• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வரும் வழி எங்கும் வெண்பா, ராமிடம் காணொளியில் பேசிக் கொண்டே வந்தாள் என்றார் நேத்ரா அவன் புறம் திரும்பிடக் கூட இல்லை. வெண்பா இந்த ஒரு மாத நிகழ்வுகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகவும், திடீரென நினைவு வந்தவளாய் முதலிலிருந்து ஆரம்பிப்பதாகவும் என ஒன்றுவிடாமல் அனைத்தையும் அதிசயித்துக் கூறினாள். பற்றாகுறைக்கு தான் புதிதாகக் கற்றுக் கொண்ட பல விஷயங்களை மகிழுந்தின் உள்ளேயே எழுந்து நின்று செய்து காண்பித்திட, சிரிப்பும் கண்ணீருமாக காணொளி அழைப்பில் பார்த்து மகிழ்ந்தான் ராம்.

இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிப்படுத்திருந்த நேத்ரா இடையே ஒருமுறை கமலை அழைத்து,

"கமல் பசிக்குது... சாப்பிட ஏதாவது வாங்கித் தாயேன்..." என்றிட கமல், அபி மற்றும் காணொளி வழியே கேட்டுக்கொண்டிருந்த ராம் என அனைவருக்கும் இதயத்தில் வலி ஏற்பட்டு அதன் வெளிப்பாடாய் கண்கள் கசிந்தது.

ஆனால் அவ்விடமோ கடைகள் அற்ற நெடுஞ்சாலை... இப்போதைக்கு எதுவும் உண்ணக் கிடைக்காது என்பதால், "சிவா இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ... ஒரு 15kms-ல ராம் ஏற்பாடு செய்திருக்கிற கார் வந்திடும்... ஊருக்குள்ள போனதும் சாப்பிடலாம்..." என்று தன் மனதை கல்லாக்கிக் கொண்டு கூறினான் கமல்.

"ம்ம்ம்..." என்று கூறிவிட்டு கைகளை வயிற்றிற்குக் குறுக்கே கட்டிக்கொண்டு மீண்டும் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டாள்.

சிறிது தூரம் சென்றிருக்க, வெண்பாவுடன் பேசிக் கொண்டிருந்த ராம் பதறிய படி, "ஹேய் தரு... ஹேய்...... இங்கே பாரு டி... தரு என்னாச்சு டி?" என்று காணொளியில் தன்னவளைக் கண்டு கத்தினான். "சோட்டூ... காரை நிறுத்து?" என்று அபிக்கும் கட்டளையிட, பின்னால் திரும்பிப் பார்த்த கமலும், அபியும் அதிர்ச்சியடைந்தனர்.

கைகள் நடுங்கிக் கொண்டு, கண்கள் மேல் நெற்றிக்கு ஏறியபடி, மூச்சிறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நேத்ரா... அப்போது வெண்பா கூறியதைக் கேட்டு அதற்கும் மேல் பதறினர் ஆண்கள் மூவரும். "அம்மாவுக்கு இப்படி வரும் போதெல்லாம் அந்த பேட் அங்கில் இன்ஜக்ஷன் போடுவாங்க..." என்றிட, மொத்தமாக உடைந்து போனான் ராம்.

தன் உணர்வுகளை இழந்த நிலையிலும் நேத்ராவின் இதழ்கள் "ராம்" என்ற நாமத்தை ஜபிக்க, அதன் சத்தம் கேட்காத போதும் இதழ் அசைவுகளைக் கண்ட ராமிற்கு சர்வமும் அடங்கியது போல் இருந்தது. இந்த ஒரு மாத நரகத்தை எப்படிக் கடத்தியிருப்பாள் என்று புரிந்திட,

'என் தாமதத்தால் என்னவளை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டேனே!!! என் பெயரைச் சொல்லி துடிப்பவளுக்கு அருகில் இருந்து 'நான் இருக்கிறேன்... உன் கஷ்டத்தை விரட்ட இனி எப்போதும் உன்னுடனேயே இருப்பேன்...' என்று தைரியம் கூறிடக் கூட முடியாமல் நிற்கிறேனே!!! அப்படி என்ன செய்துவிட்டேன் அவளுக்காக!!! ஏன் என்னை இவ்வளவு நேசிக்கிறாள்? அவளது காதலுக்கு நிகராக இனியும் என்ன செய்யப் போகிறேன்!!!' என்று நினைக்க நினைக்க அவள் படும் வேதனைக்கு நிகர் வேறெதுவும் இல்லை... தன்னால் வேறெதுவும் செய்யவும் முடியாது என்று புரிந்து கொண்டான் ராம்.

