• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
கண்மணி பேசும் போதே பூவினி வந்துவிட்டாள்.இடையிலேயே ஏதாவது சொல்லத்தான் நினைத்தாள்.ஆனால் கண்மணி எது சொன்னாலும் அந்த ஒரு சில நாட்கள் தானே பொறுத்துப்போ என்று மேகலா முன்பே பல தடவைகள் கூறி இருந்ததால் பல்லைக்கடித்து பொறுமை காத்தாள்.

ஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய் வெளியேறுவதை பார்த்ததும் அவள் பொறுமை பறந்தது.முகம் கறுக்க வேகமாக வெளியேறியவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள். பாட்டி என்றாள் கோபமாக அவர் திரும்பி பார்க்கவும்

இவர் ஒன்றும் கண்டவர் இல்லை.இவர் என்னுடைய அத்தான்.இந்த வீட்டில் எங்கு நுழையவுமே இவருக்கு உரிமை இருக்கு.என்று கோபமாக கூறி மேலும் ஏதோ கூறப் போனவளின் கையை சட்டென பற்றி இழுத்தபடி நிலவன் வெளியேறி விட்டான்.

உள்ளே பதிலுக்கு கண்மணி கோபமாக ஏதோ கூறுவதும் மேகலா மென் குரலில் ஏதோ கூறி சாமாளிப்பதும் கேட்டது.

வெளியே வந்தவள் கோபமாக ஏன் அத்தான் என்னை பேச விடாமல் இழுத்துட்டு வந்தீங்கள்.அவங்க எப்படி பேசினாங்க.திருப்பி பேசாவிட்டால் அவங்க இப்படியே தான் எப்பவுமே பேசிட்டு இருப்பாங்க என்றாள்.


மௌனமாக அவளை பார்த்தவன் ஏன் பூவினி அவங்க பேச்சுக்கு என்னால் பதில் கொடுத்திருக்க முடியாதா?? இருந்தும் ஏன் பேசாமல் வந்தேன்??

முடியும் தான். நிலவனுக்கு எவ்வளவு தூரம் அமைதியும் பொறுமையும் உண்டோ அதே அளவுக்கு ஏன் அதை விட அதிகமாகவே கோபமும் திமிரும் உண்டு என்பது பூவினிக்கு தெரியும்.கோபம் என்றால் குரலை உயர்த்திப் பேசமாட்டான் ஆனால் அழுத்தமாக அவன் பேசும் ஒரு சில வார்த்தைகளிலேயே மற்றவரின் வாய் அடைத்துவிடும்.அப்படிபட்டவன் ஏன் இப்போது மறு பேச்சு பேசாமல் வந்தான்.


ஏன் அத்தான் ???

அத்தைக்காக பூவினி.அவர் அப்படி பேசும் போது அத்தைக்கு அது எவ்வளவு வேதனையை கொடுத்தது என்று அவர் முகத்தை பார்த்தே தெரிந்தது.இருந்தும் அவர் பாவம் எதுவும் பேசமுடியாது என்னை தவிப்புடன் பார்த்தார்.அதற்காக தான்.அதோடு அவர்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் வயதில் பெரியவர்கள் பூவினி.அவர்களை எதிர்த்து பேசுவது நல்லது இல்லை.அவர்களின் குணம் அது.அதற்காக நாமும் நம்முடைய நல்ல பண்புகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்??

ம்ம்ம் சரி தான் அத்தான்.
நானும் முடிந்தவரை எதிர்த்து பேசக்கூடாது என்று தான் பல்லைக்கடித்து பொறுமை காத்தேன்.ஆனால் உங்களை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை அத்தான்.அதான் அப்படிப்பேசி விட்டேன்.அத்தான் அவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து அதை மறந்துவிடுங்கள் அத்தான்.என்றாள் கண்கள் கலங்கி குரல் உடைய.

அவள் பேசுவதை முகத்தில் ஒரு கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தவன்.அவள் கண்கள் கலங்கவும் சட்டென அவள் கையை பற்றி

ஹே பூவினி ... நான் அதை பெரிதாக எடுக்கவில்லைமா. அவர்கள் குணம் தெரிந்ததுதானே.அதை நினைத்து நீ ஒன்றும் கஷ்டப்படாதே.என்றான்………………….

அப்போதும் அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.அவள் முகம் தெளியாததைக் கண்டவன்.

பூவினி நான் ஒன்று சொல்லவா??

ம்ம்ம் ....

அவர்கள் அப்படிப்பேசியது கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நீ எனக்காக பேசியதும் அந்த கஷ்டம் ஓடியே போய்விட்டது.என்று கூறி முறுவலித்தவன் மீண்டும் பூவினி என்றான்.

ம்ம்ம் என்னத்தான்??

நான் உன்னுடைய அத்தானா பூவினி என்றான்.ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.

