• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே..3

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..3


கௌசிக் வைத்தீஸ்வரன் தான் தங்கிருந்த கம்பெனியின் கெஸ்ட்ஹவுஸிற்கு வந்தவன், அந்த ஊரின் சீதோஷ்ணமான குளிராலும் பனியாலும் மெய் சிலிர்க்க அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு நின்றிருந்தான் .., தூரத்தில் தெரிந்த பனி படர்ந்த மரங்களும் பனியால் போர்த்தப்பட்ட மலைகளையும் சாரளத்தின் வழியே ரசித்தபடி சூடானப் பானத்தை அருந்திக் கொண்டிருந்தவனுள் பனிச் சாரலாய் ரிஹானாவின் முகம் நிழலாடியது..


மாசுமருவற்ற பால்வண்ணத்தில் கருவண்டு நயணங்கள் இங்குமிங்கும் சதிராட அவள் கட்டிடத்தின் நுணுக்கங்களையும் அதனுள் செய்யும் டிசைன்களைப் பற்றி பேசியக் குரலோ அவனை மெஸ்மரிசம் பண்ணி அவள்பால் இழுத்ததை உணர்ந்தான்..


அவளைக் காலையில் லிப்டில் பார்த்தவுடன் விழியில் வீழ்ந்து இதயக்கதவை உடைத்து உள்நுழைந்தவளை உயிரில் கலந்த உறவாய் வருவாளா! .. எண்ணம் அலை மோதியது.


ஒரே நாளில் தன்னை அவளைப் பற்றிய சிந்தனையோடு பயணிக்க வைப்பது அவளின் அழகா இல்லை அவளின் ரசனையுடன் கூடிய அறிவா எதுவோ ஒன்று அவனுக்கு அவள் தான் என்று எண்ணம் தோன்றிய உடன் அவளைப் பற்றி எதுவும் தெரியாமலே வாழ்க்கை முழுவதும் அவள் வேண்டும் என்று நினைக்கும் மனத்தை எண்ணி வியந்தான்..


"பார்த்தவுடனே வரும் காதல் பார்க்காமலே தொடரும் காதல் கடிதத்தில் மலர்ந்த காதல்

காத்திருக்கும் காதல்

கந்தர்வ காதல்!"..


சரித்திரத்தில் படித்த எத்தனையோ காதல் கதைகளைப் படித்ததும் பார்த்தும் இருக்கிறவனுக்கு தனக்கே அந்த உணர்வு ஒரு நொடியில் உதித்து விட்டுச் சென்ற பாவையவளின் விழிகளில் வீழ்ந்தே போனான் கௌசிக்..


ஆனாலும் அவன் மனம் முரண்பட தன் மனம் அந்தளவுக்கா முதிர்ச்சியில்லாமல் இருக்கிறது .. எதையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுத்துப் பழகியவனுக்கு ரிஹானாவைப் பார்த்தவுடன் தோன்றிய உணர்வுகளுக்கு விடை தேடியது அவனின் மனம்…


அவளைப் பார்த்த இந்த ஒரு நாளிலே தன்னை ஆட்டி வைக்கும் சக்தியினை எண்ணியவனுக்கு.. இன்னும் ஒரு வாரம் அவள் தன் கூடத் தானே இருக்கப் போகிறாள்.. அப்ப அவளுடைய எண்ணக்கூறுகளை அறியவதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் .. அவளைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம் என்று எண்ணியவனுக்குப் புரியவில்லை.


காதல் என்றால் ஒருவரை அலசி ஆராய்ந்து தனக்கு ஒத்து வருமா என்று யோசித்து வருவதல்ல காதல் .. அது மனதின் உணர்வுகளைச் சார்ந்தது.


