• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன், நேத்ரா ராமிடம், "ராம்... பொம்மியோட பிறப்பு எப்படினு இங்கே எல்லாருக்கும் தெரியுமா?" என்று எப்போதும் இல்லாத அமைதியான குரலில் வினவினாள்.

அவளின் அமைதி ராமை அச்சுறுத்தினாலும் அவளுக்கும் சில உண்மைகள் தெரிந்தாக வேண்டுமே என்று நினைத்து "ம்ம்ம்" என்றது தான் தாமதம் அவன் சட்டையை கொத்தாகப் பிடித்திருந்தாள்.

"பொம்மி எப்பவும் என் பொண்ணு தான்..." என்று ஆக்ரோஷமாக கத்திட,

"அவ எப்பவும் நம்ம பொண்ணு தான் டா..." என்று அவனும் அடிபட்ட வலியுடன் கூறிட, பெண்ணவளுக்கு அது புரிந்ததாகத் தெரியவில்லை.

"பின்னே ஏன்டா எல்லார்கிட்டேயும் அவள் பிறப்பைப் பத்தி சொன்னே? அவ என் பொண்ணு டா..." என்று குரல் உடைந்து கூறினாள்.

"ஹேய்... தரு... இங்கே யாரும் இல்லைனு மறுப்பு சொல்லலே ம்மா... எல்லாரும் ஏத்துக்க தானே செய்தாங்க... பின்னே ஏன் இதை பெரிசு படுத்துறே?" என்று அவளை அமைதிபடுத்தவே முயன்றான்.

"ஓஓஓ... என்னையும் பொம்மியையும் அனுதாபப்பட்டு ஏத்துக்கிட்டாங்களா!!! அதுக்கு என் பொண்ணோட பிறப்பை எல்லாய்கிட்டேயும் தம்பட்டம் அடிச்சிட்டிங்களே!!!" என்று கோபம் கண்ணை மறைக்க வார்த்தைகளால் அவனை சாடினாள்.

எதிரில் நின்றிருந்தவனும் அதே கோபத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவள் தாடையைப் பிடித்து தன் முகம் காணச் செய்து, "என்னை பாத்து சொல்லு... நான் எல்லார்கிட்டேயும் சொல்லிருப்பேனு... அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக..." என்றிட, பெண்ணவள் அப்போது தான் அப்படி இருக்காதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.

"பின்னே யாரு சொன்னா?" என்று தன் கோபம் தனிந்து இறங்கிவந்து வினவிட,

"உன் மாமா தான் சொன்னாரு. நம்ம கல்யாணம் ஆன கொஞ்ச நேரத்துலேயே,... காஞ்சிபுரத்துல இருந்து மதுரைக்கு வரதுக்கும் முன்னாடியே சொல்லிட்டாரு... எல்லா உண்மையையும் சொல்லி எல்லாரும், முழு மனதா சம்மதிச்சா மட்டும் தான் வெண்பாவை இங்கே அனுப்பி வைக்க சம்மதிப்பேனு பிடிவாதமா நான் சொல்ல சொல்ல கேட்காம எல்லாருகிட்டேயும் சொல்லிட்டாரு...

சுஷேண் மாமா, குந்தவி அத்தைக்குக் கூடத் தெரியும்... வெண்பாவை உங்க மாமா வளர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா அந்த பொறுப்பு அவங்க பொண்ணு மிதுன்யாவைச் சேராதுனு சொல்றதுக்காக அத்தை, மாமாகிட்டேயும் இது பத்தி பேசினார்..."

நேத்ராவால் கங்காதரனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. இனி வரும் நாட்களில் நேத்ராவையோ, அல்லது வெண்பாவையோ யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்றும், வேறு எவரேனு நேத்ராவாக 'வெண்பா தனக்குப் பிறந்தவள் இல்லை என்று சொல்லமாட்டாள்' என்ற அவளின் குணம் அறிந்து அவள் வாழ்வை நாசமாக்கிவிடக் கூடாது என்றும் நினைத்து தான், தன்னிடம் கூட கலந்தாலோசிக்காமல் இவ்வாறு செய்திருக்கிறார் என்று நன்கு அறிந்திருந்தாள்.