அவளுக்கு அவனுடைய கேள்வி விளங்கவில்லை.ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல்

நீங்கள் என்னுடைய அத்தான் தானே?? என்றாள் குழப்பத்துடன்.

அவன் உதடுகளில் ஒரு உல்லாசச் சிரிப்புடன் அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன்

நான் உன்னுடைய அத்தானேதான் செல்லம் என்று கூறி இமைகளை சிமிட்டி முறுவலித்துவிட்டு வேக நடையுடன் சென்று விட்டான்.

பூவினிக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை.இப்போது என்ன சொன்னான் செல்லம் என்றா?? அவன் அவளை செல்லம் பூக்குட்டி என்று கொஞ்சி இருக்கிறான் தான்.ஆனால் அது


சிறுவனாய் இருக்கும் போது.இருவரும் வளர வளர அந்த அழைப்புகள் இயல்பாகவே மறைந்து மறந்து போய்விட்டன.ஆனால் இப்போது திடீரென்று அவன் செல்லம் என்று சொல்லவும் அவள் திகைத்துவிட்டாள்.

அவனின் அழைப்பும் பார்வையும் அந்த முறுவலும் அவளுக்கு.நெஞ்சுக்குள் பனிக்கட்டியை கொட்டியது போல ஒரு அவஸ்தையை கொடுத்தது.எதுவும் செய்யத் தோன்றாமல் ஓர்வித மயக்கத்துடன் சென்று கட்டிலில் விழுந்தாள்.

அவள் காதுக்குள் “நான் உன்னுடைய அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் ஆழ்ந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.இதழ்களில் ஓர் இளமுறுவல் மலர கண்மூடி அதை ரசித்தபடியே கிடந்தாள் பூவினி.

பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை தன்னுடைய அந்த மகிழ்ச்சிக்கு தானே தன்னுடைய வாயால் குழியினை தோண்டி வைத்துவிட்டோம் என்று...........
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
இதழ்:- 5



பூவினியின் காதுக்குள் ஒலித்த “நான் உன் அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் வார்த்தைகள் அவளுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் பூவினிக்கு தன்னுடைய மனம் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.



ஆம் அவள் நிலவனை நேசிக்கிறாள்.



எந்த ஒரு பெண்ணையுமே கவர்வது ஒரு ஆணின் அழகோ பணமோ அல்லவே!!!!!!!!!! அவனின் ஆண்மை.எந்த ஆபத்தும் உன்னை அணுகவிடாது உனக்கு அரண் போல நானிருப்பேன்.என்று உணர்த்தும் அவளுக்கான அவனின் பாதுகாப்பு. அதைத்தான் ஒரு பெண் விரும்புவாள்.



பூவினிக்கு நிலவன் அந்த உணர்வைக் கொடுத்தான். வீதியில் ஒருவன் குறுக்கே வந்து வழிமறித்தபோது செய்வதறியாது அவள் திகைத்து நின்ற அந்த கணத்தில் அவளுக்கு அரணாக நின்று அவளை காத்தானே அந்த நொடியில் தான் அவளுக்கு நிலவனின் மீதான காதலின் வித்து விழுந்தது.



பின் அவள் வளர வளர அவனின் மீதான அவள் காதலும் வளர்ந்து இதோ இப்போது விருட்சமாகி நிற்கிறது.அவன் மீது திருட்டுத்தனமாக படிந்து ரசிக்கும் தன்னுடைய ஓரப்பார்வைகளின் அர்த்தம் இப்போது பூவினிக்கு தெளிவாக புரிந்தது. அவனின் ஒவ்வொரு அசைவும் அதில் தெறிக்கும் கம்பீரமும் தன் மனதை அசைத்துப்பார்க்கும் விந்தை எதுவென்றும் புரிந்தது.





அவள் அத்தானை அவள் காதலிக்கிறாள்.உயிராக நேசிக்கிறாள்.அவள் நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்மியது.அதே கணம் அவனுக்கு அவளைப் பிடிக்குமா?? அவனும் அவளை நேசிக்கிறானா? என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.அதற்கு அவள் மனச்சாட்சியே பதில் கொடுத்தது.



ஹே லூசு உன்னை அவனுக்கு பிடிக்காமல் போகுமா?? சிறு வயதில் இருந்தே உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன் ஆயிற்றே அவன். உன்னுடன் அவன் உரையாடியதைப் போல சேர்ந்து விளையாடியதைப் போல அவன் வேறு யாரிடமாவது நெருக்கம் காட்டிப் பார்த்திருக்கிறாயா??? ஏன் உன் சித்தி பெண் செந்தாரிணி உன்னைப்போலவே அவனுக்கு இன்னொரு அத்தை பெண் தானே??? அவளிடம் கூட அவன் உன் அளவு நெருக்கத்தை காட்டியதில்லையே???? என்று.



