• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"மனசுக்குப் பிடிச்சவன் கூட பிடிச்ச மாதிரி வாழ முடியாம என்னையும் கஷ்டபடுத்திகிட்டு உங்களையும் கஷ்டபடுத்தி.... இதெல்லாம் அனுபவிக்கிறதுக்கு நான் அன்னைக்கே செத்திருக்கலாம்." என்று கண்களில் கண்ணீர் கோர்த்திருந்த போதும் வெறிப்படித்தவளைப் போல் கத்திய நேத்ரா அவனுக்கு புதிதாகத் தெரிந்திட,

"இதோ பார், யாரோட சாவும் எந்த ப்ரச்சனைக்கும் முடிவாகாது... மூனு வர்ஷத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் சொன்னதை மனசுல வெச்சுகிட்டு உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்குற முட்டாள் நீ...

அவன் பேச்சை பொய்யாக்கி என் காதலும் என் தருவும் தான் எனக்கு எல்லாம்னு காண்பிக்கிறதுக்கு எனக்கு ரெம்ப நேரம் ஆகாது... ஆனால் மூனு வர்ஷத்துக்கு முன்னாடி அவன் சொல்லும் போது வலிக்காதது இப்போ ஏன் வலிக்குதுனு யோசிச்சிருந்தா உன் ப்ரச்சனைக்கு நீயே முடிவு கண்டுபிடிச்சிருப்ப... அதைவிட்டுட்டு ஏன் உயிரோட இருக்கேனு யோசிச்சாளாம்... பைத்தியக்காரி..."

முட்டாள், பைத்தியக்காரி என்ற வார்த்தைகளில் கோபமுற்ற போதும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருந்தாள். அதுவே சொல்லியது அவள் இப்போது தான் அவன் கூறியது போல் யோசிக்கிறாள் என்று.

"அன்னைக்கு அவன் சொல்லும் போது உன் மனசுல யாரும் இல்லே... இன்னைக்கு நான் இருக்கேன்... என் மேல அளவுக்கு அதிகமா காதல் இருக்கு... அந்த காதல் உன்னை ஏமாத்திடுமோனு பயம் இருக்கு... அந்த பயம் உன்னை என்கிட்ட சகஜமாக் கூட பேசவிடமாட்டேங்குது..." என்று நிதானமாக எடுத்துக் கூறிட,

"ஹான்... அது எனக்கும் தெரியும்... அந்த பயத்துல உங்களை கஷ்டப்படுத்திருவேன்னு தான் மொதோ இருந்தே உங்களை கல்யாணம் செய்துக்கமாட்டேனு சொன்னேன்... ஆனால் நீங்க தான் பிடிவாதமா என்னை கட்டிக்கிட்டு இப்போ கஷ்டபடுறிங்க..." என்று கன்னம் தொட்ட கண்ணீரை துடைத்து, மூக்குவிடைக்க வாக்குவாதம் செய்தாள்.

அவள் கூறிய விதத்திலேயே அறிந்து கொண்டார், அவள் கூறும் கஷ்டம் எதுவென்று... அதில் கோபம் எட்டிப்பார்க்க,

"நீ உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க!!! உன்னை அனுபவிக்க முடியாம தவிக்கிறேன்னா? கொன்னுடுவேன்..." என்று அமைதியாகவே ஆள்காட்டி விரல் உயர்த்தி எச்சரிப்பது போல் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

"அப்படி ஒரு நெனப்பு இருந்தா, இப்பவே இருந்த தடம் தெரியாம அழிச்சிடு... உன்னோட பயத்தை தற்காலிகமா, உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா படுக்கைல மட்டும் அந்த பயத்தை விரட்டிவிட்டு என்னால உன் கூட சேர முடியும்... ஆனால் எனக்கு அது தேவையில்ல... மொத்த பயத்தையும் குப்பைல தூக்கிப் போட்டுட்டு என்கிட்ட நெஞ்சை நிமித்தி திமிரா பேசுற என் தருவா திரும்பி வா..." என்று அவன் கோபத்திலும் அதே நிதானத்தோடு பேசிட,

