• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க, ஆரவ்வும், அமியும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடன், ராமின் திட்டப்படி அமியும், நேத்ராவும் தங்கள் பணியைத் தொடங்கினர்.

முதலில் அரசு அங்கீகாரத்துடன் நான்கிலக்க எண்ணை தங்கள் அவசர தேவை எண்ணாக அறிவித்தனர். அது சமூக வலைதளங்கள் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களைச் சென்றடையுமாறு செய்திருந்தாள் அமி.

அடுத்ததாக 'மானினி சுரக்ஷா" (மானினி- பெண், சுரக்ஷா- பாதுகாப்பு) என்ற பெயரில் 'mobile app' ஒன்றையும் உருவாக்கி, அதில் புகார்கள் பதிவு செய்யும்படியான சில வசதிகளுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர அழைப்பு பொத்தான், தற்காப்பு முறை என சில செயல்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.

மேலும் எந்தெந்த தவறுகளுக்கு என்ன தண்டனை என்பதையும், பதிவு செய்யப்படும் புகார்கள் தங்கள் மானினி சுரக்ஷா மையத்தில் எப்படிப்பட்ட முறையில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் விசாரிக்கப்படும் என்பதனையும் விளக்கமாக பதிவிட்டிருந்தனர். அதேநேரம் அளவிற்கு அதிகமான விளக்கங்கள் இல்லாமல் சில விளக்கங்களை கேள்வி பதில் பகுதியில் தன் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளும்படி இருந்தது.

விளம்பரம் இன்றி எதுவும் மக்களைச் சென்று சேர்வதில்லை என்பதால் மகளிர் காவல்த்துறையின் உதவியிலேயே அனைத்து நேரடி செய்தி ஒளியலை வரிசை வழியாக மக்களுக்குத் தெரியப்படுத்தினர். பற்றாக்குறைக்கு சமூகவலைதளங்கள் அனைத்திலும் இவர்களின் ஆப்பை அதிகமாக பகிர்ந்து பொதுமக்களைச் சென்றடையச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த ஏரியாவில் இருக்கும் சிறிய கிராமங்களுக்குச் சென்று அங்கே ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து அதில் ஆசிரியர்களிடம் முதலில் தங்கள் இயக்கம் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து, அவர்கள் மூலமாகவே பெற்றோர்களுக்கு மீட்டிங் ஏற்பாடு செய்து பிள்ளைகள் பெற்றோருடன் பேச வாய்ப்பும், உரிமையும் தர வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பெற்றோருக்கு எடுத்துக் கூறினர்.

பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அனுமதியுடன் பெண் குழந்தைகள் தன் அன்னையிடம் உடல் ரீதியாக எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்க வேண்டும் என்றும் தாய்மார்களே தன் முதல் தோழி என்றும் எடுத்துக் கூறினர்.

அவர்களிடம் கேட்க முடியாத சந்தேகங்கள், கேட்க சங்கோஜமாக இருக்கும் விஷயங்களை தங்களிடம் தயங்காமல் கேட்கலாம் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசினர்.

மாணவர்களுக்கு பெண்களின் முக்கியத்துவத்தையும், பெண்கள் அனுபவிக்கும் வலிகளையும், வேதனைகளையும் எடுத்துக் கூறி, தோழனாக, அண்ணனாக, தம்பியாக என ஒவ்வொரு உறவிலும் அவர்களுக்கு இருக்கும் பொறுப்பையும், பங்களிப்பையும் விளக்கிக் கூறத் தவறவில்லை.

முக்கியமாக ஒரு ஆணின் ஆண்மை ஒரு பெண்ணை பாதுகாப்பதில் மட்டுமே வெளிப்படுகிறது என்றும் பெண்களை வற்புறுத்தி காதலிக்க வைப்பதிலோ, மிரட்டி பயம் காட்டி அடிமைபோல் நடத்துவதிலோ, உங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காத பெண்களை ஆசிட் ஊற்றுவது, வன்கொடுமைகள் செய்து பலிவாங்துவதிலோ இல்லை என்பதனை அவர்கள் மனதில் பதியும் படியாக அறிவுருத்தினர்.

இது போன்று அனுமதி அளித்த பள்ளிகளுக்கு மட்டும் சென்று தங்களால் முடிந்தவரை இருபாலருக்கும் தேவையான அறிவுரைகளையும், விவரங்களையும் தேவையான அளவில் மட்டுமே விளக்கிக் கூறினர்.

மூன்று மாதங்கள் நொடிப்பொழுதில் கடந்திட, புகார்கள் ஒன்றும், இரண்டுமாக தினமும் வரத் தொடங்கியிருந்தது. பெரும்பான்மையான புகார்களை போதுமான ஆதாரங்களுடன் நீதிமன்றம் கொண்டு சென்று தவறிழைத்த நபருக்கு தக்க தண்டனையும் பெற்றுத் தந்திருந்தது இவர்களது மானினி சுரக்ஷா இயக்கம்.