அது உண்மை தான்.நிலவன் அவளிடம் காட்டிய நெருக்கம் போல வேறு யாரிடமும் அவ்வளவு நெருக்கத்தை காட்டியதில்லை.உரிமையுடன் பேசியதில்லை. இவளைக் கண்டால்



ஹே ஆடுகால் எங்கடி இந்தப்பக்கம்???? என்று உரிமையுடன் கேலி செய்பவன் செந்தாரிணியை கண்டால் வா தாரிணி என்ற ஒரு முறுவலுடன் கூடிய அழைப்புடன் விலகிவிடுவான்.



அவனுக்கு பூவினியை சீண்டப் பிடிக்கும்.அவள் சற்று உயரமாய் இருப்பதால் ஆடுகால் என்று கேலி செய்வான்.அதாவது ஆட்டின் கால் போல ஒல்லியாக நீட்டாக இருக்கிறாளாம் என்று.பதிலுக்கு இவளும் திருப்பி கொடுப்பாள்.



நீங்கள் கொக்கைத்தடி போல இருந்து கொண்டு என்னை சொல்றீங்களா??? என்று கொக்கைத்தடி என்றாள் கிராமப்புறங்களில் உயரமான மரத்தில் இருந்து ஆடுகளுக்கு இலை குழை பறிக்க பயன்படும் சற்று மெல்லிய நீளமான தடி.அதன் நுனியில் “சத்தகம்” எனப்படும் சின்ன அரிவாள் போன்ற ஒரு கத்தி கட்டப்பட்டு இருக்கும்.அதனால் வளைத்து மரத்தில் உள்ள இலைதழைகளையோ காய் கனிகளையோ பறிக்கலாம்.



இப்படி சரிக்கு சரி அவனுடன் வாயடிப்பதும் அவள் தான்.பூவினியை தவிர மற்ற சிறியவர்களுக்கு நிலவன் என்றால் ஒரு பயம் மரியாதை. அவர்கள் எதுவானாலும் “வினிக்கா” என்று வந்து நிற்பது அவளிடம் தான்.அவர்களுக்கு பெரியவர்களிடம் எதற்காவது அனுமதி வேண்டுமெனில் அது முதலில் பூவினி காதில் ஓதப்பட்டு பூவினி மூலமே நிலவனிடம் செல்லும்.சரியான காரணமாக நிஜாயமான ஆசையாக இருந்தால் அது திரு நிலவன் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பெரியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இல்லையேல் அம்போ தான்.இப்படி அவளுக்கும் அவனுக்குமான நெருக்கம் அதிகம் தான்.



அதே சமயம் பூவினி என்னதான் அவனிடம் வாயடித்தாலும் சற்று பயந்து சொல்பேச்சு கேட்டு அடங்கி நடப்பதும் அவனிடம் தான்.அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.



சிறு வயதில் இருந்தே அந்தக் குடும்பத்தில் அவளுக்கு சற்று அதிக செல்லம்.அதனால் அவளின் குறும்புகளும் சற்று அதிகம் தான். அவள் என்ன குறும்பு செய்தாலும் தாத்தா பாட்டியோ தந்தையோ மற்றவர்களோ அதை தட்டிக் கேட்பது இல்லை.மேகலா ஏதாவது சொன்னாலும் விடு மேகலா குழந்தை தானே.என்று பத்மன் அவளை அடக்கி விடுவார்.அவள் தந்தைக்கு அவள் எப்போதுமே குழந்தை தான்.அதனால் அவளைக் கண்டிப்போர் இல்லை.



ஒரு சமயம் பூவினியின் குறும்பு அளவு மீறிப் போய்விட்டது. அவர்கள் வீடு வீதி ஓரத்தில் இருந்தது.வீட்டினுள் குறும்பு செய்து சலித்துப் போன பூவினிக்கு.அன்று ஒரு புதுவிதமான எண்ணம் தோன்ற ஒரு பை நிறைய குருனிக்கற்களை நிறைத்துக்கொண்டு மதிலின் மேல் ஏறி மரங்களின் மறைவில் ஒழிந்து கொண்டவள்.வீதியால் சென்றவர்களின் மீது ஒவ்வொரு கை குறுணிக்கற்களை அள்ளி மறைவில் இருந்து எறிந்தாள்.கல் பட்டதும் அவர்கள் உடலை நெளித்து சுள்ளிட்ட இடத்தை தடவியபடியே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு போனதும் உற்சாகம் ஆகிவிட்டது பூவினிக்கு.மீண்டும் மீண்டும் அவள் அதையே செய்தாள்.



ஆனால் சற்று நேரத்திலேயே ஒரு சிலர் வீட்டு வாசலின் முன் கூடி தந்தையை அழைக்கவும்தான் தான் செய்த செயலின் விபரீதம் புரிந்தது. அப்போது தான் வேலை முடிந்து வந்து ஜெகநாதனும் பத்மனும் அலுவலக விடயமாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு வாயிலுக்கு வந்தனர்.