நின்ற நிலையிலேயே அப்படியே அவன் மேல் சாய்ந்திட அவளை தன்னோடு சேர்த்து அணைத்து ஆசுவாசப்படுத்தினான். பல நிமிட யோசனைக்குப் பிறகு தெளிந்தவள், நிதர்சனம் உணர்ந்து அவனிடம் இளகுவாகப் பேசினாள்.

"ராம் நம்ம வீட்ல யாராது ஒரு ஆள் சம்மதிக்கலேனாக் கூட மாமா பொம்மியை இங்கே அனுப்பியிருக்கமாட்டார்ல... எனக்கு பிறகு நான் தூக்கி வந்த குழந்தையையும் வளர்க்க தயாரா இருந்திருக்கிறார்ல..." என்றவளின் கண்கள் அவன் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

"ம்ம்ம்..." என்று மட்டுமே அவனிடம் இருந்து பதில் வந்தது.

"நல்லவேளை தாத்தால இருந்து அமி, அபி வரை எல்லாரும் பொம்மிய ஏத்துக்கிட்டாங்க..." என்று அவள் ஆறுதலாக நினைத்த போதும் அவனிடம் பெரிதாக எந்த உணர்வு வெளிப்பாடும் இல்லை.

அப்போது தான் கவனித்தாள் தன்னவனின் அமைதியை, 'இவன் தான் எல்லாரிடமும் சொல்லியிருப்பான் என்று நினைத்து கத்தியதில் கோபமாக இருக்கிறானோ!' என்று யோசித்து அதையே அவனிடம் கேட்டாள்.

"கோபமா இருக்கிங்களா?" என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு வினவிட, அப்போதும் பதில் சொன்னானில்லை.

அவள் தன்னவனின் வதனத்தை நிமிர்ந்து பார்க்க நினைக்க, அவனோ அவளை தள்ளி நிறுத்தி வைத்துவிட்டு முன்னறையில் இருந்து படுக்கை அறைக்கு விலகிச் சென்றான். அடுத்த நொடி அவனை பின்னால் இருந்து அணைத்து "சாரி..." என்றிட, அப்போதும் அவள் கையை உதறிவிட்டு நகர்ந்தான்.

அவனின் கோபம் கூட அவளுக்குப் பிடித்திருந்தது. அவனை சமாதானம் செய்யத் துடிக்கும் தன் மனதை அதைவிட அதிகமாகப் பிடித்தது. அதில் அவள் அழுகை காணமல் போக, மென்னகையுடன் அவனை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"போடி அங்கிட்டு... என்னைக் கண்டா மட்டும் உனக்கு எப்படித் தான் இருக்குமோ!!! நான் என்ன செய்தாலும் உனக்காகத் தான் செய்வேனு உனக்குத் தோனவே தோனாதா? உங்க மாமா செய்தா மட்டும் கிரேட்... இதையே நான் செய்திருந்தா என் சட்டையப் பிடிப்பே..." என்று அவன் கோபம் கொண்டு கூறி, மீண்டும் அவள் கையை உதறிவிட,

பெண்ணவள் அவன் கோபத்தை ரசித்து சாரியுடன் சேர்த்து பறக்கும் முத்தத்தை தூது அனுப்பினாள். அவளின் சமாதானத் தூதில் சிலிர்த்தவன், அவள் எவ்வளவு தூரம் வருகிறாள் என்று அறிந்து கொள்ள நினைத்து மேலும் கொஞ்சம் முறுக்கிக் கொள்ள, அவளின் பறக்கும் முத்தத்தின் பயண இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.

இறுதியில் அவனை நெருங்கி நின்று சாரியுடன் சேர்த்து அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, அதற்கு மேல் கோபம் கொண்டவன் போல் நடிக்க முடியாமல் தோற்று புன்னகைத்தான். பதிலுக்கு அவளும் புன்னகைக்க, தன் தரப்பு விளக்கத்தை அவளுக்கு எடுத்துக் கூறினான்.

