• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..14

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..14



கௌசிக் பேசியதை மனதிற்குள் அசைப்போட்ட படியே வந்தவள் படுக்கையில் அமர்ந்தும் யோசித்தாள் ..


இவன் என்ன அர்த்தத்தில் சொன்னான்? என்று புரிப்படாமல் இருந்தவளுக்கு இவர்களின் ஒருத்தியாகத் தன்னையும் இணைத்துக் கொண்டது மனதிற்கு இதமாகவே இருந்தது .


அதுவும் அவளுக்காகப் பாட்டி கடையிலே இருக்கிற அத்தனை பட்டு சேலைகளையும் அலசி ஆராய்ந்து வாங்கியதும் அதற்கு டிசைன் சொல்லி பிளவுஸ் அளவெடுக்கச் சொன்னதும், மேட்சிங் வளையல் வாங்கியதையும் நினைத்தவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது ..


தானும் இவர்களுள் ஒருத்தராக இருந்தது நினைத்து.. தனக்கும் இவ்விடம் புதியதாக தோன்றாமல் வித்தியாசமின்றி இயல்பாக எல்லாரிடம் ஒட்டுதல் உண்டானது ..


இதை எல்லாம் கௌசிக் என்ற ஒருவனால் கிடைத்தச் சொந்தம் என்று நினைக்கும்போது அவன் கோபப்பட்டு பேசியதும் பின்னால் வந்து அதற்காக மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்று புரிய வைத்ததும் நினைத்தவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு உண்டாக அது எவ்விதம் என்று அறிய மனத்தை சுய அலசல் செய்ய முயன்றாள் ரிஹானா.


அப்போது அவளுடைய அலைபேசி ரிங் அடிக்கவும் உடனே எடுத்தவள் நியூயார்க்கிலிருந்து ஷான்வி அழைக்கவும் ஆர்வத்துடன் ''ஹேய் ஷான்'', என்று குதூக்கலமாகப் பேசத் தொடங்கினாள் ரிஹானா.


''ஹாய் பேபி டால் இந்தியா போன அன்றே எங்களை மறந்திட்டே.. போய் சேர்ந்தோம் ஒரு மெசஸ்ஜை கூடக் காணாம்'', என்று வம்பளக்க ..


ரிஹானாவோ… ''ஹேய் ஹேய்.. வெயிட் வெயிட்.. இங்கே வந்ததிலிருந்து பிஸி ஷான்.. போன் பண்ண நேரமே இல்லை தெரியுமா.. அதைவிட இங்கே பாட்டி தாத்தா ஆண்ட்டி அங்கிள் ரித்து மாதேஷ் அண்ணா அவர்கள் அத்தனை பேரும் என்னைத் தாங்கு தாங்கு தாங்கிறாங்க தெரியுமா .. அதைவிட ரித்து பேபிஷவர்க்கு ஷாப்பிங் போனோம்.. அங்கே எனக்கும் ஒரு பட்டு சேலை எடுத்து மேட்சிங்கா வளையல் வாங்கினார்கள்.. நான் கூட கௌசிக்கிடம் பணம் தரேன் சொன்னேன் அவர் கோபப்பட்டார் தெரியுமா'', என்று சொல்லியவள்..


இங்கு வந்தலிருந்து ஒவ்வொன்றாக நடந்த அத்தனையும் ஒப்பித்தவள், ''எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி அன்பான பாசமான குடும்பம் கிடைக்காமல் போயிற்று ஷான்.. ஒவ்வொன்றும் வாங்கும்போதும் எல்லாருடைய அபிப்பிராயம் கேட்டுச் செய்வதும் என்னை இன்று தான் பார்த்தாக நினைக்காமல் நெடுநாள் பந்தமாக அவர்களுள் ஒருத்தியாக நடத்தியதைக் கண்டால் எனக்கு அழுகையாக வருது தெரியுமா..