மனதிற்குப் பிடித்துவிட்டால் அவள் அழகோ வசதியோ அறிவோ மற்ற எதுவும் கண்ணில் தென்படாது.. தனக்கே தனக்கென்று இறைவன் படைத்த சரிபாதி இவளே என்ற எண்ணம் உருவானால் காட்டாற்று வெள்ளமாக கரை கடந்து தன்னவளிடம் அன்பை வாரிக் கொட்டும் .. அக்காதலை அடைய அவளும் அவனும் பெருந்தவம் செய்தால் இன்றி கிட்டாது அவ்வாழ்வு.. அதற்கு அவர்கள் எத்தனை இடர்களையும் சங்கடங்களையும் கடந்து களைந்து வர வேண்டும் .. அதற்கான காலம் வரும் வரை கௌசிக் அவளிடம் காதலை உரைப்பானா!


காதல் என்றாலே பல்லாயிரம் தூரம் ஓடிகிற ரிஹானா அதை ஏற்றுக் கொள்வாளா.. அவளிடம் கௌசிக் தன் மனத்தைத் திறந்து சொல்லும்போது அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியுமா.. குடும்பம் என்றாலே அலர்ஜியாக எண்ணுபவளிடம் தன் குடும்பம் பற்றி சொல்லி நாடு விட்டு நாடு வந்து அவளைத் தன்னவளாக்க முடியுமா என்பதே இருவருக்கிடையே எழும் பெரிய கேள்வி குறி..


இப்படி ஆளுக்கொரு நினைப்பில் இருப்பவர்களிடம் ஒரே புள்ளியில் இணைக்கும் காதலை உணர்ந்து இணைந்து உணர்வார்களா.... ஆனால் இதற்கான விடை அவனிடம் இல்லையே.. என்று எண்ணியவன் பல சிந்தனைகளும் குழப்பங்களோடு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவனுடைய அலைபேசியின் ஓசையில் அதை எடுத்தவனின் முகமோ மலர்ந்தது.


ஊரிலிருந்து அவனுடைய பாட்டி வேதவல்லி அழைத்திருக்க, அலைபேசியை ஆன் பண்ணிக் காதில் வைத்தவன், ''ஹாய் கௌஸ் எப்படி இருக்கே?.. அங்கே அந்த ஊர் பெண்கள் எப்படி இருக்காங்க?… நல்லா வெள்ளைச்சியா அழகா இருக்காங்களா!… அங்கே அப்படி உனக்குப் பிடிச்சமாதிரி பொண்ணு யாராவது கிடைச்சாங்களா … என்று வேதவல்லியின் கலகலத்தக் குரலில் சிரிப்பு வந்தது கௌசிக்..


''பாட்டி ஆனாலும் உங்களுக்கு கொழுப்பு அதிகமாயிருச்சு.. பேரனிடம் பேசறோமே.. சாப்பிட்டியா, உடம்பு பார்த்துக்கோ , சொல்லுவதை விட்டு இந்த ஊர் பொண்ணுகளைப் பற்றி கேட்கீறியே, இரு தாத்தாவிடம் சொல்றேன்'', என்று மிரட்டலாகச் சொன்னான் கௌசிக் ..


''அடப்போடா,நீயும் உன் தாத்தாவும் பூம்ரங் ஆட்கள் .. காலத்திற்கேற்ப அப்டேட் ஆகுங்க…. இந்நேரம் அந்த ஊரிலே வெள்ளைகாரப் பெண்ணிடம் போன் நம்பர் வாங்கினமோ .. சாட்டிங் பண்ணினமோ இல்லாமல் நீயும் உன் தாத்தா மாதிரி தொழிலை கட்டிக் கிட்டு அலையிற'',.. என்று வேதவல்லி பேசுவதைக் கேட்டவன் பெருஞ்சிரிப்பு சிரித்தவன் ..