"நான் இந்த உண்மைய சொல்லிருந்தாலும் இதே காரணத்துக்காக மட்டும் தான் சொல்லியிருப்பேன் டீ... இங்கே எல்லாரும் உன்னை கலங்கம் இல்லாதவளா பார்க்கனும்னு நெனச்சோ, வெண்பா மேல அன்பு காட்டனும்னு நெனச்சோ கண்டிப்பா செய்திருக்கமாட்டேன். இனி இந்த வீட்டில் எத்தனை குழந்தை பெறந்தாலும், வெண்பா தான் மூத்த பேத்தினு எல்லாரும் ஏத்துக்கனும். அப்படி ஏத்துக்க முடியாலேனா அவ இந்த வீட்ல வளருறது அவளுக்கு பெரிய தண்டனை கொடுத்தமாதிரி ஆகிடாதா!!! இன்னைக்கு அவளை முதல் பேத்தியா ஏத்துக்கிட்டாங்கனாத்தானே நாளைக்கு பேரன் பேத்திகளுக்கு நடுவுல பார்ஷியாலிட்டி காட்டாம இருப்பாங்க!!!" என்றிட, அவளும் அவன் கூற்றை ஏற்றுக்கொண்டாள்.

"அதான் சாரி சொல்றேன்ல... இனிமே இப்படி தப்பு தப்பா யோசிக்கமாட்டேன். ப்ளீஸ் இந்த ஒருவாட்டி மன்னிச்சுடுங்க..." என்று குழந்தையாய் கொஞ்சிட,

அவள் தப்பி ஓடிட முடியாதபடி பிடித்துக் கொண்டு, அவள் தலையில் முட்டி "யோசிச்ச மூளைய மன்னிச்சிட்டேன். பேசின வாய்க்கு பனிஷ்மெண்ட் உண்டு" என்றிட, பெண்ணவள் விழி விரித்துப் பார்த்திட, குறும்புகள் நிறைந்த அவன் வதனம் அவள் முகம் நோக்கி முன்னேறியது.

அவளின் கன்னத்தோடு தன் இதழ்களை உரசி, "தரு..." என்று மிருதுவாக அழைத்திட,

"ம்ம்ம்?" என்று கூறுவதற்கே பெரும்பாடுபட்டாள்.

"பனிஷ்மெண்ட் கடுமையா இருந்தா தாங்கிப்பேயா?" என்று கிறங்கடிக்கும் குரலில் வினவினான்.

அவளிடம் பதில் இல்லை என்றவுடன் கன்னத்தில் இதழ் பதித்து, "சொல்லு டீ..." என்றவாறு காதுமடல் நோக்கி பயணித்தது அவன் இதழ். அப்போதும் அவளிடம் பதில் இல்லாமல் போக, விலகி அவள் முகம் பார்த்தான்.

தனக்கே உரிய தனித் திமிரில் தலைதூக்கி "ஏன் இதுக்கு முன்னாடி பனிஷ் பண்ணினதே இல்லேயா?" என்று வழக்கம் போல் எதிர்கேள்வி கேட்டிட, அதில் சிரித்தவன் இன்னுமே அவளை தன்னோடு சேர்த்து அணைத்து, அவளோடு சேர்த்து அவள் இதழ்களையும் முற்றுகையிட்டான்.

விரும்பியே அவன் தண்டனையை ஏற்றவள், எப்போதும் போல் விலகாமல், விலக்காமல் அவனுக்கு ஒத்துழைத்திட, வெண்மையும் குளுமையும் போல் அவன் இதழ்கள் வன்மையும், மென்மையுமாக மாறி மாறி அவளை இம்சித்தது.

நீண்ட நெடிய முத்தத்திற்குப் பிறகே அவளை விடுவித்தவன், அவளை தன் கையணைப்பில் வைத்த படியே, "ரெம்ப கஷ்டபடுத்திட்டேனா?" என்று 'எங்கே அவள் தன் விருப்பத்திற்காக அவளது வெறுப்பை மறைத்து தன் முத்தத்தை ஏற்றாளோ!!! அவளின் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் தவறிழைத்துவிட்டோமோ!!!' என்ற எண்ணத்தில் வினவிட,

அவன் என்ன நினைத்து வினவுகிறான் என்று புரிந்த போதும் பதில் கூறிட முடியாமல், அவன் சட்டை பட்டனையே பார்த்தபடி, "அது... அது வந்து..." என்று தயங்கித் தயங்கி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