இத்தனை அன்பும் எனக்கே எனக்கா நினைச்சா மூச்சு மூட்டுது'', என்று ஷான்வியை பேச விடாமல் எல்லாமே ஒரு வேகத்தில் பேசி முடித்தாள் ரிஹானா.


''டெரிபேபி… கூல் கூல் ஏன் இந்த பதட்டம் ஆதங்கம் பேபி'',… என்றவள் ''நீ பேசுவதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கு… இதற்காக எத்தனை நாட்கள் ஏங்கி இருப்ப.. எனக்குத் தெரியும் தானே .. வெளியே பேசிச் சிரிச்சு ஜாலியாக இருந்தாலும் உனக்குள் ஒரு ஏக்கம் இழையோடிக் கொண்டே இருக்கும் ..


இப்ப அந்த ஏக்கம் தீர்ந்ததா இல்லையா முழுசா அனுபவிச்சா தான் உனக்குப் புரியும்.. இன்னும் ஆறுமாதம் அங்கே தானே இருப்ப … அப்ப எல்லாரும் உன்னைப் பார்த்துக் கொள்வதிலே இன்னும் ஒரு மாற்றம் உண்டாகும்.. அப்போது உனக்கானக் குடும்பத்தை உருவாக்கிக் கொள்ளணும் என்று நினைப்ப.. அப்படி மட்டும் நடந்தால் போதுமடி எனக்கு'',.. என்று ஷான்வி சொல்ல..அதற்கு ரிஹானா எந்தவித பதிலும் சொல்லவில்லை.


தன் மனதில் ஆழப் பதிந்த காதல் குடும்பம் பற்றிய நினைவுகள் இன்னும் கசப்பான உணர்வுகளை மட்டுமே தருகிறது..


இங்கே இவர்கள் பாசப்பிணைப்போடு இருப்பதால் அந்த நேரம் அவர்களோடு உறவாடினாலும் ஆழ் மனதில் பதிந்த வடுக்கள் இன்னும் மாறாமல் அப்படியே தானே இருக்கிறது என்று நினைத்தவள் அதன்பின் ஷான்வியிடம் பொதுவான ஆபீஸ் விஷயங்கள் மட்டுமே பேசிவிட்டு வைத்து விட்டாள்…



அடுத்து ரகுவரனுக்கு அழைத்தவள் ''என்ன மேடம் இந்தியா போனதும் எங்களை எல்லாம் ஒரே நாளிலே மறந்துவிட்டப் போல'', என்று கலாய்க்க..


அவளோ'' அப்படி எல்லாம் இல்லை ரகு'', என்று சொல்ல …


''அப்ப நான் செய்த சாப்பாடே மிஸ் பண்ணற சொல்லற'', என்று கேட்டவனிடம்…


''ரகு இங்கு உன்னை விட ஆண்ட்டி சமையல் சூப்பரா இருக்கு, அதைவிட பாட்டி ஸ்வீட் ஒன்று செய்தாங்க அவ்வளவு நல்ல இருந்தது. நீ அடுத்த முறை வரும்போது இதை எல்லாம் இங்கே வந்துக் கத்துக்கோ.. அப்ப தான் நியூயார்க் வந்தவுடன் எனக்குச் செய்து தர முடியும்'', என்று ரிஹானா சொல்லவும்..


''அதை எல்லாம் நீ கத்துக்கோ ரிஹா.. நான் வந்தால் நீ செய்து தர மாட்டீயா'', என்று ரகு கேட்க..


''நான் நியூயார்க் வந்தும் செய்து தரேன்'', என்று சொல்ல,


''இனி எங்கே இங்கே வரப் போறே'', என்று ரகு முணுமுணுக்க .. அது காதில் விழாமல் ரிஹாவோ ''என்ன சொல்ற ரகு?'', என்று மீண்டும் கேட்டாள்..


