• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
'என்னதான் நுவ்வு முடிவு செஞ்சாலும் , உன்னே உண்டு இல்ல ஆக்கணும்னே அவ ஒரு முடிவோட வந்திருக்கா போல ரா. தொலஞ்சே நீ '

கூப்பாடு போட்ட குரலை அடக்க வழி தெரியாமல், கடற்கரை மணலில் பாதம் புதைய நடை பயின்று கொண்டிருந்தான் வான்புகழ்.

அவன் முன் நீண்டிருந்த கடலின் அலையை விட, பெரிய சத்தத்தோடு உள்ளே பேரிரைச்சல் ஒன்று, வெளியேற வழி தெரியாமல், அவனிடமே சுழல்வதும், தணிவதும், பின் முட்டி மோதுவதுமாய் அலைந்து கொண்டிருந்தது.

வேறு யார் காரணகர்த்தவாக இருக்க முடியும்? எல்லாம் அவன் ஜதி தான். அவளைப் பார்த்த பின் அவசர அவசரமாக எடுத்த முடிவு என்ன? இப்பொது குழம்பிக்கொண்டு நிற்பது என்ன?

மனதுக்குள் புகுந்து மணம் வீசி வசியம் செய்து வெளியேற அடம் பிடித்துப் பாடாய் படுத்துகிறாள் பெண்.

எப்படிப் பிடுங்கி எறிந்தாலும் மீண்டும் முளை விட்டு, நொடியில் விருட்சமாக நிற்பவளை தள்ளி நிறுத்த முடியாமல், பின்னந்தலை கோதி தன்னை நிலை நிறுத்த முயல்கிறான் ஆண்.

முடியத்தான் வில்லை.

வெளியில் காட்டிக்கொள்ள வில்லையென்றாலும், ஒரு முழு ஆண்மகனாகக் கட்டினவள் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் விட்டு சென்றாள் என்பது பெரிய அடி தான் அவனுக்கு.

அதைக் கொண்டே பெற்றவளிடம் கூட அவளைப் பற்றி மூச்சு விட வில்லை. இளந்தீபன் கூட இவன் அலைப்புறுதலை கவனித்து நிற்க வைத்து கேட்ட பிறகே சொல்லியிருந்தான். அதுவும் மேலோட்டமாக.

"நீங்களும் என்னை வேணாம்னு விட்டுடுவீங்களா" ன்னு சொன்னியே டி?

'சொன்ன நீயே எந்துக்கு டி என்னை நம்பாம விட்டுட்டு போனே' அவளை உலுக்கி கேட்கும் முன்னமே,
இன்னும் கனம் கூட்டவெனவே, அவள் வேறொருவனுக்கு வருங்கால மனைவியாக அறிய பட்டிருந்தவள் என்பது தெரிய வந்தது, வாழ்க்கையில் விழுந்த மிகப் பெரிய அடியாகவே பட்டது.

இத்தனைக்கும் அவள் வாழ்வில் மாற்றம் வந்திருக்காது என்ன நிச்சயம்? அவள் அப்படியே தான் இருப்பாள் என்று என்ன இருக்கிறது? என்ற கேள்வி இந்த இரண்டு ஆண்டுகளில் எழாமல் இருந்ததில்லை.

நிதர்சனம் தெரிந்தவனாகையால் நான்கையும் யோசித்திருந்தான். சொல்லி கொள்ளும் படி அவளின்றி ஓர் அணுவும் ஆசையாது எனும் படியான கூடி களித்த எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்பது ஊர்ஜிதம். போலீஸ் காரன் புத்தியின் அலசல்.

'அண்ட புழுகன்! நித்தம் அவளோடு நினைவிலேயே குடும்பம் நடத்தியது என்ன!

ஏக்கங்கள் வழிந்தோட ஒரு பாடலையே மீண்டும் ஓட விட்டு கேட்ட நாட்கள் எத்தனை!

பார்த்து விட மாட்டேனா தேடியலைந்த விழிகளில் வழிந்த ஏக்கங்கள் எவ்வளவு!

வசதியாய் இல்லை என்கிறான் கள்ளன்!

பொய் சொல்லும் வாய்க்குப் போஜனம் கிடைக்காதாம்! பொய் சொல்லும் புத்திக்கு? மனம் அரற்றியது.

அவளைச் சுற்றியே யோசனைகள் இருந்ததே! எந்தக் கணக்காம்!

உடல் தேடலை விட, உள்ளத்தின் தேடல் உறங்க விடாது புரியவில்லை அவனுக்கு .

