• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
இரவு நீள்சாய்விருக்கையில் படுத்து உறங்கியவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு தன் படுக்கையில் படுக்க வைத்து அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான் ராம்.

காலையும் அதே போல் வெண்பா மற்றும் நேத்ரா இருவரின் தூக்கமும் கலையாத வண்ணம் எழுந்து அலுவலகம் தயாராகிக் கொண்டிருந்தான். எப்போதும் துயில் கலையும் நேரத்தில் கண்விழித்த நேத்ரா முதலில் கண்டது, உடைமாற்றும் அறையில் டக்கின் செய்யப்பட்ட கருப்பு சட்டையும், சந்தன நிற கால் சட்டையும் அணிந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்த ராமைத் தான். அவன் படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்து கொண்டதும் படபடவென எழுந்து அமர்ந்தவள், ஒரு நிமிடம் குழம்பிப் போனாள்.

இரவு முன்னறை நீள்சாய்விருக்கையில் படுத்து உறங்கியது நினைவு வர 'எல்லாம் இவன் வேலையாகத் தான் இருக்கும்... எப்போது வந்தான்!!! எதற்கு என்னை இங்கே படுக்க வைத்தான்? சரியான ஃப்ராடு...' என்று திட்டிக்கொண்டே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

கண்ணாடி வழியாக மெத்தையில் எழுந்து அமர்ந்திருப்பவளைக் கண்டு "குட் மார்னிங் தரு. ஹேவ் அ நைஸ் டே" என்று வாழ்த்திட, பதிலேதும் சொல்லாமல் அவனையே உறத்து விழித்தாள்.

"இம்பார்ட்டன் போர்ட் மீட்டிங் போறேன். ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ல?.." என்று அவளிடம் வினவிட, அப்போதும் பதில் ஏதும் கூறாமல் எழுந்து அவனைக் கடந்து குளியலறை நோக்கி சென்றாள்.

தன்னைக் கடந்து சென்றவளின் இடையை வளைத்துப் பிடித்து, "இப்போ எனக்கு விஷ் பண்ண முடியுமா? முடியாதா?" என முகம்கொள்ளாப் புன்னகையுடன் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் எப்போதும் போல் எதிர்கேள்வி கேட்டாள்.

"என்னை எதுக்கு உங்க பெட்ல படுக்க வெச்சிங்க? உங்க ஹெல்ப்லைன் பான்டிங்ல சைன் பண்ணினதுக்கா?" என்றிட,

அவனின் சிரித்த முகம் நொடியில் மாறி, கைகள் அவளை விடுவித்திருந்தது. "மார்னிங்கே மூட்அவுட் பண்ணாதே" என்று கூறிவிட்டு கழுத்துக்கச்சு எடுத்து அணியத் தொடங்கினான். ஆனால் அவளின் கேள்வியே காதுக்குள் மீண்டும் மீண்டும் கேட்க, சரியாக அணிய முடியாமல் போக எரிச்சலுடன் உச்சுக் கொட்டி ட்ரசிங் டேபிலில் டை-ஐத் தூக்கி எறிந்தான்.

தான் கையெழுத்து இடவில்லை என்றாலும், அவன் நிச்சயம் நேற்று தன்னை தனியாக படுக்கவிட்டிருக்கமாட்டான், என்று தெரிந்தும் எப்போதும் அவனை எதிர்த்து கேள்வி கேட்கும் துடுக்குத்தனத்தில் தான் கேட்டாள். இப்போது அவனின் டென்ஷனைப் பார்த்தப் பின் அதனைக் குறைக்க நினைத்து,

அவன் எறிந்த டையை எடுத்துக் கொண்டு அவன் அருகே நேத்ரா செல்ல, அவன் அவள் கையைத் தட்டிவிட்டான். அவனின் உதாசினத்தைப் பொருட்படுத்தாமல், மீண்டும் டையை அவன் கழுத்தில் போட முயற்சிக்க அவன் மீண்டும் தட்டிவிட்டான்.

சட்டென அவன் தாடையைப் பிடித்து முகத்தை ஒருபக்கமாகத் திருப்பி அவன் உயரத்திற்கு தன் கால்களை எக்கி அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் தனக்குக் கிடைத்த முத்தத்தில், மெய்மறந்து என்ன நடந்தது என அவன் யோசித்துக் கொண்டிருந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி அவனுக்கு டை அணிவித்துவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறை சென்றுவிட்டாள்.