''ஒண்ணுமில்லே'', என்றவன், அன்று நடந்ததை எல்லாம் அவனிடம் ஒப்பித்தவள், '' அடுத்த வாரம் தான் ஆபீஸ் ஜாயின் பண்ணறேன்.. ரித்தன்யா வளைக்காப்பு முடிந்தபிறகு'', என்று சொல்லவும் அப்படியே பேச்சு கௌசிக் அவர்கள் குடும்பம், ரகுவின் குடும்பம் என்று பேசி முடித்து வைத்தவள் களைத்துப் போய் படுத்துவிட்டாள் ரிஹானா.


ஜெட்லாக்காலும் உடம்பு அசதியிலும் அசந்து தூங்கியவள் இடையே வந்து வேதவல்லி பார்த்துச் சென்றதும் கௌசிக் வந்து மௌனமாக நின்று போனதும் இதை எதுவும் அறியாமல் ஆழ்நிலை உறக்கத்தைத் தழுவினாள் ரிஹானா.


பாதி ராத்திரியில் முழிப்பு வந்ததும் விழித்தவள், சுற்றுமுற்றும் பார்த்தவள் சட்டென்று ஒரு பயம் உள்ளத்தை கவ்வ .. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து விட்டாள் ரிஹானா.


அவள் எழுந்து அரவத்தில் பக்கத்திலே ஒரு படுக்கை போட்டிருக்க அதில் படுத்திருந்த கோமளவல்லி வேகமாக எழுந்தவர் ''என்ன ரிஹா பயந்து விட்டாயா?'', என்று கேட்டபடி தண்ணீரை ஒரு கண்ணாடி கிளாஸில் ஊற்றிக் கொடுத்தவர், ''நீ கீழே இரவு உணவுக்கும் வரவில்லையா.. புது இடம் வேறு, இடையில் எழுந்தால் பயந்து விடுவாயா என்று தான் துணைக்குப் படுத்தேன்'' என்று பேசியபடி அவள் அருகில் அமர்ந்து தலையை கோதி விட்டார் .


அவர் அன்பில் திளைத்தவளுக்கு மளுக்கென்று கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க,


''ஏய் என்னம்மா ஆச்சு.. எதும் கனா ஏதும் கண்டு பயந்தீட்டியா'', என்றவருக்கு ''இல்லை'', என்று தலையாட்டியவள் ,


''உனக்கு பசிக்குமல, இரவு உணவு கொஞ்சம் ஈஸியா டைஜிஸ்ட் ஆகிமாறு இருக்க இட்லி எடுத்து ஹாட்பேக்கில் வைச்சேன் .. சாப்பிடீரியா'', என்று உணவை வைத்துக் கொடுக்க, தட்டை தடுமாறிபடி வாங்கியவள் மெதுவாக உண்ண, ஏதோ ஏதோ பேசியபடி அவள் அருகில் அமர்ந்திருந்தவர், அவள் உண்டதும் பிளாஸ்க்கில் இருக்கும் பாலை ஊற்றி அவளிடம் கொடுத்துவிட்டு தனக்கும் ஊற்றிக் கொண்டு அவள் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் …


''ஆண்ட்டி உங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்குக.. நான் வேறு எழுப்பி விட்டேன்'', என்று சொல்ல..


''இல்லடா எனக்கும் தூக்கம் போச்சு'', என்றவர், ''ரித்தன்யா அவங்க மாமியார் வீடு'', எனப் பலகதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்.


அவர் பேசப் பேச அவருக்கு ''ஊம்'', சொல்லிக் கொண்டே வந்தவள் ஒரு கட்டத்தில் தூக்கம் வர அவர் மடியிலே அப்படியே படுத்து விட்டவளைத் தலைக் கோதியவர், இந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள், குணமும் தங்கமாக இருக்கிறது, இன்று தான் பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே எல்லார் மனதிலும் பசக்னு ஒட்டிக் கொண்டாள் என்று நினைத்தவர், அதனால் தான் தன் மகனும் இவள் மீது ஆசைப் பட்டான் போல என்று எண்ணியவர், பாசத்திற்கு ஏங்கும் பச்சைக் குழந்தையாக இருப்பவளிடம் சிறு அன்பைக் காட்டினாலே போதும் போல என்று நினைத்தவர் தானும் அப்படியே கட்டில் சாய்ந்தபடி உறங்கினார் கோமளவல்லி .


