• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ஹாய்... எப்படி இருக்கிங்க? உங்களை இவ்வளவு சீக்கிரம் பாப்பேனு நெனக்கல மிஸஸ்.ராம்கிரன்." என்று கேட்டபடி கூலர்ஸ் அணிந்திருந்தவனின் கண்கள் அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இன்ச், இன்ச்சாக அளவெடுத்தது.

எதிரில் இருப்பவனின் கண்களை பார்க்க முடியாவிட்டாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வின் உந்துதலில் அவனின் கண்களை கூர்ந்து கவனித்தாள். இருந்தும் ஒன்றும் கண்டுகொள்ள முடியாமல் போக, தன் பதிலுக்காக காத்திருக்கிறான் என் உணர்ந்து,

"நீங்க எப்படி இங்கே?" என்று வினவிட,

"ஒருத்தர்கிட்ட கைய பிடிச்சு, காலைப் பிடிச்சு கெஞ்சி கூத்தாடி வேலை வாங்கினா, வாரணாசி வந்தா தான் உனக்கு வேலைனு சொல்லிட்டாரு... சரி உங்க கண்ணுலேயே படாம வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் அடுத்த வேலைய பார்க்க போயிடலாம்னு நெனச்சேன்.

இங்கே ஷாப்பிங் வந்த எடத்துல உங்களை பாப்பேனு நெனைக்கலே.. இவ்வளவு பக்கத்துல உங்களை பாத்தப் பின்னாடி எப்படி பேசாம போக முடியும்!!! அதான் பேச வந்தேன்." என்றவன் நேத்ராவின் பின்னால் நின்றிருந்த அமியைக் கண்டு,

"அவங்க உங்களுக்காக வெய்ட் பண்ணுறாங்க... நீங்க போங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்..." என்று விடைபெற,

"இன்னொரு நாள் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா கூட முகமன்னுக்காகக் கூட பேசிட வேண்டாம்..." என்று தனக்கே உரிய திமிரில் மொழிந்துவிட்டு திரும்பி நடந்தாள்.

செல்பவளை வன்மத்தோடு பார்த்தவன் மீண்டும் அழைத்தான். "மிஸஸ்.ராம்கிரன்," என்றிட நின்று திரும்பிப் பார்த்தவளின் அருகே வந்து,

"உங்க ஹஸ்பண்ட் கிட்ட நான் உங்களை சந்திச்சதை சொல்ல வேண்டாமே... ப்ளீஸ். நான் வந்த வேலை முடிஞ்சதும் சத்தம் இல்லாம ஊருக்குள்ள வந்த மாதிரி, சத்தமே இல்லாம திரும்பி போயிடுவேன்... அதனால எனக்காக இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்களேன். ப்ளீஸ்" என்று அமிக்கு கேட்காதபடி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

அப்போதைக்கு அவளுக்கு சரி என்று சொல்வதை விட வேறு வழி இல்லாமல் போனது. அதன்பின் ஷாப்பிங்கில் கவனம் இல்லாமல் ஏனோ தானோவென்று அமி கேட்டதற்கு மட்டும் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக ஷாப்பிங்கை முடித்துவிட்டு நேரே வெண்பாவின் பள்ளிக்குச் சென்று அவளையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அதன்பின் அமி மாலத்தீவு செல்வதற்கு பேக்கிங்கிற்கு நேத்ராவை உதவிக்கு அழைக்க, அவளுடன் இணைந்து பேசிக்கொண்டே வேலையை முடித்திட, சிறிது நேரம் தான் சந்தித்து வந்த நபரை மறந்திருந்தாள் நேத்ரா.

அதன்பின்னும் இரவு உணவு சமைக்க, வெண்பாவை உண்ண வைக்க என அடுத்தடுத்த வேலைகளில் அந்த நபரை ஒரு பொருட்டாகக் கூட மதித்திடாதமையால் சுத்தமாகவே மறந்தும் போயிருந்தாள்.

அடுத்தநாளிலிருந்து ராமுடன் அலுவலகம் செல்லத் தொடங்கினாள் நேத்ரா. ராமின் அறைக்குள் நுழைந்திட இதற்கு முன் ஒரே ஒருமுறை தான் வந்திருக்கிறாள் என்பதால் தானாகவே அந்த நாளை நினைவுபடுத்தியது மூளை.

