதால் அண்ணியின் இடியாப்பத்திற்கு நான் என்றும் அடிமை என்று கூறினாள் நித்தி

போதும்.. போதும்.. !எல்லாரும் இதைக்கேட்டது போதும்.டைம் ஆகிட்டு நான் போய் சாப்பாடு செய்கிறேன் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து அடுப்படிக்கு செல்கிறாள் பிந்து.

அடுப்படிக்கு பிந்துவை செல்லவிடாமல் "மதுவும் ,ஆகாஷும்" தடுத்து.நில்லுங்க.... நில்லுங்க...! இப்படியெல்லாம் உங்களை விட்றமுடியாது என்று கையைப் பிடித்து அழைத்து வந்து சோஃபாவில் அமர வைக்கிறார்கள் .

ஏய்....!!என்ன‌ பன்றீங்க ?இரண்டு பேரும் என்று கேட்க, பின்ன என்ன அம்மா?? உனக்கும் அப்பாக்கும் இடையில பெரிய லவ்ஸ் போயிருக்கும் போலையே நாங்களும் அதை தெரிந்துக் கொள்ள வேண்டாமா???என்றிட

போதும் ..!போதும்..! நீங்க தெரிஞ்சுகிட்ட வரைக்கும் போதும் டைம் ஆகுது நான் போய் சாப்பாடு செய்றேன் என்று எழுந்தவளின் கைகளை மீண்டும் பிடித்து கட்டாயப்படுத்தி அமர வைத்தார்கள்.


பிருந்தா உட்காரு மா பிள்ளைங்க தான் இவ்வளவு தூரம் சொல்றாங்களே, சாப்பாடு பொறுமையாக செய்யலாம் யாரு பா நம்ப தானே சாப்பிட போறோம்.சேர்ந்து உட்கார்ந்து பேசுறது தான் மகிழ்ச்சியே என்று முரளி கூறிய உடன் மறுப்பு கூறாமல் அமர்ந்தாள் பிந்து...

சரி...ஒரு கேம் விளையாடுவோமா?? என்று மது கேட்க

ம்ம்ம்..... மொக்கை போடாம நல்ல கேமா சொல்லு என்று பாலா கூற,

இல்லடா...! தடியா நிச்சயம் இந்த கேம் மொக்கையா இருக்காது .பயங்கர இன்டரஸ்ட்டா இருக்கும்.

அப்படி ,என்ன கேம் ???என்று ஆகாஷ் கேட்கவே.,

ஓகே..! சொல்றேன் .கேளுங்க அதாவது
ஆண்கள் எல்லாம் உங்கள் மனைவியை ஒரே ஒரு வரியில் வர்ணிக்க வேண்டும். அப்படி, நீங்கள் வர்ணிக்கும் போது உங்கள் மனைவி வெட்கத்தில் சிரித்தால் நீங்கள் தான் வின்னர் என்று விளையாட்டை பற்றி "மது "கூறுகிறாள்.

ஐய்யோ...! இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா என்று கதிர் கூற,அது எப்படி அப்பா ஆட்டத்தின் துவக்க நாயகனே நீங்க தான் சோ.. நீங்க கேம் ஆரம்பித்து விடுங்க என்றாள்..

சரி...! நானே துவங்கி வைக்கிறேன். என் மனைவியை வர்ணிக்க வேண்டும் அவ்வளவு தானே, இதோ...! வர்ணித்து விட்டால் போச்சு என்றான் கதிர்....

🥰 தொடரும் 🥰

ஆமா..! "கதிர்" தன் மனைவியை ஒற்றை வரியில் எப்படி வர்ணித்திருப்பான்?? வாங்க அடுத்த பகுதியில் பார்ப்போம்.