அவனின் நிதானத்திற்குப் பின்னால் இருக்கும் கோபத்தை புரிந்து கொண்டாலும் அவனின் 'என் தருவா திரும்பி வா' என்ற வார்த்தைகளில் தைரியம் பெற்றவளாய், காதல் பெருக்கெடுத்தவளாய், அவன் தன்னை மாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டவளாய் அவனிடமே அவள் மனம் தஞ்சம் அடையத் துடித்தது.

"என்னை பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்குற, இவ்ளோ சொல்ற நீங்களே என்னை மாத்துறதுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?..." என்று வீராய்ப்பாய் எதிர்கேள்வி கேட்டிருந்தாலும், அவளின் குரல் அவளையும் அறியாமல் குலைந்தது.

அவளின் குலைவுப் பேச்சிலும், முகத்தில் தெரிந்த விரைப்பிலும் ஒருநொடி ரசனைச் சிரிப்பு சிந்த தோன்றினாலும், இப்போது அதற்கான நேரமில்லை என்று உணர்ந்து,

"சரி... இப்போ உன் வழிக்கே வரேன்... கல்யாணத்து முன்னாடியே ரெண்டு மாசம் தான் உன் பின்னாடி சுத்துனேன். என் காதலை எல்லா விதமாவும் உனக்கு உணர்த்தினேன். மொதோ என் காதலை 'ஐ ஐவ் யூ'னு வார்த்தையா சொன்னேன். அப்பறம் நான் உனக்கு துணையா எப்பவும் இருப்பேன்னு உடல் ரீதியா என் அணைப்பு மூலமா சொன்னேன். உனக்காகவும், வெண்பாக்காவும் அந்த மதனை கேஸை வாப்பஸ் வாங்க வெச்சேன்... அதுக்கு நீ என்னை காயப்படுத்தினதும் உனக்கு நியாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்." என்று அவளை சாடும் பார்வை பார்த்திட பேதையவள் தலைகுனிந்து நின்றாள்.

"அதையும் பொருட்படுத்தாம உன்னை தான் கல்யாணம் செய்துப்பேன்னு உறுதியா சொல்லிட்டு தான் இங்கே வந்தேன். கடைசியா எனக்கு நீ பொண்ணு பார்த்து வெச்சிருந்தப்பக் கூட 'நீ என்னை விரும்புரியா?'னு கேட்டேன். இந்த எல்லா நேரத்துலேயும் உன் விருப்பத்துக்காக, உன் வாய்மொழி வார்த்தைக்காக, காத்திருந்த என்கிட்ட உன் பிடிவாதத்தை தான் காட்டினே...

ஆனால் இப்போ வேறவிதமான பிடிவாதம்... நீ செக்ஸுவல் லைஃப் வாழ தயார் இல்லேனு நெனைக்கிற... இப்போ இதுல நான் உன்னை மாத்த முயற்சி பண்ணிருந்தா என்ன செய்திருப்ப?

இன்னும் கொஞ்சம் வீம்பு பிடிச்சு அப்போ எனக்கு பொண்ணு பார்த்து வெச்ச மாதிரி இப்போ சொல்லாம கொள்ளாம டைவர்ஸ் அப்ளை பண்ணிருப்ப, அப்படி இல்லேனா

'ராம்... நான் உங்களுக்கு பொருத்தம் கெடையாது. ஒரு மனைவியா உங்க தேவையை என்னால நிறைவேத்தி வைக்க முடியாது. அதனால நான் வெண்பாவை கூட்டிட்டு போறேன். நீங்க வேற கல்யாணம் செய்துக்கோங்க. பின்குறிப்பு: இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் ஒரு போதும் நான் தான் முதல் மனைவி என்று சொல்லிக்கொண்டு சண்டையிடமாட்டேன். இதனை என் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம்'னு லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிருப்ப..." என்று அவன் மூச்சுவிடாமல் கூறி முடித்திருக்க,

ஏற்கனவே அவனது பேச்சில் அவளிடம் டாட்டா சொல்லி பறந்திருந்த கோபமும், ஈகோவும், அவளை சிரிக்கத் தூண்டிட, சிரிப்பை அடக்க முடியாமல் கிளுக் என சிரித்து அவசரமாக கை கொண்டு வாய் மூடிக் கொண்டாள்.

பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு இருக்கையில் எழுந்து தன் பாக்கெட்டில் கைகளை வைத்துக் கொண்டு, "இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?" என்று சீரியஸாக வினவிட,

"அப்படியே எழுதிவெச்சிட்டு போனா மட்டும் என்னையும், பொம்மியையும் விட்டுடுவிங்களா என்ன!!! உலகத்துல எந்த கடைகோடி மூலையில இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு காதைப் பிடிச்சு திருகி கூட்டிட்டு வந்திடமாட்டிங்க!!!" என்றிட, அது உண்மை தானே என்று நினைத்த நொடி அவனும் புன்னகைத்தான்.

இவ்வளவு நேரம் அவள் தன் பாராமுகத்தால் வருந்துகிறாள் என்று ஒருவிதமான மன உழைச்சலில் இருந்தவனுக்கு அவளின் சிரிப்பும், பேச்சும் கொஞ்சம் மனதிற்கு இதமழிக்க சிலநொடிகள் தன்னை ஆசாவாசப்படுத்திக் கொண்டான்.

"நான் வேணுனா ஒரு ஐடியா சொல்லட்டா?" என்று அப்பாவியாய் வினவினாள் நேத்ரா.

"என்ன?"

"கவுன்சிலிங் போகட்டா?"

"அடியேய்... அப்படியே அறஞ்சேனா தெரியும்..." என்று மீண்டும் உருமினான்.

அவனது உருமலில் அவளும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று,

"இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்? இப்படி கோபப்படுறிங்க!!! கவுன்சிலிங் போறேனு சொன்னது தப்பா?" என்றவள் இப்போதும் கோபம் போல் குலைந்திட,

மீண்டும் அவளின் கொஞ்சல் பேச்சில் கரைந்தவன் தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொண்டு, "நேரம் கெட்ட நேரந்துல குலையாதே டீ." என்று பொய்யாய் பல்லைக் கடித்துக் கூறிவிட்டு,

"பின்னே... வெண்பாகுட்டிக்கு பாப்பாவோ தம்பியோ பெத்து கொடுத்துட்டா உன் வேலை முடிஞ்சது, அதுக்கப்பறம் கொடி மாதிரி வீட்லயே உக்காந்து ஒப்பேத்திடலாம்னு நெனச்சியா?" என்று குட்டிக் கோபம் எட்டிப் பார்க்க வினவினான்.

"அதுக்காக திரும்பவும் இங்கே ஃபிப்டீன் டேஸ், மதுரைல ஃபிப்டீன் டேஸ் இருந்து சில்க் சென்டரை பார்த்துக்க சொல்றிங்களா? என்னாலேலாம் முடியாது... இனிமே நான் உங்க கூட தான் இருப்பேன்..." என்று அவளும் கோபமாகக் கூறினாள்.

"ஏய் ராட்சசி... பேச்சு பேச்சா தான் இருக்கனும்னு நெனைக்கிறேன். வாய்க்கு வேறவேலை கொடுத்திடாதே... அப்பறம் நீ தான் உதடு வீங்கித் திரியனும்..." என்று சிரியாமல் கோபம் போல் கூறிட, நறுமுகையவள் முதலில் புரியாமல் விழித்து அவனைப் பார்க்க, அவன் பார்வை மொட்டாய் குவிந்திருக்கும் அவள் இதழின் மேல் இருந்தது.