''நீ மட்டும் இந்தக் காலத்தில் பிறந்திருக்கணும் பாட்டி.. ,நீ பேசற பேச்சுக்கு பையன்கள் எல்லாம் அலறிட்டு ஓடி இருப்பானுங்க'', என்று சொல்லிச் சிரிக்க…


'அடப் போடா… இப்பவும் என் பேஸ்புக் ,இன்ஸ்ரா, டிவிட்டர் பக்கம் எல்லாம் ஓபன் பண்ணி பாரு என் படத்திற்கு எத்தனை லைக்ஸ் கமெண்ட்ஸ் வந்திருக்கு.. யூ டீயூப்ல என் வீடியோ பேச்சு எல்லாம் ட்ரெண்டிங்கா ஓடுது பாரு.. எத்தனையோ மில்லியன் பாலோர்ஸ் வந்திருக்காங்க தெரியும்'', என்று சொல்லிய வேதவல்லியோ அந்தக் காலத்திலே காலேஜில் படித்துக் கோல்ட் மெடல் வாங்கியவர்..


தனக்கு வயசாச்சே என்று எண்ணம் ஒரு துளி கூட இல்லாமல் இன்றைய சூழ்நிலைக்கேற்ப தன்னை எப்பவும் பாஸ்டீவ் எனர்ஜியோட இருப்பார்.. ஓய்ந்து ஒருயிடத்தில் அமராமல் எதாவது செய்துக் கொண்டே இருக்கும் சுறுசுறுப்பான பெண்மணி தான் வேதவல்லி.


அவரோட சில நிமிடங்கள் பேசினாலே மனதினுள் புதைந்திருந்த கவலை எல்லாம் கற்பூரமாய் காற்றில் கரைந்து விடும்..


இப்பவும் தன் பேரனிடம் பேசும் போதும் அதே எனர்ஜியோட பேசியதைக் கேட்ட கௌசிக் ''உன் பேஸ்புக் பிரண்ஸ் எல்லாம் கைத் தடியோட இருக்கிறவங்க தானே வேது .. நீயே எத்தனை பேக்ஐடில வந்து உன் போட்டோவுக்கு லைக்ஸ் போட்டீயோ'', என்று கிண்டலாகப் பேசினான் கௌசிக் ..


''டேய் கௌஸ் உனக்கு பொறாமை டா'', .. என்று சொல்லியவர், ''சரி சொல்லு அங்கே ஆபீஸ்ல நீ நினைச்சது எல்லாம் சரியாக இருக்கா'', என்று கம்பெனியை பற்றியும் சிறிது நேரம் பேசியவர், ''இதோ உன் தாத்தாவிடம் தரேன்.. இங்கே பின்னாடி நின்று கொண்டு பூனை மாதிரி பிராண்டிக் கொண்டே இருக்கிறார்'', என்று சொல்லி வேதவல்லி தன் கணவன் வைத்திஸ்வரனிடம் அலைபேசியைக் கொடுத்தார்.


''எப்படி இருக்கீங்க தாத்தா? ஹெல்த் இஸ்யூ எதும் இல்லை தானே '',என்று அவரின் உடல்நிலையை பற்றி விசாரித்தவனிடம் ''நல்ல இருக்கேன் கௌசிக்'',.. என்று சொல்லியவர் ஆபீஸ் விஷயங்களையும் ,கம்பெனியோட அவங்கப் போட்ட ஒப்பந்தத்தைப் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டவர், அங்கே அவன் தங்கிருக்கும் இருக்கும் இடம் மற்ற விஷயங்களை விசாரித்துவிட்டு, ''இருடா கண்ணா நாம் பேசுவதைப் பார்த்து இங்கே உன் பாட்டி காதில் புகை வருது.. இவ்வளவு நேரம் உன் கூடப் பேசறேன்'', என்று சொல்லிச் சிரித்தார் வைத்தீஸ்வரன்.