இடைவளைத்திருந்த அவன் கைகள் தளர்ந்திட, அந்த நொடி அவன் முகத்தைப் பார்த்தாள். இவ்வளவு நேரம் குறும்புகள் நிறைந்து மகிழ்ச்சியில் தத்தளித்த முகம் வாடி, வதங்கி, சோர்ந்திருக்க, அதை சரி செய்திடும் வேகம் பெற்றவளாய் திரும்பி நிற்க நினைத்தவனின் சட்டையைப் பிடித்து தன்னோடு சேர்த்து நிறுத்தி,

"பனிஷ் பண்றதுக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பிங்களா!!! ஏதாவது அச்சிவ் பண்ணினா இந்த மாதிரி முத்தம் கிடைக்காதா!!!?" என்று அவன் கண்கள் பார்த்து வினவிட,

மீண்டும் அவன் முகம் மலர்ந்தது. "அப்படினா இப்போவே தரனும் போலவே... என் தரு என்கிட்ட முதல் முறையா ஸ்ட்ராங்கா ஒரு கிஸ் கேட்டிருக்காளே... பாராட்டிட வேண்டியது தான்..." என்று அவளை வெட்கம் கொள்ளச் செய்தவன், தன் பாராட்டும் பணியை சிறப்பாகத் தொடங்கினான்..

அடுத்து வந்த நாட்களில் அமியின் அன்னை தந்தை அவளைக் காண வந்து சென்றனர். கங்காதரன் குடும்பமும் அமியைப் பார்க்க வரும் சாக்கில் நேத்ராவை வந்து பார்த்துச் சென்றனர். பவன் மற்றும் மிதுன்யா இருவரும் அவளின் இல்லத்தில் ஒருவாரம் தங்கிட அதே நேரத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு சுனோவும் வந்திருந்தாள்.

இப்போதொல்லாம் சுனோ அபியைக் கண்டுகொள்வதே இல்லை. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சுனோவின் பார்வை தன்னை வட்டமிடுவதை நினைத்து பல நாட்கள் அவள் மீது கோபம் கொண்டிருந்திருக்கிறான் அபி. இப்போதொல்லாம் தன் இருப்பை காண்பிக்கும் விதமாக ஏதேனும் செய்தானென்றால் கூட அவள் திரும்பிப் பார்ப்பதில்லை. அதில் கவலையுற்று கொஞ்சமே கொஞ்சம் தாடி கூட வைத்திருந்தான்.

"டேய் அபி... இது என்ன புதுசா தாடிலாம் வெச்சிருக்க?" என்ற மிதுன்யாவிற்கு,

"உலகத்துல எவ்வளவோ பிரச்சனை இருக்கு... உங்களுக்கு நான் தாடி வெச்சிருக்கது தான் பிரச்சனையா!!! பவன் கூட தான் தாடி வெச்சிருக்கார், அதை என்னைக்காவது ஏன்னு கோட்டிருக்கிங்களா? ஏன் என்னை மட்டும் குடையுறிங்க?!!" என்று அலுத்துக் கொண்டான்.

"அவர் மொதோ இருந்து வெச்சிருக்கார் டா... நீ என்ன புதுசா தாடி வெச்சிருக்கே? எதுவும் லவ்வா? பொண்ணு நோ சொல்லிடுச்சா?" என்று அவனை வம்பு வளர்க்க வேண்டி தான் கேட்டாள்.

அவன் முகம் சிறுத்துவிட, சுனோ பதிலளித்தாள். "அக்கா லவ் பண்ற அளவுக்கெல்லாம் வயசும் இல்லே... தில்லும் இல்லே... அபி சும்மா மச்சானும், கமலும் தாடி வெச்சிருக்கதுனால வெச்சிருப்பான்..." என்று என்றும் இல்லாத திருநாளாய் அவனை மரியாதை குறைவாகப் பேசினாள்.

ஏற்கனவே தில் இல்லை என்று சொன்னதில் கோபமுற்றவன் கமலைப் பார்த்து வைத்திருக்கிறான் என்று கம்பேர் செய்ததோடு பேச்சும் மாறியிருக்க சட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.

"சுனோ அபிக்கு தான் கமலைப் பத்தி பேச்சு எடுத்தாலே பிடிக்காதுல... பின்னே ஏன் இப்படி பேசுறே... அவனைப் போய் சமாதானம் செய்..." என்று கண்டித்து அனுப்பினாள் மிதுன்.