இப்போது அர்த்தம் புரிந்திட, அவசரமாக தன் கை கொண்டு இதழ் மறைத்தாள். அதில் அவன் பார்வை மைவிழிக்கு இடம் மாறிட, பெண்ணவளின் நாணம் கண்கள் தாண்டி கன்னம், காது என பொங்கிப் பெருகியது. அதில் மகிழ்ந்தவன் காந்தச் சிரிப்பை சிந்தி அவளை மேலும் வெட்கம் கொள்ளச் செய்தான்.

வெட்கத்தில் அவன் முகம் காண முடியாமல் திண்டாடியவள் இதழ் மறைத்த கைகள் கொண்டு முகம் மறைத்து ஒற்றைக் கண்ணால் அவனைப் பார்த்து நின்றாள். முதல்முறையாக மனையாளின் வெட்கத்தைக் கண்டவனின் உடலுக்குள் வேதியியல் மாற்றம் நிகழ, தன்னையும் மறந்து அவள் புறம் இரண்டடி எடுத்து வைக்க பெண்ணவள் மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

அவளின் பின்னலிட்ட கூந்தலின் பாதிவரை சாதிமல்லிப் பூச்சரம் தவழ்ந்திட அதனோடு சேர்த்து தன்னவளின் வாசம் நுகர விரும்பிய மனதையும், தள்ளிப்போகதே.... அவளைவிட்டு தள்ளிப்போகாதே எனக் கெஞ்சிய கால்களையும் கடினப்பட்டு அடக்கி,

"சரி எனக்கு டைம் ஆகுது... நான் திரும்ப கம்பெனிக்குப் போகனும். நாளைக்கு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு, அதுக்கான வெர்க்ஸ் முடிச்சிட்டு வரதுக்கு லேட்நைட் ஆகும். இப்போ நீ மெயிலை படிச்சுபாரு. நான் ப்ரின்ட்அவுட் எடுத்து ஃபில் பண்ணி வெக்கிறேன்." என்று கூறி அவள் ஃபோனை அவளிடமே கொடுத்துவிட்டு அலுவலக அறை நோக்கிச் சென்றான்.

மணவாளன் விலகிச் செல்ல, இனம் புரியாத தனிமையை உணர்ந்தவள், 'எப்படியும் அவன் ஃபார்ம் ஃபில் பண்ணும்போது அவனுடன் இணைந்து படித்துக் கொள்ளலாம்' என்ற எண்ணத்தில் அவன் பின்னாள் விரைந்தோடி வந்தாள்.

அவள் தன் பின்னால் ஓடி வருவதை உணர்ந்த நொடி நின்று அவளைத் திரும்பிப் பார்க்க, அவன் மனையாள் அவன் மேல் மோதி நிலைதடுமாறிச் சரிந்திட, அவளின் இடையோடு வளைத்துப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து நிறுத்தினான். அவளும் விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி அவன் சட்டையின் காலரைப் பிடித்து கண்கள் மூடி அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

தன் கண்ணாட்டியின் கன்னம் தீண்டய அங்கம் அணிந்திருக்கும் ஆடையையும் ஊடுருவி உள்ளமதை உரசிட, சில்லிட்ட இதயம் சிறகில்லாமல் பறப்பது போல் உணர்ந்தான். அடுத்த நொடி அவளை கையில் ஏந்திக் கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்தவன், சுழல் நாற்காலியை கால்களால் நகர்த்தி அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

அவள் இடையில் ஒற்றைக் கை வைத்துப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கணினியை உயிர்ப்பித்தான். கண் விழித்துப் பார்த்தவள், அவன் கை இடையில் பதிந்திருக்க, சற்று நெளிந்து கொண்டே,

"கைய எடுங்க..." என்று வெளிவராத குரலில் உரைத்தாள்.