அப்படி வந்த புகாரில் ஒன்றை விசாரிக்க அமி ஒரு பெண்மணியைச் சந்தித்துப் பேச வந்திருந்தாள். மாலை பள்ளி முடியும் நேரம் என்பதால் நேத்ரா வெண்பாவை அழைத்துச் செல்ல அங்கே சென்றிருக்க, அமியின் மெய்க்காப்பாளன் நேத்ராவை அழைத்து ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே வரும்படி பணிந்தான்.

ஒருநொடி பயந்து நடுங்கிய நேத்ரா விரைந்து மருத்துவமனையை அடைந்திட, அங்கே அமி சத்தமே இல்லாமல் அழுது கொண்டிருந்தாள். விரைந்து அவளை அடைந்த மூத்தவள்,

"ஹேய்... அமி!!! என்னாச்சு டா? ஏன் அழறே? ஆர் யூ ஆல்ரைட்?" என்று பதற்றமாக வினவினாள்.

"ஐ ம் நாட் ஆல்ரைட் க்கா? அந்த ப்ராடு என்னை சீட் பண்ணிட்டான்..." என்று நேத்ராவைக் கண்டதும் சிறிய கேவல்கள் வெளிப்படக் கூறினாள்.

"யாரு டா? என்ன செஞ்சாங்க?" என்று அவளிடம் கேட்டவள் பொறுமையற்று, "செக்யூரிட்டீ என்ன செஞ்சுட்டு இருந்திங்க? ப்ராப்ளம்னா உடனே ஃபோன் பண்ணமாட்டிங்களா?" என்று அவரை கத்தத் தொடங்கினாள்.

அவனோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமியையே பாவம் போல் பார்த்திருந்தான்.

"என்னனு சொல்லு அமி? யாரு உன்னை ஏமாத்துனா? நீ இன்னைக்கு ஒரு பொண்ணைத் தானே பாக்கப் போன!!?" என்று பலவற்றை யோசித்து பயத்துடன் வினவிட,

"ஐ ம் ப்ரக்னென்ட் க்கா... இந்த ஆரவ் தடிமாடு, நான் இப்போ பேபி வேண்டாம்னு சொன்னப்ப எல்லாம் சரி சரினு சொல்லிட்டு என்னை சீட் பண்ணிட்டான்." என்று கூறி அழுதிட,

நேத்ரா சந்தோஷத்தில் அவளைக் கட்டிக்கொண்டும், வாய் வலிக்க அவளை திட்டிக்கொண்டும் இருந்தாள்.

"அமிஇஇஇஈஈஈ... உன்னை... நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? போடி லூசு... இதுக்கு யாராச்சும் இப்படி அழுவாங்களா?!!! உன்னை... ஓ காட்... என்னை எவ்ளோ பயமுறுத்திட்டே!!!... உம்மா... ஆராவ் மட்டும் இங்கே இருந்திருந்தான் உன்னை அப்படியே தூக்கி சுத்திருப்பான். என்னால முடியலேயே... இரு பேபி வெளியே வரட்டும்... என்னை இப்படி தவிக்கவிட்டத்துக் அடி கொடுக்க சொல்லித் தரேன்..." என்று பல்லைக்கடித்து கொண்டு கூறி... எந்த உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் சிரித்து, கொஞ்சி, கோபித்து என ஒரு நிமிடத்தில் பல முகபாவனைகளை மாற்றியிருந்தாள்.

அதே மகிழ்ச்சியோடு செக்யூரிட்டியிடம் என்ன? ஏது? எப்படி ஹாஸ்பிட்டல் வந்தீர்கள்? என்று கேட்க,

"அவங்க ரீச் ஆக வேண்டிய ஸ்பார்ட்டுக்கு போகுறதுக்குள்ள மயக்கம் வரமாதிரி தலைய பிடிச்சிக்கிட்டு நின்னாங்க, அப்பறம் அவங்களாவே ஒன்னுயில்லைனு சொல்லிட்டு முன்னாடி போனாங்க. அந்த பொண்ணை பார்த்து பேசிட்டு வரும்போதும் திரும்ப அதே மாதிரி தடுமாறவும், ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டேன். அங்கே டாக்டர் பல்ஸ் பாத்ததுமே சொல்லிட்டாங்க. அதை கேட்டு சந்தோஷப்படுவாங்கனு நெனச்சா அழுக ஆரம்பிச்சிட்டாங்க... எனக்கு என்ன பண்றதுனு தெரியலே... அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்..." என்றான்.