காதலில் எனக்காக என்ன செய்தாள்(ன்) என்று யோசிக்காமல் தான் அப்படி என்ன பெரிதாக செய்துவிட்டோம் என்று யோசித்தால் உண்மை காதலுக்கு முன்னால் அனைத்தும் பூஜ்ஜியமாகத் தான் தெரியும். ஒருவர் மீது மற்றவர் கொண்ட காதல் மட்டுமே பெரிதாகத் தோன்றும். அந்த நிலையைத் தான் நேத்ராவும், ராமும் உணர்கின்றனர். வெண்பாவோடு சேர்த்து தான் கிடைக்கப்பெற ராம் செய்த அத்தனை முயற்சிலும் காதல் மட்டுமே கண்டாள் கன்னியவள். தன்னால் காக்க வர முடியாத நிலையிலும் தன் பெயரை மட்டுமே உச்சரிக்கும் பெண்ணவளிடமும் அதே காதலை மட்டுமே உணர்ந்தான் மன்னவன்.

கமல் அவசரமாக ஒரு மாத்திரையை விழுங்கச் சொல்ல, சிறிது நேரத்தில் அமைதியடைந்து ஆழ்ந்த உறக்கத்திறுக்குச் சென்றாள் நேத்ரா.

"அது என்ன டேப்லெட் கமல்?" என்ற ராமிற்கு, "ஸ்லீப்பிங் டோஸ்... சுனோவோட அட்வைஸ் படி எடுத்துட்டு வந்தேன். லைட் டோஸ் தான். ஹாஸ்பிட்டல் வரும் வரைக்கும் தாங்கும்..."

"அப்போ ஷாகித் மயக்கம் போட்டதும் அந்த பெரிய மனுஷி ஐடியால தானா?" என்று சற்று பொறாமையோடு வினவினான் அபி...

அபியை முறைப்பது போல் பார்த்த கமல், வேண்டா வெறுப்பாக "ம்ம்ம்" என்று மட்டும் கூறினான்.

அதன்பின் வெண்பா மட்டுமே ராமிடம் பேசிக்கொண்டே வந்தாள். சிறிது நேரத்தில் அவளும் உறங்கிவிட, அழைப்பை துண்டிப்பதாகக் கூறிய கமலிடம், "வேண்டாம் கமல்... நான் ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் பாத்துட்டு இருக்கேன்" என்றான் ராம்.

"சிவா இப்போ ஓகே தான். தேவையில்லாம பயப்படாதிங்க... குழந்தைங்க தூங்கும்போது பாத்து ரசிக்கக் கூடாதுனு சொல்லுவாங்க... சோ நான் கால் கட் பண்ணுறேன். நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... நாங்க வர இன்னும் 2hours ஆகும்..." என்று சிரித்தபடி கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அடுத்த பத்து நிமிட பயணத்திற்கு பின் ஓர் இடத்தில் சுராஜித் தன் போலீஸ் வாகனத்துடன் காத்திருக்க, அவன் அருகிலேயே ட்ரைவரோடு ராமின் கார் நின்றிருந்தது. நேத்ராவை கமல் தூக்கிக் கொள்ள, வெண்பாவை அபி தூக்கி வந்து ராமின் மகிழுந்துக்கு மாற்றினர். சுராஜித் தான் மீதியை பார்த்துக் கொள்வதாகக் கூறிட, ட்ரைவரை சுராஜித்திற்கு உதவுமாறு பணிந்துவிட்டு அபி மகிழுந்தைச் செலுத்தினான்.

மகிழுந்தினுள் அமைதி குடி கொண்டிருந்தது. அபியும், கமலும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. கமலின் ஃபோனிற்கு குறுந்தகவல் வந்த அடையாளமாய் மழைத்துளி சத்தம் கேட்க, சிறிது நேரம் குறுந்தகவல் அனுப்பியபடி திறன்பேசிக்குள் மூழ்கினான் கமல். ஏனோ கமல் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது போல் தோன்றிட, அபி திரும்பிப் பார்க்க அதே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அபியின் திறன்பேசிக்கு அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான், அழைத்தது சுனைனா. வண்டி ஓட்டி கொண்டிருந்ததால் அப்படியே அழைப்பை ஏற்று ஒலிபெருக்கியை இயக்கினான். "அபி ஏன் இப்படி செஞ்சிங்க? இப்போ கை எப்படி இருக்கு? இன்னு ரத்தம் வருதா?" என்று படபடவென கேள்விகளை அடுக்கினாள் அவள்.