அவள் விலகிச் சென்றப்பின், மயக்கத்தில் இருந்து தெளிந்தவன் போல் தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு, விசிலடித்தபடி தன்னை கண்ணாடியில் பார்த்து பலமுறை ரசித்துக் கொண்டான். அவள் குளித்து முடித்து வரும்வரை காத்திருக்க நினைத்து, பேருக்கு என்று ஒரு கோப்பை எடுத்துக் கொண்டு முன்னறையில் அமர்ந்திருந்தான். அவன் கவனம் அந்த கோப்பில் சுத்தமாக இல்லை என்பது அவன் தனக்குத் தானே அடிக்கடி சிரித்துக் கொள்வதிலேயே தெரிந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அபியிடம் இருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தவன், சுரத்தையே இல்லாமல் "ஹலோ" என்றிட,

"பையா, ஐ ம் ரெடி. ஆர் யூ?" என்றிட,

இதனை எதிர்பார்த்தவன், "ஹாங்... சோட்டூ, கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்... கீழே வரேன்..." என்று உள்ளே சென்ற குரலில் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

"ஹேய்... ராட்சசி... கிளம்பிட்டேன் டீ பைய்... கடைசி வரை விஷ் பண்ணலேல நீ... ஈவ்னிங் வந்து கவனிச்சுக்கிறேன்..." என்று குளியலறை வாசலில் நின்று அவளுக்குக் கேட்கும்படியாக சத்தமாக கூறிவிட்டு, தன் ப்ளேசரை எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.

ஏனோ அவளுக்கும் அவனை இப்படியே புலம்மவிட்டு வழியனுப்ப மனம் இல்லாமல், குளித்து முடித்திருந்தவள் அவசர அவசரமாக உடை மாற்றிவிட்டு வெளியே வர அவன் அவர்கள் அறையைவிட்டு வெளியேறியிருந்தான்.

விழுந்தடித்துக் கொண்டு இன்டர்காமை எடுத்து கீழே ஹாலிற்கு டயல் செய்தாள். மறுமுனையில் அபி அழைப்பை எடுக்க,

"அபி ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க, உன் அண்ணன்கிட்ட நான் வெய்ட் பண்ண சொன்னதா சொல்ல வேண்டாம்" என்று கூறி அவன் சம்மதத்திற்குக் கூட காத்திறாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவசரமாக பின்னலிட்டு, ஒரு பொட்டையும் நெற்றியில் ஒட்டிக் கொண்டு கீழே விறைந்தாள்.

அதற்குள் அங்கு அபியோ 'ஏதாவது பொய் சொல்லி பையாவை பிடிச்சு வைக்கனுமே!!!' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ராம் அவன் அருகே வந்திருந்தான்.

பாரியும், புகழும் கூட தயாராகி ஆளுக்கு ஒரு ஷோஃபாவில் அமர்ந்திருக்க, "சோட்டூ... போலாம்..." என்று அழைத்தான் ராம்.

"ஆங்... எஸ் பையா... பையா ஒன் மினிட்... நான் என் ரூம்ல ஏதோ மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்... இதோ எடுத்துட்டு வரேன்..." என்று கூறி நகர்ந்தவனை கைபிடித்து நிறுத்தி,

"நீ எடுத்துட்டு வரதுக்கு தான் ஒன்னும் இல்லேயே... ஃபைல்ஸ், பென்டிரைவ், லேப்டாப் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு... நான் தான் எல்லாம் எடுத்துக்கிட்டனே... அப்பறம் எதை நீ மறந்து வெச்சிட்டு வந்த?"

"அது.... அது... இல்ல பையா.... நான்.... ஹாங் நியாபகம் வந்திடுச்சு... பென் மறந்து வெச்சுட்டேன்... எடுத்துட்டு வரேன்..."

"பென்னா(pen)? அது எதுக்கு டா?"

"சைன்... சைன் பண்ண பென் வேணுமே!!!"