வாயிலில் நின்றவர்களின் முறைப்பாட்டை கேட்டவர்கள் திகைத்து விட்டனர்.



என்னது கல் எறிந்தார்களா?? இங்கிருந்தா?? என்றார் பத்மன்.



ஆமாங்க ..இந்த வாசலால கடந்து போகும் போது தான்.சின்னக்கற்கள் சுள் சுள் என்று முதுகில வந்து பட்டிச்சு.இந்த மதில் கரையில் இருந்து தாங்க வந்திச்சு. என கூறவும் பூவினிக்கு திக் என்றது.சட்டென கை கால்களைச் சுருக்கி மரங்களின் மறைவுக்குள் மேலும் மறைந்து கொண்டாள்.அது மாலை மங்கும் நேரம் என்பதால் அந்த லேசான இருளும் மரங்களின் மறைவும் அவளை அவர்களின் கண்ணுக்கு புலப்படாமல் நன்கு மறைத்தது.





ஆனால் சத்தம் கேட்டு அங்கு வந்த நிலவனின் கண்களுக்கு அவளின் கொலுசு போட்ட குட்டிப் பாதங்கள் தெரிந்து விட்டது.



வந்தவர்களில் ஒருவன் இந்த மதிலில் இருந்து தான் கல்லு வந்தது.இதில் மறைந்திருந்து தான் யாரோ எறிகிறார்கள் போல.இருங்கள் பார்ப்போம் என மதிலில் ஏறப் போனான்.



சட்டென நிலவன் நான் தான் எறிந்தேன்.என்றான். என்ன நீயா?? என்று பத்மன் கேட்கவும்

ஆமாம் மாமா இவர்களுக்கு எறிய வேண்டும் என்று எறியவில்லை.சும்மா எவ்வளவு தூரம் போகிறது என்று எறிந்து பார்த்தேன் என்றான் தலையை குனிந்தபடி.



அவன் கூறியதை கேட்டவர்கள் ஏன் தம்பி உனக்கு விளையாட வேறு பொருட்கள் கிடைக்கவில்லையா?? தட்டித்தவறி கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆவது?? என்றவர்கள் சரி இனியாவது பார்த்து விளையாடு என்று பெருந்தன்மையாக அறிவுரை கூறிவிட்டு சென்றுவிட்டனர்.





ஜெகநாதனும் பத்மனும் அவன் மீது ஒரு பார்வையை செலுத்தி முறுவலித்து அவனது தலையை வருடிவிட்டு சென்றனர்.பூவினிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அத்தான் தான் செய்ததாக சொன்னான்.அதைவிட அப்பாவும் மாமாவும் அவனை திட்டாமல் சென்றது வேறு அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அவளுக்கு தெரியவில்லை அவர்கள் நிலவனின் பார்வை போன திசையை வைத்தே அவளைக் கண்டுவிட்டனர் என்று.



அவர்கள் செல்லவும் நிலவன் மதிலுக்கு அருகில் வந்தான்.பூவினி மேலும் மறைய முற்படவும்



ஏய் வானரம்.நீ தான் இந்த வேலையை செய்தது என்று தெரியும் இறங்கு.என்றான்.



அவள் முழித்தபடி இறங்கவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு முழியைப்பார் என்று திட்டியவன்.இனி இப்படி ஏதாவது செய்தால் மாமாவிடம் இதை போட்டுக்கொடுத்துவிடுவேன். என்று மிரட்டினான்.



பூவினிக்கு புரிந்தது.தான் இன்று செய்தது சற்று அதிகப்படி.இது தெரிந்தால் நிச்சயம் தந்தை திட்டுவார்.அம்மா அடித்தே விடுவார் என்று அதனால் எதுவும் பேசாது



இனி இப்டி செஞ்ச மாட்டேன்.என அவனுக்கு அடங்கி போனாள்.அவன் தன்னை காட்டிக் கொடுக்கவில்லை என்ற நன்றி உணர்வும் இருக்க அதன் பின் அவன் வார்த்தைகளுக்கு சற்று அடங்கி நடப்பது வழக்கமாகிவிட்டது.



அவள் மனம் எங்கேயோ சுற்றி மீண்டும் அவனும் தன்னை நேசிக்கிறானா?? என்ற சந்தேகப் புள்ளியிலேயே வந்து நின்றது.



அந்த சந்தேகம் அவளுக்கு தோன்றியிராவிட்டால் அல்லது நிலவன் தன் காதலை நேரடியாகவே அச் சமயம் அவளிடம் வெளிப்படுத்தி இருந்தால் அவர்களின் பிரிவுக்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்.விதி வலியது ..
 
Top