அபியோ இவ்வளவு நேரம் கமல் செய்த வேலை இதுதான் என்று தெரிந்ததும் சுனோவிடம் தன் கோபத்தைக் கொட்டினான். "ஆமா... இன்னு லிட்டர் லிட்டரா கொட்டிட்டு இருக்கு... உன் பங்குக்கு நீ வந்து உன் ஷாலை கிழிச்சு கட்டிவிடு..." என்று கடுப்படித்தான்.

"விளையாடாதிங்க அபி... ரெம்ப வலிக்குதா?" என்று அந்த நொடி வலியை உணர்ந்தவளாய் வினவினாள்.

அவளின் வாடிய குரலில் கலைந்த தன் மனதை அவளிடம் வெளிக்காட்ட விரும்பாமல், "ஏன் டீ என் உயிரை வாங்குறே? இப்போ உனக்கு இது ரெம்ப முக்கியம் பார்... வை டீ ஃபோனை" என்று கத்தினான்.

"எனக்கு நீங்களும் முக்கியம் தான் அபி... உங்களுக்கு என்னை பிடிக்கலேனாலும் பரவாயில்லே... உங்க மனைவி வர வரைக்கும் நான் உங்களை விரும்ப தான் செய்வேன்..." என்று தன் விருப்பத்தை இன்று தான் அபியிடம் கூறியிருக்கிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பும் கூட தான் விரும்புவதாக அவள் கூறிடவில்லை. வீட்டில் எப்படியும் இருவருக்கும் தான் கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று தான் கூறியிருந்தாள்.

அபிக்கும் அவள் விருப்பத்தை அவளாகவே கூறியதை கேட்டப்பின் மனம் றெக்கைகட்டிப் பறக்கத் தொடங்கியது. மிகவும் மென்மையான குரலில் "பிடிக்கலேனு யார் சொன்னா!!!" என்று முணுமுணுக்க, அது அவளுக்கு கேட்டதோ இல்லையோ அருகில் இருந்தவனுக்குத் தெளிவாக கேட்டது.

உடனே கமல் புளூடூத் இயர்பட்டை ஆன் செய்து அபியின் காதில் வைத்துவிட, "தாங்க்ஸ்" என்றான் அபி. கமல் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தன்னுடைய ஆல் டைம் ஃபேவரேட் பாப் சாங்ஸ் கேட்கத் தொடங்கினான்.

"யாருக்கு தாங்க்ஸ் சொன்னிங்க?" என்ற சுனோவிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தான் அபி.

"எல்லாம் உன் ஃப்ரெண்டுக்கு தான்"

"கமலுக்கா? அவனுக்கு எதுக்கு தாங்க்ஸ்?"

"இப்போ அதை தெரிஞ்சுக்கிடத் தான் கால் பண்ணினேயா?"

"நான் தெரிஞ்சுக்க நெனச்ச விஷயத்துக்கு விளாவரியா பதில் சொல்லிட்டிங்க பாருங்க... ரெம்பத் தான்..." என்று அவளும் சலித்துக் கொள்ள,

சின்ன சிரிப்போடு "இப்போ வலி கொஞ்சம் கொறஞ்சிடுச்சு... கார் மாறும் போது உன் ஃப்ரெண்டு மருந்து வெச்சு கட்டிவிட்டான்... போதுமா?" என்றான்.

"எதுக்கும் ஹாஸ்பிட்டல் போனதும் ஒரு டிடி போட்டுக்கோங்க..." என்று அப்போதும் மனம் கேட்காமல் உரைத்தாள். அதன்பின் என்ன பேசினார்கள் என்று கேட்டால் அவர்களுக்கேத் தெரியாது... இறுதியில் படிப்பில் வந்து நிறுத்தினான் அபி.

"அம்மு... ஒழுங்கா படிக்கிற தானே!!!" என்று முதல்முறையாக அவனையும் அறியாமல் அம்மு என்று அழைத்திருந்தான்.