"வாட்? அங்கே ஒரு பென் கூட இல்லாமலா மீட்டிங் அரேன்ஞ் பண்ணுவாங்க!!! அதுல சைன் பண்ணிக்கோ... வா போலாம்"

"அய்யோ பையா அது என் லக்கி பென் பையா... அதுல தான் சைன் பண்ணினா தான்...., நான் ஃபியூட்சர்ல ஷைன் ஆவேண்னு எனக்கு ஒரு நம்பிக்கை... நான் போயி எடுத்துட்டு வரேன்..."

"டேய்... நாம ஒன்னும் நீயூ பாட்னர்ஷிப் மேக் பண்ணி பிஸ்னஸை வேற லெவெலுக்கு இம்ப்ரூவ் பண்ணப் போகலே , இருக்குற பாட்னர்ஷிப கேன்சல் பண்ணி சைன் பண்ணப் போறோம்... அதுல நமக்கு ஏகப்பட்ட லாஸ்... அந்த சைனைப் போடுறதுக்கு உன் லக்கி பென் வேணுமா உனக்கு?" என்று அவன் அபியைத் திட்டி கொண்டிருக்கும் போதே அவர்களின் பேசுவதை காதில் வாங்கியபடி கீழே இறங்கி வந்தாள் நேத்ரா.

ஆனால் அப்போதைக்கு அதனைப் பற்றி யோசிக்கத் தோன்றாமல், நேரே பூஜையறை சென்று பூங்கொடி ஏற்றி வைத்திருந்த தீபத்தட்டை எடுத்துக் கொண்டு இருவரின் முன்னும் வந்து நின்றாள்.

அபியின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு "ஆள் தி பெஸ்ட்" என்று கூற, ராம் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். ராமின் கவனம் நேத்ராவின் பக்கம் திரும்பியதை உணர்ந்த அபி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

நேத்ரா தன்னவனின் நெற்றில் திருநீறு பூசிவிட்டு,

"எனக்கு குங்குமம் வெச்சுவிடுங்க?" என்றிட, அவனும் அவளை முறைத்தாலும் மறுப்புக் கூறிமல் அவள் உச்சிவகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைத்துவிட்டான்.

"விஷ் யூ ஆள் தி பெஸ்ட்..." என்றிட,

"இதை ரூமுக்குள்ள வெச்சு சொல்லிருக்கலாம், இன்னோரு முத்தமாவது கெடச்சிருக்கும்..." என்று அவளுக்கு மட்டும் கேட்குபடி கூறிட, பெண்ணவள் அவனை முறைக்க முயன்று, தோற்றுப்போனாள்.

வாசலில் மகிழுந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டிட, பூங்கொடியும், மீனாட்சியும் ஆரத்தித் தட்டோடு வாசல் நோக்கி சென்றனர்.

வாசலில் ஆரவ், அமி மற்றும் அமியின் குடும்பத்தார் நின்றிருக்க, நேத்ரா ராமுடன் இணைந்து சற்றுப் பின்னால் நின்றிருந்தாள். மீனாட்சி அவளை தன்னருகே அழைத்து,

"இந்தா தட்டைப் பிடி... மூத்த மருமகளா முன்னாடி வந்து நின்னு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்காம ஏன் பின்னாடி நிக்கிறே?" என்று செல்லமாகக் கடிந்திட,

"அத்தை வயசுல மூத்தவங்க நீங்களும், அம்மாவும் எடுங்களேன்... ப்ளீஸ்..."

"என் மருமகளை நீ தானே இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த, இப்பவும் நீ தான் ஆரத்தி எடுத்து உள்ளே அழைச்சிட்டுப் போகனும்... இப்போ சொல்றதை கேட்கலேனா என் மாமியார்கிட்ட சொல்லிக் கொடுத்திடுவேன் பாத்துக்கோ... அப்பறம் ஒரு நாள் முழுதும் அட்வைஸ் கொடுப்பாங்க பரவாயில்லேயா?" என்று மிரட்டல் விடுத்தார்.

நேத்ராவிற்கு இன்னும் பயம் விலகிய பாடில்லை. அவளின் அருகில் வந்த லட்சுமணன், "இந்த வீட்டு மூத்த மருமகளா உன் அங்கீகாரத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதே... அவங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிற உன்னோட நல்ல மனசுக்கு அவங்க நிச்சயம் நீ ஆசைப்படுற மாதிரி நல்லபடியா சந்தோஷமா இருப்பாங்க... போ... ஆரத்தி எடுத்து அவங்க ரெண்டு பேரையும் அழச்சிட்டு வா..." என்றிட, தன்னவனை நிமிர்ந்து பார்க்க அவனும் கண்களால் அதையே கூறிட, பூங்கொடியோடு சேர்ந்து நின்று ஆலம் சுற்றி வரவேற்றாள்.