மூளையின் ஆய்வில் கடக்க முடியும் என்று தான் தோன்றி இருந்தது. ஆனால் அது தரும் வலியை யோசிக்கவில்லை. மறந்தான். ஏதோ ஒரு உறுதி அதை யோசிக்க விடவில்லை.

இப்பொது அந்த உறுதி குலைந்ததை உணரும் போதோ! உயிருடன் மரண வலி என்பார்களே! அதை உயிருடன் அனுபவித்திருந்தான். அவனே நினைத்திருக்கவில்லை.

கடக்கவே முடியவில்லை அவனால். நினைக்கக் கூடாதென்று கோபத்தோடு நினைத்து, தோற்று, அவளையே நினைத்துக் கொண்டிருந்த உள்ளம் கடக்க விடவில்லை.

இத்தனைக்கும் இருவருக்கும் நடந்திருந்த திருமணமும் அத்தகையதில்லை. நடந்திருந்த விதமும் அத்தகையதில்லை.

முதலில் அவளைப் பற்றி முழுதாகத் தெரியுமா? என்று கேட்டாலே அவனிடம் பதில் இல்லை. நினைத்த மாத்திரத்தில் ஊரில் இருக்கும் அனைவரை பற்றியும் அறிந்து கொள்ளும் திறமை பெற்றவன், தெரிந்து கொள்ள வேண்டியவளை விட்டுவிட்டான்.

தெரிந்து கொள்ள விழையும் போது, எல்லாம் கை மீறி இருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடந்ததே திருமணமா என்று கேட்டால்?

ஆம்

அவனைப் பொருத்தமட்டில் ஆம் மட்டுமே. அதிலும் நெஞ்சை நிமிர்த்திக் காதல் திருமணம் என்பான்.

மணமேடை, தாலி, அட்சதை, ஆசீர்வாதம் எதுவும் இல்லையென்றாலும், தவிப்புடன் அவள் கேட்ட அந்த ஒற்றை வார்த்தையில், அவன் எல்லாமும் மறந்து, அவள் துயரம் துடைப்பது ஒன்றே முதன்மையாய் பட்டதே! அதற்குப் பெயர் என்னவாம்?

மனதில் இல்லாமால் மனைவியாக ஏற்றிருப்பானா அவன்?

என்ன ஏதென்று உணரும் முன்னே, அவள் கேட்ட நம்பிக்கையைக் கொடுத்து நின்ற தருணம் உணர்ந்து, மலங்க மலங்க விழித்தாலும், அவள் நயணங்களில் தவிப்பு மெல்ல அடங்கி, ஆசுவாசம் ஒன்று பரவிற்றே அதன் பெயர் என்னவாம்?

விருப்பம் இல்லையென்றால்,வாய் வந்திருக்குமா என்னிடம் அவளுக்கு?

இது வரை அவனும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவள் இல்லை என்று நிரூபித்து விட்டுச் சென்றிருந்தாலும்.

இப்பொது மீண்டும் அவள் இல்லையென்று நிரூபித்ததில் அப்படியொரு கோபம். இதயத்தைக் கசக்கி பிழிவது போலொரு வலி அவள் நிராகரிப்பில்

என்னை விட்டு ஏன் சென்றாள்?

என்னை ஏன் நினைக்கவில்லை?

என்னை ஏன் தேடி வரவில்லை?

அவன் ஈகோ பலமாக எங்கோ அடி வாங்கியதில், வைத்திருந்த நேசம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

அவளுக்கே அவ்வளவு என்றால்? எனக்கிருக்காதா! என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போனாள்? அது நாள் வரை இருந்த நம்பிக்கை! அன்று ஏன் இல்லை?

ஆக அவளுக்கு நான் வேண்டாம்! அன்றே முடிவு செய்திருக்கிறாள்! எனக்குத் தான் தெரியவில்லை. அவனை அவனே காயப்படுத்திக் கொண்டான், மனம் வலிக்க.

சற்று முன் அவளைப் பார்த்து நின்றிருந்த விதம்! அவள் பார்த்த பின் ஏற்பட்ட தாக்கம்! அவள் அந்நியமாகப் பார்த்து வைத்ததில் உண்டான உணர்வு! இதற்கெல்லாம் என்ன பெயராம்? அத்தனையும் நொடியில் மறைந்து போகுமா? அவனிடம் பதிலில்லை.

என்னை வேண்டாம் என்றவள் எனக்கும் வேண்டாம். முடிவுக்கு வந்தே விட்டான். ஆனாலும் உதறி வெளி வர வலுவான காரணங்கள் தேவை பட்டது.