சரியாக அந்த நேரம் அறைக்குள் நுழைந்த பவன், தன்னவளிடம் "இப்போ யாருடி படிக்கிற புள்ள லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறது?!!" என்று ஏகத்துக்கும் எகத்தாளமாக வினவினான்.

"நான் ஒன்னும் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணலே... அவ அபியை சீண்டினா, அவன் கோபிச்சிட்டு போயிட்டான். அதான் சாரி கேட்டு சமாதானப்படுத்துனு அனுப்பி வெச்சேன்." என்று அவளும் அதே தோரணையில் பதில் கூறினாள்.

"என்னமோ செய்... நாளைக்கு ஊருக்கு போகனும்... நியாபகம் இருக்கு தானே!!!" என்றிட, அவளோ உதட்டை சுழித்து தோள்பட்டையை சிலிர்த்துக் கொள்ள, அதனை ரசித்தவன்,

"இப்போலாம் கோபம் வந்தா தண்ணி தொட்டிக்குள்ள போய் உக்காந்துக்கிறது இல்லேயே!!! ஏன்?"

"அத்தை தான் தடா சொல்லிட்டாங்களே!" என்று பாவம் போல் பதிலுரைத்தாள்.

"அவ்ளோ நல்லவளா டீ நீ?" என்று மேலும் சீண்டினான்.

"பின்னே இல்லேயா!!!"

"சரி... சரி... அங்கே தான் அம்மா தடா சொல்லிட்டாங்க... இங்கே உனக்கு எந்த தடையும் இல்லேயே?"

"இப்போ என்ன வேணும் உங்களுக்கு?" என்று கடுப்புடன் வினவினாள்.

"தொட்டிக்குள்ள வெச்சு சமாதானம் செய்யும் போது ஒரு கிக்கா... ஜாலியா இருக்குல... அதை மிஸ் பண்ண மனசு வரலே..." என்று கண்ணடித்துக் கூறிட,

அவனது பேச்சில் நாணம் கொண்டவள் "உங்களுக்கு கிக்கா தான் இருக்கும். அதுக்கப்பறம் உங்க மாமியாரும், என் மாமியாரும் என்னைத் தானே திட்டுவாங்க..."

"அப்போ இப்படி பண்ணலாம். இன்னைக்கு நான் கோபமா தொட்டிக்குள்ள உக்காந்துகாறேன். நீ என்னை சமாதானம் செய்ய வா... சரியா?" என்றிட,

ஆளுக்கு முன்னதாக சரி என மண்டை ஆட்டினாள் மிதுன்யா... "நீ தலையாட்டுறதே சரியில்லேயே..." என்று அவளை ஏற இறங்க பார்த்துக் கொண்டே வினவினான்.

"இல்லேயே... ஒன்னும் இல்லேயே..." என்றிட, அவனோ அறையைவிட்டு வெளியேறுவது போல் பாசாங்கு செய்து கதவைத் தாழிட்டு, மீண்டும் உள்ளே நுழைய, அவன் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகம் நொடிக்குள் பதறியது.

"இப்போ சொல்லு... என்ன ப்ளான் பண்ணனே!!!" என்று அவள் கைகளை முதுகுக்குப் பின்னால் முறுக்கியபடி வினவினான்.

சொல்லாமல் அவன் தன்னை விடப்போவதில்லை என்று உணர்ந்தவள், "இங்கே சின்டெக்ஸ் தொட்டி தான். ஒரு டைம்ல ஒரு ஆள் தான் உள்ளே இருக்க முடியும்... அதை போய் பாத்து ஏமாறப்போறிங்கனு நெனச்சு தான் சிரிச்சேன்..." என்று சிணுங்கியபடிக் கூறினாள்.

"என்னையா ஏமாத்தப் பாக்குறே... உன்னை" என்று அடிப்பது போல் கை ஓங்கிட, அவள் அந்த அறைக்குள்ளேயே சற்று நேரம் சுற்றிவர, இறுதியில் அவளைப் பின்னால் கூடி பிடித்து தூக்கி சுத்தினான்.

"அய்யோ... தலை சுத்துது... இறக்கிவிடுங்க..."

"திரும்பவும் ஏமாத்தாதே டீ போண்டா..." என்று சுற்றுவதை நிறுத்தவில்லை.