"அதானே நீ ஏன் அழுதுட்டு இருக்க அமி?"

"போங்க க்கா... நானே இப்போ தான் உங்க கூட சேந்து உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு இருக்கேன்... இனிமே இதை காரணமா சொல்லியே, என்னை யாரும் உங்க கூட வரதுக்கு அலோவ் பண்ணமாட்டாங்க... அதுவும் இல்லாம நீங்க இருக்கும் போது எனக்கு மொதோ குழந்தை பெறந்தா நல்லாவா இருக்கம்!!!"

"ஹேய் இது என்ன டிக்கெட் கவுண்டரா, முன்னாடி வந்தவங்க தான் மொதோ பிள்ளை பெத்துக்கனும்னு நெனைக்கிறதுக்கு... எங்களுக்கு தான் வெண்பா இருக்காளே... நாங்க அவ மட்டும் போதும் நெனச்சிருந்தா நீ என்ன பண்ணிருப்ப?... உன் லைஃப் உனக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா இரு... உனக்கும் ஆரவ்விற்குமான சந்தோஷமான மொமென்ட்ஸ்ல மூனாவது நபரை பத்தி யோசிச்சு கெடுத்துக்காதே... இப்போ வீட்டுக்குப் போலாமா?" என்று அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள்.

மறக்காமல் ஆரவிற்கு அழைத்து அவனை உடனடியாக வீட்டிற்கு வரச் சொல்ல, ராம் நேத்ராவிடம் முகத்தைத் தூக்கினான்.

"அவனுக்கு இப்போ என்ன தலை போற வேலை வீட்ல காத்திட்டு இருக்குனு ஆரவ்வை உடனே வரச் சொல்றே... என்ன வேலையா இருந்தாலும் நைட் வருவான் அப்போ சொல்லிக்கோ" என்றிட,

"நான் இரண்டாவது முறை அம்மா ஆகப்போறேன் ராம்..." என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் அவனின் குடும்பினி.

அவனோ "வாட்!!!" என்று அதிர்ச்சியாக வினவினான்.

"இன்னைக்கு அமியைப் பார்த்ததும் எனக்கும் இப்படி உங்களை சர்ப்ரைஸ் பண்ணனும்னு ஆசை வந்திடுச்சி..." என்று வெட்கம் கலந்த குரலில் கூறிட, அதனை செவி வழியே ஜீரணித்த காந்தனவன் உடலில் புதுரத்தம் பாய்வது போல் உணர்ந்தான்.

தறி நெய்து கொண்டிருக்கும் பிரிவில் மேற்பார்வையிட வந்தவன், தன்னவளின் பேச்சில் சற்று நகர்ந்து வந்து சத்தம் கேட்காத இடமாகப் பார்த்து நின்று கொண்டு,

"ஹேய் ராட்சசி..." என்று மென்மையாக அழைத்தான்.

"ம்ம்ம்??"

"நான் கம்பெனில இருக்கேன்."

"ம்ம்ம்..."

"இங்கே தலைக்கு மேல வேலை இருக்கு..."

"ம்ம்ம்..."

"இப்படி பேசினா நான் எப்படி ஒருமனதா வேலை பாக்குறது சொல்லு? இனிமே வேலை இருக்கும் போது இப்படி போசாதே.." என்றிட

"உங்களை யாரும் வேலை பார்க்காதேனு சொல்லி கையப்பிடிச்சிகிட்டு நிக்கலே... நீங்க வேலையப் பாருங்க..." என்று சிடுசிடுத்துவிட்டு, "ஆரவ்கிட்ட விஷயத்தை சொல்லாம வீட்டுக்கு அனுப்பி வைங்க... அமி சொல்லிப்பா... நான் ஃபோனை வெக்கிறேன்..." அவனது பதிலுக்கு கூட காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

"சரியான சில்லி சாஸ்... அவளை இப்படி ஒரு காரியம் செய்யாதேனு சொல்லிட்டா போதும்... ஒடனே கோபம் வந்திடும்..." என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தன் அறை நோக்கிச் சென்றான்.

அடுத்த கால்மணி நேரத்தில் அனைவரும் வீட்டில் இருக்க, வீடே கலைகட்டியது. வெண்பா ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரின் செயலையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவரும் அமியை தாங்குவதைப் பார்த்து அதற்கு விளக்கம் கேட்கவும் தவறவில்லை.