இப்படிதானே கோவப்படுவதும், அவளை நினைக்கக் கூடாதென்று நினைத்து, தோற்று, அவளையே மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதும் நடக்கிறது.

இனி அப்படி இருக்கக் கூடாதென்ற முடிவு, வெட்டென மறக்க ஏதோ ஒன்று அவசியப்பட்டது. அதற்கு இங்கே இருந்தாலன்றி முடியாது.

ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறு

எங்கோ இருந்த போதும் நினைப்பில் அவனைத் துரத்தி கொண்டிருந்தவள், இப்பொது அருகில் இருந்தும் அதே வேலையை அச்சுப் பிசகாமல் செய்தாள்.

நிம்மதி என்பது அவனிடம் இருக்கக் கூடாதென்று கங்கணம் கட்டிக்கொண்டாளோ தெரியவில்லை. அவளைப் பார்க்கும் முன்னும் இல்லை. பார்த்த பின்னும் பேசிய பின்னும் சுத்தமாக இல்லை.

எத்தனை முறை பார்த்தனோ? கணக்கே இன்றி ஓடியதை அவன் போன் கதற, கதற மீண்டும் ஓட விட்டான்.

கஸ்தூரி, ப்ரியேஷை தொடர்ந்து ஜதியை விசாரிக்கும் போது அவனது போனின் வழியே, ரகசியமாகப் பதிவு செய்த காணொளி அது.

"நீ இங்க என்ன செய்ற ஜதி. போ நிக்கி அழ போறான்" அங்கே நொடி கூட நிற்க விடாமல் அவளை விரட்டின ப்ரியேஷின் குரலில் ஆரம்பித்தது காணொளி.

இருக்கும் சூழ்நிலையில் தாய் கஸ்தூரி முன் வந்து அவர் வாயில் விழுவது அவ்வளவு உவப்பாகப் படவில்லை அவனுக்கு. அதை விடக் காக்கி சட்டை முன்பு அவள் நிற்பது சரியாகவே படவில்லை.

ஆனால் அவன் உரிமை எடுத்து சொன்ன விதம், அங்கே நின்றிருக்கும் ஒருவனுக்கு மண்டைக்குள் பெட்ரோல் ஊற்றி, திரியை தூண்டி விடும் செயல் என அறியாது போனான்.

'நீ என்ன ரா அவளுக்காக வரிஞ்சு வர்றே? யாரு ரா நுவ்வு?'

ஓங்கி நான்கு அப்பு அப்ப வேண்டும் போல் வந்த உணர்வை அடக்கி, இருவரையும் அளவெடுப்பது போல் புகழ் பார்க்க ஆரம்பிக்க, அவன் பார்வையைச் சரியாகப் படிப்பவள் ஆகிற்றே, முறைத்து பார்த்தவள் சட்டென நடக்க ஆரம்பித்தாள், அவனுக்குள் நெருப்பைப் பற்ற வைத்ததை உணராது.

"நில்லு" அவன் சொன்ன போதும் அவள் நடை நிற்கவே இல்லை.

அது ப்ரியேஷ் சொல்லை மதித்து, அவனை மதிக்காது நடந்தது போலவொரு பிம்பத்தைக் கொடுத்து, அவனைத் தூண்டி விட்டு அவள் நகர்ந்தி ருக்க,

'ஏன்? எம் முன்னாடி நிக்க மாட்டாளாமா'
ஜக ஜோதியாகக் கொழுந்து விட்டு எரிந்தான் புகழ்.

போதாததற்கு, முன்னமும் அவனைப் பார்த்துச் சாதாரணமாகக் கடந்து அவள் சென்றதும் நினைவு வந்து எரியூட்டிருக்க, ப்ரியேஷ் நெற்றி சுருக்குவதையோ, அவன் இருப்பையோ எதையும் உணராது வேகமாக அவள் பின் சென்றான்.

அதற்குள் அவள் அறை பக்கம் நெருங்கி விட,

"அவன் வார்த்தைக்கு அண்டே மதிப்போ? சொன்னதும் ஓடி போற! என்கிட்டேருந்து ஓடி போகத் தான் பிடிக்குதில்லே உனுக்கு" ஆத்திரத்தில் வாயை விட்டதில், அவள் நடை நின்று பின் எட்டு போட்டது.

அது தானே அவனுக்கு வேண்டும். நெருங்கி இருந்தான் காவலன்.

"எங்கே டி ஓடிட்டே இருக்க, நில்லு உங்கிட்டயும் விசாரிக்கணும்"

அவன் வேகமாக முன் வந்திருக்க, நடையை நிறுத்தி நிதானமாக அவனைப் பார்த்தவள், பார்வையிலேயே எட்ட நிறுத்தினாள்.