உண்மையாகவே அவள் தலையில் கை வைத்துக்கொண்டு கண்கள் சொருகியபடி அவன் நெஞ்சில் சரிய, சுற்றுவதை நிறுத்தி அவளை மெத்தையில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

"ஹேய்... மித்து... இங்கே பார்...எழுந்துக்கோம்மா..." என்று அவளை எழுப்பி அமர்த்தினான்.

"சாரி... டா... நீ என்னை ஏமாத்துறேனு நெனச்சுட்டேன்... சாரி டா... உடம்பு சரியில்லேயா? வீட்டுக்கு தூரமா?" என்று அவளின் உடல்நிலை குறித்து கவலையோடு வினவிட,

"பவன்..." என்று கண்ணீரும் சிரிப்புமாக அவனை அழைத்திட,

"சொல்லுமா... அத்தைய வர சொல்லவா?" என்று இன்னும் பதற்றம் குறையாமல் வினவினான்.

தனக்கு ஒன்று என்றால் எப்படித் துடிக்கிறான் என்று நினைத்து அவனை தாவி அணைத்துக் கொண்டவள், அவன் காதுக்குள்,

"பவன்... பாப்பா வரப்போகுதா பவன்?" என்று அவனிடம் வினவிட, அதிர்ச்சியில் அவளை நிமிர்த்தி அமர்த்தினான்.

"எனக்கு எப்படி டீ தெரியும்? நான் அத்தைய அனுப்புறேன். நீ அவங்ககிட்ட கேளு..." என்று எழுந்தவனை கைப்பிடித்து மீண்டும் தன் அருகே அமர்த்திக்கொண்டு,

"எனக்கு கொஞ்ச நேரம் உங்ககூட இருக்கனும்?" என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தவன், "ஹேய்... மித்து... இது விளையாட்டு இல்லையே!!!" என்று மெதுவாக வினவினான்.

"இல்லே பவன்... அல்ரெடி டவுட்ல ஸ்ட்ரிப் வாங்கி வெச்சிருந்தேன். அதுக்குள்ள அமிய பார்க்க வர்றோனதும் அப்பறமா செக் பண்ணிக்கலாம்னு நெனச்சு விட்டுட்டேன்."

"எத்தனை நாள் ஆகுது?" என்று வினவி, அவள் தலையில் முத்தமிட்டான்.

"இங்கே வரதுக்கு முன்னாடியே ஃபார்டி டூ டேஸ் ஆகியிருந்தது. இப்போ எப்படியும் ஃபார்டி செவன் டேஸ் ஆகும்..." என்றிட மீண்டும் அவள் தலையில் முத்தம் வைத்து தன் தாடையைப் பதித்தான்.

"போண்டா..."

"ம்ம்ம்..."

"ஹாப்பியா இருக்கியா?"

"ரொம்ப..."

"பின்னே ஏன் அழுத?"

"எக்ஸ்ட்ரிம் லெவெல் ஹாப்பியா இருக்கேன்... அதான் எனக்கே தெரியாம ட்டியர்ஸ் வந்திருச்சி..."

"என்னை மன்னுச்சிட்டியா?"

"இல்லே... எல்லாத்தையும் மறந்துட்டேன்..." அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வெகுநேரம் கழித்து பவன் மீண்டும் அவளிடம் வினவினான்,

"எனக்கு இந்த பதில் பத்தலே டீ... இன்னும் தெரிஞ்சிக்கனும்... உனக்கு என்னை பிடிச்சிருக்கா? எவ்ளோ பிடிச்சிருக்கு? நம்ம பாப்பாவுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேனா? இன்னும் நெறையா தெரிஞ்சுக்கனும்... எல்லாம் உன்னோட பார்வைல தெரிஞ்சுக்கனும்..." என்று குரல் உடைந்து கேட்டவனை தன்புறம் திருப்பியவள்,

"மொதோ மொதோ உங்களை பாத்தப்ப எனக்கு உங்களை பிடிக்கலே... என்னை மிரட்டும் போது கைல ஒரு துப்பாக்கி இருந்தா சுட்டு கொல்றளவுக்கு கோபம் இருந்துச்சி... கல்யாணத்துக்குப் பின்னாடி கோர்ட்ல கேஸ் போட்டு அசிங்கப்படுத்தனும் போல இருந்தது..." என்றிட அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

