• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே... 5

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..5


கௌசிக்கும் ரிஹானாவும் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்த ரகு தன் கூட உதவிக்கு வந்தவனோடு அவர்கள் இருவருக்கும் அவரவர் உணவினை பரிமாறச் சொன்னான் ரகுவரன்.


கௌசிக் முன்னால் 'பிஸ் பிரை, செட்டி நாட்டுக் கோழி குழம்பு , சாதம், ரசம் ,சால்ட் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக ரகுவைப் பார்த்தக் கௌசிக் ''இதுயெல்லாம் கூட இங்கே கிடைக்குதா'', என்று கேட்டவனிடம் ,


''இங்கே ஒன்லி இந்தியன் பூட் தான், அந்தந்த ஊர் ஸ்டைலில் கிடைக்கும் சார்'', என்றவன், ரிஹானாவின் முன் அலங்கார தட்டில் சுண்டை வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் சாதம் வைத்துக் கொடுத்தான் ரகு.


அதை ஆர்வமாக வாங்கியவளோ சாதத்தில் குழம்பை ஊற்றி ஸ்பூனை எடுக்காமல் கையால் பிசைந்து ஒரு கையில் அப்பளத்தை எடுத்துக் கொண்டவள் குழம்பை பிசைந்த சாதத்தை வாயில் உருட்டி போட்டு ஒரு கடி அப்பளத்தைக் கடித்துவிட்டு கண்ணை மூடி ரசித்தபடி காரத்தின் சுவையோடு அவள் உண்பதைக் கண்ட கௌசிக் அவளை ரசனையோடும் அவள் உண்ணும் அழகையும் கண்டு தான் உண்ணாமல் அவளையே ரசித்தான்.


அதைக் கண்ட ரகு ''சார் ரிஹா நம்மூர் உணவென்றாலே இப்படி தான் ரசித்து ருசித்துச் சாப்பிடுவா…ஜென் ஞானிகள் கூட அம்மணி முன் தோற்றுவிடுவார்கள்'',.. என்று சொல்லியவன் ''இந்த ஊரிலே பிறந்து வளர்ந்தவளுக்கு நம்மூர் உணவின் மேலே அவளோ ஒரு பிடித்தம் .. அதுவும் பாட்டி கால சமையலான களி,ராகி கூழ், கம்பு, சோள பணியாரம் , இதில் எல்லாம் ரொம்ப விரும்பம் அதிகம் .. அதற்காகவே எங்க ஊரிலிருந்து இவளுக்கு அடிக்கடி அந்த உணவுப் பொருட்களின் பார்சல் வந்திரும்'', என்று சொல்லிச் சிரித்தான் ரகுவரன்.


அவன் சொல்லிச் சிரிப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் தன் உணவினை உண்பவளைப் பார்த்தக் கௌசிக், '' ஹலோ மேடம், நான் உங்க ஊருக்கு வந்திருக்கும் கெஸ்ட் , அதுவும் உங்க கூட வந்திருக்கேன்…நான் சாப்பிடுகிறானா இல்லையா கூடக் கவனிக்காமல் அப்படியே சட்டியோடு சாப்பிடுகிறே'',.. என்று கிண்டலாகக் கேட்டவனிடம்,


''இங்கே சாப்பிட தானே வந்திருக்கோம் சார்ர்ர்.. அதனாலே அவங்க அவங்க தானே சாப்பிடணும்… நான் சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் சொல்லிச் சாப்பிட வைப்பதுக்குள்ள எனக்கு பசிக்குமல'', என்று சொல்லியவளைக் கண்டு ரகுவும் கௌசிக்கும் வாய் விட்டுச் சிரித்தார்கள்..


அதுவும் ரகு அவள் தலையில் லேசாகத் தட்டி'' நல்ல விருந்தோம்பல்'', .. என்று சொல்லிச் சிரிக்கக் கௌசிக்கும் ''உங்க வீட்டுக்கு வந்தால் இதே தானா ரிஹானா, நாங்களே சமைத்து நாங்களே சாப்பிட்டுக்கணும்'', என்று சொல்ல..