காலை வரை அவர் மடியிலே உறங்கவும், எழுந்தும் அங்கே வந்த கௌசிக் தன் அம்மாவின் மடியில் ரிஹானா படுத்திருப்பதைக் கண்டவன், ''அம்மா'',, என்று அழைக்க.


அவரோ..''ஊஸ்''… என்று வாயில் மேல் விரலை வைத்துக் காமிக்க ..


அவனோ மெதுவான குரலில் ''உங்களுக்குக் கால் வலி வந்துவிடுமே'', என்று சொல்ல.. ''அதையெல்லாம் பார்த்துக்கிறேன்'', என்று சொல்லவும்..


அவனும் தலையாட்டிக் கொண்டு தான் ஜாகிங் போவதாகச் சொல்லிக் கொண்டு சென்று விட்டான் கௌசிக்..


அவன் சென்றதும் இன்னும் சிறிது நேரம் அப்படியே இருந்தவர், ரிஹானா அசையவும், அவர் தட்டிக் கொடுக்க, ''அம்மீ'',.. என்று சொல்லிக் கொண்டு அவர் இடுப்பை பற்றிப் படி மீண்டும் படுத்து விட்டாள் ரிஹானா.


ஒரு மணி நேரம் கழித்து விழித்த ரிஹானா மடியோ மெது மெதுனு இருக்க அப்படியே படுத்திருந்தவள் கோமளவல்லி அசைவும் வேகமாக எழுந்து அமர்ந்தவள், ''சாரி சாரி ஆண்ட்டி .. உங்க மடியிலே படுத்து விட்டேன்'', ஒரு குற்றவுணர்ச்சியுடன் சொல்லியவளை ..


''ஈஸிடா எதுக்கு இத்தனை பதட்டம், நீயும் ரித்தன்யா மாதிரி தான் … அவளும் இப்படி தான் பாதி ராத்திரியில் என் மடி தேடி வந்திருவா'', என்று சொல்லியவரைக் கண்டு ..



''ஒ''.. என்று சொல்லியவள் ''உங்களுக்கு கால்வலிக்குமல'', என்று கேட்க ..


அவரோ'' பிள்ளைகளைத் தாங்கினால் எந்தக் கால் வலியாக இருந்தாலும் பறந்து விடும்'', என்று சொல்லிச் சிரித்தவர், ''நீ போய் ரெப்பிராஷாகிக் கீழே வா.. காபி குடிக்கலாம் உனக்காகப் பில்டர் காபி ரெடியாக இருக்கும்'', என்று சொல்லவும்…


''எனக்கு இது பிடிக்கும் யார் சொன்னாங்க ஆண்ட்டி'', என்று ஆச்சரியமாய் கேட்டவளைக் கண்டவர்'' நீ இங்கே வரும்போது கௌசிக் எல்லாமே சொன்னான்.. உனக்கு எனன பிடிக்கும் என்று.. அதனாலே உனக்குப் பிடிச்சது தான் இங்கயும் எல்லாருக்கும் பிடித்த உணவு தான் இது உனக்குப் ஸ்பெஷலாகப் போடச் சொன்னது'', என்றவர் '௸சீக்கிரம் கீழே வாம்மா.. நான் போய் ரித்து என்ன பண்ணறா பார்க்கிறேன்'', என்று எழுந்துப் போனார்.


அவர் சென்றதும் அவள் பேசியதை நினைத்துக் கொண்டே எழுந்தவள் குளித்து டாப்ஸ் லெக்கின்ஸ் அணிந்தவள் முடியை வாரி ஒரு கிளிப்பில் அடக்கிக் கொண்டு நெற்றியில் சிறு பொட்டு வைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள் ரிஹானா.