"இப்போ வரைக்கும் நல்லா தான் படிக்கிறேன்... இனிமே தான் எப்படினு தெரியலே" என்றிட,

"ஏன்?" என்று அவசரமாக வினவிட,

"1st என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அம்மு-னு கூப்பிட்டிருக்கிங்க,"

"அது..." என்று ஏதோ கூற வருவதற்கு முன், "நான் ஃபுல்லா சொல்லி முடிச்சிடுறேன்... அப்பறம் நீங்க உங்க விளக்கத்தை சொல்லுங்க..." என்றிட, அவன் "ம்ம்ம்" என்ற போதும் இனி இவளிடம் கவனமாகப் பேச வேண்டும் என்று நினைத்தக் கொண்டான்.

"2nd கமலைப் பத்தி பேசினா டென்ஷன் ஆகலே... 3rd நீங்களே வார்த்தைக்கு வார்த்தை கமலை என் ஃப்ரெண்டுனு சொல்லி நான் அவன் கூட பேசுறதுக்கு பர்மிஷன் கொடுத்துட்டிங்க... எல்லாத்துக்கும் மேல என்னை பிடிக்கும்னு இன்டேரெக்ட்டா சொல்லிட்டிங்க..." என்றிட, தான் முணுமுணுத்ததை கவனித்துவிட்டாளோ என்ற யோசனையில் இருந்தவனுக்கு அதற்கு மேல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் போனது.

"அப்போ இனிமே நான் பேசல..." என்று வம்பு வளர்க்க வேண்டியே கூறினான்.

"நோ... நோ... நோ... அப்படிலாம் சொல்லக் கூடாது... வேணுனா ஒன்னு பண்ணலாம்!!! இனிமே நான் ஒழுங்கா படிக்கிறேனா? மார்க்ஸ்-லாம் என்னனு கேட்டு ஃபோன் பண்ணுங்க..." என்றிட, அபி சத்தமாக சிரித்தான்.

அதற்குள் கமல் ஹாஸ்பிட்டல் வந்துவிட்டதாக ஜாடை செய்திட, "ராட்சசி அப்பறம் பேசுறேன்... பைய்" என்றிட கமல் அவனை வாய் பிழந்து வேடிக்கை பார்த்தான்.

மருத்துவமனையில் ராமின் மொத்த குடும்பமும் அங்கே நின்றிருக்க, அனைவரின் கண்ணிலும் அப்படி ஒரு ஆவல்... ஸ்ட்ரெச்சரில் நேத்ராவை படுக்க வைத்து உள்ளே அழைத்துச் செல்ல, அவளை சோதனை செய்த மருத்துவர் அட்மிட் செய்து குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறினார். ராமின் அறைக்கு பக்கத்து அறையில் நேத்ரா அட்மிட் செய்யப்பட்டாள்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த வெண்பாவை கொடி அழைத்துச் சென்று உடை மாற்றி உணவு உண்ண வைத்து அதன் பின்னே தான் ராமிடம் அழைத்துச் சென்றார். மாலை விமானத்தில் கங்காதரன், விமலா, பவன் மற்றும் மிதுன்யா வந்து சேர்ந்தனர்.

மீண்டும் வெண்பா ஒருவர்விடாமல் அனைவரிடமும் தானும், அன்னையும் தனிமையில் கடத்திய முப்பது நாட்களை கூற ஆரம்பித்தாள். வெண்பாவை பிரமிப்பாக பார்த்தபோதும் நேத்ராவை நினைத்து அனைவரும் கண்கலங்கி நின்றிருந்தனர்.

நேத்ராவிற்கு ட்ரிப்ஸ் ஏறியதால் பெரும்பான்மையான நேரங்களில் உறங்கிக் கொண்டிருந்தாள். அன்று ஒரு நாளில் மட்டும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ராம் தன்னவளின் அறைக்கு தன்னை அழைத்துச் செல்லக் கூறிட, மருத்துவர் சிலமுறை சம்மதமும், பல முறை மறுப்பும் தெரிவித்தார். அடுத்து எவர் தடுத்தும் கேட்காமல் அவனாகவே எழுந்து செல்லத் தொடங்கினான். பல நேரங்களில் அவளின் அருகிலேயே தான் அமர்வதற்கு வசதியாக ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்து கொண்டான். இன்ஜக்ஷன் போட்டு போட்டு துளைத்திருந்த அவள் கைகளை ஏந்தி வருடிக் கொண்டும் இருந்தான்.