கௌசிக் சிரித்தபடி ''எப்படி தாத்தா பாட்டியை சமாளிக்கிறீங்க?'',… என்று கேலியாகக் கேட்டவனிடம்.. ''அது விதிடா பேராண்டி.. விதி வலியது தெரியும் தானே உனக்கு'', என்று தாத்தா சொல்லவதைக் கேட்டவனோ கலகலக்க,


வைத்தீஸ்வரன் அருகிலே நின்றிருந்த வேதவல்லியோ சத்தமாக ''ஆமாம் இவரைக் கட்டிக்கிறேன் ஒத்தைக் காலில் தவம் இருந்தாங்களாம்.. உங்களை ஒரு பொண்ணுக் கூடத் திரும்பிப் பார்க்கல, அது தான் நானே பாவம் பார்த்துக் கட்டி எனக்கு நானே ஆப்பு வச்சுகிட்டேன் பேராண்டு.. இப்படி அம்மாஞ்சியா இருக்கிற உங்க தாத்தாவின் கதை தெரியுமா கௌஸ்! '', என்று வைத்தீஸ்வரன் பின்னால் நின்று சொல்லியவரின் பேச்சைக் கேட்டு ரசித்தப்படி நகைத்தான் கௌசிக்..


சிறு நிமிடங்கள் இருவரிடமும் பேசி முடித்தான் கௌசிக்.. பேசி முடித்ததுமே அவனுக்கு எப்பவும் தன் தாத்தாவையும் பாட்டியும் பார்த்தால் பிரமிப்பூட்டும் .. கல்யாணம் ஆகி கிட்டதட்ட அறுபது வருடம் நெருங்கப் போகுகிறது ஆனால் அவர்களின் பாசப்பிணைப்பும் காதலும் நேசமும் கலந்த பேரன்பைப் பார்க்கும்போது எல்லாம் இவர்கள் மாதிரி தன் வாழ்க்கை வாழ அமைய வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வேரூன்றி வளர்ந்து விருட்சமானது..


தாத்தாவையும் பாட்டி நினைத்தபடி

தன் தந்தை ராகவனுக்கு அழைத்தவன் அவரிடம் சிறிது நேரம் பேசியவிட்டு ''அம்மா எங்கே பா?'', என்று அவன் அம்மா கோமளவல்லியை பற்றிக் கேட்டவனிடம்,


ராகவனோ''அவள் உன் தங்கை ரித்தன்யா வீட்டுக்குப் போய்யிருக்கா.. ரித்தன்யாவிற்கு வளைகாப்பு செய்யணுமல, அதைப் பற்றி தான் பேச போய்யிருக்கா'', என்று சொல்லியவர், ''உனக்கு அங்கிருந்தும் எந்த நேரமும் போன் வரலாம் கௌசிக்'', என்று சொல்லவும்..


''ஒகேபா நானே அங்கே கூப்பிட்டுப் பேசுகிறேன்'', என்று சொன்னான் கௌசிக் ..


கௌசிக்கின் தங்கை ரித்தான்யாவிற்கும் மாதேஷ்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகுகிறது .. மாதேஷ் ஐடி கம்பெனி ஒன்றை அவனின் திறமையால் உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறான் . ரித்தான்யா மாதேஷ்யை விரும்பவும் இருவருக்கும் பெரியவர்களால் நிச்சியக்கப்பட்டு கோலகலமாகத் திருமணம் நடந்தது. இப்ப ரித்தன்யாவிற்குப் பிள்ளை உண்டாகி ஆறு மாதம் ஆகுகிறது. அடுத்த மாதம் வளைகாப்பு வைப்பதைப் பற்றித் தான் ரித்தான்யாவின் மாமியாரிடம் கேட்கப் போய்யிருந்தார் கோமளவல்லி.


தன் அம்மாவிற்கு அழைத்தவன், ஆனால் அங்கே போனை எடுத்தது ரித்தான்யா.. ''ஹேய் அண்ணா எப்படிருக்கே, அங்கே போய்யும் உனக்கு அம்மாவிடம் பேசணுமா என்ன?!.. அங்கே கடலை போட இன்னும் ஆள் கிடைக்கலயா!", .. என்று கேட்டவளின் குரலில் இருக்கும் துள்ளலில் சிரித்த கௌசிக் "வாலு… நீயே அறுந்த வாலு.. இதிலே உனக்குப் பிறக்கிற குட்டி எப்படி இருக்கப் போகுதோ நினைச்சாலே கண்ணைக் கட்டுதே.. பாவம்யா மாதேஷ்", என்று கௌசிக் ரித்தான்யாவைக் கிண்டல் பண்ண..