ராம் தனக்கு அலுவலகம் செல்ல நேரமாவதை உணர்ந்து, "ஆரவ் ஒன் அவர் ரெஸ்ட் எடுத்துட்டு, முடிந்தளவு சீக்கிரம் ஆபிஸ் வந்திடு. இன்னைக்கு மீட்டிங்ல நீயும் இருக்க, நியாபகம் இருக்குல..." என்றிட,

"ஓகே பையா" என்று அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமியை மறந்து கடகடவென படியேறிச் செல்ல, அமியும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி வாய்பிளந்து நின்றாள்.

அமியின் அருகில் வந்த நேத்ரா "கவலைப்படாதே... இது அண்ணன் தம்பிகளுக்கு இருக்கிற சின்ன வியாதி தான்...அது போக போக சரியாகிடும்...." என்று சிறிய இடைவெளிவிட்டு "அதுக்கு முன்னாடி நமக்கு பழகிடும்..." என்றிட, இருவரும் சிரித்துக் கொண்டனர்.

"வா... நான் உன்னை கூட்டிட்டுப் போறேன். மொதோ அம்மா, அப்பாவுக்கு அவங்க ரூமை காண்பிச்சுட்டு வரேன். அவங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்..." என்று உடன்பிறப்புகளை கிண்டல் செய்துவிட்டு, அமியின் அன்னை, தந்தைக்கு அவர்கள் அறையை காண்பிக்க அழைத்துச் சென்றாள்.

அமியை அழைத்துச் செல்ல அவள் அருகே சென்றிட, அதற்குள் ஆரவ் படியிறங்கி வந்து கொண்டிருந்தான். அமியைப் பார்த்து "என்ன நின்னுகிட்டே இருக்க வா..." என்று அழைத்திட,

"பரவாயில்லேயே பொண்டாட்டி நியாபகம் வந்திடுச்சே!!!" என்று ஆச்சரியமாக வினவினாள் நேத்ரா.

"பின்னே இவகிட்ட யாரு அடிவாங்குறது..." என்று புலம்பிட,

"ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்..." என்று அமி அவனை எச்சரித்தாள்.

இருவரின் சம்பாஷணையைக் கண்டு சிரித்துவிட்டு நகர்ந்தாள் நேத்ரா...



◆◆◆◆◆◆◆◆◆◆​



"அம்மா எல்லாம் ரெடியா? நாளைக்கு அங்கே போனதும் அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேனு சொல்லாதிங்க!!!" என்று பவன் தன் அன்னையிடம் கூறிட

"சரி டா... ரெண்டு நாளா இதையே தான் சொல்லிட்டு இருக்க..." என்று அவரும் சலித்துக் கொள்ள,

"புரியவேண்டயவங்களுக்கு புரியனும்ல... அதான்..." என்று வாய்க்குள் முனங்கிட,

"புரிய வேண்டியவங்களுக்கும் புரிஞ்சிடுச்சுனு சொல்லுங்க அத்தம்மா" என்று மிதுன்யா உதட்டைச் சுழித்து தன் மாமியாரை தூது அனுப்பிட,

அவரோ காது கேட்காதது போல் அமர்ந்திருக்க, "அத்தை... உங்களைத் தான் சொல்றேன்..." என்றிட, அப்போதும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

தரையில் காலை உதைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் பவனுக்கு அவளின் செயலில் சிரிப்பு வந்திட, மேலும் அவளிடம் வம்பு வளர்க்கும் பொருட்டு,

"கமல் நீ சுனோ-க்கு ஏதோ கிவ்ட் வாங்கி வெச்சியே எடுத்துக்கிட்டேயா?"

"இல்ல டா... அதான் சுனோ இப்போ வரமுடியாதுனு சொல்லிட்டாளே... நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது கொடுத்துக்கிறேன்..." என்று டீவியில் மூழ்கியபடி பதில் கூறிட, இங்கே மிதுன்யா கொதித்துக் கொண்டிருந்தாள்.

-ஊடல் கூடும்.​
 
Top