"உன் பயத்தை விரட்ட ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே..." என்று கணினித் திரையைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

அவனின் பதிலில் புன்னகைக்கத் தோன்றினாலும், முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, நெற்றியை சுருக்கி "இது பேர் ஹெல்ப்பா?" என்றிட,

அவள் நெற்றியில் முட்டி, "எனக்கு இப்படித் தான் ஹெல்ப் பண்ணத் தெரியும்." என்று கூறி புன்னகைத்தான்.

பின் தன் பணியில் கவனம் செலுத்திட, பெண்ணவளும் கணினித் திரையில் கண் பதித்தாள். அதில் தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது, ஏதோ உதவிக்குழு சம்பந்தமான பாரம் போல் தோன்றிட,

"இது என்ன? எதுவும் ட்ரஸ்ட் மாதிரியா?"

"ட்ரெஸ்ட் இல்லே... ஹெல்ப் லைன்... இதுக்கு ஒரு நல்ல நேம் சூஸ் பண்ணு..."

"நீங்க ஆரம்பிக்கப்போறிங்களா?" என்று கேட்கும் போதே ஏதோ பொறிதட்டியது போல் தோன்றிட, "நானா?" என்று ஆச்சரியமாக வினவினாள்.

அவள் கண்களைப் பார்த்து மேலும் கீழுமாக தலையாட்டினான்.

"இதுக்கெல்லாம் நேரம் இருக்காது ப்பா... அதுவுமில்லாம இதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது?"

"அதெல்லாம் தெரிஞ்சுக்கலாம். நாளைக்கு அமியும் வந்திடுவாங்க, ரெண்டு பேரும் சேர்ந்து தான் ரன் பண்ணப்போறிங்க. ரிட்டயர்டு சைக்காலஜி ப்ரோஃபசர் இரண்டு பேர் உங்க ஹெல்ப்புக்கு வருவாங்க... லேடீஸ் தான்... நீ கவுன்சிலிங் போகத் தேவையில்லே, உன்கிட்ட கவுன்சிலிங் வருவாங்க... அவங்களை கைட் பண்ணு...

உன்னை நம்பி எவ்ளோ பெரிய வேலை அசைன் பண்ணிருக்கேன்... நீ என்னடானா கவுன்சிலிங் போகட்டா? கொழந்தை பெத்துக்கட்டா?னு கேட்குறே!!!" என்று அவளை கிண்டல் செய்யவும் தவறவில்லை.

"நான் கவுன்சிலிங் கொடுக்கனுமா!!! இது கண்டிப்பா முடியாது... நான் ஏதோ மாதர் சங்கம், மகளிர் மன்றம் மாதிரினு நெனச்சா... பொம்மிய வெச்சுகிட்ட இது இப்போ தேவையா ராம்... சொன்னா கேளுங்களேன்..." என்று எழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கிப் பிடித்து மீண்டும் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

இதற்கிடையே ஃபார்மை அச்சுப்பொறியில் அச்செடுத்த நிரப்பத் தொடங்கியிருந்தான்.

"சரி யாருக்கு கவுன்சிலிங் கொடுக்கனும்? நம்ம வெர்க்கர்ஸ் அல்லது அவங்க ஃபேமிலி அந்த மாதிரியா?"

"ஸ்கூல், காலேஜ் படிக்கிற பொண்ணுங்களுக்கு... வீட்ல டிஸ்கஸ் பண்ண முடியாத சந்தேகம், உடல் ரீதியான மாற்றம், மன உழைச்சல், செக்ஸ் டார்ச்சர், பக்கத்து வீட்ல மிஸ் பிகேவ் பண்ணுறாங்க, கூட வேலை பாக்குற இடத்துல தப்பா நடந்துக்கிறாங்க... இந்த மாதிரி போன் பண்ணினா அவங்க சந்தேகத்தை தீர்த்து வைக்கனும்." என்றவுடன் கண்கள் கலங்க அவன் மடியில் அமர்ந்த நிலையிலேயே அவன் கழுத்தைச் சுற்றி இறுக அணைத்துக் கொண்டாள்.

-ஊடல் கூடும்.​
 
Top