மாடியிலிருந்து இறங்கி வரும்போது ரித்து பாட்டி மடியில் சாய்ந்திருக்க வீட்டிலுள்ள அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


இவள் வந்ததும் '௸வா வா ரிஹா உனக்காகத்தான் காத்திருக்கோம்'',.. என்று வேதவல்லி சொல்லியவர் அங்கிருந்த பெண்ணிடம் எல்லாருக்கும் காப்பியும், ரித்தன்யாவுக்கு சத்து மாவு கஞ்சியும் கொண்டு வரச் சொன்னார்.


பாட்டி அருகே அமர்ந்தவள் தனக்காகக் காத்திருப்பது அவளுக்கு ஒரு மாதிரி அன்ஈஸி பீலிங் தரவும், ''சாரி பாட்டி.. என்னாலே லேட் ஆயிடுச்சு'', சொல்ல..


''அப்படி எல்லாம் இல்லை இங்கே காலையில் தான் எல்லாரும் ஒன்றாக சேர்வது.. அதன்பின் இரவு உணவுக்குத் தான் .. எல்லாரும் இந்த நேரம் ஒன்றாக தான் காப்பி குடிச்சு பேசிக்கிட்டு இருப்போம்'', என்றவர் ''இதுக்குப் போய் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்'', என்றவர்,


''மாதேஷ் எப்ப போட்டோகிராபர் வரேனு சொன்னார்'', என்று கேட்க,


ரிஹானா ''இன்று போட்டோகிராபர் வராங்களா பாட்டி'', என்று கேட்டாள்.


''ஆமாம் டா, இப்ப தான் எல்லாம் புதுசு புதுசா செய்யறாங்களே அது தான் .. இன்று நீ ரித்து கூடயே இருடா அவளுக்குக் கொஞ்சம் ஹெல்ப்பா'', என்று சொல்லவும்


''ஓகே பாட்டி, நான் கூடவே இருக்கேன்'', என்று சொல்லவும் ரித்தன்யா'' ஐ.. சூப்பர், என்னடா மாதேஷ் மட்டும் கௌசிக் கூட இருக்க எனக்கு யாருமில்லை கவலைப்பட்டேன்.. இனி கவலையில்லை'', என்று ஆர்ப்பாட்டம் செய்ய..


கோமளவல்லியோ அதட்டினார் .. ''ஏய் ரித்து மெதுவா'', என்று சொல்லியவர், ''சீக்கிரம் வா சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்'', என்று சொல்லிவிட்டு ''அத்த நாளைக்கு மெஹந்தி போட வரச் சொல்லிட்டா'', என்று கேட்க அவரும் ''சரி'', என்று சொன்னார் வேதவல்லி.


ராகவனும் வைத்தீஸ்வரனும் கௌசிக் மாதேஷிடம் மண்டபத்தில் ஆக வேண்டிய வேலைகளை ஆளை வைத்துப் பார்க்கச் சொல்லியவர்கள், '' இன்றே போட்டோ சூட் முடிச்சிருங்க பா'', என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.


ரித்தன்யா கூடவே எழுந்தவள் அவளுக்கான உடைகளை அடுக்க உதவினாள் ரிஹானா.


போட்டோ சூட் என்னவோ ரித்தன்யாவுக்கும் மாதேஷ்க்கும் தான்.. ஆனால் கௌசிக் மனநிலையோ இதே மாதிரி தனக்கும் ரிஹாவிற்கும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கி விட்டான்.


ஆனால் அதன்பின் நடந்த எந்த நிகழ்வுக்கு யார் காரணம் என்று அறியாமல் ரிஹானாவின் மனமோ இந்த மாதிரி தன் வாழ்க்கையில் நிகழுமா? என்று ஏங்கிப் போனாள்…


தொடரும்
 
Top