அன்று ராம் தன்னிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து நேத்ரா ஒருநாளும் பயந்ததோ, நடுங்கியதோ இல்லை. அன்று அவன் கூறிய 'உங்க திமிரை அடக்கத் தான் பசங்க உங்களை தூக்கிட்டுப் போய் தன் தேவைக்கு யூஸ் பண்ணிக்கிறாங்க' என்று கூறிய வார்த்தைகள் ஹரித்ராவை நினைவுபடுத்திவிட அதன் விளைவே அதன் பின்னால் நடந்த அனைத்தும்.

அதே யோசனையோடு அன்று அமர்ந்திருந்த அதே இருக்கையின் அருகே சுருங்கிய முகத்தோடு சென்று நின்றவளின் பின்னால் நின்றிருந்த ராம், அவளின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டவன், அவள் கை பிடித்து அழைத்து தன் இருக்கையில் அமர்த்தினான்.

வேண்டாத நினைவுகளால் உள்ளுக்குள் வலி எடுத்தாலும், தன்னவனுக்காக வெளியே சிரித்தாள். ராம் அவளின் முன் ஒரு காலை மடித்து தன் மற்றொரு காலின் மேல் அமர்ந்து மன்னிப்புக் கேட்கும் விதமாக அவள் கைகளை பிடித்துக் கொள்ள,

"என் கடந்த காலத்தை மறக்க வைக்க நீங்க தான் என்கூட எப்பவுமே இருக்கிங்களே... இதையும் சேர்த்து மறக்க வெச்சிட்டா போச்சு... பின்னே சாரியும் தேவையில்லே... ஒன்னும் தேவையில்லே..." என்று அவனைத் தேற்றிடும் விதமாக சாதாரணமாக உரைத்திட,

அவளைப் பெறுந்தன்மையாகப் பார்த்தவன், பிடித்திருந்த அவள் கைகளுக்கு இதழ் ஒத்தடம் கொடுத்திட,

"ஆபிஸ்ல வெச்சுப் பண்ற வேலையா இதெல்லாம்??!" என கண்டிப்பது போல் வினவி தன் கைகளை உறுவிக் கொண்டாள்.

"இதெல்லாம் செய்யலாம்..." என்று கூறி சட்டென அவளை இழுத்து இதே இதழ் ஒற்றலை அவள் இதழில் வைத்து "இது தான் செய்யக் கூடாது" என்று கண்ணடித்துக் கூறிட,

ஒரு நொடி பதறி, பரிதவித்து வெட்கம் கொண்டவள், "ஆளைப் பார்... செய்யக் கூடாது சொல்லிட்டு செய்து காண்பிக்கிறதை..." என்று அதிகாரமாகக் கூறி அவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள்.

"பரவாயில்லேயே என் தரு, பயம் கொறைஞ்சு மூவ் ஆன் நெக்ஸ்ட் ஸ்டெப்னு சொல்ற அளவுக்கு தைரியமா வந்துட்டா போலியே" என்று அவளின் அதிகாரப் பேச்சை கிண்டல் செய்திட, பெண்ணவள் வெட்கத்தில் பேச முடியாமல் தவித்தாள்.

"வர வர ரெம்ப டெம்ட் பண்ணுறே டீ... அதுவும் வெட்கப்படும்போது உன் கன்னத்தை அப்படியே கடிச்சுத் திண்ணலாம் போல இருக்கு!!!..." என்று காதல் பித்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்சுவது போல் கூறினான்.

"திம்பிங்க... திம்பிங்க... இப்படியே உக்காந்திருந்தா உண்மையாவே என்னை கடிச்சு திண்ணாலும் திண்ணுவிங்க... வாங்க கம்பெனியை போய் பாக்கலாம். எனக்கு என்ன வேலைனு சொல்லுங்க..." என்று எழுந்து செல்ல, அதன்பின் அவனும் தன் பணியே முக்கியம் என்பது போல் முழு மூச்சாக இறங்கி அவளுக்கான வேலைகளை சொல்லிக் கொடுத்தான்.

-ஊடல் கூடும்.​
 
Top