"ம்ஹூம் அவர் பாவமா.. நாளைக்கு உனக்கென்று ஒருத்தி வருவா அவகிட்ட சொல்லி வைக்கிறேன் .. உன்னுடைய லொள்ளுதனத்தை எல்லாம் ", என்று கௌசிக் கிட்ட சொல்லியவளிடம்..


''அவள் வரும்போது பார்த்துக்கலாம், இப்ப உன் ஹெல்த் எப்படி இருக்கு? எதுவும் பிரச்சினை இல்லையே'', என்று விசாரித்தவன், மாதேஷிடமும் சில வேலைகளைப் பற்றிப் பேச,''அவனோ மச்சான் அங்கே போய்யும் உன் சின்சார்ட்டிக் அளவில்லாமல் போச்சு போ.. எப்ப பாரு வேலை இல்லாமல் கொஞ்சம் உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை பாரு கௌசிக்.. மிஷின் மாதிரி ஓடாமல் வாழ்க்கையை ரசிடா'', என்று சொல்லியவன்.. ''இவன் எல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறானோ'', என்று ரித்தான்விடம் மெதுவான குரலில் நக்கலாகச் சொன்னவனைச் ரித்தன்யா செல்ல முறைப்போடு பார்க்க.. அவனோ ''தாயே பரதேவதை போதும் முறைக்காதே உன் அண்ணை ஒண்ணும் சொல்லல'', என்று சொல்லிவிட்டு அங்கே வந்த ரித்தான்யாவின் அம்மாவிடம் போனைத் தந்தான் மாதேஷ்.


அதை வாங்கிய கோமளவல்லியோ ''கௌசிக் சாப்பிட்டியா, என்று கேட்டவர், அடுத்த மாதம் வளைகாப்பு வச்சுக்கலாம் சம்பந்திம்மா சொல்லிட்டாங்க.. நீ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திரு.. இப்ப போனை வைக்கிறேன்'', என்று மகனைப் பேச விடாமல் தானே பேசிவிட்டு வைத்துவிட்டார்…


'ம்ஹீம் மகளைப் பார்த்தாலே மகனிடம் பேசக் கூட நேரம் இருக்காது', என்று அம்மாவை செல்லமாகக் கொஞ்சி விட்டு அலைபேசியை அணைத்தவன் , சோபாவில் காலை நீ்ட்டிப் படுத்தான் கௌசிக்.


படுத்தப்படியே இப்படி கலகலப்பாக மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தோடு ரிஹானா வந்து சேர்வாளா?... வந்தால் அவளும் இப்படி அன்போடு எல்லாரையும் அரவணைத்துப் போவாளா..


மகிழ்ச்சி சந்தோஷமும் நிறைந்திருக்கும் இடத்தில் அதைவிட அதீதமான காதலோடு தன்னிடம் நேசத்தை அள்ளித் தருவாளா! என்ற எண்ணம் உருவாக அவளைத் தன் குடும்பத்தோடு இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் .. கௌசிக் குடும்பத்தோடு புத்தம் புதியதாகப் பூத்த ரோஜா மலராக புன்னகையை அதரங்களில் பூசிய படி மலர்ந்து சிரித்தது கண்முன்னே காட்சியாக விரிந்தது.

தொடரும்


ஹாய் மக்கா கதை எப்படி இருக்கு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.. 😍 😍 😍 😍 லைக்ஸ் கமேண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் மிக்க நன்றியும் அன்பும் 😍
IMG-20230213-WA0016.jpg
 
Top