அவன் தலையை நிமிர்த்தி "சொல்லப்போனா அதுக்காகத் தான் தாலிய கழட்டாம வெச்சிருந்தேன். ஆனால் செய்த தப்பை திருத்திக்க ஒரு வாய்ப்பு கேட்டு தாத்தா முன்னாடி வந்து நின்னப்போ நீங்க நான் நெனச்ச அளவுக்கு மோசமானவர் இல்லேனு தோனுச்சு... இருந்தாலும் பொண்ணுங்கன்னா அவ்ளோ கேவளமா போச்சா!!! மிரட்டி கட்டாயத் தாலி கட்டினவன் தானே அப்படினு எனக்கு நானே கோபத்த ஏத்திக்கிட்டு, தினம் தினம் பலிவாங்க ஒரு வாய்ப்பு கிடைச்சதா நெனச்சேன்.

என் ரூம்-க்கு வந்து திமிரா தலையத் தூக்கி மன்னிப்புக் கேட்டப்போ கொஞ்சம் பிடிச்சிருந்தது தான். இருந்தாலும் தான் லூஸ் ஆகிடக் கூடாதுனு திரும்பத் திரும்ப என்னை மிரட்டினதை நெனச்சி கோபத்தை வரவெச்சிப்பேன்.

அப்பறம் ரிஸப்ஷன் அன்னைக்கு நான் மயங்கினதும் பதறினிங்களே... அன்னைக்கு நெறையா டைம் உங்க மேல ஸாஃப்ட் கார்னர் வந்தது. அப்பறம் நம்ம வீட்டுக்கு வந்த போது நீங்க என்னை தனி ரூம்ல தங்க வைக்கமாட்டேனு, நேத்ரா அக்காகிட்ட பேசினதை நானும் கேட்டேன். பல நாள் அதை நெனச்சு ஹாப்பியா கூட ஃபீல் பண்ணிருக்கேன்.

பின்னே ஏன் அன்னைக்கு என்னை ஜடமா நெனச்சிக்கோங்கனு சொன்னேனு பாக்குறிங்களா?" என்றிட, அவன் விரக்திப் புன்னகை ஒன்றே உதிர்த்தான்.

"அப்போவே உங்களை விரும்ப ஆரம்பிச்சுட்டேனு நினைக்கிறேன். உங்களை காயப்படுத்த முடியாதோனு தோன ஆரம்பிச்சிடுச்சி... நான் தோத்துப் போகக் கூடாதுனு ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன். ஆனால் நீங்க என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சதும் என்னால அதை ஏத்துக்க முடியலே... கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்ததுட்டு இப்படி கண்டுக்காம இருக்கிங்கலேனு திரும்பவும் கோபம்.

அது ஃப்ஸ்ட் நைட் அன்னைக்கு நீங்க ஷோஃபால படுத்து தூங்குறதைப் பாத்ததும் வெடிச்சிடுச்சு... ஆனால் நீங்க பயங்கரமான கேடி... அதுக்கப்பறம் எப்போ பார்த்தாலும் என்னை கோபப்படுத்தியே, உங்க காரியத்தை சாதிச்சிக்கிட்டிங்க..." என்று ஒட்டு மொத்தமாக மனம் திறந்து பேசினாள்.

"பாப்பாவுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேனா!!?" என்று தன் தவற்றை உணர்ந்து வருந்திக் கேட்டிட,

"இது தேவையில்லதா சந்தேகம் மச்சான்... நேத்ரா அக்கா மேல இருந்த பாசத்துலேயும், ராம் மேல இருந்த கோபத்துலேயும் தான் என்னை மிரட்டி கல்யாணம் செய்துகிட்டிங்க... மத்தபடி நீங்க நல்ல பையன் தான். உங்க புள்ளைங்களுக்கு எப்பவும் ஹீரோ தான்..." என்று கொஞ்சம் கர்வமாகவேக் கூறினாள்.