"நம்ம வீட்டுக்கு குட்டிப்பாப்பா வரப் போகுதுல... அதான் இதெல்லாம் செய்றோம்..." என்றிட,

"அப்போ பொம்மி வந்தப்பவும் இப்படித் தான் செய்தாங்களா ம்மா?" என்ற கேள்வியில் அனைவரும் அமைதியாகிவிட,

நேத்ராவிற்கோ மிக அருகில் தன் காதுகளுக்குள் "எனக்கு வேண்டாம் க்கா... எனக்கே தெரியாம எனக்குள்ள வந்த இது எனக்கு வேண்டாம் க்கா" என்று தன் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத ஹரித்ராவின் குரல் கேட்டுக் கொண்டே இருக்க, கண்கள் தானாக கண்ணீர் சுரக்கத் தொடங்கின.

ராமிற்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்போது தன்னவளை நெருங்கினால் அழுது வெடித்துவிடுவாளா? இல்லை, தன் தொடுகையில் அமைதியடைவாளா? என்று தெரியாமல் நின்றநிலையில் அப்படியே நின்றிருந்தான்.

இத்தனை நாள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பேசிய அனுபவம் அமிக்கு கை கொடுக்க, "ஆமா டா குட்டிம்மா... நீங்க அப்பாவோட ஏஞ்சல் பேபியாச்சே... அதுவும் இல்லாம பவன் அங்கிள், கமல் அங்கிள் எல்லாரும் பொம்மிய வெல்கம் பண்ணினாங்க..." என்றிட, அந்த மூன்றறை வயது அரும்பு, வெண்பற்கள் தெரிய சிரித்து தன் சந்தோஷத்தை முத்தங்களாக மாற்றி அமிக்கு பரிசளித்தாள்.

நிலைமையை சரி செய்ய லட்சுமணன் ராமிடம், "நேத்ராவை ரூம்-க்கு அழைச்சிட்டு போ ராம்." என்று கூறிவிட்டு, "ஆரவ் நீயும் அமியை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடு, பெரிய மருமகளே நீ கொஞ்ச நேரம் வெண்பாவை பாத்துக்கோ..." என்று அங்கிருந்து அனைவரையும் விரட்டும் சாக்கில் இரு தம்பதியருக்கும் தனிமை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆரவ் தன்னவளை அறைக்குள் அழைத்துச் சென்ற அடுத்த நொடி அவனை வறுத்து எடுக்கத் தொடங்கினாள் அமி.

"எதுக்கு டா என்னை ஏமாத்தினே? ஐ கில் யூ... ராஸ்கல்... சீட்டிங் ஃபெல்லோ..." என்று வார்த்தைகள் மறந்தவளாய் யோசித்து யோசித்துத் திட்டிக் கொண்டிருந்தாள்.

"அமி டார்லிங் கோபத்துல கூட அழகா இருக்கே டா.. " என்று கொஞ்சிய ஆரவ்வை அடிப்பதா உதைப்பதா என யோசித்தாள் அமி. ஆனால் அவளையும் அறியாமல் உள்ளிருக்கும் உயிர் அதிர்ந்துவிடுமோ என்று தாய்மைக்கே உரிய பாதுகாப்பு உணர்வு தோன்றிவிட, அந்த யோசனையை கைவிட்டு வாக்குவாதத்திற்கு மாறினாள்.

"போதும் ஐஸ் வெச்சது"

"ப்ராமிஸ் டீ... நம்பலேனா நீயே பார் எவ்ளோ அழகா இருக்கேனு..." என்று கண்ணாடியில் அவள் உருவத்தைக் காண்பித்திட,

"இப்போ ஓகே... இனி வயிறு பெருசாகிடும் அப்போ என்ன பண்ணுவேன்!!!" என்று என்றும் இல்லாத அமியாய் கொஞ்சிப் பேசினாள்.

அமி என்றாலே அடாதடி என்று நினைத்திருந்த ஆரவ்விற்கு அவள் புதிதாகத் தெரிந்திட, "இன்னும் அழகா இருப்பே..." என்று காதலாய் மொழிந்தான்.

இத்தனை நேரம் பெரிய வயிறுடன் பார்க்கவே அகலமாக அசிங்கமாகத் தெரிவோமோ என்று நினைத்து வருந்தியவளுக்கு கணவனின் காதல் பார்வையும், மொழியும் மகிழ்ச்சியளிக்க இந்த விஷயத்திலும் சமாதானம் அடைந்தாள். அதன் பின் வந்த ஒவ்வொரு நொடியையும் காதல் பாஷை பரிமாற்றத்துடன் நகர்த்தினர் இருவரும்.

லட்சுமணனின் குரலில் நிகழ்வுக்கு வந்த நேத்ரா, அவரின் சொல்படி ராமுடன் தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன்,

"ராம்... பொம்மியோட பிறப்பு எப்படினு இங்கே எல்லாருக்கும் தெரியுமா?" என்று எப்போதும் இல்லாத அமைதியான குரலில் வினவினாள்.

பெண்ணவளின் அமைதி ராமை அச்சுறுத்தியது.

-ஊடல் கூடும்.​
 
Top