''கரேக்ட் சார்… ஆனால் அதில் ஒரு சின்ன திருத்தம் நீங்களே சமைச்சு அதை எனக்குக் கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடணும்'', என்று சொல்லவும் மூவருக்கும் சிரிப்பு பீறிட்டது.


சிரித்தபடி சாப்பிட்ட ரிஹானாவோ ரகுவிடம் திரும்பியவள், ''என் லவர் எப்படி இருக்கா'',..என்று கேட்டு கண்ணைச் சிமிட்டும் நேரத்தில் , கௌசிக் மனமோ அவள் சொன்ன வார்த்தையை கேட்டு ஹெவி வோட்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல அவன் ஹார்ட் பீட் எகிறிக் குதிக்க, அவர்கள் பேசுவதை சிறு படபடப்போடு கேட்டான் கௌசிக்.


ரகுவோ ரிஹானாவை முறைத்துவிட்டு.. '''நேற்று அவள் பண்ணின கூத்தைக் கேட்டால் அவ்வளவு தான், என்று சொல்லியவன், ''மகனார் படிக்கும் பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங்.. அவங்க மகனை வீட்டிலே படிக்க வைங்க எழுத வைங்க சொல்லுரீக்கிறாங்க.. இந்த அம்மணி.. வீட்டில நான் படிக்க வைக்கவும் எழுத வைக்கவும் செய்தால் நீங்கள் இங்கு என்ன செய்வீங்க.. அப்ப ஸ்கூல சும்மா வந்துட்டுப் போய்யிட்டு இருக்குங்கீளா என்று கேட்டு இருக்கா.. என் பையன் நைட் போன் பண்ணி ஒரே புலம்பல்'',.. என்று சொல்லியவனின் மனைவி மீது வந்த குற்றச்சாட்டை விட அவளின் மீதுள்ள காதல் மட்டுமே அதீதமாகத் தெரியவதைக், கண்டு ரிஹானாவிற்கு தன் வாழ்விலும் இப்படி ஒரு அன்பு கிடைக்குமா என்ற ஏக்கம் சூழ்ந்தது.


அதை மறைத்தப்படி, ''என் லவ்ஸ் சரியா தான் கேட்டு இருக்கா.. எல்லாமே வீட்டிலே செய்ய சொன்னா ஸ்கூல என்ன செய்யவாங்களாம். எம்புட்டு அறிவா கேள்வி கேட்டு இருக்கு என் லவ்ஸ்.. லவ்யூ பேபி சொன்னேன் சொல்லிரு ரகு'', என்று சொல்லியவளை ''ம்ஹீக்கும்'', என்று கனைத்தப்படி சிரித்த ரகுவைக் கண்ட கௌசிக்'' யூ மீன் உங்க மனைவியை பற்றி சொல்லீரிங்களா'', என்று கேட்டவனின் ஹிருதயம் அடைத்த வைத்திருந்த பெருமூச்சை மெதுவாக விட்டவனின் மனம் இலவம் பஞ்சாய் லேசாகிப் போனது.


''ம் ஆமாம் சார்.. அவள் செய்யவதை இந்த மேடத்திடம் சொல்ல இவங்க அவங்களை லவ்ஸ் சொல்ல என்னாலே முடியல சார்'', அழுக்குரலில் சொல்லியவனைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள் ரிஹானா.



அவள் சிரிப்பதை ரகு ஆதூரமாகப் பார்க்க கௌசிக்கின் பார்வையோ அவளின் சிரிப்பை அவனின் மனம் திருடிக் கொண்டிருந்தது.


சிறிது நேரம் பலதை பேசிச் சிரித்தவர்கள் இடையில் காரை ஓட்டி வந்தவர் சாப்பிட்டாரா என்று போன் பண்ணிக் கேட்டுக் கொண்டான் கௌசிக்.