அவளின் முகபாவனையில் சொக்கிப்போனவன், "இன்னும் உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லலேயே? மொதோ பிடிக்குமா!!!" என்று சற்று சந்தேகம் போலவே கேட்டிட,

பெருவிரலுடன், ஆள்காட்டி விரலைச் சேர்த்து வைத்து "இத்துனூண்டு" என்று ஆரம்பித்து இரண்டு விரல்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தி இறுதியில் இரண்டு கைகளையும் விரித்து, பாவம் போல் அவன் முகத்தைப் பார்த்து, "இரண்டு கை பத்தலே..." என்றிட, அவனின் முகமும் அதற்கேற்றார் போல் சிறிது சிறிதாக மலர்ந்தது.

"லவ் யூ டீ போண்டா..."

"எனக்கு இது பத்தாது... இன்னும் வேணும்..." என்று குழந்தை போல் கொஞ்சினாள்.
இதற்கு மேல் தங்கள் காதலை வெளிப்படுத்த இருவருக்கும் வார்த்தைகள் கிடைக்காமல் போக செயலில் இறங்கினர். காதலின் ஆழத்தை இருவரும் பரிமாறிக் கொள்ள அன்றைய இரவு இனிதாகவே முடிந்தது.
அபியை சமாதானம் செய்யவென்று அவன் பின்னால் சென்ற சுனைனா, அவன் எதுவும் பேசாமல் காரில் ஏறிப் புறப்பட, சிறிதும் யோசிக்காமல் அவன் காரில் ஏறிக் கொண்டு தன் தாத்தனின் இல்லம் வந்தரிந்தாள்.
அபியோ இந்த முறை சுனோவுடன் பேசுவதாகக் கூட இல்லை. கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லவிருந்த அபியை நிறுத்திப் பேசினாள்.
"அபி உன்னை வம்பு பண்ணத்தான் அப்படி சொன்னேன் அபி... உங்களுக்கு தாடி நல்லாவே இல்லே... கமல் கூட உங்களை கம்பேர் பண்ணினா தாடிய எடுத்திருவிங்கனு தான் அப்படி சொன்னேன். ஐ ம் சோ சாரி..."
"நான் எப்படி இருந்தா உனக்கென்ன? இனிமே என் அனுமதியில்லாம என் கார்ல ஏறாதே..." என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.
இந்த நேரம் இங்கே என்ன வேலையா வந்தே! என்று கேட்போறிடம், ராமிடம் பேச வேண்டியிருந்ததாக பொய்யுரைத்தாள். வந்ததற்காக கல்லூரி பற்றி சில விஷயங்கள பேசிவிட்டு இரவு அங்கேயே தங்கிக் கொண்டாள்.

மிதுன்யா, காலை எழுந்ததும் முதல் வேலையாக ஸ்ட்ரிப் கொண்டு பரிசோதித்திட, அதுவோ இரண்டு சிவப்புக் கோடுகளை காண்பித்து உறுதிப்படுத்தியது. முதலில் தன்னவனிடம் காண்பித்து மகிழ்ந்தவள் மற்றவர்களிடம் செய்தியாகக் கூறினாள்.
மிதுன்யாவும் கருவுற்றிருக்கிறாள் என்று அறிந்து மொத்த குடும்பமும் குதூகலித்தது.
ஒரே குடும்பத்தில் கருவுற்றிருக்கும் இருவர் எதிரெதிரே சந்தித்துக் கொள்ள கூடாது என்பதால் அமியை வரவேண்டாம் என்று கூறி, மற்றவர்கள் அனைவரும் மிதுன்யாவைக் காண வந்தனர்.
மீண்டும் கொண்டாட்டம், மீண்டும் கும்மாளம் என்பது போல் அனைவரும் மகிழ்ச்சியில் தத்தளித்தனர்.
இவர்களின் சந்தோஷத்தை தான் உளவு பார்க்க அனுப்பியிருந்த வேலையாள் மூலம் அறிந்து கொண்ட அந்த முகமறியா வில்லன், தன் முன் தொங்கிக் கொண்டிருந்த பாக்ஸிங் பொதி மூட்டையின் மேல் தன் ஒட்டுமொத்த கோபத்தையும் காண்பித்துக் கொண்டிருந்தான்.
"டேய் ராம்... எல்லாம் கொஞ்ச நாள் தான் டா... உன் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உன் கண் முன்னாடி அழிக்கிறேன் டா..." என்று எதிர் இருந்த மூட்டையை ராமை நினைத்து சரமாரியாக் குத்தினான்.

-ஊடல் கூடும்.​
 
Top