ராம் தனக்கு ஓய்வு இல்லாமல் நடப்பதுவும், வெகுநேரம் அமர்ந்திருப்பதுமாக இருந்ததில் அவன் உடல்நிலை சற்று பின்னடையவே மறுநாள் பாலில், பழசாற்றில் என இரண்டு மூன்று முறை தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவனை தூங்க வைத்திருந்தார் குந்தவி. மூன்றாம் நாள் அதனை கண்டு கொண்டவன் வெறிப்பிடித்தவன் போல் பழச்சாறு நிறைந்த கண்ணாடி டம்ளரை தூக்கி எறிந்து உடைத்தான்.

"அத்தை எனக்கு என் தரு கூட இருக்கனும் அத்தை... ப்ளீஸ்... இந்த ஒரு மாசம் நானும் அவளும் பட்ட வேதனைகள் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் அத்தை... இத்தனை நாள் என்னை நானேவே மத்தவங்க முன்னாடி காண்பிச்சுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டபட்டேன்னு உங்களுக்கு தெரியாது அத்தை... இதுக்கு மேலேயும் என்னால நடிக்க முடியாது... ப்ளீஸ்... என் தரு கூட என்னை இருக்கவிடுங்க..." என்றிட குந்தவியும் கண்கலங்கி நின்றிருந்தார்.

"சரி கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு... இதோ வரேன்" என்ற கூறி வெளியேறினார். அடுத்த அரைமணி நேரத்தில் நேத்ராவின் படுக்கை ராமின் அறைக்கு மாற்றப்பட்டிருந்தது.

நிம்மதியுற்றவனாய் தன் அத்தையை அழைத்து அணைத்து நன்றி தெரிவித்தான். அன்று இரவு கண்விழித்த நேத்ரா அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் தன்னவனைக் கண்டு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிட, அவனைப் பார்த்தபடியே படுத்திருந்தாள். சற்று நேரத்தில் வந்த செவிலியர், அவளின் ட்ரிப்ஸை எடுத்துவிட்டு, ரெஸ்ட் ரூம் செல்ல உதவிட, மீண்டும் வந்து நேத்ராவை படுக்க வைத்துவிட்டு "இனி ட்ரிப்ஸ் தேவையில்லை" என்று கூறி அறையைவிட்டு வெளியேறிச் செல்ல, நேத்ரா எழுந்து சென்று ராமின் படுக்கை அருகே சாய்விருக்கையை நகர்த்திப் போட்டு தன்னவனின் தலையணையில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.

தன் காந்தையவளின் மூச்சுக்காற்றில் கண் விழித்த ராம், தன்னவளின் வதனம் கண்டு கைகள் கொண்டு வருடிட, பெண்ணவள் எழுந்து கொண்டாள். அவளின் கையை இறுகப் பிடித்து மீண்டும் அமர்த்தினான்.

"கோபமா இருக்கேயா?" என்று சிரித்தபடி வினவிட, பெண்ணவள் பதிலளிக்கவில்லை.

"சாரி..."

"எதுக்கு?"

"உன்னை தனியா போராட விட்டதுக்கு?"

"தெரிஞ்சு தானே செய்திங்க? பின்னே எதுக்கு சாரி!!!" என்று கோபம் குறையாமல் வினவினாள்.

சிரித்தபடியே "மேடம்க்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு போல?" என்றிட,

அவனின் மேடம் என்ற அழைப்பிற்கும் சேர்த்து கோபம் கொள்ள, அதனையும் சிரித்த முகமாக ரசித்தவன், "திமிர் பிடிச்சவளே" என்று ரசனையாகக் கூறினான்.

"நீங்க மட்டும் நெனச்சதை சாதிக்கிற வீம்பு... சரியான விடாகண்டன்..." என்று அவளும் பதிலுக்கு கோபம் போல் கொஞ்சினாள்.

"சரி சொல்லு என்னாச்சு?"

"அதான் உங்க பொண்ணு மனசுல பதியிற அளவுக்கு பக்கம் பக்கமா பாக்குற எல்லார்கிட்டேயும் சொன்னாளே!!! பின்னே என்ன ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க?"

-ஊடல் கூடும்.​
 
Top