அதைக் கவனித்தவளுக்குத் தனக்குக் கூட இது தோனவில்லையே என்ற எண்ணம் உதிக்கவும் தன்னை அறியாமலே ஒரு கில்ட்டி பீலிங்ஸ் உண்டானது ரிஹானாவிற்கு…


அதனால் முகம் மாறியவள் அதற்கு மேலே உண்ணாமல் தட்டை அளந்து கொண்டிருக்க, அதைக் கவனித்த கௌசிக் ''ஹேய் ரிஹானா சாப்பிடு, அது தான் நான் கவனிச்சு சொல்லிட்டேனே.. இதற்கு எதற்கு இத்தனை பீலிங்ஸா இருக்கே.. உனக்குப் பிடிச்சதை சாப்பிடாமல் அளந்து கொண்டு இருக்கிற'', என்றவனின் பேச்சில் அதிர்ந்தவள் அவன் முகத்தைப் பேந்த பேந்த பார்த்து விழித்தாள்.


அவளின் பார்வையில் கட்டுண்டாலும் கௌசிக் அதை சட்டென்று மறைத்துக் கொண்டு ''நேரமாச்சு நாம கிளம்பனும்'', என்று சொல்லவும், தட்டில் இருப்பதை வேகமாக உண்டவள், ரகுவிடம் ''குழம்பு சூப்பர்.. உங்க செப்க்கு நன்றி சொல்லிவிடு'', என்று கண்ணைச் சிமிட்டியவளை கையில் தட்டிய ரகு ''உனக்குக் கொழுப்பு தான்.. போனா போகுதே சின்னப் பிள்ளை ஆசைப்படுதே செய்து கொடுத்தால் நக்கலா அடிக்கிற'', என்று பொய்யான கோபத்தோடு சொல்பவனைப் பார்த்துச் சிரித்தாள் ரிஹானா..


ரிஹானா சொன்னதைப் புரியாமல் கௌசிக் ரகுவைப் பார்க்க, அவனோ ''சார் இதை அவளுக்குச் செய்ததே நான் தான், ,அவளுக்காக ஊரிலிருந்து வருகிற பொருட்களை வைத்து நானே செய்து தருகிறேன். அதைத் தான் அவள் கிண்டலாகச் சொல்கிறாள்'', என்று சொன்னவனிடம் அவள் மேல் கொண்டிருந்த பாசத்தைக் கண்டு வியந்து போனான் கௌசிக்.


உணவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு ''உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி ரகு'', என்று சொல்லி கௌசிக் விடை பெற, ரிஹானாவோ ''பை ரகு'',,என்று சொல்லியவள் கௌசிக் உடன் காரில் ஏறினாள்…


அவர்களின் பயணம் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை நோக்கிப் போக, ரிஹானாவோ ஆரம்பத்தில் இருந்த தயக்கம் விலகி அவனிடம் பேசியவளின் பேச்சில் இவளைப் போய் அமைதி நினைச்சு ஏமாந்திட்டியே கௌசிக் என்று தன்னையே நக்கலடித்துக் கொண்டான் ..


அந்த ஊரின் பெருமையை சொல்லியும் தான் பார்த்தது ரசித்து என பலதை பகிர்ந்து கொண்டாள்.. காலையில் கிளம்பும் போது இருந்த மனதின் தடுமாற்றம் இப்போது அவளுக்கு இல்லை .. ஏதோ நெடுநாளை பழகிய நண்பனாக நினைத்துப் பேசிக் கொண்டே வந்தவளுக்கு ரகுவைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் சொன்னாள் ரிஹானா..


''இந்த உணவகத்திற்கு அடிக்கடி வருவதால் எனக்கு ரகு பரிச்சயம் ஆனார் .. நான் இங்கு வரும்போது எல்லாம் இந்தியன் பூட் ஆர்டர் பண்ணுவதைக் கவனித்தவர் அதன்பின் நான் விரும்பும் உணவுகளைச் செய்து தரச் சொல்வார்.. அப்படி பேசிப் பழகியபோது அவர் குடும்பத்தை விட்டு இங்கே வந்து தங்கி இருப்பதும் அவரின் மனைவியை பற்றிய சொல்லும் கதைகளைக் கேட்கும் போது அவங்க எவ்வளவு இன்சென்ட்டாக இருக்காங்க தோனும்.. அவர்கள் மீது ரகுவிற்கு கொள்ளை பிரியம்.. அதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும்.. எதைச் செய்தாலும் அதனால் இவங்களுக்குச் சிரம்மமே கொடுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் ரகு அவர் மனைவி மீது வைத்த பாசம் குறையாமல் காதலிக்கிறார்.