அவ்வளவு எளிதில் பேச மாட்டாள், சீண்டியாவது பேச வைத்து விட வேண்டுமென்று நினைத்து தான் கேட்டிருந்தான். ஆனால்,

"மரியாதை குடுத்துப் பேசினா பதில் கிடைக்கும். தேவை இல்லாம பேசுவீங்கன்னா ஒரு வார்த்தை வாங்க முடியாது எப்டி வசதி"

அஞ்சாத நேர் பார்வை பார்த்து, கட் அண்ட் ரைட்டாகப் பேசியதில் சொக்கி போவான் அவனென்ன கண்டானா?

'ரா.. டி.. நா ராங்கி சிலக்கா.. ரா.. இது தான எனக்கு வேணும். எப்டி பேசுறா பாரு என்கிட்டயே. மாறவே இல்ல டி நீ. உன்ன பேச வெக்கிறது அவ்வளவு கஷ்டமில்லே போல'

சற்று முன் யாரோ போல் அவள் கடந்த போது தவித்தது அவனுகல்லவா வெளிச்சம். இப்போது அவள் வாய் திறந்ததில் குதூகளித்த உள்ளம், முணு முணுத்துக் கொண்டது. அது அவ்வளவு சுலபமில்லை எனத் தெரியாது.

உண்மை தானே! மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுக்கும் ரகமாகிற்றே அவள். தெரியுமே அவனுக்கு.

அப்படியே காட்டிக்கொண்டால் அவன் என்ன போலீஸ் காரன்! என்ன மதிப்பு இருக்கிறது அவனுக்கும்! அவளைப் போலவே அவனும் சுலபமானவன் இல்லையே. கெத்துக் குறையாமல் நின்றான்.

"அரே.. ரே.. இப்புடுக்கே முத்து உதுந்திருச்சே! என்கிட்ட பேசிட்டே! "
நக்கலடித்தவன் அதோடும் நிற்கவில்லை,

"என்கிட்ட மட்டும் எதிர்பார்த்தா எப்டி? எல்லாருகிட்டயும் இந்தத் திமிரை காட்டுறது. பார்த்த வரைக்கும் அப்டி எனக்குத் தெரியலையே"

சற்று முன் கஸ்தூரி வாய்க்கு வந்தப்படி பேசியதும், இவள் கேட்டும் கேட்காதது போல் கடந்ததும், வைத்துக் கேட்டிருக்க, நெற்றி சுருக்கினாலும் புரிந்து கொண்டாள் ஜதி.

"மரியாதை வார்த்தை ல மட்டுமில்ல! மனுஷங்க மேலயும் இருக்கணுமே! மரியாதை னா என்னன்னே தெரியாத தப்பான ஆட்கள்கிட்ட பேசுறதும், பதில் எதிர் பார்க்கறதும், தப்புன்னு தெரிஞ்சும், வார்த்தைகளை வீணாடிச்சுப் பேசினா தப்பு நம்ம மேல தானே"

அவனைப் போலவே ஒற்றைப் புருவத்தைத் தூக்கி கேள்வியாய் நிறுத்தினதில் மெச்சுதல் பார்வை அவனிடம்.

'அதானே உனக்கெல்லா வாய் இல்லைனா நாய் கவ்விட்டு போய்டும் டி' எனச் சொல்லிக்கொண்டான். உள்ளுக்குள் தான். தெரிந்தால் தொலைத்து விடுவாளே!

"சோ அந்தம்மாயி மேல இல்லாத மரியாதை அவங்கோ புள்ளே மேல இருக்கு அப்டி எடுத்துக்கவா"

வேண்டுமென்றே அவளை ஏற இறங்க பார்த்து கேட்ட தோணி, புகழ் இந்த விஷயத்தைச் சாதாரணமாக விடுவதாய் இல்லை என நிரூபித்தது.

"அது உங்க கவலை! எனக்குச் சம்பந்தமில்லை! இப்ப வழிய விடப் போறீங்களா இல்லையா"

"பதில் வராம ஒரு இன்ச் நகர விட மாட்டேன். சொல்லிட்டு போ! இல்ல இங்க நடக்கறதே வேற" மிரட்டலாகக் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவள் முகத்தில் அவளையும் மீறி எள்ளல் தோணி.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,926
அருமையான நகர்வு ஆனால் ஆனால் ஆனால் கொஞ்சம் கொஞ்சம் குழப்பம் 😁😁😁😁😁😁😁
 
Top