ரகுவும் அவங்க மனைவி ஒருத்தர் மீது ஒருத்தர்க்கு அவ்வளவு பாசம் என்று சொல்லியவளின் பேச்சில் ஒரு ஏக்கம் ஒன்று இழையோடிதைக் கவனித்த கௌசிக், இவளுக்குள்ளும் சொல்ல முடியாத வலி ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணம் உருவாக அதைக் கேட்கத் தொடங்கும் முன்பே அவர்கள் பார்க்க வந்த இடம் வந்தது.


''கௌசிக் நாம் பார்க்க வந்த இடம் வந்திருச்சு என்று உயரமான கட்டிட்த்தைச் சுட்டிக் காட்டியபடி சொல்லியவள் டிரைவர் காரை நிறுத்தியதும் கௌசிக் வேகமாக இறங்கி வந்து அவள் இருந்த பக்கம் வந்து கார் கதவைத் திறந்த போது அவளுக்குள் மத்தாப்பு போல மனம் பூரித்தது …


மனம் பூரிப்புடன் இறங்கிய ரிஹானாவோ தன் துள்ளலான குரலில் ''உலகில் மிகப் பெரிய கட்டடத்தின் முன் நாம் நிற்கிறோம் கௌசிக்.. இதை உலக அதிசயங்களில் எட்டாவதாக இருக்கிறது'', என்று சொல்லியபடி உயர்ந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தாள் ரிஹானா.


கௌசிக்கோ அவள் சொல்வதைக் கேட்டக் கொண்டே இது எட்டாவது அதிசயமான ஒன்று தான்… ஆனால் 'நீ என்னருகில் இருக்கும் இந்த நிமிடம் உலக அதிசயங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று .. உன்னைப் பார்த்தவுடனே என் மனதிற்குள் நுழைந்து என்னையே ஆட்சி செய்யும் ஏஞ்சல் நீதானடி பெண்ணே! என்று நினைத்தவன் ரிஹானாவுடன் அக்கட்டிடத்திற்குள் நுழைந்தான் கௌசிக்.


கலையம்சம் கொண்ட கட்டடத்தின் முகப்பு பகுதியை ரசித்தப்படி இருவரும் அதனுள் நுழைந்தவர்கள், அங்குள்ள சிறப்புகளை ரிஹானா எடுத்துரைத்தாள.


102 தளம் வரை கொண்டது என்றவள் அதனுள் உள்ள மின்தூக்கிகளின் அமைப்புகளையும், 32, 33 தளத்தில் உள் நுழைய நவீன திறன் வாய்ந்த எஃகு விதானங்கள் இருந்தன். உயர்ந்த தாழ்வாரங்கள் மின் தூக்கி மையத்திற்கு எஃகு கண்ணாடி பாலங்கள் வழியே கடந்து செல்லும் மாறு அமைக்கப்பட்ட பகுதிகளை கண்ட படி நடந்தான் கௌசிக்..


கண்ணாடிப் பாலத்தில் நடக்கும் போது அதன் கட்டமைப்பைப் பார்த்து வியந்து நடந்துக் கொண்டிருந்தவன் தன் கூட வந்தவளைக் காணாமல் திரும்பிப் பார்க்க அங்கே நிகழ்ந்த காட்சியில் மனத்தை அவளிடம் தொலைத்தான் இந்தியாவின் கட்டிடக்கலை பொறியாளர் கௌசிக் வைத்தீஸ்வரன் .

தொடரும்..


ஹாய் மக்கா அடுத்தபகுதி போட்டுவிட்டேன் படித்துப் பாருங்கள் மக்கா 😍 😍 😍 😍
IMG-20230213-WA0016.jpg
 
Top